Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, goshan_che said:

ஆனால் கருணாவுக்கு ஒரு போதும் எதையும் கொடுக்கவில்லை என்ற நிம்மதியில் எப்போதும் கண்மூடுவேன் 🤣.

சாணாக்ஸ்தான் கிழக்கில் இருப்போரில் முதன்மையானவர். அது அவருக்கான இடம் அல்ல, அந்த மக்களுக்கான இடம்.

உங்கள் கனவு காணும் ஆசையை நான் கலைக்க விரும்பவில்லை .ஏதாவது நல்லது நடந்தால் சரி ...நீங்கள் ஒன்றை நினைவில் வைத்திருங்கள் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் பிள்ளையானை குற்ற புலனாய்வு அழைத்திருந்தால் தான் அவர் உள்ளுக்குள் போய் விடுவார் என்ற காரணம் தான் இவரது கடசிக்கு அதிக வாக்கு விழ காரணம் 

கருணா 3வது இடத்தில் இருத்திருந்தார் 

  • Replies 67
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை.  பொய்ச் செ

goshan_che

சந்தோசம். இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன்.   டில்வின் மா.சபை முறை கலைக்கப்படும் என கூறியதற்கு,  சபையில் விளக்கம் கேட்ட சாண

தமிழ் சிறி

இவ்வளவு காலமும்...  சம்பந்தன்  சுமந்திரன் இருந்த படியால்தான்...  கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂 சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார். எது உங

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, island said:

இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  அரசியலமைப்பு அறிஞராகவும் சர்வதேச அளவில் பல நாட்டு  ராஜதந்திரிகளிடையே மதிக்கப்படுபவராகவும் இருந்து,  “இலங்கை பிரிக்கப்பட முடியாத இரு அலகுகளை கொண்ட ஒன்றியம்”என்ற அரசியலமைப்பு தீர்வு வரைவை எழுதிய நீலன் திருச்செலவம் 1997ல் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்படும் போது  அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வில்லைத் தானே! ( இதை தான் சொல்வது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று. அப்படியான ஒரு தீர்வு வரைவை பற்றி பேசுவதை கூட  தமிழ் மக்களால் இன்று நினைத்து பார்க்க கூட முடியாது.13 ஐ ஆவமு நீக்காமல் விடப்பா என்று அநுராவை பார்த்து கெஞ்சவேண்டிய நிலை) 

உண்மைதான்….

என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது.

தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது….

இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Justin said:

சுமந்திரன் அரசியலுக்கு வரமுதலும் புலி ஆதரவாளர் அல்ல, வந்த பின்னரும் ஆதரவாளர் அல்ல. இதை வெளிப்படையாகச் சொன்னதை நான் மட்டுமல்ல, தாயக வாக்காளர்கள் பலர் நேர்மையாகத் தான் கண்டிருக்கிறார்கள். நீங்கள் "அமசடக்கியாக" இருந்திருந்தால் அவர் தப்பியிருப்பார் என்கிறீர்கள். இந்தக் கருத்து எங்கள் தமிழ் சமூகம் பற்றிய ஒரு சங்கடமான தகவலைத் தான் சொல்கிறது, சுமந்திரனைப் பற்றியல்ல.

இதில் சங்கடம் எதுவும் இல்லை.

அரசியல் என்பதே இவ்வாறான விடயங்கள் நிறைந்து இருக்கும் களம்தான்.

சுமந்திரன் கூட ஒரு தேர்தல் (அவர் முதற்தடவை வென்ற தேர்தல் என நினைக்கிறேன்) வர இரு நாட்களுக்கு முன் பிரபாகரன் மாவீரன் என ஸ்டண்ட் அடித்தவர்தான்.

அது மட்டுமா, விதைத்த வயலை உழுதது, நல்லாடட்ட்சி நேரம் அனுர என்னை பிரதமர் ஆக முன்மொழிந்தார் என சொல்லி ஜேவிபியிடம் மூக்குடைந்தது, இப்படி ஒரு வழமையான நாலாம் தர அரசியல்வாதி போலவே சுமந்திரனின் 2019 பின்னான அநேக நடவடிக்கைகள் இருந்தன.

