Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

உண்மைதான். ஊழல்வாதிகளை மக்களுக்குக் காட்டுவதற்கான நெஞ்சுரம் கொண்ட எவரும் முன்னர் இல்லாததாலும் முடங்கியிருக்கும். 

அருச்சுனா மிகவும் நெஞ்சுரம் கொண்டவர் என்பதால் தான் செய்யும் ஊழலை தானே அம்பலப்படுத்துகிறார் என்கிறீர்களா ஐயா?

46 minutes ago, நிலாமதி said:

 இது  ஒரு மதத்தை அவமதிக்கும்சொற் பிரயோகம். மும் மூர்த்திகள்  மூவொரு கடவுள் , என சொல்லலாமே . 

அப்படியா அக்கா?

நான் அப்படி நினைக்கவில்லை.

நீங்கள் கொஞ்சம் woke/politically correct ஆக சிந்திக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்.

ஒன்று செய்யுங்கள் - எனது கருத்து மேல் உள்ள பட்டனை தட்டி report அடித்து விடுங்கள்.

நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறதோ நான் கட்டுபடுவேன்.

அத்தோடு நிர்வாகம் என் கருத்தை நீக்கினால் நீக்கப்பட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன்.

பிகு

பிதா மகன் என்பது இந்து இதிகாசத்தில் பீஷ்மரை குறிக்கும்.

கருணாநிதியை ஊழலின் பிதாமகன் என எழுதிய @தமிழ் சிறி அண்ணாவின் கவனத்துக்கு 🤣.

  • Replies 53
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தேவையில்லாமல் எல்லாவற்றுளுள்ளும் மூக்கை நுழைப்பது,  சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கிறது, பிறகு தமிழேண்டா என்று தலைவரின் பெயரை இழுக்கிறது, காணாமற் போன உறவுகளுக்கு தீர்வு சொல்லுறது, தையிட்டி விகாரை விடய

  • நந்தன்
    நந்தன்

    அது உரசி கழித்து கொள்ளலாம்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தியர்களையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது உண்மை. 👍 முன்பு ஒப்பீட்டளவில் இலங்கையில் ஊழல் என்பது மிக மிக அரிதாகவே இருந்தது. அதனை மிக பாவப் பட்ட ஒரு செயலாகவே பல அரச அதிகாரிகள் கருதினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மும்மூர்திகள் என்றால் பிரம்மா, விஷ்ணு, சிவன் - இப்படி சொல்லலாம் என பரிந்துரைத்த @நிலாமதி அக்கா இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பாவோ🤔🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, alvayan said:

வந்தவன் ..போனவன் எல்லோரும் வெருட்டும் அளவுக்கு அருச்சுனாவின் தரம் குறைந்து விட்டதா...

மேலோட்டமாக் நாங்கள் பார்த்தால் இதை சும்மா கடந்து போகலாம்....யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு மருத்தவர் (எதற்கு எடுத்தாலும்  தேசிய தலைவரையும்,மாவீரர்களையும் துணைக்கு இழுப்பவர்)இப்படி சொல்லுவது யாழ்மாவட்ட மக்களை கரக்க்டர் அசசினேசன் செய்யவோ என எண்ண வைக்கின்றது.

18 hours ago, satan said:

தேவையில்லாமல் எல்லாவற்றுளுள்ளும் மூக்கை நுழைப்பது,  சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கிறது, பிறகு தமிழேண்டா என்று தலைவரின் பெயரை இழுக்கிறது, காணாமற் போன உறவுகளுக்கு தீர்வு சொல்லுறது, தையிட்டி விகாரை விடயத்தில் தீர்வு சொல்லுறதுக்கு யார் இவர்? இவருக்கு மேலேயே ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், வழக்குகள். இதில தேவையில்லாத பிரச்சனைகளை காவிக்கொண்டு திரியிறார். காணொளி பைத்தியம் என்று நேரடியாகவே சொல்லி கேலி செய்கிறார்கள். 

