Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

25 minutes ago, வாலி said:

புத்தகத்தின் 91 பக்கத்தில் “சோனகர்” என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றது.

மிக்க நன்றி

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

நல்லூர்க் கோயில் தற்போது இருக்குமிடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்றும் அதனை முஸ்லிம்களிடம் இருந்து பன்றியிறைச்சியினை கிணற்றுக்குள் எறிந்து அப்போதைய இந்துத் தலிபான் கூட்டம் கைப்பற்றியது என்பதும் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை என்ற வரலாற்றுப் பதிவுநூலைப் படித்திருந்தால் படித்தவர்களுக்குப் புரியும்.

சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது

நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு.

ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார்

குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது

நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை .

விருத்தி செய்யப்பட்டு உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நல்லூரில் இப்போ ஒரு 50 வருடமாக இருப்பது எல்லாம் வந்தான், வரத்தாந்தானே? பெரும்பாலும் தீவக மக்கள். அவர்களுக்கு நல்லூரின் வரலாறு அதிகம் தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தீவார் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு நல்லூரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை என்ற பொது எனக்கும் மதியத்தில் இருந்து ஒரு கொந்தளிப்பு என்னுள்ளே ஏற்பட்டது தான் .

பின்னர் யோசித்தால் இலங்கையே ஒரு தீவு அதற்குள்ளும் தீவாரா

ஏன்று நட்பு ரீதியாக எதிர்க்க கருத்தை வைக்கவில்லை.

ஆனாலும் தீவானாக நாங்கள் .....

வேண்டாம் ........நட்பு

சேர்ந்தே பயணிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

கண்டு கொள்ளாதீர்கள். வயித்தெரிச்சலும் பிரதேசவாதமும் தமிழரின் பிரிக்கமுடியாத சொத்துக்கள்....

ஆனால் இவற்றை இந்த நடுநிலை ..,...... கள் கண்டுக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது

நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு.

ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார்

குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது

நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை .

விருத்தி செய்யப்பட்டு உள்ளது

அப்ப நல்லை கந்தனும் ஊரில் அடுத்த சாதி தமிழர்கள் மீது வன்மம் காட்டும் யாழ்பாண தமிழர்கள் போல் சகிப்பு தன்மை இல்லாமல் பன்றியை போட்டு அயலானை விரட்டியடித்தாரா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

யாழ் மாநகரசபையின் அசமந்தப்போக்கே ,பன்னாட்டு அசைவ உணவகம் வருவதற்குக் காரணமா?

இணைப்பிற்கு நன்றி நுணா.

(சக கருத்தாளர்களுக்கு) 25 ஆவது நிமிடத்தில் இருந்து இவர் சொல்லும் விடயங்களைக் கேட்கும் போது, இந்தியாவில் பாப்ரி மசூதியை இடிக்கத் தூண்டிய சிவசேனா சங்கிகள் போலவே சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது.

"நல்லூர் கோவிலின் கோபுரம் கண்ணுக்குத் தெரியும் இடம் வரை அதிர்வு இருக்கும், எனவே அங்கே மாமிசம் விற்பது கூடாது" என்கிறார். இப்படிப் பார்த்தால் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை மாமிச தவிர்ப்பு வலயம் போட வேண்டிய இடங்கள் இருக்கும் போல தெரிகிறதே😂? இவையெல்லாம் பல மத/நாத்திகர்கள் வாழும் ஒரு நகரத்தில் சாத்தியமா?

மாநகர சுகாதாரத் துறை கவனிக்க வேண்டுமென்கிறார். சுகாதாரத் துறை நான் அறிந்த வரை உணவுகள் பொதுச் சுகாதாரத்தை பேணும் வகையில் தயாரிக்கப் படுகின்றனவா என்று மட்டும் தானே சோதிப்பார்கள்? மாமிசம், சைவம் எல்லாம் பொதுச் சுகாதாரத்தோடு எப்படித் தொடர்பாகும்? இது என்ன புதுக் கூத்தாக இருக்கிறது? எப்ப இருந்து இவர் போன்ற ஆட்கள் தாயகத்தில் குரல் தர வல்ல பேர்வழிகளானார்கள்😂?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/5/2025 at 23:59, Sasi_varnam said:

நல்லூரில் உற்சவ எல்லை என்ற ஒன்றை வரையறுத்து காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறையை மீறி இப்படி ஒரு செயலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அந்த மூல காரணத்தை ஆராயாமல் மதம் சம்பந்தமான வெறுப்புகளை மூட நம்பிக்கைகள் எனும் பெயரில் புத்திசாலிதனமாக ஆராய்கின்றார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

இணைப்பிற்கு நன்றி நுணா.

(சக கருத்தாளர்களுக்கு) 25 ஆவது நிமிடத்தில் இருந்து இவர் சொல்லும் விடயங்களைக் கேட்கும் போது, இந்தியாவில் பாப்ரி மசூதியை இடிக்கத் தூண்டிய சிவசேனா சங்கிகள் போலவே சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது.

"நல்லூர் கோவிலின் கோபுரம் கண்ணுக்குத் தெரியும் இடம் வரை அதிர்வு இருக்கும், எனவே அங்கே மாமிசம் விற்பது கூடாது" என்கிறார். இப்படிப் பார்த்தால் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை மாமிச தவிர்ப்பு வலயம் போட வேண்டிய இடங்கள் இருக்கும் போல தெரிகிறதே😂? இவையெல்லாம் பல மத/நாத்திகர்கள் வாழும் ஒரு நகரத்தில் சாத்தியமா?

மாநகர சுகாதாரத் துறை கவனிக்க வேண்டுமென்கிறார். சுகாதாரத் துறை நான் அறிந்த வரை உணவுகள் பொதுச் சுகாதாரத்தை பேணும் வகையில் தயாரிக்கப் படுகின்றனவா என்று மட்டும் தானே சோதிப்பார்கள்? மாமிசம், சைவம் எல்லாம் பொதுச் சுகாதாரத்தோடு எப்படித் தொடர்பாகும்? இது என்ன புதுக் கூத்தாக இருக்கிறது? எப்ப இருந்து இவர் போன்ற ஆட்கள் தாயகத்தில் குரல் தர வல்ல பேர்வழிகளானார்கள்😂?

இந்த வேலன் என்ற மத வெறியர் கடந்த சில வருடங்களாக எல்லா விடயங்களிலும் மூக்கை நுளைத்து குரைத்து வருகிறார். பாமரத்தனமாக அரசியலும் பேசுகிறார். மக்களின் அரசியலுக்கு உசுப்பேற்றல் வெறுப்பு பேச்சால் மக்கள் பிரச்சனைகளை தீர்பதற்கு பதிலாக சிக்கலாக்குதல். சொந்த குடும்ப தேவைகள் என்றால் பின்கதவால் உரியவர்களிடம் பேசி கமுக்கமாக அலுவலை முடிப்பது என்ற தமிழ் தேசிய கொள்கையை இவரும் குத்தகைக்ககு எடுத்துள்ளார்.

ஆர்எஸ் எஸ் சங்கித் தனத்தை தமிழர் அரசியலுக்குள் புகுத்த முயல்கிறார். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்உ இவர் கூறும் வார்த்தையே கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளே அனுமதிக்காது அவர்களை திருப்திப்படுத்த கூறப்பட்ட வார்ததை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது

நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு.

ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார்

குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது

நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை .

விருத்தி செய்யப்பட்டு உள்ளது

எனக்கும் விளங்கவில்லை முஸ்லிம் கிணத்துக்குள் பன்றி கறியை எங்கு போட்டார்கள் யாழ்ப்பான வைப மாலை யில் எங்கு எத்தனையாம் பக்கத்துள் எழுத பட்டுள்ளது ?

4 minutes ago, பெருமாள் said:

எனக்கும் விளங்கவில்லை முஸ்லிம் கிணத்துக்குள் பன்றி கறியை எங்கு போட்டார்கள் யாழ்ப்பான வைப மாலை யில் எங்கு எத்தனையாம் பக்கத்துள் எழுத பட்டுள்ளது ?

91 , 92 ஆம் பக்கங்களில் உள்ளதாக வாலி குறிப்பிட்டதன் பின் வாசித்து பார்த்தேன். நல்லூரில் இருந்து வெளியேறிய சோனகர்களே நாவாந்துறையில் குடியேறினார்கள் என உள்ளது.

இந் நூலின் இணைப்பு ஏற்கனவே இத் திரியில் தந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

முஸ்லிம் கிணத்துக்குள் பன்றி கறியை எங்கு போட்டார்கள் யாழ்ப்பான வைப மாலை யில் எங்கு எத்தனையாம் பக்கத்துள் எழுத பட்டுள்ளது ?

குறை நினைக்க வேண்டாம் அந்த பகுதி எத்தனையாம் பக்கத்துள் என்று சொன்னால் தெரிந்தால் சொல்லி உதவி பண்ணுங்க நானும் தேடி பார்க்கிறேன் சிலவேளை வேலை பளு காரணமாக என் கண்ணில் படாமல் போயிட்டோ என்று நினைக்கிறேன் .

இப்படி எழுதுவதால் வேலன் சாமிக்கு சப்போர்ட் பண்ணுகிறான் என்று பெருமாளை ஒதுக்க வேணாம் வேலன் சாமி என்பதே டுபாகூர் சாமி அந்த பெயரே நல்லூர் முருகன் தனது கனவில் நல்லூர் முருகன் சொல்லிய பெயர் அது என்று சொல்லி பெயர் மாறியவர் .

அவர் ஒரு மாமிச பட்சணி

  • கருத்துக்கள உறவுகள்

அட யாழ்ப்பாண சங்கிகளே, நல்லூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவசரத்துக்கு போக ஒரு கழிப்பிடம் இல்லை, முதலில் அதனை அமையுங்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது கோவில் அருகில் இரண்டு கழிப்பிடங்கள் இருந்தன, ஒன்றை இடித்து கம்பன் கழகம் கட்டினார்கள், மற்றதனை கோவில் வீதியை பெருப்பிக்க அகற்றிவிடடார்கள் ( கோவில் வீதியும், பருத்தித்துறை வீதியும் சந்திக்கும் இடத்தில்).

நானும் பிறந்து, தவண்டு, வளர்த்து எல்லாம் நல்லூர் தான் (முத்திரைச்சந்தியடி), அந்தக்காலத்தில் நல்லுரை சுற்றிவர பல அசைவ உணவகங்கள் இருந்தன, இந்த உணவகத்துக்கு சற்று தொலைவில் கோழிக் கடை ஒன்று அந்தக்காலத்தில் இருந்து உள்ளது (முருகேசர் ஒழுங்கை), எமக்கு விருப்பமான கோழியைக் காட்டினாள் உடனே உரித்து தருவார்கள். இந்த வேலன் சாமியார் என்பவர் பிஜேபின் ஸ்ரீலங்காவின் ஒரு ஏஜென்ட் ஆகும், அவரைப்பற்றி தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

நல்லூர் கோவில் பற்றிய வரலாற்றுக் குறிப்பொன்றை கீழுள்ள காணொளியில் காணலாம்.

தற்போதைய தகவலின் படி, சைவ உணவு மாத்திரம் எனறு அறிவித்தலை தொங்க விட்டு, ஜோராக கல்லா கட்டுகிறார்கள், செலவில்லாத மார்க்கெட்டிங்கை சங்கிகள் அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

499673404_10171121056245368_659993684940

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

91 , 92 ஆம் பக்கங்களில் உள்ளதாக வாலி குறிப்பிட்டதன் பின் வாசித்து பார்த்தேன். நல்லூரில் இருந்து வெளியேறிய சோனகர்களே நாவாந்துறையில் குடியேறினார்கள் என உள்ளது.

இந் நூலின் இணைப்பு ஏற்கனவே இத் திரியில் தந்துள்ளேன்.

ஆனால் பன்றி கறி கிணற்றில் போட்ட கதை அங்கு இல்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் ஆலய வலயங்களுக்குள் வாழ்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை என்றால், அவர் யாருக்கு, எப்படி அங்கு வியாபாரம் நடத்த முடியும்? எல்லா ஊரிலும் பல பிரபலமான சைவ, அசைவ உணவகங்கள் வந்துள்ளன. ஊர்விட்டு ஊர்வந்து யாரும் அசைவம் சாப்பிட வேண்டிய தேவையில்லை என நினைக்கிறன். ஒருவேளை தங்கள் இரகசிய உணவுமுறை, இந்தக்கடையால் வெளியே வந்துவிடுமென அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை. கீழ் சாதிக்காரர் தேர் இழுக்கக்கூடாது, ஆனால் பல உயிர்களை காவு கொண்ட ஆமிக்காரர், இயந்திரங்கள் தேர் இழுக்கலாம் என்னும் வாதம் போன்றது. இவர்கள் தங்கள் சண்டித்தனத்தை தையிட்டியில் காட்டி விகாரையை அகற்றியிருந்தால் பாராட்டியிருப்பேன். எல்லாம் பெலயீனர்களிடந்தான் தமது சண்டித்தனத்தை காட்டுவார்கள். சரியான அணுகுமுறையை கையாண்டு பிரச்சனையை சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் தேவையில்லாத பிரபல்யம்  அடையப்போய் தங்கள் சண்டித்தனத்தை பிரபல்யப்படுத்தி பகைமையை வளர்த்திருக்கிறார்கள். எனக்கு அசைவம் பிடிக்காது, அசைவரையும் பிடிக்காது என்று அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது, அச்சுறுத்துவது மனித நேயமுள்ள செயலல்ல. அதை மதங்கள் போதிப்பதுமில்லை. எல்லோரையும் மதிக்கும் பண்பு வேண்டும். இந்த பின்போக்கு தனமும் பாராளுமன்றத்தில் ஒலிக்கலாம். நாங்கள் ஒரு பகுதியினரை எமது நலன்களுக்காக அடக்கலாம், வெறுக்கலாம், விரட்டலாம். ஆனால் நமக்கு யாரும் அதை செய்யக்கூடாது. இதுதான் எமது வாதம், அப்பப்போ வெளிவருகிறது. பொங்கல் முடிந்தவுடன் மீன்கடைக்கு போவோரையும் கண்டிருக்கிறேன், கோயில் கொடியேறி விட்டது, வீட்டில் மாமிசம் சமைக்கஊடாது என வீட்டுக்கோழியை பிடித்து அடுத்த வீட்டில் சமைத்து சாப்பிடவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த வீடுகள் கோயிலின் பக்கத்திலேயே இருக்கின்றன. அது அவரவர் உணவுப்பழக்கம், சுதந்திரம்.  அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. நாங்கள் அசைவம் சாப்பிடுகிறோம், நீங்களும் அசைவம் சாப்பிடுவதென்றால் எங்கள் வலயத்தில் இருக்கலாமென யாரும் கட்டுப்பாடு போடுவதுமில்லை, அவர்களை விலக்கி வைப்பதுமில்லை. அடுத்தவரை மதித்து வாழ்வதே மதம். சாப்பாட்டில், சாதியிலில்லை. நாங்கள் வெளிநாடுகளில் அசைவம்  சாப்பிடுபவர்களின் பக்கத்தில், வீடு வாங்குவோம், கோயில் கட்டுவோம். ஆனால் ஊரில் உள்ளவர்கள் சைவ சமய சட்ட திட்டப்படி வாழ வேண்டும். நமது வீடுகளை விற்கும்போது, யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு விற்போம், அங்கு சூழலில் இருப்பவர்களின் மனநிலையை கணக்கில் எடுக்க மாட்டோம், இந்த சாத்திரங்கள், வாதங்களை கையிலெடுக்க மாட்டோம். இதுதான் எமது நியதி.    

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

தீவார் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு நல்லூரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை என்ற பொது எனக்கும் மதியத்தில் இருந்து ஒரு கொந்தளிப்பு என்னுள்ளே ஏற்பட்டது தான் .

பின்னர் யோசித்தால் இலங்கையே ஒரு தீவு அதற்குள்ளும் தீவாரா

ஏன்று நட்பு ரீதியாக எதிர்க்க கருத்தை வைக்கவில்லை.

ஆனாலும் தீவானாக நாங்கள் .....

வேண்டாம் ........நட்பு

சேர்ந்தே பயணிப்போம்

மன்னிக்க வேண்டும்.

நீங்களும் சசி வர்ணம் கிளப்பிய அவதூறு புயலில் சிக்கி கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

நான் எங்கும் “தீவார்” என குறிப்பிடவில்லை. தீவு பகுதி மக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன்.

