Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

தமிழினத்தின் ஒரு பகுதி வீசிய வாக்குச்சாட்டையடியின் பின்னாவது சிந்திக்காவிடின் இவர்கள் தமிழருக்கான அரசியல்வாதிகளல்ல என்பதை உறுதிப்படுத்தும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 
10 ஆவது பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியவாதிகளின் கன்னியுரை நம்பிக்கை தருவதாக உள்ளது...அனுரா புகழ்ந்து நேசக் கரம் நீட்டியுள்ளனர் ...மாகாணசபையுடன் வருவார்களா என இருந்து பார்ப்போம்...

  • Replies 103
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை.  பொய்ச் செ

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நீங்கள், கண்ணாடிக்கு முன் நின்று பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். 🤣

  • ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள்.  அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி  பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே.  படு தோல்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சாணக்ஸ்  உண்மையாகவா😇 .... நீங்கள் இப்படித் தான் சும்முக்கும் முந்தி முட்டுக் கொடுத்தனீங்கள் 
 
ஆனால் கருணாவுக்கு ஒரு போதும் எதையும் கொடுக்கவில்லை என்ற நிம்மதியில் எப்போதும் கண்மூடுவேன் 🤣.

சாணாக்ஸ்தான் கிழக்கில் இருப்போரில் முதன்மையானவர். அது அவருக்கான இடம் அல்ல, அந்த மக்களுக்கான இடம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, எதிர்வரும் காலங்களிலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக் கொண்டு அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பினரும் இதன்போது ஆராய்ந்துள்ளனர்.

அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை கஜேந்திரகுமார் சிறீதரனிடம் கையளித்தார். அத்தோடு ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் பற்றி இதன்போது சிறீதரன் எடுத்துரைத்தார்.

அது மாத்திரமன்றி, தமிழர்களுக்கான தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகவேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாடு தொடர்பில் இருதரப்பினரும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தினர்.

,இந்த சந்திப்பை வரவேற்கிறேன். சுமத்திரனை பழிவாங்குதாக நினைத்துக் கொண்டு இந்த சந்திப்பை சிறிதரன் கருதக்கூடாது. உண்மையான ஒற்றுமைக்கான 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது போல இருக்க வேண்டும்.கஜேந்திரகுமாரும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். அடிப்படைக் கொள்கைகளில் உநறுதியாக இருந்து கொண்டு ஏனைய விடயங்களில் நெகிழ்வுப் போக்கைக காண்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சாணாக்ஸ்தான் கிழக்கில் இருப்போரில் முதன்மையானவர். அது அவருக்கான இடம் அல்ல, அந்த மக்களுக்கான இடம்.

கிழக்கு மாகாண மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தததை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும்.கிழக்கு மாகாண மக்களளுக்கு முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு பயம் இருக்கின்றது. அதனால்தான் முஸ்லிம்களை ஓரு காலத்தில் கடுமையாக எதிர்த்த பிள்ளையான் கருணா போன்றவர்களுக்கும்  தங்கள் ஆதரவை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்ததார்கள். ஆனால் அவர்கள் தற்போது சிறிலங்கா அரசின் கைதிகளாக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதனைக்  தெளிவாகத் தெரிந்து கொண்டதால் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு அறிமுகமான தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கிழக்குமாகாணத்தில் சாணக்கியன் இல்லாமல் வேறு யார் போட்டியிட்டு இருந்தாலும் இந்த வெற்றி கிடைத்திருக்கும். அது முஸ்லிம்கள் தொடர்பான அச்சம் காரணமாக ஒன்று பட்டு வாக்களித்திருக்கிறார்கள்..ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்மல் விட்ட கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியத்துக்காக தமிழருக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை. இதெ தெரிவுதான் வடக்கிலும் நடந்திருக்கிறது. அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சியைச் செய்திருக்கிறார்கள்.டக்ளஸ்>அங்கையன் போன்றவர்களுக்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை அவர்கள் அரசுடன் சேர்ந்து இருந்தாலும் பொம்மைகள்தான். ஆகவே இந்த முறை அரசாங்கத்தை  அமைக்கக்கூடிய கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள.  பொருளாதார ரீதியாக வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் ஏதாவது முன்னேற்றம் வரும் என்று மாற்றி யோசித்து இருக்கிறார்கள். ஆனால் இது நிரந்தரமானது அல்ல.ஆடத்த தேர்தலிலேயே தலையடி கொடுப்பார்கள். டக்ளஸ்>பிள்ளையான் அங்கையன் போன்ற அருசக்கு முண்டு கொடுப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

நாம் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கு அப்பால் - இந்த தேர்தலின் பின் தன் சொந்த தேர்தல் மாவட்டத்தை தக்க வைத்த ஒரே தலைவர் சாணக்ஸ் மட்டுமே.