இந்த பைத்தியத்தை வைத்து காணோளி போட்டுபணம் சம்பாதித்த யூடியுப் பைத்தியங்களும் உண்டு.. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தங்கம் தேஞ்சு போய்விடும்

அதான் அர்ச்சனாவுக்கு பல புலம்பெயர் கூட்டங்கள் அவருக்கு காசு அனுப்புவதாக போனுக்கு மேல் போன் போட்டு சொல்லுகிறார்கள் பிறகு ஏன் பயப்படுவான் அவருக்கு காசு கிடைக்கும் வரைக்கும். அந்தாள் பல்டி அடிச்சு திரியும் 

நானும் புலம்பெயர் பிரதேசத்தில் தான் இருக்கிறேன் ...ஒரு 50 டொலர் டிக்கட் வாங்கிறீயளோ தாயக மக்களுக்கு உதவி செய்ய என கேட்டா...அவர்கள் திருப்பி என்னிடம் கேட்கும் கேள்வி...உண்மையாக இது தாயக மக்களுக்குதான் போகுதோ அல்லது உங்கன்ட பொக்கட்டுக்குள்ளயோ.....ஆகவே  புலம் பெயர்ந்தவன் சும்மா கொடுக்க மாட்டான்...இங்க இருப்பவன் லெசுப்பட்டவன் அல்ல ..சிறிலங்கா அரசிடம் .புலம் பெயர்ந்தவர்களின் பணம்  என கூறி, வேறு வியாபாரம் செய்து சம்பாதிக்கின்றனர் ... ...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தொடங்கினால் உங்களுக்கு ஓட இடமிருக்காது - சபையில் அனுரவின் அமைச்சருடன் மோதிய அர்ச்சுனா!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

செய்கூலி

சேதாரம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nunavilan said:

நாங்கள் தொடங்கினால் உங்களுக்கு ஓட இடமிருக்காது - சபையில் அனுரவின் அமைச்சருடன் மோதிய அர்ச்சுனா!

இந்தாள் சிலவேளை தெளிவாகப் பேசுகிறார் பலவேளைகளில் குழப்பமாகப் பேசுகிறார்  . ஒரே குழப்பமாக இருக்கிறது.அந்த நேரத்தில் வாய்க்கு எது வருகுதோ அதைப் பேசிவிடுகிறார்..இரந்தாலும் பாராளுமன்றத்தில் செய்தியாகி விடுகிறார். வைத்தியாசாலை ஊழலில் தொடங்கி தானே ஊpழ் செய்கிறதாயும் சொல்கிறார்.  எந்த அரசியல்வாதி ஊழல் செய்ய விi;லை? கோணான் சொன்ன மாதிரி சின்ன ஊழல் என்றாலும் அதை பகிரங்கமாகப் போட்டு உடைக்கிறார்.இவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். தங்கம்தான்பாவம்  இடையில் கிடந்து கஸ்ரப்படுகுது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

🤣தங்கம்தான்பாவம்  இடையில் கிடந்து கஸ்ரப்படுகுது.

சற்றே நிமிந்தேன்...அவன் பைத்தியம் என்றேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இவரது காணொளி ஒன்று பார்த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சேர்த்து 1948 இல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் இன்று இலங்கையின் சுதந்திர‌ தினத்திற்குக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துபவர்கள் பைத்தியங்கள் என்றும், அரசியல் நோக்கத்திற்காகச் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆக, தமிழர்கள் முற்றான சுதந்திரத்தைச் சிங்களவர்கள் போன்றே அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.அவரது அறிவு அவ்வளவுதான் போலும். இவர் எப்படிப் படித்து, வைத்தியராகப் பட்டம் பெற்றார் என்று எண்ணுகிறேன். 

இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கண‌க்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது. இவரைத் தலையில்த் தூக்கிக் கொண்டாடிய தமிழடியான் என்பவரின் ஆரம்ப காலக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் அநுர விசுவாசியாக மாறிப்போனதால் அவரது காணொளிகளைப் பார்ப்பது இல்லை. தற்போது அருச்சுணா பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

கோணான் சொன்ன மாதிரி

தட்டச்சில் ஓணான் என்று வரவில்லை என்ற மட்டில் ஆசுவாசம் அடைகிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

நானும் புலம்பெயர் பிரதேசத்தில் தான் இருக்கிறேன் ...ஒரு 50 டொலர் டிக்கட் வாங்கிறீயளோ தாயக மக்களுக்கு உதவி செய்ய என கேட்டா...அவர்கள் திருப்பி என்னிடம் கேட்கும் கேள்வி...உண்மையாக இது தாயக மக்களுக்குதான் போகுதோ அல்லது உங்கன்ட பொக்கட்டுக்குள்ளயோ.....ஆகவே  புலம் பெயர்ந்தவன் சும்மா கொடுக்க மாட்டான்...இங்க இருப்பவன் லெசுப்பட்டவன் அல்ல ..சிறிலங்கா அரசிடம் .புலம் பெயர்ந்தவர்களின் பணம்  என கூறி, வேறு வியாபாரம் செய்து சம்பாதிக்கின்றனர் ... ...

உண்மை தான் 

புலம்பெயர் தமிழர்கள் தான் பணம் அனுப்புகிறார்கள் என்று இங்கே எழுதும் போதெல்லாம் தெரியும் இவர்கள் நாலு பேர் சேர்ந்து கூட எந்த உதவிகளும் செய்திருக்க வாய்ப்பில்லை என்று.

பணம் கேட்பது சேர்ப்பது அதிலும் தமிழர்களிடம்???? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

உண்மை தான் 

புலம்பெயர் தமிழர்கள் தான் பணம் அனுப்புகிறார்கள் என்று இங்கே எழுதும் போதெல்லாம் தெரியும் இவர்கள் நாலு பேர் சேர்ந்து கூட எந்த உதவிகளும் செய்திருக்க வாய்ப்பில்லை என்று.

பணம் கேட்பது சேர்ப்பது அதிலும் தமிழர்களிடம்???? 

சில நண்பர்கள் படித்த பாடசாலைக்கு பணம் கேட்டாலே கொடுக்க மாட்டார்கள் அதுவும் வருடத்தில் ஒருக்கா....நாங்கள் தனிப்பட்ட வகையில் தாயக மக்களுக்கு பல தொண்டுகள் செய்கிறோம் என புருடா விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அருச்சுனா மிகவும் நெஞ்சுரம் கொண்டவர் என்பதால் தான் செய்யும் ஊழலை தானே அம்பலப்படுத்துகிறார் என்கிறீர்களா ஐயா?

இடி முழங்கும்போதுதான் நான் “அருச்சுனா அபயம்” என்று அழைப்பேன். இது என்சிறுவயதில் இடி முழங்கும்போது நான் பயப்படாமல் இருக்க என் அம்மா சொல்லித்தந்த தைரிய வார்த்தை. 

இங்கு இத்திரி குறித்த எனது பின்னூட்டத்தில் நான் அருச்சுனாவை அழைக்கவே இல்லை ஐயா! 🤔

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

நேற்று இவரது காணொளி ஒன்று பார்த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சேர்த்து 1948 இல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் இன்று இலங்கையின் சுதந்திர‌ தினத்திற்குக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துபவர்கள் பைத்தியங்கள் என்றும், அரசியல் நோக்கத்திற்காகச் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆக, தமிழர்கள் முற்றான சுதந்திரத்தைச் சிங்களவர்கள் போன்றே அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.அவரது அறிவு அவ்வளவுதான் போலும். இவர் எப்படிப் படித்து, வைத்தியராகப் பட்டம் பெற்றார் என்று எண்ணுகிறேன். 

இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கண‌க்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது. இவரைத் தலையில்த் தூக்கிக் கொண்டாடிய தமிழடியான் என்பவரின் ஆரம்ப காலக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் அநுர விசுவாசியாக மாறிப்போனதால் அவரது காணொளிகளைப் பார்ப்பது இல்லை. தற்போது அருச்சுணா பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.

