Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’

- சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகுத்தறிவை வளர்க்கவும், அடிப்படை அறிவியல் ஊட்டவும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலை தனது கட்டுரைகள், புத்தகங்கள், உரைகள், மீடியாவின் மூலம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அப்படியே வாழ்ந்தார்.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே  புளுகு மூட்டைகள்தான்!” -  ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

‘ஜோதிடம், திருமண ஜாதகப் பொருத்தம் எல்லாம் பொய்’ என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு அடித்து நொறுக்கிய இவருடைய பகுத்தறிவுவாதி முகம், வலிமை வாய்ந்தது. அதனால்தான், இந்தியாவில் வானியற்பியல் மற்றும் அண்டவியல்

(Cosmology) உலகில் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்ற அவர், சமீபத்தில் (மே 20) தனது 87 வயதில் மறைந்தபோது, அறிஞர்கள் வட்டம் தாண்டி, பகுத்தறிவுவாதிகளும் பொதுமக்களும் பகிர்ந்துவருகின்றனர் அவருக்கான புகழஞ்சலியை.

மகாராஷ்டிரா டு கேம்பிரிட்ஜ் பட்டம்!

1938-ம் வருடம் மகாராஷ்டிராவில் பிறந்த நர்லிகர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வானியலாளர் ஃபிரெட் ஹோய்ல் (Fred Hoyle)-ஐ தன் மென்டாராக ஏற்று, அவருடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் உருவாக்கிய ஸ்டடி ஸ்டேட் கோட்பாடு’ (Steady State Theory), அவர்களை உலகப் புகழ் பெற வைத்தது. அதாவது, பிரபஞ்சம் பிறந்தது, வளர்ந்தது என்றில்லாமல், எப்போதும் அது ஒரே நிலைமை மற்றும் அடர்த்தியில் இருக்கிறது’ என்றனர்.

ஜயந்த் நர்லிகர்

ஜயந்த் நர்லிகர்

தலைமைப் பண்பும், தன்னிச்சை ஆய்வுகளும்!

இந்தியா திரும்பிய நர்லிகர், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து, கோட்பாட்டு வானியற்பியல் குழுவை தனது தலைமையில் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தினார். தொடர்ந்து, வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (IUCAA - The Inter-University Centre for Astronomy and Astrophysics) நிறுவன இயக்குநரானார்.

நர்லிகர், தன்னிச்சையான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்பியல் கோட்பாடுகள், கருந்துளைகள், காந்தக் களங்கள், கோள்களின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானக் கொள்கைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், `நேச்சர்' (Nature) உள்பட பல சிறப்பான அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.

மூடநம்பிக்கைக்கு எதிராக... ஆய்வு!

பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நர்லிகர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வை சமூகம் அடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காக பேசியது, எழுதியதோடு நிறுத்தவில்லை அவர். ஜோதிட மூட நம்பிக்கையைத் தகர்க்க, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு செயற்பாட்டாளரான மருத்துவர் நரேந்திர தபோல்கருடன் இணைந்து, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு, முடிவுகள் வெளியிட்டு, ஜோதிடப் பொய்களை வெளிப்படுத்தினார்.

ஜாதகம் பொருந்தியவர்கள் எல்லாம் சூப்பராக வாழ்கிறார்களா?!

நம் இந்திய திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. உண்மையில், ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைக்கப்படும் தம்பதிகள் அனைவரும் அந்தப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தும் சிறப்பான வாழ்வை வாழ்கிறார்களா என்று, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் சேர்ந்து பல தம்பதிகளிடம் ஆய்வு நடத்தினர். முடிவில், ஜாதகப் பொருத்தம் உள்ள தம்பதிகள், அந்தப் பொருத்தம் இல்லாத தம்பதிகள் என இரு தரப்புமே ஒரே சதவிகிதத்தில்தான் சேர்ந்து வாழ்கின்றனர் என்று தரவுகளுடன் வெளியிட்டனர். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை எனத் தரவுகளுடன் நிரூபித்தனர்.

அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதிகளின் ஜாதகத்தைப் பரிசோதித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் சற்றேறக்குறைய அதே சதவிகிதத்தில்தான் திருமண முறிவு செய்து கொள்கின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக இவர்கள் நிறுவினார்கள்.