அந்த வாக்குகளுக்குரிய கெளரவம், எப்போதும் தமிழ் தேசிய அரசியலில் முடிவெடுக்கும் இடத்தில் கிழக்கிற்கு இருக்க வேண்டிய இடத்தை பிரதிநிதிதுவம் செய்ய இப்போதைக்கு இவர்தான் சிறந்த தெரிவு.

தமிழ் தேசிய அரசியல் என்பது இரு யாழ்பாண எம்பிகள் தமக்குள் பேசி முடிக்கும் விடயம் என்ற தோற்றப்பாடு எழக்கூடாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

சுமந்திரன் வெளியில் இருந்து பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல் தீர்வு முயற்சிக்கு உதவலாம்.

அதே. 

ஏன் உதவ வேண்டும்…அவர்தான் எம்பி இல்லையே? நீங்கள்தான் தூக்கி வீசி விட்டீர்களே என யாரும் கேட்டால்?

இனத்தின் மீது அக்கறை இருந்தால் இதை செய்யலாம். அல்லது விலகி நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, புலவர் said:

,இந்த சந்திப்பை வரவேற்கிறேன். சுமத்திரனை பழிவாங்குதாக நினைத்துக் கொண்டு இந்த சந்திப்பை சிறிதரன் கருதக்கூடாது. உண்மையான ஒற்றுமைக்கான 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது போல இருக்க வேண்டும்.கஜேந்திரகுமாரும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். அடிப்படைக் கொள்கைகளில் உநறுதியாக இருந்து கொண்டு ஏனைய விடயங்களில் நெகிழ்வுப் போக்கைக காண்பிக்க வேண்டும்.

முடிந்தால் கஜனிடம் சொல்லி விடுங்கோ…

அவருக்கு ஒரு off ramp தேவைப்பட்டால்…இதோ👇

1. கட்சியின் கொள்கை என்றவகையில், ஒரு நாடு இரு தேசம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

2. பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய வாக்குகள் சிதறியமை, மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற பொய்பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது.

3. ஆகவே உடனடித்தேவை என்ற வகையில் - தமிழ் தேசிய சக்திகளை ஒரு முகப்படுத்தும் வகையில் - தமிழ் கட்சிகள் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் - நாம் தமிழரசு கட்சி, ஏனைய கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளையும் பரிசீலித்து, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர சித்தமாயுள்ளோம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய  கால கட்டத்தில் மட்டுமல்ல என்றுமே தமிழர்களும் தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரே கோட்டில் நிற்க வேண்டும். தனித்தனியே நின்று அறிக்கைகளை விடுவதால் எந்த பிரயோசனங்களும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இன்றைய  கால கட்டத்தில் மட்டுமல்ல என்றுமே தமிழர்களும் தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரே கோட்டில் நிற்க வேண்டும். தனித்தனியே நின்று அறிக்கைகளை விடுவதால் எந்த பிரயோசனங்களும் இல்லை.

ஆனால் இங்கு பார்த்தால் சிறீயும், செல்வமும் அனுரவிற்கு  வைக்கிற  ஐஸ் சைப்பர்த்தால் கிடைக்கிற கேப்பில்...பார் .கஞ்சா கேசை மழுப்பிவிட்டால் காணுமென்ற போக்கல்லோ காணப்படுகுது.. இதிகெல்லாம் சும் ஒத்துக்குமா...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

இரு மாபெரும் புத்திஜீவிகள் சந்திப்பு. இனி தமிழ் மக்களுக்கு விடிவுகாலம்தான் போங்கோ! 

