Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, villavan said:

😬 [இதை சொல்லி கலவரம் வராது எண்டுநினைக்கிறன்.]

2006 க்கு பிறகு வன்னியில் விமரிசையாகநடந்தது. அதற்கு செல்லப் பெயர் அமுக்/பிள்ளை பிடி...

🤣

இவை பலருக்கு தெரிந்தது தானே. தமிழ் ஆயுத இயக்கங்கள் இளைஞர்களை பிடித்தவுடன் மொட்டை அடிப்பது தப்பி ஓடாமல் அப்படி தப்பி ஓடினால் இலகுவாக அடையாளம் கண்டு மறுபடியும் பிடிகப்பதற்காக.

  • Replies 71
  • Views 4.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    😌................... ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ

  • ரசோதரன்
    ரசோதரன்

    'உன் இஷ்டத்திற்கு எழுது தம்பி.................' என்று நீங்கள் ஆரம்பத்திலிருந்து கொடுத்த உற்சாகம் தான் இங்கே வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றது...................... என்ன கிடைக்குதோ அதில் அரைவாசி உங்களு

  • வாலி
    வாலி

    நீங்கள் பேசக்கூடாத பக்கத்தை புரட்டிவிட்டீர்கள். இனி உங்களுக்கு இருக்கு கச்சேரி!😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, villavan said:

😬 [இதை சொல்லி கலவரம் வராது எண்டுநினைக்கிறன்.]

2006 க்கு பிறகு வன்னியில் விமரிசையாகநடந்தது. அதற்கு செல்லப் பெயர் அமுக்/பிள்ளை பிடி...

அப்படி எதுவும் வராது, வில்லவன். உங்களின் அனுபவத்தை, உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதுங்கள்................👍.

நாங்கள் எழுதுவதை தாராளமாக எவரும் மறுக்கட்டும். போதிய புதிய ஆதாரங்கள் இருந்தால் அதுவே எங்களின் கருத்தை மாற்றவும் கூடும்.   

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

உங்களின் அனுபவத்தை, உங்களுக்கு தெரிந்ததை

2006-2008 வன்னியில் இருந்தபடியால் நேரடி அனுபவம் தான். நம்மில் பல பேர் Forrest Gump போல தான்.🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

உங்கள் ஊர் எது ?

1 hour ago, ரசோதரன் said:

இது என்ன கேள்வி............... பயணக்கட்டுரையில் ஒழுங்கை வரை சொல்லியிருந்தேனே......... வல்வெட்டித்துறை தான் என்னுடைய ஊர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

🤣....................

குமாரசாமி அண்ணை,

நான் என் சொந்தப் பெயரில் ஒரு படத்தையும் போட்டு வந்திருக்கலாம் என்று தான் உள்ளே வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன் . தில்லை ஐயா போல. என்னிடம் என்ன இருக்கின்றது மறைக்க.......... இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே...........👍.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ரசோதரன் said:

இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே...........👍.

யானும் அஃதே... 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, villavan said:

2006-2008 வன்னியில் இருந்தபடியால் நேரடி அனுபவம் தான். நம்மில் பல பேர் Forrest Gump போல தான்.🤪

🤣.............

அசத்தலான ஒரு உதாரணம் சொல்லியிருக்கின்றீர்கள்............ Forrest Gump திரும்பவும் பார்க்க வேண்டும் போல இருக்கின்றது.................❤️.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

🤣....................

குமாரசாமி அண்ணை,

நான் என் சொந்தப் பெயரில் ஒரு படத்தையும் போட்டு வந்திருக்கலாம் என்று தான் உள்ளே வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன் . தில்லை ஐயா போல. என்னிடம் என்ன இருக்கின்றது மறைக்க.......... இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே...........👍.