நரேந்திர தபோல்கர்

குணம், திறன், முன்னேற்றம்... ஜாதகத்தின்படி அமையாது!

அடுத்தாக இந்த ஜோடி, ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவரது குணம், திறன், முன்னேற்றம் அமையும்’ என்ற மூட நம்பிக்கைகளையும் உடைத்தது. இந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் படிப்பார்கள்... அதுவே இந்த ராசி, நட்சத்திரம் உடையவர்களுக்குப் படிப்பே வராது’ என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அதை நம்பி, சிலர் அதீத தன்னம்பிக்கையில், ‘எல்லாம் நம்ம ஜாதகம் பார்த்துக்கும்’ என உரிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலரோ, ‘என்ன பண்ணுறது, கட்டம் சரியில்ல...’ என்று தங்கள் முன்னேற்ற மின்மைக்கு ஜாதகத்தை சாக்குச் சொல்லி உழைப்பு, முனைப்பில் இருந்து விலகுவார்கள்.

`ஜாதகம் ஒருவரின் அறிவை தீர்மானிப்ப தில்லை’ என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்த, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பில் சுணக்கமாக உள்ள மாணவர்கள் என 200 மாணவர்களின் ஜாதகங்கள் தொகுக்கப்பட்டு, 53 ஜோதிடர்களிடம் அவை கொடுக்கப் பட்டன. அவர்கள் ’சூப்பராக படிப்பார்கள்’, ‘சுமாராகப் படிப்பார்கள்’ என்று கணித்த ஜாதகங்கள், முரணாக இருந்தன.

இவ்வாறு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தாங்கள் ஏற்படுத்தி வந்த பகுத்தறிவு விழிப்புணர்வும், பிரசாரமும் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் பெற்றுத்தந்தன.

2013-ம் ஆண்டு அடிப்படைவாத கொடூர்களால் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வாஸ்து நன்மை, தீமை... எந்த லாஜிக்கும் இல்லை!

நர்லிகர், வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பேசினார். ‘`வாஸ்து என்பது வீட்டின் உள்கட்டமைப்பை அதன் சூழலுடன் இணைக்கும் விதிகளால் ஆனது. ஆனால், அதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும், தீமைகள் விளையும் என்று சொல்லப்படுவதில் எந்த லாஜிக்கும் இல்லை’’ என்று விளக்கினார்.

வழி காட்டும் ஒளி!

நர்லிகர், மாணவர்களுடன் தான் உரையாடும் சந்தர்ப்பங்களை மிகுந்த விருப்பத்துடன் உருவாக்கிக்கொண்டார். அவர்களின் கடிதங்கள், இ-மெயில்களுக்கு பதில் அளிப்பது, பள்ளி கண்காட்சிகளில் கலந்துகொண்டு அவர்களுடன் உரை யாடுவது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரை நிகழ்த்துவது என... எதிர்கால இந்தியாவின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், பகுத்தறிவு வாதிகள் எனப் பலருக்கும் அவரது ஆராய்ச்சிகளும் கருத்துகளும்... வழி காட்டும் ஒளி!

Vikatan Plus - 08 June 2025 - ``ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர் | discussion about astrology

  • Replies 58
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    அண்ணா, அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • goshan_che
    goshan_che

    என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன். அது மதம். கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே - ஆனால் நிச்சயமாக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

உண்மை தான் வரவேற்ககூடிய ஆய்வு. மற்றும் கருத்துகள் சேர்த்து வாழ்ந்து பார்த்து ஒரு இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டு காலியாணம். செய்யலாம் பொருத்தம் பார்ப்பது முட்டாள்தனம் அதை விட. சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்ந்து பார்ப்பது செலவுகள் அற்ற சிறந்த நடைமுறை சரி வரவில்லை என்றால் இன்னொருவருடன் சேர்த்து வாழவது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’

அண்மையில் காலமான நடிகர் ராஜேஸ் ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாதவராகவும் போகப்போக மிகவும் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார்.

எண்கணித சாத்திரத்திலும் முதலில் நம்பிக்கை இழந்திருந்தார்.

