Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை  தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம்  அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இலங்கையில் முதலீடு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரம், முதலீட்டு துறைகளில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு | Anura Government S Call To Diaspora Tamils

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள டயஸ்போராக்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நாம் விசேட அழைப்பை விடுகின்றோம்.   

குறிப்பாக அவர்கள் கிராமப்புறங்களில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முடியும் அதற்கான அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சும் முதலீட்டு சபையும் வழங்கும் அதில் எவருக்கும் தயக்கம் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/anura-government-s-call-to-diaspora-tamils-1730621539

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை  தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம்  அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். 
அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். 
அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன்  பயங்கர கெட்ட ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:
53 minutes ago, குமாரசாமி said:

முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். 
அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன்  பயங்கர கெட்ட ஆள்.

தமிழர்களின் திட்டங்களை மட்டுமே கெடுப்பார்.

சிங்களவர்களுக்காக உழைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். 
அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

அவர் பகிரங்கமாக சொல்லிவிட்டார் தமிழருக்கு தனியாக பிரச்சனையோ,கோரிக்கையோ இல்ல எண்டு....
தமிழர்களின் பிரச்சனை பொருளாதர பிரச்சனை மட்டுமே ...அந்த பிரச்சனையையும் அரசு தீர்க்காது புலம்பெயர்ஸ் நீங்களே தீர்த்துகொள்ளுங்கள்...

அதி உத்தமர் தோழர் தமிழ் புலபெயர்ஸ் வாங்கோ என்று சொல்லுறார் ...ஆனால் எங்கன்ட புலம்பெயர்ஸ் திட்டின்ம ..என்னடா உலகம் இது...😅

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

அதி உத்தமர் தோழர் தமிழ் புலபெயர்ஸ் வாங்கோ என்று சொல்லுறார் ...ஆனால் எங்கன்ட புலம்பெயர்ஸ் திட்டின்ம .

புலம்பெயர்ஸ்சிடம் தனக்கு பலத்த ஆதரவு இருப்பதும் அவருக்கு தெரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன்  பயங்கர கெட்ட ஆள்.

எதுக்கும் வருகின்ற தேர்தல் பதில் சொல்லும். இந்த முறை அவருக்கு உதவி செய்ய கோத்தபாயவும் இல்லை.மகிந்தவும் இல்லை. அந்த ரணிலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். 
அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

2002க‌ளில் இந்த‌ க‌ள்ள‌னை எங்க‌ட‌ தலைவ‌ர் ம‌க்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்து வைக்க‌ வில்லை தாத்தா...................இது நித‌ர்ச‌ன‌ உண்மை......................................

  • கருத்துக்கள உறவுகள்

விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர்.

இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை  உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

2002க‌ளில் இந்த‌ க‌ள்ள‌னை எங்க‌ட‌ தலைவ‌ர் ம‌க்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்து வைக்க‌ வில்லை தாத்தா...................இது நித‌ர்ச‌ன‌ உண்மை......................................

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின் புற்றுக்குள் ஒழிந்திருந்து வெளிவந்த கரு நாகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, vasee said:

விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர்.

இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை  உள்ளது.

புலம்பெயர் தமிழர் என்று ஒரு இனம் இல்லாதிருந்தால் சிறிலங்கா கிட்டத்தட்ட  எத்தியோப்பியா போன்ற நாடுகள் போல் பஞ்ச நிலைக்கு வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை  தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம்  அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

வடக்கு நிதியம் என்ற போர்வையில் சுமந்திரனின் ஆதரவு முதலாளிமார் வருவதற்கு ஆயத்தமாம்.

யார் குற்றியாவது அரிசியாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர் என்று ஒரு இனம் இல்லாதிருந்தால் சிறிலங்கா கிட்டத்தட்ட  எத்தியோப்பியா போன்ற நாடுகள் போல் பஞ்ச நிலைக்கு வந்திருக்கும்.

இல்லை இலங்கை மோசமான நிலையில் இருக்கும், இலங்கையினை விட எதியோப்பியா வளங்கல் நிறைந்த நாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, vasee said:

இல்லை இலங்கை மோசமான நிலையில் இருக்கும், இலங்கையினை விட எதியோப்பியா வளங்கல் நிறைந்த நாடு.

எத்தியோப்பியா வளம் நிறைந்த நாடுதான். இருந்தாலும் சிறிலங்கா எந்த விதத்தில் வளம் குறைந்த நாடு?
தண்ணீர் வளம் இல்லையா? சூரிய வளம் இல்லையா? அல்லது மனித வளம் இல்லையா?

