Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன.

பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.

வீட்டு வேலை செய்தல், ஆண் பெண் பாகுபாடு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு “தம்பதியினரின் அன்யோன்யத்தைப் பொறுத்து” என்பது போன்ற பதில் வந்தது குறிப்பிடத் தக்கது.

திருமணத்திற்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வெளிநாடுகளைப் போன்றே இந்தியாவிலும் அதிகரித்திருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவித்திருந்தது. மேலை நாடுகளின் கலாச்சார மாற்றங்கள் நவீன யுகத்தில் உடனடித் தாக்கங்களை இந்தியாவிலும் ஏற்படுத்துகின்றன என்பதன் உதாரணமாக இந்த புள்ளி விவரத்தைக் கொள்ளலாம்.

இது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

http://sirippu.com

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள்.

எங்க உந்தகூத்து எங்கட நெடுக்காலபோவான் இருக்கிற இடத்திலதானே நடக்கிது? நான் அப்பவே நினைச்சனான். இப்படியான சிக்கல்கள் உள்ள இடத்திலதான் அண்ணாச்சி இருக்கிறாராக்கும் எண்டு.

இதேமாதிரி கருத்துக்கணிப்பில இப்பிடியும் ஒரு கேள்வி கேட்டு இருக்கலாம்..

திருமணத்துக்கு பின் கணவன், மனைவி அல்லாத வேறு ஒருவருடன் உறவு கொள்வதற்கு எத்தனை பேர் ஆதரவு - ஆயத்தம் எண்டு? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இங்கயே ஒரு கருத்துக்கனிப்பை தொடங்க வேன்டியதுதானே :icon_mrgreen:

ஏன் அதையும் துவங்க நான் தான் கிடைச்சனா? :icon_mrgreen: நீங்கள் யாராவது துவங்க வேண்டியது தானே? நல்ல ஒரு கிடா ஆடு யாழுக்க மாட்டுப்பட்டு இருக்கிது. எப்ப கழுத்து துண்டாகப்போகிதோ தெரியாது..

பி/கு: கிடா ஆடு எண்டு என்னத்தான் சொன்னான். யோசிக்காதிங்கோ.. :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்க உந்தகூத்து எங்கட நெடுக்காலபோவான் இருக்கிற இடத்திலதானே நடக்கிது? நான் அப்பவே நினைச்சனான். இப்படியான சிக்கல்கள் உள்ள இடத்திலதான் அண்ணாச்சி இருக்கிறாராக்கும் எண்டு.

ஆதிகாலத்தில உந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் தொடங்க முன்னம்.. இப்படித்தானே வாழ்ந்தவை. இப்ப மீண்டும் அதே நிலைக்குப் போறதில என்ன அதிசயம் இருக்கு. விலங்கு விலங்கின்ர குணத்தைக் காட்டத்தான் செய்யும். மனிதன் ஒரு விலங்கு என்பதை மறந்திடாதேங்கோ...!

நமக்கு விலங்கு குணம் மெத்தினதுகளோட ஒத்துப் போறதில்ல..! :):icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன் உடலுறவு எண்டா அது ஆரேடை. அந்தக்கலியாணத்த முடிக்கப்போற ரெண்டு பேருக்குள்ளயுமா அல்லது வேறு ஆராரோவோடையுமா?. முதலில உதத் தெளிவுபடுத்துங்கோ. கண்டபடி போனா எய்ட்ஸ் வந்த ரெண்டு பேரெல்லோ திருமணஞ்செய்ய வேண்டியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 10:43 AM

:icon_mrgreen::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு திருடனிடம் பொருள் பறிகொடுத்தவனுக்கு எப்படி நியாயம் கிடைக்காதோ அது போலவேதான்

தன் மனித உணர்வுக்கு சமனாக மற்றவன் உணர்வுகளை போற்றாத ஒருவனிடம் காதல் என்பது கழுதைக்கு கற்பூரத்தின் சமாச்சாரம்தான், இப்படிப் பட்டவர்களால் காதலுக்கு இலக்கணம் வேறு படைக்கப் படுகிறது இவைதான் காதலுக்கு மிக மோசமான அவமானம்.

உடம்புக்கு சுகமாய் இருக்குது இரண்டாவதுடன் கூத்து

இதை மனைவிக்கு ஒழித்து வைப்பதால் தன்மன நீதி நிறைவுபடுகிறது ஒருவனுக்கு

இந்த கதையின் திசை நிலைமாறும் போது,

தான் உயிர் சுமப்பது எத்துணை வெறுப்பானது ஆகுமோ அப்போதுதான் புரியும் ஒழுக்கம் என்பது உயிரிலும் மேலானது என்ற அதன் மதிப்பு!