ஆனாலும் அவர் புதுவீடு கட்டிக் கொண்டிருக்கும் போது அவருடைய நண்பர்

இந்த வீட்டில் நீ வாழவே மாட்டாய் என்றாராம்.

அவர் சொன்னது போல தான் கட்டிய வீட்டில் ஒருநாள் கூட வாழவில்லை என்றார்.

பின்னர் அவரே ஒரு எண்கணித சாத்திரியாகிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பகிர்விற்கு நன்றி அண்ணா.

2 hours ago, Kandiah57 said:

உண்மை தான் வரவேற்ககூடிய ஆய்வு. மற்றும் கருத்துகள் சேர்த்து வாழ்ந்து பார்த்து ஒரு இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டு காலியாணம். செய்யலாம் பொருத்தம் பார்ப்பது முட்டாள்தனம் அதை விட. சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்ந்து பார்ப்பது செலவுகள் அற்ற சிறந்த நடைமுறை சரி வரவில்லை என்றால் இன்னொருவருடன் சேர்த்து வாழவது

சிந்திக்க வேண்டிய கருத்துகள் அண்ணை. இதில் பாலியல் மூலமாக தொற்றக் கூடிய நோய்கள் சம்பந்தமான அறிவூட்டல் முக்கியம் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிமனதில் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் பிள்ளை மனம் கல்லு, பேதை மனம் பித்து என்பது தான் அநேகமானோரின் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

நர்லிகர் அவர்கள் அவருடைய ஆராய்ச்சிகளின் நடுவே சாஸ்திரங்கள், சோதிடங்களை பொய்யென நிறுவும் ஒரு பணியையும் செய்திருப்பது நல்ல ஒரு விடயம். இந்த விடயங்களில் சமூகங்களில் பெரிதாக ஒரு மாற்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது, ஆனாலும் அந்த நாட்களில் கேம்பிரிட்ஜ் பி.எச்டி என்பதற்கு மதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் இவர் என்ன சொல்லுகின்றார் என்று சிலராவது காது கொடுத்து கேட்டிருப்பார்கள்.

சில பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில், சில பில்லியன் ஆண்டுகளின் முன் நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியிருக்க, அங்கிருந்து வந்த ஒளித் துணிக்கைகளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இன்று பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தூரம் ,காலம், இடையில் இருக்கும்பொருட்கள், வெளி, நிகழ்வுகள் இவை எல்லாமே மனதால் அளந்து கூட பார்க்க முடியாத ஒரு பிரமாண்டமாக இருக்கின்றது.

இந்த மனிதர்கள், பூமி, நாங்கள் உருவாக்கி வைத்திருப்பவை இப்படி எல்லாமே அற்பத்திலும் அற்பமாக தோன்றும் சில கணங்கள் இவை. இந்தக் கணங்களில் எங்களுக்கு ஒரு விதியின் பாதை இருக்கின்றது என்ற நம்பிக்கை ஒரு நகைச்சுவையாகவும் இருக்கின்றது.

ஆனாலும், இந்த எண்ணம் வராத மற்றைய நேரங்களில், வாழ்க்கைகள் ஒரு மயக்கத்திலேயே போய்க் கொண்டிருக்கின்றன.

இளைய தலைமுறை முந்டைய தலைமுறையை விட அதிகளவில் இந்த சாத்திர சோதிட விடயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்று/முடிவு சரியென்று தோன்றவில்லை. ஒவ்வொரு புதிய தலைமுறையும் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த விடயங்களில் குறைவாகவே நம்பிக்கை கொள்ளுவார்கள் என்று தான் தோன்றுகின்றது. ஆனால் இன்று விதம் விதமான ஊடகங்கள் உக்கிரமாக இருக்குக்கும் ஒரு காலம். எல்லா வகையான செய்திகளுமே காட்டுத்தீ போல பரவுகின்றன. ஆகவே இது ஒரு மாயத் தோற்றமாகக்கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

இளைய தலைமுறை முந்டைய தலைமுறையை விட அதிகளவில் இந்த சாத்திர சோதிட விடயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்று/முடிவு சரியென்று தோன்றவில்லை. ஒவ்வொரு புதிய தலைமுறையும் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த விடயங்களில் குறைவாகவே நம்பிக்கை கொள்ளுவார்கள் என்று தான் தோன்றுகின்றது.

