Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு மகிந்த வாழ்த்து தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக விரைவில் இதே பூநகரி பாதை வழியாக யாழில் உள்ள சிங்கள இராணுவம் தப்பி ஓடும். அந்த ஓட்டம் மஹிந்தவின் அரசின் கடைசி அத்தியாயமாக இருக்கும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை.

ஜானா

சாதகமான சிந்தனை.கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கருத்தை தளபதி அமுதாப் சொன்ன மாதிரி நினைவு.

  • Replies 80
  • Views 10.4k
  • Created
  • Last Reply

மிக விரைவில் இதே பூநகரி பாதை வழியாக யாழில் உள்ள சிங்கள இராணுவம் தப்பி ஓடும். அந்த ஓட்டம் மஹிந்தவின் அரசின் கடைசி அத்தியாயமாக இருக்கும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை.

ஜானா

:)

சாதகமான சிந்தனை.கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கருத்தை தளபதி அமுதாப் சொன்ன மாதிரி நினைவு.

அண்ணைமார் அப்ப என்ன சொல்லவாறியள்?

இப்பிடி ஒரு தந்திரத்தை பொறியை புலிகள் வைச்சிருக்கிறார்கள் மோட்டுச் சிங்களவன் விசையம் தெரியாமல் ஆயுதங்களை இறைச்சு மாதக்கணக்கில சண்ட பிடிச்சு வாறான்.

இந்த தந்திரத்தை தளபதி அமிதாப் உங்களுக்கு வெளிப்படையாகவே சொல்லிப் போட்டாரே? இல்லாட்டி புலிகளின் தந்திரக்களை பகிருகிற பிரத்தியேகமான தளத்தில எனக்கு விபத்தாக அனுமதி கிடைச்சிருக்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா வாங்கப்போயினம் போல

மிக விரைவில் இதே பூநகரி பாதை வழியாக யாழில் உள்ள சிங்கள இராணுவம் தப்பி ஓடும். அந்த ஓட்டம் மஹிந்தவின் அரசின் கடைசி அத்தியாயமாக இருக்கும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை.

ஜானா

இதைத்தான் நானும் நினைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை நாமே சமாதானப்படுத்தி கொள்ளல், அல்லது வெற்றி வரும் போது துள்ளி குதித்தல் மூலம் ஆகியன எம்மை பின்னடையவே செய்யும். மாறாக அடுத்து என்ன செய்யலாம் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து ஒரு சிறு செயற்பாட்டையேனுன் காட்டுவோமேயானால் எமது விடுதலை போராட்டத்தின் வெற்றி வெகு தூரத்திலில்லை.

ஈழப்போர் இன்றளவில் ஈழத்துக்கு வெளியே தனது வெற்றி தோல்வியை பெருமளவு தீர்மானிக்கின்றது.

நேரடியான பெரும் களமுனைகள் வன்னியின் குறிப்பிட்ட பிரதேசத்தில் அங்கு வாழும் மக்களை சூழ அமைந்துள்ளது. போரை எதிர்கொள்ளும் மக்கள் அவர்களே. அவர்கள் வலிமையை பார்ப்போமானால் தமது இருப்பிடங்கள் வாழ்வாதராங்களை இழந்த நிலையில் இந்த பெரும் போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சிங்களத்தின் வலிமையை பார்போமானால் வலிமை மிக்க நாடுகள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ பொருளாதார உதவியுடன் அனுசரணையுடன் போரை முன் எடுக்கின்றது. இந்த நிலையில் எந்த வித உதவிகளும் இன்றி சிங்களத்தின் மிலேச்சத்தனமான போரை எதிர்கொள்வதில் உயிரையும் உடலையும் ஆயுதமாக்கி போராடுகின்றார்கள். அவர்களை பொறுத்தமட்டில் வெற்றி தோல்விகள் என்ற பதத்தில் இதை புரிந்து கொள்வது அபத்தமானது.

போரை எதிர்கொள்ளும் குறிப்பிட்டளவு மக்களை விட பல பத்து மடங்கு மக்கள் போரால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். பலமடங்கு மக்கள் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் அகதிகளாக வாழ்கின்றனர். பல மடங்கு மக்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிறை வாழ்க்கை வாழ்கின்றனர். இதில் எவரும் நிரந்தர நிம்மதியுடன் வாழ்பவர்கள் இல்லை.

