Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம்  சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் 

இதன்போது, குறித்த  தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி | Dr Archuna Ramanathan Latest News

அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன்,  சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. 

GalleryGalleryGalleryGalleryGallery

https://tamilwin.com/article/dr-archuna-ramanathan-latest-news-1734943791

  • Replies 106
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

  • ஏராளன்
    ஏராளன்

    யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட

  • எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி.

jaffna-3.jpg

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது.

https://thinakkural.lk/article/314062

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு... இருக்கு, ஆப்பு.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய விடயம். 

3 hours ago, தமிழ் சிறி said:

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு... இருக்கு, ஆப்பு.  😂 🤣

ஏன்  ஆப்பு? 

அவரில் உங்களுக்கு ஏன் இத்தனை கடுப்பு? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். 

ஏன்  ஆப்பு? 

அவரில் உங்களுக்கு ஏன் இத்தனை கடுப்பு? 

சிரிப்புக் குறி போட்டு எழுதுற கருத்துக்கும்...
சீரியசாக பதில் எழுதுற ஆள் நீங்கள் ஒருவர்தான் கபிதன். 😂
வருசம்  முடியுற நேரம்... கூல் டவுன் புரோ...  🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்?

வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா?

அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது .

இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா?

அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார.

சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.

இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு... இருக்கு, ஆப்பு.  😂 🤣

பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை   எடுத்து கொடுக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன்  .........ஏன் அதிகம்  அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட.  இடைத்தரகர்கள்.  வேண்டும்  .....இன்று   ஒரு  உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும்  அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது   வாழ்த்துக்கள் அர்ச்சுனா   🙏🙏🙏🙏🙏🙏

நீங்கள் பல்லாண்டுகள்.  வாழ வேண்டும்   

பைத்தியம் என்றார்கள்   

சபை நாகரிகம் தெரியாது என்றார்கள் 

விளம்பர பிரியனன்.  என்றார்கள் .....

.....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும் 

மக்களுக்குக்காக. உழைக்கிறார்.  வாழ்த்துக்கள் 🙏

டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,..  மாவை சேனாதிராசா.  விக்கினேஸ்வரன்   சாணக்கியன்   செல்வம் அடைக்கலநாதன் 

சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை????

தெரியாத??   அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா  ??? 

சத்தியமூர்த்தியை  சந்திக்க   முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும்  ......அவரை கேள்விகள் கேட்க முடியாது   

இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை  சந்திக்கிறார்   

தனியாக இல்லை  பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன். 

அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள் 

சத்தியமூர்த்தி    மக்கள் பணி புரிபவர்.  அவரை  மக்கள் எப்பவும் சந்திக்கலாம்   மக்கள் தான்  ஊதியம் கொடுக்கிறார்கள் 

எப்போது சத்தியமூர்த்தி    வீட்டை போகிறீர்கள்?????. 

[🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்?

வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா?

அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது .

இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா?

அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார.

சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.

இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?

இது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பது தான் . தமிழ் பகுதி நோக்கிய ஒரு சதி அல்ல.

இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff) இருக்கலாம் என ஊகிக்கிறேன். சிலர் பராமரிப்பு, சுத்திகரிப்பு ஊழியர்களாகவும் (janitorial) இருக்கக் கூடும். இப்படியான ஊழியர்களை சமயாசமய (casual) ஊழியர்கள் என அழைப்பார்கள் என நினைக்கிறேன். கல்வித் துறையில் "தொண்டர் ஊழியர்கள்" என்பார்கள்.  

இங்கே இந்த ஊழியர்களின் உரிமைகள் எவையாவது மீறப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது (மருத்துவ நிர்வாகப் பட்டப்பின் படிப்பை முடித்த அர்ச்சுனா கூட எந்த சட்டங்கள் மீறப் பட்டன என சொல்லப் போவதில்லை, அப்படிச் சொன்னால் அவருக்கு வீடியோ பிடித்துப் போட விடயம் இல்லாமல் போய் விடும்😎!).

இது அங்கஜன், டக்ளஸ் கால நியமனங்கள் என்பது போல சிலர் திரிக்க முயல்வதையும் காண்கிறேன். பா.உக்கள் யாரும் இல்லாத போர்க்காலத்திலேயே இப்படியான நியமனங்கள், பின்னர் நிரந்தரமாக்க கோருதல் என்பன இருந்திருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை   எடுத்து கொடுக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன்  .........ஏன் அதிகம்  அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட.  இடைத்தரகர்கள்.  வேண்டும்  .....இன்று   ஒரு  உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும்  அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது   வாழ்த்துக்கள் அர்ச்சுனா   🙏🙏🙏🙏🙏🙏

நீங்கள் பல்லாண்டுகள்.  வாழ வேண்டும்   

பைத்தியம் என்றார்கள்   

சபை நாகரிகம் தெரியாது என்றார்கள் 

விளம்பர பிரியனன்.  என்றார்கள் .....

.....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும் 

மக்களுக்குக்காக. உழைக்கிறார்.  வாழ்த்துக்கள் 🙏

டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,..  மாவை சேனாதிராசா.  விக்கினேஸ்வரன்   சாணக்கியன்   செல்வம் அடைக்கலநாதன் 

சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை????

தெரியாத??   அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா  ??? 

சத்தியமூர்த்தியை  சந்திக்க   முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும்  ......அவரை கேள்விகள் கேட்க முடியாது   

இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை  சந்திக்கிறார்   

தனியாக இல்லை  பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன். 

அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள் 

சத்தியமூர்த்தி    மக்கள் பணி புரிபவர்.  அவரை  மக்கள் எப்பவும் சந்திக்கலாம்   மக்கள் தான்  ஊதியம் கொடுக்கிறார்கள் 

எப்போது சத்தியமூர்த்தி    வீட்டை போகிறீர்கள்?????. 

[🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

சிறி அண்ணா,

நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

17:47

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

அடடா   இது வேறை.   🤣🤣🤣🤣🤣🤣 சுவிஸ் இல்லை   ஜேர்மனி  ஐயா   ஜேர்மனி   🙏.   இத்தால்  எல்லோருக்கும்   ஒரு வயதை   கூட   இன்னும் சில நாட்கள்  மட்டுமே உண்டு  என்பதை   மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

அடடா   இது வேறை.   🤣🤣🤣🤣🤣🤣 சுவிஸ் இல்லை   ஜேர்மனி  ஐயா   ஜேர்மனி   🙏.   இத்தால்  எல்லோருக்கும்   ஒரு வயதை   கூட   இன்னும் சில நாட்கள்  மட்டுமே உண்டு  என்பதை   மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

நத்தார் பார்ட்டிகள் ஆரம்பித்து விட்டதா...🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது.

👍...................

தொண்டர் ஊழியர்கள் என்றால் தொண்டர் ஆசிரியர்கள் போன்ற ஒரு பணியாளர்களே. தொண்டர் ஆசிரியர்கள் தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டி அடிக்கடி போராடுவார்கள், அத்துடன் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பளமும் மிகக்குறைவே. அவர்களின் கல்வித் தகமை மற்றும் தொழிற் பயிற்சிகளும் மிகக்குறைவே. அது போலவே இந்த சுகாதாரத்துறை தொண்டர் ஊழியர்களும்.

இதில் முடிந்தவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துவது நல்ல ஒரு விடயம் தான், ஆனால் ஏற்கனவே இலங்கை அரசசேவை தேவைக்கு மிக மிக அதிகப் பணியாளர்களுடன் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரு அறிக்கை கூட வந்திருந்தது.

அர்ச்சுனா இரட்டைக் குடியுரிமை, இந்தியா வம்சாவளி மக்கள், தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் என்று சும்மா வாய்க்கு வந்த எல்லாவறையும் சமூக ஊடக தேவைகளுக்காக கலந்தடிக்காமல், அமைதியாக இப்படியான வேலைகளைச் செய்வது அவருக்கும், அவரைத் தெரிந்தெடுத்த மக்களுக்கும் நன்மை பயக்கும்................👍

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

சிறி அண்ணா,

நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

29 minutes ago, alvayan said:

எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

25 minutes ago, nunavilan said:

இப்போ சுவிசில் என்ன நேரம்?😁

கபிதனுடைய அவதாரும், கந்தையா அண்ணையின் அவதாரும் பச்சை நிறத்தில் K என்று   இருந்ததால்  ஆள் மாறாட்டம்  ஏற்பட்டு விட்டது. 😂
கந்தையா அண்ணை... அதற்குள் நைசாக புகுந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டேன். 😂  
கபிதன் திருந்தி விட்டார் என்று நான் சந்தோசப் பட்டு  15 நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ரசோதரனும், அல்வாயனும், நுணாவிலானும் தட்டி எழுப்பி விட்டார்கள். 😃 
சரி... அது, ஒரு கனவாகவே போகட்டும். 🤣