ஓம் ஆனால் இந்தியா இலங்கையில் இப்போது நிலைமை மோசம் என்கின்றார்கள் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் காலமான நடிகர் ராஜேஸ் ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாதவராகவும் போகப்போக மிகவும் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார்.

எண்கணித சாத்திரத்திலும் முதலில் நம்பிக்கை இழந்திருந்தார்.

ஆனாலும் அவர் புதுவீடு கட்டிக் கொண்டிருக்கும் போது அவருடைய நண்பர்

இந்த வீட்டில் நீ வாழவே மாட்டாய் என்றாராம்.

அவர் சொன்னது போல தான் கட்டிய வீட்டில் ஒருநாள் கூட வாழவில்லை என்றார்.

பின்னர் அவரே ஒரு எண்கணித சாத்திரியாகிவிட்டார்.

உண்மையில் எனக்கு இவற்றில் துளி அளவும் நம்பிக்கை இருந்ததில்லை

பின்பு ஒரு எண்கணித சாஸ்திர புத்தகம் கிடைத்த பொது எனது பிறந்த தேதி பற்றி வாசித்தேன். 80 வீதம் என்னைப்பார்த்தே எழுதியதுபோல இருந்தது. ஆதலால் அதனை என்னால் அடித்து மறுக்க முடியாது போனது ... இது எவ்வாறு சாத்தியம்? பின்பு மற்றைய தேதிகளையும் வாசித்து எனக்கு நெருக்கமானவர்கள் குணாதிசயங்களை பார்க்கும்போது அவையும் பெரும்பாலும் பொருந்திய போகினறது. வெள்ளைகார்கள் கூட அதற்கு விதிவிலக்காக இல்லை. ஒருவேளை இதில் எழுதி இருக்கும் விடயங்கள் மட்டுமே நான் பார்க்கிறேன் அது மற்றவர்களிலும் இருக்கலாம் நான் பார்க்காமல் விடுகிறேன் அப்படி இப்படி என்று அதை மறுதலிப்பதற்கும் பொய் என்று சொலவதற்கும் நிறைய ஆதாரம் தேடியும். அதை மறுக்க எனக்கு போதிய ஆதாரம் எதுவும் இல்லை.......... இதன் பின்பே ராசிகள் பற்றியும் வாசிக்க தொடங்கினேன் பொதுவான குணாதிசயங்கள் அவர்கள் சொலவதுபோலவே அந்த அந்த ராசி காரர்களுக்கு இருக்கிறது. நான் பழகும் சிலரை நீங்கள் இன்ன இராசியா என்று கேட்டு அவர்களும் ஆம் அதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இது பொய்யா மெய்யா என்ற குழப்பம் இப்போதும் உண்டு. மேலே உள்ளவர் போல ஏதன் அடிப்படையில் அவர்கள் குணாதிசயங்களை எழுதுகிறார்கள்? அது எப்படி கொஞ்சம் என்றாலும் பொருந்தி போகிறது என்பதற்கு சரியான விளக்கம் எழுதினால் நாமும் விளங்கிக்கொண்டு வெறும் பொய்தான் என்று அடித்து கூறி விடலாம்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

பின்பு ஒரு எண்கணித சாஸ்திர புத்தகம் கிடைத்த பொது எனது பிறந்த தேதி பற்றி வாசித்தேன். 80 வீதம் என்னைப்பார்த்தே எழுதியதுபோல இருந்தது. ஆதலால் அதனை என்னால் அடித்து மறுக்க முடியாது போனது ... இது எவ்வாறு சாத்தியம்? பின்பு மற்றைய தேதிகளையும் வாசித்து எனக்கு நெருக்கமானவர்கள் குணாதிசயங்களை பார்க்கும்போது அவையும் பெரும்பாலும் பொருந்திய போகினறது.

உண்மை தான் பிறந்த திகதி கூட்டுத்தொகை இலக்கம் இவற்றைப் பார்க்கும் போது

எண்சாத்திரத்தை மறுக்க முடியவில்லை.

