Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவளைத் தொடுவானேன்...?

சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும்.

அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்சொல்லி கேட்பாள். நான் அவளை பேசு என்பேன். இப்படி தான் அறிமுகமானோம். அவள் என் கையை எப்பொழுதும் பிடித்துக் கொள்வாள். இதற்கு மேல் தாங்காது நான் அவளை தொட்டேன்.....

காலம் என்னை தூக்கி கொழும்பில் போட்டது. தொடர்பு அறுந்தது.

தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தொடரும்

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தொடரும்.....

தொடருங்கள் விசுகு ஐயா.

உரைநடைக் கவிதை போல இருக்கின்றது உங்களின் எழுத்து நடை......👍.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதங்கள் ஓடிவிட பாடசாலை விடுமுறையில் ஊர் திரும்புகிறேன். பண்ணைப் பாலத்தில் மீன் வாசம் நாசியில் படும் எல்லோருக்கும் ருசி கண்ட பூனை எனக்கோ அவள் வாசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தீயாய் சுடுகிறது. ஊர் வந்து சேரும் வரை அதே நினைவு அதே கனவு. ஆனால் ஊரும் நண்பர்களும் நகைச்சுவை நடிகராக சென்று கொழும்பால் திரும்பும் என்னை சுப்பர்ஸ்டாராக வரவேற்கிறார்கள். அப்பொழுது தான் நானும் பார்த்தேன் சென்றபோதிருந்ததை விட நான் முழுவதுமாக மாறியிருப்பதை. இந்த வட்டம் மற்றும் பிரபலத்தால் அவளை பார்ப்பது தடங்கல் பட சிறிது சிறிதாக சில செய்திகள் என்னை வந்தடைகின்றன. தொட்டது நான் மட்டுமல்ல ருசி கண்டது நான் மட்டுமல்ல என்பதை அந்த வயதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது அது ஒரு வித ஈர்ப்பு, நட்பு என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் காதல் பற்றியோ கல்யாணம் பற்றியோ ஏன் எங்கள் எதிர் காலம் பற்றியோ கூட பேசிக்கொண்டதில்லை. என்னை கட்டிக் கொள்வாயா என்று அவளோ கட்டிக் கொள்வேன் என்று நானோ எந்த உறுதியும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் மனதின் ஒரு மூலையில் அவள் என்னை படுத்திக் கொண்டே இருந்தாள். சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பம் தள்ளி தள்ளி போக கடைசியாக அவள் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.

மீண்டும் காலம் என்னை பிரான்ஸ் கொண்டு வந்து போட்டது. தொடர்பு முற்றாக அழிந்து போனது.

தொடரும்....

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் .......தொடர்ந்து வருகின்றோம் . ........! 👍

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலாக உள்ளேன்....கொழும்புக்காரர் என்பதால் .இன்னும் ஆர்வம்...தொடர்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகர்! என்ன இது? லவ் ஸ்டோரியா? 🙂

எழுதுங்கோ 👍

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், விசுகர்…!

மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற காலத்தின் நினைவுகள், அரும்ப முதலே கருகிப் போகும் முகிழ்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் மிகவும் வலி மிகுந்தவை..!

ஆனால் அந்த வலிக்குள்ளும் ஒரு சுகம் மறைந்திருக்கும் பாருங்கள்..!

அது தான் வாழ்க்கையின் புதிர்…!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய நாடு, நகரம், புதிய புரியாத மொழி, தெரியாத அனுபவமற்ற வேலை, புதிய உறவுகள், நண்பர்கள் என வாழ்க்கை திசை மாறி தன் வழியில் என்னை உள்வாங்கி வழி நடாத்துகிறது இல்லை துரத்துகிறது. அநேகமாக ஊர் நினைவுகள் அனைத்தும் மறந்து போய் விட்டநிலை இல்லை மரத்துப் போன நிலை.

கடமைகளும் பொறுப்புகளும் சுமைகளும் சுய வாழ்வை கடந்து அழுத்த நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி வருடங்கள் பல பறந்து விட ...

திருமண வயதென்பது நினைவிற்கு வருகின்றபோது அவள் நினைவு மீண்டும் பற்றிக் கொள்கிறது. விசாரித்ததில் எல்லாமே காலதாமதமாகியிருந்தது. சரி நம் வாழ்க்கை எம்மை ஓட்ட திருமணம் பிள்ளைகள் என காலம் தடம் பதித்து செல்ல ..

நாம் எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் நினைத்ததை நாம் விரும்பிய வாழ்வை இலக்கை அடைந்து வருவதாக. ஆனால் உண்மையில் வாழ்க்கை தான் எம்மை வழி நடாத்துகிறது. அதில் முட்டி மோதி அலக்கழிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டு வதைக்கப்பட்டு குட்டப்பட்டு வளைந்து நெளிந்து கொண்டே தான் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோமே தவிர அது அவ்வளவு இலகுவானதில்லை. இலகுவாக வாழ்வு கிடைப்பதுமில்லை.

இப்படித்தான் வாழ்வேன் என்பவர்கள் தோற்றுப் போக வாழ்வின் இயல்போடு வாழ்பவர்கள் வாழ முயல்பவர்களே ஓரளவேனும் வாழ்வை சந்தோஷமாக ஓடி முடிக்க முடிகிறது.

கிடைக்காததை நினைந்து உருகுபவர்களும் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாதவர்களுமே இவ்வுலகில் அதிகம்.

ஒரு நாள் ஒரு திருமண இரவு விருந்தில் அவள் என்னை கண்டு கொண்டு ஓடி வந்தவள் அன்றே போல் என் கைகளை பிடித்துக் கொண்டாள்....

தொடரும்

(அடுத்த கிழமையுடன் இவளை தொட சீ... தொடரமாட்டேன்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணையின் எழுத்து நடை ஆழமான உணர்வுகளைக் கிளறுகிறது... ஓர் இசை நிகழ்வைப் போலவே தொடங்கிய காதல், காலத்தின் கொடூர இழப்புகளால் தொலைந்து போனது போல இருந்தாலும், அந்த பசுமையான நினைவுகள் மறையாமல் இருந்து, மீண்டும் அவள் வந்து கைகளை பிடித்த தருணம் ஒரு மறுபிறவி போல தோன்றுகிறது….

விசுகு அண்ணா, உங்கள் எழுத்துக்கள் வாசகர்களின் உள்ளத்தை ஆழமாக தொடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன... காதல், பிரிவு, மீளும் சந்திப்பு — இவை அனைத்தும் ஒருவகை கவியழகு... உங்கள் எழுத்தின் உண்மைத் தொனி, அனுபவங்களின் நெஞ்சை உலுக்கும் விளக்கம், வாசகர்களின் உள்ளத்தில் நீங்கா முத்திரை பதிக்கிறது…

“அவளை தொடுவானேன்…?” எனும் கேள்விக்கான விடை உங்கள் அடுத்த கட்டத்தில் இருப்பது உறுதி... காலம் நம்மை எங்கேயோ இழுத்துச் செல்லலாம், ஆனால் சில உறவுகள், சில நினைவுகள் ஒரு புதிய சந்திப்பை உருவாக்கிக்கொள்ளும்:..

இதைப்போல ஒரு கதை எனக்குள்ளும் புதைந்து போய்க்கிடக்கிறது.. பரணில் கிடக்கும் அந்த பழைய நாட்குறிப்பின் தூசி படிந்த பக்கங்கள் கண்களில் மங்கலாக தெரிகின்றன.. கண்ணில் இருந்து கசியும் ஈரத்தில் அந்த நாட்குறிப்பேடு கசங்கிப்போகாமல் இருக்க பத்திரமாக மூடி வைக்கிறேன் நீண்ட பெருமூச்சுடன்..

தொடருங்கள் விசுகு அண்ணா! – உங்கள் எழுத்துகள் இன்னும் பலரின் உள்ளங்களை வருடட்டும்...

(எம் எதிர்பார்ப்பை கைவிடாமல், அடுத்த தொடரை விரைவாக வழங்குங்கள்..!)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கவிதை என்பது ஒரு மொழியல்ல, அது ஒரு உணர்வு என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஓணாண்டியார்…!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இப்படித்தான் வாழ்வேன் என்பவர்கள் தோற்றுப் போக வாழ்வின் இயல்போடு வாழ்பவர்கள் வாழ முயல்பவர்களே ஓரளவேனும் வாழ்வை சந்தோஷமாக ஓடி முடிக்க முடிகிறது.

கிடைக்காததை நினைந்து உருகுபவர்களும் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாதவர்களுமே இவ்வுலகில் அதிகம்

அருமையான யதார்த்தமான கருத்துக்கள்

கதையும் நல்லாத்தான் போகுது

அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளின் பரிசம் பட்டதும் உடல் முழுவதும் சில்லிடுகிறது. கண்களை இறுக மூடி திறந்து அவளது கண்களை பார்க்கிறேன் அது கலங்கி இருக்கிறது. அவள் வாய் திறக்கிறாள். அதே என்னை மயக்கிய குரல் அழகு தமிழ். அவள் பேசும் விடயத்தை என் மூளை உணராத அளவுக்கு அந்த குரலுக்குள் அவளின் தமிழுக்குள்ளும் உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து நான் 80 களுக்கு சென்று மூழ்கத்தொடங்கினேன்.....

