Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 51 members have voted

  1. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

    • ஆம்
      24
    • இல்லை
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வாதவூரான் said:

மதம் ஒரு காரணமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சும்மின்டை வாலுகள் தான் அதைச் சொல்லினம். சும் ஏன் கல்லெறி வாங்குகிரார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்தாலும் ஏன் மதம் என்ற சதிக்கோட்பாட்டை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியேலை

அதே..

அவர்களின் கடைசி ஆயுதம் அது. 

  • Replies 249
  • Views 14.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commite

  • உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்...................

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑

😌.................

உங்களின் அதே வேதனை தான் எனக்கும். 

கடைசியில் பலரும் இவ்வளவுதானா என்று நினைக்கவைத்து விடுகின்றனர்............😌

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑

இது வஞ்சப்புகழ்ச்சி அணி இல்லைத் தானே?👀

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வாதவூரான் said:

மதம் ஒரு காரணமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சும்மின்டை வாலுகள் தான் அதைச் சொல்லினம். சும் ஏன் கல்லெறி வாங்குகிரார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்தாலும் ஏன் மதம் என்ற சதிக்கோட்பாட்டை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியேலை

இப்போதெல்லாம் பச்சை கொடுப்பனவு குறைவாக இருக்கிறது. நல்ல கருத்துகளுக்கு வரவேற்று பச்சை தர முடிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

😌.................

உங்களின் அதே வேதனை தான் எனக்கும். 

கடைசியில் பலரும் இவ்வளவுதானா என்று நினைக்கவைத்து விடுகின்றனர்............😌

இயலாமை, கோபத்தின் விளைவினால் நிதானம் இழக்கப்படுகிறது. ஆனாலும் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு உங்களுக்கும் சுவைப்பிரியனுக்கும்  நன்றிகள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

சுமந்திரனுக்கு எதிரான மக்களின் ஆணை தெளிவானது. அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதித்துவ அரசியலுக்கு அவசியமில்லாதவர் என்ற தீர்ப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை தலை வணக்கி ஏற்பதுதான் அறமுள்ள அரசியல்வாதியாக அவர் செய்ய வேண்டியது. தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலான உரையாடல்களில் தன்னுடைய பெயர் வருவதை அவர் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்தலொன்றில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர், தேசியப் பட்டியலைக் கோருவது ஜனநாயக முரண் என்று தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்ற சுமந்திரன், அந்த வாதம் தனக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசியப் பட்டியலுக்காக இளைஞர்- குறிப்பாக ஆற்றலுள்ள பெண் ஒருவரை நியமித்து, பெண் பிரதிநிதித்துவத்தை காப்பதுதான், தமிழரசுக் கட்சி முன்னுள்ள மிகப்பெரும் கடப்பாடு. அந்தக் கடப்பாட்டினை உறுதி செய்வதில் மத்திய குழு, அரசியல் குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினராக சுமந்திரன் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும்.

சுமந்திரன் பிரதிநிதித்துவ அரசியலில் ஆளுமை செலுத்தாத தமிழ்த் தேசிய அரசியல் களம், புதிய பரீட்சார்த்தங்கள் பக்கத்துக்கு நகர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் களம் இனியாவது, அதனைக் கடந்து பரந்துபட்ட பார்வை - செயற்பாட்டுத் தளத்துக்குள் செல்ல வேண்டும். சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சுமந்திரன்... நீங்கள் கடந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக ஓடிக் களைத்து விட்டீர்கள். எல்லாமும் உங்களைச் சுற்றியும் இயங்கி விட்டது. அந்த இயக்கத்துக்கும் ஓர் இடைவெளி அவசியம்.

Purujoththaman Thangamayl

இந்த புருஷோத்தமன் தங்கமயில்  சுமத்திரனின் பெரிய சோம்பு. செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் விலகுவது போல அவரும் சுமத்திரனை வேண்டாமென்கிறார். யாழ்களத்தில் உள்ள சுமாத்திரன் ஆதரவாளர்கள்தான் சுமத்திரன் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று போலிப்பயப்பீதி ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமத்திரன் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் ஆரோக்கியமாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நெல் முளைத்த... வயலை உழுத கையுடன், பசளையும் தூவிய அதி நவீன விவசாயி.