மற்றும் முன்பே ஒரு முறை யாழில் சொன்னது போல் என் தாய் வழி பாட்டனார் பல தலைமுறைக்கு முன் நெடுந்தீவு, அதேபோல் என் அம்மம்மாவின் அம்மா, பிறந்தது நாரந்தனை.

ஆகவே நான் தீவார் என சொல்லவில்லை, அப்படி சொன்னால் அதை என்னை நானே சொல்வது போல் ஆகும்.

ஆனால் நான் சொன்ன கருத்தில் - நல்லூரில் இப்போ இருக்கும் பலர் கடந்த 50 வருடத்துள் தீவுபகுதியில் இருந்து வந்து குடியேறியோர் எனவே அவர்களுக்கு ஊரின் வரலாறு தெரியாது இருக்ககூடும் என்பதில் மாற்றம் இல்லை. அது ஒரு பாகுபாடான கருத்தும் இல்லை.

5 hours ago, விசுகு said:

கண்டு கொள்ளாதீர்கள். வயித்தெரிச்சலும் பிரதேசவாதமும் தமிழரின் பிரிக்கமுடியாத சொத்துக்கள்....

ஆனால் இவற்றை இந்த நடுநிலை ..,...... கள் கண்டுக்க மாட்டார்கள்.

அதேபோலத்தான் ஒருவர் சொல்லாததை சொன்னதாக பாசாங்கு செய்யும் இந்த போலியான நானும் பாதிக்கப்பட்டென் என்ற நடிப்பும், தமிழரின் சொத்து என்பதற்கு நீங்கள் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் பிரதேத்தில் அசைவ உணவகம் அமைத்தால் அது நல்லாய் ஓடும் என யாரோ கணித்தமையால் வந்த வினைதானோ இது?

பெயர் பலகையை தூக்கியாச்சாம். ஏற்கனவே சீல் வைத்தாயிற்று போல் உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த தனி நபருக்குமான கருத்து அல்ல.

உண்மையிலே உங்களை எல்லாம் பார்க்க பரிதாமாக இருக்கிறது.

சுமந்திரன் பார் வைக்கிறார், பாறிஸ்டா வைக்கிறார் என பொய்களை காவி திரிகிறீர்கள், அவர் அரசியல்வாதி அதையாவது அரசியல் எதிர்ப்பு என விளங்கி கொள்ளலாம்.

சசி வர்ணம் கருத்து வறுமை ஏற்பட்டதும், கருத்தாண்மை அற்ற தனமாக நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்ல, அந்த பச்சை பொய்யை காவி திரிவதும் மட்டும் இல்லாமல், என் மீது பிரதேசவாத முத்திரை குத்தி அதனால் மனம் புண்பட்டதாக வேறு சொல்கிறீர்களே?

வெட்கமாக இல்லையா?

2 hours ago, zuma said:

நானும் பிறந்து, தவண்டு, வளர்த்து எல்லாம் நல்லூர் தான் (முத்திரைச்சந்தியடி), அந்தக்காலத்தில் நல்லுரை சுற்றிவர பல அசைவ உணவகங்கள் இருந்தன, இந்த உணவகத்துக்கு சற்று தொலைவில் கோழிக் கடை ஒன்று அந்தக்காலத்தில் இருந்து உள்ளது (முருகேசர் ஒழுங்கை), எமக்கு விருப்பமான கோழியைக் காட்டினாள் உடனே உரித்து தருவார்கள். இந்த வேலன் சாமியார் என்பவர் பிஜேபின் ஸ்ரீலங்காவின் ஒரு ஏஜென்ட் ஆகும், அவரைப்பற்றி தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

உண்மைக்கு நன்றி.

அபாய அறிவிப்பு

நல்லூரில் எனது அக்கா வீட்டில் மச்சம் சமைக்க மாட்டார்கள், அல்லது எனது அண்ணா வீட்டில் மாதம் ஒரு முறைதான் மச்சம் சமைப்பார்கள் ரீதியில் எழுதும் நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

தற்போதைய தகவலின் படி, சைவ உணவு மாத்திரம் எனறு அறிவித்தலை தொங்க விட்டு, ஜோராக கல்லா கட்டுகிறார்கள், செலவில்லாத மார்க்கெட்டிங்கை சங்கிகள் அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

அதே…

யாருக்கும் யாழ்பாணத்தில் மார்கெட்டின் பக்கேஜ் தேவைபட்டால் வேலனை அணுகவும்🤣.