திடீரென ஒரு பொறி மனதில் நீ யார் இப்பொழுது என்று? கனவில் எங்கோ சென்று மீண்டும் முழிப்போமே அதைப் போன்றதொரு பதட்டம். அவள் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பதால் அதை பிடுங்கவும் முடியாமல் கனவை தொடரவும் முடியாமல்......

இந்த மனித மூளையின் வேகம் மற்றும் ஞாபக சேமிப்பு கண்டு வியந்ததுண்டு. ஒரு சில செக்கன்களில் 25 வருடங்கள் பின்னால் அழைத்து சென்று அத்தனையும் படங்கள் மற்றும் உணர்வுகளுடன் இரைமீட்டிவிட்டு ஒரு சில செக்கன்களில் மீண்டும் களத்தில் வந்து நிற்கும் விந்தையை என்னவென்று வர்ணிப்பது? எதனுடன் ஒப்பிடுவது? 

மீண்டும் அவளது கண்களை பார்க்கிறேன் அதில் எந்த வித சலனமோ சபலமோ இல்லை. ஒரு வித ஆழ்ந்த நட்பு மட்டுமே எனக்கு தெரிகின்றது. என் கண்களை பார்த்தவள் நான் கைகளை விடுவிக்க நினைப்பதை  புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். கைகளை விட்டு விட்டு என் குடும்பத்தை பார்க்கணும் என்றாள். 

அழைத்து சென்று காட்டினேன். எனது மனைவிக்கு இவளைப் பற்றி திருமணத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். இருவரும் நட்பாக சுகம் விசாரித்து கொண்டார்கள். பிள்ளைகளையும் அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்தாள். 

இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். பிள்ளைகளை கண்காணிப்பவர்களாக அல்லது வழி நடாத்துபவர்களாக பெற்றோர்கள் இருப்பார்கள் இருக்கிறார்கள். அப்படியானால் பெற்றோரை கண்காணிப்பது வழி நடாத்துபவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை எங்கள் சமூகம் அதன் கட்டுப்பாடுகள் மதிப்பு மரியாதை எல்லாமே தான்.

இந்த சமூக கட்டமைப்பை எல்லோராலும் உதறிவிட முடியாது. இதற்கெல்லாம் கட்டுப்பட தேவையில்லை என்பவர்கள் கூட சில முடிவுகளை எடுக்க முன் நிதானிப்பர். ஏனெனில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சமூகம் ஏற்காத முடிவுகள் எமது பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த சமூக கட்டமைப்பு பல தவிர்க்க வேண்டியதை தன்னுள் இன்றும் சுமந்து கொண்டு இருந்தபோதும் நன்மைகளும் இருக்கின்றன. அவை எம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி வருகின்றன. இது தமிழர்களுக்கானது என்று இல்லை ஐரோப்பியர்கள் ஏன் உலகுக்கே பொருந்தும்.

அவள் விடைபெறும் முன் தனது இன்றைய வாழ்க்கை நிலைமை பற்றி சொன்னாள். மிகவும் அடிமட்ட நிலை. முன் பின் முகமே தெரியாத எத்தனையோ மக்களுக்கு உதவி இருக்கிறேன். தூக்கி விட்டிருக்கிறேன். துணையாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் என் உயிரில் கலந்த இவளுக்கு என்னால் எதுவும் செய்து தர முடியவில்லை.

தரவும் கூடாது. 

இங்கே எனது பள்ளித் தோழிகள்,  வகுப்புத் தோழிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தம் தருவார்கள். எனக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வார்கள். அதில் என் வகுப்புத் தோழி ஒருத்தி டேய் என்று என்னை கூப்பிடுவாள்.

ஆரம்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் இதனைக் கேட்டு முகம் சுழித்தபோது அவள் கொஞ்சம் பின் வாங்கினாள். ஆனால் பின்னர் என் மனைவி மக்களே அவளை மீண்டும் மீண்டும் அப்படி கூப்பிடும்படி சொல்வார்கள். இவரை டேய் என்று கூப்பிட்டு நாங்கள் கேட்பது நீங்கள் மட்டும் தான் என்பார்கள். அவை எதுவும் என் மனைவி பிள்ளைகள் உட்பட எவராலும் தவறாக பார்க்கப்படுவதில்லை. 

