Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் அவர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

  • Replies 58
  • Views 6.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வ

  • அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ?  நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட  மீனவர்களைத்தானே?  இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்ற

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை  உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, colomban said:

சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

ஒருகாலம் யாழ்தளம் சீமான் ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது இன்று ஒருசிலர் தவிர சீமானின் பேச்சை அரசியலை  நகைச்சுவைகளின் உச்சம் என்றே பலர் கருதுவதுண்டு

சட்டவிரோதமாக நுழையும்  இந்திய கடற்தொழிலாளர்களை இலங்கை கைது செய்தால் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிறாரே. 

அந்த சட்டவிரோத இந்திய மீனவர்கள் யார் பகுதியில் உள் நுழைகிறார்கள், யார் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று சிந்திப்பதேயில்லையா?

இலங்கை தமிழனை அழித்தவன் மத்தியிலிருக்கும் வட இந்தியன் என்று கட்சி

கூட்டங்களில் பொங்கும் சீமான், அதே இலங்கை தமிழனை பொருளாதார ரீதியில் அழிக்க வட இந்தியனின் உதவியை நாடுவது  எந்த ஊரு கொடூரம்?

இது ஒரு முஸ்லீம் ஊடகத்தில் வந்த செய்தியென்பதால் உருட்டிவிடவும் வாய்ப்புண்டு என்பதால் இப்படி சொன்னாரா என்று கூகுளில் உறுதிபடுத்தி பார்த்தால் ஆம், சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ட‌ங்கு ம‌ற்றும் ப‌ல‌ர் 
சீமானை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஆத‌ரிச்ச‌வை  யாழ் க‌ள‌த்தில் 

நிர்வாகம் எடுத்த‌ முடிவால் சீமானின் காணொளிக‌ள் நாம் த‌மிழ‌ர் அர‌சிய‌ல் பிர‌ச்சார‌ம் யாழில் செய்ய‌க் கூடாது என்று சொல்ல‌

ட‌ங்கு தொட்டு ப‌ல‌ர் அதோட‌ வில‌கின‌வை அத‌ற்க்கு பிற‌க்கு அவ‌ர்க‌ள் யாழ் வ‌ருவ‌தை த‌விர்த்து விட்டின‌ம்

சீமான் சொல்வ‌து  உங்க‌ளுக்கோ சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ளுக்கு சிரிப்பாய் இருக்க‌லாம்.............சில‌ வ‌ருட‌ம் க‌ழித்து பாருங்கோ அவ‌ர் சொன்ன‌து எல்லாம் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ச‌ரி என்று ப‌டும்

இணைய‌த்தில் வார‌ ஆத‌ர‌வு எதிர்ப்பு முற்றிலும் போலி அதை வைத்து த‌ப்பு கண‌க்கு போட‌ வேண்டாம் 

ஒருத‌னே 10 போலி ஜ‌டில‌ எழுதுகிற‌ உல‌க‌ம் இது😁....................

சீமான் ஆர‌ம்ப‌ கால‌த்தில் பேசின‌து எல்லாம் இப்போது ந‌டைமுறைக்கு வ‌ந்து விட்ட‌து ....................சென்னையில் குடி நீர் த‌ண்ணீர் விற்பனைக்கு வ‌ந்து விட்ட‌து

சீமானின் தேர்த‌ல் அறிக்கைய‌ தான் இப்போது திருடி அதை செய‌ல் ப‌டுத்துகின‌ம் இப்ப‌டி ப‌ல‌தை சொல்ல‌லாம்.......................

சீமானின் எல்லா செய‌லுக்கும் அவ‌ரை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள்  சிங்சாங் போடுவ‌தில்லை

சீமான் சொல்வ‌து ச‌ரி என்றால் விவாதிக்க‌லாம்

தேவை இல்லா ஆணிய‌ ப‌ற்றி விவாதிக்க‌ சீமானின் ஆதர‌வாள‌ர்க‌ள் முன் வ‌ர‌ மாட்டின‌ம்

அவ‌ர் சொல்லும் ந‌ல்ல‌துக‌ள் நினைவில் இருக்கும் காது கொடுத்து கேட்ப்போம்
தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே  விட்டு விடுவ‌து ந‌ல்ல‌ம்...................

