Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.

https://thinakkural.lk/article/313167

Edited by ஏராளன்

  • Replies 108
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அ

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் 

  • கருத்துக்கள உறவுகள்

மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளியானது!

மதுபான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளியானது!

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

”இக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.
மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.

சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாவட்ட ரீதியாக பார்க்கும் பொழுது கொழும்பு 24,
கம்பஹா 18,
களுத்துறை 8,
காலி 9,
மாத்தறை 5,
அம்பாந்தோட்டை 5,
யாழ்ப்பாணம் 5,
கிளிநொச்சி 16,
வவுனியா 2,
மன்னார் 2,
திருகோணமலை 4,
மட்டக்களப்பு 1,
அம்பாறை 5,
கண்டி 11,
மாத்தளை 6,
நுவரெலியா 8,
அநுராதபுரம் 4,
பொலனறுவை 3,
புத்தளம் 6,
குருணாகலை 8,
பதுளை 9,
மொணராகலை 7,
இரத்தினபுரி 6 ,
கேகாலை 2 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எந்த விதமான மதுபான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இப் பட்டியலின் பிரகாரமே சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சமீபத்தில் பேசுபொருளாக மாறியிருந்தன. அரசியல் இலஞ்சத்தின் போர்வையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை பொதுமக்களும் அறியக்கூடிய வகையில் அதனை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1411089

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி 16 

அதுவும் தெருவோர சாராயக் கடை  - FL4 

சிங்களத்தின் கருவறுக்கும்  திட்டத்தினை யாரோ தமக்குச் சாதகமாகப் பாவித்துள்ளார்கள். 

யார் அவர்/அவர்கள் ? 

🥺

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

large.IMG_7841.jpeg.6b627f20cc9732675ca3

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ஸ் ஒருவரது மூச்சையும் காணோமே,.....வளைக்குள் ஓடி ஒழிந்துகொண்டனரோ,......😏

  • கருத்துக்கள உறவுகள்

"யார் பெற்றார்கள்?" என்றால் நபர்களின் பெயர்கள் அல்லவா வர வேண்டும்? இது மாவட்டங்களின் பெயர்களோடு நின்றிருக்கிறது.

கிழக்கு நகரொன்றில் இருந்த மதுபானசாலை சாணக்கியனுடையது என்று யாழ் களத்தில் "நம்பிக்கையான தகவல்களின் மூலமான" தமிழ்சிறி😎 சொன்ன நினைவு! அப்ப சாணக்கியனே துணிந்து தன்னைத் துகிலிருந்து கொண்டிருக்கிறார் போல இருக்கிறதே😂?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு, கம்பஹா மக்கள் தொகை அனிப்படையில்  பெரிய மாவட்டங்கள். கொழும்பு Metropolis city . அவற்றுக்கு முறையே 24,18 என்றுவர சிறிய மாவட்டமான கிளிநொச்சிக்கு மூன்றாவது இடத்தில் 16  அனுமதிகள்.   கிளிநொச்சி றெக்கோட் இந்த விஷயத்தில். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

புலம்பெயர்ஸ் ஒருவரது மூச்சையும் காணோமே,.....வளைக்குள் ஓடி ஒழிந்துகொண்டனரோ,......😏

இப்ப... உங்களுக்கு,  என்ன பிரச்சினை?
கீழே உள்ள செய்தி தமிழில் தானே உள்ளது. அதனை நீங்கள்  வாசித்து விளங்கிக் கொள்வதில், 
உங்களுக்கு  ஏதாவது கோளாறு உள்ளதா? 

கிளிநொச்சியில்.... அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட  சந்திரகுமார் எல்லோரினது சாராயக் கடைகளும்  உள்ளது தெரியுமா? 

ஸ்ரீதரன்...  //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று...  வெளிப்படையாக அறிவித்த பின்பும்,  லூசுத் தனமாக எழுதிக் கொண்டு   இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். 
 
👇 கீழே உள்ள இணைப்பை... உங்கள் மூளையில் பதியும் வரை... திரும்ப, திரும்ப வாசிக்கவும்.
அப்படியும் விளங்கவில்லை என்றால், ஏதோ... கோளாறு இருக்குது  என்று அர்த்தம். நல்ல வைத்தியரை நாடவும். 