சிங்கள பேரினவாதம் மேற்கொள்ளும் யுத்தத்தின் மூலதனம் என்பதும் வெளிநாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. அந் நாடுகளின் உதவியின்றி போரை சிங்களத்தால் முன்னெடுக்க முடியாது.

இன்றைய நிலையில் ஈழப்போர் என்பதன் வெற்றி தோல்வி என்பது பாதிக்கு மேல் தாயகத்தை விட்டு வெளிநாடுகளில் வாழும் மக்களின் அரசியல் உரிமைப்போரிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அவர்களின் எழுச்சியே போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வல்ல கணிசமான காரணிகள். சிங்களத்துக்கான உதவிகளை தடுத்து நிறுத்த அரசியல் ரீதியாக போராடுவது போரின் போக்கை மாற்றும்.

சிங்கள மக்கள் தமது ராணுவ வெற்றிக்காக கடினமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க தயாராக உள்ளனர். அவர்கள் இந்த போரின் வெற்றிக்காக ஒரு றாத்தல் பாணை 150 ருபாய் கொடுத்து வாங்குவது தொடர்பாக அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இன்நிலையில் வன்னி மக்களின் அவலம் குறித்த ஒரு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒரு நேர வேலைக்கு விடுமுறை எடுக்க முடியாத புலம் பெயர் தமிழர்கள் ஏராளம்.

சிங்களத்தின் போர் முனைப்பு ஆரம்பித்த காலம் தொட்டு ஈழத்தமிழர்கள் இரண்டுவிதமாக வழிநடத்தப்பட்டனர். ஒன்று போரை எதர்கொள்வது, இரண்டாவது இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவது. இந்த வழிகாட்டுதலில் இரண்டும் இன்றுவரை வேகமாக நடந்தவண்ணம் உள்ளது. ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் தாயகத்தில் சிங்களத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள மக்களை இடத்தை விட்டு இவ்விடம் வந்துவிடு என்று அறைகூவல் விடுத்தவண்ணம் உள்ளான். இது அவனின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. பொதுவில் இது சிங்களத்திற்கு ஐம்பது வீத வெற்றி.

இதேபோல் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு கீழ் அடிமையாக வாழ்ந்துவிடுதல் என்ற நிலையும் பெருமளவு மக்கள் காட்டும் வழியாக உள்ளது.

போரை எதிர்கொள்ளும் மக்கள் மிக கணிசமானவர்களே. அவர்கள் உயிரை கொடுத்து போராடுகின்றனர். உள்ள வளங்களையும் ஆட்பலத்தையும் எவ்வாறு பிரயோகிக்க முடியுமோ அவ்வாறு பிரயோகித்து எதிரியை எதிர் கொள்கின்றனர். இந்நிலையில் இந்த போரை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எண்பது வீதத்துக்கும் மேற்பட்டவர்கள். போரை நேரடியாக எதிர்கொள்ளும் மக்களுக்கு வெற்றி தோல்வி என்பது கிடையாது. இந் நிலையில் புலம் பெயர் தமிழர் தனது கடமையை உணராது வெற்றி பெறவேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? போரின் வெற்றி தோல்வி ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் தங்கியுள்ளது. தவிர எமக்காக போராட வானத்தில் இருந்து யாரும் குதித்து ஆட்பலத்தை சரி செய்யப்போவதில்லை. சிங்கள அரசின் கொடுமைகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லப்போவதில்லை, சிங்கள அரசுக்கான உதவிகளை நிறுத்தக் கோரப்போவதில்லை. சிங்கள இரணுவம் வெற்றி பெறுகின்றது என்றால் ஒவ்வொரு தமிழனும் தோற்றுக் கொண்டிருக்கின்றான்;, தோல்வி களத்தில் போராடும் புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

நான் என்று சிங்களத்தை எதிர்கொள்ளாது தாயக பூமியை விட்டு வெளியேறினேனோ அந்த நாள் எனது தோல்வியின் முதல்நாள். இதை எந்த காரணத்தை கொண்டும் நியாயப்படுத்த முடியாது.