நல்லாப் பாருங்க சிறியர். அது பசளை இல்லை. முளைத்த வயலுக்குள் விதைநெல்லை  நடிப்புக்காக விதைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

மதம் ஒரு காரணமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சும்மின்டை வாலுகள் தான் அதைச் சொல்லினம். சும் ஏன் கல்லெறி வாங்குகிரார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்தாலும் ஏன் மதம் என்ற சதிக்கோட்பாட்டை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியேலை

 

மதம், சாதி, பிரதேசம் இவற்றை விட்டு வெளியில் வந்து அதேசமயம் இன, மொழி பற்றினை மட்டும் தழுவி எங்கள் ஆட்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவார்களா? நம்ப முயற்சிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகிடி said:

நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் சுமந்திரன் செய்தது சரியான காரியம் தான் 

தீவிர தமிழ் தேசியவாத்தத்தை முன்வைக்கும் நபர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு பெற்ற அரசுடன் இணைந்து ஒரு தீர்வுக்கு வருவதற்கு இடஞ்சலாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆட்கள் ஜனநாயக ரீதியாக அகற்றப்பட்டது தமிழ் மக்களுக்கு நீண்ட கால் நன்மையை கொடுக்கும். இதற்காக சுமந்திரன் தன்னையே பலி கொடுத்துள்ளார்.ஒரு வகையில் தியாகி தான் 

சுமந்திரன் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு அவர் சிங்களவர்களுக்கு துணை போகின்றார் என்பது தானே தவிர அவர் ஊழல் பேர்வழி என்றல்ல.

சிங்களாவரோடு சேர்ந்து நாம் விட்டுக்கொடுத்து ஒரு தீர்வுக்கு வருவதே அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிலைந்திருக்கும் பயனை தமிழர்களுக்கு தரும்.

தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை.

சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது. 

இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று.

இது சும் & Co வின் இரட்டை வேடம்.

5 hours ago, நியாயம் said:

 

எனக்குள் ஒரு சந்தேகம் என்ன என்றால் சுமந்திரன் திட்டமிட்டு சில தரப்பினரால் ஒதுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த மதம் ஒரு காரணமா என்பது. யாழ் கருத்துக்களத்தில் பகிரப்படும் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கும்போது இந்த வினா எழுகின்றது.

உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். 

சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.

சும்மின் பாராளுமன்ற காலப்பகுதியில் கூடவே இருந்த ( செல்வம் / சார்ள்ஸ்) தமிழ் கிறீஸ்தவ பாராளுமன்ற உறுப்பினரா்கள் ஒதுக்கப்பட்டார்களா? இல்லையே….

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக  வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள்.

 

 

8 hours ago, vasee said:

நான் நினைக்கிறேன் இரண்டும் வேறு வேறானவை, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நபர்கள் தேர்தலில் பங்கு பற்றாத (சாதாரண அரசியலை நாடாதவர்கள்) ஆனால் அவர்களிடம் உள்ள ஆற்றல்கள் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படுத்துவதால் அதிக நன்மை கிடைக்கும் எனும் பட்சத்தில் தேசிய பட்டியலிலூடாக துறைசார் நிபுணர்களின் சேவையினை கோரும் முயற்சி, இங்கு சுமந்திரன் தேர்தலில் தோல்வியுற்ற ஒரு சாதாரண வழக்கறிஞ்சர் அவரை விட சிறந்த பலர் உள்ள நிலையில் அவர் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் போகவேண்டுமா எனும் கேள்வியே எழாது.

அத்துடன் சுமந்திரன் பாராளுமன்றம் செல்லக்கூடாது என மக்கள் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டார்கள், அதனால் அதனை மீளவும் கருத்து கணிப்பிற்குட்படுத்துவது தேவையற்றது என கருதுகிறேன்.

இங்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லமாட்டேன் என கூறும் சுமந்திரன் தேசிய பட்டியலில் செல்வாரா என ஒரு நிகழ்தகவினை ஆய்வுப்படுத்தும் கருத்துக்கணிப்பாக இது இருக்கும் என கருதுகிறேன்.