தமிழ்க் கூட்டமைப்பை முதலில் பாராளுமன்ற கதிரைகளுக்காக உடைத்துக்கொண்டு முதலில் வெளியேறியவர் இந்த கஜே-கயே குழுத்தலைவர் கஜேந்திரகுமார். இது சுமந்திரன் வருவதற்கு முன் நிகழ்ந்தது. 

மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் தமக்குத் தேவையானவர்களைத் தெரிவுசெய்வார்கள். குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களை அனுப்பியுள்ளார்கள். பிக்பாஸ் அதிகம் பார்ப்பதன் விளைவாகக் கூட இது இருக்கலாம்.  அநுர அரசு சமர்ப்பிக்கப் போகின்ற புதிய அரசிலமைபுத்தொடர்பாக  கஜே, பார் சிறீதரன், அருச்சுனா போன்ற புத்திஜீவிகள் மக்களுக்குப் போதிய விளக்கம் அளிப்பார்கள் அல்லது புரியவைப்பார்கள் என நம்பலாம். எனவே சுமந்திரன் தன்னை நிராகரித்த மக்களின் ஆணையைக் கருத்திற்கொண்டு இதுபற்றி வாளாதிருப்பதே சாலச் சிறந்தது!

1. சும் த.தே.கூட்டமைப்பிற்குள் வரும் போது கஜேந்திரகுமாரும் உடன் இருந்தார். ஆனால் 2010 தேர்தலில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களையும் தமிழ் தேசியவாதிகளையும் அகற்றிய போது குறிப்பாக அகில இலங்கை காங்கிரஸ் இற்கு ஒரு ஆசனத்தை மட்டும் வழங்கியதாலேயே கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

2. அருச்சுணாவிற்கு 6 பிளாஸ்ரிக் கதிரைகள் என கிண்டலடித்ததை மறந்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அதே. 

ஏன் உதவ வேண்டும்…அவர்தான் எம்பி இல்லையே? நீங்கள்தான் தூக்கி வீசி விட்டீர்களே என யாரும் கேட்டால்?

இனத்தின் மீது அக்கறை இருந்தால் இதை செய்யலாம். அல்லது விலகி நடக்கலாம்.

என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை.  பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து, டிபிஸ் சொல்வது உண்மையாக இருந்தால், ஊரில் இருந்த சிலரை வைத்துக் கொலை முயற்சி கூடச் செய்திருக்கிறார்கள்.

மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும்.

நேற்று ஒரு திரியில், ஏராளமான தமிழ் அரசியல்  அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள் என்று தான் நம்புகிறேன். வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration  முடித்த அர்ச்சுனா போன்றோர் தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நேற்று ஒரு திரியில், தான் நம்புகிறேன். தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!   

ஆயிரத்தில் ஒன்று. 

1) பரவாயில்லை.  பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து,...

யாழ் களத்திலேயே பல பிர பல அறிவில் ஆதவன்கள் தேர்தல் நேரத்தில் போட்ட காட்டுக் கூச்சல் இதற்கு நல்ல உதாரணம். தேர்தல் முடிந்தவுடன் தற்போது தொப்பியைப் பிரட்டிப்போட்டு குத்துக்கரணம் அடிப்பதில் முஸ்லிம்கள் தோற்றார்கள். 

2) மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன்.

தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகக் கூறியது,  புலம்பெயர்ஸ் வியாபாரக் கூட்டத்திற்கு சகிக்க முடியவில்லை. அதன் விலை தற்போது அர்ச்சுனா (வடிவேலு style ல் கூறினால்🤣) ரமனாதான் போன்ற மனோவியாதிஸ்தர்களை இலங்கையின் அதியுயர் பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கே வடக்கன்ஸ்களின் கொஞ்ச நெஞ்ச மரியாதையையும் காற்றில் பறக்க வைத்திவிட்டது. 

3) இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும்.

எந்தவிதமான கட்டுப்பாடோ அல்லது ஒழுக்கமோ அற்ற, கும்பலில் கோவிந்தா போடும் ஒரு மலினமான, சாதியை மூலதனமாகவும், கல்வியை கொழுத்த சீர்தனத்திற்கான மூலமாகவும் கொண்டு  தன்னைக் கல்வியறிவுள்ள இனமாக எண்ணிக்  கொண்டு, தாழ்வுச் சிக்கலில் உழலும் ஒரு  இனத்திற்கு தனது நேரத்தையும் முயற்சியையும் வீணாக்காமல் இருப்பது சுமந்திரன் போன்றோருக்கு நன்மை பயக்கும். 