நான் என்று சிங்களம் எனது உறவுகளுக்கு செய்யும் கொடுமைகளை வெளிப்படுத்த முடியாது அமைதியாக சுயநலத்துடன் வாழ்கின்றேனோ அப்போது எனது தோல்வியை நான் உறுதிப்படுத்துகின்றேன்

எந்த ஒரு ஈழத்தமிழனும் வெற்றி தோல்விக்கு வெளியில் நின்றுவிட முடியாது. களத்தில் போராடுபவனை மையமாக வைத்து வெற்றி தோல்விக்கான காரணத்தை விளங்க முடியாது. வெற்றியிலும் தோல்வியிலும் நாம் பெரும் பங்கு வகிக்கின்றோம். எம்மை வழிநடத்தும் தேசியச் சார்பு ஊடகங்கள் எதுவாயினும், ஆய்வாளர்

கள் எவராயினும், கருத்துக் கூறுபவர்கள் எவராயினும் இதை உணர்ந்து வழிநடத்துங்கள். போர்க்களத்தை மையமாக வைத்து வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் விதத்தில் வழிநடத்தாதீர்கள். பங்காளிகளாக மற்ற முனையுங்கள். எமது ஒத்துழைப்பை எடுத்துக் கூறுங்கள். வழிவகைகளை எடுத்துக் கூறுங்கள். பூநகரி தோல்விக்கு புது விளக்கங்களும் அது வெற்றியாக மாறும் என்ற புதுக் கற்பனைகளும் மக்களை வேடிக்கை பார்க்கும் கூட்டமாக மாற்றும். சம்பூர் வீழுமா வாகரை வீழுமா என்று பூநகரிவரை கேட்டுக்கொண்டிருக்கின்றோம் தவிர வீழ்ச்சியை தடுப்பதற்கு எம்மாலானவற்றறை செய்யலாம் என்று யாரும் வழிகாட்டவில்லை. சிங்களம் சர்வதேச அளவில் உதவிகளை இழக்கும் வரை வீழ்ச்சிகள் தொடரும்.

கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு பின்னரான சில கருத்துக்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26735

அதிகம் பேசிக்கொள்ள வேண்டாம் உறவுகளே..

விடுதலைப் புலிகள் பின் நகர்வு என்பது ஒரு பாரிய முன்னகர்வுக்காகத்தான்.. சொந்த மண்ணில் 30 வரிடங்களாகப் போரடி வருகின்றார்கள். அவர்களுக்குப் நன்றாகத் தெரியும் எப்படி.. திட்டம் வகுப்பது என்று.. நாம் எமது குரல்களை என்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.. உறவுகளே

சும்மா அலட்டிக்க வேண்டாம், இந்தப் படத்தைப் பார்க்க வசதிகிடைப்பின் முழுமையாகப் பாக்கவும்..

Edited by Tamilmagan

இந்த (உண்மை) படம் எமது தற்போதய வரலாற்றுடன் மிக.. மிக.. மிக.. ஒத்துப்போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்று சிங்களத்தை எதிர்கொள்ளாது தாயக பூமியை விட்டு வெளியேறினேனோ அந்த நாள் எனது தோல்வியின் முதல்நாள். இதை எந்த காரணத்தை கொண்டும் நியாயப்படுத்த முடியாது.

நான் என்று சிங்களம் எனது உறவுகளுக்கு செய்யும் கொடுமைகளை வெளிப்படுத்த முடியாது அமைதியாக சுயநலத்துடன் வாழ்கின்றேனோ அப்போது எனது தோல்வியை நான் உறுதிப்படுத்துகின்றேன்

நிதர்சனமான வரிகள். :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

போராடுபவர்கள் தோற்கலாம் Nhராடமல் இருப்பவர்கள் ஏற்கனவே தோற்று விட்டவர்களாவர். விழுந்து விழுந்து நடக்கப் பழகு ம் குழந்தையே நடக்கும். நடக்க எத்தனிக்காத குழந்தை நடக்கவே நடக்காது. நம்பிக்கையே வாழ்க்கை. தோல்விகள் நிரந்தரமல்ல. தோல்விகளிலிருந்து பாடம் படிப்பவர்களே வெற்றியடைவார்களே. சோர்ந்து விடாதீர்கள் உறவுகளே!!!!!!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது

ஞாலம் கருதினுங் கை கூடும்காலம்

கருதி இடத்தாற் செயின்

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருதுபவர்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

