Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

spacer.png

எதிர்வரும் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய பயணம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பயணத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி பயணத்தை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.  நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் பின்னரான இந்த பயணமானது தெளிவான மக்கள் ஆணையை முன்னிறுத்தியுள்ளதால் இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்கால நலன்களில் முக்கியத்துவம் பெறுகிறது. 

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறும்.

ஏனெனில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதும் மாகாண சபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கருத்துக்களை கூறி வருகின்றது. 

1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் கொண்டுவரப்பட்ட நடைமுறையில் உள்ள இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பானது 22 தடவைகள் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது. எனவே டெல்லி பேச்சுகளில் புதிய அரசியலமைப்பு விடயம் கருத்தில் கொள்ளப்படும்.

மேலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களின் எதிர்காலம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்திய தரப்பு பேச்சுக்களில் பங்கேற்கும். 

இதேவேளை, இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள்  மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளும் டெல்லி பேச்சுவார்த்தைகளில் கவனத்திற்கு உட்படும் எனவும் மறுபுறம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது. இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

2015 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே ஜனாதிபதியின் இப்பயணத்தின் போது, சீன விவகாரமும் முக்கிய தலைப்பாக இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

https://newuthayan.com/article/எதிர்வரும்_ஞாயிற்றுக்கிழமை_இந்தியா_பயணமாகும்_ஜனாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை, இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/313470

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது பயணமே இந்தியாவிற்கு.

அரசி, வெங்காயம் & உப்பு 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அநேகமான நாட்டு தலைவர்கள் தாம் பதவியேற்ற பின் முக்கியமான அயல் நாட்டுக்கு  செல்வது வழமையானதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு தலைமை அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்யும் வழமையான நிகழ்வு போன்றது மட்டுமே, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, தமிழர்கள் கவனிக்க வேண்டியது இதனைத்தான், சும்மா அனுர என பூசாரியுடன் மல்லுக்கட்டாமல் நேரடியாக சாமியிடம் செல்ல வேண்டும்😁.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர பேச்சு குறித்து டில்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் - அரசாங்கம்

10 DEC, 2024 | 06:42 PM
image
 

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 3 நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. 

பேச்சுவார்த்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும் விடயங்கள், எட்டப்படும் இணக்கப்பாடுகள் குறித்து டில்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது ஜனாதிபதியின் இந்திய விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார். 

அவருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த உயர்மட்ட தூதுக்குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது. 

எனினும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ள விடயங்கள், கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து டில்லியிருந்து கூட்டு ஊடக அறிவித்தல் விடுக்கப்படும். 

விஜயத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/200902

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, MEERA said:

முதலாவது பயணமே இந்தியாவிற்கு.

அரசி, வெங்காயம் & உப்பு 

இந்தியா, இவற்றை  கொடுத்தே... அனுரவை, வழிக்கு கொண்டு வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியா, இவற்றை  கொடுத்தே... அனுரவை, வழிக்கு கொண்டு வந்து விடும்.

இவற்றை தந்தால் அதானி குழுமத்தை நாட்டை விட்டு துரத்த மாட்டேன் என சொல்லுவாரோ...

21 hours ago, vasee said:

இது ஒரு தலைமை அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்யும் வழமையான நிகழ்வு போன்றது மட்டுமே, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, தமிழர்கள் கவனிக்க வேண்டியது இதனைத்தான், சும்மா அனுர என பூசாரியுடன் மல்லுக்கட்டாமல் நேரடியாக சாமியிடம் செல்ல வேண்டும்😁.

பூசாரி சொல்வதை சாமி கேட்கப்போவதில்லை(வழமையாக எங்களுக்கே அப்படித்தானே)
சாமியின் ஆட்டம் சொந்த ஆட்டம் ....பக்தர்களுக்கு எல்லா பக்கத்தாலும் அடி ...இதில காசு இருக்கும் (அதிகாரம்)பக்தன் சாமிக்கு கிட்ட போய் கும்பிடுவான் ...  காசில்லாத பக்தன் கும்பிட்டுக் கொண்டே யிருக்க வேணும் ஒரு நாள் சாமி கண்திறப்பார் எண்ட நம்பிக்கையில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, putthan said:

இவற்றை தந்தால் அதானி குழுமத்தை நாட்டை விட்டு துரத்த மாட்டேன் என சொல்லுவாரோ...

