Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 3

26 Oct, 2025 | 05:16 PM

image

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

தனது வருகை தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில், 

இன்று

யாழ்ப்பாணம் செல்கிறேன்

என் நண்பர்

பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும்

மில்லர் படத்தின் படப்பிடிப்பைத் 

தொடங்கி வைக்கிறேன்

நல்லிலக்கியங்களும்

நவகலைகளும்

ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான்

பூத்துவர முடியும்

மனதின் வலியும்

மார்பின் தழும்பும்

கலையின் கச்சாப்

பொருள்களாகும்

ஈழத்தில்

நல்ல கலைவடிவங்கள்

மலர்வதற்கான

காலச்சூடு உண்டு

ஈழத் தமிழர் வெல்லட்டும்;

தொட்டது துலங்கட்டும்

என் நண்பரின் வளர்ச்சிக்கு

வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்;

நாளையே திரும்பிவிடுவேன்  எனப் பதிவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/228728

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திராவிடக் கொத்தடிமை வயிறுமுத்துதான் பாட்டு எழுதி படம் தயாரிக்க வேண்டிய நிலையிலா நாம் இருக்கிறோம்.இவரால் எமது வலியையும் சோகத்தையும் கடத்த முடியுமா?தமிழீழத்தின் தேசிய கீதத்தை நானே எழுதுவேன் என்று முந்திரிக்கொடடை மாதிரி சொன்னவர்தானே இவர்.புலிகள் இவரை ஏறெடுத்தும்பார்க்கவில்லை.ஆனானப்பட்ட வியையின் கட்சிப்பாடலுக்கே திமுக கொத்தடிமை வயிறுமுத்துவைப் புறக்கணித்து ஈழக்கவிஞரை வைத்து எழுதினார்கள்.அதுசரி முள்ளிவாயக்கால் பரணி எழுதுகிறேன் என்கடந்தமுறை வந்த போது சொன்னார் எழுதிமுடித்து விட்டாரா?அல்லது ஆரிய உதடு உன்னது திராவிட உதடு என்னது என்று என்று எழுதிக்கொண்டிருக்கிறார?தாயகத்தில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

சின்மாயிடம் இவனைப்பற்றி கேட்டால் தெரியும், இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பெண்களின் வாழ்கையில் விளையாடினானோ???

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வைரமுத்துக்கு பலத்த ஆதரவு கோஸ்டிகள் உண்டு.

அதில் அநேகர் சீமானின் தம்பிகள்.

சின்மயி சர்ச்சை நேரம் என்னையும் இன்னும் சிலரையும் போட்டு பிறாண்டி விட்டார்கள்.

இப்ப பழசெல்லாம் மறந்து போச்சோ😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

ஈழத் தமிழர் வெல்லட்டும்;

தொட்டது துலங்கட்டும்

உந்த வாழ்த்துக்கு எவ்வளவு காசு வாங்கினாரோ ஆருக்கு தெரியும்?

மொழியை விற்கும் வியாபாரிகள்.

8 hours ago, ஏராளன் said:

நல்லிலக்கியங்களும்

நவகலைகளும்

ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான்

பூத்துவர முடியும்

எங்கட பொடியள் தமன்னா முத்தவெளியிலை ஆடின டான்ஸ்ச பனை மரத்திலை ஏறி நிண்டு பார்த்ததை சொல்லுறாரோ?😂

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவில் குறைபாடு காணப்படலாம். அவரது கவிதை குறைபாடு உள்ளதா? அவர் எழுதியதை ரசித்தோம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சின்மயி சர்ச்சை நேரம் கேட்ட கேள்வி இவ்வவளவு நாளும் ஏன் பொத்திக்கொண்டு இருந்தவ என்றே

தெரிந்தே தப்பானவனுக்கும் தப்பிற்கும் துணை போவதும் தப்புத்தானே ...? மற்றபடிக்கு கவிஞர் டைமென்ட் பேர்ல் ஒன்றும் மனிதரில் மாணிக்கம் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணின் அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க, பெண் ஒருவரும் அதே அளவிலான அல்லது அதைவிட வலிமையான நிலையை அடைய வேண்டும்.

அவர் எழுதிய கவிதை மனதை கவர்ந்துவிட்டால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தோன்றும்??????