சில‌ர் யாழில் சீமானுக்கு எதிரா எழுதினால்

சீமானின் ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் அத‌ற்க்குள் மூக்கை நுழைக்க‌ விரும்புவ‌தில்லை😁👍..................... 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் சொல்வ‌து  உங்க‌ளுக்கோ சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ளுக்கு சிரிப்பாய் இருக்க‌லாம்

பையா கடைசிவரை எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விஷயத்தில் சீமான் சொன்ன கருத்து சரியா பிழையா என்று சொல்லவே இல்லையே, உளவு விமானம்போல ஊரெல்லாம் சுத்தி வர்றீங்க.

எனக்கு தெரிந்து நேரடியாக சீமான் பதில் சொல்ல திணறிய தருணங்களில் இதுவும் ஒன்று, சரி அவராவது நேரடியாக சொல்லவில்லை நீங்களாவது ஒரே வரியில் சொல்லுங்க பையா ,

அண்ணன் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாக பேசுகிறாரா இந்திய மீனவர்களுக்கு சாதகமா பேசுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் இந்தியன் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, valavan said:

பையா கடைசிவரை எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விஷயத்தில் சீமான் சொன்ன கருத்து சரியா பிழையா என்று சொல்லவே இல்லையே, உளவு விமானம்போல ஊரெல்லாம் சுத்தி வர்றீங்க.

எனக்கு தெரிந்து நேரடியாக சீமான் பதில் சொல்ல திணறிய தருணங்களில் இதுவும் ஒன்று, சரி அவராவது நேரடியாக சொல்லவில்லை நீங்களாவது ஒரே வரியில் சொல்லுங்க பையா ,

அண்ணன் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாக பேசுகிறாரா இந்திய மீனவர்களுக்கு சாதகமா பேசுகிறாரா?

வெளிப்ப‌டையா சொல்ல‌னும் என்றால் நான் சீமானின் காணொளிய‌ தொட‌ர்ந்து பாப்பேன்

இந்த‌ மீன‌வ‌ பிர‌ச்ச‌னைக்கு முற்றிலும் ம‌த்திய‌ அர‌சு தான் கார‌ன‌ம்...............கோழைத் த‌ன‌மாக‌ ம‌த்திய‌ அர‌சு செய‌ல் ப‌டுது சொந்த‌ நாட்டு மீன‌வ‌னை காப்பாற்ற‌ துப்பில்லை இதில‌ வ‌ல்ல‌ர‌சு வெட்டி பேச்சு

கேரிலா இர‌ண்டு மீண‌வ‌ர்க‌ளுக்கு கொத்த‌ளித்த‌ ம‌த்திய‌ அர‌சு

த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளை ம‌திப்ப‌தில்லை

முதுகெலும்பு இல்லாத‌ முத‌மைச்ச‌ர் த‌மிழ் நாட்டை ஆட்சி செய்தால் இதே போல் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து கொடுமைக‌ளை அனுப‌விக்க‌ வேண்டி வ‌ரும்

சீமான் மீன‌வ‌ பிர‌ச்ச‌னையில் ம‌த்திய‌ அர‌சுக்கு எவ‌ள‌வோ சொல்லியும் அவ‌ர்க‌ள் க‌ண்டு கொள்ளாம‌ விட்டால் சீமான் என்ன‌ செய்வ‌து

கோவ‌த்தின் உச்சியில் தான் சீமான் இல‌ங்கை அர‌சின் மீது த‌டை போட‌னும் என்று நேற்று சொல்லி இருந்தார்......................இந்தியா தொட‌ர்ந்து இல‌ங்கையிட‌ம் ம‌ண்டியிடுதே

சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டை அவ‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு செய‌ல் ப‌டுகின‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

கோவ‌த்தின் உச்சியில் தான் சீமான் இல‌ங்கை அர‌சின் மீது த‌டை போட‌னும் என்று நேற்று சொல்லி இருந்தார்......................இந்தியா தொட‌ர்ந்து இல‌ங்கையிட‌ம் ம‌ண்டியிடுதே

இந்திய மத்திய அரசும் இலங்கையும் சீமானுக்கு எதிரிகள்தான் இதில் யார் யாரிடம் மண்டியிட்டால்தான் சீமானுக்கு என்ன? எனக்கு பிடிக்காத ஒருவன் நான் நினைத்தபடி நடப்பான் என்றோ  நடக்கவில்லையென்று யாரும் எதிர்பார்க்ககூடாது.

உண்மை நிலவரம் யாதெனில் தமிழகத்தின் முதலாவது மிக பெரிய மீன்பிடி  துறைமுக நகரமான தூத்துக்குடியில் வைத்து இந்திய மீனவர்கள் பற்றி கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராகவும் கருத்து சொல்ல முடியாது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் கருத்து சொல்ல முடியாது அதனால்தான் ஒரேவரியில் பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசின் பக்கம் காயை நகர்த்தி விழி பிதுங்கினார் சீமான்.