4) ஏராளமான தமிழ் அரசியல்  அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள்,....

உந்த வஞ்சகப் புகழ்ச்சிக்கு தமிழ் அரசியல் அறிஞர்கள் எவரும் சிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

5) வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration  முடித்த அர்ச்சுனா 

உலகமெங்கிலும் பரந்திருக்கும் இலங்கைத் தமிழருக்குத் தலைமை தாங்கும் தகுதி உந்த Bar License புகழ் வாத்தியாருக்கும், தனக்கு சிறப்பு அளிக்கப்படாது என்பதை அறிந்தவுடன் விலகி ஓடும் Colombo - 7  பொன்னம்பலத்தாருக்கும், Joker அர்ச்சுனா ரமநாதனுக்கும் இருக்கிறது என்று நம்பும் உந்த டமில் இனம் அழிந்து போவதற்குத்  தகுதியானதே. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள் என்று தான் நம்புகிறேன். வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration  முடித்த அர்ச்சுனா போன்றோர் தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!   

இந்த லிஸ்டில் கிழக்கின் தமிழ் தேசிக்காய் விடிவெள்ளி வெறும் வாய் பீரங்கி சாணக்கியனை விட்டுவிட்டிர்களே ...நீங்கள் சொல்வதை பார்த்தால் தேசிக்காய்கள் சும்மா புகுந்து விளையாடப்போறார்கள் போல கிடக்கு. போதாக்குறைக்கு யாழ்ப்பானீஸ் ஒரு பைத்தியனையும் அனுப்பி வைத்திருக்கினம். இனியென்ன நேராக தீர்வுதான்  

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் அவருடன் சுற்றி இருக்கும் குதிரை கஜேந்திரன் போன்ற களிமண் மண்டைகளின் பேச்சை கேட்காமல் ஜதார்த்தவாதியாக மாறி அரசியல் தீர்வு விடயத்தில் செயற்பட்டால் அது வரவேற்கப்பட வேண்டியதே. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும்

நெத்தியடி!

பல புத்திஜீவித் ( நிஜமான ) தமிழர்கள் இப்படித்தான் தாம் உண்டு தம் குடும்பம் பிள்ளைகள் என்று ஒதுங்கி இருக்கிறார்கள், இப்படிப்பட்ட குடும்பங்களின் வளர்ச்சி,மற்றும் புலமையை ஈழத்தமிழரின் வெற்றி என்று பறையடித்துக் கொண்டாடி, தமிழ் வெறி ஏற்றி விளம்பரப்படுத்தி தம் இனத்தின் பெருமை என சுகம் காண்கின்றார்கள் ஒரு வட்டத்துக்குலேயே மட்டுமே சிந்திக்கத் தெரிந்த மற்றவர்கள்.பறை மேளத்தை மட்டுமே அடிக்கத் தெரிந்தவர்கள் AR Rahman னைக் கொண்டாடுவது போல 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஜதார்த்தவாதியாக மாறி 

😂

இரு நாடுகள்  ஒரு இங்கையை கைவிடுவார் என்கின்றீர்கள்  ஆனால்  தமிழ் அரசியல்வாதிகளுக்கு வயது அதிகரிக்க தான் பேராசை கூடுமாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

கஜேந்திரகுமார் அவருடன் சுற்றி இருக்கும் குதிரை கஜேந்திரன் போன்ற களிமண் மண்டைகளின் பேச்சை கேட்காமல் ஜதார்த்தவாதியாக மாறி அரசியல் தீர்வு விடயத்தில் செயற்பட்டால் அது வரவேற்கப்பட வேண்டியதே. 

மிகத் தவறான கருத்து.

ஒரு தேசியம் சார்ந்த விடயங்களை பேச இன்ன தகுதிகள் வேண்டும் என்ற இறுமாப்புடன் செயற்படமுடியாது. அவரவர் தத்தமது கடமைகளை செவ்வனே செய்தாலே போதும். தூய்மை வாதம் பேசி ஆட்களை தேட தொடங்கினால் நானும் இல்லை நீங்களும் இல்லை. எவரும் இல்லை. அப்படியானால் யார்?????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை.  பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து, டிபிஸ் சொல்வது உண்மையாக இருந்தால், ஊரில் இருந்த சிலரை வைத்துக் கொலை முயற்சி கூடச் செய்திருக்கிறார்கள்.

