Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05 Jun, 2025 | 04:40 PM

image

(எம்.நியூட்டன்)

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது.

 உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார்.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் திட்டமிட்டு செய்கிறது என்றே எடுக்க வேண்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது.

large.IMG_8426.jpeg.912d0efea6f7e855078f

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் அசுர வேகத்தில் செயற்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை வேகமாக கருவறுக்கும் செயற்பாடு சத்தமின்றி நடத்தப்படுகிறது .வெளிநாட்டுக்கு காசு இலகுவாக செலவழிக்க கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

சிங்களம் திட்டமிட்டு செய்கிறது என்றே எடுக்க வேண்டி இருக்கிறது.

எனக்குச் சிரிப்பாய் இருக்கு இந்தக்கருத்தை வாசிக்கும்போது காரணம்,

கூறியது யாழ் வைத்தியசாலையின் அதிகாரி வருபவர்கள் அநேகமாக குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்னும்தெரியாத பாப்பாக்கள் சிங்களம் திட்டமிடுகிறதாம்.

எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கத் தெரியாதாம் அப்பன் ஆத்தை சரியில்லை வளர்ப்பு சரியில்லை.

யார் போதைப்பொருள் விற்கிறார்கள் என்பது அநேகமானவர்களுக்குத் தெரியும். எங்கே எப்படி விற்கிறார்கள் என்பதும் தெரியும்.

17 hours ago, Kadancha said:

சிங்களம் திட்டமிட்டு செய்கிறது என்றே எடுக்க வேண்டி இருக்கிறது.

8 hours ago, nunavilan said:

சிங்களம் அசுர வேகத்தில் செயற்படுகிறது.

சிங்களத்தின் திட்டமிடலாக இருக்கலாம், போதைப்பொருள் இறக்குமதியை மறைமுகமாக ஆதரிப்பது சிங்களமாக இருக்கலாம். ஆனால் உள்ளூரில் வினையோகம் செய்வது தமிழர்கள்.

தமிழ் அரசியல் வாதிகள் பலர் இந்த முக்கிய பிரச்சனையாகிய போதைப்பொருளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

I'm

54 minutes ago, இணையவன் said:

யார் போதைப்பொருள் விற்கிறார்கள் என்பது அநேகமானவர்களுக்குத் தெரியும். எங்கே எப்படி விற்கிறார்கள் என்பதும் தெரியும்.

சிங்களத்தின் திட்டமிடலாக இருக்கலாம், போதைப்பொருள் இறக்குமதியை மறைமுகமாக ஆதரிப்பது சிங்களமாக இருக்கலாம். ஆனால் உள்ளூரில் வினையோகம் செய்வது தமிழர்கள்.

தமிழ் அரசியல் வாதிகள் பலர் இந்த முக்கிய பிரச்சனையாகிய போதைப்பொருளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன்

வடமாகாணத்தின் பொறுப்புள்ள அரச பதவியில் இருக்கும் ஒருவரது மகள் புருஷன் திருமணத்துக்கு முன்பு கஞ்சா போதை வஸ்து பாவித்தது நான் அறிவேன்.

யாழ் கூடாநாட்டில் போதை மற்றும் ரவுடிகளை பணத்துக்காக வெளியில் எடுத்துவிடும் பெண் வக்கீலின் மகளை அதே ரவுடிக்கும்பல் அப்பெண் காதலித்தவனையே கல்யாணம் செய்யச்சொல்லி தெருவில் மிரட்டப்பட்டார் பெண்ணின் தந்தை நீதிவான்

தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இதில் தலையிட மாட்டார்கள் காரணம் எல்லா கட்சிகளுக்கும் ரவுடிக்கும்பல் தேவை

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் விற்றால் ஏன் வாங்கி பாவிக்கின்றார்கள்? கனடா / இங்கிலந்து போன்ற நாடுகளிலும் இப்படி பாவித்து சீரழிகின்றார்கள்தாதனே. அவரவர் தெரிவு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

அரசியல்வாதிகள் இவற்றில் தலையிட மாட்டார்கள், ஏன் எனில் கடந்த காலங்களில் பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்கு தவறணைகளுக்கு அனுமதி வழங்கிய வரலாறுகளும் அனைவரும் அறிந்ததே.இது அரசியல் வாதிகளைத் தானே சாரும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

சிங்களவன் விற்றால் ஏன் வாங்கி பாவிக்கின்றார்கள்? கனடா / இங்கிலந்து போன்ற நாடுகளிலும் இப்படி பாவித்து சீரழிகின்றார்கள்தாதனே. அவரவர் தெரிவு.