ஆகவே சுமந்திரன் எப்போதும் வெள்ளந்தியாக பேசும் மனிதர் அல்ல.

ஒரு வக்கீல் அப்படியானவராக இருப்பார் என நினைக்கும் நாம்தான் வெள்ளந்தி மனிதர்களாக இருக்கிறோம்.

என்னை பொறுத்தவரை சுமந்திரன் - இரு காரணிகளால் தோத்தார்.

ஒன்று நான் மேலே சொன்ன வாக்களாரிடம் நம்பிக்கை இழந்தது. யாழில் தமிழரசுக்கு விழுந்த வாக்கில் கணிசாமனதை கூட விருப்பு வாக்கில்  அவரால் பெறமுடியவில்லை. 

உதாரணமாக என்னை அல்லது @கிருபன் ஜி யை எடுங்கள். நாம் புலம்பெயர் மொக்கு கூட்டத்தை அடியோடு வெறுப்போர். அவர்களின் கஞ்சா, கப்ஸா கதைகளை ஒரு போதும் நம்பாதோர். நாம்தான் சுமந்திரனின் prime target base, மானசீக வாக்கெடுப்பில் எம்மையே அவரால் தக்க வைக்க முடியவில்லை.

இதுதான் ஊரிலும் நடந்தது. இரெண்டாவது - வழமையாக சுமந்திரனை தேர்வு செய்த கணிசமான வாக்காளர் இம்முறை என்பிபி, டாக்டர் சிறிபவாநந்தராஜா என போய்விட, அதை செய்ய முடியாதவர்கள், அருச்சுனாவுக்கு போட்டுள்ளனர். 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

In the long run, யாருமே இழக்க முடியாத அப்பாடக்கர் அல்ல என்பது உண்மை. ஆனால், 90 களில் இருந்த வாகன இறக்குமதி, சொத்து சேர்ப்பு, முகாமில் இருந்து ஆட்களை எடுத்து விடக் காசு என்று வலம் வந்த தமிழ் பா.உக்களில் இருந்து வித்தியாசமான பா. உ வாக இருந்த இருவர் சுமந்திரனும் , சம்பந்தரும். இதே போலத் தான் நீலனும், தேசியப் பட்டியலில் கொண்டு வரப் பட்டு தீர்வுத் திட்டத்தில் மட்டுமே குறியாக இருந்தார். ஒரு ஆண்டினுள், "கூட்டம் போட்டு அலட்ட மட்டுமே இவர்கள் லாயக்கு" என வெறுத்துப் போய் பதவி விலகினார். பதவி விலகிய பின்னரும் பாதுகாப்பு வழங்கப் பட்ட நிலையில் தற்கொலைக் குண்டு தாரி மூலம் கொல்லப் பட்டார் (இது சிலருக்கு கிச்சு கிச்சு மூட்டும், நான் பொறுப்பல்ல!😎)

நீலன், சுமந்திரன் ஒப்பீடு ஒரு அளவுக்கு மேல் சரிவராது.

நீலன் தன்னை தமிழர் பிரதிநிதி என அடையாளம் காட்டவில்லை. அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஆசியோடு, சந்திரிக்கா கேட்டு, அரச எம்பியாகி ஒரு தீர்வை வரைய முயன்றார்.

நீலன் விடயத்தில் கூட, நீலனைத்தான் புலிகள் விவேகமின்றி சாவடித்தானர், ஆனால் அவரின் தீர்வு திட்டத்தை சாவடித்தது பிக்குகள்.

ஆனால் சுமந்திரன் அப்படி அல்ல. அவர் தமிழர் பிரதிநிதி என தன்னை முந்தள்ளியவர். இவருக்கான கடமை, பொறுப்பு வேறு. மக்கள் பிரதிநிதிக்கும், தொழில்நுட்ப வல்லுனருக்கும் உள்ள இடைவெளி இது.