எப்படி என்றும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

உண்மையில் எனக்கு இவற்றில் துளி அளவும் நம்பிக்கை இருந்ததில்லை

பின்பு ஒரு எண்கணித சாஸ்திர புத்தகம் கிடைத்த பொது எனது பிறந்த தேதி பற்றி வாசித்தேன். 80 வீதம் என்னைப்பார்த்தே எழுதியதுபோல இருந்தது. ஆதலால் அதனை என்னால் அடித்து மறுக்க முடியாது போனது ... இது எவ்வாறு சாத்தியம்? பின்பு மற்றைய தேதிகளையும் வாசித்து எனக்கு நெருக்கமானவர்கள் குணாதிசயங்களை பார்க்கும்போது அவையும் பெரும்பாலும் பொருந்திய போகினறது. வெள்ளைகார்கள் கூட அதற்கு விதிவிலக்காக இல்லை. ஒருவேளை இதில் எழுதி இருக்கும் விடயங்கள் மட்டுமே நான் பார்க்கிறேன் அது மற்றவர்களிலும் இருக்கலாம் நான் பார்க்காமல் விடுகிறேன் அப்படி இப்படி என்று அதை மறுதலிப்பதற்கும் பொய் என்று சொலவதற்கும் நிறைய ஆதாரம் தேடியும். அதை மறுக்க எனக்கு போதிய ஆதாரம் எதுவும் இல்லை.......... இதன் பின்பே ராசிகள் பற்றியும் வாசிக்க தொடங்கினேன் பொதுவான குணாதிசயங்கள் அவர்கள் சொலவதுபோலவே அந்த அந்த ராசி காரர்களுக்கு இருக்கிறது. நான் பழகும் சிலரை நீங்கள் இன்ன இராசியா என்று கேட்டு அவர்களும் ஆம் அதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இது பொய்யா மெய்யா என்ற குழப்பம் இப்போதும் உண்டு. மேலே உள்ளவர் போல ஏதன் அடிப்படையில் அவர்கள் குணாதிசயங்களை எழுதுகிறார்கள்? அது எப்படி கொஞ்சம் என்றாலும் பொருந்தி போகிறது என்பதற்கு சரியான விளக்கம் எழுதினால் நாமும் விளங்கிக்கொண்டு வெறும் பொய்தான் என்று அடித்து கூறி விடலாம்

பாண்டிட்சேதுராமன் எழுதிய புத்தகமா? என்னைப்பற்றி எழுதியது 99% சரி, அதை வைத்து பிள்ளைகளுக்கு பெயரும் வைத்தேன், பிரகாசமாக இருக்கின்றார்கள், எண் சாத்திரத்தில் மட்டும் னக்கு நம்பிக்கையுண்டு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

பாண்டிட்சேதுராமன் எழுதிய புத்தகமா? என்னைப்பற்றி எழுதியது 99% சரி, அதை வைத்து பிள்ளைகளுக்கு பெயரும் வைத்தேன், பிரகாசமாக இருக்கின்றார்கள், எண் சாத்திரத்தில் மட்டும் னக்கு நம்பிக்கையுண்டு

இந்த புத்தகத்தின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இந்த புத்தகத்தின் பெயர் என்ன?

அதிர்ஷ்ட விஞ்ஞாம்.

இலங்கையில் வேலனையில். சிவராசா ஒஎன்றுஒருவர் இருந்தவர் அவரிடம் நான் சோதிடம் கேட்டு உள்ளேன். மற்றும் நவலார் றேட். யாழ்ப்பாணதில். கனகரத்தினம். எனறு ஒரு சோதிடருமிருந்தவர். 1,..5,..6,.9,..தான் நல்ல எண்கள் மற்ற எண்களில் பிறந்தவர்கள். இந்த எண்களில் தான் பெயர் வைக்க வேண்டும் புத்தகம் இணையத்தில் வாசிக்கலாம்

குறிப்பு,...நல்லாகப் படித்தால் சோதிடம் பார்த்து உழைக்க முடியும் 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

பாண்டிட்சேதுராமன் எழுதிய புத்தகமா? என்னைப்பற்றி எழுதியது 99% சரி, அதை வைத்து பிள்ளைகளுக்கு பெயரும் வைத்தேன், பிரகாசமாக இருக்கின்றார்கள், எண் சாத்திரத்தில் மட்டும் னக்கு நம்பிக்கையுண்டு

yes

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் பிறந்த திகதி கூட்டுத்தொகை இலக்கம் இவற்றைப் பார்க்கும் போது

எண்சாத்திரத்தை மறுக்க முடியவில்லை.

