Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒரே ஒரு விமான பயணி தப்பி பிழைத்துள்ளதாக தானே இப்போதைய செய்திகளும் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்தோரில் ஒருவர் நீங்கலாக ஏனையோர் பலி. தப்பியவரின் சகோதரரும் பலி.

கீழே கட்டிடத்தில் இருந்தோரில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nunavilan said:

இந்த விமானம் டெல்கியில் இருந்து அகமபாத்துக்கு வந்த போது விமானத்தின் குளிரூட்டிகள் முதற்கொண்டு வேலை செய்யவில்லை என ஒரு பயணி காணொளி எடுத்து அதனை எயர் இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் இவ்விமானத்தில் ஏதோ பிழை இருப்பதாகவும் சொன்ன போதும் எயர் இந்தியா அதனை கருத்தில் கொல்ளவில்லை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரே ஒரு விமான பயணி தப்பி பிழைத்துள்ளதாக தானே இப்போதைய செய்திகளும் தெரிவிக்கின்றன.

வேலையிருக்கும் போது கேள்விபட்டேன் அதனை தான் இங்கு பதிந்தேன்.பின்னர் தான் வெவ்வேறு செய்திகள் வரத் தொடங்கியது..

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்…!

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்…!

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா!

June 13, 2025

”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இறந்தவர்களை அடையாளம் காண உதவும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, காயமடைந்தவர்கள் குணமாகத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம்  ”30 நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.”  என  விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்  தெரிவித்துள்ளார்.

”ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சுமார் 30 விநாடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் விபத்துக்குள்ளானது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபரான 40 வயதான விஸ்வாஸ் குமார்.

”நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன. எனக்குப் பயமாக இருந்தது. நான் வெளியேறியபோது, என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் கிடந்தன.” எனத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் அஜய்யும் தன்னுடன் பயணித்ததாக தெரிவித்துள்ள விஸ்வாஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் இந்தியரான விஸ்வாஸ் விடுமுறைக்கு அகமதாபாத் வந்து திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/இதனால்தான்-யாரையும்-காப/

  • கருத்துக்கள உறவுகள்

தரம் குறைந்த காணொளிகளின் அடிப்படையில் வைக்கப்படும் கருத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரை பாதிக்கும், மக்களும் ஊடகங்களும் முழுமையான விசாரணை முடியுமட்டும் பொறுமை காக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ....... !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபத்தில் காலமான அனைவருக்கும் அஞ்சலிகளும் அனுதாபங்களும் ......

  • கருத்துக்கள உறவுகள்

இனி புதிய புதிய தகவல்கள் தமிழ் யுரியுப்பர்களுக்கு கிடைக்கும் தாங்கமுடியாது 😭

  • கருத்துக்கள உறவுகள்

ஆமதாபாத் விமான விபத்தில் இருந்து இவரை காப்பாற்றிய அந்த '5 நிமிடங்கள்' - என்ன நடந்தது?

ஆமதாபாத் விமான விபத்து, பூமி சவுகான்

பட மூலாதாரம்,BHUMI CHAUHAN.

படக்குறிப்பு, போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பார்கவ் பரிக்

  • பதவி,

  • 13 ஜூன் 2025, 08:19 GMT

    புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

வியாழக்கிழமையன்று மதியம் (நேற்று), 30 வயதான பூமி சவுகான் விமானத்தை தவறவிட்டதால் வருத்தமடைந்தார். ஆனால் விரைவிலேயே, அதற்காக அவர் நன்றி தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர் தவறவிட்ட ஏர் இந்தியா விமானம், ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

பூமி சவுகான் அந்த விமானத்தில் பயணிப்பதற்காக குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வரில் இருந்து சாலை வழியாக பயணம் மேற்கொண்டார்.

"நாங்கள் சரியான நேரத்தில் ஆமதாபாத்தை அடைந்தோம். ஆனால் நகரத்தில் இருந்த போக்குவரத்து நெரிசலால், நான் விமான நிலையத்தை ஐந்து நிமிடங்கள் தாமதமாகத்தான் அடைந்தேன். என்னை விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை, முதலில், நான் டிக்கெட் பணத்தை இழந்துவிட்டேன், வேலையை இழக்க நேரிடும் என்றும் நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது, நன்றியோடு இருக்கிறேன்... பணம் போயிருக்கலாம். ஆனால் என் உயிர் காப்பாற்றப்பட்டது"என்று சவுகான் பிபிசியிடம் கூறினார்.

"நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து எனது சொந்த ஊரான அங்கலேஷ்வருக்கு திரும்பி வந்தேன்," என்று கூறிய அவர், "நான் இங்கு ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தேன். எனது விடுமுறை முடிந்துவிட்டதால் நான் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது" என்று குறிப்பிட்டார்.

போக்குவரத்து நெரிசலால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார். ஆனால் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

"நான் தாமதமாக வந்தேன் என்றும், குடிவரவு செயல்முறையும், போர்டிங்கும் முடிந்துவிட்டதனால் என்னால் விமானத்தில் ஏற முடியாது என்றும் ஏர் இந்தியா ஊழியர்கள் கூறினார்கள்,"

"நான் வேலையை இழந்துவிடக் கூடும், டிக்கெட் பணமும் போய்விடும் என்று பலமுறை கெஞ்சினேன். யாரும் கேட்கவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்."என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பின்னர். விமான நிலையத்திலிருந்து வெளியேறி, வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்திய போது தான் அந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை பூமி உணர்ந்தார்.