நான் எனது படத்தினை அவதாரில் போட்டுள்ளேன் ஆனால் பெயர் வேறு, ஆனால் உங்கள் பெயர் 'ர' இல் ஆரம்பித்து 'ன்' இல் முடிவடையலாம் நடுப்பகுதியில் வேறு ஒரு பெயரை இணைத்திருப்பீர்கள் என கருதுகிறேன் (எனக்கு இப்படி எல்லாம் கற்பனா சக்தி உள்ளது)😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

நான் எனது படத்தினை அவதாரில் போட்டுள்ளேன் ஆனால் பெயர் வேறு, ஆனால் உங்கள் பெயர் 'ர' இல் ஆரம்பித்து 'ன்' இல் முடிவடையலாம் நடுப்பகுதியில் வேறு ஒரு பெயரை இணைத்திருப்பீர்கள் என கருதுகிறேன் (எனக்கு இப்படி எல்லாம் கற்பனா சக்தி உள்ளது)😁

🤣..............

அதே தான், வசீ...................👍.

நடுவில் இருப்பது கூட யாருடைய பெயர், அது கூட என்ன பெயர் என்று கண்டுபிடிப்பதும் உங்களுக்கு இருக்கும் 'கற்பனாசக்திக்கு' மிக இலகுவானதே........👍.

ஆனால் இதற்கு சரியான பெயர் கற்பனாசக்தி இல்லை என்று நினைக்கின்றேன்...............❤️.   

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

🤣..............

அதே தான், வசீ...................👍.

நடுவில் இருப்பது கூட யாருடைய பெயர், அது கூட என்ன பெயர் என்று கண்டுபிடிப்பதும் உங்களுக்கு இருக்கும் 'கற்பனாசக்திக்கு' மிக இலகுவானதே........👍.

ஆனால் இதற்கு சரியான பெயர் கற்பனாசக்தி இல்லை என்று நினைக்கின்றேன்...............❤️.   

நான் சும்மா விளையாட்டாக கூறினேன், எனக்கு தெரியவில்லை, நம்புங்கள் அது கற்பனா சக்திதான்😁.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

இவை பலருக்கு தெரிந்தது தானே. தமிழ் ஆயுத இயக்கங்கள் இளைஞர்களை பிடித்தவுடன் மொட்டை அடிப்பது தப்பி ஓடாமல் அப்படி தப்பி ஓடினால் இலகுவாக அடையாளம் கண்டு மறுபடியும் பிடிகப்பதற்காக.

மன்னிப்பு வழங்கப்பட்ட இன்றைய புனிதர் அன்றைய காடை சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF பிள்ளைபிடிக்கிற காலத்தில் நான் ஒரு சிறுவன்.

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் @villavan

பிரட்டாசி முடிந்து விட்டது ஆகவெ எள் எண்ணை எரிக்க முடியாது.

சனி தோறும் அருகில் உள்ள கோவிலுக்கு போய் நவகிரக வழிபாட்டில் ஈடுபடலாம்.

இந்தியா போனால் திருநள்ளாறில் ஒரு சிறப்பு பூசை செய்யலாம்.

மார்ச் மாத சனிபெயர்ச்சியோடு எல்லா துன்பமும் விலகும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

@ரசோதரன் @villavan

பிரட்டாசி முடிந்து விட்டது ஆகவெ எள் எண்ணை எரிக்க முடியாது.

சனி தோறும் அருகில் உள்ள கோவிலுக்கு போய் நவகிரக வழிபாட்டில் ஈடுபடலாம்.

இந்தியா போனால் திருநள்ளாறில் ஒரு சிறப்பு பூசை செய்யலாம்.

மார்ச் மாத சனிபெயர்ச்சியோடு எல்லா துன்பமும் விலகும்🤣.

நாங்கள் இருக்கிற இடத்திலை கோயில் குளம் இல்லை. சனியனைத் தூக்கி பனியனுக்க போட்டிட்டம் எண்டு சொல்லுறியள் போல. நாங்கள் எல்லாம் அதோட தான் குடும்பம்நடத்திற... 😂

  • கருத்துக்கள உறவுகள்

முகவர் மூலமாக 60 இலட்சம் கொடுத்து போனது தப்புதானே. பின்பு ஆபத்தில் சிக்கியவுடன்  சிங்கள ஜனதிபதிக்கு மகஜர். இலங்கை  தியேட்டர்களில் தற்போது சிடிசன் எனும் ஒர் சிங்கள படம் ஓடுகின்றது. மிகவும் விறுவிருப்பன படம். இவ்வாறு சட்டவிரோதமாக வெளினாடு செல்லுபவர்களின் கதை. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி.ரசிய இராணுவத்தில் இருக்கும் அந்த தமிழ் இளைஞனுக்கு என்ன விமோசனம் இப்ப.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