போராடுபவர்கள் தோற்கலாம் Nhராடமல் இருப்பவர்கள் ஏற்கனவே தோற்று விட்டவர்களாவர். விழுந்து விழுந்து நடக்கப் பழகு ம் குழந்தையே நடக்கும். நடக்க எத்தனிக்காத குழந்தை நடக்கவே நடக்காது. நம்பிக்கையே வாழ்க்கை. தோல்விகள் நிரந்தரமல்ல. தோல்விகளிலிருந்து பாடம் படிப்பவர்களே வெற்றியடைவார்களே. சோர்ந்து விடாதீர்கள் உறவுகளே!!!!!!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது

ஞாலம் கருதினுங் கை கூடும்காலம்

கருதி இடத்தாற் செயின்

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருதுபவர்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

புலவர் சரியாகக் கூறினீர்கள்

சுகன்,

அருமையாக எழுதியுள்ளீர்கள். இதனை பிரதி பண்ணி நிறைய பேருக்கு அனுப்பியும் விட்டேன். தொடர்ந்து எழுதுங்கள்... இப்படியான ஆக்கங்களே இன்றைய தமிழ் தேசிய ஊடகங்களில் வரவேண்டும். நல்ல முயற்சி.

மிக விரைவில் இதே பூநகரி பாதை வழியாக யாழில் உள்ள சிங்கள இராணுவம் தப்பி ஓடும். அந்த ஓட்டம் மஹிந்தவின் அரசின் கடைசி அத்தியாயமாக இருக்கும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

என்னிடமுள்ள இதே கருத்தினை எழுதுவதற்குத் தயங்கினேன். நீங்கள் அதனை வெளிப்படுத்திவிட்டீர்கள். நன்றி. முழு உலகமுமே பார்த்துக் கொண்டுதானிருக்கின்றது. அவலங்களைக் கூட அது கண்டுகொள்ளவில்லை. யாழ் குடா கைப்பற்றப்படும் நிலையிலிருந்த போது இந்தியா தடுத்தது. இராணுவ வல்லமை மேலோங்கியிருந்த போது நோர்வே மூலம் உலகம் அதனை மழுங்கடிக்கச் செய்ய முயன்றது.

ஆனால் இப்போது வன்னிப்பரப்பு நெருக்கடி நிலையில் இருக்கும் போது யாவருமே பார்வையாளராக இருப்பின் எதிர் நடவடிக்கையின் போதும் இவர்கள் மௌனிகளாகவே இருக்க வேண்டும். நியாயங்கள் எடுபடாது.

புலிகளின் பலமிழப்பு இங்கு பிரஸ்தாபிப்பது ஒருவகை ஆதங்கமே. இதுகால வரையில் தக்க வைக்கப்பட்டிருந்த பாரிய நிலப்பரப்பு ஓராண்டுக்குள் இழக்கப்பட்ட நிலை இந்த முடிவுக்கு சிலரைத் தள்ளியிருக்கின்றது. ஆகவே இனிவரும் காலம் மாவீரர் உரையில் தெரியவரும். அதுவரை துள்ளும் இராணுவமும் அதனைல் துவண்டுநிற்கும் நம்மவர்களும் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

பூநகரியை பிடித்தால் பரந்தன் சந்திக்கு வருவது ரொம்ப சுலபம் என்பது எந்த முட்டாளுக்கும் தெரியும்அதனால் தான் பூநகரிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கிறேன் நான்.

மறுக்குறீர்களா???

நகம் போய்விட்டது

விரல் போய்விட்டது என்பதைவிட

கை போய்விட்டது அதிக இழப்பாயிருக்குமல்லவா?????????

முட்டாளுக்கும் என்பதை விட "முட்டாளுக்கு" மட்டும் என்பதுதான் சரியானது....!!

ஸ்கந்தபுரத்தில், கோணாவிலில் இருக்கும் இராணுவம் ஊர்மனைகளூடாக இலகுவாக பரந்தன் சந்தி வரும் எண்று சொன்னாலும் நம்புறது போல இருக்கும்...!!! ( இரண்டும் ஒண்றுதான் எண்றாலும்)

காறுக்காய்தீவு, செல்லையா தீவில் (நல்லூரில் எண்டு இராணுவத்தால் சொல்லப்படும்) இருக்கும் இராணுவம் கட்டல்நீரேரியை சுத்தி பரந்தன் சந்தி வர வேண்டியதில்லை நேரடியாக கரையோரமாக இரசாயண தொழில்ச்சாலை , ஆனையிறவுக்கே போய்விட்டலாம்...

முதலில் தாயக பூகோளத்தை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளும் வளியை பாருங்கள்... பிறகு கருத்தை வீரமாக எதிர்த்து எழுதலாம்...