எப்படி என்றும் தெரியவில்லை.

17 hours ago, உடையார் said:

பாண்டிட்சேதுராமன் எழுதிய புத்தகமா? என்னைப்பற்றி எழுதியது 99% சரி, அதை வைத்து பிள்ளைகளுக்கு பெயரும் வைத்தேன், பிரகாசமாக இருக்கின்றார்கள், எண் சாத்திரத்தில் மட்டும் னக்கு நம்பிக்கையுண்டு

எனது வாழ்வில் ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்க்கை பூச்சியமாகவே இருந்தது. காரணம் குடும்ப அங்கத்தவர்களது உயிரிழப்பு.

சொத்துக்கள் இருந்தும் நிர்க்கதியாகியிருந்தேன்.

அந்த நேரத்தில் ஒரு உறவுடன் எண்கணித சாத்திரியிடம் அழைத்து செல்லப்பட்டேன்.

அன்று அவர் கூறிய எனக்கான ஆருடங்கள் சரியானதாகவே இருக்கின்றது.

நான் வெளிநாடு செல்வேன் என ஒரு துளி கூட எதிர்பார்க்கவில்லை.அதற்கான அவசியமும் இருந்திருக்கவில்லை. அதிலும் இன்று நான் செய்யும் வேலை பற்றி கனவிலும் சிந்தித்தது இல்லை.

சாத்திரகாரர் நீ உனது சொத்துக்களை அனுபவிக்க மாட்டாய் எனவும் வேலையோ ஒரு இடத்தில் நின்று/ இருந்து செய்யும் வேலையும் ஆக இருக்காது எனவும் கூறினார். நானும் அவரை நக்கலாக பார்த்து விட்டுத்தான் சுபாஸ் கபேயில் ஐஸ் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

ஆனால் அந்த சாத்திரி சொன்னது நிஜவாழ்வில் நடக்கின்றது.

நான் எழுதியது மற்றவர்கள் சாத்திரங்களை நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல. என் அனுபவம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இலங்கையில் வேலனையில். சிவராசா ஒஎன்றுஒருவர் இருந்தவர் அவரிடம் நான் சோதிடம் கேட்டு உள்ளேன். மற்றும் நவலார் றேட். யாழ்ப்பாணதில். கனகரத்தினம். எனறு ஒரு சோதிடருமிருந்தவர்.

இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் சோதிடம் கேட்டு இந்திய இலங்கை மக்கள் தங்களுக்கு என்று உயர்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டனர். சோதிடம் கேட்காத இதர மக்கள் பரதேசிகளாக வாழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kandiah57 said:

1,..5,..6,.9,..தான் நல்ல எண்கள் மற்ற எண்களில் பிறந்தவர்கள். இந்த எண்களில் தான் பெயர் வைக்க வேண்டும் புத்தகம் இணையத்தில் வாசிக்கலாம்

குறிப்பு,...நல்லாகப் படித்தால் சோதிடம் பார்த்து உழைக்க முடியும் 🤣🤣

🤣............

பல வருடங்களின் முன் இங்கு அமெரிக்காவில் ஒரு நண்பனின் வீட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அவர்களது குழந்தையின் பிரசவம் நடைபெற வேண்டி வந்தால், அது அடுத்த 17ம் திகதி என்று மருத்துவரால் ஒரு நாள் குறிப்பிடப்பட்டது. அவர்கள் 17 வேண்டவே வேண்டாம் என்றும், 18ம் திகதி என்று மாற்ற முடியுமா என்றும் கேட்டார்கள்.

அந்தப் பிள்ளை வளர்ந்து இன்று அமோகமாக இருக்கின்றது. எனக்கும் ஒரு மகள் போலவே. ஆனால் பிறந்த திகதி 17, 18, 19,........ இதில் எது என்று எனக்கு ஞாபகமில்லை. பெற்றோர்களினதும், எங்கள் எல்லோரினதும் அன்புடனும், ஆசீர்வாதத்துடனும் மகள் என்றும் நல்லாவே இருப்பார்.