பூசாரி சொல்வதை சாமி கேட்கப்போவதில்லை(வழமையாக எங்களுக்கே அப்படித்தானே)
சாமியின் ஆட்டம் சொந்த ஆட்டம் ....பக்தர்களுக்கு எல்லா பக்கத்தாலும் அடி ...இதில காசு இருக்கும் (அதிகாரம்)பக்தன் சாமிக்கு கிட்ட போய் கும்பிடுவான் ...  காசில்லாத பக்தன் கும்பிட்டுக் கொண்டே யிருக்க வேணும் ஒரு நாள் சாமி கண்திறப்பார் எண்ட நம்பிக்கையில்

இந்த அதானிதான் இப்ப பங்களாதேசில மின்சாரம் குடுக்க மாட்டன் என வம்பு செய்கிறாராமே? அப்படி இருக்க அவரை நாட்டுக்குள்ள விட்டால் இலங்கைக்கும் அதே கதிதான்.

சாமிக்கு இலஞ்சம் கொடுத்தால் (இலங்கையினை கோர்த்துவிட வேண்டியதுதான்) அலுவல் வேகமாக நடக்கும்.

சாமிக்கு இலங்கையினை நேர்த்தி கடனா வைக்கவேண்டியதுதான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, vasee said:

இந்த அதானிதான் இப்ப பங்களாதேசில மின்சாரம் குடுக்க மாட்டன் என வம்பு செய்கிறாராமே? அப்படி இருக்க அவரை நாட்டுக்குள்ள விட்டால் இலங்கைக்கும் அதே கதிதான்.

சாமிக்கு இலஞ்சம் கொடுத்தால் (இலங்கையினை கோர்த்துவிட வேண்டியதுதான்) அலுவல் வேகமாக நடக்கும்.

சாமிக்கு இலங்கையினை நேர்த்தி கடனா வைக்கவேண்டியதுதான்.

வேற வழி ...இல்லை ...சாமியை மாற்றலாம் (மதம் மாறுவது போல)ஆனால் இன்றைய காலத்தில் ஒருவனே தேவன் அவனை பகைத்தால் எல்லாம் நாசம்...அந்த தேவன் கள்ளனை நல்லவனாக்கும் தகுதி படைத்தவன் ...
மூன்று/நாலு சில்லறை கடவுள்மார் ஒன்று சேர்ந்து ஒர் பெரிய‌ கோவில் கட்ட வெளிகிட்டிச்சினம் ஆனால் திடிரேனே அந்த சில்லறை கடவுள்மாரின் தனிப்பட்ட கோவிலுக்கே தலையிடி வந்து விட்டது...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரா உண்மையான சிங்கள பவுத்தனாக இருந்தால் 1978 ல் இந்திய ஏவு படைகளால் உயிருடன் கட்டி  v வீதியில் போடப்பட்ட jvp உறுப்பினர்களின் மேல் இந்திய படைகளின் டாங்கி படையணியின்  வெறியாட்டத்தை நினைவு கூற சொல்லுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பெருமாள் said:

1978

1978இலா அல்லது 87 இலா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, putthan said:

வேற வழி ...இல்லை ...சாமியை மாற்றலாம் (மதம் மாறுவது போல)ஆனால் இன்றைய காலத்தில் ஒருவனே தேவன் அவனை பகைத்தால் எல்லாம் நாசம்...அந்த தேவன் கள்ளனை நல்லவனாக்கும் தகுதி படைத்தவன் ...
மூன்று/நாலு சில்லறை கடவுள்மார் ஒன்று சேர்ந்து ஒர் பெரிய‌ கோவில் கட்ட வெளிகிட்டிச்சினம் ஆனால் திடிரேனே அந்த சில்லறை கடவுள்மாரின் தனிப்பட்ட கோவிலுக்கே தலையிடி வந்து விட்டது...

இன்று நல்ல form இல் உள்ளீர்கள் போலும்.