இல்லை, ஒரு நல்ல நோக்கிற்கிற்காக உருவாக்கப்பட்ட பொறிமுறையினை அதிகாரத்தினை பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்து மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அதிகாரத்தினை கைப்பற்ற நினைப்பவருக்கு எப்படி ஒருவரால் தார்மீக ரீதியில் ஆதரவு வழங்க முடியும்?

இந்த தேசிய பட்டியல் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பயன்படுத்த முடியாது என சட்ட திருத்தம் கொண்டு வருவதன்  மூலம் தவிர்க்கலாம்.

ஆனால் நீங்கள் நான் சுமந்திரனின் ஆதரவாளன் என நினைப்பது தொடர்பாக எதுவும் சொல்வதற்கில்லை, அது உங்கள் உரிமை ஆனால் ஒரு மோசமான அரசியல்வாதியினை ஆதரிப்பவனாக இருக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை, ஆரம்ப காலத்தில் இஸ்லாமியர்களை யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றியமைக்கெதிராக குரல் கொடுத்த போது அவர் மக்களை ஒருங்கிணைக்க முற்படுகின்றார் என்பதனடிப்படையில் ஒரு புதிய மாற்றத்திற்கான அரசியல்வாதியாக அவரை ஆதரித்தது உண்மைதான், ஆனால் அவரும் ஒரு மோசமான அரசியல்வாதி என்பதனை நிரூபித்த பின்னர் எல்லோரையும் போல அவரை ஆதரிக்கும் நிலையில் நானும் இல்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் .

தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .

47 minutes ago, MEERA said:

என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

இது தான் .

ஆனால் கோசான் யாழ் தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை அதுவும் சும்மை விட இரண்டு மடங்கு அதிகமாக பெற்ற ஒருவர் சும்மிற்கு வழி விட வேண்டும் என்பது முரண்.

அது பகிடி.

@vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

என்பதுதான்.

இது ஒரு எதிர்வுகூறல்.

உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா?

என்பதல்ல கேள்வி.

நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன்.

எனது விருப்பம்?

அவர் அரசியலை விட்டு விலக வேண்டும்.

11 hours ago, கிருபன் said:

சுமந்திரன் தமிழரின் அரசியலை பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது என்று நீண்டகாலமாகவே  விரும்பினாலும் “ஆம்” என்றே வாக்களித்தேன்!

அவர் எல்லா வழிகளிலும் பாராளுமன்றம் போக எத்தனிப்பதாலும் பொதுக்குழு அவருக்கு சார்பானவர்களின் பெரும்பான்மையுடன் உள்ளதாலும் 👇🏿இந்தக் கேள்விக்கு “ஆம்” என்பதே அதிகம் பொருந்தும்😃

 திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி.

இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு….

ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அது பகிடி.

@vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

என்பதுதான்.

இது ஒரு எதிர்வுகூறல்.

உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா?

என்பதல்ல கேள்வி.

நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன்.

எனது விருப்பம்?

அவர் அரசியலை விட்டு விலக வேண்டும்.

திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி.

இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு….

ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.

 

கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

இன்று அம்மணமாக நிற்பது சும்.

 

கோசான் வாக்கு போட்ட மக்களை முட்டாள்கள் என்கிறீர்களா? 

சிறியர் மீதான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் சாணியில் மொங்கி முகத்தில் குத்தியிருக்கிறார்கள் உங்களின் பொய்கள் எம்மிடம் பலிக்காது என.

 

மீரா ப்ரோ …

அது பகிடி ப்ரோ ….

என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான்.

அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன்.

இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.

 

5 minutes ago, MEERA said:

கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…

உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும்.

விளங்கியதா?

அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. 

 

