Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picsart_25-10-21_11-21-08-175-780x899.jpg

பாறுக் ஷிஹான்

தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

1990 ஆண்டு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இந்த காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு சென்ற காலம்.அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த காலம்.1987 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம்.அதே நேரம் தங்களை மேலும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்று யோசனை செய்கின்றார்கள்.அவ்வாறு யோசிக்கின்ற போது தற்போது உள்ளது போன்று 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்ள காலப்பகுதியில் தங்கத்திற்காக விலை அதிகமாக இருந்தது.

எனவே தங்கத்தின் ஊடாக தங்களது அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வாறு தங்கத்தை மீட்டெடுத்தல் என்ற எண்ணத்தில் ஈடுபட்டார்கள்.வட மாகாண முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.அதில் ஒன்று அன்று இருந்த தங்கத்தின் விலை காரணமாக தங்கத்தை சர்வதேசத்தின் ஊடாக கொண்டு சென்று அதனூடாக பணத்தை திரட்டி அதனூடாக ஆயுத கொள்வனவில் ஈடுபடலாம் என்ற ஒரு ஆய்வும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளது.

அந்த ஆய்வின் ஊடாக தான் வட மாகாண முஸ்லீம்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்காக பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என பலரும் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இருக்கின்ற போது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வடக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஓர் ஆணைக்குழுவினை நியமித்து முக்கியமாக இவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான அறிக்கையினை செய்து தருமாறு கோரியிருந்தோம்.ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது நியமிக்கப்படவில்லை.அவ்வாறான ஆய்வும் மேற்கொள்ளப்படவும் இல்லை.உண்மையில் அது வேதனைக்குரிய விடயம்.நான் இன்றும் கூட மகஜர் ஒன்றினை எழுதி கொண்டு வந்திருக்கின்றேன்.இந்த மகஜர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் ஊடாக அனுப்புவதற்கு எழுதப்பட்டுள்ளது.இந்த மகஜரில் அதே விடயத்தை மீண்டும் போட்டிருக்கின்றேன்.சுமார் 35 வருடங்களுக்கு பிறகும் ஒரு விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டு வருகின்றோம்.

எனவே அந்த அடிப்படையில் வட மாகாண முஸ்லீம்கள் தங்கத்திற்காக அல்லது தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக வேண்டி வெளியேற்றப்பட்டார்கள்.என்ற மிகவும் வேதனையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் என்பது அந்த பிரதேசத்தில் வியாபாரிகள் மீனவர்கள் விவசாயிகள் என சுமார் 75 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர் வரை வெளியெற்றப்பட்டார்கள் என தெரிவித்தார்.

Madawala News

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...

பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய

  • Replies 67
  • Views 2.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூட

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மே

  • குமாரசாமி
    குமாரசாமி

    உங்கள் உதாரணங்களுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? பக்கிங்காம் அரண்மனையே நாறி நசிந்து சகதிக்குள் அழிந்து கொண்டிருக்கு. (அண்மைய சம்பவங்கள் கேவலத்திலும் கேவலம்) சகோ! இன்னும் றோயல் நினைப்பிலையே திரியிறியள் போ

  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா மன்னாரில் இருந்து கூட்டிவந்த தங்கமும்… இந்த தங்கமும் ஒண்டா 😂

11 minutes ago, colomban said:

மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்காக பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது

ஒரு விடயம் நான் சந்தித்த, பேசிய, இவ்வாறு வெளியேற்ற பட்ட ஒவ்வொருவரும் தாம் மிக சொற்ப பணத்தை மட்டுமே எடுத்து சொல்ல அனுமதிக்கபட்டதாக கூறுகிறார்கள்.

அப்படியாயின் அவர்கள் எல்லாரும் கூட்டமாக பொய் சொல்கிறார்களா?

ஆனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அனுப்பி வைத்தோம் என்கிறனர் யாழ்கள அண்ணைமார்.

அதே சமயம் புலி போராளிகள் முஸ்லிம்களிடம் தாமாகவே உடமைகளை பறித்து கொள்ளும் அளவுக்கு காவாலிகள் இல்லை.

இப்படி நடந்தால் அது தலைமை சொல்லியே நடந்திருக்கும்.

உண்மையில் என்ன நடந்தது ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

Picsart_25-10-21_11-21-08-175-780x899.jpg

பாறுக் ஷிஹான்

தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

1990 ஆண்டு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இந்த காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு சென்ற காலம்.அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த காலம்.1987 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம்.அதே நேரம் தங்களை மேலும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்று யோசனை செய்கின்றார்கள்.அவ்வாறு யோசிக்கின்ற போது தற்போது உள்ளது போன்று 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்ள காலப்பகுதியில் தங்கத்திற்காக விலை அதிகமாக இருந்தது.

எனவே தங்கத்தின் ஊடாக தங்களது அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வாறு தங்கத்தை மீட்டெடுத்தல் என்ற எண்ணத்தில் ஈடுபட்டார்கள்.வட மாகாண முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.அதில் ஒன்று அன்று இருந்த தங்கத்தின் விலை காரணமாக தங்கத்தை சர்வதேசத்தின் ஊடாக கொண்டு சென்று அதனூடாக பணத்தை திரட்டி அதனூடாக ஆயுத கொள்வனவில் ஈடுபடலாம் என்ற ஒரு ஆய்வும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளது.