இந்த தமிழ் அடியான் ஆரம்பத்தில் புலி/தமிழ்தேசிய ஆதர்வு வீடியோக்கள் போட்டவர் ..பின்னர் அர்ஜுனா ,,,லண்டனில் வாழ்ந்து கொண்டு 24 மணித்தியாலமும் யூ டியுப் பைத்தியமாக இருந்தால் எப்படி வருமானம் வரும்...சிங்கள புலம்பெயர்கள் இவ‌ருக்கும் அர்ஜூனாவுக்கும் பணம் கொடுக்கினமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

இந்த தமிழ் அடியான் ஆரம்பத்தில் புலி/தமிழ்தேசிய ஆதர்வு வீடியோக்கள் போட்டவர் ..பின்னர் அர்ஜுனா ,,,லண்டனில் வாழ்ந்து கொண்டு 24 மணித்தியாலமும் யூ டியுப் பைத்தியமாக இருந்தால் எப்படி வருமானம் வரும்...சிங்கள புலம்பெயர்கள் இவ‌ருக்கும் அர்ஜூனாவுக்கும் பணம் கொடுக்கினமோ? 

இன்று யூ டியுப்பர்கள் பலர் பல்கிப் பெருகி இருந்தாலும் ஒரு சிலரின் நல்லதோ, கெட்டதோ வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. அதில் தமிழ் அடியானும் ஒருவர். அதற்காக எனக்குச் செவிடன் என்று பட்டம் சூட்ட எவரும் முயலவேண்டாம். அதை என் மனைவி எனக்கு ஏற்கெனவே தந்துவிட்டார்.😁

  • கருத்துக்கள உறவுகள்

தேவதர்சன் சுகிந்தன்

சிறுபான்மை உரிமைகளுக்காக காலம்காலமாக முன்னெடுக்கப்படும் எந்த அரசியல் அறிவும் அற்று, மலையக மக்களின் அரசியல் சமூகத் தேவைகள் குறித்த எதுவித பிரக்ஜையுமற்று
ஒரு இனக்குழுவை ஒட்டுமொத்தமாக, இவ்வளவு சாதாரணமாக கேவலப்படுத்தும் போக்குத் தெரிந்தும் அரசியல், சமூக அமைப்புகள் காக்கும் மெளனம் ஆபத்தானது.
உங்கள் பெயர்களைத் தக்கவைக்கும் போக்குகள்தான் முக்கியமென்றால், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்றும் சமூகநல ஆர்வலர்கள் என்றும், அவதானிகள் என்றும் நீங்கள் சுமக்கும் பட்டங்கள் அர்த்தமற்றவை.
 
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

தட்டச்சில் ஓணான் என்று வரவில்லை என்ற மட்டில் ஆசுவாசம் அடைகிறேன்🤣.

சத்தியமா இதை பார்த்துட்டு யாராவது புதிய உறுப்பினர்களா என்றால் ( புதுசா கோணான்) கோசான்..🤭

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கண‌க்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது.

உண்மை தான் .

21 hours ago, ரஞ்சித் said:

இவரைத் தலையில்த் தூக்கிக் கொண்டாடிய தமிழடியான் என்பவரின் ஆரம்ப காலக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் அநுர விசுவாசியாக மாறிப்போனதால் அவரது காணொளிகளைப் பார்ப்பது இல்லை. தற்போது அருச்சுணா பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.

😀

எனக்கும் இது தெரிந்து கொள்ள ஆசை
நானும் தமிழடியான்  காணெளிகளை இப்போது பார்ப்பது இல்லை யாரும் அனுப்புவது இல்லை.முன்பு அவர்  அநுரகுமார திசாநாயக்கவையும் புகழ்வார் அருச்சுனாவையும் புகழ்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

எனக்குச் செவிடன் என்று பட்டம் சூட்ட எவரும் முயலவேண்டாம். அதை என் மனைவி எனக்கு ஏற்கெனவே தந்துவிட்டார்.