புலம்பெயர் மக்களில் ஒரு பகுதி சுமந்திரனை வச்சு செய்தது உண்மை.

ஆனால் கடந்த இரெண்டு தேர்தல்களில் இப்படி வச்சு செய்தும் அவரினை தோற்கடிக்க இவர்களால் முடியவில்லை என்பதும் உண்மை.

ஊரில் மக்கள் புலம்பெயர்ந்தவர் கதையை கேட்டு சுமந்திரனை தூக்கி அடிக்கும் நிலையில் இல்லை.

அவர் இந்த முறை தோற்க காரணம் அவரே.

தமிழரசு கட்சியில் சாணாக்கியனை தவிர மிகுதி எல்லோருடனும் சுமந்திரன் சண்டை.

தலைவர் விடயத்தில் தோற்ற பின் அவர் செய்த கோக்குமாக்குகள் மக்களை கோபத்தின் எல்லைக்கே கொண்டு போயின.

வேட்பாளர் தேர்வில் அவர் நடந்து கொண்ட விதம் முத்தாய்ப்பாய் இருந்தது.

வழமையாக சொல்லும் பெட்டி வாங்கி விட்டார் கதைகளை அல்லது தீர்வை வாங்கி தரவில்லை கதைகளை நம்பி மக்கள் அவரை தோற்கடிக்கவில்லை.

2019-2024 அவர் நடந்து கொண்ட விதம், தமிழரசு கட்சியை, தமிழ் தேசிய அரசியலை அவர் சிறுக சிறுக சிதைக்கிறார் என்பதை மக்களுக்கு உணர்த்தியது.

ஆகவே அவரை அப்புறபடுத்த தீர்மானித்தனர்.

சுமந்திரன் ஏன் இப்படி நடந்து கொண்டார் உண்மையில் இவர் தெற்கின் ஏஜெண்டா என்பதல்லாம் விடை காண முடியா கேள்விகள்.

அப்படி பட்ட ஏஜெண்ட் இல்லை அவர், ஆனால் அவர் இப்படி நடந்து கொள்வது அவரின் குணவியல்பு சம்பந்தமான விடயம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும்

சீமான் திரியில் எழுதி இருந்தேன்.

தமிழ் நாட்டில் பெரியாரை, வடகிழக்கில் தலைவரை மறுதலித்து தேர்தல் அரசியல் செய்யம்முடியாது என.

இது சம்பந்தமாக சுமந்திரன் - தன் நாவடக்கத்தை கடைபிடித்திருக்க வேண்டும்.

சீமானை போல - எல்லா கேள்விக்கும் ஒரு பதிலை கூறியே தீர வேண்டும் என அவர் நினைத்தார். 

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பார். அவரை ஒத்த ரோட்டு என சக குடும்பத்தவர் அழைப்பார்கள். அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையும் குறை கூறுவார். மூதைதகளை மதிக்க மறுப்பார்.

அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் - அவரின் குணைவியல்பால் சக குடும்பத்தினர் அவரை விலகி நடக்க ஆரம்பிப்பார்கள்.

இன்னொரு திரியில் ஓணாண்டி சொன்னது போல் - சுமந்திரன் நேராக சொல்வதை சிறிதரன் மறைமுகமாக செய்வார்.

வெளிப்படையாக இருக்கிறேன் பேர்வழி என மனதில் பட்டதை எல்லாம் சாதாரண மனிதர்கள் நாம் கூறினாலே, வீடு, வேலையிடம் இரெண்டாகி விடும்.

ஒரு அரசியல்வாதி?

யாகாவாயினும் நா காக்க.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

நேற்று ஒரு திரியில், ஏராளமான தமிழ் அரசியல்  அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள் என்று தான் நம்புகிறேன். வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration  முடித்த அர்ச்சுனா போன்றோர் தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!  

நீங்கள் கல்வியை பற்றி எழுதியதால். அருச்சுனா Medical Admin - masters படித்துள்ளார், அதற்கு முன் அடிப்படை வைத்தியர் படிப்பை படித்துள்ளார் என நினைக்கிறேன்.