"நாங்கள் டீ குடிக்கலாம் என்று வண்டியை நிறுத்தி, எங்கள் பயண முகவருடன் பணத்தை திருப்பி பெறுவது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் அங்கலேஷ்வரிலிருந்து, நான் ஏறவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது என்று அழைப்பு வந்தது," என்று பூமி கூறுகையில், அவரது குரல் அதிர்ச்சியில் நடுங்கியது. "நாங்கள் உடனே ஒரு கோவிலுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி கூறினோம்... ஆமதாபாத்தின் போக்குவரத்து நெரிசல்தான் என் உயிரைக் காப்பாற்றியது"என்றார் பூமி.

ஆமதாபாத் விமான விபத்து, பூமி சவுகான்

பட மூலாதாரம்,BHUMI CHAUHAN.

படக்குறிப்பு, பூமி சவுகான்

லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் அந்த விமானத்தில் பயணித்தார்.

விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத் விமான விபத்து, பூமி சவுகான்

பட மூலாதாரம், BHUMI CHAUHAN.

படக்குறிப்பு,"நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து எனது சொந்த ஊரான அங்கலேஷ்வருக்கு திரும்பி வந்தேன்," என்று கூறினார் பூமி.

"விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஸ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன.

விஸ்வாஸ் குமார் ரமேஷ் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தார் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cyvmdp36697o

  • கருத்துக்கள உறவுகள்

போயிங் விமானங்களில் தரமற்ற உதிரி பாகமா? மீண்டும் வெளிச்சம் பெறும் முன்னாள் ஊழியரின் குற்றச்சாட்டு

ஆமதாபாத் விமான விபத்து, போயிங்

படக்குறிப்பு, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளாவது இது முதல்முறை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜொனாதன் ஜோசப்ஸ்

  • பதவி, வணிகச் செய்தியாளர்

  • 13 ஜூன் 2025, 07:21 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்திலிருந்து புறப்பட்ட 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம் போயிங் 787, ட்ரீம்லைனர் வகையை சார்ந்தது.

போயிங் 787 வகை விமானம் விபத்துக்குள்ளாவது இது முதல் முறை.

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த மாடலை 14 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.

உலகின் வெவ்வேறு விமான நிறுவனங்களிடம் 1,175-க்கும் மேற்பட்ட 787 வகை விமானங்கள் இருப்பதாக அந்த தருணத்தில் போயிங் நிறுவனம் தெரிவித்தது.

போயிங் விமான நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கடந்த 14 ஆண்டுகளில் இந்த ரக விமானம் ஒரு பில்லியன் பயணிகளின் போக்குவரத்துத் துணையாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 50 லட்சம் முறை மேற்கொண்ட பயணங்களின் மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்றும் தெரிவித்திருந்தது.

தனது 737 வகை விமானங்கள் மூலம் ஏற்பட்ட விபத்துகள் உட்பட்ட பல்வேறு பிரச்னைகளுடன் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு 787 ட்ரீம்லைனர் நொறுங்கியது ஒரு மிகப்பெரிய இடியாக அமைந்துள்ளது.

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஓராண்டைக் கடந்துள்ள கெல்லி ஓர்ட்பெர்கிற்கு இது மற்றுமொரு சோதனை.

கடுமையான சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் போயிங் நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதற்காக அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஏர் இந்தியா போயிங் 787-8-ன் சிறப்பு அம்சங்கள்

ஒரு முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, போயிங் விமானங்கள் தயாரிப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக ஒரு முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

போயிங் 787-8 விமானம் ஏர் இந்தியாவிடம் 2014-ல் சேர்ந்தது. அதில் மொத்தமாக 256 இருக்கைகள் உள்ளன.

அதன் நீளம் 57 மீட்டர், அகலம் (இரண்டு இறக்கைகளின் நுனிகளுக்கு இடையிலான தூரம்) 60 மீட்டர் மற்றும் அதன் உயரம் 17 மீட்டர்

விமானத் தயாரிப்பில் முறையான தர நிலைகளை பின்பற்றுவதில்லை என போயிங் நிறுவனத்தின் மீது அதன் முன்னாள் ஊழியரான ஜான் பர்னெட் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில் 32 வருடங்கள் பணி புரிந்த பின்னர் அவர் 2017ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். போயிங் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் அவர் பல ஆதாரங்களை கொடுத்தார்.

சில நாட்கள் கழித்து, 2024ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பர்னெட் தனக்குதானே விளைவித்துக்கொண்ட காயங்களால் உயிரிழந்தார்.

ஆமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதும் போயிங் நிறுவனப் பங்கு மதிப்பு 4.32 சதவீதம் சரிவை சந்தித்தது.

போயிங் 787 விமானத்தின் பாகங்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய போயிங் 787 விமானத்தின் சிதறிய பாகங்கள்

தயாரிப்பு குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள்

வடக்கு சார்ல்ஸ்டன் தொழிற்சாலையில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருந்த போது ஜான் பர்னெட் அங்கு தரக் கட்டுப்பாட்டு மேலாளராக இருந்தார்.

தயாரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடும் அழுத்தத்தில் இருந்ததாகவும், தரம் குறைவான உதிரி பாகங்களை விமானங்களில் பொருத்தியதாகவும் அவர் பிபிசியிடம் 2019ஆம் ஆண்டு தெரிவித்தார்.

