-
Tell a friend
-
Popular Now
-
Topics
-
Posts
-
மட்டக்களப்பு மக்களின் மாறாத தமிழ்த் தேசியமும் அரசியல் அறிவும். கொலைகாரன் பிள்ளையான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றான். அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். திருகோணமலையில் இம்முறை தமிழ் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது. ஆனால் ஒருவர் வெற்றி பெற்றிருக்கின்றார். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் தமிழ் கட்சிகள்.
-
By கிருபன் · பதியப்பட்டது
பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு ஆறுமுகன் புவியரசன் பதுளை மாவட்ட 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சமந்த வித்தியாரத்ன - 208,547 , கிட்ணன் செல்வராஜ்- 60,041, அம்பிகா சாமுவேல்- 58,201, ரவிந்து அருண பண்டார - 50,822, சுதத் பலகல்ல- 47,980, தினிது சமன்குமார- 45,902 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிட்ட நயன பிரியங்கர வாசலதிலக்க- 35518, சமிந்த விஜயசிறி - 29791 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சாமர சம்பத் தசாநாயக்க -19359 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் , அம்பிகா சாமுவேல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. https://www.tamilmirror.lk/மலையகம்/பதுளையில்-இரண்டு-தமிழர்கள்-தெரிவு/76-347254 -
By கிருபன் · பதியப்பட்டது
மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள் ரீ.எல்.ஜவ்பர்கான் நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன் ஒரு அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர் இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எஸ் ஸ்ரீநேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் எம் எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/மட்டக்களப்பில்-வெற்றி-தோல்வியடைந்த-புள்ளிகள்/175-347252 -
By அக்னியஷ்த்ரா · Posted
கருணாவுக்கு வாய்ப்பு கொடுத்துப்பார்த்த பிரதேசவாத திகாமடுல்ல திரும்ப போட்டுத்தாக்கி தன்னால் முடிந்த ஒரு உறுப்பினரை தேசிக்காய்களுக்கு கொடுத்துள்ளது. வாய்ப்பும் கொடுப்போம் விளையாட்டு காட்டினால் வாலையும் அறுப்போம். திமிராக சொல்.... பிரதேசவாத மட்டக்களப்பு அம்பாறையான்டா
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts