Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 70
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    சம்பந்தருக்கு சற்றும் சளைக்காத கள்ளந்தான் மாவை. தன் மகனுக்கு சீட் கேட்டு கட்சியை சீரழிச்சதும், மாவிட்டபுரத்தில் மாட மாளிகை கட்டியதும், மட்டும் அல்லாது சாகும் வயசிலும் பதவி ஆசையில் நொடிக்கு ஒரு கத

  • கிருபன்
    கிருபன்

    எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும்,  வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவ

  • பெருமாள்
    பெருமாள்

    சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை . அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதா

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடிகளின் விக்கெட்கள் ஒவ்வொன்றாக விழுகின்றன. ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜா காலமானார்: இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்காக குரல் எழுப்பிய இவர் யார்?

மாவை சேனாதிராஜா
படக்குறிப்பு,மாவை சேனாதிராஜா கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82வது வயதில் காலமானார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் புதன்கிழமை, ஜன. 29 அன்று காலமானதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து, மாவை சேனாதிராஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மாவை சேனாதிராஜாவின் ஆரம்ப காலம்

யாழ்ப்பாணம் - மாவிட்டப்புரம் பகுதியில் 1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி மாவை சேனாதிராஜா பிறந்தார்.

சோமசுந்தரம் சேனாதிராஜா என்ற இயற்பெயரை கொண்ட அவர், அனைவராலும் மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் - வீமன்காமம் மற்றும் நடேஸ்வரா கல்லூரிகளில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்து மாவை சேனாதிராஜா, இலங்கை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தனது நேரடி அரசியல் வாழ்க்கையை மாவை சேனாதிராஜா ஆரம்பித்துள்ளார்.

மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்க்கை

மாவை சேனாதிராஜா தனது நேரடி அரசியல் வாழ்க்கையை 1960ம் ஆண்டு காலப் பகுதியில் ஆரம்பித்திருந்தார்.

இலங்கை தமிழ் தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் 1961ம் ஆண்டு நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் இணைந்துக்கொண்டதன் ஊடாக, தனது போராட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையை அவர் ஆரம்பித்திருந்தார்.

இதையடுத்து, இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் 1962ம் ஆண்டு மாவை சேனாதிராஜா இணைந்துகொண்டார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியில் இணைந்துகொண்டதன் ஊடாக, அவர் மக்களுக்கான போராட்டங்களை நடத்தியிருந்தார்.

ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தில் 1966ம் ஆண்டு இணைந்த அவர், 1969ம் ஆண்டு வரை அதன் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இதையடுத்து, மாவை சேனாதிராஜா இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

சிறையிலிருந்து வெளியில் வந்த மாவை சேனாதிராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டு செயற்பட்டுள்ளார்;

மாவை சேனாதிராஜா, முதல் தடவையாக 1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட போதிலும், அவர் தோல்வியை தழுவியிருந்தார்

எனினும், அதே ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டதுடன், அதுவே அவரது முதலாவது நாடாளுமன்ற பிரவேசமாகும்.

மாவை சேனாதிராஜா

அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டமையினால் ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு மீண்டும் மாவை சேனாதிராஜா தெரிவானார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, யாழ். மாவட்டத்தில் வெற்றி பெற்றதன் ஊடாக அவர் நாடாளுமன்ற பிரவேசத்தைப் பெற்றார்.

அதன்பின்னர், 2001ம் ஆண்டு பல தமிழ் கட்சிகள் இணைந்து ஆரம்பித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் பின்னரான அனைத்துத் தேர்தல்களிலும்போட்டியிட்டிருந்தார்.

2001, 2004, 2010 மற்றும் 2015ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றியீட்டிய மாவை சேனாதிராஜா, தொடர்ந்து நாடாளுமன்ற பிரவேசத்தைப் பெற்ற நிலையில், 2020ம் ஆண்டு தேர்தலில் தோல்வியை அடைந்திருந்தார்.

2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடவில்லை.

மாவை சேனாதிராஜா

பட மூலாதாரம்,SRIDARAN MP - MEDIA UNIT

படக்குறிப்பு,மாவை சேனாதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மாவை சேனாதிராஜா, 2024ம் ஆண்டு வரை அதன் தலைவராக செயல்பட்டார்.

இலங்கை தமிழர்களின் பிரச்னைக்காக அரசியல் களத்தில் அகிம்சை போராட்டங்கள் ரீதியிலும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய முக்கிய தலைவராக மாவை சேனாதிராஜா விளங்கினார்.

உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் மாவை சேனாதிராஜா, தமிழர்களின் விடுதலைக்காக குரல் எழுப்பிய முக்கிய தலைவராவார்.

இந்தநிலையிலேயே, மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இறுதி கிரியைகள் தொடர்பான அறிவிப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த மூத்தத் தலைவரான மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியைகள் மாவிட்டப்புரத்திலுள்ள அவரது இல்லத்தில் பிப்.2 அல்லது 3-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரது உடல், பொது மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டப்புரத்திலுள்ள அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு கொடி போர்த்தி அஞ்சலி!

adminJanuary 30, 2025
IMG_6845-1170x658.jpeg

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG_6846-800x450.jpeg
 

https://globaltamilnews.net/2025/210520/

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி! (படங்கள் இணைப்பு)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அத்தோடு மதத் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) காலமானார். 

இந்நிலையில், இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் எனத் தெரிய வருகின்றது.
 

 

No description available.
No description available.
No description available.
No description available.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது வந்தால் அடித்து துரத்துவேன் - மாவையின் தம்பி ஆவேசம்!

Vhg ஜனவரி 30, 2025
1000430688.jpg

அண்ணன் மாவை சேனாதிராஜா மரணத்தால் மனஅழுத்ததிற்கு உள்ளாக்கிய  தம்பி தங்கராசா வைத்தியசாலையில் கூறிய ஆவேசமான பேச்சு தற்போது வெளியாகியுள்ளது.

1000430682.jpg

அதாவது, அண்ணாவை கொன்ற சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது வந்தால் அடித்து துரத்துவேன் என வைத்தியசாலையில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வைத்தியசாலையில் மாவையை பார்வையிட சென்ற சுமந்திரன் தரப்பின் குலநாயகம் மாவையின் தங்கச்சியின் பேச்சில் திரும்பி ஓடியமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.battinatham.com/2025/01/blog-post_761.html

மாவையரின் உயிரைக்குடித்த 19,அயோக்கியர்கள்.!

Vhg ஜனவரி 30, 2025
1000430682.jpg

அமரத்துவம் அடைந்த மாவை சோ.சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் இவர்கள் எவரும் கலந்து கொள்ளவிடமாட்டோம் என அன்னாரின் சகோதரர், பிள்ளைகள் கண்டிப்பான உத்தரவு விட்டுள்ளனர்.

 

1. பீற்றர் இளம் செழியன்-முல்லைத்தீவு

2. ⁠திருமதி சாந்தி சிறிஷ்கந்தராசா முல்லைத்தீவு.

3. ⁠தி. பரம்சோதி.மன்னார்.

4. ⁠நா.சேனாதிராசா-வவுனியா.

5. ⁠சீ.வி.கே. சிவஞானம்- நல்லூர்.

6. ⁠கேசவன் சயந்தன்-சாவகச்சேரி.

7. ⁠இ. சாணக்கியன்- மட்டக்களப்பு.

8. ⁠ப.சத்தியலிங்கம்-வவுனியா.

9. ⁠கி.துரைராசசிங்கம்-மட்டக்களப்பு.

10. ⁠தி.சரவணபவன்-மட்டக்களப்பு.

11. ⁠கி.சேயோன்-சந்திவெளி.

12. ⁠த.கலையரசன்-அம்பாறை.

13. ⁠மு.கண்ணதாசன்-அம்பாறை.

14. ⁠திருமதி ரஞ்சினி கனகராசா-மட்டக்களப்பு.

15. ⁠ச.இரத்தினவேல்-வெள்ளவத்தை.

16. ⁠எம். ஏ. சுமந்திரன்-யாழ்ப்பாணம்.

17. ⁠ப.கமலேஷ்வரன்-முல்லைத்தீவு.

18. ⁠க.செல்வராசா. வன்னி.

19. ⁠சூ.சேவியர் குலநாயகம்.

 

தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன். 

அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார்.

சுமந்திரனின் வழிகாட்டலில் மத்திய குழுவில் உள்ள உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பதவி விலக நிர்பந்திக்க செய்தமை அவருடைய மன அழுத்தத்திற்கு காரணம், சொந்த கட்சியின் தலைமைக்கு இந்த நிலைமை 

அத்தோடு நேற்றுமுந்தினம் 26.01.2025  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு  மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் தலைவர் CVK சிவஞானமும், பதில் செயலாளர் சத்தியலிங்கமும் மாவையுடன் கடும்தொணியில் பேசியிருந்ததாகவும், சுமந்திரன் உங்களை கட்சியில் இருந்து நிச்சயம் நீக்கியே தீருவார் என்று காட்டமாக மாவையிடம் தெரிவித்ததாகவும் மாவிட்டபுர தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த விடயங்களால் கடும் மனஉளைச்சலில் இருந்த மாவை சேனாதிராச சுயநினைவு இழந்த நிலையில் வீட்டில் விழுந்து இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 29,01,2025, இரவு மரணித்தார்.
 

https://www.battinatham.com/2025/01/19_30.html

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி!

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தியுள்ளார்

அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் நேற்று இரவு (29) உயிரிழந்துள்ளார்.

மேலும் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

https://athavannews.com/2025/1418982

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் மாவை - சித்தார்த்தன்

30 JAN, 2025 | 01:48 PM
image

(நமது நிருபர்)

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசாவின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

மாவை சேனாதிராசாவின் மறைவுக்கான அவரது இரங்கல் குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், 

தனது இளவயதுக் காலம் முதல் இறுதி மூச்சு வரை தமிழ் மக்களின் விடுதலை குறித்த அவரது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நானும் நான் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களும் நன்கு அறிவோம்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் தீவிரம் பெற்ற, எம் இனத்துக்கு எதிரான திட்டமிடப்பட்ட இன ஒடுக்கல் நடவடிக்கைகள் காரணமாக அன்றைய தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது மிகத் தீவிரமாக செயற்பட்டவர்களில் மாவை அண்ணரும் ஒருவராவார். 

தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களுடனும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவராக இருந்த பிரபாகரன் அவர்களுடனும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்ததோடு நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் உதவிகளையும் செய்திருந்ததோடு, அவர்கள் பிரிந்த பின்பும் இருவருடனும் தனித்தனியாகவும் தொடர்புகளை வைத்திருந்தார்.

அதேநேரத்தில், தந்தை செல்வா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற அரசியல் போராட்டங்களிலும் தந்தை செல்வா அவர்களுக்கும் அண்ணர் அமிர்தலிங்கம்  அவர்களுக்கும் மிகவும் நம்பிக்கைக்குரியவராக தொண்டனாக தொடர்ச்சியாக பங்குபற்றியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக பத்து தடவைகளுக்கு மேல் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக அரச படைகளின் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்திருந்தார். இன்று அவர் சந்திக்கும் வலிதான உடல் உபாதைகளுக்கு அன்று அவர் அனுபவித்த சித்திரவதைகளும் ஒரு காரணமாகும்.

தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி, இளைஞர் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றில் பல பொறுப்பான பதவிகளை பெற்றுக்கொண்ட மாவை அண்ணர் அவர்கள், அவற்றின் ஊடாக தனது கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் தன்னால் இயன்ற வரை கடமைகளை செய்திருந்தார்.

1970ஆம் ஆண்டு முதல் மிக நெருக்கமாக, தொடர்ச்சியாக அவருடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எழுபதுகளின் முற்பகுதியில் தமிழ் மக்களுக்கான அரசியலைப் பேசுவதே நெருக்கடியானது எனக் கருதப்பட்ட காலங்களில்,  நான் சாரதியாகவும், அவர் கட்சித் தொண்டராகவும் செயற்பட்டு விடுதலைப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்த சந்தர்ப்பங்களை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு சாதாரண கட்சித் தொண்டராக இருந்த காலத்தில் கூட தன்னுடைய  ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பை உணர்ந்துகொண்டேன். 

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னரும் கூட, அதன் செயற்பாடுகளில் தீவிரமாக இருந்த வேளையிலும்,  தமிழரசுக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர்களில் முக்கியமானவர் மாவை அண்ணர் அவர்கள். தமிழரசுக் கட்சியின் மையமாக  செயற்பட்டிருந்த தலைவர்கள் வரிசையின் முடிவாக மாவை அண்ணரின் மறைவு அமைந்துவிடுமோ என்பது இன்று தமிழ்த் தேசியவாதிகள் பலரினதும் கவலையாக உள்ளது.

ஒரு கட்சியின் தொண்டனாக, பிரதான செயற்பாட்டாளராக, தலைவனாக, தமிழர் தாயகத்தில் அவரது கால் படாத கிராமங்கள் இல்லையெனலாம். 

ஆரம்ப காலங்களில் எனது தந்தையின்  செயலாளருக்குரிய அரச பேருந்து பயணச் சீட்டினைப் பயன்படுத்தி எப்போதும் தாயகமெங்கும் களப் பயணங்களை அவர் மேற்கொள்வதை நான் கண்டிருக்கிறேன். 

தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பதிலும், தனது கட்சியை வளர்த்தெடுப்பதிலும் அவரது அயராத உழைப்பையும் உணர்ந்திருக்கிறேன்.

தனது இறுதிக் காலத்தில் இயற்கையான மூப்பு, உடல் உபாதைகள் அனைத்துக்கும் மத்தியிலும் தனது கட்சியின் ஒற்றுமைக்காகவும் கட்சியின் தடம் மாறாத செயற்பாடுகளுக்காகவும் கடுமையாக போராடியதை கண்டோம். அதற்காக கடுமையான விமர்சனங்களுக்கும் அவமானங்களுக்கும்  அவர் முகங்கொடுத்ததையும், அதன் காரணமாக மனதாலும் உடலாலும் அவர் தளர்ந்திருந்ததையும் கண்டோம்.

வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த சாதாரண இளைஞர் ஒருவர், ஓர் இனத்தின் தலைவன் எனும் இடத்தை அடையும் வரையிலான அவரது விடுதலை நோக்கிய பயணம், தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கின்ற, அவர்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை கொடுக்க தயாராகின்ற அனைத்து இளைஞர்களுக்குமான அரசியல் பாடமாக அமையும் என்பது மட்டும் நிச்சயம். 

மாவை அண்ணர் அவர்களை இழந்து துயருறும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவருடனும் எமது துயரங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/205329

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி!

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி!

மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி செலுத்தியுள்ளார்

அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்

இதேவேளை மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் நேற்று இரவு (29) உயிரிழந்துள்ளார்.

மேலும் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

IMG-20250130-WA0038-600x338.jpg

IMG-20250130-WA0040-600x338.jpg

IMG-20250130-WA0041-600x338.jpg

IMG-20250130-WA0042-600x338.jpg

IMG-20250130-WA0047-600x338.jpg

https://athavannews.com/2025/1419060

  • கருத்துக்கள உறவுகள்

காலமான மாவை சேனாதிராஜா - ஒரு பார்வை!

காலமான மாவை சேனாதிராஜா - ஒரு பார்வை!
காணொளி

யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா 'பவானி' என்பவரை திருமணம் செய்தார்.

மேலும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவரான சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (29) காலமானார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிறு அன்று மாவிட்டபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பிரவேசம்...

மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1989 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (தவிகூ) - 2,820 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்படவில்லை.
2000 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (தவிகூ ) - 10,965 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.
2001 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (தவிகூ) - 33,831 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.
2004 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் - (ததேகூ) - 38,783 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (ததேகூ) - 20,501 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.
2015 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (ததேகூ) - 58,782 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (ததேகூ) - 20,358 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்படவில்லை.

https://tamil.adaderana.lk/news.php?nid=199500

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தும் உட்கட்சி மோதல்களைத் தடுக்கமுடியாத ஆளுமையற்றவராக இருந்தார். தனது இயலாமையால் கட்சி சீரழிவைச் சந்தித்ததையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இறுதியில் மரணத்தைத் தழுவியுள்ளார்.

தலமை என்றால் ஆளுமை இருக்க வேண்டும். இல்லாதவர்கள் ஏன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும்? போன வருடம் ஒரு தலைவர் மறைந்தார். இந்த வருடம் இன்னொரு தலைவர். இப்பொழுது இருக்கும் தலைவருக்கு கண்டிப்பாகப் பயம் பிடித்து ஆட்டும்.

ஐயா மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி!

மாவையை இழந்த பெரும் துயரில் சீ.வி.கே கவலைhttps://fb.watch/xrI3CTLgtG/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

தலமை என்றால் ஆளுமை இருக்க வேண்டும். இல்லாதவர்கள் ஏன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும்? போன வருடம் ஒரு தலைவர் மறைந்தார். இந்த வருடம் இன்னொரு தலைவர். இப்பொழுது இருக்கும் தலைவருக்கு கண்டிப்பாகப் பயம் பிடித்து ஆட்டும்.

எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும்,  வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவித்து கட்சியைக் கட்டும்கோப்பாகவும் வைத்திருக்கவேண்டும். 

அப்படி ஒரு ஆளுமையுள்ள தலைவர் தமிழர்களின் தேசியக் கட்சிகளில் இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, கிருபன் said:

அமரத்துவம் அடைந்த மாவை சோ.சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் இவர்கள் எவரும் கலந்து கொள்ளவிடமாட்டோம் என அன்னாரின் சகோதரர், பிள்ளைகள் கண்டிப்பான உத்தரவு விட்டுள்ளனர்.