விமானத்தின் ஆக்சிஜன் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், நான்கில் ஒரு ஆக்சிஜன் முகக்கசவம் அவசர காலத்தில் வேலை செய்யாத நிலையில் இருக்கலாம் என்றும் பர்னெட் எச்சரித்திருந்தார். 787 ரக விமானத்தில் நிறுவப்பட்ட அவசர கால ஆக்சிஜன் அமைப்பு பரிசோதிக்கப்பட்டபோது 25 விழுக்காடு தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.

தெற்கு கரோலினாவில் தயாரிப்பு பணிகள் தொடங்கிய பிறகு விமானங்களை வேகமாக தயாரிக்கும்படி தொழிலாளர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர்கள் தயாரிப்பு முறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள நேர்ந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பர்னெட் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ஆய்வு செய்தபோது அவற்றில் சில உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டன.

குறைபாடான உதிரிபாகங்களும் உபகரணங்களும் நிறுவனத்திலிருந்து காணாமல் போன பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போயிங் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

பர்னெட்டின் குற்றச்சாட்டுகளை போயிங் நிறுவனம் மறுத்தது.

சில ஆக்சிஜன் சிலிண்டர்கள் முறையற்ற வகையில் அனுப்பப்பட்டு அவை விமானங்களில் நிறுவப்பட்டன என கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என விநியோக நிறுவனம் விளக்கம் (2017-ல் ) அளித்தது.

இதற்கிடையே கடந்த வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புதிதாக தயாரிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் அவசர கால வழியின் கதவு புறப்பட்ட சிறிது நேரத்தில் தனியாக பிரிந்து சென்றது.

தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதி செய்ய தவறிவிட்டதாக போயிங் நிறுவனத்தின் மீது கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd621yd8106o

  • கருத்துக்கள உறவுகள்

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது – அதில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?

ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 ஜூன் 2025

புதுப்பிக்கப்பட்டது 13 ஜூன் 2025

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களது இப்போதைய இலக்கு என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

"ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது

பட மூலாதாரம்,GETTY IMAGES

விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் பதிவிட்ட ராம் மோகன் நாயுடு "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 28 மணி நேரத்திற்குள் விமானத் தரவுப் பதிவை (கருப்புப் பெட்டி) மீட்டெடுத்துள்ளது. இது விசாரணையில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும். விபத்து குறித்த விசாரணை நடத்துவதில் இது பெரிதும் உதவும்" என்று தெரிவித்துள்ளார்

கடந்த சில மணிநேரத்தில், ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி உள்ளிட்ட செய்தி முகமைகள் ஒரு கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு முகமைகளும் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வருகின்றன.

விமானங்கள் வழக்கமாக இரண்டு கருப்புப் பெட்டிகளை - சிறிய ஆனால் கடினமான மின்னணுத் தரவு ரெக்கார்டர்களை - கொண்டு செல்கின்றன.

ஒன்று விமானி அறையிலிருந்து வரும் ஒலியைப் பதிவு செய்கிறது. இதனால் விமானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், ஏதேனும் அசாதாரண சத்தங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றையும் புலனாய்வாளர்களால் கேட்க முடியும். மற்றொன்று உயரம் மற்றும் வேகம் போன்ற விமானத் தரவுகளைப் பதிவு செய்கிறது.

போயிங் 787 பயன்பாட்டை ஏர் இந்தியா நிறுத்தப் போகிறதா?

சில இந்திய ஊடகங்களில், அரசாங்கம் அனைத்து போயிங் 787 விமானங்களின் பயன்பாட்டையும் நிறுத்தக்கூடும் என்ற செய்திகள் வந்தன.

அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அது உண்மையல்ல என்று கூறியுள்ளது. அப்போது, "இந்தச் செய்தி உண்மையல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு அதைப் பற்றி ஆலோசிக்கவில்லை," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

உயிர் பிழைத்த நபர் கூறியது என்ன?

விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தவர் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும், உயிர் பிழைத்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஜி.எஸ். மாலிக் கூறியுள்ளார்.

விமான நிறுவன அதிகாரிகள் முன்னர் பகிர்ந்த விமானம் குறித்த அறிக்கைப்படி, 11A இருக்கையில் இருந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்றும், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிகிறது.

"விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஷ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பலியான 15 வயது சிறுவன் – குடும்பத்தினர் பிபிசியிடம் கூறியது என்ன?

ஆமதாபாத் விமான விபத்து

ஆமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கொண்டு வந்த மருத்துவமனையில், மிகவும் துயரமான சில கதைகளைக் கேட்க முடிகிறது.

விபத்துக்குள்ளான விமானம் விழுந்த கட்டடத்தில் வசித்து வந்த ஆகாஷ் என்ற 15 வயது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கேள்விப்பட்டோம். அந்தச் சிறுவன் கட்டடத்தில் உள்ள உணவகத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார்

அந்த உணவகத்தில் ஆகாஷின் அம்மா சீதாபென்னும் பணிபுரிந்து வந்தார். விபத்து நிகழ்ந்ததும், தனது மகனைக் காப்பாற்ற அவர் உள்ளே சென்றபோது அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. சீதாபென் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆகாஷின் அண்ணா கல்பேஷை சந்தித்தோம், அவர் மிகவும் சோகமாக இருந்தார். தனது தம்பி மற்றும் தாய் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து அவர் அழுது கொண்டிருந்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் ஆகாஷின் தந்தையும் இருந்திருக்கிறார். திடீரென ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், உடனே அவர் அங்கு சென்றதாகவும் கூறினார். அருகில் சென்றபோது, எல்லா இடங்களில் இருந்தும் புகை வெளியேறிக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு சென்றபோது, அவரது மனைவி சீதாபென் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார், தனது மகன் உயிர் பிழைக்கவில்லை என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது.