நுணா....  நான், நேற்று சுவிஸில் இருந்து ஜேர்மனி திரும்பி விட்டேன்.  😃

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்   ஒருவர் சமையல் நிபுணர் ஆக மூன்று வரிடங்கள் படித்து  தொழில் பயிற்சி செய்து எழுத்து மூலம் வாய்மூலம்.  சோதனைகளில் தேற வேண்டும்  ஆனால் ஐந்து ஆண்டுகள்  குறைந்தது ஐந்து ஆண்டுகள் சமையலில் உதவியாளராக வேலை செய்தால் சமையல்காராரின். சோதனையில் தோற்ற முடியும்  இதில்  

எழுத்து பரீட்சை 

வாய் மூலம் பரீட்சை 

சமைத்து காட்டும் பரீட்சை 

இது மூன்று வென்றால்  அவரும் சமையல்காரார். தான்  

எனவே… நன்கு தொழில் தெரிந்தவன் சிறந்த தொழிலாளர் தான்  

படித்தவர்கள் ...எல்லாம் புத்திசாலிகள் இல்லை  படிக்காமல் சம்பந்தப்பட்ட தொழில் தொரிந்தவரகள் புத்திசாலி தான்   மாறாக முட்டாள்களில்லை 

படித்தவர்களும்கூட தொழில் எப்படி செய்வது என்று அறியாமல் இருககிறாரகள் இவர்களுக்கு படிக்காமல் தொழில் தெரிந்தவர்களே சொல்லி கொடுப்பதை நான் பல இடங்களிலும் பார்த்து உள்ளேன் 

எனவே…  அவர்கள்  யாழ்ப்பாணம் போதான  வைத்தியசாலையில் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்கள் தான் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கபிதன்...  உண்மையில், இப்படி ஒரு சிறந்த பதிவு உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கவில்லை.அருமை. 👍
இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு... பல இடங்களில், பலரிடம் பேச்சு வாங்குவது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  😂

நான் உங்கள் இந்தப் பின்னூட்டப் பதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமையா? என்று எண்ணிவிட்டேன்.😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்?

வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா?

அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது .

இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா?

அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார.

சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.

இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?

இவர்கள் பலர் முன்னாள் ,பா.உக்களின்(மத்திய அரசு சார்பான) சிபார்சின் பெயரில் தொண்டராக உள்வாங்கப்பட்டவர்கலாம்...அந்த பா.உ க்கள் இந்த தடவை தோல்வியடைந்த காரணத்தால் இவர்களின் இருப்பு கேள்வி குறியாக வரவே சத்தியமூர்த்திக்கு ஏதிராக போர்கொடி தூக்கினமாம்...எப்படியாவது சத்திய மூர்த்தியை விரட்டிய்டிக்க  வேணும் என சிலர் நிற்கினம் போல...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

இவர்கள் பலர் முன்னாள் ,பா.உக்களின்(மத்திய அரசு சார்பான) சிபார்சின் பெயரில் தொண்டராக உள்வாங்கப்பட்டவர்கலாம்...

வெறுமனே சிபார்சுகளின் மூலமே தொண்டர்களாக இணைந்தவர்கள் என்றால், அந்த விடயம் அர்ச்சுனாவிற்கு நன்கு தெரிந்தும் இருக்கும், பின்னர் அர்ச்சுனா விடுகின்ற புஸ்வாணங்களில் இதுவும் ஒன்றே என்ற அளவில் இதுவும் கடந்து போகும்............... 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவத்தினை (எந்த வேலையாக இருந்தாலும்) கல்வித்தகமைக்கு பதிலீடாக பயன்படுத்துகின்ற நிலை நிலவுகிறது, வெறுமனே உயர் கற்கையினை முடித்துவிட்டு வரும் நபர்கள் கூட இவ்வாறான இடைநிலை பள்ளியில் படித்தவர்களிடம் ஆரம்பத்தில் உதவியாளாராக பணியாற்றி செயலனுபவம் பெற்ற பின்னரே தமது சேவைகளை தொடர்கின்றனர்.

