Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார்.

 

கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.  

இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார்.

 

 தமிழ் மக்களின் நெருக்கடிகள்

இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன் | Sri Lankan Mp Sumanthiran Visits Ottawa

இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/sri-lankan-mp-sumanthiran-visits-ottawa-1734244102?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, பெருமாள் said:

எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

large.IMG_7890.jpeg.902ca635b9fa87d8aa47

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7890.jpeg.902ca635b9fa87d8aa47

 தலைப்பைப் பார்த்துவிட்டு “ ஏன் கனடாவிலும் நாலைஞ்சு பார் திறக்க இடம்பார்க்கப் போறாரோ?” என்று எழுத நினைத்தேன். வந்து பார்த்தால் கவி அருணாசலம் அய்யாவின் கருத்தோவியம் என் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கொன்னமோ இந்தச் செய்தின் சாரத்தில் நம்பிக்கை இல்லை. 

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தேர்தலின் பின்னர் இவர்கள் எவரையும் சந்தித்ததாகத் தகவல் இல்லை. நிலைமை அப்படி இருக்கையில் கனேடிய வெளிவிவகார அமைச்சு அழைத்திருப்பதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

சிலவேளைகளில் ஹரியைச் சந்திக்க இவர்களாகவே நேரம் கேட்டிருக்கலாம். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Kapithan said:

எனக்கொன்னமோ இந்தச் செய்தின் சாரத்தில் நம்பிக்கை இல்லை. 

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தேர்தலின் பின்னர் இவர்கள் எவரையும் சந்தித்ததாகத் தகவல் இல்லை. நிலைமை அப்படி இருக்கையில் கனேடிய வெளிவிவகார அமைச்சு அழைத்திருப்பதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

சிலவேளைகளில் ஹரியைச் சந்திக்க இவர்களாகவே நேரம் கேட்டிருக்கலாம். 

😁

எனக்கென்னவோ சுமத்திர கள்ளனும் இந்த பார் கள்ளனும் உள்ளுக்குள் டீல் போட்டு விளையாட்டு  காட்டுகினம் போல் உள்ளது .

இந்த எட்டு நாளைக்குள் எண்ணத்தை செய்து விடபோகிறார் ?

அநேகமா இலங்கை  தமிழ் அரசியல்வாதிகளின்  பினாமி சொத்து லண்டனிலும் கனடாவிலும் தான் குவிந்து கிடக்கின்றது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_7890.jpeg.902ca635b9fa87d8aa47

என்னையா இது?

அடிப்பொடி தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣.

இது முறையா? தர்மம்தானா?🤣

பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என.

 

சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.