Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிகள் வீரவணக்கம்

Featured Replies

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம்

LTTE_muthukumar.jpg

Edited by vasisutha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமார் தமிழனாக வரலாறு படைத்து பிறந்ததன் பயனை அடைந்துவிட்டான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்காக தன் உயிரை ஈகம் தந்த அந்த தமிழ் மகனுக்கு நாமும் எமது வீர வணக்கத்தை செலுத்துவோம்...

இளங்கவி

முத்துக்குமாருக்கு வீரவணக்கம்

எமக்காக இன்னுயிர் தந்த

உறவுக்கு

எமது வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்...!

நாம் இவர்களிற்கு என்ன செய்ய போகின்றோம் ! வீர வணக்கம் மட்டும் தானா?

எமக்கா தன்னை ஈந்த வீரனுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுயிரை ஈகை கொடுத்த முத்துகுமாரூக்கு வீர வணக்கங்கள்.

56025959_05a9119ad7.jpg

தானாடாவிட்டாலும் தசையாடுமென்பார்கள், நீ உயிரையே ஆடவைத்துவிட்டாயே.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது முடிந்தால் முத்துக்குமாரின் பெயர் கொண்டு பாடல் இயற்றுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு சகோதரன் முத்துகுமாரின் கடைசி வார்த்தைகள்

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது முடிந்தால் முத்துக்குமாரின் பெயர் கொண்டு பாடல் இயற்றுங்களேன்.

பாடல் தமிழ் நாட்டில் இயற்றி ஆச்சூ..

MP3யில் வந்ததும் இங்கை இணைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமரா,

என்றும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துவிட்டாய் தம்பி எங்கள் வரலாற்றில் உன் பெயரும் மாவீரனாகவே பொறிக்கப்படும்.

சகோதரனே உன் உடலில் நீயிட்டதீ எம் இதயத்தில் எந்நாளும் கொழுந்து விட்டெரியும். உன் தியாகம் நாம் மறவோம். இரத்தம் சொறியும் விழிநீருடன் என் வீர அஞ்சலிகள்.

ஜானா

சென்னை: முத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விட மாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், 'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர்.

இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

தங்கர்பச்சான் ஆவேசம்!

இந்நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர்பச்சான், முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுதச்த வந்தார். அப்போது மாணவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.

நான் இத்தனை காலம் திரைத்துறையில் இருந்தும் முத்துக்குமார் எடுத்த முடிவு போல் எடுக்க நினைக்கவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். 'என் பிரேதத்தை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு போராடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார் முத்துக்குமார்.

இந்த ஒரு வாசகம் போதும். வாருங்கள் இளைஞர்களே போராடுவோம். இளைஞர்களால் தான் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தர முடியும்" என்றார் அவர் ஆவேசமாக.

தமிழ் சினிமா பிரபலங்களான நடிகர் சத்யராஜ், இயக்குநர் சேரன் ஆகியோரும் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சேரன், 'முத்துக்குமார் தனது கடைசிக் கடிதத்தில்..' என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள் என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது. இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை முத்துக்குமாரின் உடலை அடக்கம் செய்ய சம்மதிக்கக்கூடாது.

அப்போதுதான் முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடையும்" என்றார்.

உடல் அடக்கத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

விடுதலைப் புலிகள் அஞ்சலி

இதற்கிடையே, முத்துக்குமாரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.

அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன.

உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.

எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவித்துள்ளார்.

எமக்காக இன்னுயிர் தந்த

உறவுக்கு

எமது வீர வணக்கம்

Candle_5.gif
  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.

அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனே ...... முத்துக்குமரா .........

உனக்கு எனது வீர வணக்கம் .

Candle_5.gif

நெல்லையனின் மெழுகுதிரிக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!தமிழக உணர்வுகளின் நெஞ்சில் உருவான தீப்பொறி!!!!!இது எரிமலையாகி வெடிக்கட்டும்.

  • தொடங்கியவர்
Muthukumar-Poster.JPG
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ.. உணர்ச்சி வேகத்தில் முத்துக்குமார் தீக்குளிக்கவில்லை என்பதை அவரின் இறுதி மடல் தெளிவாக இனங்காட்டியுள்ளது. நிதானமாக சிந்தித்து.. தமிழக மக்களை சூழ போடப்பட்டுள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் தடைச் சங்கிலியை.. தகர்க்க அவர் திடமான இலட்சியம் வகுத்தே.. போராளியாக களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில்.. இவர் உண்மையில்.. தியாகி மட்டுமன்றி.. ஒரு போராளியுமாவார்.