இப்படியான அரசியல் கலந்த மடை மாற்றல்களால் பல பிரச்சினைகளுக்கன தீர்வுகளை விட்டு வெகுதூரம் விலகிப் போயிருக்கிறோம்.

வடக்கின் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சில சமயம் நிற்காமல் போய் தமிழர்கள் பலியான போதும் "இது அரசின் திட்டமிட்ட இன அழிப்பு" என்று வாதிட்டவர்கள் இருக்கிறார்கள். போக்கு வரத்து விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் படி மக்களை ஊக்குவிப்பதே தீர்வு என்று இருக்கும் போது, "இல்லை, அரசு பாதுகாப்பான கேற் போட வேண்டும்" என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். இலங்கை முழுவதும் இருக்கும் ரயில் கடவைகளில் கதவு போட்டு, திறந்து மூட ஆள் கூலிக்கு வைப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று யோசிக்க மாட்டார்கள்.

அதே போலத் தான் இதுவும். சிங்கள இராணுவம் போதை வஸ்து விற்பதும், ஊழல் காவல் துறை காணாதது போல இருப்பதும் உண்மையாக இருக்கலாம். அப்படி இருந்தால் கூட, நாம் தான் எங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்து, போதைக்கு அடிமையானால் காலம் கடக்க முதல் சிகிச்சையும் வழங்க வேண்டும். இவையிரண்டையும் தூர வைத்து விட்டு, "ஐயோ சிங்களம் சதி செய்யுது" என்றால் என்ன பயன்? சிங்களம் உடனே வெட்கப் பட்டு நிறுத்தி விடுமா😂?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

சிங்களவன் விற்றால் ஏன் வாங்கி பாவிக்கின்றார்கள்? கனடா / இங்கிலந்து போன்ற நாடுகளிலும் இப்படி பாவித்து சீரழிகின்றார்கள்தாதனே.

பல வருடங்களுக்கு முன்பு இன்டோனேசியாவில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு போதை பொருள் கடத்திவந்து விற்பனை கோஷ்டியின் தலைவர் ஈழதமிழ் வம்சாவளி அவர் கைது செய்யபட்டு இன்டோனேசிய அரசால் மரண தண்டனை நிறைவேற்றபட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

போதை மாத்திரைகள் என்றால் இவை fentanyl மாத்திரைகளா......... அழிந்தது முழுநாடும். இவை பவுடர் அல்லது ஹெரோயினை விட 50 மடங்கு வீரியமானவை.

இதை பல நாடுகள் இன்று உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவே பெருமளவில் இவற்றை உற்பத்தி செய்கின்றது. சிரியா செய்து கொண்டிருந்தது. அமெரிக்காவிலும் இது ஒரு பெரும் பிரச்சனை. சமீபத்தில் கண்மூடித்தனமாக அமெரிக்கா கனடாவை இந்த விடயத்தில் குற்றம் சாட்டியது.

இது இலங்கை அரசையே மீறிய ஒன்று. அமெரிக்காவில் இது அமெரிக்க அரசையே மீறிய ஒன்று. இந்த விடயங்களில் அவரவர்களே அவரவர் குடும்பங்களுக்கு பொறுப்பும், காவலும்.

அந்த நாட்களில் கஞ்சா, கறுப்பு அல்லது அபின், பவுடர் அல்லது ஹெரோயின்........... இப்படியானவற்றை இலங்கை அரசோ அல்லது சிங்கள மக்களோ நாட்டுக்குள் கடத்தி வரவில்லை. அவை வேறு வழிகளிலேயே நாட்டுக்குள் வந்தன. இங்கு இருக்கும் பலர் இவற்றை உங்களின் வாழ்க்கைகளில் ஒரு தடவை கூட கண்டிருக்கமாட்டீர்கள். ஆனாலும் அவை வந்து போய்க் கொண்டிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

இப்படியான அரசியல் கலந்த மடை மாற்றல்களால் பல பிரச்சினைகளுக்கன தீர்வுகளை விட்டு வெகுதூரம் விலகிப் போயிருக்கிறோம்.