சுமந்திரன் மட்டும் என்னவாம்? இலங்கையில் பல்கலைகழக சட்ட பீடம் செல்லும் வகையில் ஏ எல் சோதனையில் அதி கூடிய வெட்டு புள்ளி எடுத்தவரா?

இல்லை. அவர் திருச்சபையின் தயவில் இந்தியாவில் ஒரு சாதாரண பி எஸ் சி யாகத்தான் ஆரம்பித்தார். பின்னர் இலங்கை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பு, பின்னர் மொனாஷில் ஒரு வருடம் மாஸ்டர்ஸ் (நினைவில் உள்ளதை வைத்து எழுதுகிறேன்).

ஆக அவரும் ஒன்றும் பிறவி ஜீனியஸ் இல்லை. அது தேவையுமில்லை.

உண்மையிலேயே நீங்கள் நினைப்பது போல் அவருக்கு அரசியல் அமைப்பில் அப்படி ஒரு சட்ட தேர்ச்சியும் இல்லை.

ஷிராணி பண்டாரநாயக்க, வடக்கு கிழக்கு இணைப்பு இப்படி அவர் பங்குகொண்ட அரசியலமைப்பு வழக்குகளில் எனக்கு தெரிய எல்லாமுமே தோல்விதான்.

கஜனோடு ஒப்பிடும் போது அவர் ஒரு நல்ல லோயர் என்பது சரியே.

ஆனால் இவரை விட்டால் வேறு வழியில்லை என்ற அளவுக்கு அவர் ஒன்றும் ராம் ஜெத்மலானி இல்லை.

ராம்ஜெத்மலானியோ, எந்த தனி மனிதனோ அப்படி பெரிய அப்பாடக்கர் இல்லை.

தவிரவும் அரசியல் அமைப்பு அறிஞர்கள் கட்டாயம் எம் எம்பிகளாக இருக்க வேண்டுமா?

ஜெரி அடம்ஸ், நெல்சன் மண்டேலா, காந்தி, இவர்கள் எவருமே புகழ் பூத்த வக்கீல்கள் இல்லை. அரசியலமைப்பு நிபுணர்களும் இல்லை.

ஆனால் எதிர் துருவ அரசியலில் இருந்தாலும், காந்தி/நேரு அம்பேத்கரின் சேவையை பெற்று கொண்டனர்.

இதுதான் சரியான அணுகுமுறை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

தவிரவும் அரசியல் அமைப்பு அறிஞர்கள் கட்டாயம் எம் எம்பிகளாக இருக்க வேண்டுமா?

இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  அரசியலமைப்பு அறிஞராகவும் சர்வதேச அளவில் பல நாட்டு  ராஜதந்திரிகளிடையே மதிக்கப்படுபவராகவும் இருந்து,  “இலங்கை பிரிக்கப்பட முடியாத இரு அலகுகளை கொண்ட ஒன்றியம்”என்ற அரசியலமைப்பு தீர்வு வரைவை எழுதிய நீலன் திருச்செலவம் 1997ல் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்படும் போது  அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வில்லைத் தானே! ( இதை தான் சொல்வது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று. அப்படியான ஒரு தீர்வு வரைவை பற்றி பேசுவதை கூட  தமிழ் மக்களால் இன்று நினைத்து பார்க்க கூட முடியாது.13 ஐ ஆவமு நீக்காமல் விடப்பா என்று அநுராவை பார்த்து கெஞ்சவேண்டிய நிலை) 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

@goshan_che இது ஒருவித காய்ச்சல் சகோ. நேரம் பொன்னானது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் கல்வியை பற்றி எழுதியதால். அருச்சுனா Medical Admin - masters படித்துள்ளார், அதற்கு முன் அடிப்படை வைத்தியர் படிப்பை படித்துள்ளார் என நினைக்கிறேன்.

சுமந்திரன் மட்டும் என்னவாம்? இலங்கையில் பல்கலைகழக சட்ட பீடம் செல்லும் வகையில் ஏ எல் சோதனையில் அதி கூடிய வெட்டு புள்ளி எடுத்தவரா?

இல்லை. அவர் திருச்சபையின் தயவில் இந்தியாவில் ஒரு சாதாரண பி எஸ் சி யாகத்தான் ஆரம்பித்தார். பின்னர் இலங்கை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பு, பின்னர் மொனாஷில் ஒரு வருடம் மாஸ்டர்ஸ் (நினைவில் உள்ளதை வைத்து எழுதுகிறேன்).