எம்ஜிஆர் 17ம் திகதி பிறக்காமல், 18ம் திகதி பிறந்திருந்தால் இன்னும் அமோகமாக வாழ்ந்து முடித்திருப்பாரோ.................😜.

தமிழில் மிக இலகுவான, தரமான அறிவியல் கட்டுரைகளை எழுதியவர் என்றால் அது திரு. என். ராமதுரை அவர்கள். 2018ம் ஆண்டில் மறைந்தார். 'தினமணிசுடர்' ஆசிரியராக இருந்தார். அவருடைய இணைய தளம் இன்றும் இயங்குகின்றது:

https://www.ariviyal.in/

வானவியல் சம்பந்தமாகவும் பல எளிமையான கட்டுரைகள் அவருடைய தளத்தில் இருக்கின்றது. உதாரணமாக சனிப்பெயர்ச்சி பற்றிய ஒரு கட்டுரை.

ராமதுரை அவர்கள் மிகவும் தன்மையான ஒரு மனிதர் போல. அவர் தடாலடியாக எதையும் நிராகரிக்கவில்லை, ஆனால் சோதிடம் ஒரு அறிவியல் அல்ல. அதை நம்புவதும், நம்பாததும் உங்களின் தனிப்பட்ட இஷ்டம் என்று கேள்வி - பதில் பகுதிகளில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார்.

அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் முன்னரே எனக்கு இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. பின்னர் சுத்தமாகவே இவை மனித மனங்களின் அடியில் என்றும் தங்கியிருக்கும் அச்சங்களின் ஒரு வகையான வெளிப்பாடுகள் என்று தான் தோன்றுகின்றது.

திருக்கோணேஸ்வரர் கோவிலின் கீழே நின்று முகம் பார்த்து பலன் சொல்பவர்களைப் பற்றிய என் அனுபவத்தை கடந்த வருடம் இலங்கை போய் வந்து இங்கு களத்தில் எழுதியிருந்தேன். மனிதர்களுக்கு என்றே சில பொதுவான குணங்கள் இருக்கின்றன போல. அவற்றை இந்த சோதிடர்கள், ஒரு அனுபவமுள்ள விற்பனைப் பிரதிநிதி போல, நம்பத்தகுந்த வகைகளில் சொல்லுகின்றார்கள், எழுதுகின்றார்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் சோதிடம் கேட்டு இந்திய இலங்கை மக்கள் தங்களுக்கு என்று உயர்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டனர். சோதிடம் கேட்காத இதர மக்கள் பரதேசிகளாக வாழ்கின்றார்கள்.

இல்லை ....சோதிடம். உண்மை ஆனால் அது எவருக்கும் தெரியாது என்பது தான் உண்மை .....தெரியாத காரணத்தால் அவர்கள் சொல்வது பிழை அதாவது சோதிடர்கள். பொய்யார்கள். விளங்கியதா ???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

எம்ஜிஆர் 17ம் திகதி பிறக்காமல், 18ம் திகதி பிறந்திருந்தால் இன்னும் அமோகமாக வாழ்ந்து

எண் சோதிடம். சொல்கிறது 8 ஆம். நம்பர் அரசியலில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அது எம் ஜி ஆர் க்கு உண்மை இல்லையா??? இந்த எண் சோதிடம் மக்களை வைத்து ஆராய்ந்து எழுதப்பட்டது அதாவது முதலாவது நம்பரின். ஆயிரம் பேரை ஆராய்ந்து எழுதியது தான் முதலாவது நம்பருக்கான. பலன்கள் இப்படி தான் மற்றைய எண்களும். அனேகமாக அது உண்மை போலிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சோதிடர்கள் சோதிடத்தில் Phd எடுத்துள்ளார்கள். இவர்கள் எதை நிறுவி Phd எடுத்தார்கள்??