வேலனுக்கு கொஞ்சம் செலவாகும்.

யாழ்கள சங்கிகள் சம்பளம் இல்லாமலே வேலை பார்ப்பார்கள் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் விளம்பர உதவி தேவையா?

உடனே அணுகுங்கள்!

வேலன் & மொக்கராசுஸ்

கிளைகள்

நல்லூர்:பெர்லின்

பாரிஸ்:டொராண்டோ

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மதத்தவராயினும் மதவாதிகளின் எண்ணமும் குணமும் ஒன்றாகவே இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே மனமுண்டு, அது எதை பற்றி வேண்டுமானாலும் புண்படலாம், அதை புண்படாமல் பாத்துகொள்ள வேண்டியது மற்ற அனைவரது கடமையாகும்.

நாளை அந்த முருகனே நேரில் வந்து(அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது வராதவர் இதற்கெல்லாம் வரமாட்டார், ஒருவேளை வந்து) நானே முல்லை நிலத்தில் குடிகொண்டவன், மாமிசமே எனது உணவு எண்டு சொன்னாலும், முருகன் என்னை புண்படுத்திட்டார் என ஒதுக்கிவிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் கோயில் வலயத்திற்குள்  வசிப்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை. அப்போ அவர் அங்கே தனது நிறுவனத்தை நடத்துவதால் அவருக்கு என்ன பயன்? அங்கே கொள்வனவு செய்ய வருவோர் யார்? அவர்களுக்கு அந்த ஊரின் கோவிலின் புனிதம் தெரியாததா? ஒன்று புரிகிறது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. அங்கே அசைவம் விற்பனை செய்யப்படுகிறது, அல்லது அங்குள்ளவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்பது. ஒரு தொழில் ஆரம்பிப்பவர், அந்த சூழ்நிலை அறியாமல் அங்குள்ளவரின் அறிமுகமேதுமில்லாமல் விற்பனையை ஆரம்பித்து இருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் இதற்கிடையில் தரகராக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஆனால் பன்றி கறி கிணற்றில் போட்ட கதை அங்கு இல்லையே ?

அது ஒன்றுமில்லை, ஒரு சில மாதங்களுக்கு முன், ஒரு இஸ்லாமியர் நல்லூருக்கு சொந்தம் கொண்டாடி, இப்படி ஒரு கதை சொன்னார். தாயின் கற்பத்தில் இருந்த குழந்தையை புலிகள், தாயின் வயிற்றை கீறி வெளியே எடுத்தார்கள் என்றொரு உண்மைக்கு புறம்பான கதையை பரப்பி அப்பப்போ முபாறக்அப்துல் மஜீத் என்பவர் தமிழர்மேல் தனக்குள்ள வெறுப்பை கக்குவார். அதை சிலர் உண்மையென நம்பி அனுதாபம் தெரிவிப்பது. அதுவே அவர்களுக்கும் சாதகமாகிறது, தாம் சொன்ன பொய் உண்மையென சாதிப்பார்கள் எதிரிகள். உங்களைப்போல் யார் ஆதாரம் கேட்டு தெளிகிறார்கள்  நம்புவதற்கு முன்?  

  • கருத்துக்கள உறவுகள்

@வாலி வாலி கூறிய விடயங்கள் அடங்கிய யாழ்பாண வைபவமாலை நூலின் பக்கங்களை இங்கு தந்துள்ளேன். பன்றியிறைச்சியை போட்ட கதை மட்டுமல்ல புத்த கோவில்களை இடித்து சிங்களவரை துரத்திய வரலாறும் அங்கு உள்ளது. மதம் மாறிய ஒரே காரணத்துக்காக மன்னாரில் பெண்கள் குழந்தைகள் என்று பாராது 600 க்கு மேற்பட்ட சொந்த மக்களையே சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது.