அர்ச்சுனா உண்மையில்  விபரமானவராகவே இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

வெறுமனே சிபார்சுகளின் மூலமே தொண்டர்களாக இணைந்தவர்கள் என்றால், அந்த விடயம் அர்ச்சுனாவிற்கு நன்கு தெரிந்தும் இருக்கும், பின்னர் அர்ச்சுனா விடுகின்ற புஸ்வாணங்களில் இதுவும் ஒன்றே என்ற அளவில் இதுவும் கடந்து போகும்............... 

அவரின் புஸ்வானம் அவருக்கும் யூடியுப்பர்களுக்கும் சில நன்மைகளை கொடுக்கின்றது..மக்களுக்கு அல்ல 

2 minutes ago, vasee said:

வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவத்தினை (எந்த வேலையாக இருந்தாலும்) கல்வித்தகமைக்கு பதிலீடாக பயன்படுத்துகின்ற நிலை நிலவுகிறது, வெறுமனே உயர் கற்கையினை முடித்துவிட்டு வரும் நபர்கள் கூட இவ்வாறான இடைநிலை பள்ளியில் படித்தவர்களிடம் ஆரம்பத்தில் உதவியாளாராக பணியாற்றி செயலனுபவம் பெற்ற பின்னரே தமது சேவைகளை தொடர்கின்றனர்.

அர்ச்சுனா உண்மையில்  விபரமானவராகவே இருக்கின்றார்.

400 வெற்றிடங்கள் உண்டாம் (ஆளனி பற்றாக்குறை) அதை அரசாங்கம் நிறை வெற்ற முடியாமல் இருக்கின்றதாம் காரணம் பொருளாதார நெருக்கடி...இது யாழ் பொது வைத்தியசாலையில் மட்டுமல்ல  இலங்கையில் உள்ள சகல வைத்தியசாலைக்களில் இதே பிரச்சனை தானாம்...ஆகவே எனவே புலம்பெயர் அணுரா பிரிகேட் ஏதாவது உத்விகள் செய்து தோழரின் கனவை நனவாக்க முன் வரலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

400 வெற்றிடங்கள் உண்டாம் (ஆளனி பற்றாக்குறை) அதை அரசாங்கம் நிறை வெற்ற முடியாமல் இருக்கின்றதாம் காரணம் பொருளாதார நெருக்கடி...இது யாழ் பொது வைத்தியசாலையில் மட்டுமல்ல  இலங்கையில் உள்ள சகல வைத்தியசாலைக்களில் இதே பிரச்சனை தானாம்...ஆகவே எனவே புலம்பெயர் அணுரா பிரிகேட் ஏதாவது உத்விகள் செய்து தோழரின் கனவை நனவாக்க முன் வரலாம் ...

புராணக்கதையான மகாபாரதத்தில் ஒரு கதை கூறுவார்கல் அர்சுனனுக்கு (அர்சுனா அல்ல) கர்ணனில் பொறாமை, காரணம் மக்கள் அவரை கொடை வள்ளல் என கூறுவதால், அதனால் அர்ச்சுனன் போவோர் வருவோரிடம் கர்ணன் என்ன தனது செல்வத்தினையா கொடையாக கொடுக்கிறார்? துரியோதனனின் காசை எந்தவித வருத்தமின்றி கொடுக்கிறார் என கூறிவந்தாராம், அதனை கேட்ட கண்ணன் 3 மலைகளை தங்கம் (அர்சுனாவின் தங்கம் அல்ல), வெள்ளி, வைரமாக மாற்றி அதனை அந்தி சாய்வதிற்குள் தானமாக வழங்குமாறு அர்ச்சுனனை கேட்டாராம், அர்ச்சுனன் வேலைக்கு ஆள்களை நியமித்து அந்த மலைகளை உடைத்து மக்களை வரிசையாக விட்டு தானமாக வழங்க தொடங்கினாராம் அந்தி சாயும் நேரம் வந்தது மலைகள் அப்படியே இருந்த்து.

அர்ச்சுனன் கண்ணனிடம் என்னால் முடியவில்லை என தோல்வியினை ஒப்புக்கொண்டாராம், கண்ணன் கர்ணனை கூப்பிட்டு இந்த 3 மலைகளையும் அந்து சாய்வதற்குள் தானமாக வழங்கிவிடு என கூற அதற்கு கர்ணன் மூவரை அழைத்து ஆளுக்கொரு மலையினை தானமாக வழங்கினாராம்.

இங்கு பிரச்சினை மனம் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.