  • தொடங்கியவர்
6 minutes ago, nunavilan said:

சோதிடர்கள் சோதிடத்தில் Phd எடுத்துள்ளார்கள். இவர்கள் எதை நிறுவி Phd எடுத்தார்கள்??

https://en.m.wikipedia.org/wiki/Jayant_Narlikar

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

எண் சோதிடம். சொல்கிறது 8 ஆம். நம்பர் அரசியலில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அது எம் ஜி ஆர் க்கு உண்மை இல்லையா??? இந்த எண் சோதிடம் மக்களை வைத்து ஆராய்ந்து எழுதப்பட்டது அதாவது முதலாவது நம்பரின். ஆயிரம் பேரை ஆராய்ந்து எழுதியது தான் முதலாவது நம்பருக்கான. பலன்கள் இப்படி தான் மற்றைய எண்களும். அனேகமாக அது உண்மை போலிருக்கும்.

இப்படிச் சொல்வதால் இது கிரகோரியன் நாட்காட்டியின் படியே செயல்படுகின்றது என்று ஒரு அர்த்தமும் வருகின்றதல்லவா, அண்ணா.............. இதை நாங்கள் ஆங்கில கலண்டர் என்றும் சொல்லுகின்றோம்.

அப்படியாயின் தமிழ் நாட்காட்டி, இஸ்லாமிய நாட்காட்டி, ஐரோப்பாவில் கிரகோரியனுக்கு முன்னிருந்த ஜீலியன் நாட்காட்டி, இன்னும் உலகெங்கும் இருக்கும் ஆயிரம் நாட்காட்டிகள் போன்றவற்றுடன் ஒரு தொடர்பும் மனிதர்களுக்கு இல்லையா.............

அரசியலில் சிறப்பாக செயல்படமாட்டார்கள் என்ற குணாம்சம் ஏதாவது ஒரு எண்ணுக்கு, சில எண்களுக்கு இருக்கின்றதா................ தமிழ்நாடு மற்றும் இலங்கையில் அரசியலில் உருப்படவே போவதில்லை என்னும் நிலையிலும் சிலர் அரசியலில் இருக்கின்றார்கள்............. அவர்களின் எண்கள் என்னவாக இருக்கும் என்ற ஒரு ஆவல்தான்...................🤣.

ராமதுரை அவர்கள் சொன்னது போலவே சோதிடத்தை நம்புவதும், நம்பாததும் அவரவர் தனிப்பட்ட தெரிவு/விருப்பம் என்று போவது தான் சிறப்பு போல...........👍.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இவரை கருதவில்லை. பொதுவாக சொன்னேன். தொலைக்காட்சியில் சிலரை பார்த்துள்ளேன். இணையத்திலும் பார்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, nunavilan said:

சோதிடர்கள் சோதிடத்தில் Phd எடுத்துள்ளார்கள். இவர்கள் எதை நிறுவி Phd எடுத்தார்கள்??

புத்தகத்தை படித்து எடுத்தார்கள் சோதிடத்தை சொல்லி இல்லை,....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அரசியலில் சிறப்பாக செயல்படமாட்டார்கள் என்ற குணாம்சம் ஏதாவது ஒரு எண்ணுக்கு, சில எண்களுக்கு இருக்கின்றதா................ தமிழ்நாடு மற்றும் இலங்கையில் அரசியலில் உருப்படவே போவதில்லை என்னும் நிலையிலும் சிலர் அரசியலில் இருக்கின்றார்கள்............. அவர்களின் எண்கள் என்னவாக இருக்கும் என்ற ஒரு ஆவல்தான்..........

எண் சோதிடம். பிறந்த எண்ணில் மட்டுமே தங்கி இருக்கவில்லை

பிறந்த திகதி

பிறந்த தேதி மாதம் வருடம் மூன்றும் கூட்டிய எண்

இப்படி நிறைய இருக்கிறது நான் படித்து 45. ஆண்டுகள் மறந்து விட்டது ஆனால் சோதிடம். ஒரு அரிய கலை அதை சொல்வது கடினம் ஒவ்வொரு மனிதனின்

குறிப்பு

கைரேகை

எண் சோதிடம். இவற்றை பொய் என்று உங்களால் நிறுவ முடியுமா?? இவற்றை சொல்பவர் இந்த விடயங்களை அறிவு அற்றவர் என்று ஏன் இருக்க முடியாது??

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8407.jpeg.340fcf61ebec745e8c1e

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.