நன்றி. 👇

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

டாங்ஸ்  உங்களுக்கும் உங்களுக்கு லைக் போட்டவருக்கும். 

குமிறிப் பாயுறீங்கள்,...  .🤣

சிறீயருக்குத் தெரியாமல் அவருடைய தேர்தல் தொகுதியில் சாராய அனுமதிப் பத்திரம் கொடுக்கப்படுகிறதென்றால் இவர் எப்படி தமிழருக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் கொண்டிருக்க  முடியும்? 

அல்லது 

சிறீயருக்கு எதுவுமே தெரியாது என்று நம்பும் மக்கள் மிகவும் மோசமான  முட்டாள்களாக இருக்க வேண்டும். 

இதில் எது சரி? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மதுபான இலாகாவின் இணையத்தளத்தில் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு  வரையிலான மதுபான அனுமதி பெற்றவர்களின் பெயர் விபரங்களுடன் பல்வேறு தரப்பட்ட மதுபான லைசென்சுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விபரங்கள் எதுவும் தரவேற்றப்படவில்லை.

https://www.excise.gov.lk

  • கருத்துக்கள உறவுகள்

கெதியில பார் லைசன்ஸ் வாங்கிக் குடுத்த ஆக்களிண்ட லிஸ்டும் வெளிவருகுதாம். பார் சிறீதரனின்ட சத்தத்தைக் காணேல்லை. விக்கி அய்யா இன்னும் ஒராளுக்கு வாங்கிக் குடுத்திருக்கிறார் எண்டு ஒரு கதை அடிபடுகுது, அதுவும் மேல் மாகாணத்திலையாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

கொழும்பு, கம்பஹா மக்கள் தொகை அனிப்படையில்  பெரிய மாவட்டங்கள். கொழும்பு Metropolis city . அவற்றுக்கு முறையே 24,18 என்றுவர சிறிய மாவட்டமான கிளிநொச்சிக்கு மூன்றாவது இடத்தில் 16  அனுமதிகள்.   கிளிநொச்சி றெக்கோட் இந்த விஷயத்தில். 

கிளிநோச்சியில் ஏற்கனவே மது பானசாலைகள் இருக்கவில்லை போலும் அது தான் இப்ப அதிக மதுபாணசாலைகள் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்...அரசாங்கம் மதுபானம் விற்பதை  செய்யவில்லை தானே...

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

கிளிநோச்சியில் ஏற்கனவே மது பானசாலைகள் இருக்கவில்லை போலும் அது தான் இப்ப அதிக மதுபாணசாலைகள் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்...அரசாங்கம் மதுபானம் விற்பதை  செய்யவில்லை தானே...

உண்மை தான் அந்த குறையை தமிழர் தேசிய அரசியல்வாதிகள் யாரோ ஒருவரோ பலரோ தீர்த்துள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

உண்மை தான் அந்த குறையை தமிழர் தேசிய அரசியல்வாதிகள் யாரோ ஒருவரோ பலரோ தீர்த்துள்ளனர். 

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பா.உ.மன்ற உறுப்பினர்கள் இதை செய்திருப்பினம் போல..😅

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை வெளிவிட வேண்டாம் என்ற பேச்சுவார்த்தை தான் இன்று ஜனாதிபதியுடன் நடந்ததா? 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, RishiK said:

பெயரை வெளிவிட வேண்டாம் என்ற பேச்சுவார்த்தை தான் இன்று ஜனாதிபதியுடன் நடந்ததா? 

சிறியர் வழிவதைப் பார்த்தால் சந்தேகமாகத்தான் இருக்கிறது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திரன். அனுமதியும்.  எடுத்துக்கொடுத்து     கடையை நாட வெட்டி திறந்தும்.  விட்டுள்ளார்.    படங்கள் பாரக்கவில்லையா??   