அந்த ஆய்வின் ஊடாக தான் வட மாகாண முஸ்லீம்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்காக பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என பலரும் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இருக்கின்ற போது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வடக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஓர் ஆணைக்குழுவினை நியமித்து முக்கியமாக இவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான அறிக்கையினை செய்து தருமாறு கோரியிருந்தோம்.ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது நியமிக்கப்படவில்லை.அவ்வாறான ஆய்வும் மேற்கொள்ளப்படவும் இல்லை.உண்மையில் அது வேதனைக்குரிய விடயம்.நான் இன்றும் கூட மகஜர் ஒன்றினை எழுதி கொண்டு வந்திருக்கின்றேன்.இந்த மகஜர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் ஊடாக அனுப்புவதற்கு எழுதப்பட்டுள்ளது.இந்த மகஜரில் அதே விடயத்தை மீண்டும் போட்டிருக்கின்றேன்.சுமார் 35 வருடங்களுக்கு பிறகும் ஒரு விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டு வருகின்றோம்.

எனவே அந்த அடிப்படையில் வட மாகாண முஸ்லீம்கள் தங்கத்திற்காக அல்லது தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக வேண்டி வெளியேற்றப்பட்டார்கள்.என்ற மிகவும் வேதனையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் என்பது அந்த பிரதேசத்தில் வியாபாரிகள் மீனவர்கள் விவசாயிகள் என சுமார் 75 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர் வரை வெளியெற்றப்பட்டார்கள் என தெரிவித்தார்.

Madawala News

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...

பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய
Madawala News

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...

பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய

அட ..உண்மை விளம்பிகள்...ஏற்காவிட்டால் வாறகிழமை காத்தான்குடியில் ஆற்பாட்டம் செய்வோம்...குருக்கள் மடத்தில் அவசரமாக தோண்ட நினைத்தினம் நடக்கவில்லை ...இப்படியாவது தோண்டுவம் ...புலிக்காக ஆர் கதைக்க இருக்கினம் ...வச்சிருக்கிற தங்கத்திலை பங்கு கேட்கினம் ...குரங்கு அப்பம் பிட்ட கதை ...இன்னும் மறக்கவில்லை...முசுலிம்களுக்கு இப்ப அரசியல் வறுமை ...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் முஸ்லீம்களை வடக்கில் கொண்டு வந்து குடியேற்ற பிளான் போடுகிறார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அருச்சுனா மன்னாரில் இருந்து கூட்டிவந்த தங்கமும்… இந்த தங்கமும் ஒண்டா 😂

ஒரு விடயம் நான் சந்தித்த, பேசிய, இவ்வாறு வெளியேற்ற பட்ட ஒவ்வொருவரும் தாம் மிக சொற்ப பணத்தை மட்டுமே எடுத்து சொல்ல அனுமதிக்கபட்டதாக கூறுகிறார்கள்.

அப்படியாயின் அவர்கள் எல்லாரும் கூட்டமாக பொய் சொல்கிறார்களா?

ஆனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அனுப்பி வைத்தோம் என்கிறனர் யாழ்கள அண்ணைமார்.

அதே சமயம் புலி போராளிகள் முஸ்லிம்களிடம் தாமாகவே உடமைகளை பறித்து கொள்ளும் அளவுக்கு காவாலிகள் இல்லை.

இப்படி நடந்தால் அது தலைமை சொல்லியே நடந்திருக்கும்.

உண்மையில் என்ன நடந்தது ?

வெளியேற்றப் பட்ட முஸ்லிம் குடும்பங்கள் "ஒரு தொகைப் பணம் எடுத்துச் செல்லலாம். வீட்டுச் சாமான்களை எடுத்துச் செல்ல முடியாது" என்ற நிபந்தனை இருந்ததாக அறிந்திருக்கிறேன். மீறி தங்க நகைகளை எடுத்துச் செல்ல முயன்றவர்களிடம் அவை பலவந்தமாகப் பறிக்கப் பட்டதாக செவிவழிச் செய்திகள் கேள்விப் பட்டேன். எவ்வளவு பரவலாக இது நடந்தது என அறியேன் (இவையெல்லாம் செய்திகளாக அந்த நாட்களில் உதயனில், ஈழநாட்டில் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும், எனவே பதிவுகள் இல்லை).

யாழ் நகர நவீன சந்தையில் பான்சி (Fancy) கடைகள் என நாம் அழைக்கும் வீட்டு அலங்கரிப்புப் பிளாஸ்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள் பல முஸ்லிகளுக்குச் சொந்தமாக இருந்தன. அவற்றின் திறப்புகள் பலவற்றை "நாம் பத்திரமாக பாதுகாக்கிறோம்" என்று கூட்டம் வைத்து உறுதி கொடுத்து புலிகளின் அரசியல் துறையினர் வாங்கிக் கொண்டனர். சில உரிமையாளர்கள், தங்கள் கடைத் திறப்புகளைப் புலிகளிடம் கொடுக்காமல் அயல் கடைகளின் உரிமையாளர்களான தமிழர்களிடம் கொடுத்திருக்கின்றனர். அடுத்த சில வாரங்களுக்குள் இந்தத் திறப்புகளையும் புலிகள் தமிழ்க் கடைக் காரர்களிடமிருந்து வாங்கிக் கொண்டனர். திறப்புகள் இல்லாத கடைகளை உடைத்துத் திறந்தனர். அந்தப் பொருட்களுக்கு என்ன ஆனது?

யாழ் அரச ஆஸ்பத்திருக்குப் பின் வீதியில், நியூ மாஸ்ரர் ரியூசன் கொட்டிலுக்கு அருகில் "எழிலகம்" என்ற பெரிய கடையொன்றைத் திறந்தனர். அங்கே வைத்து முஸ்லிம் வர்த்தகர்களிடமிருந்து எடுக்கப் பட்ட வீட்டு அழகு சாதனப் பொருட்கள் விற்கப் பட்டன. விற்ற பணத்தை யார் எடுத்துக் கொண்டார்கள் என்பதை ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

தனிப்பட நான் அறிந்த சில கதைகள் கொடுமையானவை. அந்தக் காலங்களில் ஊரில் துணி லெங்த் எடுத்து ரெய்லரிடம் போய்த் தான் உடைகள் தைப்போம் - கடையில் புத்தாடை வாங்குவதை விட அது தான் மலிவானது. எனக்கும் என் அண்ணருக்கும் உடைகள் தைக்கும் ரெய்லர்கள் இரட்டையர்களான முஸ்லிம் இளைஞர்கள். நவீன சந்தைக்கு வெளியே இருந்த, ஒரு கடை என்று சொல்ல முடியாத ஒரு hole in the wall இல் இரண்டு காலால் இயக்கும் தையல் இயந்திரங்களை வைத்துத் தான் தங்கள் தொழிலைச் செய்து வந்தனர். அவர்கள் தங்கள் தையல் இயந்திரங்களை தம்மோடு எடுத்துச் செல்ல புலிகள் அனுமதிக்கவில்லை என அண்ணர் சொன்னார். எப்படி இருந்திருக்கும் அவர்களுக்கு என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இல்லை. தலைவர், தலைமை இப்போது இல்லை. தலைவர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு வெளி ஆட்களால் காரண காரியங்களை ஊகிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது.

தமிழ் மக்களிடம் குடும்பத்திற்கு ஆகக்குறைந்தது இரண்டு பவுண்கள் கட்டாயமாக வாங்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் சொத்துக்கள், தங்கம் உட்பட விடுதலைப்புலிகள் அமைப்பினால் சுவீகரிக்கப்பட்டது.

அமைப்பின் உள்ளே ஆட்டையை போட்டவர்கள் உள்ளார்கள். சிலர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்றார்கள். கண்டுபிடிக்கப்படாமல் ஆட்டையை போட்டவர்கள் யார் யாரோவோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தகவல்களுக்கு நன்றி.

எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். மன்னார் பையன். எல்லாமும் நடந்து முடிந்த பின் கொழும்பில் பழக்கமானோம்.

நாம் புலிகளை போற்றி ஏற்றும் போதெல்லாம், அவனிடம் எந்த சலனமும் இருக்காது. தமிழ் மொழி மீது அதீத பற்றுடன் இருந்தான்.

இருபது வருடங்களின் பின் ஒருநாள் மிக சாதாரணமாக ஒரு நாள் சொன்னான் ……

“நான் எங்கடா புத்தளம், என் சொந்த ஊர் மன்னார் - ஒரு நாள் இரவு கொட்டும் மழையில், உடுத்த உடுப்பையும் சொப்பிங் பாக்கில் சிலதையும் தவிர மிகுதி அனைத்தையும் பறிகொடுத்து விட்டு, ஒரு வள்ளத்தில் புத்தளம் வந்து இறங்கினோம். போக இடமில்லை. களைப்பு. அந்த கடற்கரை மணலிலே, கொட்டும் மழையில் படுத்து தூங்கினோம், இதுதான் எனக்கும் புத்தளத்துமுமான உறவு”…

என்போன்றவர்களிடம் எல்லாம் அவனால் எப்படி சிரித்து பழக முடிகிறது என்பது இன்று வரை புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் ஈழ விடுதலைப் போராளிகளை அழிக்க அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. யாழில் இருந்த முசுலீம்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களோடு, இலங்கை அரசு வழங்கிய பெருவளவான ஆயுதங்களையும் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததை போராளிகளோடு இணைந்திருந்த சில முசுலீம்களே போராளிகளுக்கு அறியத்தந்ததாக அறிந்தேன். இந்த விடையத்தை அனைவரும் அறியும் நிலை ஏற்பட்டால் அங்குள்ள அப்பாவி முசுலீம்களோடு அந்த இனமே தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டிருக்கும். அதனைத் தவிர்க்கவே தலைவர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப் பணித்தார். உண்மை தெரிந்தவர்களே என்னைப் பொய்யனாக்கி தங்களுக்கு சார்பாக எழுதுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நியாயம் said:

விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இல்லை. தலைவர், தலைமை இப்போது இல்லை. தலைவர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு வெளி ஆட்களால் காரண காரியங்களை ஊகிக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது.

இது சரிதான்.

ஆனால் இப்படி நடந்ததா (தங்க பறிப்பு) என்பதை தரவு பூர்வமாக நிறுவ முடியும்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக

ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார்.

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை.

இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா?

உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம்.

முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம்.

போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா?

முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம்.

இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது.

இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி.

ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது.

இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

நான் அறிந்தவரையில் ஈழ விடுதலைப் போராளிகளை அழிக்க அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. யாழில் இருந்த முசுலீம்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களோடு, இலங்கை அரசு வழங்கிய பெருவளவான ஆயுதங்களையும் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததை போராளிகளோடு இணைந்திருந்த சில முசுலீம்களே போராளிகளுக்கு அறியத்தந்ததாக அறிந்தேன். இந்த விடையத்தை அனைவரும் அறியும் நிலை ஏற்பட்டால் அங்குள்ள அப்பாவி முசுலீம்களோடு அந்த இனமே தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டிருக்கும். அதனைத் தவிர்க்கவே தலைவர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப் பணித்தார். உண்மை தெரிந்தவர்களே என்னைப் பொய்யனாக்கி தங்களுக்கு சார்பாக எழுதுவார்கள்.

இந்த விளக்கம் இங்கே பலமுறை கொடுக்கபட்டு விவாதிக்கபட்ட ஒன்றுதான்.

ஆனால் இங்கே சிலாகிப்பது வெளியேற்றியமைக்கான காரணம் பற்றி அல்ல.

மாறாக தங்கத்தை பறித்து விட்டு அனுப்பினார்களா என்பதை பற்றியே.

அதை பற்றி உங்கள் கருத்தை எழுதுங்கள் ஐயா.

ஏன் என்றால் இது நடந்த அதே மாதம் சரியாக நான்கு ஆண்டுகளில் ரிவிரெச ஆமி யாழைப் பிடித்த போது தமிழர்களையும் “அவர்கள் பாதுகாப்பு கருதி” புலிகள் முதலில் வரணிக்கும், பின் வன்னிக்கும் இடம்பெயர பணித்தார்கள்.

ஆனால் யாழ் தமிழர்கள் ஆடு மாடு கோழி, வீட்டு கதவு ஈறாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

இரெண்டு வெளியேற்றத்துக்கும் வித்தியாசம் உள்ளதா? அப்படியாயின்…

ஏன்?

37 minutes ago, நியாயம் said:

தமிழ் மக்களிடம் குடும்பத்திற்கு ஆகக்குறைந்தது இரண்டு பவுண்கள் கட்டாயமாக வாங்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் சொத்துக்கள், தங்கம் உட்பட விடுதலைப்புலிகள் அமைப்பினால் சுவீகரிக்கப்பட்டது.

அனைவரிடமும் அல்ல.

கொடுக்க கூடிய தமிழரிடம் மட்டுமே மண்மீட்பு நிதி சேகரிக்கப்பட்டது.

கொஞ்சம் அதட்டி வாங்கினாலும், ரசீது தந்தார்கள். சுழற்சி முறையில் அதிஸ்டசாலிகளுக்கு புலி இலச்சினை போட்டு மீளவும் அளித்தார்கள்.

இது தமிழரிடம்.

முஸ்லீம்களிடம் சுபீகரித்தார்கள் எண்டால் - அது இரெண்டு பவுணுக்கு மேலே வருமே, அதுவும் ஏழை பணக்காரன் எல்லாரிடமும்?

41 minutes ago, நியாயம் said:

அமைப்பின் உள்ளே ஆட்டையை போட்டவர்கள் உள்ளார்கள். சிலர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்றார்கள். கண்டுபிடிக்கப்படாமல் ஆட்டையை போட்டவர்கள் யார் யாரோவோ?

தலைவர் இருக்கு மட்டும், அதுவும் யாழில், வன்னியில் இதுக்கு வாய்ப்பே இல்லை. அதுவும் ஊரறிய முஸ்லிகளிடம் பணத்தை, பவுனை ஒரு போராளியோ, தளபதியோ வாங்கி தம் பையில் போட்டால் - அவர் கதையே ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார்.

மிக நியாயமான கேள்வி.

13 minutes ago, valavan said:

இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.

அண்மைய அமைச்சரவை மாற்றம் மூவரை உள்வாங்கி உள்ளது.

ஆனால் இன்னும் ஒரு வட மாகாண தமிழர் இல்லை.

அனுரவுக்கு அவர்களின் குணமும் தெரியும் போல 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, valavan said:

ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார்.

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை.

இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா?

உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம்.

முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம்.

போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா?

முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம்.

இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது.

இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி.

ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது.

இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.

உண்மையை இடித்துரைத்ததிற்கு நன்றி ....இந்த செய்தி அவர்களால் இங்கு எறியப்பட்டதிற்கே ...இங்கு பதியப்படும் செய்திகளை நியாயப்படுத்த உதவ...நம்ம இனமோ ..அரிச்சந்திரன் கணக்கா ..வாய்மையே வெல்கின்றோம் ..நாங்கள் எப்படி நீதியாய் நடந்தாலும் ...அவர்கள் ..எங்களை அழிக்கும் ஆயுதமாகவே பாவிப்பார்கள்.. இல்லாத தங்கக்கதையும் ...தங்கம் மீளளிப்பு செய்ய்ப்போகினம் என்றவுடன் ..பாய்ந்து ஆராயினம் ...இதனை நாமெல்லோ உணரவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் எப்படி சம்பந்தப்பட்ட இருதரப்பும் தங்களில் பிரச்சினை இல்லை என நிறுவ முயற்சிப்பதாலேயே இது ஒரு தொடர்கதையாக தொடரும் நிலை உருவாகிறது.

ஒரு தரப்பு தமது தரப்பு தவறினை ஒப்புக்கொண்ட பின்னரும்; அவர்கள் சார்ந்தவர்கள் அதனை நியாப்படுத்த முனைகின்றனர், மறு தரப்போ தம்மீது எந்த தப்புமில்லை என பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பது போல முயற்சிக்கிறார்கள், பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பிரச்சினைக்கான மூல காரணம் அறியப்பட வேண்டும் ,ஆனால் இங்கு அதனை வெளிக்கொணர சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பாத போது; இது போல பிரச்சினைகள் சமூகங்களிடையே மீண்டும் மீண்டும் எதிர்காலத்திலும் தோன்றும்.