உங்கள் உவமான உவமேயங்கள் பிறிதொரு படிநிலை🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

வேற வழி ...இல்லை ...சாமியை மாற்றலாம் (மதம் மாறுவது போல)ஆனால் இன்றைய காலத்தில் ஒருவனே தேவன் அவனை பகைத்தால் எல்லாம் நாசம்...அந்த தேவன் கள்ளனை நல்லவனாக்கும் தகுதி படைத்தவன் ...
மூன்று/நாலு சில்லறை கடவுள்மார் ஒன்று சேர்ந்து ஒர் பெரிய‌ கோவில் கட்ட வெளிகிட்டிச்சினம் ஆனால் திடிரேனே அந்த சில்லறை கடவுள்மாரின் தனிப்பட்ட கோவிலுக்கே தலையிடி வந்து விட்டது...

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடார் (பூசாரி எப்பவும் வழிவிடார்) என்பதனை கூறினேன், எல்லைக்குள்ள இருக்கிற சாமிதான் பவர்புல், இப்பவும் அங்கேயும் அதுதான் நடந்திருக்கு, இனிமே இப்ப்டித்தான் இருக்கும், நாங்களும் அப்படி இருந்தாலே நன்மை.

கோயிலுக்கு போனா நேரா அன்னதான கியூவில போய் நிக்க வேணும் தேவையில்லாம பூசாரி, சாமி என அலையக்கூடாது. 😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, vasee said:

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடார் (பூசாரி எப்பவும் வழிவிடார்) என்பதனை கூறினேன், எல்லைக்குள்ள இருக்கிற சாமிதான் பவர்புல், இப்பவும் அங்கேயும் அதுதான் நடந்திருக்கு, இனிமே இப்ப்டித்தான் இருக்கும், நாங்களும் அப்படி இருந்தாலே நன்மை.

கோயிலுக்கு போனா நேரா அன்னதான கியூவில போய் நிக்க வேணும் தேவையில்லாம பூசாரி, சாமி என அலையக்கூடாது. 😁

உங்கட form உம் அசத்தல்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா, இவற்றை  கொடுத்தே... அனுரவை, வழிக்கு கொண்டு வந்து விடும்.

அண்ணா, 

தரமாட்டம் என்று கூறியே வழிக்கு கொண்டுவரும் 🤣🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடார் (பூசாரி எப்பவும் வழிவிடார்) என்பதனை கூறினேன், எல்லைக்குள்ள இருக்கிற சாமிதான் பவர்புல், இப்பவும் அங்கேயும் அதுதான் நடந்திருக்கு, இனிமே இப்ப்டித்தான் இருக்கும், நாங்களும் அப்படி இருந்தாலே நன்மை.

கோயிலுக்கு போனா நேரா அன்னதான கியூவில போய் நிக்க வேணும் தேவையில்லாம பூசாரி, சாமி என அலையக்கூடாது. 😁

விநாயகனை வழிபட்ட பின்பு தான் மூலவர் தரிசனம்... அதுதான் எழுதப்படாத விதி ...அதை விடுத்து என்னுள் இறைவன் இருக்கிறான் நான் தான் கடவுள் என கூறிய பல சாமிமார் காணாமல் போன சரித்திரம் உண்டு ....
முதல் தன்னிறைவு அடைய (ஞானம்) பெற வேண்டும் அதன் பின்பு சித்தன் ஆகலாம் ,அது ஒர்ர் நீண்ட பயணம் அணுரா மாத்தையா அறியுமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/12/2024 at 15:59, MEERA said:

முதலாவது பயணமே இந்தியாவிற்கு.

அரசி, வெங்காயம் & உப்பு 

அப்ப முட்டை வராதா கோப்பாலு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/12/2024 at 04:42, கிருபன் said:

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறும்.

கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா?

இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா?

பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை

உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன்    கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே பௌத்த மாணவர்கள், தாதியர்கள், வைத்தியர்களின் வழிபாட்டுக்காக பௌத்த விகாரையொன்று உள்ள நிலையில் தாதியர் பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313605
    • மிக முக்கிய செய்தி . கடைசி வரை வாசியுங்கள்! அண்மையில் ஒரு நாள் நான் இங்கிலாந்தில் கடமையில் இருந்த போது விடுதி கடும் பிஸி ஆனது. விடுதியில் இருந்த பொறுப்பு மிட் வைfப் சமாளிக்க முடியாமல் மேலதிக சீனியர் மிட் வைfப் யைக் கூப்பிடுமளவு பிஸியானது. என்னிடம் பலமுறை வந்து டிஸ்கஸ் பண்ணி கொண்டே இருந்தார்கள்.  அப்படி என்ன பிஸி? எனது விடுதியில் ஐந்து தனியறைகள் மகப்பேற்றுக்காக இருக்கும். பிரசவ வலியில் இருக்கும் தாய்மார்கள், உறவினரோடு அந்த அறையிலேயே குழந்தை பிறக்கும் வரை தங்கியிருந்து  குழந்தை பெறுவார்கள். பிரசவ வலி இல்லாத தாய்மார்கள் மற்றும் குழந்தை பிறந்த தாய்மார்கள் தங்கியிருக்க வேறு விடுதிகள் உள்ளன. அன்று பிரசவ அறைகள் நான்கில்  தாய்மார்கள் பிரசவ வலியில் இருந்தனர். மிஞ்சிய ஒரு அறையில் மிக அவசியமான, அவசர நிலமை தாயை மட்டும் அனுமதிப்பதென அந்த அறை வெறுமையாக இருந்தது.  இப்போது பொறுப்பு மிட் வைfப் பிஸி ஆனதுக்கான காரணம், அவசரமில்லாத கர்ப்பிணிகளின் பிரசவத்தை ஆரம்பிப்பபதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்?  விடுதி நிரம்பியதால் அவசரமில்லாத கர்ப்பிணிகளை வேறு வைத்தியசாலைக்கு அனுப்புவதா என்று முடிவெடுக்க வேண்டும். சில கர்பிணிகளை வீட்டுக்கு திரும்ப அனுப்பலாமா என்று முடிவெடுக்க வேண்டும். அனைத்து முடிவுகளையும் துல்லியமாக எடுக்க வேண்டும். பிழையாக முடிவெடுத்து குழந்தை  பிறப்பைப் பின் போட்டு குழந்தைக்கோ தாய்க்கோ ஏதும் பிரச்சனை வந்தால் அது வைத்தியசாலைக்கு சிக்கலாகி விடும். அதற்காக ஒவ்வொரு முடிவெடுத்தலுக்காகவும் சீனியர் மருத்துவ மாது என்னை ஆலோசித்துக்கொண்டே இருந்தார். அதுதான் பிஸி ஆனதுக்கான காரணம்.  இது ஏன் நடந்தது? ஒரு பெண் பிரசவத்தின் போது தனி அறையில் கணவன், அம்மா, தங்கை, மாமி என உறவினர்களோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக. சரி இதை ஏன் இப்போது சொல்கிறேன்? நான் 2013 யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும்போது விடுதியில் ஒரே ஒரு அறை இருந்தது. அதற்குள் நெருக்கமாக ஐந்து கட்டில்கள். அந்த ஐந்து கட்டிலில் தான் பிரசவம் நடக்கும். உறவினர்கள் யாரும் வர முடியாது. மற்ற பெண்கள் முன்னால் எல்லா கர்ப்பிணிகளும் நிர்வாணத்துடன் இருக்க வேண்டும். மறுபுறம், பிரசவத்திற்காகக் காத்திருக்கும் தாய்மார்கள் ஜெயில் போல  இன்னொரு அறையில் பாயில் படுப்பார்கள். குழந்தை பிறந்தபின் மட்டும் கட்டில் கிடைக்கும். சிலவேளை மூன்று அம்மாக்களுக்கு ஒரு கட்டில் கிடைக்கும். மூன்று பேரும்  பிள்ளைகளை கட்டிலில் வளர்த்தி விட்டு அருகே தம்ரோ கதிரையில் இரவு முழுக்க இருப்பார்கள். குழந்தை பிறந்த முதல்நாளே இரவு முழுக்க தம்ரோ கதிரையில் இருக்கும் நிலமையை யோசித்து பாருங்கள்.  பத்து வருடம் தாண்டியும் இந்த நிலமை பெரிதாக மாறவில்லை என ஒரு வைத்திய நண்பன் அழைப்பெடுத்து எழுதச் சொல்லி கேட்டான். இப்படித்தான் எம் தாய்மார்களை நடத்தினோம். அவர்களை நெருக்கமான அறைகளில் அடைத்து, ஒரு பெண்ணின் நிர்வாணத்தை சம்பந்தமில்லாத  மற்ற நபர்களுக்கும் காட்டித்தான் இனியும் பிள்ளை பெற வேண்டுமா? இன்னொரு புறம், பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் அதி தீவிரப் பிரிவு அடிக்கடி இடமாற வேண்டிய தேவை. அது  அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்குவதால் தடுக்கக்கூடிய  கிருமித்தொற்றுக்கள் போன்றவற்றால்கூட பல  