அதை வெளிப்படையாகச் சொல்ல, இன்னும் அதிகமான தைரியம் தேவைப்படுகிறது. இங்கே, படையில் பணியாற்றிய பெண்களே ஆண் வீரர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதை இப்போதுதான் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

அதற்குப் பின்னால் நிற்கும் காரணம் — ஆண் வீரர்களின் பதவி நிலை. அந்த நிலைமை, படை வீராங்கனைகளுக்கே இவ்வாறு என்றால், சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் நிலைமை எவ்வளவு கடினமாய் இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

தென் இந்திய சினிமா இதில் வேற லெவல். ஸ்ருதி நாராயணின் காஸ்டிங் கவுச் கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் சக்கை போடு போட்டது. வாய்ப்பிற்காக இறங்கி எந்த தரை லோக்கலான காரியமும் செய்வது. கூடாரம் காலியாகி மார்க்கட் போனதுக்கப்புறம் குய்யோ முறையோ மீ டூ யு டூ என்று குதிப்பது. ஸ்ருதி நாராயணும் இன்னும் கொஞ்ச நாட்களில் கண்ணகி ரேஞ்சுக்கு அழுது வடிக்க நம்ம பெண்ணியவாதிகளும் அதற்க்கு பக்கவாத்தியம் வாசிப்பினம்.

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்; புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களோடு உரையாட விழைகிறேன் - யாழில் இருந்து வைரமுத்து

திங்கள், 27 அக்டோபர் 2025 04:27 AM

யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்; புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களோடு உரையாட விழைகிறேன் - யாழில் இருந்து வைரமுத்து

விதைகளும் தியாகங்களும் என்றைக்கும் வீணாவதில்லை;

ஒருநாள் முளைத்தே தீரும் என கவிப்பேரசு வைரமுத்து யாழ்ப்பாணத்தில் கவிதை வடித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற , மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் தனது முகநூலில் கவிதை ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த கவிதையாவது, 

"யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்;

புலம்பெயர்ந்த

உலகத் தமிழர்களோடு

உரையாட விழைகிறேன்

நீங்கள் விளையாடிய

வீதிகள் நலம்;

குடைபிடிக்கும்

வேப்ப மரங்கள் நலம்

சாவகச் சேரி சௌக்கியம்;

நீங்கள் சௌக்கியமா?

பருத்தித்துறை சௌக்கியம்;

உங்கள் பாச உறவுகள்

சௌக்கியமா?

முகமாலை நலம்;

உங்கள் முன்னோடிகள் நலமா?

புத்தூர் சௌக்கியம்;

உங்கள் பிள்ளைகள் சௌக்கியமா?

உங்கள்

தலைமுறை வரைக்கும்

தமிழ் ஈழத்தின்மீது

உங்களுக்கு தாகம் இருக்கும்

உங்கள் பிள்ளைகளுக்கும்

அதேதாகம் வேண்டுமாயின்

அவர்களையும்

தமிழ்படிக்கச் செய்யுங்கள்

மண்ணும் மொழியும்

கண்ணும் உயிரும்

என்று கற்றுக்கொடுங்கள்

விதைகளும் தியாகங்களும்

என்றைக்கும் வீணாவதில்லை;

ஒருநாள் முளைத்தே தீரும்"

என்று பேசினேன்

கண்ணீர் ததும்பக்

கரவொலி செய்தார்கள் என முகநூலில் பதிவு செய்துள்ளார். 

https://jaffnazone.com/news/51645

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

கவிஞர் வைரமுத்துவில் குறைபாடு காணப்படலாம். அவரது கவிதை குறைபாடு உள்ளதா? அவர் எழுதியதை ரசித்தோம் தானே.

நான் கவிதையில் வீக் ☹️ ஆனால் ஈழ தமிழர்கள் அவர் கவிதையை மிகவும் இரசிப்பார்கள்

இப்போ இவர் யாழ்பாணத்தில் சொன்ன கவிதை என்று வட்சப்பில்வந்தது.

👇

மண்ணின் மீது தண்ணீர் இருக்கின்றது

மண்ணுக்கு கீழே கண்ணீர் இருக்கின்றது

இது தான் யாழ்பாணம்.

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

நானும் சின்மயி சர்ச்சை நேரம் கேட்ட கேள்வி இவ்வவளவு நாளும் ஏன் பொத்திக்கொண்டு இருந்தவ

அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவின் அரவணைப்பில் இருந்த இந்த சின்மயி என்ற பாடகி நீண்ட காலம் மகிழ்ச்சியாக பாடி திரிந்து தனது திருமணத்திற்கும் வைரமுத்துவை அழைத்து அவர் காலில் மகிழ்ச்சி பொங்க விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்பு தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து இப்படி ஒரு குற்றசாட்டை சுவிச்சலாந்தில் நடந்ததாக வைத்தார். இவா ஒரு பிராமணர் என்ற காரணத்தால் இந்தியாவில் சிலர் ஆதரித்தனர். இது எவ்வளவு சுத்துமாத்து என்பது அங்கே உள்ள ஈழதமிழர்களுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிஸ்கோத்து

ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து

தலைவர் படத்தை போட்டால்

நனைந்து போவான்

ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து

மாவீரர் வீரத்தை மெச்சினால்

உடைந்து போவான்

ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து

அழகான கவிதை எனும் தேநீரில் அமிழ்ந்து போவான்

தமிழ்நாட்டில் இப்போ பிஸ்கோத்து யாவாரிகள் பெரும் கோடீஸ்வரர்கள்.

ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாவகச் சேரி சௌக்கியம்;

நீங்கள் சௌக்கியமா?

சௌக்கியம் சௌக்கியம்..

எல்லோரும் சௌக்கியம்..

மீசாலையும் சௌக்கியம்..

சங்கத்தானையும் சௌக்கியம்..

நுணாவிலும் சௌக்கியம்..

கைதடி சௌக்கியம்..

நாவற்குழியும் சௌக்கியம்..

கச்சாய் சௌக்கியம்..

தனங்கிளப்பும் சௌக்கியம்..

அது மட்டுமல்ல குடத்தனையும் சௌக்கியம்.

8 hours ago, உடையார் said:

ஒரு ஆணின் அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க, பெண் ஒருவரும் அதே அளவிலான அல்லது அதைவிட வலிமையான நிலையை அடைய வேண்டும்.

அவர் எழுதிய கவிதை மனதை கவர்ந்துவிட்டால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தோன்றும்??????

அதை வெளிப்படையாகச் சொல்ல, இன்னும் அதிகமான தைரியம் தேவைப்படுகிறது. இங்கே, படையில் பணியாற்றிய பெண்களே ஆண் வீரர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதை இப்போதுதான் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

அதற்குப் பின்னால் நிற்கும் காரணம் — ஆண் வீரர்களின் பதவி நிலை. அந்த நிலைமை, படை வீராங்கனைகளுக்கே இவ்வாறு என்றால், சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் நிலைமை எவ்வளவு கடினமாய் இருக்கும்?

உண்மை தான் உடையார்.

ஆனால் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தன் விருப்பின்றி தீண்ட முற்பட்ட ஒருவரைத் தன் திருமண வைபவத்துக்கு அழைத்து காலில் வீழ்ந்து ஆசீர்வாதமும் பெற்று, அதனை புகைப்படமும் எடுத்து வெளி உலகுக்கு பகிரவும் செய்வார்களா?

இங்கு வைரமுத்து இந்த விடயத்தில் மிக மோசமான மனிதர் என்பதில் ஐயமில்லை. ஆனால், சின்மயி?

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணால் காண்பதுவும் பொய்யே, காதால் கேட்பதுவும் பொய்யே. கவிஞர் வைரமுத்துவை போற்றுவோம், தூற்றுவோம்.

நாங்கள் கண்ணால் காணவில்லை வாசித்தோம், காதால் கேட்டோம். போற்றுவோம், தூற்றுவோம்.

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கவிஞர் வைரமுத்துவிற்கே.

  • கருத்துக்கள உறவுகள்

சகட்டு மேனிக்கு நமக்கு பிடிகாதவனையெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து போட்டு தள்ளினா நாடு கிடைக்கும் என நம்பியது அந்தக் காலம்.

சகட்டு மேனிக்கு பிடிக்காதவனுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து திட்டி தீர்த்தால் நாடு கிடைக்கும் என்று நம்புவது இந்த காலம்.

இது ஈழத்தமிழன் மலிபன் பவர்.💪 🍪

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவின் கரங்களில் ஈழத்தமிழர்களின் 'துருவேறும் கைவிலங்கு' !

358535819.jpg

தென்னிலங்கையின் அடிமைச் சிறையில் 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஈழத்தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' நெருக்கடிமிகு சிறைக்குள் இருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாலானா  நூல்,  'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகனால் பிரபல தென்னிந்திய கலைஞரான 'கவிஞர் வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

20 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில்,  தென்னிலங்கையின் உயர்ந்த சுற்றுமதிற் சுவர்களுக்குள் துயரனுபவித்து வருகின்ற எமது உறவுகளின் வெளித்தெரியாத பல உண்மைகளின் மெய்ச் சாட்சியமாகப் பார்க்கப்படுகின்ற 'துருவேறும் கைவிலங்கு' எனும் இந்த ஆவண நூல்,  அனைத்துத் தரப்புகளினதும் கூர்ந்தவதானிப்புக்கு உட்படுத்தவேண்டியது கால அவசியமாகிறது. 