இது வாழ்க்கையில் குடிப்பழக்கமே இல்லாத ஒருவனை பார்த்து , நீ குடிப்பதை நிறுத்திவிட்டாயா ஆம்/இல்லை என்று மட்டுமே பதில் சொல்லவேண்டும் என்பதைபோல,

ஆம் என்று சொன்னால் முன்பு நீ குடித்திருக்கிறாய் என்று அர்த்தம், இல்லையென்று சொன்னால் அப்போ நீ குடிகாரன் என்று அர்த்தம்.

ஆனால் வெளிப்படையாக  தெரிந்த விஷயம், நட்பு என்று ஒருவரை வரிந்து கொண்டால் விமர்சனங்களை கடந்து அவர்களுக்கு நேர்மையாக விசுவாசமாக இருக்க வேண்டும் எனும் குணம் பையனில் தெரிகிறது.

கண்டிப்பா அது ஒரு உயர்ந்த குணம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

அவ‌ர் சொல்லும் ந‌ல்ல‌துக‌ள் நினைவில் இருக்கும் காது கொடுத்து கேட்ப்போம்
தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே  விட்டு விடுவ‌து ந‌ல்ல‌ம்...................

ஒமோம், அந்த இடத்திலேயே விட்டுட்டு வேற விசயங்களைக் கதைக்க வேணும்😂! #கிறீஸ் போத்தல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, valavan said:

இது ஒரு முஸ்லீம் ஊடகத்தில் வந்த செய்தியென்பதால் உருட்டிவிடவும் வாய்ப்புண்டு என்பதால் இப்படி சொன்னாரா என்று கூகுளில் உறுதிபடுத்தி பார்த்தால் ஆம், சொல்லியிருக்கிறார்.

இந்திய இலங்கை மீனவர்களுக்கென கடற்பரப்பு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால் கச்சதீவு எனும் பிரச்சனை ஒன்றும் உள்ளது அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்திய இலங்கை மீனவர்களுக்கென கடற்பரப்பு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால் கச்சதீவு எனும் பிரச்சனை ஒன்றும் உள்ளது அல்லவா.

சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு.

பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும்   இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை .

கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள்.

அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள்.

1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது.

ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும்  மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, 

ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள்.

இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் தொலைக்காட்சியில் வடக்கு கிழக்கு மீனவர்களின் துன்பத்தை காட்டுவார்கள் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கும். மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான‌ மீன்களை தடை செய்யப்பட்ட வலைகளையும் உப்கரணங்களையும் பாவித்து மீன் செல்கின்றார்கள். இந்த விடயத்தில் நான் சிங்களவனின் பக்கமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பொருளாதார தடை விதிக்கவேண்டும். சீமானின் நெய்தல் படை எங்கே போனது. அதை எடுத்து விடவேண்டியது தானே!  ஶ்ரீலங்கா கடற்படையை அவரது நெய்தல் படையால  துவம்சம் செய்யலாமே! 😂

அதை பயன்படுத்தினால் ஶ்ரீலங்கா கடற்படை தாங்காது  என்று ஒரமா படுக்க விட்டிருக்கிறார் போல.😂

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை அடிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையேல் பொருளாதார தடை இது தான் சீமான் நியாயம்.
அநுரகுமார திசாநாயக்க  இந்திய கடற்கொள்ளையர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதியாக ஆதரிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விதத்திலும் இந்தியா தான் எமக்கு உபத்திரவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சில தெளிவுபடுத்தல்களும் என் கருத்தும்.

1. டங்கு எனப்படும் நண்பர் இசை - அவர் சீமான் துதிபாடும் முதல் திரியை யாழில் திறந்தவர்தான். ஆனால் நிர்வாக முடிவால் அவர் விலகவில்லை. அவர் விலகிய பின்னும் இன்னொரு சீமான் துதிபாடும் திரி யாழில் ஓடியது. அவர் வராது விட்டு சில வருடங்களின் பின்பே நிர்வாகம் எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யும் திரிகளுக்கு அனுமதி இல்லை என்ற முடிவை எடுத்தது.

நண்பர் இசை - வேலை, அத்தோடு பகுதிநேர வியாபாரம், குடும்பம், பிள்ளைகள் என பிசியாகிவிட்டார் என அறிந்தேன். 