சிலவேளை இப்படி ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இருப்பதுதான் சுமந்திரனின் calling ஆக இருக்க கூடும், பிழையாக தேர்தல் அரசியலுக்குள், கட்சி தலைமைதுவத்துக்குள் வந்துவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Justin said:

கல்விச் சான்றிதழ் தீர்வு முயற்சிகளுக்குக் கட்டாயமல்ல. கல்விச் சான்றிதழும், அதனோடு இணைந்து வரும் சில திறன்களும் நீங்கள் தேடும் "இராஜதந்திரி, பேச்சு வார்த்தையாளர்" ஆகியோருக்கு முக்கியம் என நினைக்கிறேன். வெளிநாட்டு/உள்நாட்டுப் பிரதிநிதிகளோடு இருக்கும் பரிச்சயமே இந்த அரசியல் பேச்சு வார்த்தைகளில் சில துரும்புகளை நகர்த்த உதவக் கூடிய ஆயுதமாகக் கூடும். ஏனைய நாடுகளின் வரலாற்றில் இது நடந்திருக்கிறது. எனவே தான் "பிள்ளையைத் தொட்டிலோடு எறியாமல்" சுமந்திரனை இந்த முறையும் பா.உவாக தமிழர்கள் வைத்திருக்க வேண்டுமென்று நான் உட்பட பல தாயக மக்களும் விரும்பினர். ஆனால், "பேசுவது பிடிக்கவில்லை, கோர்ட் சூட் போடுவது பிடிக்கவில்லை, அவரது ஆங்கிலம் பிடிக்கவில்லை" என்று சும்மா அலட்டிய கோஷ்டிகள் வாக்குகளையும் குறைத்திருக்கிறார்கள். இனி வேட்டி சட்டையோடு போய் சிறிதரனா பேசுவார்? பொன்னரை எந்த தூதரகமும் ரீ பார்ட்டிக்குக் கூட அழைக்காதென நினைக்கிறேன்.

பார்க்கலாம்….பாலா அண்ணையை தவிர உலக ராஜதந்திரிகளிடம் பெரிய பெயர் எடுத்தவர் எண்டு எவரும் இல்லை.

சுமந்திரன் தன் இராஜதந்திர தொடர்பை அப்படி வெளிகாட்டி இருந்தால் - நம் இனம் ஒரு படியாவது முன் நோக்கி போயிருக்கும்.

ஓட்டாவா பாராளுமன்றத்துக்கு வெளியே நிண்டு போட்டோ போட்டதெல்லாம் நினைவில் இருக்கிறது.

அடிக்கடி போனதால் முகம் தெரிந்திருக்கும்தான்.

ஆனால் தேர்தலில் தோற்றால் அதை இன்னொருவர் பிரதியிடுவார் என்பது இராஜதந்திரிகள் வழமையாக  எதிர்பார்ப்பதுதான்.

நமது நிலைப்பாட்டை ஆங்கிலத்தில் எடுத்து சொல்ல, கஜனும், சாணாக்ஸும் போதும்.

Edited by goshan_che
குலம்-முகம் autocorrect 🤯
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, goshan_che said:

உண்மைதான்….

என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது.

தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது….

இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.

நீங்கள் மாறுங்கள் நாங்கள் மாற மாட்டோம்...😅
சிங்களவனால் சுட்ட வடு மாறும் 
தமிழனால் சுட்ட வடு மாறது ..😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

சுமந்திரன் காதையை அப்படியே அடியோடு அழித்து விட்டு, புதிதாக துவங்க வேண்டும். பிழைக்க வழியில்லாமல் அரசியலுக்கு வந்து ஒழித்திருந்தவர் அல்ல சுமந்திரன். அவர் இனித் தன் அடுத்த அத்தியாயத்தை தமிழ் அரசியலுக்குள் இல்லாமல் வெளியே ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். 

வாழ்த்துக்கள்.

தமிழ் இனத்தின் அரசியலை பாதிக்காமல் எதையாவது செய்யட்டும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, goshan_che said:

உண்மைதான்….

என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது.

தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது….

இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.