ஒரு சிலரின் செயல்களை ஒரு சமூகத்தின் மீது சுமத்துவதனை என்னவென்று கூறலாம்?

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இல்லாத தங்கக்கதையும் ...தங்கம் மீளளிப்பு செய்ய்ப்போகினம் என்றவுடன் ..பாய்ந்து ஆராயினம் ...

இதை கொஞ்சம் விரிவா எழுத முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, vasee said:

இந்த விடயத்தில் எப்படி சம்பந்தப்பட்ட இருதரப்பும் தங்களில் பிரச்சினை இல்லை என நிறுவ முயற்சிப்பதாலேயே இது ஒரு தொடர்கதையாக தொடரும் நிலை உருவாகிறது.

ஒரு தரப்பு தமது தரப்பு தவறினை ஒப்புக்கொண்ட பின்னரும்; அவர்கள் சார்ந்தவர்கள் அதனை நியாப்படுத்த முனைகின்றனர், மறு தரப்போ தம்மீது எந்த தப்புமில்லை என பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பது போல முயற்சிக்கிறார்கள், பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பிரச்சினைக்கான மூல காரணம் அறியப்பட வேண்டும் ,ஆனால் இங்கு அதனை வெளிக்கொணர சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பாத போது; இது போல பிரச்சினைகள் சமூகங்களிடையே மீண்டும் மீண்டும் எதிர்காலத்திலும் தோன்றும்.

ஒரு சிலரின் செயல்களை ஒரு சமூகத்தின் மீது சுமத்துவதனை என்னவென்று கூறலாம்?

இதில் அரசியலும் உள்ளது.

புலிகள் முஸ்லிம்கள் மீது செய்ததை சொல்லும் முஸ்லிம் அவர்களிடம் ஹீரோ.

முஸ்லிம்களின் குழுக்கள் தமிழர் மீது செய்ததை சொல்லி, புலிகள் செய்ததையும் நியாயப்படுத்துவோர் எம்மிடம் ஹீரோக்கள்.

இங்கே எவ்வளோ எழுதுகிறார்கள் முக்கி, முக்கி.

நான் கேட்ட கேள்வி ஆம் இல்லை அல்லது தெரியவில்லை என பதில் சொல்ல கூடிய எளிய கேள்வி.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடம் புலிகள் நகை, பணம், இதர பொருட்களை பிடுங்கி கொண்டார்களா?

மறுவளமாக முஸ்லிம்களும் இப்படித்தான்.

வீடமுனையை நாசம் பண்ணினீர்களா? என கேட்டால் எத்தனை முஸ்லிம்கள் உண்மையை ஏற்பார்கள்?

ஹிஸ்புலா காளிகோவிலை மாட்டு தொழுவம் ஆக்கினேன் என மேடையில் பேசவில்லையா?

அவர்களில் யாரும் பேசினாலும் “முஸ்லிம் அரிச்சந்திரன்” - இப்படியான விடயம் பேசாமல் விடுவதே சிறப்பு என ஏனையோர் அடக்கி விடுவார்கள்.

மன்னிப்பு பற்றி சீமான் திரியில் எழுதியதுதான்.

Truth and reconciliation உண்மையும், பரஸ்பர மன்னித்து மீள் ஏற்றலும்.

இதில் உண்மையை தவிர்த்து விட்டு, மன்னிப்பு வெறும் வார்த்தைகளால் வராது.

இது முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் மட்டும் அல்ல, சிங்களவருக்கும்ப்பொருந்தும்.

52 minutes ago, vasee said:

ஒரு தரப்பு தமது தரப்பு தவறினை ஒப்புக்கொண்ட பின்னரும்; அவர்கள் சார்ந்தவர்கள் அதனை நியாப்படுத்த முனைகின்றனர்,

லொஜிக் மருந்துக்கும் இல்லாத நிலைப்பாடு.

முஸ்லிம்களை பாதுகாக்க வெளி ஏற்றினால் அது தவறல்ல அவர்களுக்கு செய்த நன்மை.

நன்மை செய்யமைக்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா?

நான் நினைக்கிறேன் இவர்கள் யாருக்காவது பெரும் நன்மையை செய்து விட்டு, நன்மை செய்தமைக்கு மன்னிபும் கேட்கும் அளவுக்கு அப்பாவிகள் என😂

  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்க:

புலிகள் ஒரு போதும் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்கிருந்தார்கள், காட்டி கொடுத்தார்கள், பாதுகாப்புக்கு வெளி ஏற்றினோம் என்ற எந்த விளக்கத்தையும் கொடுத்து நான் அறியவில்லை.

ஏன் வெளியேற்றினார்கள் என்பது, வெளிப்படையானது obvious.

கிழக்கில் நடந்த கொடுரத்துக்கு பதிலாக….

இனியும் செய்யவேண்டாம் என மிரட்ட….

கிழக்கு தமிழருக்கு உங்களுக்காக நாம் இருக்கிறோம் என காட்ட…..

இவைதான் காரணங்கள்.

மிக நியாயமான காரணங்கள்.

ஆனால் ….