அது இயற்கையானதே. எல்லாரும் நிரந்தர பையன்களாக சமூவலை உலகத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பமாட்டார்கள்தானே.

நாம் தமிழரின் முதலாவது தேர்தலுக்கு முன் எத்தனை சீட் எடுப்பார்கள் என நானும் இசையும் ஒரு பெட் கட்டினோம். அதில் இசை தோற்றால், அவர் யாழில் சீமான் ஆதரவாக எழுதமாட்டேன் என சூளுரத்தார்.

இது காரணமாக இருக்காது என நம்புகிறேன். அப்படியாயின், நண்பர் இசை அதை தூக்கி போட்டு விட்டு வரவேண்டும்.

2. நான் 1997 இல் தமிழ் நாட்டில் வசித்த போதே பாட்டில் தண்ணீர் சர்வ சாதாரணம்.

3. தமிழர்களை இனப்படுகொலை செய்த போது, இந்திய மீனவர்களை கொலை செய்தபோது, பொருளாதார தடை போடாத ஒன்றிய அரசு, இப்போ கைது செய்யும் போது மட்டும் தடை போடுமா?

நடக்காததை வேண்டும் என்றே கேட்கும் சீமானின் புளிச்சு போன அரசியல் இது.

உண்மையில் சீமான் இதில் ஆர்வமாக இருப்பின், ஹிந்தி போராட்டம் நேரம் செய்தது போல் மக்களை கூட்டி, அல்லது கடலோர மக்களை மட்டுமாவது கூட்டி, மத்திய அரசுக்கு உரிய, ரயிலை, விமானநிலையம், நேவி, ஆமி முகாம்கள், ஆளுனர் இல்லம் போன்றவற்றை இயங்கவிடாது முடக்க வேண்டும்.

அதுக்கு நெஞ்சில் மஞ்சா வேண்டும்.

சும்மா மைக்குக்கு முன்னால் நிண்டு வெத்து வீரம் பேச மட்டுமே சீமானால் முடியும்.

4. சீமான் கேட்பது மிக அநியாயமானது, தமிழக டிரோலர் பண முதலைகள் இலாபம் பார்க்க எமது ஏழை மீனவர் வயிற்றில் அடிக்கிறார்.

அவருக்கு வாக்கு அவர்கள்தானே போட முடியும்.

சீமான் என்ன செய்தாலும் தலையை கொண்டு முட்டு கொடுக்கும் சிலர் தம் விரலை எடுத்து தம் கண்ணை குத்துகிறனர்.

On 12/11/2024 at 11:52, valavan said:

ஒருகாலம் யாழ்தளம் சீமான் ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது இன்று ஒருசிலர் தவிர சீமானின் பேச்சை அரசியலை  நகைச்சுவைகளின் உச்சம் என்றே பலர் கருதுவதுண்டு

பலரை சிலகாலம் ஏமாத்தலாம்,

சிலரை பலகாலம் ஏமாத்தலாம்,

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

14 hours ago, குமாரசாமி said:

இந்திய இலங்கை மீனவர்களுக்கென கடற்பரப்பு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால் கச்சதீவு எனும் பிரச்சனை ஒன்றும் உள்ளது அல்லவா.

ஓம் சந்தேகத்துகிடமில்லாமல், கோடு கீறி, ஒப்பந்தம் செய்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும், உலக நாடுகளும், இதை ஏற்று 60 வருடங்கள் ஆகிறது.

https://en.m.wikipedia.org/wiki/India–Sri_Lanka_maritime_boundary_agreements

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

ஏன் பொருளாதார தடை விதிக்கவேண்டும். சீமானின் நெய்தல் படை எங்கே போனது. அதை எடுத்து விடவேண்டியது தானே!  ஶ்ரீலங்கா கடற்படையை அவரது நெய்தல் படையால  துவம்சம் செய்யலாமே! 😂

அதை பயன்படுத்தினால் ஶ்ரீலங்கா கடற்படை தாங்காது  என்று ஒரமா படுக்க விட்டிருக்கிறார் போல.😂

நெய்தல் என்றால்…

ஆடை நெய்தல்…

நாயுடு ஹால் மேட்டர்…

கில்மா பாசறையில் நல்லா நூல் கோப்பவர்கள் -நெய்தல் படைக்கு தெரிவாவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி நான் இந்த‌ திரிய‌ எட்டியும் பார்க்க‌ மாட்டேன்😁😁😁😁😁😁.........................

