Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம்,@RKFI

28 மே 2025, 09:29 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல் ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இந்நிலையில், இன்று (மே 28) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல் ஹாசன்) தெரியாது." என்று தெரிவித்துள்ளார்.

கமல் பேசியது என்ன?

கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம்,@RKFI

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றிருந்தார்.

மேடையில் பேசிய கமல்ஹாசன், "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார்.

கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?

தக்லைஃப், தமிழ், கன்னடா

பட மூலாதாரம்,KAMALHAASAN/X

கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த தக் லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த விஷயத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன்." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பல வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழியின் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் குறிப்பாக அர்த்தப்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு அடிப்படையில் தனி சிறப்பு கொண்டது. இங்கு ஒரு மேனன், ஒரு ரெட்டி, மாண்டியாவிலிருந்து வந்த ஒரு கன்னட ஐயங்கார் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோது, கர்நாடக மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். எனவே தக் லைஃப் படத்தையும், எனக்கு எதிரான மொழி பிரச்னையையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட. இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்." என கூறினார்.

மேலும், "நான் அளிப்பது விளக்கம், பதில் அல்ல. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் கூறினார்.

கர்நாடக பாஜக என்ன கூறுகிறது?

கமல்ஹாசன் சர்ச்சைப் பேச்சு

பட மூலாதாரம்,VIJAYENDRA YEDIYURAPPA

படக்குறிப்பு, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா

'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது.

மேலும், "எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுத்து கூற கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது.

கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ததில்லை என்பதை ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசன் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என எச்சரிக்கை

தக் லைஃப், கன்னடா, கமல்ஹாசன், கன்னட ரக்ஷன வேதிகே

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி (கோப்புப் படம்)

கன்னட அமைப்புகள் சிலவும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கமலை எச்சரித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?

இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். நீங்கள் தப்பிவிட்டீர்கள். கர்நாடகாவுக்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

செவ்வாய்கிழமை பெங்களூருவில் கமல் ஹாசன் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அந்த இடத்தில் கன்னட அமைப்பினர் சிலர் கூடி கன்னடத்தில் கோஷங்கள் எழுப்பினர். தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இவை மட்டுமல்லாமல் கன்னட அமைப்பினர் பலர் சமூக ஊடகங்களில் கமல் ஹாசனுக்கு கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyr17pd5rpo

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென்ன ஆண்டவா நீ பேசுவ, ராஜ்ஜசபா வேற போக போறே…

ஆனால் சிம்பு பட கலக்சன்ல மண்ணவாரி வுட்டியே ஆண்டவா🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மொழிக் குடும்பம், தெலுங்கோடு தொடர்பானது என்று இந்தக் கட்டுரையில் இருக்கிறது. இந்தக் கட்டுரையே "கன்னடம் 2500 ஆண்டுகள் பழமையானது" என்ற போலித் தகவலைச் சரிபார்க்கும் முயற்சியாக வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது அதே "2500" இனை கன்னடத்தின் வயதாக கன்னடத் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்😂!

Bangalore Mirror
No image preview

Fake News Buster: Kannada is world’s oldest living language

This piece of news is doing the round of the internet naming Kannada as the oldest living language in the world. The news comes with a picture of a certificate that says it has been ratified by the...

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்துக்கு இலவச விளம்பரம் காலா காலமாய் மணி ,கமல் கூட்டம் செய்யும் இலவச விளம்பர அந்தர் பல்டி .

அப்ப Suhasini Mani Ratnamஎன்ன வெள்ளி பார்த்து கொண்டு இருக்கறாங்க போல் உள்ளது அவங்க பூர்வீகம் கர்நாடக தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கட்டும். உண்மை வரலாறு வெளி வரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

அவங்க பூர்வீகம் கர்நாடக தானே ?

தமிழ் நாடு இல்லையா?? அப்படியென்றால் சிந்தப்பா கமலும். கர்நாடகமா?? இல்லை தமிழ்நாடு ??