இந்த நடவடிக்கை நியாயமானதா, விவேகமானதா, நீண்ட கால நோக்கில் அனுகூலமானதா? இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

vஎது செருப்பு தைச்சு உடுப்பு தைச்சு உழைச்ச காசில் வாங்கிய தங்கத்தைப்பறிப்பதற்காகவா?அது சரி இவ்வளவு காலமும் இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதியும் ஏன் பேசவில்லை. அவர்பேசாவிட்டாலும் இந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பேசாமல்விட்டிருக்க மாட்டார்களே. இப்பொழுது இவரின் வாலைப்பிடித்துக் கொண்டு மாணிக்கங்கள் ஒவ்வொருவராக வெளியில்வருகிறாரகள் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் அப்ப பிறக்கவேயில்லை பிறகு எப்படி தங்கத்திற்காக வெளியேற்றினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புலவர் said:

அது சரி இவ்வளவு காலமும் இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதியும் ஏன் பேசவில்லை

மிகவும் நல்ல கேள்வி (எங்கேயோ கேட்ட குரல்😂).

சீரியசாகவே இது கேட்க வேண்டிய கேள்வி. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை இப்படித்தான் கேள்விகள் மூலம் முன்வைக்க வேண்டும்.

எனது பங்குக்கு மேலதிகமாக….

புலிகள் மன்னிப்பு கேட்ட சமயம் மீள வரும் போது வீடுகளை, வியாபார தலங்களை மீளளிப்பதாக சொன்னார்கள்.

அதே சமயம் இந்த நகைகளுக்கான ஒரு டோக்கன் நஸ்ட ஈட்டை ஏன் எவருமே கோரவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, valavan said:

ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார்.

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை.

இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா?

உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம்.

முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம்.

போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா?

முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம்.

இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது.

இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி.

ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது.

இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.🙏

சரி பிழைகளுக்கு அப்பால் வன்மம் தொடரக்கூடாது என்பது என் நிலைப்பாடு.செய்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வைத்த விடயத்திற்கு மீண்டும் அடியும்/தடியும் எடுத்து கொடுக்கும் கருத்துக்கள் இனியும் கூடாது என நினைக்கிறேன்.இன்று தமிழ் நிலப்பரப்புகளில் இனவாத சிங்களத்தால் பல தனியார் நில அபகரிப்புகள் நடைபெறும் வேளையில் மீண்டும் மீண்டும் தவறுகளை மட்டும் புனரமைப்பதன் நோக்கங்களை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்களாக.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, புலவர் said:

இப்பொழுது இவரின் வாலைப்பிடித்துக் கொண்டு மாணிக்கங்கள் ஒவ்வொருவராக வெளியில்வருகிறாரகள் போல் தெரிகிறது.

அருவருக்கதக்க கருத்தை விட்டு விட்டு கருத்தாளரை தாக்கும் பதிவு.

ஒருவர் தனது தரப்பு நியாயத்தை நீர்த்து போக செய்து, உலக ஒப்பினையை தனக்கு எதிராக திருப்ப இது மிக உதவியாக இருக்கும்.

சமாதான காலத்தில் புலிகளின் அனுதாபிகள் என பலர் இப்படித்தான் அவர்களுக்கு குழி பறித்தார்கள்.

27 minutes ago, island said:

தங்கம் அப்ப பிறக்கவேயில்லை பிறகு எப்படி தங்கத்திற்காக வெளியேற்றினார்கள்?

இந்த ஜோக் காப்புரிமை செய்யப்பட்டது 😂

9 hours ago, goshan_che said:

அருச்சுனா மன்னாரில் இருந்து கூட்டிவந்த தங்கமும்… இந்த தங்கமும் ஒண்டா 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

தங்கம் அப்ப பிறக்கவேயில்லை பிறகு எப்படி தங்கத்திற்காக வெளியேற்றினார்கள்?

டொக்டர் அர்ச்சுனா தனது உதவியாளரை தங்கம் என்றார் இப்போ தங்கம் என்றால் அப்படியாகிவிட்டது. சுவிச்லண்டில் குளிர் ஊடைகளும் அணிந்து கொண்டு சுற்றி திரிகின்றார் பின்னணியில் ஒரு பாட்டு அர்ச்சுனா அர்ச்சுனா தலைவனின் பிள்ளை நீயடா உன் குரலில் இரத்தம் கொதிக்குது நீதி எரியுது ...

  • கருத்துக்கள உறவுகள்

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” - முஸ்லிம்கள் ஆதங்கம்

தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள்.

கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முகமட் தாகீர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, மீளவும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முதலாவதாக வருகை தந்தவருமாவார்.

விடுதலை புலிகளும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும்

வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.

படக்குறிப்பு,வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.

தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தில் வெல்வதற்கு சில வழிமுறைகளை கையாண்டனர். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ் மாவட்டத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை வெளியேற்றினாலும் விடுதலைப்புலிகள் எமது மதம் சார்ந்த விடயங்களில் தலையிடவில்லை.

முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் விடுதலைப் புலிகள் தடை போட்டதில்லை என்கிறார் முகமட் தாகீர். ஆனால் தற்போது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பழிவாங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார்.

வடக்கிலே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த காலத்தில் விடுதலை புலிகள் மற்ற மக்களுடன் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறு முஸ்லிம் மக்களுடனும் நடந்து கொண்டனர். அதனால் எங்களை வெளியேற்றியமைக்காக அவர்களை மனவருத்ததுடன் மன்னித்துள்ளோம் எனக் கூறும் முகமட் தாகீர், 1997க்கு பிறகு நாம் இந்த பூமியில் காலடி வைக்கும்போது முதன்முதலில் வந்தவன் என்ற வகையில் எங்களை யாழ். பேருந்து நிலையம் முன் இரு கைகூப்பி வரவேற்ற காட்சி இன்னமும் என் கண்களில் உள்ளது என்று கூறியவர், அவர்கள் கொண்டு வந்த குளிர்பானங்களை குடிக்க வைத்தது அவர்களின் பாசம் எனவும் கூறுகிறார்.

விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர்.

இன்று என்ன நடக்கிறது?

விடுதலை புலிகள்

யாரோ ஒரு பயங்கரவாதிகள் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த இலங்கையில் உள்ள முஸ்லிம்களை வதைப்பதும், பள்ளிவாசல் மீது கல்லெறிவதும், தீ வைப்பதும், வீதியில் செல்கையில் ஏளனமாக பார்பதும் முஸ்லிம் மக்களின் இன்றைய நிலையாகிவிட்டதாக முகமட் தாகீர் கூறுகிறார்.

சில இடங்களில் வியாபார நடவடிக்கையினை தடுப்பதுமாக செயற்படுகின்றனர். இவ்வாறு ஒரு கீழ்தரமான செயலை தமிழ் மக்கள் எமக்கு செய்யவில்லை என்கிறார் முகமட் தாகீர்.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் மக்களுடன் இணைந்து தொழில் செய்து பொருளாதாரத்தை விஸ்தரித்துள்ளோம். அவர்களும் தமது புரிந்துணர்வுடன் தமது அன்பை வெளிப்படுத்துகின்றனர் எனக்கூறும் அவர், எம்மீதான விடுதலை புலிகளின் செயற்பாட்டுக்காக சில கல்விமான்களும் மன்னிப்பு கேட்டதும் நம் மனதில் நிற்கின்றது. நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள வரை தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்போம் எதிராக செயற்படமாட்டோம் என உறுதிபட கூறுகிறார் முகமட் தாகீர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்களின் நிலை

முஸ்லிம்கள்

முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாத சமூகம் என்பது கவலை அளிக்கிறது எனவும், பெண்கள் அணியும் முகத்திரையினை தடை செய்தவர்கள் ஒன்றை விளங்கிகொள்ள வேண்டும். ஒருசிலர் செய்த இந்த தாக்குதலுக்கு அதன் ஒட்டுமொத்த சமூகத்தையும் பழிவாங்கும் செயற்பாடுதான் இடம்பெற்றுகொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்த அவர், இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் சிறுபாண்மையினரால்தான் தாங்கள் தோற்றுள்ளோம் என்பதனால் இவ்வாறு செயற்பட்டு சிறுபான்மையினரை தம்வசம் திருப்புப முயற்சிக்கின்றனர் என குற்றஞ்சாட்டுகிறார்.

அதைதான் கிறிஸ்தவ பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கூறியுள்ளதாகவும் அவருக்கு பின்னால் முஸ்லிம் மக்கள் எமது ஆதரவை கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.

பெண்கள் முகத்திரை தொடர்பில் நம் மத தலைவர்கள் தமது தலைமை போட்டி காரணமாக இவ்வாறு செய்திருக்கின்றனர் என கூறிய முகமட் தாகீர், இது தனக்கு மிகவும் கவலையாகவும் மனவருத்தமாக உள்ளதாகவும் கூறிகிறார்.

முகத்தை மூடும் ஆடை

பட மூலாதாரம்,Getty Images

அண்மையில் கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம் பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது அவர்களை இறங்கும்படி அரசு படை கூறியுள்ளது என்ற தகவலை தெரிவித்த முகமட் தாகீர், ஊடகங்களும் முஸ்லிம் சமூகம் என்று கூறி எம்மை பயங்கரவாதிகள் போல் சித்திரிக்கிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

"என்னதான் நடந்தாலும் நாம் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தை ஆதரித்து அவர்களை ஆட்சியில் ஏற்றுவோம் என கனவில் கூட நினைக்க வேண்டாம். நாம் வாக்களிக்கமாட்டோம்" என உறுதிபட பேசினார் முகமட் தாகீர்.

நோன்பு காலத்தில் நாம் பெரும் இன்னல்களை சந்திக்கின்றோம் எனவும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த குண்டுதாரிகளின் சரியான பின்னணி கண்டறியப்படாவிட்டால் இந்த நாடு பயங்கரவாதத்தினால் முற்றாக அழிந்து போகும் என்பதை திட்டவட்டமாக கூறினார் முகமட் தாகீர்.

தவுஹீத் ஜமாத் அமைப்பு

தவுஹீத் ஜமாத் என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை உருவாக்கி இருக்கின்றனர் என கூறும் இவர், இலங்கையில் ஜம்மியத் உலமா என்ற சபை உள்ளதாகவும், இதுதான் முஸ்லிம்களின் மிக உயர்ந்த சபை அந்த சபையில் தவுஹீத் ஜமாத், ஜபிலிக் ஜமாத், ஹரிகா என்ற அங்கங்ளை கொண்டதுதான் இந்த அமைப்பு என்றார்.

ஆகவே தவுஹீத் ஜமாத் அமைப்பை மட்டும் தடை செய்து அவர்களை மட்டும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பது தலைவர்கள் தமக்குள் உள்ள போட்டியை சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை பழிவாங்கும் செயலாக உள்ளதாகவும், இதை ஒரு சூழ்ச்சியாகவே பார்பதாகவும் முகமட் தாகீர் தெரிவித்தார்.

காவல்துறையினர் பாதுகாப்பு

ஜம்மியத் உலமா சபை சரியான முறையில் நடந்துகொள்ளாததால்தான் தவுஹீத் ஜமாத் அமைப்பின் விடயங்களை இவர்கள் பெரிதுபடுத்தி கிழக்கில் முஸ்லிம்களை பழிவாங்கிகொண்டு இருக்கின்றனர் என்றார் முகமட் தாகீர். தவுஹீத் ஜமாத் அமைப்பு ஒரு நேர்வழிகாட்டும் அமைப்பு. பயங்கரவாதிகள் இல்லை என்கிறார் அவர்.