இறந்து போன யாரையும் கூட்டிவர முடியாது. ஆனால் இன்று வரட்டு தமிழ் தேசியம் பேசி தம் பக்கத்தில் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி வருவோர் இவ்வாறான அரசியல் எமக்கு எப்படி  பேரிழப்பை தந்தது, எனவே இனிமேல் அறிவுபூர்வ அரசியல் செய்ய வேண்டும் என்று எண்ணிப்பார்கக இவைகளை சுட்டிக்காட்டுதல் முக்கியம் இல்லையா? 

(உங்கள் திறமையான வாதத்தால் பிணை எடுத்ததற்கு  உங்களுக்கு ஒரு நன்றி கூட கிடைத்துள்ளது. வாழ்த்துகள் கோசான்😂) just joke

13 minutes ago, goshan_che said:

நீலன் விடயத்தில் கூட, நீலனைத்தான் புலிகள் விவேகமின்றி சாவடித்தானர், ஆனால் அவரின் தீர்வு திட்டத்தை சாவடித்தது பிக்குகள்.

அந்நேரத்தில் சர்வதேச அனுசரணையுடன் அந்த தீர்வு திட்ட அடிப்படையில்,  ஒரு பேச்சுவார்ததையை நடத்தியிருந்தால்,  அந்த தீர்வுத்திட்டத்தை யாராலும் சாவடிக்க முடிந்திராது. மாறாக அதில் உ‌ள்ள குறைபாடுகள் களையப்பட்டு அது ஒரு தீர்வாக வந்திருக்க கூடிய சாத்தியத்தை  நீங்கள் முற்றாக  நிராகரிக்கின்றீர்களா?   

அதை போன்றதொரு தீர்வை இனி பெற முடியுமா? அதற்கான உலக சூழல் உள்ளதா? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, island said:

இறந்து போன யாரையும் கூட்டிவர முடியாது. ஆனால் இன்று வரட்டு தமிழ் தேசியம் பேசி தம் பக்கத்தில் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி வருவோர் இவ்வாறான அரசியல் எமக்கு எப்படி  பேரிழப்பை தந்தது, எனவே இனிமேல் அறிவுபூர்வ அரசியல் செய்ய வேண்டும் என்று எண்ணிப்பார்கக இவைகளை சுட்டிக்காட்டுதல் முக்கியம் இல்லையா? 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே ஐலண்ட் 🤣.

30 minutes ago, island said:

அந்நேரத்தில் சர்வதேச அனுசரணையுடன் அந்த தீர்வு திட்ட அடிப்படையில்,  ஒரு பேச்சுவார்ததையை நடத்தியிருந்தால்,  அந்த தீர்வுத்திட்டத்தை யாராலும் சாவடிக்க முடிந்திராது. மாறாக அதில் உ‌ள்ள குறைபாடுகள் களையப்பட்டு அது ஒரு தீர்வாக வந்திருக்க கூடிய சாத்தியத்தை  நீங்கள் முற்றாக  நிராகரிக்கின்றீர்களா?   

புலிகள் காணாது என்றும்…

பிக்குகள் ரொம்பவே ஒவர் எண்டும்…

அந்த திட்டத்தை பப்படம் ஆக்கி இருப்பார்கள்.

சாகும் தறுவாயில் நீலன் இந்த கசப்பான உண்மையை ஏற்கும் மனநிலைக்கு வந்து இருந்தார் என அறிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, island said:

அதை போன்றதொரு தீர்வை இனி பெற முடியுமா? அதற்கான உலக சூழல் உள்ளதா?

எப்போதும் இருந்ததில்லை.

புலிகள் மட்டுமே அதற்கு தடையாக இருந்தனர் எனில்:

புலிகள் அழிந்த பின் அப்படி ஒரு தீர்வை சிங்களவர் தட்டில் வைத்து சம்பந்தன் போன்ற ஏக்கிய இலங்கை தலைவரிடம் கொடுத்திருப்பார்கள்.

இன்று அதை அனுரா தரலாம்.

With or without tigers, பேரினவாதம்  ஒரு போதும் ஒரு தலைமுடியளவு அதிகாரத்தை கூட உங்களுக்கு தராது. இதுதான் யதார்த்தம். போராடுவதே ஒரே வழி. எந்த வகையான போராட்டம் என்பதே கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நீலன், சுமந்திரன் ஒப்பீடு ஒரு அளவுக்கு மேல் சரிவராது.