44 minutes ago, nunavilan said:

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது

இவர் மன்னிப்பு கேட்க முடியாது என்பதற்கு காரணம் அன்பு ....அப்படியென்றால் தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்தது உண்மை என்பது காரணம் இல்லையா ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தமிழ் நாடு இல்லையா?? அப்படியென்றால் சிந்தப்பா கமலும். கர்நாடகமா?? இல்லை தமிழ்நாடு ??

அவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஒரு தமிழ் ஐயங்கார் (பிராமண) குடும்பம், எனவே அவரது பூர்வீக மொழியும், பண்பாடும் தமிழ் மையமாக இருக்கிறது.

ஐயங்கார் என்பது வைணவ சமயத்தை குறிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்கும், கேட்கலாம். அறியாமை அல்லது ஆணவம் தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது.

வழமை போலவே இரண்டு வரிகளை அறிவுஜீவித்தனமாக சொல்லி விட்டு, மூன்றாவது வரியிலிருந்து பொருள் இல்லாமல் கதைக்க ஆரம்பிப்பது கமலுக்கு ஒரு பழக்கம் ஆகிவிட்டது.

'எனக்கு நான் சொல்வது சரி. உங்களுக்கு நீங்கள் சொல்வது சரி. வேறொருவருக்கு இரண்டுமே சரி. இன்னொருவருக்கு இரண்டுமே பிழை............................'. இது என்ன பேச்சு................🫣.

பொதுவெளியில் பொறுப்புடன் கருத்துகளை சொல்லும் கடமையும், பொறுப்பும் புகழுடன் சேர்ந்து வருவது. சொந்த வீட்டினுள் ஒரு அறைக்குள் இருந்து எதையாவது சொல்லிக் கொள்ளலாம். மேடையில் ஏறினால் விவேகத்துடன் சமயோசிதமும் தேவை.

தமிழர்கள் தவிர்ந்த எந்த தென்நாட்டவர்கள் தமிழ் மொழியை திராவிடத்தின் முதல் மொழி என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றார்கள்................. எவருமேயில்லை. நாங்கள் தான் திராவிடம் என்றும், எங்களின் மொழிக் குடும்பமே சமஸ்கிருதத்திலிருந்து வேறானது என்றும் சொல்லுகின்றோம். மற்றைய தென்நாட்டவர்கள் எப்படி ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்று சமஸ்கிருதத்தை தங்கள் மொழிகளில் மிக அதிகமாகவே கலந்துவிட்டார்கள். மலையாள மக்களே தாங்கள் சமஸ்கிருத வழியில் வந்தவர்கள் என்று தான் சொல்லுகின்றார்கள்.

இப்படி தமிழில் இருந்து தான் உங்களின் மொழிகள் வந்தன என்று மற்றவர்களுக்கு சொல்வது புதிதாக எதையும் நிரூபிக்கப் போவதில்லை. ஏற்கனவே மொழிவாரியான இனங்களுக்கிடையே இருக்கும் பிரிவினையை இது இன்னும் கூட்டும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா என்று எந்த மாநிலமும் இந்தக் கோட்பாட்டை என்றும் ஏற்பதில்லை. இவ்வகையான பேச்சுகள் அவர்களைத் தூண்டுகின்றன. சாதாரணமாக ஒரு வேலைத்தளத்தில் இப்படியான பேச்சுகள் வந்தாலே அங்கே பிரிவு ஆரம்பித்துவிடுகின்றது.

கமல் தமிழின் தொன்மையை ஆதாரத்துடன் நிலைநாட்ட விரும்பினால், கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏன் மாற்றச் சொன்னது என்று டெல்லியில் போய் போராடவேண்டும்.

இப்பொழுது ரஜனியிடம் இதைப் பற்றிக் கேட்கப் போகின்றார்கள். அவர் அம்பானி வீட்டுக்கு போய் வந்து விட்டே கைலாசம், வைகுண்டம் என்றவர். தமிழ் கைலாசம், கன்னடம் வைகுண்டம் என்று அவர் அவருடைய விளக்கத்தை இனிச் சொல்லுவார். 'கமல் சார் எவ்வளவு பெரிய அறிவாளி.................... நான் என்னத்தை சொல்லுறது................' என்று நழுவுவதற்கும் சாத்தியம் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

அவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஒரு தமிழ் ஐயங்கார் (பிராமண) குடும்பம், எனவே அவரது பூர்வீக மொழியும், பண்பாடும் தமிழ் மையமாக இருக்கிறது.

ஐயங்கார் என்பது வைணவ சமயத்தை குறிக்கும் .

ஆமாம் சரி தெரியும் எனக்கு தெரியாதது சுஹாசினி கன்னடம் என்பது கமலின் தமையின். மகள் எப்படி கன்னடமாக. முடியும்??? அல்லது பின்புலமுடையவர் ஆகலாம்???

32 minutes ago, ரசோதரன் said:

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்கும், கேட்கலாம். அறியாமை அல்லது ஆணவம் தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது.

மன்னிப்பு கேட்டால் தமிழில் இருந்து கன்னடன் வரவில்லை என்று சொல்வதாகும். தமிழ்நாட்டில் சும்மா விடுவார்களோ??? சீமானின். படை பட்டி தொட்டி. எல்லாம் தாக்க தொடங்கி விடும்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

மன்னிப்பு கேட்டால் தமிழில் இருந்து கன்னடன் வரவில்லை என்று சொல்வதாகும். தமிழ்நாட்டில் சும்மா விடுவார்களோ??? சீமானின். படை பட்டி தொட்டி. எல்லாம் தாக்க தொடங்கி விடும்

'என்னுடைய பேச்சால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். நான் அங்கே மேடையில் பேசியது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அதை நான் அங்கே அப்படி சொல்லியிருக்கக்கூடாது.......................'

இப்படி வழவழா கொழகொழா என்று அடிக்கடி மன்னிப்பு கேட்பது அங்கு மிகச் சாதாரணம்.

மேலும் சீமான் இப்பொழுது கொஞ்சம் தணிந்து இருக்கின்றார். நாலு ஊர்களில் நாலு வழக்குகள் என்று அவரை கொஞ்ச நாளாக பாடாய்ப்படுத்திவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கேட்காத கமலுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

'என்னுடைய பேச்சால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். நான் அங்கே மேடையில் பேசியது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அதை நான் அங்கே அப்படி சொல்லியிருக்கக்கூடாது.......................'

இப்படி வழவழா கொழகொழா என்று அடிக்கடி மன்னிப்பு கேட்பது அங்கு மிகச் சாதாரணம்.

மேலும் சீமான் இப்பொழுது கொஞ்சம் தணிந்து இருக்கின்றார். நாலு ஊர்களில் நாலு வழக்குகள் என்று அவரை கொஞ்ச நாளாக பாடாய்ப்படுத்திவிட்டார்கள்.

அப்படி இல்லையே?

அது யாராலும் மறுக்க முடியாத கருத்து, உண்மையான கருத்து அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன் கூறியது யாரும் மறுக்க முடியாத உண்மை: சீமான்

விருதுநகர்: “கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகரில் இன்று (மே 29) நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? தமிழக முதல்வராக இருந்துகொண்டு, கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், கர்நாடகாவுக்கு எதிராக எப்படி கருத்து கூறுவார்” என்று கூறினார்.

முன்னதாக, இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், “கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையடுத்து, கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.

கமல்ஹாசன் கூறியது யாரும் மறுக்க முடியாத உண்மை: சீமான் | What Kamal Haasan said is a truth that no one can deny: Seeman - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

அப்படி இல்லையே?

அது யாராலும் மறுக்க முடியாத கருத்து, உண்மையான கருத்து அல்லவா?

அங்கு கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருக்கும் சித்தராமையாவிலிருந்து எடியூரப்பா வரை கமலின் கருத்தை மறுத்துவிட்டார்கள். கமலுக்கு வரலாறே தெரியாது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே. ஒரு தரப்பினர் உண்மை, மறுக்க முடியாத வரலாறு என்று ஒன்றை வாதாடுவதும், இன்னொரு பக்கம் அதே விடயத்தை அது அப்படியில்லை என்று வாதாடுவதும் ஒன்றும் புதிது அல்லவே.

மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன கமலே, 'நான் சொல்வது எனக்கு சரி. நீங்கள் சொல்வது உங்களுக்கு சரி...........' என்று தானே சொல்லியிருக்கின்றார். நான் சொல்வது எனக்கு சரி என்பதன் பொருள் இது அவருடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்ற பொருளில் தானே வருகின்றது.

தொடர்ந்து பேசிய கமல் இந்த மொழி ஆராய்ச்சியை பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும், அவர் உட்பட, தகுதிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றார். மன்னிப்பு என்ற வார்த்தை இல்லாத ஒரு மன்னிப்பை கேட்டிருக்கின்றார் கமல். 'அன்பு.............' என்று வேறு ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கின்றார். சிவராஜண்ணா மீதான அன்பை வெளிப்படுத்துவதன் கமலின் நோக்கம் என்றால், அப்படித்தான் கமல் இப்போது சொல்லுகின்றார், தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும்.

வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது.

தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது.

அரசியல் நலன்கள் நோக்கி சிலர் நிராகரிக்கின்றார்கள். சுயமரியாதை வேண்டி சிலர் நிராகரிக்கின்றார்ர்கள்.

இந்த மொழிகள் ஒரே குடும்பம் என்று சொன்னால் எவரும் நிராகரித்து எதிர்க்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பட ரிலீசுக்கு முன் இப்படித்தான் சிவகர்த்திகேயனும் பொராட்ட சூரியும் போல் அடிபடுவார்கள் இலவச விளம்பரம் தேடி படம் ரிலிஸ் ஆகி விட்டதும் கமல் இன்னுமொரு குழப்பமான கருத்தை வெளியிடுவார் அதற்கு என்ன அர்த்தம் என்று மீடியாவில் இருந்து பட்டி தொட்டி உள்ள பாமரன் தொடக்கம் படித்தவன் வரை தலையை பிய்த்து கொண்டு திரிவார்கள் வழக்கம் போல் சில நாட்கள் சென்ற பின் கமலே விளக்கம் கொடுப்பார் அதாவது கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்பது போலும் கேட்காதது போலவும் அவரின் விளக்கம் இருக்கும் பிறகென்ன கன்னட மீடியாக்கள் கமல் மன்னிப்பு கேட்ட விட்டார் என்று அலறும் அதுக்கு இடையில் நம்ம பக்கம் தமிழ் நாட்டில் மற்றொரு பரபரப்பான செய்தி குஞ்சு பொரித்து பறக்க தொடங்கும் பிறகென்ன மக்கள் அந்த செய்தி யில் இந்த மகா நடிகனின் பொய் பிரட்டு செய்திகளை மறந்து விடுவார்கள் . பக்கத்தில் சொந்த இனம் ஆயிரகணக்கில் கொல்லபட்டு கொண்டு இருக்கும் நேரம் மானடா மயிலாட பார்த்து கவலையை போக்கி கொண்டவர்கள் அல்லவா ............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும்.

வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது.

தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது.

அதாவது பிரச்சினைகள் வேண்டாம் என்பதற்காக உண்மையை, வரலாற்றை புதைக்கலாம்???? அடுத்து தமிழுக்கு கன்னடம் தான் மூலம் என்று வரும். அப்பொழுதும். .. நட்பு முக்கியமல்லோ....

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதாவது பிரச்சினைகள் வேண்டாம் என்பதற்காக உண்மையை, வரலாற்றை புதைக்கலாம்???? அடுத்து தமிழுக்கு கன்னடம் தான் மூலம் என்று வரும். அப்பொழுதும். .. நட்பு முக்கியமல்லோ....

உண்மைகளை, வரலாறுகளை புதைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, விசுகு ஐயா. ஆனால் கமல் போன்றோரின் பேச்சுகளை நம்பி நடவடிக்கைகளில் இறங்குவது மண் குதிர் ஒன்றை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம் மற்றும் குறிப்பாக கமல் சரியான புரிதலோ அல்லது தொடர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக விடயங்களை சொல்லுகின்றார். இவரது பேச்சுக்களால் இதுவரை ஒரு விடயம் கூட சமூகத்தில் மாற்றம் அடையவில்லை என்பது கண்கூடு. ஒரு புள்ளியை மட்டுமே பார்க்காமல், பின்நோக்கி சென்று ஒரு கோடாக பார்த்தால் இவரின் அவசரத்தனங்களை அறிந்து கொள்ளலாம்.

எனது சொந்த அனுபவத்தை, திருச்சியில் என் பெற்றோரின் மரணச் சான்றிதழ்கள் பெற்ற நிகழ்வை, இங்கு களத்திலேயே ஒரு கதையாக எழுதியிருக்கின்றேன். அந்தக் கதையில் கமலின் ஊழல் எதிர்ப்பு கோசமும், நடவடிக்கைகளும் வருகின்றது. அந்தக் கதையின் சாராம்சமே கமலும், இவரைப் போன்றவர்களும் நிஜ உலகிலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கின்றார்கள் என்பதும், இவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமே அற்றது என்பதும்தான்.

வெறும் பரபரப்பு மற்றும் விளம்பரங்களுக்காக தங்களுக்கு தேவையான நேரங்களில், சினிமா வெளியீடு அல்லது தேர்தல் காலங்களில், எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழின் தொன்மை இப்பொழுது இந்திய மத்திய அரசின் தொல்துறைப் பிரிவால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையான பிரச்சனை. இதை கேள்வி கேட்க ஆரம்பித்தது சு. வெங்கடேசன். சில வருடங்களின் முன் மொழிகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக்குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. அப்போதும் இதை தட்டிக் கேட்டவர் வெங்கடேசன் தான். மேடையில் இரண்டு வரிகளை சொல்லி விட்டு, பின்னர் அதையே அன்பு, நட்பு என்று சமாளித்துக் கொண்டு போகும் கமல் போன்றோர் இந்த விடயங்களின் பக்கம் வருவதேயில்லை. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால், ஒன்று அதில் தீவிரமாக இருக்க வேண்டும், இரண்டாவது நல்ல புரிதல் இருக்கவேண்டும்.

தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களோ அல்லது ஐயாயிரம் வருடங்களோ எவ்வளவு பழமையானது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் திரட்டவேண்டும். அதை உலகில் இந்த துறையில் இருப்பவர்களுடன் பகிரவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரிசா பாலு போன்றவர்களின் ஆதாரங்கள் எங்கள் ஊடகங்களை தாண்டி வேறு எங்கேயும் போகாது.

இதை விடுத்து, மலையாளம் தமிழில் இருந்து தான் வந்தது என்று மேடைகளில் சொல்வதால் கிடைக்கும் பயன் தமிழ் - மலையாளிகள் வெறுப்பு மட்டுமே. தமிழ் மூவாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கின்றது (எழுத்துரு மாறியிருக்கின்றது போல.......), ஆனால் மலையாளம் 800 வருடங்களாக மட்டுமே இங்கிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எங்களால் வெளியிட முடியும் என்றால், மேடைகளில் இப்படியான பேச்சுக்களை பேசும் தேவையே இல்லை.

பல வருடங்களின் முன் தமிழ்மொழி ஒரு ஆபிரிக்க மொழியிலிருந்து தான் வந்தது என்ற ஒரு கட்டுரையை வாசித்திருக்கின்றேன். ஆபிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதப்பட்டிருந்தது. சிரித்து விட்டு அதை விட்டுவிட்டேன். இதையே பல ஆபிரிக்கர்களும் மீண்டும் மீண்டும் வந்து சொன்னால், சிரிப்பு வருவதற்கு பதிலாக எரிச்சல் வர ஆரம்பித்து, இறுதியில் வெறுப்பு தான் வரும். கிட்டத்தட்ட இதுவே தான் தென்னிந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி பற்றி வேறு எந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் எந்த வித ஒப்பீடும் செய்யாமலேயே பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்….

தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்….

இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்….

காலம் விசித்திரமானது.


இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான்.

உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும்.

எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது.

நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள்.

மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள்.

சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣.

கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார்.

அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣.

கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர்.

12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣.

பிகு

முன்பே எழுதியதுதான்.

தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின்,

திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும்.

இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம்.

இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள்.

அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை.

இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம்.

என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்)

  1. X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்).

  2. இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தொடரவேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

[ மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள்.
சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣.

அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣
கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர் .]

நூறு வீதமும் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்….

தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்….

இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்….

காலம் விசித்திரமானது.


இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான்.

உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும்.

எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது.

நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள்.

மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள்.

சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣.

கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார்.

அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣.

கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர்.

12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣.

பிகு

முன்பே எழுதியதுதான்.

தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின்,

திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும்.

இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம்.

இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள்.

அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை.

இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம்.

என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்)

  1. X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்).

  2. இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.

மன்னிகவும் proto என்பதை மேலே Porto என தட்டச்சி விட்டேன்🤣. Auto correct போத்துகீசன் போல கிடக்கு🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளுக்கு தமிழ் கதைக்கும் போது நன்றாக புரியும் .. ஆனால் கதைக்கவோ எழுதவோ தெரியாது ..

அதே போல

கன்னடர்களுக்கு தமிழை விட தெலுங்கு கதைக்கும் போது நன்றாக புரியும் ஆனால் கதைக்கவோ எழுதவோ தெரியாது..

டிஸ்கி :

மலையாளம் - நேரடி தாய் மொழி தமிழ்

கன்னடம் - நேரடி தாய் மொழி தெலுங்கு

ஆக தமிழ் கன்னடத்திற்கு பாட்டி மொழி அல்லது கொள்ளு பாட்டி மொழி

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2025 at 02:50, ரசோதரன் said:

கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே.

கந்தரோடையில் அன்று விகாரைகள் இருந்தன, அவை சைவ தமிழர்களால் தழுவப்பட்டது. பின் அதனை கைவிட்டு மீண்டும் தமது பூர்வீக மதத்தை தழுவியதாலேயே சைவ கோவில்கள் விகாரைகளாகி விகாரைகள் மறுபடி கோவில்களாகி இன்று சர்ச்சையாகியுள்ளது. அன்று நம் முன்னோர் சிலர் கிறிஸ்தவத்தை தழுவி, கைவிட்டதுபோல். அதையும் தவிர்த்து சிர்த்தாத்தன் சைவத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்க புறப்பட்டு, அவர் சீடர்களால்  தோற்றுவிக்கப்பட்டது பௌத்தம். அது சிங்கள பௌத்தமல்ல. தமிழ் பௌத்தத்திலிருந்தே சிங்களம் தழுவியது அண்மையில் ஒரு சிங்கள தேரரே கூறியுள்ளார். நிற்க, இந்திய ஜனாதிபதி மோடியே தமிழே தொன்மையான மொழி எனக்கூறி தமிழில் விளித்ததாகசெய்திகள் வந்தது. அப்போ ஏன் இந்த கன்னடர் தமது எதிர்ப்பை காட்டவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்

சம்ஸ்கிருததை எடுத்துவிட்டால் மொழி நிற்றல் வேண்டும், அதுகே உரிய proto மொழி இருந்து இருந்தால்.

மலையாளம் மட்டுமே தனித்து நிற்க கூடியது.

ஏனெனில், அது உண்மையில் மலையாளதமிழ் (எழுத்து மொழி). மலையளம்மா (பேச்சு மொழிக்கு), இப்போதும் புழக்கத்தில் இருப்பது. (இனால் தான் இங்கு மேற்கில் பிறந்த, வளர்ந்த, ஆனால் தமிழ் பேசி, படித்து வளர்ந்த பிள்ளைகளுக்கு கூட பேச்சு மலையாளம் விளங்குவது. இது மேற்கில் இருக்கும் மலையாளிகளுக்கு கூட ஆச்சரியம், அதாய் அறியும் பொது தான் தமது மொழியை வேறு எவரோ (ஆங்கிலேயரும், நம்பூதிரிகளும்) வெட்டி கொத்தி உள்ளார்கள் என்பது உணர்ந்து ... அதன் பின் கதை இல்லை)

மற்ற திராவிட மொழிக நில்லாது, அல்லது தமிழ் பக்கம் சாயும்.

இதுவே மற்ற திராவிட மொழிகளின் பிரச்சனை.

(இதை சொன்னால் அவர்களின் முகம் தொங்கும், ஏனெனில் இதை அவர்களே அன்ஹா இடத்தில செய்து பார்க்கும்படி கேட்கலாம். அது வரை கொக்கரித்தவர்கள் அடங்கிவிடுவார்கள்)

சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்பது அவர்களின் கற்பனை, சமஸ்கிருஹ இலக்கணம் தெரியாது.

அப்படி வந்தது என்றால், சமஸ்கிருதத்தை எடுத்தால், மொழி இருக்க கூடாது, அனால் இந்த மொழிகள் அதன் ஆரம்ப வ்வடிவில் இருக்கும், தமிழ் பக்கத்துக்கு சாய்வுடன்.

ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன?

இது தான் யதார்த்தம், சும்மா மற்றவனினின் மனம் நோகுது என்றுவிட்டு, யதார்த்தத்தைவிட் விட முடியாது, கூடாது.

குறிப்ப:

திராவிட என்பதன் நேரடி கருத்து சமக்கிருதத்தில் - மூன்று பக்கம் நீரால் / கடலால் சூழப்பட்ட.

ஒருபக்கமாக இந்த 'திராவிட' சொல் நேரடி சம்ஸ்கிருதம், மனுஸ்மிருதியில் பாவிக்கப்பட்டு உள்ளது. மனுஸ்மிருதியில் அதன் குறிப்பது நெறிமுறை தவறிய சத்திரியரின் சந்ததிகள்.

(உண்மையில் மனுஸ்மிருதி (ஆங்கிலேயர் மொழி பெயர்த்தது) அதன் உரிய பெயர் இல்லை, மன்னவ தர்மசாத்திரம் என்பதே அதன் அவையடக்கத்தில் சொல்வது.)

மறுபக்கமா Bishop Robert Caldwell அறிமுகப்படுத்தியது. அம்பேத்காரும் தமிழ் என்பது திரிந்தே திராவிட என்று சம்ஸ்கிருதத்தில் வந்ததாக என்பது என்று சொல்லியத.

ஆங்கில மொழியர்ப்பு மனுஸ்மிருதியில் இருந்து:

10.20. Those whom the twice-born beget on wives of equal caste (வர்ணம்), but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas.

10.21. But from a Vratya (of the) Brahmana (வர்ணம்) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha.

10.22. From a Vratya (of the) Kshatriya (வர்ணம்), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida

Edited by Kadancha

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.