"இங்கு ஆயுதங்களுடன் பிடிக்கபட்டவர்களை பயங்கரவாதிகளாக தண்டிக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழ் மக்கள் ஆயுதங்களுடன் பிடிபட்டால் அது விடுதலை புலிகள் என்று கூறுபவர்கள் ஏன் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எங்களை மட்டும் ஒட்டுமொத்த முஸ்லிம்களாக பறைசாற்றுகின்றனர்" எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

அவர்களின் நோக்கமே இலங்கையில் முஸ்லிம் மக்களை ஒடுக்கி உயர்ந்த இடங்களுக்கு வரவிடாமல் தடுப்பதும்தான் என குற்றஞ்சாட்டும் இவர், பொருளாதாரத்தை இல்லாமல் செய்வதே இவர்களின் முக்கிய விடயம் என்கின்றார்.

முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் எவரும் இவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள் எனவும் முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் பயங்கரவாதத்தை முற்றாக எதிர்கின்றோம். இஸ்லாமில் பயங்கரவாத்திற்கு இடமில்லை எனவும் கூறும் முகமட் தாகீர், தற்கொலைக்கும் இடமில்லை; அவ்வாறு தற்கொலை செய்பவர்களை முஸ்லிம் என நாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் உறுதியாக தெரித்தார்.

BBC News தமிழ்
No image preview

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதி...

விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர்.
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

லொஜிக் மருந்துக்கும் இல்லாத நிலைப்பாடு.

முஸ்லிம்களை பாதுகாக்க வெளி ஏற்றினால் அது தவறல்ல அவர்களுக்கு செய்த நன்மை.

நன்மை செய்யமைக்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா?

நான் நினைக்கிறேன் இவர்கள் யாருக்காவது பெரும் நன்மையை செய்து விட்டு, நன்மை செய்தமைக்கு மன்னிபும் கேட்கும் அளவுக்கு அப்பாவிகள் என😂

நான் அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை, ஆனால் பல கள உறவுகள் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்; அவர்களுக்கு தெரிந்திருக்கும், அக்கால கட்டத்தில் யாழ் கோட்டையில் முற்றுகையில் இருந்த இராணுவத்தினை மீட்பதற்காக முற்றுகையினை உடைத்து மண்டைதீவிலிருந்து வந்த இராணுவத்தினர் யாழ் கோட்டையினை சென்றடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தினை இராணுவம் கைப்பற்ற போகிறது எனும் ஒரு செய்தி உலாவியது, விடுதிகளில் தங்கியிருந்த வெளியூர் மாணவர்கள் தமது இடங்களுக்கு திரும்பினர், அப்போது ஒரு பதற்றமான நிலை உருவாகியிருந்ததின் பின்னணியில் குறிப்பிட்ட சமூக்கத்திற்கெதிராக வன்மத்தினை தூண்டும் விதமான செய்திகள் பரவியதாக நினைவுள்ளது ( வதந்திகள் தூரம் அதிகரிக்க அதிக்ரிக்க பல திரிபுகள் அதிகரிக்கும்).

அதன் பின்னர் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கலாம் என கருதுகிறேன், நேரில் பார்க்காத சம்பவம் அத்துடன் நீண்ட காலமானதால் நினைவுமில்லை, உண்மையிலேயே ஒரு சிறு பிரிவினர் செய்யும் தவறுக்காக பொதுவாக எப்படி ஒட்டு மொத்தமாக அனைவரையும் தண்டிக்க முடியும் (அதனாலேயே இதனை இனச்சுத்திகரிப்பு என கூறுகிறார்கள்).

மண் மீட்பு நிதி என தங்கம் கோரியது இக்கால கட்டத்தில் என கருதுகிறேன், பல உண்மையான வறுமையான மக்களை நோயாளர்கள் வயதானவர்கள் என பாராது கூட்டம் என அழைத்து ஒரு சிறு இடத்தில் அடைத்து வைத்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது.

இதில் முக்கியமானது இவ்வாறானவர்களை சிலர் திட்டமிட்டே பொய்யான தகவலை கொடுத்து மாட்டி விடும் மனநிலை கொண்டவர்கள் இருந்தார்கள், இந்த விடயத்தில் தமக்குள் உள்ள பொதுவான ஒற்றுமைகளை பார்ப்பதில்லை, ஆனால் இவ்வாறு தவறான தகவலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மதம், இடம் என வரும் போது மற்றவர்களின் வலி புரியாது மாறாக ஒரு குழு மனநிலையிலேயே அதனை பார்ப்பார்கள் இதற்கு நானும் விதி விலக்கில்லை.

இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் தேவைப்படுகிறது அதுதான் பிரச்சினை.

ஆனால் தங்கதிற்காக வெளியேற்றினார்கள் என்பது உண்மையாக இருக்காது என கருதுகிறேன், இது தமது தவறுகளை மூடி மறைக்க எடுக்கப்படும் ஒரு புதிய முயற்சியாக இதனை நான் கருதுகிறேன்.

நீங்கள் கூறுவது போல இருதரப்பும் முதலில் உண்மைகளை ஒத்து கொள்ள முயற்சிக்க வேண்டும், அதுதான் முதல் படி அதனை விட்டு ஆராய்ச்சி செய்கிறோம் என புதிய புதிய காரணங்களை தேடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.