வடக்கின் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சில சமயம் நிற்காமல் போய் தமிழர்கள் பலியான போதும் "இது அரசின் திட்டமிட்ட இன அழிப்பு" என்று வாதிட்டவர்கள் இருக்கிறார்கள். போக்கு வரத்து விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் படி மக்களை ஊக்குவிப்பதே தீர்வு என்று இருக்கும் போது, "இல்லை, அரசு பாதுகாப்பான கேற் போட வேண்டும்" என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். இலங்கை முழுவதும் இருக்கும் ரயில் கடவைகளில் கதவு போட்டு, திறந்து மூட ஆள் கூலிக்கு வைப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று யோசிக்க மாட்டார்கள்.

அதே போலத் தான் இதுவும். சிங்கள இராணுவம் போதை வஸ்து விற்பதும், ஊழல் காவல் துறை காணாதது போல இருப்பதும் உண்மையாக இருக்கலாம். அப்படி இருந்தால் கூட, நாம் தான் எங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்து, போதைக்கு அடிமையானால் காலம் கடக்க முதல் சிகிச்சையும் வழங்க வேண்டும். இவையிரண்டையும் தூர வைத்து விட்டு, "ஐயோ சிங்களம் சதி செய்யுது" என்றால் என்ன பயன்? சிங்களம் உடனே வெட்கப் பட்டு நிறுத்தி விடுமா😂?

நாய்க்கு எங்கு அடி பட்டாலும் காலை துக்குவது போல.இது அடிப்படை காரனங்களை துர தள்ளி விடும்.

16 hours ago, Justin said:

அப்படி இருந்தால் கூட, நாம் தான் எங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்து, போதைக்கு அடிமையானால் காலம் கடக்க முதல் சிகிச்சையும் வழங்க வேண்டும். இவையிரண்டையும் தூர வைத்து விட்டு, "ஐயோ சிங்களம் சதி செய்யுது" என்றால் என்ன பயன்? சிங்களம் உடனே வெட்கப் பட்டு நிறுத்தி விடுமா😂?

பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல. பாடசாலை வாசலில் போதைப்பொருள் விற்பதைத் தடுக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்கலாம். இதில் காவல்துறை, தமிழ் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என்று எல்லொரும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள் தங்கள் பிளளைகளைக் கண்காணிக்க வேண்டும். எங்கு போகிறார்கள் யார்யாருடன் சேர்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து போதை மருந்துகளினனால் ஏற்படு; தீமைகளை எடுத்துச்சொல்லிப்பக்குவப்படுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய விளக்கங்கள் வகுப்புகள்தொடர்சியாக நடத்தப்படல்வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புலவர் said:

பெற்றோர்கள் தங்கள் பிளளைகளைக் கண்காணிக்க வேண்டும். எங்கு போகிறார்கள் யார்யாருடன் சேர்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து போதை மருந்துகளினனால் ஏற்படு; தீமைகளை எடுத்துச்சொல்லிப்பக்குவப்படுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய விளக்கங்கள் வகுப்புகள்தொடர்சியாக நடத்தப்படல்வேண்டும்.

பெற்றோர்கள் வெளியே செல்லும் பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. அன்று போல் இல்லாமல் இன்றைய காலத்து பிள்ளைகள் மொடேர்னாக,புத்திசாலிகளாக இருக்கின்றார்கள்.பிள்ளைகள் போதைப்பொருள் பாவிக்கின்றார்களா என்பதை கண்டு பிடிப்பது மிக மிக கடினம். அவர்கள் தங்கள் படுக்கை அறையிலும்,படிப்பு மேசையிலும் பாவிக்கக்கூடியதுதான் இன்றைய போதைப்பொருட்கள்.

புகையும் வராது போத்தில் சத்தமும் வராது.இனிப்பு வகைகள்,குளிசை வகைகளை போன்று போதை பொருட்கள் வந்து விட்டது.எவ்வித அசுமாத்தங்களும் இல்லாமல் போதை பாவிக்கலாம்.😂

ஜேர்மனியில் எனது நண்பனின் மகன் தன் படுக்கையறையில் அளவிற்கதிகமாக போதை பொருள் உட்கொண்டு......படுக்கையிலேயே வாந்தியெடுத்து காலமாகி விட்டார். அதன் பின்னர்தான் பெற்றோருக்கு தங்கள் பிள்ளை போதை பாவிப்பது தெரிய வந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பது கைத்தொலைபேசிகள். அதில் இரகசிய சைகள் மூலம் தங்கள் போதை பொருள் வியாபாரத்தை செவ்வனே செய்கின்றார்கள்.