இதை யெல்லாம் பார்ககும் போது, “ செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா” எனப் பாடத் தோன்றுகிறது. 😂😂

large.IMG_0285.jpeglarge.IMG_0283.jpeglarge.IMG_0284.jpeg

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நல்லூரில் கோயில் வலயத்திற்குள்  வசிப்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை. அப்போ அவர் அங்கே தனது நிறுவனத்தை நடத்துவதால் அவருக்கு என்ன பயன்? அங்கே கொள்வனவு செய்ய வருவோர் யார்? அவர்களுக்கு அந்த ஊரின் கோவிலின் புனிதம் தெரியாததா? ஒன்று புரிகிறது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. அங்கே அசைவம் விற்பனை செய்யப்படுகிறது, அல்லது அங்குள்ளவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்பது. ஒரு தொழில் ஆரம்பிப்பவர், அந்த சூழ்நிலை அறியாமல் அங்குள்ளவரின் அறிமுகமேதுமில்லாமல் விற்பனையை ஆரம்பித்து இருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் இதற்கிடையில் தரகராக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. 

குறித்த கடை நல்லூர் குறுக்கு தெரு பருத்திதுறை வீதி சந்தியில், கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டருக்கும் அப்பால் உள்ளது.

இதை மறைத்து கோவிலில் திருவிழா நேரம் வளைவு கட்டும் இடத்தில் இருப்பது போல் பொய்யை பரப்பினார் சசி வர்ணம்.

அதை Google street view ஆதாத்துடன் கேள்வி கேட்டதும் டென்சன் ஆகி விட்டார்.

ஆரம்பத்தில் இதை சுமந்திரன் ஆளின் கடை என்றார்கள்.

பின்னர் சிங்களவர் கடை என்றார்கள்.

முதலில் மொக்கன் கடை போல் மாட்டு எலும்பை வீதியில் போடுவார்கள் என்றார்கள்.

இல்லை இது ஒரு கோப்பி கடை என மெனுவை எடுத்து போட்டதும் அந்த கதை அப்படியே அமுங்கி விட்டது.

இது யாரோ வியாபார போட்டியில் வேலன் போன்ற திருட்டு சாமியாருக்கு காசை கொடுத்து தூண்டிவிட்ட விடயம் என்ற சந்தேகம் எனக்கு வலுக்கிறது.

வழமை போல சுமந்திரன், சைவம் என்ற உசுப்பேத்தும் காரணிகளை இணைத்து விட மொக்கராசுகளும் சோல்டர்பேக்கை கொழுவிகொண்டு விமானத்தில் இருந்து குதித்து விட்டனர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும்.

நீங்களும் சசி வர்ணம் கிளப்பிய அவதூறு புயலில் சிக்கி கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

நான் எங்கும் “தீவார்” என குறிப்பிடவில்லை. தீவு பகுதி மக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன்.

மற்றும் முன்பே ஒரு முறை யாழில் சொன்னது போல் என் தாய் வழி பாட்டனார் பல தலைமுறைக்கு முன் நெடுந்தீவு, அதேபோல் என் அம்மம்மாவின் அம்மா, பிறந்தது நாரந்தனை.

ஆகவே நான் தீவார் என சொல்லவில்லை, அப்படி சொன்னால் அதை என்னை நானே சொல்வது போல் ஆகும்.

ஆனால் நான் சொன்ன கருத்தில் - நல்லூரில் இப்போ இருக்கும் பலர் கடந்த 50 வருடத்துள் தீவுபகுதியில் இருந்து வந்து குடியேறியோர் எனவே அவர்களுக்கு ஊரின் வரலாறு தெரியாது இருக்ககூடும் என்பதில் மாற்றம் இல்லை. அது ஒரு பாகுபாடான கருத்தும் இல்லை.

அதேபோலத்தான் ஒருவர் சொல்லாததை சொன்னதாக பாசாங்கு செய்யும் இந்த போலியான நானும் பாதிக்கப்பட்டென் என்ற நடிப்பும், தமிழரின் சொத்து என்பதற்கு நீங்கள் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறீர்கள்.

உண்மை சுடும். வந்தார் வரத்தார் என்பதன் வலியை புரியாதவர்கள் அதிலும் நானும் வந்தார் வரத்தார் தான் என்ற அப்பாவித்தனத்துடன்.....????? நீங்களே அதற்கு ராஜாவாக இருக்க பொருத்தமானவர்.

அப்புறம் ஆதாரம்: யாழ்ப்பாணத்தில் தீவக மக்கள் தான் அதிகம் வாழ்கின்றனர் என்பதற்கு ஆதாரம் வைத்து கொண்டா எழுதுகிறீர்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.