உங்கள் மனைவி உங்களுக்கு செவிடன் என்று பட்டம் சூட்டினால், நீங்கள் புத்திசாலி, வாதத்தை வளர்க்க விரும்பாதவர் என்று அர்த்தம். இன்று பல ஆண்கள் வீட்டில் செவிடர்களாகவே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2025 at 13:35, ரஞ்சித் said:

இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கண‌க்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது.

ம், புலம்பெயர்ந்தோர் கக்கூசு கழுவத்தான் வெளிநாடு போனார்கள் என்று ஒரு காணொளி  அர்ச்சுனா வெளியிட்டுள்ளாராம். நான் பார்க்கவில்லை.  இதனைக்கண்டித்து கடற்தொழிலாளர் சமாய உப தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது தொழிலையே ஒழுங்காக பார்க்க வக்கில்லாதவர், புலம்பெயர்ந்தோரை விமர்சிக்க வந்துவிட்டார். முன்னைய காணொளிகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து யார், யார் எவ்வளவு பணம் தனது வழக்குகளுக்காக அனுப்பினர் என்று வெளியிட்டவர். இன்று இவ்வாறு கூறுவது சுத்த அயோக்கியத்தனம். இதைப்பார்த்தாவது கவுசலியா இந்தாளின் சகவாசத்தை விட்டு விலகுவது அந்தப்பெண்ணுக்கு நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

பாக்கு நீரிணைக்கு ஒருபுறம் ஒராள் பாக்கு நீரிணைக்கு மறுபுறம் ஒராள் என ஒரு சமநிலை பேணப்படுகிறது.😁

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, vasee said:

பாக்கு நீரிணைக்கு ஒருபுறம் ஒராள் பாக்கு நீரிணைக்கு மறுபுறம் ஒராள் என ஒரு சமநிலை பேணப்படுகிறது.😁