கிறிஸ்தவத்தை தமது சுயலாபத்திற்காக பாவிப்பவர்களே இந்த தத்துவத்தை பேசுவார்கள். இது போலிகிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் உண்மையான கிறிஸ்தவம் அதுவல்ல, எங்கு பிழை உள்ளதோ அதை கண்டித்து திருத்தும். இல்லையேல் அவரை அந்நியர் போல் விட்டுவிடும்.   இவர்களின் வாதம் உண்மையென்றால்; இவர் எவ்வாறு இரண்டுதடவை தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன்  என்கிறார். தனது தவறை ஏற்றுக்கொள்ளாதவர், மதத்தின்மேல் தன் தவறை  திணிக்கிறார். கிறிஸ்தவர்கள் வாக்களித்தாலே இவர் வெற்றி பெற வாய்ப்புண்டு. சரி கிறிஸ்தவரை ஒதுக்கினர் என்றே வைத்துக்கொள்வோம். அப்போ, அனுரா கட்சி எப்படி வென்றது? சாதாரணம். இவரின் அடாவடியின் உச்சக்கட்டம், கடைசி நிமிடத்தில் இவர் கட்சிக்குள் செலுத்திய சர்வாதிகாரம். இவர் இந்த முறை வென்றிருந்தால் கூட எதுவும் சாதிக்க முடியாது. ரொம்ப அவமானப்படுத்தப்பட்டிருப்பார். அவர் போவது, தான்தான் எல்லாம் தெரிந்த சட்டத்தரணி என்று காட்டுவதற்கு, அந்த திமிர் ஒட்ட நறுக்கப்பட்டிருக்கும். 

 

11 hours ago, MEERA said:

யாரவது கப்பிதனின் பீத்தல் கோவணத்தை கண்டால் எடுத்துக் கொடுங்கள். தன்னுடைய பீத்தல் கோவணம் யாழ் தமிழ் மக்களால் உருவப்பட்டுள்ளது என்று கூட புரியாமல் உளறுகிறார்.

சரியாக சொன்னீர்கள் மீரா! அனுரா கட்சி பெரியளவில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யவில்லை, வாக்குறுதிகள் அளிக்கவில்லை, யாரையும் விமர்சிக்கவில்லை, யாரும் கேள்வி, சந்தேகம் என்று கூட கேட்கவில்லை. அப்படியிருந்தும் மக்கள் அமோகமாக வாக்களித்துள்ளார்கள். காரணம்; இவர்கள் மேலிருந்த வெறுப்பு, தங்கள் தேசிய உணர்வை வைத்து இவர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள், தாங்கள் இந்த உணர்வோடு இருக்குமட்டும் இந்த போலிதேசிய வாதிகள் தம்மை ஏமாற்றி தம்மிடம் உள்ளவற்றையும் பறிக்கும் என்பதை உணர்ந்தே, அனுரா மேல் நம்பிக்கை வைத்து தெரிந்தெடுத்துள்ளார்கள். இவர்களை வெறுத்து இன்னொரு சிங்கள கட்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பாக அனுராவை தேர்ந்தெடுத்துள்ளார்கள். எல்லோரும் அதன் விளைவை எச்சரித்தும் வாக்களித்தார்கள்.  மக்களின் நம்பிக்கை, அந்த இரும்பு மனங்களை கவரும், உடைக்கும். கட்டாயம் மற்ற சிங்கள கட்சிகளை போலல்லாது ஏதாவது செய்வார்கள். அது இருக்க, சிறிதரன் ஒத்துக்கொள்கிறார். மக்கள் நம்மீது வெறுப்பு கொண்டு எங்களை அகற்றியிருக்கிறார்கள், நாங்கள் அதற்கு மதிப்பளிக்கிறோம், திருந்துவோம். ஆனால் சுமந்திரனோ, நாங்கள் வென்று விட்டோம், பிரிந்து சென்ற கட்சிகள் தோற்றுவிட்டார்கள், நாங்கள் இத்தனை ஆசனங்களை பெற்றோம் என்று வரிசைப்படுத்துகிறார். இதிலிருந்து அவர் மனநிலையை பாருங்கள். எதுவுமே தெரியாதவர் போல் சிரித்துக்கொண்டு பேட்டியளிக்கிறார். இதுதான் வெட்கங்கெட்ட தன்மை. தனது தோல்வியை மறைத்து, மற்றவர்களை விமர்சிக்கிறார். இவர் ஒரு உளறுவாயன். தன்னைத்தானே உயர்த்துவதற்காக எதையும் செய்ய தயங்காதவர். இந்த முறை தேர்தலில் ஏமாற்றுக்காரருக்கு நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள் மக்கள். நீ உன் நண்பனைப்பற்றி  சொல்லு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் எனும் பழமொழி உண்டு. கபித்தான் நேரடியாகவே தன் குணாதிசயங்களை காட்டுகிறார், ஆனால் இன்னும் சிலர் அங்கு பாதி இங்கு பாதி என தளம்பி தம்மை மறைக்க முயற்சிக்கின்றனர்.