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

அட 70 % ஆதரவு என்றால் அந்த 30 % ஆதரவு இல்லாத ஆக்கள் யார்? சின்னப்பு ,முகத்தார், சாத்திரி, கந்தப்பு,,சின்னகொடி , இவர்களுடன் டன் :icon_mrgreen:

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

அட 70 % ஆதரவு என்றால் அந்த 30 % ஆதரவு இல்லாத ஆக்கள் யார்? சின்னப்பு ,முகத்தார், சாத்திரி, கந்தப்பு,,சின்னகொடி , இவர்களுடன் டன் :icon_mrgreen:

ஏன் இந்த ஆதரவு இல்லாத ஆக்களிக்க உங்கட பெயர் வராதோ? :)

வரும் வரும் ஆனால் பருங்கோ இவர்களுக்கு ஆசை இருந்தாலும் முடியாது( வயது அப்படி)

நான் ஆதரிக்க மாட்டேன் என்று எனது மனைவிக்கு கூட தெரியும் பின்ன நல்ல மாட்டுக்கு ஒரு சூடு :icon_mrgreen::)

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

அட 70 % ஆதரவு என்றால் அந்த 30 % ஆதரவு இல்லாத ஆக்கள் யார்? சின்னப்பு ,முகத்தார், சாத்திரி, கந்தப்பு,,சின்னகொடி , இவர்களுடன் டன் :D

ஓய் வினித்து !!!!!!!

ளொள்ளா அந்தக்கால காதல் இளவரசர்களைப்பாத்து கேக்கிற கேள்வியைப்பார் மகனே பிச்சுப்போடுவன்

:wub::wub:

எமக்கு உதெல்லாம் சரிவராது. எதைச் செய்தாலும் நேர்மையாகச் செய்யவேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அடடடடடா............இதெல்லாம் றொம்ப தப்பு ஒருவனுக்க ஒருத்தி இததான் நம்ம பொலிசி.............

திருமணத்துக்கு முன் அப்பிடி பன்னிறது எல்லாம் தப்பு பிறகு பன்னலாம்...

அடடடடடா............இதெல்லாம் றொம்ப தப்பு ஒருவனுக்க ஒருத்தி இததான் நம்ம பொலிசி.............

சுண்டல் அண்ணா உண்மையாவா எப்படி இப்படியேல்லாம்.... :D:wub:

அப்ப நான் வரட்டா!!

உலகில பெண்களின் சனத்தொகை கூட " ஒருதனுக்கு ஒருத்தி கொள்கையை சொல்லி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுறாங்கப்பா".

ஆமா திருமணத்துக்கு முதல் உறவு செய்யலாமா அல்லது பின்னாடிதான் செய்யனுமா??? இதுதானே கேள்வி

எப்ப செய்தாலும் ஒருவரே செய்யுற மாதிரி இருந்தால் பராவாயில்லை. :D

Edited by வாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்புடியான நியூஸ் எண்டவுடனை இவ்வளவு நாளும் மப்புலை கிடந்த மனுசன் கொட்டைஎழுத்திலை எழுத வெளிக்கிட்டுட்டார் :wub: எங்கையிருந்துதான் மோப்பம் புடிக்கிறியளோ தெரியேல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு உதெல்லாம் சரிவராது. எதைச் செய்தாலும் நேர்மையாகச் செய்யவேணும். :wub:

எப்ப செய்தாலும்அது நேர்..மை யானதுதானுங்கோ மிச்சமெல்லாம் சம்பிரதாயம் :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

உலகில பெண்களின் சனத்தொகை கூட " ஒருதனுக்கு ஒருத்தி கொள்கையை சொல்லி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுறாங்கப்பா".

யார் சொன்னா உலகில் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று. சில நாடுகளில் அப்படியே தவிர உலகில் என்பது தவறான கருத்து..!

பெண்கள் அதிகமிருந்தாப் போல.. கட்டாமலே பிள்ளைப் பெறனும் என்ற சட்டமோ..??! ஏன் உள்ள சனத்தொகை பத்தாதோ..??! ஆண்கள் கொஞ்சம் அடங்கி இருக்கிறது..!