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

நாம் தமிழரின் முதலாவது தேர்தலுக்கு முன் எத்தனை சீட் எடுப்பார்கள் என நானும் இசையும் ஒரு பெட் கட்டினோம். அதில் இசை தோற்றால், அவர் யாழில் சீமான் ஆதரவாக எழுதமாட்டேன் என சூளுரத்தார்.

ஓ இதுவேற நடந்திருக்கா?

யாழ்களத்தில் நான் கருதும் படித்தவர்கள் வட்டத்தில் இசையும் கோஷானும் உள்ளடக்கம் எதுக்கு உங்க இரண்டுபேருக்கும் இந்த வேண்டாத வேலை?

இசை ஒரு இனிமையான கருத்தாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

ஓ இதுவேற நடந்திருக்கா?

யாழ்களத்தில் நான் கருதும் படித்தவர்கள் வட்டத்தில் இசையும் கோஷானும் உள்ளடக்கம் எதுக்கு உங்க இரண்டுபேருக்கும் இந்த வேண்டாத வேலை?

இசை ஒரு இனிமையான கருத்தாளர்.

சும்மா விளையாட்டாத்தான் பெட் கட்டினது.

சரியாக நியாபகம் இல்லை, ஆனால் அதன் பின்னும் சில தடவை இசை வந்தார்…தொடர்ந்து வராமல் விட்ட காரணமாக இதை சொல்லவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

இசைக்க‌லைஞ‌ன் அண்ணா

சீமானின் காணொளிக‌ளை யாழில் தொட‌ர்ந்து இணைத்து வ‌ந்தார் பிற‌க்கு 

நிர்வாக‌த்தால் ஏற்ப‌ட்ட‌ சில‌ முர‌ன் பாட்டினால் யாழை விட்டு ஒதுங்கினார்

நிர்வாக‌ம் எடுத்த‌ முடிவு யாழ்க‌ள‌த்தில் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது

சீமான் மேடைக‌ளில் தேர்த‌ல்க‌ளில் பேசும் காணொளிக‌ள் யாழில் இணைக்க‌ கூடாது என‌ அறிவிக்க‌

இசைக்க‌லைஞ‌ன் அண்ணா அதோட‌ யாழை விட்டு போன‌வ‌ர்

ப‌ந்தைய‌ம் க‌ட்டி யாழை விட்டு போன‌வ‌ர் என்று பொய் மாயை உருவாக்க‌ நினைக்கிறார்

க‌ள‌ நில‌வ‌ர‌ம் சீமானின் காணொளி ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ திரியோட‌ யாழுக்கு வ‌ருவ‌தை நிறுத்தி விட்டார்..................போன‌ வ‌ருட‌ம் யாழில் ஒரு ப‌திவு எழுதி இருந்தார்

கிட்ட‌ த‌ட்ட‌ மூன்று வ‌ருட‌த்துக்கு மேல் ஆகுது அவ‌ர் யாழில் எழுதாம‌ விட்டு..........................

த‌மிழ் மீது உள்ள‌ ப‌ற்றினால் தான் , நான் யாழில் தொட‌ர்ந்து இணைந்து இருக்கிறேன்🙏🥰........................

பையா கடல் கடந்த அரசியலை தூர நின்று பார்க்கலாம் பேசலாம் தொட்டு பார்க்கலாம் ஆனால் உள்ளே இறங்ககூடாது, இசை அதனை தவிர்த்திருக்கலாம் என்பதே என் அபிபிராயம்.

பையனும் அதுபோல்தான் நல்ல பொடியன் ஆனால் கடல் கடந்த அரசியலுக்காக யார் கூடவும் அளவுக்கதிகமாக சண்டை போடுவதை தவிர்க்கணும்.

அந்த அரசியல்வாதிகளுக்கு எங்களை தெரியாது அவர்களுக்காக எங்களுக்கு தெரிந்தவர்களை பகைக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

இதில் ஒன்றை சொல்லி காட்ட‌ விரும்புகிறேன்

நான் த‌லைவ‌ரின் கொள்கைய‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன்

என‌து த‌லைவ‌ரை 2009க்கு பிட் பாடு அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌மெங்கும் எடுத்து சென்று இருக்கிறார்....................