அந்த வகையில், "நீண்ட நெடும் போருக்கு பின்னரும் கூட, எமது தமிழினம் விடுதலைக்காக ஏங்குகின்ற வலிசுமந்த வாழ்வை அனுபவித்து வருகின்றது"  என்கின்ற கனதிமிகு செய்தியினை, "ஈழத் தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில் பக்கத்து இருக்கைப் பங்காளியாக உறவுபூண்டு வருகின்ற தென்னிந்திய தேசத்திற்கு உரத்துச் சொல்ல வேண்டும்" என்பதற்காக ஈழத்தமிழ் திரைப்படத் தொடக்க விழா நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கவிஞர் வைரமுத்து அவர்களை,  நேரில் சந்தித்த 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, இந்த நூலினை அவரிடம் கையளித்துள்ளது. 

நூலை கையேற்ற கவிஞர், "இந்த நூலின் தலைப்பே கைதிகளின் அவலக் கதியை பறைசாற்றுகின்றது"  என ஆதங்கமடைந்ததுடன், கைதிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளார்.

https://newuthayan.com/article/கவிஞர்_வைரமுத்துவின்_கரங்களில்__ஈழத்தமிழர்களின்_'துருவேறும்_கைவிலங்கு'_!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

சகட்டு மேனிக்கு நமக்கு பிடிகாதவனையெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து போட்டு தள்ளினா நாடு கிடைக்கும் என நம்பியது அந்தக் காலம்.

சகட்டு மேனிக்கு பிடிக்காதவனுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து திட்டி தீர்த்தால் நாடு கிடைக்கும் என்று நம்புவது இந்த காலம்.

சின்மயி வைரமுத்து பற்றி பேசினாலும் அதற்குள் தனிநாட்டை கொண்டுவந்து சொருவுறது உங்கள் தவறணைக்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, valavan said:

சின்மயி வைரமுத்து பற்றி பேசினாலும் அதற்குள் தனிநாட்டை கொண்டுவந்து சொருவுறது உங்கள் தவறணைக்காலம்.

சின்மயி- வைரமுத்து பிரச்சனையில் இங்கு பெரும்பாலானோர் வைரமுத்து ஆதரவாளர்கள் தான் என்பதைப் புரியாதது உங்கள் தவறணைக் காலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சினிமா துறையில் இருப்பவர்களிடம் சுத்தம் சுகாதாரங்களை எதிர்பார்ப்பதில்லை. அந்த தொழில் அப்படித்தான்.சினிமா துறையில் இருப்பவர்கள் அதை தவறாகவும் பார்ப்பதில்லை. எல்லாம் ஒருமித்த அன்னியோயத்துடனேயே நடக்கின்றது. ஏதாவது முரண்பாடு வரும் போதுதான் சந்தையில் நின்று கூவுவது போல் கூவுவார்கள். இதனால் ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். அவ்வளவுதான்😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, island said:

சகட்டு மேனிக்கு நமக்கு பிடிகாதவனையெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து போட்டு தள்ளினா நாடு கிடைக்கும் என நம்பியது அந்தக் காலம்.

சகட்டு மேனிக்கு பிடிக்காதவனுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து திட்டி தீர்த்தால் நாடு கிடைக்கும் என்று நம்புவது இந்த காலம்.

இது ஈழத்தமிழன் மலிபன் பவர்.💪 🍪

ஈழத்தமிழ் அரசியலில் உங்கள் உதாரண அரசியல்வாதி என்றால் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

போராடி நின்ற பூமியின் காற்றுக்குடித்து கவிதை பாடுவதற்கும்.. தூர இருந்து கவனித்து கவிதை பாடுவதற்கும் இடையில் உள்ள கணதியை வைரம் அறிவார்.

வைரமுத்து ஈழத்தமிழ் சொந்தங்களுக்காக குரல் கொடுத்தே வந்த ஒருவர். புலம்பெயர் நாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகள் மூலம் ஆதரவு கொடுத்தவர். அவரின் யாழ்ப்பாண பயணம் அவருக்கும் யாழ் மண்ணிற்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். எதிர்கால சந்ததிக்கு கவிஞரிடம் இருந்து பெறத்தக்க கவித்துவ வித்துவம் கடத்தப்பட இது உதவினால் நல்லது.

சிலர் சிம்மையியை இதில கோர்த்துவிட்டு.. அநாவசியமாக கவிஞரின் யாழ் விஜத்துக்கு ஒரு விதத்திலும் சம்பந்தப்படாததை பேசுகிறார்கள். சிம்மையி நவீன பத்தினியும் அல்ல.. கவிஞர் நவீன இராமரும் அல்ல. அது இங்கு பேசு பொருளும் அல்ல.. ஈழத்தமிழருக்கு.

Edited by nedukkalapoovan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.