நீலன் தன்னை தமிழர் பிரதிநிதி என அடையாளம் காட்டவில்லை. அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஆசியோடு, சந்திரிக்கா கேட்டு, அரச எம்பியாகி ஒரு தீர்வை வரைய முயன்றார்.

அரச எம்பி??

இது சரியான தகவலல்ல என நினைக்கிறேன். நீலன் சந்திரிக்காவின் நண்பர், ஆனால் அவரை தேசியப் பட்டியல் மூலம் தீர்வுத்திட்டத்திற்காகவே உள்ளே கொண்டு வந்தது த.வி.கூ என்று தான் நான் அறிந்திருக்கிறேன். த.வி.கூ வின் உள்ளேயும், வெளியே பல தமிழ் தேசியர்களிடையேயும் வரவேற்பு தன் முயற்சிக்கு இல்லாமையால் தான் அவர் பதவி விலகினார்!

தேசியப் பட்டியலை தமிழரசுக் கட்சி/த.வி.கூ இவ்வாறு துறை சார் நிபுணர்களை உள்ளே கொண்டு வரத் தான் பாவித்து வந்திருக்கிறது. அப்படி உள்ளே கொண்டு வரப் பட்டவர் தான் சுமந்திரன். "ரணில் மூலம் திணிக்கப் பட்டார்" என்ற ஆதாரமில்லாத பொய்களைச் சொல்லி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொள்கிறார்கள் சுமந்திரன் லவ்வர்ஸ் சிலர்😂.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Justin said:

ஓம் நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன். 

தேடிப்பார்க்க வேண்டும்.

வடிவாக நியாபகம் இல்லை, ஆனால் தீர்வு திட்டம் வரையும் போது தான் இனத்தின் பிரதிநிதி அல்ல என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார் என நியாபகம்.

இதனால்தான் பதவியை இராஜினாமா செய்தாரோ? 

4 minutes ago, Justin said:

தேசியப் பட்டியலை தமிழரசுக் கட்சி/த.வி.கூ இவ்வாறு துறை சார் நிபுணர்களை உள்ளே கொண்டு வரத் தான் பாவித்து வந்திருக்கிறது. அப்படி உள்ளே கொண்டு வரப் பட்டவர் தான் சுமந்திரன். "ரணில் மூலம் திணிக்கப் பட்டார்" என்ற ஆதாரமில்லாத பொய்களைச் சொல்லி தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொள்கிறார்கள் சுமந்திரன் லவ்வர்ஸ் சிலர்😂.

ஓம்…சுமந்திரன் இதோடு நின்று அந்த வேலையை மட்டும் செய்திருக்கலாம் என்பதையே நான் சொல்கிறேன். தேவையில்லாமல் வாக்கு அரசியலில் இறங்காமல்.

ஆனால் பின்கதவு விமர்சனத்துக்கு  தொடர்ந்தும் ஆளாகி இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, goshan_che said:

ஓம்…சுமந்திரன் இதோடு நின்று அந்த வேலையை மட்டும் செய்திருக்கலாம் என்பதையே நான் சொல்கிறேன். தேவையில்லாமல் வாக்கு அரசியலில் இறங்காமல்.

ஆனால் பின்கதவு விமர்சனத்துக்கு  தொடர்ந்தும் ஆளாகி இருப்பார்.

தொடர்ந்து அவர் தேசியப் பட்டியலில் (பின் கதவால்) மட்டும் வந்து ஒன்றும் பேசாமல் "பின் குசினியில் வேலை" செய்திருக்கலாம் என்கிறீர்களா😂?

ஐயா, 2 முறை தேர்தல் வென்றதையே சகித்துக் கொள்ளாமல் பொங்கிய பட்டாசு ரீம் தாங்களே போட்டுத் தள்ளியிருப்பர் சுமந்திரனை.