குழந்தைகள் இறக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக தனி மகப்பேற்று , பெண்ணோயியல், குழந்தை பராமரிப்பு விடுதியை அமைக்க நிலம் உள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் அதற்கான கட்டடத்தை அமைக்க 3000 மில்லியன் ரூபாய்க்கு மேல் தேவைப்படலாம். பெரிய தொகைதான். ஆனால் மக்கள் மனது வைத்தால் தமிழருக்கு இது பெரிய தொகை இல்லை. இப்போதைய நிலையில் அரசாங்கத்தை மட்டும் நம்பி இதை செய்ய முடியாது. தனி அமைப்பு , மனிதானால்கூட இது முடியாது. சாதி, மத , ஊர் பேதங்களை மறந்து எல்லோரும் இணைந்தால் இது இலகுவாக செய்யப்படலாம். என்ன செய்யலாம்? 1. தற்போதைய அரசியல் வாதிகள் இதற்கான முனைப்பை அரசாங்கத்துடன் பேச வேண்டும். அரசிடமிருந்து பெறக்கூடிய உதவியைப் பெற முயற்சிக்க வேண்டும். 2. இதற்கான சரியான திட்டமிடலை எழுதி அரச சார்பற்ற நிறுவனங்களை அணுக வேண்டும். 3. இறுதியாக பொதுமக்கள் நிதி சேகரிப்பு. யாழ் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு தலைமையில் ஒரு வெளிப்படையான நிதி சேகரிப்பைச் செய்யலாம். லைக்கா, IBC  போன்ற பெரிய புலம்பெயர் வியாபார நிறுவனங்களை நேரடியாக அனுகி உதவி கேட்க வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் அரச அங்கிகாரத்துடன் நேரடியாக பொதுக் கணக்கு ஒன்றில் வெளிப்படையான  நிதிச் சேகரிப்பு செய்தால்  நமது மக்கள் கொட்டிக் கொடுப்பார்கள்.  தனி மனிதனாக நான் 2500$ சிலநாட்களில் சேகரிக்க முடிந்தது. எல்லோரும் சேர்ந்தால் 3000 மில்லியன் சின்ன காசு. இதற்காக அனைத்து சமூக அமைப்புக்களும் சுயநலம் பார்க்காமல் ஒன்றிணைந்து இதை விளம்பரப்படுத்த வேண்டும். எல்லோரும் சுயநலம் மறந்து மனசு வைத்தால் சில வருடங்களில் நமது தாய்மார்களும் கெளரவமான பிரசவத்தை மேற்கொள்ளும் அடிப்படை உரிமை கிடைக்கும். இந்தப் பதிவை  எந்த தனிநபர்களும் , ஊடகங்களும் எனது பெயர், அனுமதி இல்லாமல் அப்படியே எடுத்து பயன்படுத்தலாம். வைத்தியசாலை நிர்வாகம் , பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி , யாழ் மகப்பேற்று நிபுணர்கள் இது பற்றி அவர்களது திட்டங்களை வெளிப்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க உங்களின் ஆதரவு உதவும். இந்த செய்தியை #Respectfulmaternitycare என்ற ஹஷ் tag உடன் பகிருங்கள். இந்த ஹஷ் tag 1000  என்ற அளவை தாண்டும் போது இது சர்வதேச அளவில் வைரலாகி உலகமெல்லாம் பரவி இருக்கும் நம் உறவுகள் அனைவரையும் போய்ச் சேரும். சிலவேளை இது சர்வதேச அளவில் ட்ரென்ட் ஆகும்போது வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியும் கிடைக்கும். சமூக வலைத்தள பிரபலங்களும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிருங்கள். பகிருங்கள். எல்லோரும் சேர்ந்து தட்டினால் நிறைய கதவுகள் திறக்கும். #Respectfulmaternitycare https://www.facebook.com/story.php?story_fbid=10237366930094514&id=1286697015&rdid=ew4TXgeiyWJmNwnH
    • சிரியா மீது 2 நாட்களில் 500 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 முறை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் திகதி முடிவுக்கு வந்தது. சிரியா ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. சிரியாவில் முகமது அல் பஷீர் தலைமையில் எதிர்க்கட்சியினர் மாற்று அரசை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சி படைக்கு அல்-கய்தா, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது. இதனால் சிரியாவின் ராணுவ கிடங்குகளில் இருந்த ஆயுதங்கள் எல்லாம் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஆபத்து என உணர்ந்த இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஆயுத கிடங்குகளை எல்லாம் அழிக்க முடிவு செய்தது. இந்தப் பணியை