சூரிய வளமும் தண்ணீர் வளமும் இருந்தாலே வளமுடன் வாழலாம்.
இதில் தண்ணீர் வளம் இல்லாமல் தான் பல மூன்றாம் உலகநாடுகள் சிக்கித்தவிக்கின்றது. ஆனால் சிங்களம் தண்ணீரை அரசியல் நோக்கத்துடன்  கடலில் கலக்க விடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர் என்று ஒரு இனம் இல்லாதிருந்தால் சிறிலங்கா கிட்டத்தட்ட  எத்தியோப்பியா போன்ற நாடுகள் போல் பஞ்ச நிலைக்கு வந்திருக்கும்.

இப்ப‌ ம‌ட்டும் என்ன‌ இல‌ங்கை நாடு வ‌றுமை கோட்டில் இருந்து மேல‌ வ‌ந்து விட்டின‌மா தாத்தா

ஏதோ ச‌ம‌த்தி ப‌ண‌ம் என்று 3000ரூபாய் மாத‌ம் முதிய‌வ‌ர்க‌ளுக்கு கொடுத்து வ‌ந்த‌வையாம் அதையும் ப‌ல‌ருக்கு நிப்பாட்டின‌ மாதிரி அறிந்தேன்.........................

இப்ப‌த்த‌ விலைவாசிக்கு ஒரு மாத‌ம் 3000ரூபாய‌ வைச்சு அதுக‌ளால் என்ன‌ செய்ய‌ முடியும்

புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் ஈழ‌ ம‌ண்ணில் க‌ஸ்ர‌ ப‌ட்ட‌துக‌ளுக்கு கூடுத‌ல் உத‌வி செய்ய‌னும் அல்ல‌து அவ‌ர்க‌ளுக்கு ஏதும் தொழில் செய்ய‌ ந‌ல் வ‌ழி காட்டினால் மெதுவாய் த‌ன்னும் முன்னுக்கு வ‌ந்திடுங்க‌ள்......................

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ ம‌ட்டும் என்ன‌ இல‌ங்கை நாடு வ‌றுமை கோட்டில் இருந்து மேல‌ வ‌ந்து விட்டின‌மா தாத்தா

அப்படி மேல வந்திருந்தா; தமிழரோட ஒரு போர் தொடங்கியிருப்பினம், அந்த திமிர்தான் கைநீட்டிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் திரிகிறார்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர்.

இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை  உள்ளது.

Global Tamil Diaspora's economy is US$100 Billion and Sri Lanka's current GDP is US$84.36 Billion. I think there is a lesson to be learnt by Sri Lanka.            LEN - www.lankaenews.com | Sri Lankan Tamil Diaspora Commands Over $100 Billion in Global Businesses and Assets, Report Finds..! 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் முதலீடு செய்தால் பலமான எழுத்து ரீதியிலான  ஒப்பந்தமொன்றை  ஜனாதிபதியுடன் பகிரங்கமாக கைச்சாத்திட்ட பின்னரே இறங்கவேண்டும், வெளிநாட்டு முதலீடாளர்களுடன் ஜனாதிபதி நேரடியாக கையெழுத்திட்டு கை குலுக்கும்போது புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுடன் அது முடியாதா?

அதில்:

* ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கில் மட்டுமே  முதலீடுகள் தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்படும்.

* அரசினதோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளினதோ எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் தலையீடுகளும் இருக்க கூடாது

* வடக்குகிழக்கில் நிறுவப்படும் தொழில் முயற்சிகளில் வடக்கு கிழக்கில் உள்ள மக்களே  பணிக்கமர்த்தப்படுவார்கள், எக்காரணம் கொண்டும் இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து பணியாளர்களை கொண்டு வந்து திணிக்க கூடாது

* முதலீட்டுக்கான ஏற்றுமதி இறக்குமதிகள் முதலீட்டாளர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் இடைதரகர்கள் அனுமதி இருக்க கூடாது.

* முறையான அரச பாதுகாப்பு அவசியம் இல்லையென்றால் ஆளை வைத்தே கொளுத்துவாங்கள்

இந்த நடைமுறைபடுத்தலில் ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் உடனடியாகவே ரத்தாகும் வகையில் சட்ட சிக்கலின்றி ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும்.

இல்லையென்றால் உள்ளே வரவிட்டு எங்கள் காசில் தங்களோட இனத்தை வாழ வைத்துவிடுவான் சிங்களவன்.