சொல்லுறதை தெளிவா சொல்லுறது! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உளறுவாய் சொல்லுது, கட்டி முடிந்த விகாரையை இடி இடி என்று சொல்கிறீர்கள், இப்படி சிங்களவர் சொன்னால் நீங்கள் இடிப்பீர்களா? என்கிறார். இவருக்கு வரலாறு தெரியாவிட்டால், வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். தம்புள்ள நகரில் முப்பது ஆண்டு பழமை வாய்ந்த, கோவில் காணியில், கட்டிய பத்திரகாளி அம்மன் ஆலயம் இடிக்கப்பட்டதே? முதலில், பொதுமக்களின் காணியில் விகாரை கட்டவில்லை, மக்கள் யாரும் தங்கள் காணி என்று பிக்குவிடம் வந்து கேட்கவில்லை என்கிறார். தங்கள் ஆலயத்தில் வழிபாடு செய்யசென்றவர்களை வழிபட விடாமல் துரத்தவில்லையா? நீதிமன்றம் அது மக்களின் காணி, அங்கே கட்டிடப்பணிகள் ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என்று தடையுத்தரவு போட்டும் ஏன் கட்டினார்கள்? மக்கள் தங்கள் காணியை விடுவிக்கும்படி போராடவில்லையா? பிறகு சொல்கிறார் மக்கள் காணியில் தான் கட்டியிருக்கிறது, எட்டு ஏக்கர் எல்லாம் இல்லை, ஒரு சின்ன விகாரை கட்டியிருக்கிறார்களாம். சின்னனோ, பெரிதோ அடுத்தவர் காணியில் இவர்களுக்கு எதற்கு விகாரை?  அதற்கு மீள் காணியோ, நஷ்ட்ட ஈடோ பெற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்கிறார். பௌத்த மக்கள் யாரும் இல்லாத இடத்தில விகாரை எதற்கு? அந்த மக்களிடம் அனுமதி பெற்றார்களா? கட்டிட அனுமதி பெற்றா கட்டினார்கள்? அல்லது அந்த மக்களை தங்கள் சொந்த நிலங்களில் வாழ விட்டார்களா? துரத்தியது யார்? கலவரம் வெடிக்குமாம். ஏன் தமிழர் காணாத கலவரங்களா? முடிந்தால் தொடங்கிபார்க்கட்டும்?  இப்படியே சொல்லிச்சொல்லி நிலம் பிடிப்பார்கள், அதற்கு ஒரு காரணம் இவர் சொல்வார். ஆமிக்காரர் நல்லவர்களாம். மக்களின் காணிகளில் முகாங்களும், கொட்டல்களும் கட்டி சொந்த மக்களை குடியிருக்க விடாமல் அகதிகளாக அல்லல் பட விட்டது யார்? அப்போ இத்தனை லட்சம் மக்களை கொன்றவர்கள் யார்? ஏலியன்களா?  இவரை இதற்காகவா மக்கள் தெரிந்தார்கள்? பௌத்த சம்மேளனம் அறிக்கை விட்டிருக்கிறது, இதோடு சேர்த்து பதினெட்டு ஏக்கர் என நினைக்கிறன் அது தமக்கு வேண்டுமாம். எதற்கு? அப்படியொன்று இல்லவேயில்லை என்கிறார் இந்த விவரம் கெட்டது. ஆமி ஏன் இன்னும் பொதுமக்கள் காணிகளை தடுத்து அடைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இவரிடம் பதில் இருக்கிறதா? தனது காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்பாராம், வேண்டுகிறவர்கள் அதில் விகாரை கட்டினாலென்ன, மசூதி கட்டினாலென்ன, கோவில் கட்டினாலென்ன அதுபற்றி தனக்கு கவலையில்லையாம். ஆம். பணம் முக்கியம் என்பவருக்கு எதுபற்றியும் கவலையில்லை. ஆனால் இங்கு மக்கள் விகாரைக்கு காணி விக்கவில்லை. அடாத்தாக பிடித்திருக்கிறார்கள். இனக்கலவரம் யாரால் ஏன் வந்தது என்பதற்கு விளக்கம் கூறுவாரா இவர்? அதற்கு பயந்தவர் தலைவரின் பெயரை உச்சரிக்க கூடாது. தமிழ் மக்கள் பிரதிநிதியாய் வாக்கு கேட்டிருக்க கூடாது. இவர் சொல்லுற காரணம், பேசுற பேச்சு இரத்தம் கொதிக்க வைக்கிறது. சிங்களவரோடு சமாதானமாக வாழவேண்டுமாம், பிறகேன் நான் தமிழேண்டா என்கிறார்? வல்வெட்டித்துறையில் யாரோ அனுராவை கட்டிப்பிடித்தார்களாம், சந்திரசேகரன் சொன்னாராம், தாங்கள் அடிக்கத்தொடங்கினால் ஓடுவதற்கு இடமில்லையாம். ஏன் அவர் அப்படி பேசினார்? முரணாக இல்லை இவர் பேச்சு? இவருக்கு எங்கே, எப்படி, என்ன பேசவேண்டுமென்பது தெரியாது.  எல்லோர் பேச்சிலும் குறுக்கீடு செய்து முரண்டு பிடிக்கிறது. ஒரு கார், காணொளியில் அரசியல் செய்ய நினைக்கிறார்.    இதை சொல்லியா மக்களிடம் வாக்கு கேட்டார் இவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கே சமர்ப்பணம் இவர் பேச்சு!  

  • கருத்துக்கள உறவுகள்

கவுசலியா தெளிவாக பேசுபவர் அர்ச்சுனாவின் கட்சியை விட்டு அவா விலகுவது நல்லது.
பாக்கு நீரிணைக்கு மறுபுறம் காளிஅம்மாவும் விலக வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் கோமாளிகள்!

adminFebruary 9, 2025
parliment3.jpg

இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசவாதம் பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடாகும்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ளன. எவரும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர் என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளது.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்ககூடிய கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே யாழ். மக்களும் எமக்கு அமோக ஆதரவை வழங்கினர்.
இந்த மக்கள் ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர்.

எனவே, இணைந்துவாழும் எங்களை பிரதேசவாதத்தை கிளப்பிவிட்டு பிரித்தாள முடியாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம். தென்னிலங்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் செய்த அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது என மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/211001/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.