நீங்கள் தற்போது யாழ்ப்பாணத்திலா இருக்கிறீர்கள்? ஒரு தகவலுக்காக கேட்கிறேன்

இல்லை 

5 hours ago, vasee said:

நிலமை ஒன்றும் நன்றாக இல்லை அங்குள்ளவர்களுக்கு, ஆனால் மேற்கு ஊடகங்களில் அவர்கல் வெல்வது போல ஒரு பிரமை ஏற்படுத்தப்படுகிறது

உண்மை 

நான் ரஷ்யாவால் பிடிக்கப்பட்ட கிரீமியா, Luhansk Donetsk மற்றும் இன்றும் ukraine வசம் உள்ள கார்கிவ் இல் உள்ள பழைய நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். 

Luhansk Donetsk இல் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக சொல்கிறார்கள். அங்குள்ளவர்களுக்கு ரஷியன் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு பென்ஷன் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கார்கிவ் இல் உள்ளவர்கள்( all ukraine )குடும்பமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப் படவில்லை. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். ஆண்கள் வெளியே செல்ல முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

ஈபிடிபி என்று தான் என் நினைவில் இருந்தது. ஆனால் போன வாரம் கோஷான் அது சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆட்கள் என்று சரியான கால விபரத்துடன் என்னுடைய தகவலை சரிப்படுத்தியிருந்தார். என்னையும் ஒரு தடவை பிடித்திருந்தார்கள். பின்னர் பல்கலைக் கழக அனுமதி இருந்த காரணத்தால் விட்டுவிட்டனர்................

அண்ணை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்கிற ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு தமிழ் இளைஞர்கள்!

வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு தமிழ் இளைஞர்கள்!

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா  முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர்  சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த இளைஞன் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது  ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் மெல்லியடைய சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக முகவர் குறிப்பட்டு இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளார். அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கப்பட்டு 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைன் நாட்டின் எல்லையில் போருக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்துள்ள நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 லட்சம் ரூபாய் வரையான பணத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 280க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் ரஷ்ய படைகளோடு இணைந்து, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியது.
அவ்வாறு இணைந்துள்ள இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒருவரை உக்ரேன் இராணுவம் உயிருடன் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காணொளி ஒன்றும் கடந்த 21ஆம் திகதி வெளியாகியிருந்தது.

இலங்கையில் உள்ள ரஷ்ய மாஃபியாக்கள், மூலமாக ரஷ்ய ராணுவத்திற்கு ஆட்கள் திரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையிலேயே 6 தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ரஸ்ய படைகளில் இணைக்கப்பட்டுள்ளமை  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2024/1409819

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

ஈபிடிபி என்று தான் என் நினைவில் இருந்தது. ஆனால் போன வாரம் கோஷான் அது சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆட்கள் என்று சரியான கால விபரத்துடன் என்னுடைய தகவலை சரிப்படுத்தியிருந்தார். என்னையும் ஒரு தடவை பிடித்திருந்தார்கள். பின்னர் பல்கலைக் கழக அனுமதி இருந்த காரணத்தால் விட்டுவிட்டனர்................

ஈழப்பிரியனின் இருட்டடிக்கும் பெருமாளின் அதட்டலுக்கும் பயந்து விட்டீர்கள் போல. 2006 ம் ஆண்டின் பின்னர் புலிகளும் அதையே செய்தனர்.  புடின் போல தொடர்ச்சியான தவறான அரசியல் இறுதியில் என்ன செய்தும் வென்றே ஆகவேண்டும் என்ற வெறித்தனம்,  இவ்வாறான அயோக்கித்தனங்களை செய்ய வைக்கும். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி.ரசிய இராணுவத்தில் இருக்கும் அந்த தமிழ் இளைஞனுக்கு என்ன விமோசனம் இப்ப.

மிகவும் கஷ்டம். மண்டையில் போடும் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பிடிபடுவது போன்றது தான் ரஷ்ய புதினிடம் பிடிபடுவதும்.