பணி ஓய்வுக்குச் சில மாதங்களே இருந்த நிலையில் பலியான மூத்த விமானி

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து

படக்குறிப்பு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானி கேப்டன் சுமீத் சபர்வால்

இந்த விபத்தில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானியான கேப்டன் சுமீத் சபர்வாலும் ஒருவர்.

அவர் 8,200 மணிநேரத்திற்கும் மேல் விமானப் பயண அனுபவம் கொண்டவர். அத்துடன் விமானத்தில் மூத்த குழு உறுப்பினராக கேப்டன் சபர்வால் இருந்தார். அவர் ஒரு லைன் பயிற்சி கேப்டன் ஆவார். இது விமானக் குழுவினருக்கு வழிகாட்டும் பொறுப்பு. இந்தப் பணி மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.

அறுபது வயதான விமானி ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் அதிகாரியான தனது 82 வயது தந்தையுடன் அதிக நேரம் செலவிடத் திட்டமிட்டிருந்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"அவர் மிகவும் அமைதியான நபர். அவர் அடிக்கடி சீருடையில் வந்து செல்வதைப் பார்த்துள்ளோம். ஆனால், மிகவும் அமைதியானவராக இருந்தார்" என்று மும்பையில் உள்ள சபர்வாலின் அண்டை வீட்டுக்காரர் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது.

துணை விமானி, முதல் அதிகாரி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரம் விமானப் பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். மேலும், விபத்துக்குள்ளான ட்ரீம்லைனரை இயக்க சான்றிதழ் பெற்றவராகவும் இருந்தார்.

விமான விபத்தில் இறந்த 4 வயது பெண் குழந்தை

ஆமதாபாத் விமான விபத்து

பட மூலாதாரம்,FAMILY HANDOUT

இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையர் பகுதியை சேர்ந்த அகீல் நானாபாவா மற்றும் ஹன்னா வோராஜி, தங்களது நான்கு வயது மகள் சாராவுடன் விமான விபத்தில் இறந்தனர்.

இந்த குடும்பத்தின் சார்பாகப் பேசிய இமாம் அப்துல்லா, தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்தவற்றை புரிந்துக்கொள்ள முயல்வதாகவும் கூறினார்.

"இந்த இளம் குடும்பம் நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்தது - அர்ப்பணிப்புள்ள பெற்றோர் மற்றும் அவர்களின் அழகான இளம் மகள்," என்று அவர் கூறுகிறார்.

"அவர்கள் இரக்கமுள்ள, சுறுசுறுப்பான சமூக உறுப்பினர்கள், அவர்கள் எங்கள் உள்ளூர் இஸ்லாமிய பள்ளியிலும் பல்வேறு உள்ளூர் திட்டங்களிலும் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்தனர். அவர்கள் பரவலாக நேசிக்கப்பட்டனர் மற்றும் ஆழமாக மதிக்கப்பட்டனர்.

அவரது அமைதியான தாராள மனப்பான்மை, அவரது அரவணைப்பு மற்றும் கருணை மற்றும் அவர்களின் மகளின் பிரகாசமான, மகிழ்ச்சியான மனப்பான்மை அவர்களை அறிந்த அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவள் பள்ளியில் சூரிய ஒளியின் கதிர், அவர்கள் எங்கள் வாழ்க்கையில் பலத்தின் தூணாக இருந்தனர்" என்று அவர் கூறுகிறார்.

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பதிவில், "ஆமதாபாத்தில் நடந்த சோகம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதயத்தை உடைக்கிறது. இந்தச் சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன்" என்று கூறியுள்ளார்.

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

ஷார்ட் வீடியோ

Play video, "விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.", கால அளவு 0,46

00:46

காணொளிக் குறிப்பு,விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது மோதியதைத் தொடர்ந்து, சுமார் 50 முதல் 60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) தெரிவித்துள்ளது.

ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், குறைந்தது இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் FAIMA சங்கம் கூறுகிறது.

சில மருத்துவர்களின் உறவினர்களையும் காணவில்லை. அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியது என்ன?

இந்த விமான விபத்திற்கு பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"பிரிட்டன் நாட்டினர் பலரை ஏற்றிக் கொண்டு லண்டனுக்கு சென்ற விமானம், இந்திய நகரமான ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளானது தொடர்பான துயரக் காட்சிகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.

அங்குள்ள நிலைமை குறித்து நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்தத் துயரமான நேரத்தில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்டன் நாட்டினர் 53 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

படக்குறிப்பு,ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான இடத்தைக் குறிக்கும் வரைபடம்

"விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன," என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான 'ஃபிளைட் ரேடார் 24', "ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது," என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது.

தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.

ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும்.

இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிய நபர்

ஆமதாபாத் விமான விபத்து

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ரமிலா தனது மகன் மருத்துவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே குதித்து தப்பியதாகக் கூறுகிறார்.

அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே பதட்டமான உறவினர்களிடமிருந்து இப்போது எங்களுக்குத் தகவல் வரத் தொடங்கியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருக்கும் பூனம் படேல், தனது மைத்துனி லண்டன் செல்லும் விமானத்தில் இருந்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார்.

"ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

விமானம் விபத்துக்குள்ளானபோது, தனது மகன் மதிய உணவு இடைவேளைக்காக மருத்துவர்களின் விடுதிக்குச் சென்றிருந்ததாக ரமிலா கூறுகிறார்.

அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

குஜராத் முதலமைச்சர் கூறுவது என்ன?

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று கூறியுள்ளார்.

மேலும், "காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல பிரத்யேக அவசரக்கால வழித்தடங்களை ஏற்பாடு செய்வதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் உறுதி செய்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

பட மூலாதாரம்,BBC/TEJAS VAIDYA

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். "விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார்.

METAR என அழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது.

"அப்போது குறிப்பிடத்தக்க அளவில் மேகங்கள் இருந்ததாகவோ அல்லது மோசமான வானிலை நிகழ்வுகள் எதுவும் நிலவியதாகவோ எதுவும் பதிவாகவில்லை. அதீத காற்று, புயல் அல்லது இத்தகைய விபத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய பிற பாதகமான நிலைமைகள் குறித்த அறிகுறிகள் ஏதும் இல்லை" என்று சான் கூறுகிறார்.

சிக்கலில் போயிங் நிறுவனம்

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது.

அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது.

இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது.

தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும்.

அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு – டாடா குழுமம்

Play video, "ஏர் இந்தியா விமான விபத்து: புறப்பட்ட ஒரே நிமிடத்தில் விழுந்து நொறுங்கியது எப்படி?", கால அளவு 4,50

04:50

காணொளிக் குறிப்பு,

ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் ஆதரவளிப்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது.

"இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது" என்று டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், இந்த விபத்திற்குத் தனது "ஆழ்ந்த வருத்தத்தை" வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "இந்த நிகழ்வு தொடர்பான எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்கிறேன். ஏர் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே இதுவொரு கடினமான நாள். இப்போது எங்கள் முயற்சிகள் அனைத்தும், எங்கள் பயணிகள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்துவதில் மட்டுமே உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா அவசர உதவி எண்

ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn4qe1dz38no

விபத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

விமான பாதுகாப்பு விதிமுறைகளும் விமான தொழில்நுட்ப பராமரிப்புகளும் நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. அதேவேளை விமானப் பயணங்களும் அதிகரித்து வருகின்றது. ஒரு வருடத்தில் 3 கோடி விமானப் பறப்புகளில் ஏற்படும் 5 முதல் 6 விபத்துகள் மிகக் குறைவானவையே. இருந்தாலும் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு எதிர்காலத்தில் விமான பயணங்கள் மேலும் உறுதியடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமான விபத்து : உயிரிழந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி இரங்கல்

Published By: DIGITAL DESK 2

14 JUN, 2025 | 12:30 PM

image

இந்தியாவின் அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின், அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உட்பட சுமார் 265 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து இந்தியாவை மாத்திரமின்றி முழு உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சர்வதேச தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனப் பிரதமர் லீ கியாங்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217437

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த மற்றும் மருத்துவ மாணவர்களின் சிலரின் புகைப்படங்கள். RIP

#ahmedabad #IndiaGlitz

505372007_1149584260530598_1459684873141

504221656_1149584213863936_3075927382684

504376603_1149584240530600_7268855350530

506530080_1149584400530584_6884162684336

492881079_1149584333863924_3526585124699

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தில் விமானங்கள் பறந்து செல்வதை வேடிக்கை பார்த்த கண்கள் இப்போது பயத்தடன் பார்க்கின்றன.🫣

  • கருத்துக்கள உறவுகள்

Flight-ல் ஆபத்து காலத்தில் உதவ என்னென்ன இருக்கும்? Safety பற்றி கட்டாயம் தெரிய வேண்டிய தகவல்

ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின், இதற்கு முன்பு நடந்துள்ள விமான விபத்துக்கள் குறித்தும், விமானங்களின் தரம் குறித்தும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. விபத்துக்களுக்குக் காரணம் விமானங்களின் பராமரிப்பு குறைபாடா, மனிதப்பிழைகளா என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், விமானத்தின் முக்கிய பாகங்கள், அவற்றின் செயல்பாடுகள், பொதுவான விமானப் பராமரிப்பு முறைகள் குறித்து விமானவியல் துறை சார்ந்த நிபுணர்களிடம் பிபிசி தமிழ் கலந்துரையாடியது.

#AirIndia #FlightCrash #FlightSafety

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/watch/?v=1920993948667589

விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை........

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2025 at 12:52, இணையவன் said:

விமானப் பயணங்களும் அதிகரித்து வருகின்றது.

விமான கட்டணங்களின் விலை அதிகரிப்பு ,விமானப் பயணத்தால் ஏற்படும் சுற்றுபுற சுழல் பாதிப்பினால் விமானப் பயணம் இனி செய்வதில்லை என்ற ஆர்வலர்களின் முடிவு இவற்றால் விமானப் பயணங்க எதிர்காலத்தில் அதிகரிக்காது என்றும் சொல்லபடுகின்றது

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"தெளிவில்லாத கோடுகள், தேய்ந்து போன விமான டயர்கள்" : டிஜிசிஏ அறிக்கை பற்றி விமானிகள் என்ன சொல்கிறார்கள்?