ஆனால் இவளுடன் அப்படி பேசமுடியாது 

முத்தம் கொடுக்க முடியாது 

உட்கார்ந்து சாப்பிட முடியாது 

அவளது தொலைபேசியை எடுத்து அவளுடன் தொடர்பு கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் அவளுக்கு உதவ முடியாது. காரணம் தொட்டது.

அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்....?????

முற்றும் 

(யாவும் கற்பனை அன்று)

6 hours ago, விசுகு said:

நேர்மையாக எழுதி உள்ளீர்கள். உங்கள் வாழ்வனுபவங்கள் பல பாடங்களை தந்து உள்ளன உங்களுக்கு என்பதை உங்கள் எழுத்து காட்டி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் வாழ்வியல் அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன . ............ தொடருங்கள் .........! 👍

44 minutes ago, suvy said:

தங்களின் வாழ்வியல் அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன . ............ தொடருங்கள் .........! 👍

அவர் யாவும் கற்பனை அல்ல என்று சொல்லி கதையை முடித்து விட்டார். இப்ப நீங்கள் தொடரச் சொல்லி கேட்டதால், இது தான் சாக்கு என்று ஓடிப் போய் அவளை (மீண்டும்) தொட்டுப் பார்க்க முயற்சி செய்ய போறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

அவர் யாவும் கற்பனை அல்ல என்று சொல்லி கதையை முடித்து விட்டார். இப்ப நீங்கள் தொடரச் சொல்லி கேட்டதால், இது தான் சாக்கு என்று ஓடிப் போய் அவளை (மீண்டும்) தொட்டுப் பார்க்க முயற்சி செய்ய போறார்.

ஆண்மை என்பது ஆண்கள் பல பெண்களை தொடுவது என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்?? என் அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் சந்தர்ப்பம் கிடைத்தும் எவன்/எவள் அதை தவிர்க்கிறானோ அதுவே ஆண்மை.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

அவர் யாவும் கற்பனை அல்ல என்று சொல்லி கதையை முடித்து விட்டார். இப்ப நீங்கள் தொடரச் சொல்லி கேட்டதால், இது தான் சாக்கு என்று ஓடிப் போய் அவளை (மீண்டும்) தொட்டுப் பார்க்க முயற்சி செய்ய போறார்.

பழக்கத்தில் தொடருங்கள் என்று எழுதி விட்டேன் ......... நீங்கள் கவனித்து விட்டீர்கள் ............ ம் . ...... பரவாயில்லை , விசுகர் இன்னும் ஏதாவது மறந்திருப்பார் அதை எழுதட்டும் .........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

பழக்கத்தில் தொடருங்கள் என்று எழுதி விட்டேன் ......... நீங்கள் கவனித்து விட்டீர்கள் ............ ம் . ...... பரவாயில்லை , விசுகர் இன்னும் ஏதாவது மறந்திருப்பார் அதை எழுதட்டும் .........! 😂

ஆரம்பிக்கிறேன் அண்ணா. அந்த கருவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது நிழலி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பூவின் மீது உண்மையான காதல் கொண்டவன் அந்தப் பூவை செடியில் இருக்கும் போதே ரசிப்பான்..!

அதைப் பிடுங்கிக் கையில வைத்து முகர்ந்து பார்ப்பவனுக்கு அந்தப் பூவின் மீது காதல் இல்லை..!

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, விசுகர்…!

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் இளமைக்கால நினைவுகள் மெல்ல மெல்ல வெளியில் வரக்காத்திருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளை வார்த்தைகளாக அழகாக கோர்த்து எழுதிய பதிவு . நீண்டநாட்களுக்குப்பின் ஒரு கதைப் புத்தகம் வாசித்த உணர்வு, சிறப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

பலரின் இளமைக்கால நினைவுகள் மெல்ல மெல்ல வெளியில் வரக்காத்திருக்கிறது!

அனேகமாக அவர்கள் வாழும் நாடுகளில் குளிர் காலமாக இருக்கும் போது இப்படியான நினைவு அதிகமாக வருவதுண்டு…!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

தங்களின் வாழ்வியல் அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன . ............ தொடருங்கள் .........! 👍

கதை முடிந்தது என்று தன்பாட்டில போன மனுஷனை தொடருங்கள், தொடருங்கள் என்று தொடர வைத்து, எங்கேயோ தொடுத்து விடுகிற பிளான் போலிருக்கே. 

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைத் தொட்ட க்தை...பல நினைவுகளை கொண்டுவந்தது...வந்த நினைவுகளைஅமிழ்த்துவதை தவிர வேறுவழியில்லை..வித்தியாசமான முடிவு...அதுதான் காதலுக்கு அழகு ..குடும்பத்துக்கு சிறப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.