ஒரு தடவை தமிழரசுக்கட்சி எல்லா ஆசனங்களையும் வென்றிருந்தது, எந்த தேர்தல் என்பது நினைவில்லிலை. அப்போ மக்கள், சம்பந்தரை ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, மாலை போட்டு, மேளம் கொட்டி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். இவர்கள் மனம் இளகவில்லை, இந்த மக்களுக்கா நாம் துரோகம் செய்கிறோம், ஏமாற்றுகிறோமென்று. எத்தனை கயவர்கள் இவர்கள்? இதிலை தாங்கள் வெற்றியாமென ஆர்ப்பரிக்கிறார் சுமந்திரன். வெட்கம் கெட்டவனுக்கு சூடென்ன, சுரணையென்ன என்று கூறுவார்கள். அநாகரிக வார்த்தை பிரயோகம் மூலம் உண்மை பேசுபவர்களின் வாயை அடைப்பது. இதுவும் ஒரு யுக்தி. ஆனால் தாம் எப்படியும் யாரையும் விமர்சிக்கலாம். நேற்ரொரு காணொளி பாத்தேன். எல்லா தமிழ்தேசிய கட்சி  அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். எல்லோர் முகங்களிலும் சந்தேகம், சோகம், அமைதியாக ஒருவரோடு ஒருவர் பேசவில்லை அமைதியாக  இருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் தேவையற்ற ஒரு சிரிப்பு, கரட்டி ஓணான் மாதிரி தலையை உயர்த்தி தாழ்த்தி, முன்னுக்கு பின்னுக்கு திரும்பி, பாவனை காட்டுகிறார். இவரை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனும் பாவனை. இந்த மனிதன் எப்படியானவர்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய உணர்வை அழித்து.. தமிழ் மக்களின் சுயநிர்ணய.. தாயக் கோட்பாட்டை சிதைத்து.. தமிழ் மக்களை சிங்கள பெளத்த பெருந்தேசியத்துக்குள் சிங்கள பெளத்த பேரினவாதம் மூலம் விழுங்குவதன் ஊடாக... தமிழ் மக்களை எல்லா வழியிலும் பலவீனப்படுத்தி.. அதில் தமக்கான சுயலாபத்தையும்.. பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து அவர்களின் அனுசரனையை தக்க வைத்து தாம் மட்டும் வாழ நினைத்த அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையாறாக்களின்  வந்த சுமந்திரன்... இந்தத் தோல்வியோடு... தான் முன்னர் சொன்னது போல் அரசியலை விட்டு விலகி அப்புக்காத்து வேலையை மட்டும் பார்ப்பதே சிறப்பு.

தமிழ் மக்களுக்காக சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசின் கட்டமைப்பில் சுமந்திரானால்... தமிழ் மக்களுக்கான தீர்வை பெறத்தக்க எந்த சட்ட யாப்பு இயற்றலும் செய்ய முடியாது. அதற்கு அவர் தகுதி வாய்ந்தவரும் அல்ல. நம்பிக்ககைக்குரியவரும் அல்ல.

அப்படி ஒரு சட்டவாக்க நிலை வந்தால்... உள்நாட்டு வெளிநாட்டு தமிழக தமிழ் மக்கள் சட்டப்புலமை பெற்றோரின் தமிழ் தேசிய உணர்வை மதிப்போரின் கருத்துக்களே முன் வைக்கப்பட வேண்டும். சிங்களப் பேரினவாத்தின் விருப்புக்கு தமிழ் மக்களின் விருப்பை அடகு வைப்பவர்களை அதில் அனுமதிக்கக் கூடாது. அது இலங்கை தீவில் தூய தமிழின சுத்திகரிப்பில் போய் முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

இந்த புருஷோத்தமன் தங்கமயில்  சுமத்திரனின் பெரிய சோம்பு. செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் விலகுவது போல அவரும் சுமத்திரனை வேண்டாமென்கிறார். யாழ்களத்தில் உள்ள சுமாத்திரன் ஆதரவாளர்கள்தான் சுமத்திரன் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று போலிப்பயப்பீதி ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமத்திரன் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் ஆரோக்கியமாகவே இருக்கும்.