மஹிந்த ஆட்சிகாலத்தில் லைக்கா நிறுவனம் சில முயற்சிகள் எடுத்து சார்க் மகாநாட்டுக்கெல்லாம்  மஹிந்த அரசுக்கு நிதி உதவி செய்து , வவுனியாவில் வீட்டு திட்டம், விடுதலையாகும் போராளிகளுக்கு நிதி உதவி என்று இறங்கியது பின்பு சத்தம் போடாமலே ஒதுங்கி கொண்டார்கள் காரணம் சிங்கள/தமிழ் அரசியல் அழுத்தங்களாக மட்டுமே இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

* வடக்குகிழக்கில் நிறுவப்படும் தொழில் முயற்சிகளில் வடக்கு கிழக்கில் உள்ள மக்களே  பணிக்கமர்த்தப்படுவார்கள், எக்காரணம் கொண்டும் இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து பணியாளர்களை கொண்டு வந்து திணிக்க கூடாது

இதுக்கு எங்கடை மக்கள் உழைக்கத் தயாராக இருக்க வேணுமே.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, சுவைப்பிரியன் said:

இதுக்கு எங்கடை மக்கள் உழைக்கத் தயாராக இருக்க வேணுமே.

80 வீதமான மக்கள் உழைக்க தயாராக தான் இருக்கின்றனர் ,உழைக்கின்றனர்...உழைக்காமல் எப்படி இவ்வளவு காலமும் சாப்பாடு கிடைக்கின்றது..அரசாங்கம் இலவச உணவு வழங்குவதில்லையே...
அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்றும் மக்களை சோம்பறிகள் என்று சொல்வதும்.....எங்களின் பொழுது போக்கா போய்விட்டது😅

 தோழர் அணுரா வந்திட்டார் இனிஅந்த 20 வீதமான உழைக்காமல் இருந்த சனமும் உழைக்க வேண்டும்...

4 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர் என்று ஒரு இனம் இல்லாதிருந்தால் சிறிலங்கா கிட்டத்தட்ட  எத்தியோப்பியா போன்ற நாடுகள் போல் பஞ்ச நிலைக்கு வந்திருக்கும்.

மாற்று கருத்துக்கு இடமில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

* வடக்குகிழக்கில் நிறுவப்படும் தொழில் முயற்சிகளில் வடக்கு கிழக்கில் உள்ள மக்களே  பணிக்கமர்த்தப்படுவார்கள், எக்காரணம் கொண்டும் இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து பணியாளர்களை கொண்டு வந்து திணிக்க கூடாது

இது கொஞ்சம் ஓவராக தெரிகின்றது  யாதும் ஊரே யாவரும் கேளீர்😅 ...தகுதி இருப்பவர்கள் தற்காலிக வேலையாட்களாக பணிபுரியலாம் ..அல்லது  ஒப்பந்த அடிப்படையில்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இதுக்கு எங்கடை மக்கள் உழைக்கத் தயாராக இருக்க வேணுமே.

100% உண்மை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

இதுக்கு எங்கடை மக்கள் உழைக்கத் தயாராக இருக்க வேணுமே.

சுவைப்பிரியன்,

அவர்களுக்கு உழைத்தே ஆகவேண்டிய நிலை வந்தே தீரும், வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புகிறவர்களுக்கு வயசு போக அவர்களின் வாரிசுகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு பணம் அனுப்ப போவதில்லை, நான் கஷ்டப்பட்டு உழைக்கிற காசை இவர்களுக்கு அனுப்ப நான் என்ன லூசா என்றுதான் கேட்பார்கள்,

இனிவரும் சந்ததிக்கு வெளிநாடு வருவது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று வந்தாலும் அகதி மனுவை ஏற்காமலே திருப்பி அனுப்புவான்,குளம் வற்றிவிட்டால் கொக்குகள் இரைதேடி பறந்தே ஆக வேண்டும்,

அதையும் மீறி இவர்கள் வேலைக்கு போகவில்லையென்றால் போரினால் வாழ்வாதாரமிழந்து தடுமாறும் பெண்கள் முன்னாள் போராளிகள் , எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான ஏழைகளும் அந்த இடத்தை நிரப்புவார்கள்.