யாழில் அவ‌தூறு ப‌ர‌ப்புவ‌ர்க‌ள் மீது நான் எதிர் க‌ருத்தை முன் வைப்ப‌து போல் அண்ண‌ன் சீமான் விடும் த‌வ‌றுக‌ளை க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் தொலைபேசியில் சுட்டி காட்டி இருக்கிறேன்

க‌ருத்துக் க‌ள‌ம் என்றால் சில‌ முர‌ன்க‌ள் இருக்க‌ தான் செய்யும் அது க‌ருத்துக் க‌ள‌த்தோடு ம‌ட்டும் தான் யாழுக்கு வெளிய‌ கிடையாது

ஈழ‌ ப‌ற்று தான் என்னை சீமானோடு இணைத்த‌து ஒரு முறை நான் த‌மிழ் நாடு சென்று வ‌ந்த‌ போது அண்ண‌ன் சீமானை ச‌ந்திக்காம‌ வ‌ந்து விட்டேன்

டென்மார்க்கில் இருக்கும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பொருப்பாள‌ர் ஏன் அண்ண‌னை ச‌ந்திக்காம‌ வ‌ந்து விட்டீங்க‌ள் என்று என் மீது கோவ‌ப் ப‌ட்டார்.................அப்ப‌டி சீமான் க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌னான‌ உற‌வு பெரிய‌து

எப்ப‌டி தான் இந்த‌ ம‌னுஷ‌ன் இவ‌ள‌வு விம‌ர்ச‌ன‌ங்க‌ளை அவ‌மான‌ங்க‌ளை தாங்கி கொண்டு க‌ட்சிய‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார் என்று க‌வ‌லைப் ப‌ட்டும் இருக்கிறேன் 

எம் இன‌த்துக்கு துரோக‌ம் செய்த‌ க‌ருணாநிதிய‌ யாழில் ஒரு சில‌ விம‌ர்ச‌ன‌ம் வைத்து விட்டு அவ‌ர் மீதான‌ வெறுப்பை காட்டி விட்டு வில‌கி இருக்கிறேன்

ஆனால் யாழில் திமுக்கா இணைய‌ கைகூலிக‌ள் மாதிரி ஒரு சில‌ ந‌ப‌ர்க‌ள் சீமான்  மீது தேவை இல்லா வாந்தி எடுப்ப‌தை ஏற்று கொள்ள‌ முடியாது.....................உண்மை எது பொய் எது என்று அந்த‌க் கால‌ம் தொட்டு க‌ட்சியோடு ப‌ய‌ணிக்கும் என‌க்கு தெரியும்........................அர‌சிய‌லை அர‌சிய‌லால் எதிர் கொள்ள‌னும் அதை விடுத்து கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் இல்லா விட்டால் விஜ‌ய‌ல‌ச்சுமிய‌ இழுக்கிற‌து.................அப்ப‌ எப்ப‌டி யாழில் நாக‌ரிக‌மான‌ க‌ருத்தாட‌ல் செய்ய‌லாம் அண்ணா சொல்லுங்கோ.....................................

  • கருத்துக்கள உறவுகள்

 தான் பேசுவது என்ன என்று புரியாமல் சீமான்  உளறுகிறார். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

 தான் பேசுவது என்ன என்று புரியாமல் சீமான்  உளறுகிறார். 

☹️

அப்ப‌ நீங்க‌ள் அவ‌ரின் ஆலோச‌க‌ராக‌ இருங்க‌ளேன் அண்ணா

த‌மிழ் இன‌த்துக்கு புன்னிய‌மாய் இருக்கும்..................

விஜேய் இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் எத்த‌னை த‌ட‌வை ஊட‌க‌த்தை ச‌ந்திச்ச‌வை

குறை சொல்வ‌து எளிது அவ‌ர் இட‌த்தில் இருந்து அவ‌ர் செய்யும் அர‌சிய‌லை நீங்க‌ள் செய்து பார்த்தால் தான் தெரியும் அத‌ன் வேத‌னை......................க‌ட‌ந்த‌ இர‌ண்டு நாளாக‌ ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்காக‌த் தானே ஊர் ஊராய் போய் குர‌ல் கொடுக்கிறார் ம‌க்க‌ள் முன்னாள் மேடையில் பேசுகிறார்☹️.........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, valavan said:

யாழ்களத்தில் நான் கருதும் படித்தவர்கள் வட்டத்தில் இசையும் கோஷானும் உள்ளடக்கம் எதுக்கு உங்க இரண்டுபேருக்கும் இந்த வேண்டாத வேலை?

ஓ.....அப்பிடியொரு வட்டத்தை கீறி வைத்திருக்கின்றீர்களோ?
அப்படியே படிக்காதவர் வட்டத்திற்குள் அடங்குபவர்களையும் குறிப்பிட்டு விடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.