ஆக அவரும் ஒன்றும் பிறவி ஜீனியஸ் இல்லை. அது தேவையுமில்லை.

உண்மையிலேயே நீங்கள் நினைப்பது போல் அவருக்கு அரசியல் அமைப்பில் அப்படி ஒரு சட்ட தேர்ச்சியும் இல்லை.

ஷிராணி பண்டாரநாயக்க, வடக்கு கிழக்கு இணைப்பு இப்படி அவர் பங்குகொண்ட அரசியலமைப்பு வழக்குகளில் எனக்கு தெரிய எல்லாமுமே தோல்விதான்.

கஜனோடு ஒப்பிடும் போது அவர் ஒரு நல்ல லோயர் என்பது சரியே.

ஆனால் இவரை விட்டால் வேறு வழியில்லை என்ற அளவுக்கு அவர் ஒன்றும் ராம் ஜெத்மலானி இல்லை.

ராம்ஜெத்மலானியோ, எந்த தனி மனிதனோ அப்படி பெரிய அப்பாடக்கர் இல்லை.

தவிரவும் அரசியல் அமைப்பு அறிஞர்கள் கட்டாயம் எம் எம்பிகளாக இருக்க வேண்டுமா?

ஜெரி அடம்ஸ், நெல்சன் மண்டேலா, காந்தி, இவர்கள் எவருமே புகழ் பூத்த வக்கீல்கள் இல்லை. அரசியலமைப்பு நிபுணர்களும் இல்லை.

ஆனால் எதிர் துருவ அரசியலில் இருந்தாலும், காந்தி/நேரு அம்பேத்கரின் சேவையை பெற்று கொண்டனர்.

இதுதான் சரியான அணுகுமுறை.

என்னைப் பொறுத்தவரை சுமந்திரன் சிங்களவர்களால் தமக்கு சரிவருவார் எனக் கணிக்கப்பட்டதால் உயர்ந்தவர். இதனாலேயே சிங்களவர்களால் ஏமாறாறப்பட்டு தமிழ் மக்களிடம் தாழ்ந்தவர்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

என்னைப் பொறுத்தவரை சுமந்திரன் சிங்களவர்களால் தமக்கு சரிவருவார் எனக் கணிக்கப்பட்டதால் உயர்ந்தவர். இதனாலேயே சிங்களவர்களால் ஏமாறாறப்பட்டு தமிழ் மக்களிடம் தாழ்ந்தவர்.

தமிழ் மக்கள் யார்  யாரை உயர்த்தியுள்ளனர்? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சீமான் திரியில் எழுதி இருந்தேன்.

தமிழ் நாட்டில் பெரியாரை, வடகிழக்கில் தலைவரை மறுதலித்து தேர்தல் அரசியல் செய்யம்முடியாது என.

இது சம்பந்தமாக சுமந்திரன் - தன் நாவடக்கத்தை கடைபிடித்திருக்க வேண்டும்.

சீமானை போல - எல்லா கேள்விக்கும் ஒரு பதிலை கூறியே தீர வேண்டும் என அவர் நினைத்தார். 

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பார். அவரை ஒத்த ரோட்டு என சக குடும்பத்தவர் அழைப்பார்கள். அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையும் குறை கூறுவார். மூதைதகளை மதிக்க மறுப்பார்.

அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் - அவரின் குணைவியல்பால் சக குடும்பத்தினர் அவரை விலகி நடக்க ஆரம்பிப்பார்கள்.

இன்னொரு திரியில் ஓணாண்டி சொன்னது போல் - சுமந்திரன் நேராக சொல்வதை சிறிதரன் மறைமுகமாக செய்வார்.

வெளிப்படையாக இருக்கிறேன் பேர்வழி என மனதில் பட்டதை எல்லாம் சாதாரண மனிதர்கள் நாம் கூறினாலே, வீடு, வேலையிடம் இரெண்டாகி விடும்.

ஒரு அரசியல்வாதி?

யாகாவாயினும் நா காக்க.