முப்படைகளிடமும் இஸ்ரேல் ஒப்படைத்தது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவத்தின் முப்படைகளும், சிரியாவில் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைக் கிடங்குகள், விமானப்படை தளங்கள், டமாஸ்கஸ், ஹாம்ஸ் மற்றும் லதாகியா ஆகிய இடங்களில் உள்ள ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவற்றை குறிவைத்து 480 தாக்குதல்களை 48 மணி நேரத்துக்கு மேலாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் சிரியாவின் 15 போர்க்கப்பல்கள், நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. மக்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்த இந்த தாக்குதல் நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியா மீது இஸ்ரேல் திடீரென பயங்கர தாக்குதல் நடத்தியதால், சிரியாவை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது. இதை மறுத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள், “சிரியா எல்லையில் உள்ள இஸ்ரேலின் பகுதியை கைப்பற்றத்தான் ராணுவம் நுழைந்தது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் டேங்க்குகள் செல்கின்றன, என்ற செய்தி தவறானவை” என்றனர். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கட்ஸ் கூறுகையில், “தெற்கு சிரியாவை ராணுவம் பலம் அற்றதாக மாற்ற இந்த தாக்குதல் அவசியம். ஆசாத் ஆட்சியை பின்பற்ற முயற்சிக்கும் எந்த ஒரு படைக்கும் இதே கதிதான் ஏற்படும். சிரியா எல்லையில் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக ஆயுத கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார். இதனிடையே, சிரியா எல்லையில் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கு எகிப்து, ஜோர்டன், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் நிலையற்ற தன்மையை, தனது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துக்கு இஸ்ரேல் பயன்படுத்தி கொள்வதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. சிரியாவின் ஒரு பகுதிக்குள் இஸ்ரேல் ஊடுருவியது 1974-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக உள்ளது என ஐ.நா கூறியுள்ளது. https://thinakkural.lk/article/313597
    • 12 DEC, 2024 | 11:15 AM இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளார் என  குறிப்பிட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.  மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள் இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின்  அலறல் கேட்டதாகதெரிவித்துள்ளனர். சியாரோ லியோனை சேர்ந்த 11 வயது சிறுமி உயிர்காப்பு அங்கிகளுடன் மூன்றுநாள் கடலில் மிதந்திருக்கின்றாள் என கொம்பஸ் கலெக்டிவ் தெரிவித்துள்ளது. அந்த சிறுமி காப்பாற்றப்படுவதை காண்பிக்கும் படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த சிறுமி 12 மணித்தியாலங்கள் கடலில் தத்தளித்துள்ளார் என அவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர் தெரிவித்துள்ளார். உலோக படகு துனிசியாவிலிருந்து புறப்பட்டது என தெரிவித்துள்ள அந்த சிறுமி கடும் புயல் 11 அடிஅலைகள் காரணமாக  படகு புறப்பட்ட சில நிமிடத்திலேயே கவிழ்ந்தது என  குறிப்பிட்டுள்ளார். தன்னுடன்வேறு இருவரும் கடலில் தத்தளித்தனர் ஆனால்  அவர்களை பின்னர் காணவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201063