சுயநல வாதிகளை சுற்றி இப்படி பல உண்ணிகள் தொற்றிக்கொண்டிருக்கும். அவர்களின் செயற்பாட்டு  நிலை இறங்கும்போது உண்ணிகள் யாவும் தானாகவே இறங்கி வேறிடத்தில் மாற்றிக்கொள்ளும். அதைத்தான் கண்ணதாசனும் சொன்னார் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலுங்கூட மிதிக்கும்.

இவர்களின் நலன்விரும்பி, உறவினர், மாமன், மச்சான் சுமந்திரனாய் இருந்தால்; தங்கள்  எதிர்கால சூனியத்தை மக்கள்மேல், மதத்தின் மேல் திணித்து வாழ வைக்க முயற்சிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 

நல்லாட்சி காலத்தில் வரைந்த சட்ட வரைபை நிறைவேற்றுவேன், என்று அனுரா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு தான் பாராளுமன்றம் போக வேண்டும் என்று முன்பே சுமந்திரன் கூறியிருந்தார். இன்று கஜேந்திரன் பொன்னம்பலம் செய்யமுடியும் என்று சொல்லும்போதும் ஒரு பெரிய சிரிப்பு தெரிகிறது. அங்கெ நிக்கிறார் சூழ்ச்சி சுமந்திரன். அந்த தீர்வை வரைந்தவர் சுமந்திரன், சிங்களத்தோடு சேர்ந்து. அதற்கு பரிசாக பிரதமமந்திரி பதவியை எதிர்பார்த்தார். அப்போ, அந்த தீர்வில் என்ன இருக்கும்? "ஏக்கய ராஜ்ய" அதற்காக தான் போயே ஆகவேண்டும். முழுதாக தேசியத்துக்கு ஆப்பு. இல்லையென்றால் அதில் சம்பந்தபடுபவரை அந்த ஆப்பில் செருகி தான் தப்பிப்பது. இதுதான் இவரின் சூழ்ச்சி, தந்திரம். ஆனால் அனுர சொல்லியிருக்கிறார். இதுவரை எடுத்த சட்ட வரைபு எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஆலோசித்து, நடைமுறைக்கு சாத்தியமானதே நடைமுறைப்படுத்துவோமென அறிவித்திருக்கிறார். அந்த ஏக்கய ராஜ்ய சட்ட வரைபை ஏற்காவிடடாலோ, அல்லது பொன்னம்பலம் கஜேந்திர குமார் மாற்றிவடிவமைத்தாலோ,  வேறொரு சட்ட வரைபை அமுல்படுத்தினாலோ, நான் செய்திருப்பேன், நான் மறுத்திருப்பேன், மக்கள் என்னை நிராகரித்ததால் அது வீணாக போய்விட்டது என மக்கள் மேல் பழியை போடுவது. அவரால் இனிவருங்காலத்தில் முடியுமென்றால்; ஏன் அவர் முட்டுக்கொடுத்த அரசுகளால் செய்விக்க முடியவில்லை இவரால். ஒவ்வொரு தவறுக்கு வேறொருவரை காரணம் சொல்லி தப்புவது இவரது இயல்பு.     

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன்.

இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.கோச்சன்

கோசான்ஜி.....இதுதான் நடக்கப்போகுது...இதுதெரியாமல் யாழில் சிகரம் சப்பறம் பூட்டி திருவிழா செய்வதுதான் நடக்குது..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாலி said:

இது வஞ்சப்புகழ்ச்சி அணி இல்லைத் தானே?👀

இப்படி ஒரு அணி தேர்தலில் போட்டியிட்டதா? யார் முதன்மை வேட்பாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

நல்லாட்சி காலத்தில் வரைந்த சட்ட வரைபை நிறைவேற்றுவேன்,

அதன் முதல் வரியே புடுங்குப்பாடு.

ஏக்கயராஜ்ய

உள்ளுக்கும் நிறைய புடுங்குப்பாடு.

மேலே உள்ள காணொளியைக் கேழுங்கள்.

எவ்வளவு தந்திரமாக சிங்களவர்களுடன் சேர்ந்து ஏமாற்றுகிறார்.

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.