Edited by தயா

நன்றி மைந்தன்!

உங்களது சிரமங்களையும் பொருட்படுத்தாது துணிந்து நடைமுறைச்சாத்தியமான அதிரடியான கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள்.

இங்கு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை அவசரமாக சிலர் முடுக்கியிருக்கும் நேரத்தில் உங்களது இந்த பதிவு ஆறுதலளிக்கின்றது.

மீண்டும் நன்றி.

Edited by விதுஷா

  • கருத்துக்கள உறவுகள்

:D புலிகளே வந்து தாம் பின்னகரும் காரணத்தைச் சொன்னால் ஒழிய இவ்வாறான கருத்துக் குழப்பங்களைக் கட்டுப்படுத்த முடியாது. புலிகள் பலவீனத்தால் விலகிக்கொள்ளுகிறார்கள் என்பதும், ராணுவம் பெரும் பலம் அடைந்து விட்டது என்ற எண்ணங்களும் கூட பொய்யாக இருக்கலாம். ஆனால் இவை உண்மையா இல்லையா என்பதை புலிகள் தான் சொல்ல வேண்டும்.

தமிழர்களுக்குப் பெரும் நம்பிக்கையாக இருந்த புலிகள் பின்வாங்குகிறார்கள் என்றால் நிச்சயம் அதிர்ச்சியும், கவலையும் ஏற்படுந்தான். அது நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையையும் அன்பையும் காட்டுகிறது !

நாங்கள் செய்யக்கூடியதெல்லாம் அந்த அன்பும் நம்பிக்கையும் என்றும் போல அவர்கள் மேல் நாம் வைத்திருப்பதுதான். தோள் கொடுப்பான் தோழன்.. என்னுமாற்போல் அவர்கள் வீழ்ந்தால் நாமும் விழுவோம்..அவர்கள் எழுந்தால் கூடவே நாமும் எழுவோம்...!

நாங்கள் தோற்க முடியாது.இலட்சியத்தின் மேல் எமது கவனம் இருக்கும்வரை இந்தப் பின்னடைவுகள் எமக்கு எந்த கெடுதலையும் ஏற்படுத்தப்போவதில்லை.

எம்மினத்தின் காவலர்களை நம்புவோம்..அவர்கள் கைகளுக்கு பலம் சேர்ப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக விரைவில் இதே பூநகரி பாதை வழியாக யாழில் உள்ள சிங்கள இராணுவம் தப்பி ஓடும். அந்த ஓட்டம் மஹிந்தவின் அரசின் கடைசி அத்தியாயமாக இருக்கும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை.

ஜானா

***

இதோ புலிகள் அழிந்தார்கள் சில பேர்கள் தான் மிச்சமிருக்கிறார்கள் என்ற போதெல்லாம் புலிகள் சரித்திரம் படைத்த வரலாறு நினைவில்லையா..?

யாழ்ப்பாணத்தை முழுவதுமாக இழந்து வன்னியில் சிறுபகுதியில் மாத்திரம் தங்கியிருந்து பின்னர் எமது தாய் மண்ணில் பெருமளவை சில நாட்களிலே மீட்ட சரித்திரமில்லையா...?

இப்படியிருக்க பூ நகரியை இழந்துவிட்டோம் என்பதற்காக எங்கள் போராட்டத்தையே இழந்துவிட்டோம் என்ற ரீதியில் நாங்கள் எங்களுக்கிடையில் வாக்குவாதப்படாமல் புலம்பெயர் நாடுகளில் முழுமூச்சுடன் எங்கள் கடமைகளைச் செய்தால் எங்களுக்கு கிடைக்கவேண்டிய இறுதி வெற்றி நிச்சயம் வந்தே சேரும்.

தலைவரின் சொன்ன கருத்துக்களில் இருந்து ஒரு வாசகம் '' நான் சொல்லில் செய்வதை விட செயலில் காட்ட விரும்புவன்...'' அவரின் செயல் வடிவத்தின் வெற்றி சோர்ந்து போயிருக்கும் எங்கள் நெஞ்சங்களுக்கு எங்களின் இறுதி வெற்றியை விரைவில் கொண்டுவரும். புலிகளின் மெளனத்தின் ஒவ்வொரு வினாடியும் எதிரிக்கு பல மரணங்களைக் கொடுக்கப் போவது உறுதியென்று நினைத்து நாங்கள் எங்கள் கடமைகளை நம் தாய் நாட்டுக்காகச் செய்வோம்.