அந்த வகையில் அவருக்கு வீரவணக்கங்களே உரித்தாகும். அவரின் இறுதி இலட்சியத்தை நிறைவேற்றுவதே தமிழக மக்கள் இப்போராளியின் அர்ப்பணிப்புக்கு தரும் காணிக்கையாக இருக்க முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

வீரன் புதை படும் முன்னமே பலரின் மனங்களின் விதைகளை ஊண்றி விட்டான்... வணக்கங்கள்...!!

குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே!!

Edited by vettri-vel

First.jpg

சென்னையில் தீக்குளித்து மரணம் அடைந்த

முத்துக்குமார் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

இன்று மாலை உடல் தகனம்

சென்னை, ஜன.31-

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில் தீக்குளித்து மரணம் அடைந்த வாலிபர் முத்துகுமார் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. முத்துக்குமார் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

வாலிபர் முத்துக்குமார்

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் முத்துக்குமார் (வயது 26) என்ற வாலிபர் தீக்குளித்து மரணம் அடைந்தார்.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், அவரது உடல் கொளத்தூர் அன்னை சத்தியா நகர் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள கொளத்தூர் வட்டார நாடார் சங்க அலுவலகம் அருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு, நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று மாலை வரை ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கட்சி தலைவர்கள்

முத்துக்குமார் உடலுக்கு, இந்திய கம்ïனிஸ்டு தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் கட்சி தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், முத்துக்குமார் தந்தையின் கையை பற்றி கொண்டு நல்லக்கண்ணு ஆறுதல் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி எம்.பி., வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், அதன் தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆஸ்டின், நெல்லை அமுதன். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்ïனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைசெயலாளர் மகேந்திரன், திராவிடர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

திருநாவுக்கரசர்

பா.ஜ.க. சார்பில் அகில இந்திய பொதுச்செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கவிஞர் காசி முத்துமாணிக்கம். தே.மு.தி.க. சார்பில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி தலைவர் மணி அரசன், பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் முத்துக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

டைரக்டர்கள்-நடிகர்கள்

சினிமா டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, சேரன், குகநாதன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேல், சுந்தரராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சத்யராஜ் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதார். என்னால் பேச முடியவில்லை. `தமிழ் ஈழம் அமைத்தே தீருவோம்' என்று குறிப்பிட்டார்.

கறுப்பு பேட்ஜ் அணிந்து...

சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து முத்துக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது, அவர்கள் ஈழத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். "வீரவணக்கம், வீரவணக்கம், முத்துகுமாருக்கு வீரவணக்கம்'' என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், மாணவர் அமைப்பினை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஊர்வலம் வந்தும், கறுப்பு சட்டை அணிந்தும் மலர் வளையம் வைத்தனர்

கடைகள் அடைப்பு

முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொளத்தூர் பகுதியில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. மாலையில் புரசைவாக்கம், ஓட்டேரி ஆகிய பகுதிகளிலும் இறுதி ஊர்வலம் வரும் என்று கருதி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. கொளத்தூரில் நேற்று பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை.

கொளத்தூர் சுற்றுவட்டார நாடார் முன்னேற்ற சங்கம், நாடார் நல சங்கம், பூம்புகார் வட்டார வியாபாரிகள் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் சார்பில் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் என்று படத்துடன் ஏராளமான சுவரொட்டிகள் கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

சாலை மறியல்

முத்துக்குமார் உடல் வைத்திருக்கும் இடத்தின் அருகே உள்ள கொளத்தூர் மெயின் ரோட்டில் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்தும், இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து தடைப்பட்டதால், கொளத்தூரில் உள்ள சில பள்ளிகளில் வழக்கத்தை விட முன்னதாக வகுப்புகளை முடித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பினார்கள். பல பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகூடத்திற்கு சென்று வீட்டிற்கு அழைத்து சென்றனர். கடை அடைப்பின் காரணமாக முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் பலர் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர், இலவச தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. .

எம்.எல்.ஏ. மீது கல்வீச்சு

வடசென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் நேற்று பிற்பகல் முத்துக்குமார் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தி வெளியே வந்த போது, அங்கிருந்த சிலர் வி.எஸ்.பாபு மீது கற்களை வீசினர். உடனே போலீசாரும், தி.மு.க. தொண்டர்களும் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

தமிழ் உணர்வு மிக்க ஒரு கும்பல் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சில தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர். அப்போது, எரிக்கவிடாமல் தடுத்த போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.

இன்று தகனம்

மறைந்த வாலிபர் முத்துக்குமாரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று (சனிக்கிழமை) காலையில் இருந்து மாலை 3 மணி வரை வைக்கப்பட்டு இருக்கும். அதன் பிறகு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மூலக்கொத்தளத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.