ஆமதாபாத், குஜராத், ஏர் இந்தியா விபத்து, டிஜிசிஏ, விமானப் பாதுகாப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • இஷாத்ரிதா லாஹிரி

  • பிபிசி நிருபர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜூன் 26, 2025 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) டெல்லி மற்றும் மும்பை உட்பட நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய விமான நிலையங்களை ஆய்வு செய்ததாகக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் நடத்த விமான விபத்திற்குப் பிறகு இந்தத் தணிக்கை தொடங்கியது.

அந்த அறிக்கையில் எந்த விமான நிலையம் அல்லது விமான நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்திய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்டுள்ள தவறுகள் மற்றும் மீறல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு விமானத் துறையில் ஆய்வு மற்றும் விசாரணைக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனம் விமான நேரம் மற்றும் பணியாளர்களின் வேலை நேரம் தொடர்பான விதிகளைத் தொடர்ந்து மீறியதாகக் கூறி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு ஏர் இந்தியாவிடம் டிஜிசிஏ கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த இயக்கங்கள் கட்டுப்பாட்டு மையம் (ஐஒசிசி) இனி அதன் தலைமை இயக்க அதிகாரியின் (சிஒஒ) நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஐஒசிசி என்பது ஒரு விமான நிறுவனத்தின் முக்கிய அங்கம் ஆகும். இது பாதுகாப்பு மற்றும் விமானங்களின் தடையில்லா இயக்கம் ஆகியவற்றை உறுதி செய்யும். ஒரு விமான நிறுவனத்தில் இந்த மையம் தான் நிகழ் நேர திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் நிர்வகிப்பதற்கு பொறுப்பானது ஆகும்.

இவை விமானங்கள், விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் ரோஸ்டர்கள் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்கும் நிறுவனத்தின் இயக்கங்கள் துறையின் கீழ் வருகிறது.

டிஜிசிஏவின் சமீபத்திய நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதன் அறிக்கையைப் புரிந்து கொள்ள பிபிசி பல தொழிற்சார் விமானிகள் மற்றும் வான்வழி வல்லுநர்களிடம் பேசியது.

டிஜிசிஏ அறிக்கையில் என்ன உள்ளது?

ஆமதாபாத், குஜராத், ஏர் இந்தியா விபத்து, டிஜிசிஏ, விமானப் பாதுகாப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விமானத்தின் அமைப்பில் கண்டறியப்பட்ட குறைகள் லாக் புக்கில் பதிவு செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

விமான தொடர்புடைய பல முக்கிய விஷயங்கள் தணிக்கையில் சோதனை செய்யப்பட்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இவை விமானங்களின் இயக்கம், பாதுகாப்பு, தொடர்பு அமைப்புகள் மற்றும் விமான புறப்பாடுக்கு முன்பாக விமானியின் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கும்.

இதில் தெளிவில்லாத விமான ஓடுதளத்தில் கோடுகள் தொடங்கி மூன்று ஆண்டுகளாக தரவுகளை சரியாகப் பதிவேற்றாதது வரை டிஜிசிஏ பல குறைகளைக் கண்டறிந்துள்ளது.

அதில் ஒரு விமானம் தேய்ந்த டயர்கள் இருந்ததால் புறப்படுவதற்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே கண்டறியப்பட்ட குறைகள் விமானங்களில் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டதாக இந்த ஆவணம் பதிவு செய்துள்ளது. மோசமான கண்காணிப்பு மற்றும் குறைகளைக் களைவதில் போதாமை ஆகியவை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

"பராமரிப்பின் போது விமான பராமரிப்பு பொறியாளர் (ஏஎம்இ) விமான பராமரிப்பு கையேட்டின் படி (ஏஎம்எம்) போதிஒய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லை. சில இடங்களில் பழுது வேலைகளில் ஏம்இ ஈடுபடுத்தப்படவே இல்லை. விமானத்தின் அமைப்பில் கண்டறியப்பட்ட குறைகள் லாக் புக்கில் பதிவு செய்யப்படவில்லை" என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

ஓடுதளத்தில் காணப்படும் விலங்குகள்

ஆமதாபாத், குஜராத், ஏர் இந்தியா விபத்து, டிஜிசிஏ, விமானப் பாதுகாப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஓடுதளத்தின் நடுவில் உள்ள கோடு விமானம் தரையிறங்க உதவியாக இருக்கிறது.

வெவ்வேறு விமான நிறுவனங்களுக்கு பணியாற்றும் மூன்று விமானிகளிடம் டிஜிசிஏ அறிக்கையை பிபிசி பகிர்ந்தது.

அனைத்து விமானிகளும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் ஊடக கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள். இதனால் பெயரைக் குறிப்பிடாமல் அவர்கள் பிபிசியிடம் பேசினர்.

நேரத்திற்குள் பயணத்தை முடிக்க வேண்டும் மற்றும் அடுத்த பயணத்திற்கு தயாராவதற்கு வழங்கப்படும் குறுகிய நேரம் (டர்ன் அரௌண்ட்) போன்றவை தான் ஏஎம்இயிடம் இருந்து வரும் தொழில்நுட்ப சிக்கல்களை முறையாக கையாள்வதை கடினமாக்குகிறது என ஒரு விமானி தெரிவிக்கிறார்.