இளங்கவி

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ஏன் எல்லோரும் இப்படி இழவு கொண்டாடுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை.எம் தலைவன் மேல் நம்பிக்கை யாருக்கும் இல்லையா???

புலிகளின் வரலாறுகள் உங்களுக்கு என்ன மறந்தா போய்விட்டது.உயிரை கொடுத்து போராடும் அந்த வீரர்கள் எந்த காரியம் செய்தாலும் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.புலிகளை எவனாலும் தோற்கடிக்க முடியாது இதுதான் வரலாறு.எம்படை சிங்களத்துக்கு சரியான பாடத்தை புகட்டும்.பூநகரியை இராணுவம் வன்வளைப்பு செய்தது தோல்வி இல்லை இது ஒரு தற்காலிக பின்னகர்வு அவ்வளவே இராணுவம் துடைத்தளிக்கப்படும் போது இவற்றின் தந்திரங்களை உலகம் அறியும்.

பலமானவனே உலகில் வாழ்வான் இதுவே இந்த உலகின் நியதி.பலமானவனையே உலகமும் செவிசாய்க்கும் அந்த பலத்தை அடைய போராளிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளார்கள் அவ்வளவே

:D புலிகளே வந்து தாம் பின்னகரும் காரணத்தைச் சொன்னால் ஒழிய இவ்வாறான கருத்துக் குழப்பங்களைக் கட்டுப்படுத்த முடியாது. புலிகள் பலவீனத்தால் விலகிக்கொள்ளுகிறார்கள் என்பதும், ராணுவம் பெரும் பலம் அடைந்து விட்டது என்ற எண்ணங்களும் கூட பொய்யாக இருக்கலாம். ஆனால் இவை உண்மையா இல்லையா என்பதை புலிகள் தான் சொல்ல வேண்டும்.

தமிழர்களுக்குப் பெரும் நம்பிக்கையாக இருந்த புலிகள் பின்வாங்குகிறார்கள் என்றால் நிச்சயம் அதிர்ச்சியும், கவலையும் ஏற்படுந்தான். அது நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையையும் அன்பையும் காட்டுகிறது !

நாங்கள் செய்யக்கூடியதெல்லாம் அந்த அன்பும் நம்பிக்கையும் என்றும் போல அவர்கள் மேல் நாம் வைத்திருப்பதுதான். தோள் கொடுப்பான் தோழன்.. என்னுமாற்போல் அவர்கள் வீழ்ந்தால் நாமும் விழுவோம்..அவர்கள் எழுந்தால் கூடவே நாமும் எழுவோம்...!

நாங்கள் தோற்க முடியாது.இலட்சியத்தின் மேல் எமது கவனம் இருக்கும்வரை இந்தப் பின்னடைவுகள் எமக்கு எந்த கெடுதலையும் ஏற்படுத்தப்போவதில்லை.

இரானுவ தந்திரங்களையும் போர் தந்திரங்களையும் அறிவித்துவிட்டு போர் செய்யும் வழமை புலிகளிடம் இல்லை.அதனை செய்யவும் போவதில்லை ஆனால் பெருவெற்றி ஒன்று காத்திருகின்றது என்பது மட்டும் உறுதி

அருமையான கருத்து வல்வை மைந்தன் அண்ணா.சில ஊகங்களை வெளியில் சொல்லமுடியாது ஏன் அமைதி என ?அதற்கு பல அரசியல் காரணம் இருக்கும்!!!! உதாரணம் தமிழ்நாட்டு எழுச்சியினை ஒட்டிய நிகழ்வுகள்

சப்பா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டிய நாமே,,,,,,

இன்னும் மற்றவர்களிடம் இருந்து விளக்கம் கேக்கவேண்டியதாக் கிடக்கு,,,,,,,,,,,,,,,,,

நாங்கள் எங்கே நிக்கிறோம்,

தயவு செய்து உங்கள் தனிப்பட்ட ஏமாற்றத்தை கொண்டு வந்து இங்கு எழுதாதீர்கள்,

இப்பொழுது நடப்பது வெற்றிக்கான காத்திருப்பும் விட்டுக்கொடுப்பும் மட்டுமே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உங்கள் கருத்துக்களால் களத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது,

களத்திற்கு ஏற்றாற் போல் இங்கே கருத்தை எழுதுங்கள்,

இங்கு புலிகளின் பலம் பலவீனத்தை பேசுவோர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்

எமக்குகு தமிழீழம் தேவை அல்லது நல்ல தீர்வு தேவை ஆகவே பலமோ பல்லவீனமோ போராடி கொண்டு தான் இருக்க வேண்டும் களைப்பு போராளிகளுக்கும் சரி பாதிக்க பட்ட மக்களுக்கும் சரி வரவேகூடாது.