இந்த போதை பொருள் விற்பனையை காவல் துறையால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும்.அவர்கள் நேர்மையாக இருந்து செயல்பட வேண்டும்.

மற்றும் படி இன்றைய இலங்கை அரசியல்வாதிகளுக்கும்/ அரசிற்கும் இதற்கெல்லாம் நேரமில்லை.☹️

உன்ரை வேலையை பாத்துக்கொண்டு போவியா எண்ட பீலிங்கில் இருக்கிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் கஞ்சா, கறுப்பு அல்லது அபின், பவுடர் அல்லது ஹெரோயின்........... இப்படியானவற்றை இலங்கை அரசோ அல்லது சிங்கள மக்களோ நாட்டுக்குள் கடத்தி வரவில்லை. அவை வேறு வழிகளிலேயே நாட்டுக்குள் வந்தன.

ரசோதரன், உங்களின் இந்த வரிகளை வாசிக்கும் போது, எழுபதுகளின் பிற்பகுதியில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.

வருக்கு என்னைவிட இருபது வயது அதிகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது அபின் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கிருந்தது.

"உமக்கு கனக்க ஆட்களைத் தெரியும்தானே, கொஞ்சம் எடுத்துத் தாருமன்" என்று என்னைக் காணும் போதெல்லாம் கேட்பார். நீண்ட நாட்களாக அவர் நச்சரித்துக் கொண்டிருந்ததால், ஒரு நாள் அவருக்கு அது  கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

"இலந்தைப் பழம் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக எடுத்து விடாதீர்கள்" என்ற எச்சரிப்புடன் தான் அவருக்கு அது கொடுக்கப்பட்டது.

மனுஷன் நல்ல திடகாத்திரமான பேர்வழி. அன்று அவர் வீட்டில் பங்கு இறைச்சிக் கறி. சொன்ன மாதிரியே, இலந்தைப் பழ அளவிலான அபினை மதிய உணவுக்கு முன் எடுத்துக் கொண்டார். அவருக்கு எந்தவித மாற்றமும் தெரியவில்லை.

"அபின்னு ஏதோ லேகியத்தைத் தந்து ஏமாத்திட்டான்" என்று அவரது மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

மனுஷன் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இன்னொரு இலந்தைப் பழ அளவிலானதை விழுங்கிக் கொண்டார். அங்கேதான் பிரச்சனைகள் ஆரம்பமானது.

"காத்தில மிதக்குற மாதிரி இருக்கு... விழப்போறேன்... அழுத்திப் பிடிங்கோ... தலையெல்லாம் சுத்துது. வேர்க்குது, தொண்டை வறண்டு போச்சு" என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரது கை கால்களைப் பிடித்துக் கொண்டார்கள். மூத்த மகன் இரண்டு செவ்விழநீர் வெட்டிக் கொடுக்க, அதை மனுஷன்மடக் மடக்’ என்று குடித்தார். இப்பொழுது இன்னும் அந்தரத்தில் வேகமாக பறப்பது போன்ற பிரமை ஏற்பட, மனுஷன் வீட்டையே கலவரப் பூமியாக மாற்றி விட்டிருந்தார்.

இவ்வளவு அமளிகளுக்கு மத்தியிலும், "என்னைக் கொள்ளுறதுக்குத்தான் இதைத் தந்திருக்கிறான், ராஸ்கல்!" என்றும் சொல்லிக் கொண்டாராம்.

அன்று சாராயக் கடை இருந்தது. கள்ளுத் தவறணை இருந்தது. கசிப்பு, கஞ்சா, அபின் ஆகியவையும் இருந்தன. ஆனாலும் அவை, தம்பாட்டில் சிலருடன் மட்டுமே இருந்தன.

8 hours ago, இணையவன் said:

பாடசாலை வாசலில் போதைப்பொருள் விற்பதைத் தடுக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்கலாம். இதில் காவல்துறை, தமிழ் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என்று எல்லொரும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

காவல்துறை எதுவுமே தெரியாதது போல் கண்களை மூடிக் கொண்டு தங்களது பிழைப்பைப் பார்த்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு எங்கே சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2025 at 14:02, புலவர் said:

சிறுவயதில் இருந்து போதை மருந்துகளினனால் ஏற்படு; தீமைகளை எடுத்துச்சொல்லிப்பக்குவப்படுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய விளக்கங்கள் வகுப்புகள்தொடர்சியாக நடத்தப்படல்வேண்டும்.