மேலும் அவர், "பொறியாளர் கடைசி நேரத்தில் ஒரு குறையை கண்டுபிடிக்கிறார் என்றால் விமானம் பறப்பதற்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதை முடிவு செய்வது கடினமாகிறது." என்றார்.

குறைவான டர்ன் அரௌண்ட் நேரத்தால் பராமரிப்புக்கு போதிய நேரம் இருப்பதில்லை என விமானி தெரிவிக்கிறார். இத்தகைய சூழலில் பொறியாளர் பராமரிப்பு விதிகளை கடைசி நேரத்தில் செயல்படுத்த வேண்டியதாகிறது.

பயணம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விமானத்தின் எந்த சாதனங்கள் அல்லது பகுதிகள் இல்லாமல் பறக்கலாம் என்பதை இந்தக் கையேடு சொல்கிறது.

"ஒரு சிக்கலான அமைப்பு மோசமானால் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரத்திற்கு பேக்அப் அமைப்பும் பழுதானால் என்ன செய்வது? இது வான்வெளி மற்றும் வானிலையின் நிலையையும் பொருத்தது. நேர அழுத்தமும் சூழ்நிலையை எங்களுக்கு மேலும் கடினமாக்குகிறது. எங்களால் அனைத்திற்கும் கவனம் செலுத்த முடியாது." என்று பிபிசியிடம் தெரிவித்தார்

மற்றுமொரு விமானி அந்த அறிக்கையில் எழுப்பப்பட்ட ஓடுதளத்தில் தெளிவற்ற கோடு தொடர்பான பிரச்சனையே மீண்டும் எழுப்பினார். அவரின் பத்து ஆண்டு கால அனுபவத்தில் ஓடுதளங்களில், அதிலும் குறிப்பான இரண்டாம் நிலை நகரங்களில் வேறு பல பிரச்னைகளைச் சந்தித்ததாகவும் கூறுகிறார்.

"இந்த விஷயங்கள் பற்றி பல வருடங்களாக நாம் அறிந்திருந்தோம். ஓடுதளத்தின் மத்திய கோடு விளக்குகள் சரியாக வேலை செய்வதில்லை. நாங்கள் ஓடுதளத்திற்கு வெளியே சென்றால் மரங்கள் மற்றும் புற்களால் அந்த குறியீடுகள் தெளிவாகத் தெரிவதில்லை. புற்கள் சரியான நேரத்தில் வெட்டப்படுவதில்லை" என அந்த விமானி கூறுகிறார்.

மேலும் அவர், "விமான ஓடுதளத்தில் பள்ளங்கள் உள்ள விமான நிலையங்களுக்கு நான் சென்றுள்ளேன். விலங்குகளும் அங்கு உலாவி வரும், சமயங்களில் மயில், மான், மாடு கூட உலாவக் கண்டுள்ளேன்" என்றார்.

விமானிகளும் விமானப் பணியாளர்களும் ஓய்வெடுக்க நேரம் கிடைப்பதில்லை என மூன்றாவது விமானி கவலை தெரிவித்துள்ளார். சில சமயங்களில் அவர்கள் ஒரே நாளில் ஐந்து செக்டார்கள் பறக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ஒரு செக்டார் என்றார் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறப்பதைக் குறிக்கும். திரும்பிச் செல்வது ரிட்டர்ன் செக்டார் என்று அழைக்கப்படுகிறது.

"நீங்கள் மாலை 4 மணிக்கு பயணத்தைத் தொடங்குகிறீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள், ஆனால் விமானி மற்றும் விமான பணிக்குழு காலை 4 மணியில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் சிரிக்க மறுக்கிறார்கள் என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் சோர்வாக இருந்திருக்கக்கூடும்" என அவர் தெரிவித்தார்.

சோதனைகள் முறையாக செய்யப்பட வேண்டும்

ஆமதாபாத், குஜராத், ஏர் இந்தியா விபத்து, டிஜிசிஏ, விமானப் பாதுகாப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எல்லை தொடர்பான தரவுகள் சில விமான நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது

டிஜிசிஏ முறையாக பரிசோதனைகளை நடத்த வேண்டும் என வான்வெளி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு விமான நிலையத்தைச் சுற்றியும் அப்ஸ்ட்ரக்ஷன் லிமிட் என ஒன்று உள்ளது. இந்த எல்லைக்கு உள்ளாக எந்த விதமான கட்டுமானம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட வேண்டும்.

இவை விமான நிலையங்களைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகும். விமானம் புறப்பட்டுச் செல்லவும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு விமானங்களில் தடங்கலற்ற இயக்கத்தை உறுதி செய்ய இந்தப் பகுதி தெளிவாக இருக்க வேண்டும்.

இந்த எல்லை தொடர்பான தரவுகள் சில விமான நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. விமான நிலையங்களைச் சுற்றி பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் எந்த சர்வேயும் மேற்கொள்ளப்படவில்லை.

"இவை ஒரு நாளில் நடக்காது. பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வாரத்தில் விமான நிலையத்திற்கு அருகே ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அப்போது டிஜிசிஏ எங்கு சென்றது?" எனக் கேட்கிறார் விமானத் துறை வல்லுநர் சஞ்சய் லஜர்.

ஓடுதளங்களைச் சுற்றி உள்ள கட்டடங்கள் பற்றி நீண்ட காலமாக விமானிகள் புகார் அளித்து வருகிறார்கள் எனக் கூறுகிறார் முன்னாள் விமானியும் வல்லுநருமான கேப்டன் எம்.ஆர்.வாடியா.