ஆனால், இந்த சுமந்திரன் மீதான இவர்களின் ஒற்றை வன்மம் எப்படி இவர்களைத் தேர்ந்தெடுத்த குருடர்களாக - selective blind மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா?

1. ஈழவேந்தனை புலிகள் தேசியப் பட்டியல் (பின் கதவு) மூலம் வர வைத்தனர். நல்ல பேச்சாளர். லீவு போட்டு விட்டு ஊர் சுற்ற ஆரம்பித்து இறுதியில் அதனாலேயே பதவி பறி போனது. பதவி பறி போகும் தறுவாயிலும் தன் பா.உ குடியிருப்பு சலுகையை வைத்திருக்கப் போராடியவர் அமரர் ஈழவேந்தன். இதையெல்லாம் மறந்து விட்டு, அவருக்கு "தேசியப் புகழ் மாலை" சாத்தியவர்கள் இருக்கிறார்கள்.

2. நம் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முதல் முறை பா. உ ஆனது புலிகள் கிழக்கில் தெரிவான ஒரு கூட்டமைப்பு பா. உவை ஆயுத முனையில் மிரட்டி பதவி விலக வைத்தமையால் வந்த வெற்றிடத்திற்கு.இதைப் பின் கதவென்று கூட சொல்ல முடியாது, "கூரையைப் பிரிச்சு" இறங்கியதாகத் தான் சொல்ல முடியும்😂! இதுவும் கண்ணுக்குத் தெரியாமல் தேர்ந்த  குருடர்களாக இருக்கிறார்கள்!

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Justin said:

கூரையை பிரித்து பதவி விலக வைக்கப்பட்டவர் இராசநாயகம் என நினைக்கிறேன்.

ஈழவேந்தனுக்கு பொட்டம்மான் அடித்த ஆப்பை இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது.

மிக அரிதாக, பக்கம் சாரா, தரவு நேர்தியான கட்டுரை தமிழில்.

போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு குப்புற படுப்பதில் எல்லோருக்கும் முன்னோடி ஐயா ஈழவேந்தந்தான்🤣.

18 minutes ago, Justin said:

தொடர்ந்து அவர் தேசியப் பட்டியலில் (பின் கதவால்) மட்டும் வந்து ஒன்றும் பேசாமல் "பின் குசினியில் வேலை" செய்திருக்கலாம் என்கிறீர்களா😂?

இதற்கு அவர் தயாராக இல்லை என நினைக்கிறேன். ஆனால் என் கணிப்பில் அவர் ஒரு good backroom staffer  ஆக இருப்பார் என்றே நினைக்கிறேன்.

Shop floor ற்கு வராமலே விட்டிருந்தால்… பட்டாசுகளுக்கு அவரை பற்றி பெரிய கவலை எழுந்திராது, அவரும் வாயால் கெட்டிருக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_cheநீலன் திருச்செல்வம் என்றுமே அரச எம்பியாக இருக்கவில்லை. இறக்கும் போதும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினராகவே இருந்தார் என்பதே எனது ஞாபகம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, island said:

@goshan_cheநீலன் திருச்செல்வம் என்றுமே அரச எம்பியாக இருக்கவில்லை. இறக்கும் போதும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினராகவே இருந்தார் என்பதே எனது ஞாபகம். 

நீலன் திருச்செல்வம் சந்திரிகா குமாரணதுங்கவின் சிறுவயது நண்பர். இது ஒன்று மட்டும் போதுமே அவரை அந்நாள்களில் போட்டுத் தள்ளுவதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
44 minutes ago, வாலி said:

நீலன் திருச்செல்வம் சந்திரிகா குமாரணதுங்கவின் சிறுவயது நண்பர். இது ஒன்று மட்டும் போதுமே அவரை அந்நாள்களில் போட்டுத் தள்ளுவதற்கு.

நீதி நேர்மையானவர்களாக இருந்திருப்பார்கள் என்றால்......?

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

நீதி நேர்மையானவர்களாக இருந்திருப்பார்கள் என்றால்......?

சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்களை விட நீதி நேர்மையானவர்களாக இருந்திருக்கலாம்……..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.