இந்த வழி முறைகள் இன்னும் தாயகத்தில் வேலை செய்கின்றனவா என்று அறிய ஆவல். 90 களின் ஆரம்பத்தில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் எச்.ஐ.வி தொற்று யாழ் மருத்துவ மனையில் இரு நபர்களில் அடையாளம் காணப் பட்டது. உடனே, பொதுச் சுகாதார அதிகாரிகள் (PHI) யாழ் பாடசாலைகளில் இது பற்றிய கருத்தரங்குகளை நடத்தி மாணவர்களை அறிவூட்டிய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. அந்தக் கருத்தரங்குகளால், பல இளையோர் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் என நம்புகிறேன் (யாழ் கோட்டையின் சுற்றாடலின் காடு மண்டிய இடங்கள் இரகசிய காதல் மையங்களாகவும், ஓர் பால் உறவைப் பரீட்சித்துப் பார்க்க எண்ணிய ஆண்களாலும் நிரம்பிய காலங்கள் அவை).

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2025 at 14:18, Kavi arunasalam said:

அன்று சாராயக் கடை இருந்தது. கள்ளுத் தவறணை இருந்தது. கசிப்பு, கஞ்சா, அபின் ஆகியவையும் இருந்தன. ஆனாலும் அவை, தம்பாட்டில் சிலருடன் மட்டுமே இருந்தன.

உங்களின் அனுபவம் போலவே எனக்கும் இந்த விடயத்தில் சில அனுபவங்கள், அதே காலப்பகுதியில், கிடைத்திருக்கின்றன, கவிஞரே. மேலும், நீங்கள் சொல்லியிருப்பது போலவே இப்படி ஒரு உலகம் இருந்தது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரே ஊரில் கூட என் நண்பர்கள் பலருக்கும் கூட தெரிந்திருக்கவில்லை.

எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஒரு நாள் அயல்வீட்டு அண்ணா ஒருவர் எங்களின் வீட்டு தலைவாசலில் ஏறி நின்று கொண்டு, 'நான் பறக்கின்றேன்................ பறக்கின்றேன்............' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் முழுவதும். அம்மாவிடம் என்னவென்று கேட்டேன், 'அவன் கறுப்பைத் தின்றிருக்கின்றான். தெளியட்டும்.......... நாலு போட்டால் இனித் தொடவேமாட்டான்...........' என்றார் அம்மா. அந்த அண்ணாவின் தந்தையார் சும்மாவே அவர் வீட்டில் ஆட்களை நொறுக்கித் தள்ளுவார்.

பின்னர் 80ம் ஆண்டுகளின் முடிவில் மிகவும் பரிதாபமாக முடிந்தது இந்த அண்ணனின் வாழ்க்கை.

70ம் மற்றும் 80ம் ஆண்டுகளின் ஆரம்பங்களில் இந்தப் பொருட்களை வாங்கிச் செல்ல இலங்கையில் தென்பகுதிகளில் இருந்து சில வியாபாரிகள் வருவார்கள். குருணாகல் பகுதியில் இருந்து வரும் இருவரின் முகங்கள் இன்றும் என் மனதில் இருக்கின்றது. 90 - 94ம் ஆண்டுகளில் பேரூந்தில் கண்டியிலிருந்து குருணாகல் போய், அங்கு புகையிரதத்தில் ஏறி வவுனியா போய் வருவேன். குருணாகல் புகையிரத நிலையத்திலிருந்து குருணாகல் பேரூந்து நிலையம் தள்ளியே இருந்தது. நடந்தே போவேன். அப்படி நடக்கும் போது அந்த இருவரும் எங்காவது தென்படுவார்களா என்ற யோசனையும் வந்திருக்கின்றது.

இன்னும் சிக்கலான, நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் சிலவும் உண்டு.

80ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் என்று நினைக்கின்றேன். வரும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த ஒருவர் இருந்தார். ஒரு இளைஞன் அப்படியே பலிக்கடாவாகிப் போன நிகழ்வுகள் அவை.

அப்படியே காணாமல் போனவர்களின் கதைகளும் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.