எதுவும் அருமையா இருந்தால் தான் ருசிக்கும். இல்ல அலுத்திடும்..! :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

இப்புடியான நியூஸ் எண்டவுடனை இவ்வளவு நாளும் மப்புலை கிடந்த மனுசன் கொட்டைஎழுத்திலை எழுத வெளிக்கிட்டுட்டார் :wub: எங்கையிருந்துதான் மோப்பம் புடிக்கிறியளோ தெரியேல்லை :D

ஓய் குசா இப்ப சின்னாக்கு வயசு போனதிலை சின்ன எழுத்தெல்லாம் வாசிக்க ஏலாதாம் அதுதான் தான்எழுதிறதையே தன்னாலை படிக்க கூடிய மாதிரி பெரிய எழுத்திலை எழுதிது மனிசன்.இப்பிடித்தான் அண்டைக்கு சின்னாச்சியெண்டு நினைச்சு.... வேண்டாம் பிறகு தணிக்கை செய்திடுவினம் யாழிலை :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப செய்தாலும்அது நேர்..மை யானதுதானுங்கோ மிச்சமெல்லாம் சம்பிரதாயம் :D:wub:

எப்ப செய்தாலும் ஆண்களுக்கு அது நேர்மை புரட்சி தானுங்கோ. லோட்ட ஏத்திட்டு விட்டிட்டுப் போட்டியல் என்றால் யாராம் இறக்கி வைக்கிறது...??! அடுத்தவன் வருவானே..??! ஓஓ எங்கிணையன் இழிச்சவாயல் இருக்குங்கள் தானே என்ன..??! அதுகளின்ர தலைல கட்டிட்டு நாங்க மலர் மலரா தாவி ருசி பார்க்க வேண்டியதுதான்..! :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு , குஸ்புவிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேக்கிறாய்?

பெரியவா எல்லாம் என்னத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணுறியள் ம்ம் எல்லாரும் நல்ல பிள்ளைகளா தான் இருக்கீனம் வெரிகுட் இப்ப என்ட கருத்தை சொல்லுறேன் கேளுங்கோ (பிறகு ஏசுறதில்லை சொல்லிட்டேன் :wub: ) திருமணதிற்கு முன் உறவு வைக்கிறதில்லை தப்பே இல்லை (எங்கே எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ :lol: )...ஆனா உங்க லைவ் பாட்டனரோட மட்டும் வையுங்கோ அதுவும் அவா சம்மதித்தா வற்புறுத்தி எல்லாம் செய்ய கூடாது சரியோ எப்படி நம்ம தீர்ப்பு குருவே :wub: ...(ஆனா உங்களின்ட ஆள் உதுக்கு சம்மதிக்கவே மாட்டா என்பது மிகவும் துன்பகரமான செய்தி :) )...உதில இப்ப கருத்து எழுதினவையில எத்தனை பேர் கேட்டு வாங்கி கட்டினவையோ யாருக்கு தெரியும் :) ...என்ன எல்லாரும் என்னை பார்கிற மாதிரி இருக்கு நான் பேபியாக்கும் வளர்ந்தா பிறகு சொல்லுறேன் சரியோ அப்ப நான் போகட்டே... :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

" திருமணதிற்கு முன் செய்தா என்ன பின்ன செய்தா என்ன எல்லாம் ஒன்று தானே" :)

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று சொல்லி இருக்காங்க. கலியாணத்துக்கு அப்புறமே ஆசை மோகத்தை வெளிக்காட்டி இரண்டு மாசத்துக்க அடி சனியனே என்று பேச்சு வாங்கிற பொம்மநாட்டிகள் இதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கோ..??! ஆண்கள் தங்களுக்கு இலாபம் என்றால் பெண்ணுக்கு விடுதலை என்ன சொர்க்கமே சொந்தமாக்கிக் கொடுப்பினம்..! :):)

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று சொல்லி இருக்காங்க. கலியாணத்துக்கு அப்புறமே ஆசை மோகத்தை வெளிக்காட்டி இரண்டு மாசத்துக்க அடி சனியனே என்று பேச்சு வாங்கிற பொம்மநாட்டிகள் இதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கோ..??! ஆண்கள் தங்களுக்கு இலாபம் என்றால் பெண்ணுக்கு விடுதலை என்ன சொர்க்கமே சொந்தமாக்கிக் கொடுப்பினம்..! :huh::o

நெடுக்ஸ் தாத்தா எல்லாம் சொன்னனியள் முக்கியமா ஒன்றை சொல்ல மறந்துட்டியள் :lol: என்னத்தையும் செய்யுங்கோ ஆனா பாதுகாப்பா செய்யுங்கோ விளங்கிச்சே அது தான் இம்போட்டன்ட்.. :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.