உண்மையில் ஒன்றை பார்த்திர்கள் என்றால் இறுதியாக் 2 வருடம் புலிகள் மீது யாருமே கண்டனமோ அல்லது ஏதாவது தினிப்போ செய்ய முடியாத நிலை இனி அது எக்காலத்திலும் யாராலும் செய்ய முடியாத நிலையாகிவிட்டது.

அதே போல் வரலாற்றில் இந்தியாதமிழ் நாட்டை வைத்து தமிழீழத்தை வழிநடத்தவும் முடியயது அதுக்கான இறுதி சந்தர்ப்பமும் இந்தியா நழுவ விட்டு விட்டது, தற்போது நமக்கு இருக்கும் ஒரே தெளிவான பாதை புலம் பெயர் நாட்டில் பரப்புரைகள்( வெட்டுறான் கொல்லுறான் என்பது இல்லல) எமக்கான அரசியல் தீர்வுக்கான வழிகளை கண்டு அதை அவர்களை ஏற்று கொள்ள வைக்க வேண்டும்..

அதுவரையும் தலைவரின் பாதுகாப்பை புலிகள் உறுதிப்படுத்த வேண்டும் கொரிலா யுத்தத்தை பலமாக செய்ய வேண்டும் புலிகளின் கொரிலா யுத்த த்தை தாங்கும் நிலையில் மகிந்த அரசும் அவர்கலீன் அருவருடி இந்தியா நாய்களும் தாங்க மாட்டார்கள் நீண்ட நாட்களுக்கு.

இத்தனை இழப்புக்கு பின் போராட்டத்தில் இருந்து பின் வாங்க கூடாது காலத்துக்கு ஏற்ப்ப மாற்றி அமைக்க வேண்டும்.....

புலிகளுக்கும் சரி தமிழ்மகக்ளுக்கும் சரி ஒன்று நிச்சையமாக தெரியும் அது சிங்கள அரசு ஒரு போதும் தீர்வவ தராது மாறாக தமிழ் குழ்க்களை வைத்து தமிழர்களை சீரழிக்கவே பார்க்கும்............

ஆகவே மனத்தை தளரவிடவேண்டாம்..........

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

பேரின சிங்கள ஆக்கிரமிப்பாளன் பிடிக்கும் ஒவ்வோரு அங்குல தமிழீழ நிலமும் எம்முள் ஓராயிரம் ஓர்மத்தை வளர்க்கட்டும். நிச்சயமாய் நிச்சயமாய் நிச்சயமாய் நாளை அதே பூநகரி பாதையூடாக சிங்களம் அம்மணமாய் ஓடும். அந்தநாள்

தமிழீழம் மலரும் நாள்

நம்புங்கள் உறுதியுடன் நம்புங்கள் நிச்சயமாய் நாளை தமிழீழம் மலரும். ஒவ்வோரு தமிழனும் மனதில் உறுதியெடுத்துக் கொள்ளுங்கள் நாம் வெல்வோம் என்று. இவைகள் தோல்வியல்ல எம் வெற்றிக்கான உறுதியான படிக்கற்கள்.

இங்கே எம் விடியலுக்கு எதிராய் எழுதுபவர்கள் தமது அச்சத்தின் வெளிப்பாட்டையே காட்டுகின்றனர். புறந்தள்ளி விடியலுக்கான கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகுங்கள்.

ஜானா

நேற்றையதினம் வல்வை மைந்தனால் பதியப்பட்ட நிஷமான, யாரையும் தாக்கப்படாத, ஆக்கபூர்வமான, பிரதான கருத்தொன்று இந்த தலைப்பின்கீழ் நீக்கப்பட்டுள்ளது. காரனம் தெரியவில்லை.

இருப்பினும் அதேமாதிரியான செய்தியொன்று செய்திப்பிரிவில் இன்று இணைக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.