    • 12 DEC, 2024 | 10:04 AM கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதாகத் தெரிவித்ததுடன், ஜனவரியில் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக மீனவதின நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நவம்பர்மாதம் 21ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம்தொடர்பில் பேசப்பட்டது. அத்தோடு இந்தச் சந்திப்பில்  இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிகளுக்குள் அத்துமீறி வருகைதந்து, எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடிச் செல்கின்ற விடயத்தினையும் முன்வைத்திருந்தேன். நாம் கரையில் இருந்து பார்க்கும்போது தெரியக்கூடிய அளவில் வெளிச்சமிட்டவாறு இந்திய இழுவைப் படகுகள் செய்கின்ற அட்டகாசமான செயற்பாடுகளைப் பற்றி அவரிடம் மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தவகையில் இந்திய மீனவர்களால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பில் அவரிடம் மிக விரிவாக எடுத்துக்கூறியிருந்தேன். இவ்வாறு அவரிடம் இந்த விடயத்தை முன்வைத்து நான் பேசும்போது ஏனைய தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகப் பேசியிருந்தனர். இதன்போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதற்குப் பதிலளிக்கும்போது, இந்த இழுவைப் படகுகள் அத்துமீறி நுழையும் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் ஜனவரியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தாம் வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறாக இந்த விடயங்களில் நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்திக்கொண்டேயிருக்கின்றோம். இதுமாத்திரமின்றி பாராளுமன்றத்தில் பேசக்கிடைக்கின்ற நேரங்களிலும் இந்த விடயம் தொடர்பில் பேசுவோம். இந்திய இழுவைப்படகுகள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினைச் சூறையாடுவதற்கு எதிராக இதற்கு முன்னர் எவ்வாறு குரல்கொடுத்துவந்தோமோ  அதேபோல் தொடர்ந்தும் இந்த விடயத்தில் குரல்கொடுப்போம். அதேபோல் தென்னிலங்கைமீனவர்களின் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவும் தொடர்ந்தும் நாம் குரல்கொடுப்போம். இந்த விடயங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடனும் பேசியிருக்கின்றேன். குறித்த விடயம் தொடர்பில் கவனம்செலுத்துவதாக கடற்றொழில் அமைச்சரும் உறுதியளித்திருக்கின்றார். அதேவேளை இந்த காற்றாலைத் திட்டம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது மன்னாருக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயும்போது, அங்குள்ள மக்கள் கூடுதாலாக இந்த காற்றாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பில் தெரிவித்திருந்தனர். அந்தவிடயம் தொடர்பிலும் பேசியுள்ளோம். காற்றாலைத் திட்டத்தால் மன்னாரில் உள்ள பாதிப்பு நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அத்தோடு யாழ்ப்பாணத்திற்கும் இந்த காற்றாலைத் திட்டத்தைக் கொண்டுவரப்போவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே யாழ்ப்பாணம் காற்றாலை தொடர்பான விடயங்களையும், மன்னார் காற்றாலை தொடர்பானவிடயங்களையும் உரியவர்கள் விரிவாக எம்மிடம் கையளியுங்கள். இதேவேளை மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினையும் காணப்படுகின்றது. முல்லைத்தீவில் மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்த காலத்தில், கொக்கிளாயில் கனியமணல் அகழ்விற்கென மக்களின் காணிகள் சுமார் 44ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன்பிற்பாடு கனியமணல் அகழ்விற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் எமது போராட்டங்களினால் கைவிடப்பட்டிருக்கின்றது. மேலும் சட்டவிரோத கடற்றொழில்கள் என அரசால் அறிவிக்கப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகள் அனைத்தையும் முற்றாகத் தடைசெய்து, எமது மீனவர்களின் முறையான கடற்றொழில் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும். இந்திய இழுவைப்படகுகளால் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும். இந்த விடயங்களுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடும்போம் - என்றார். https://www.virakesari.lk/article/201051
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.