6 hours ago, colomban said:

முகவர் மூலமாக 60 இலட்சம் கொடுத்து போனது தப்புதானே. பின்பு ஆபத்தில் சிக்கியவுடன்  சிங்கள ஜனதிபதிக்கு மகஜர். இலங்கை  தியேட்டர்களில் தற்போது சிடிசன் எனும் ஒர் சிங்கள படம் ஓடுகின்றது. மிகவும் விறுவிருப்பன படம். இவ்வாறு சட்டவிரோதமாக வெளினாடு செல்லுபவர்களின் கதை. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

அந்த படம் ஆங்கிலம் தமிழில் அல்லது எழுத்தில் வருமா வந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, villavan said:

சனியனைத் தூக்கி பனியனுக்க போட்டிட்டம் எண்டு சொல்லுறியள் போல. நாங்கள் எல்லாம் அதோட தான் குடும்பம்நடத்திற... 😂

🤣….அப்ப சரி….யாழ்களத்தில் சில விசயங்களை எழுதுவது….ரஸ்யா கள்ள போடர் பாய்வதை விட ரிஸ்க்கான விடயம். தெரிந்துதான் இறங்கியுள்ளீர்கள் எனில் வாழ்த்துக்களும், அனுதாபங்களும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, villavan said:

😬 [இதை சொல்லி கலவரம் வராது எண்டுநினைக்கிறன்.]

2006 க்கு பிறகு வன்னியில் விமரிசையாகநடந்தது. அதற்கு செல்லப் பெயர் அமுக்/பிள்ளை பிடி...

நோ நோ, கலவரமெல்லாம் வராது! யாழ் கள மெம்பர்ஸ் அனைவரும் இல்லா விட்டாலும், ஓரிருவர் "மிகவும் டீசண்டானவர்கள்"! உங்கள் தனிபட்ட விபரங்களான மனைவிகள்/ கணவர்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் ஆகியவற்றை வெளிப்படுத்தாமல் கருத்தாடினால் டீசண்டான உறுப்பினர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

முகவர் மூலமாக 60 இலட்சம் கொடுத்து போனது தப்புதானே. பின்பு ஆபத்தில் சிக்கியவுடன்  சிங்கள ஜனதிபதிக்கு மகஜர். இலங்கை  தியேட்டர்களில் தற்போது சிடிசன் எனும் ஒர் சிங்கள படம் ஓடுகின்றது. மிகவும் விறுவிருப்பன படம். இவ்வாறு சட்டவிரோதமாக வெளினாடு செல்லுபவர்களின் கதை. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

இப்படி பணம் கொடுத்து இன்னொரு நாட்டுக்கு போவதை சட்டரீதியாக தப்பென்று சொல்லலாம், ஆனால் இதையே மனிதாபிமானரீதியாக ஒரு தப்பென்று சொல்ல முடியுமா, கொழும்பான்................. எங்களில் கூட பெரும்பாலானோர் இப்படித்தானே புலம் பெயர்ந்தவர்கள்.

இன்றும் அமெரிக்க தெற்கு எல்லையில் இப்படியானவர்கள் உலகெங்கும் இருந்து வந்து சேருகின்றனர். இந்தியர்கள், சீனர்கள், நேபாள மக்கள்,.................... இவர்கள் ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தான் இங்கு வருகின்றார்கள். அவர்களும் இங்கு வாழட்டும் என்றே நான் நினைக்கின்றேன்................ 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி.ரசிய இராணுவத்தில் இருக்கும் அந்த தமிழ் இளைஞனுக்கு என்ன விமோசனம் இப்ப.

சில மாதங்களின் முன் அப்பொழுது இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த அல் சஃப்ரி ஒரு மாநாட்டிற்காக ரஷ்யா போயிருந்தார். அப்பொழுது அவர் ரஷ்ய அதிகாரிகளை இனிமேல் இலங்கையர்களை ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார். இது ஒரு செய்தியாக பல ஊடகங்களில் வந்தது. ஆனால் பின்னர் இது சம்பந்தமான செய்திகள் எதையும் நான் காணவில்லை....................😌.............. இந்தச் செய்தி வரும்வரை.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

அரைவாசி

இது காணாது  கொஞ்சம் கூட்டி. கொடுங்கள் 🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.