ஆமதாபாத், குஜராத், ஏர் இந்தியா விபத்து, டிஜிசிஏ, விமானப் பாதுகாப்பு விமான விபத்தில் சுமார் 279 பேர் கொல்லப்பட்டனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விமான விபத்தில் சுமார் 279 பேர் கொல்லப்பட்டனர்.

"ஓடுதளத்தின் மத்தியக் கோடு தெளிவாக இருக்க வேண்டும், குறிப்பாக ஜம்போ ஜெட் போன்ற விமானங்கள் புறப்படுகின்றபோது. இந்தக் கோடுகள் சட்டப்பூர்வமாகப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் கோடுகள்" என்றார்.

இந்த அறிக்கை மங்கலான ஓடுதளங்கள் மற்றும் தேய்ந்து போன டயர்களைவிடவும் பல தீவிரமான குறைகளைக் கண்டறிந்துள்ளதாக முன்னாள் விமானி மோகன் ரங்கநாதன் தெரிவிக்கிறார்.

சில விமானங்களின் விமானிகளுக்கு அவர்கள் வழக்கமாக பறக்கும் விமானத்தை விட வேறு விமானத்தின் சிமுலேட்டரில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது என டிஜிசிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"விமானத்துடன் ஒத்துப்போகாத சிமுலேட்டரைப் பயன்படுத்துவது தான் மிகவும் மோசமான தவறு. சிமுலேட்டரில் நடத்தப்பட்ட அனைத்து பயிற்சி அமர்வுகளும் செல்லாதவை என்பதே இதன் அர்த்தம். அந்த சிமுலேட்டரில் நீங்கள் பயிற்சியும் பெற முடியாது திறனை சோதனை செய்யவும் முடியாது. எனவே இந்த சிமுலேட்டரில் பயிற்சி பெற்ற அனைத்து விமானிகளின் உரிமமும் தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் செல்லாதது ஆகிவிடும்." எனக் கூறுகிறார் வாடியா.

ஏர் இந்தியா விபத்து

குஜராத்தில் ஜூன் 12 அன்று ஆமதாபாத் செல்லவிருந்த ஏர் இந்தியாவின் ஏஐ-171 விபத்துக்குள்ளானது.

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர்.

புறப்பட்ட சில வினாடிகளிலே விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அதே வேளையில் விமானம் கட்டடத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். கடந்த பத்தாண்டில் உலகம் முழுவதும் நடைபெற்ற விபத்துக்களில் மோசமான விபத்தாக இது மாறிப்போனது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn7dzkynpv5o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஏராளன் said:

தெளிவில்லாத கோடுகள், தேய்ந்து போன விமான டயர்கள்" : டிஜிசிஏ அறிக்கை பற்றி விமானிகள் என்ன சொல்கிறார்கள்?

அணுகுண்டு வைத்திருந்தால் மட்டும் போதாது. மக்கள் நலனை சரியாக கவனிக்கணும். வெளி நாட்டிற்கு வந்து படித்தால் மட்டும் போதாது. வெளிநாட்டில் படித்ததை சொந்த நாட்டிற்கு பிரயோசனப்படுத்தணும்.😁

சுந்தர் பிச்சை மாதிரி விலை போகக்கூடாது. 🤣

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அகமதாபாத் விமான விபத்து : உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் நச்சு இரசாயனங்கள்! ; பிரேத அறை ஊழியர்களை நெருங்கும் ஆபத்து! - பிரிட்டன் அதிர்ச்சித் தகவல் 

04 Dec, 2025 | 02:58 PM

image

கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த  பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் ஆபத்தான நச்சு இரசாயனங்கள் அதிகளவில் காணப்பட்டதாக இவ்விபத்து தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் அந்நாட்டின் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

ஜூன் மாதம் 12ஆம் திகதி அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் போயிங் 787 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளில் அதன் கட்டுப்பாட்டை இழந்து, 600 அடி உயரத்தில் உள்ள கட்டடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.

அவ்விமானத்தில் இருந்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர ஏனைய 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தமாக 260 பேர் உயிரிழந்தனர். 

அந்த விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரஜையான விஸ்வாஸ்குமார் ரமேஷ் (வயது 40) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, 53 பேர் பிரிட்டன் பிரஜைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அதனையடுத்து, உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்கள் பிரிட்டனுக்கு  அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகின.

அந்நாட்டின் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரியான பேராசிரியர் ஃபியோனா வில்கொக்ஸ் (Fiona Wilcox) விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகள்  தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். 

அந்த அறிக்கையில், உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் ஃபோர்மலின், கார்பன் மொனொக்சைட், சயனைட் ஆகிய ஆபத்தான நச்சு இரசாயனங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் வெஸ்ட்மின்ஸ்டர் பொதுப் பிரேத அறையில், இரசாயனங்கள் காணப்படும் உடல்களை கையாள்வதால் ஊழியர்களும் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சவப்பெட்டிகளை திறக்கும்போது வெளிவரும் இரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றால் சுவாசப் பிரச்சினைகள், வளர்சிதை மாற்ற சிக்கல்கள், சிலவேளைகளில் உயிராபத்தும் உண்டாகக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், நச்சு இரசாயனங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தீவிர நிலைக்குச் செல்வதை தடுக்க, இங்கிலாந்து அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/232430

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.