(இந்தப் பதிவுக்கு மட்டுமல்லாமல் எல்லாவற்றிற்கும் சேர்த்து எழுதுகிறேன்)

சுமந்திரன் அரசியலுக்கு வரமுதலும் புலி ஆதரவாளர் அல்ல, வந்த பின்னரும் ஆதரவாளர் அல்ல. இதை வெளிப்படையாகச் சொன்னதை நான் மட்டுமல்ல, தாயக வாக்காளர்கள் பலர் நேர்மையாகத் தான் கண்டிருக்கிறார்கள். நீங்கள் "அமசடக்கியாக" இருந்திருந்தால் அவர் தப்பியிருப்பார் என்கிறீர்கள். இந்தக் கருத்து எங்கள் தமிழ் சமூகம் பற்றிய ஒரு சங்கடமான தகவலைத் தான் சொல்கிறது, சுமந்திரனைப் பற்றியல்ல.

In the long run, யாருமே இழக்க முடியாத அப்பாடக்கர் அல்ல என்பது உண்மை. ஆனால், 90 களில் இருந்த வாகன இறக்குமதி, சொத்து சேர்ப்பு, முகாமில் இருந்து ஆட்களை எடுத்து விடக் காசு என்று வலம் வந்த தமிழ் பா.உக்களில் இருந்து வித்தியாசமான பா. உ வாக இருந்த இருவர் சுமந்திரனும் , சம்பந்தரும். இதே போலத் தான் நீலனும், தேசியப் பட்டியலில் கொண்டு வரப் பட்டு தீர்வுத் திட்டத்தில் மட்டுமே குறியாக இருந்தார். ஒரு ஆண்டினுள், "கூட்டம் போட்டு அலட்ட மட்டுமே இவர்கள் லாயக்கு" என வெறுத்துப் போய் பதவி விலகினார். பதவி விலகிய பின்னரும் பாதுகாப்பு வழங்கப் பட்ட நிலையில் தற்கொலைக் குண்டு தாரி மூலம் கொல்லப் பட்டார் (இது சிலருக்கு கிச்சு கிச்சு மூட்டும், நான் பொறுப்பல்ல!😎)

கல்விச் சான்றிதழ் தீர்வு முயற்சிகளுக்குக் கட்டாயமல்ல. கல்விச் சான்றிதழும், அதனோடு இணைந்து வரும் சில திறன்களும் நீங்கள் தேடும் "இராஜதந்திரி, பேச்சு வார்த்தையாளர்" ஆகியோருக்கு முக்கியம் என நினைக்கிறேன். வெளிநாட்டு/உள்நாட்டுப் பிரதிநிதிகளோடு இருக்கும் பரிச்சயமே இந்த அரசியல் பேச்சு வார்த்தைகளில் சில துரும்புகளை நகர்த்த உதவக் கூடிய ஆயுதமாகக் கூடும். ஏனைய நாடுகளின் வரலாற்றில் இது நடந்திருக்கிறது. எனவே தான் "பிள்ளையைத் தொட்டிலோடு எறியாமல்" சுமந்திரனை இந்த முறையும் பா.உவாக தமிழர்கள் வைத்திருக்க வேண்டுமென்று நான் உட்பட பல தாயக மக்களும் விரும்பினர். ஆனால், "பேசுவது பிடிக்கவில்லை, கோர்ட் சூட் போடுவது பிடிக்கவில்லை, அவரது ஆங்கிலம் பிடிக்கவில்லை" என்று சும்மா அலட்டிய கோஷ்டிகள் வாக்குகளையும் குறைத்திருக்கிறார்கள். இனி வேட்டி சட்டையோடு போய் சிறிதரனா பேசுவார்? பொன்னரை எந்த தூதரகமும் ரீ பார்ட்டிக்குக் கூட அழைக்காதென நினைக்கிறேன்.

 எனவே, மக்கள் தீர்ப்பிற்கு விளைவுகள் இருக்கும். ஒரு விளைவு இது.

சுமந்திரன் காதையை அப்படியே அடியோடு அழித்து விட்டு, புதிதாக துவங்க வேண்டும். பிழைக்க வழியில்லாமல் அரசியலுக்கு வந்து ஒழித்திருந்தவர் அல்ல சுமந்திரன். அவர் இனித் தன் அடுத்த அத்தியாயத்தை தமிழ் அரசியலுக்குள் இல்லாமல் வெளியே ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.