2 hours ago, putthan said:

இது கொஞ்சம் ஓவராக தெரிகின்றது  யாதும் ஊரே யாவரும் கேளீர்

புத்தன்,

யாதும் ஊரே யாவரும் Listen என்று அவர்களும் நினைத்திருந்தால்

தரப்படுத்தல் வந்திருக்காது, கொழும்பிலிருந்து அடித்து கப்பலில் ஏற்றி அகதியாக, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் நிலமையும் வந்திருக்காது, சுனாமிக்கு அடுத்தவன் தந்த காசையே தமிழனுக்கு கொடுக்க கூடாது என்று நீதிமன்றம் செல்ல சொல்லியிருக்காது,

ஒரேமொழி பேசும் மக்கள் கூட்டமுள்ல வடக்கு கிழக்கையும் பிரிச்சுவிட சதி பண்ணியிருக்காது.

2 hours ago, putthan said:

தகுதி இருப்பவர்கள் தற்காலிக வேலையாட்களாக பணிபுரியலாம் ..அல்லது  ஒப்பந்த அடிப்படையில்.

தகுதிகள் பார்த்து வேலைக்கமர்த்த தாய்வான்போல விமானம், தொலைபேசி,கார்கள் கம்பியூட்டர்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவார்களென்று நினைக்கவில்லை,

உள்ளூர் உற்பத்தியுடன் இணைந்து சந்தை வாய்ப்புக்களை கண்டறிவதும் இறக்கி ஏற்றும் வியாபார முயற்சிபோல் அங்கிருந்து இறக்கி மீள் உருவாக்கி மறுபடியும் ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சிகளாகவே அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவையெல்லாம் எந்தவேகத்தில் ஆரம்பிக்கப்பட போகின்றன நடைமுறைப்படுத்தப்பட போகின்றன என்பது வேறு விஷயம், மேற்குலகம்போல பலநூறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட போவதும்  இல்லை,

அந்த பிராந்திய மக்களை பணிக்கமர்த்த ஒப்பந்தம் போடாமலிருந்தால் பிற இனத்தவர்கள் வேலைக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள்  , அரசும் அவர்கள் ஆட்களென்றால் அதற்கான தங்குமிடங்கள் வேலைதிட்டங்களை அசுர வேகத்தில்  செய்யும்.

பிறகு அது ரோட்டால சும்மா போனா ஆசாரியை கூப்பிட்டு சார் பிளீஸ் எனக்கு ஒரு ஆப்பு அடிச்சிட்டு போங்க  என்று சொன்ன கதையாகிவிடும், 

முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு.

இது எல்லாம் சிங்களத்துடன் முதலீடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்ற அவசரம் அல்ல இப்படியாவது எந்த உதவிகளும் இல்லாத எம்மக்கள் கூட்டத்தின் வறுமை ஒழியாதா என்ற ஏக்கம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் 

எமது பலத்தை நாம் தான் அறியாமல் தூங்குகிறோம். ஆனால் சிங்களத்துக்கு நன்றாக தெரியும் தான் மீள் வேண்டும் என்றால் அது தமிழாராலேயே முடியும் என்று. எனவே தான் முகங்களை மாற்றுகிறது.

எனக்கு ஒரு கேள்வி. இதுவரை தமிழர் தலைமைகள் கிடைத்த துரும்பை பயன்படுத்தாது நாசம் செய்தார்கள் என்று தவளைக்கத்தல் கத்துபவர்கள் ஏன் இந்த துரும்பை பிடித்து நல்லது செய்ய முயலக் கூடாது. ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

நல்ல விடயம் 

எமது பலத்தை நாம் தான் அறியாமல் தூங்குகிறோம். ஆனால் சிங்களத்துக்கு நன்றாக தெரியும் தான் மீள் வேண்டும் என்றால் அது தமிழாராலேயே முடியும் என்று. எனவே தான் முகங்களை மாற்றுகிறது.

எனக்கு ஒரு கேள்வி. இதுவரை தமிழர் தலைமைகள் கிடைத்த துரும்பை பயன்படுத்தாது நாசம் செய்தார்கள் என்று தவளைக்கத்தல் கத்துபவர்கள் ஏன் இந்த துரும்பை பிடித்து நல்லது செய்ய முயலக் கூடாது. ????

சோரம் போகாத தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல்வாதிகளுடன்   இதுபற்றி பேரம் பேசி அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.அப்போது சோரம்போகாத புலம்பெயர் அமைப்புகளும் உடனிருக்க வேண்டும்.

தமிழ் அரசியல்தலைவர்கள் என்றவுடன் பொய்யன் சுமந்திரன் உங்கள் நினைவிற்கு வந்தால் இத்துடன் டொட்.       👈 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.