இருக்கட்டும்  மக்கள் இந்த கடைகளுக்கு போகாது விட்டால்  கடையை பூட்டுவார்கள்.  அல்லவா??   🙏

கள்ளச்சாரயம்.  வெட்டுரும்பு   போன்ற  தரமற்றவற்றை குடித்து உடம்பை கெடுபதை விட.  இது நல்லது   🤪

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

சுத்திரன். அனுமதியும்.  எடுத்துக்கொடுத்து     கடையை நாட வெட்டி திறந்தும்.  விட்டுள்ளார்.    படங்கள் பாரக்கவில்லையா??   

இருக்கட்டும்  மக்கள் இந்த கடைகளுக்கு போகாது விட்டால்  கடையை பூட்டுவார்கள்.  அல்லவா??   🙏

கள்ளச்சாரயம்.  வெட்டுரும்பு   போன்ற  தரமற்றவற்றை குடித்து உடம்பை கெடுபதை விட.  இது நல்லது   🤪

அது சரி, யார் இது "சுத்திரன்"? சுமந்திரன் லவ்வர்சின் PSTSD நோய்க்கு தற்காலிக மருந்தாகக் கொண்டுவரப் பட்டிருக்கும் ஏதாவது புதிய பாத்திரமா😂?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

அது சரி, யார் இது "சுத்திரன்"? சுமந்திரன் லவ்வர்சின் PSTSD நோய்க்கு தற்காலிக மருந்தாகக் கொண்டுவரப் பட்டிருக்கும் ஏதாவது புதிய பாத்திரமா😂?

எழுதும் போது ம தவறி விட்டது     ம. வை. போட்டு வாசியுங்கள்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

எழுதும் போது ம தவறி விட்டது     ம. வை. போட்டு வாசியுங்கள்   🤣

சரி! "மசுத்திரன்"😎. யார் இது?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

சரி! "மசுத்திரன்"😎. யார் இது?

சுமத்திரன்.   தான்     ம. போட்டால்   சுத்து மாத்து.   என்று பொருள்படும்   😂

  • கருத்துக்கள உறவுகள்

பார் புகழும் வள்ளலை…

நான் புகழ முடியாமல்…

நாவை கட்டிப்போட்டதே..

நான் செய்த சத்தியம்…..🤣

பார்…இறைவா…பார்…பார்.

இந்த அநீதியை பார்.

2 hours ago, வாலி said:

கெதியில பார் லைசன்ஸ் வாங்கிக் குடுத்த ஆக்களிண்ட லிஸ்டும் வெளிவருகுதாம்.

இது ஒரு போதும் வராது

3 hours ago, Justin said:

யார் பெற்றார்கள்?" என்றால் நபர்களின் பெயர்கள் அல்லவா வர வேண்டும்? இது மாவட்டங்களின் பெயர்களோடு நின்றிருக்கிறது.

அதானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, RishiK said:

பெயரை வெளிவிட வேண்டாம் என்ற பேச்சுவார்த்தை தான் இன்று ஜனாதிபதியுடன் நடந்ததா? 

அதுதான் நடந்திருக்கும் என ஊர் தகவல்கள் சொல்கின்றன. ஆனால் அனைத்து பெயர்களும் வெளியிடப்பட இருக்கின்றதாம்.

ஆனால் இதுதான் தமிழர் பிரச்சனையாக நினைக்காவிட்டால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியலை கீழுள்ள லிங்கில் பார்க்க முடியும், சிங்கள மொழியில் உள்ளது. பல அனுமதிகள் தனியார் பெயரில் இல்லாது நிறுவனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ளது.

https://cdn.newsfirst.lk/sinhala-uploads/2024/12/Surapath.pdf

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அதுதான் நடந்திருக்கும் என ஊர் தகவல்கள் சொல்கின்றன. ஆனால் அனைத்து பெயர்களும் வெளியிடப்பட இருக்கின்றதாம்.

ஆனால் இதுதான் தமிழர் பிரச்சனையாக நினைக்காவிட்டால் சந்தோசம்.

பார் அனுமதியை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் யாரும் எடுக்க கூடாது என்பது  எந்த வகையில்
நியாயம்?
சிறிதரன் போன்றவர்களின் பேர்கள் எப்படியும் வராது?
 அடுத்து என்ன???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.