 

1. பீற்றர் இளம் செழியன்-முல்லைத்தீவு

2. ⁠திருமதி சாந்தி சிறிஷ்கந்தராசா முல்லைத்தீவு.

3. ⁠தி. பரம்சோதி.மன்னார்.

4. ⁠நா.சேனாதிராசா-வவுனியா.

5. ⁠சீ.வி.கே. சிவஞானம்- நல்லூர்.

6. ⁠கேசவன் சயந்தன்-சாவகச்சேரி.

7. ⁠இ. சாணக்கியன்- மட்டக்களப்பு.

8. ⁠ப.சத்தியலிங்கம்-வவுனியா.

9. ⁠கி.துரைராசசிங்கம்-மட்டக்களப்பு.

10. ⁠தி.சரவணபவன்-மட்டக்களப்பு.

11. ⁠கி.சேயோன்-சந்திவெளி.

12. ⁠த.கலையரசன்-அம்பாறை.

13. ⁠மு.கண்ணதாசன்-அம்பாறை.

14. ⁠திருமதி ரஞ்சினி கனகராசா-மட்டக்களப்பு.

15. ⁠ச.இரத்தினவேல்-வெள்ளவத்தை.

16. ⁠எம். ஏ. சுமந்திரன்-யாழ்ப்பாணம்.

17. ⁠ப.கமலேஷ்வரன்-முல்லைத்தீவு.

18. ⁠க.செல்வராசா. வன்னி.

19. ⁠சூ.சேவியர் குலநாயகம்.

82 வயது வரையிலும் பதவி,அரசியல் செல்வாக்குடன் மரணமடைந்துள்ளார். மாவைக்கு நல்ல வாழ்வும் நல்ல சாவும் இனிதே அமைந்திருக்கின்றது. இந்திய தூதுவர் கூட அஞ்சலி செலுத்த நேரடியாக வந்திருக்கின்றார் என்றால் இவர் சாதாரண மனிதர் அல்ல.

இந்த நிலையில் மாவையின் உறவினர்கள் இறுதி சடங்கிற்கு யார் யாரெல்லாம் வரக்கூடாது என பட்டியலிட்டிருப்பது ஒரு வித அவமானங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும்,  வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவித்து கட்சியைக் கட்டும்கோப்பாகவும் வைத்திருக்கவேண்டும். 

அப்படி ஒரு ஆளுமையுள்ள தலைவர் தமிழர்களின் தேசியக் கட்சிகளில் இல்லை!

அதை சொன்னால் பலருக்கு கோவம் வருது .

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு வடமாகாண ஆளுநர் இரங்கல்!

மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு வடமாகாண ஆளுநர் இரங்கல்!

தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்

‘தமிழ் மக்களை நீண்டகாலம் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான சோ.சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தமிழ் மக்களுக்கான தியாகம் என்பன அரசியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.

யாழ். மாவட்டச் செயலராக நான் முன்னர் பணியாற்றிய காலத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், தமிழ் சமூகத்துக்காக ஆற்றிய பணிகள் அளப்பரியன. வலி. வடக்கின் மீள்குடியமர்வு மற்றும் அந்தப் பிரதேசத்தின் உயர்வுக்காக அவர் செய்த சேவைகளை அருகிலிருந்து பார்த்திருக்கின்றேன்.

காலம் முழுவதையும் இந்த மக்களுக்காகவே செலவிட்ட ஒருவரை இன்று இழந்து நிற்கின்றோம். வடக்கு மாகாண மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1419117

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும்!

மாவை சேனாதிராஜா மரணம்: இரங்கல் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச.

மறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின்
உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை அன்னாரின் மறைவிற்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்களது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1418924

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார்.

அதன்படி அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_6933-600x450.jpeg

IMG_6934-600x338.jpeg

IMG_6935-600x338.jpeg

IMG_6936-600x450.jpeg

https://athavannews.com/2025/1419159

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அதே வேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை நாடாளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது.

அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1419203

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் . ........!

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பலர் அஞ்சலி

மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பலர் அஞ்சலி.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பேராசிரியர் விமல் சுவாமிநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
 
அத்தோடு, எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர், ஆளுநர் நா.வேதநாயகன், தமிழரசுக்கட்சி செயலாளர் (கொழும்பு கிளை) சி.கமலநாதன், டக்ளஸ் தேவானந்தா, பொ.ஐங்கரநேசன், ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.