Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை போரை நிறுத்துமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே கோரிக்கை

Featured Replies

சர்வதேசம் தந்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சர்வதேசம் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லவில்லை. ஆயுதங்களை கீழே வைக்கத்தான் சொல்கிறார்கள்.

"சர்வதேச நாடுகளின் விருப்பப்படி ஆயுதங்களை கீழே வைத்து போர் நிறுத்தம் செய்கின்றோம், சிறிலங்கா அரசு இனவழிப்பைத் தொடர்ந்தால் மீண்டும் ஆயுதங்களை தூக்குவோம்" என்று அறிவிக்கலாம்.

இப்படிச் செய்தால்

"விடுதலைப் புலிகள் பேர்ர் நிறுத்தத்திற்கு தயார்" என்றும் "விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க இணக்கம்" என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடும்.

சிறிலங்கா அரசிற்கு சில சங்கடங்களை உருவாக்கலாம்.

  • Replies 57
  • Views 5.5k
  • Created
  • Last Reply
த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் பு‌திதாக ‌நிறு‌வியு‌ள்ள ச‌ர்வதேச உறவுக‌ள் துறை‌யி‌‌ன் பொறு‌ப்பாளராக அ‌வ்‌விய‌க்க‌த்‌தி‌ன் மூ‌த்த ‌பிர‌தி‌நி‌தி செ‌ல்வராசா ப‌த்மநாத‌ன் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளார
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை நாய் என சொன்ன டங்குவாரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

புலிகள் இறுதி முச்சினை விட்டு கொண்டு இருக்கின்றார்கள் என்று இலங்கை அரசு கூறுவதையும், புலிகள் அச்சாப் பிள்ளைகளாக ஒரு வலிந்த தாக்குதலையும் செய்யாமல் இருப்பதனையும் வைத்து அவர்கள் பலகீனமாகி விட்டார்கள் (?) என்று நம்பிக்கொண்டு மேற்குலகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மேற்குலகிற்கெதிராக இந்தியாவின் தலைமையில் அணிவகுத்துள்ள இலங்கை மீது தன் இறுதி செல்வாக்கினை புலிகளின் பெயரால் மேற்குலகம் செலுத்த முயல்கின்றது.

புலிகள் முற்றாக அழிவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தான் நூறுவீத மகிழ்வையும் பிராந்திய ரீதியான அனுகூலங்களையும் கொடுக்கும். மேற்குலகிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ அல்ல.

இந்த அறிக்கை + நிபந்தனை இந்தியாவின் ஆதரவுடன் வெளியாகியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் மிக குறைவு. அப்படி ஆதரவு இருக்குமாயின், தற்காலிக யுத்த நிறுத்தம் பற்றி அல்லது புலிகள் சரணடைந்த பின்னான நிகழ்வுகளிற்கு தான் முன்னிற்பதாய் இந்தியா தான் முதலில் அறிக்கை விட்டு இருக்க வேண்டும். தான் முன்னின்று இதனை அமுல் படுத்துகின்றேன் என்று அது கூறியிருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை புலிகள் முற்றாக அழிக்கப் படுவது ஒன்றுதான் இலங்கை மீதான மேற்குலகின் நேரடி செல்வாக்கை கட்டுப் படுத்த கூடிய ஒரு விடயம். அதன் வெளிவிவகார கொள்கையில் தமிழ் ஈழம் மட்டும் அல்ல, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு கூட இடம் இல்லை. ஆகவே அது ஈழத் தமிழ் மக்கள் பற்றி எந்தவிதமான அரசியல் நிலைப்பாட்டையும் (political stance) தற்போது கொண்டிருக்க வில்லை

புலிகள் முற்றாக பலம் இழந்து போய் விட்டனர் என்ற கருத்தியலின் செல்வாக்கில் வந்துள்ள அறிக்கை இது. அக் கருத்தியல் உண்மையெனில் தமிழ் மக்களாகிய நாம் மிக மோசமான ஒரு அரசியல் சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டு விட்டோம் என்பதை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளோம். அக் கருத்தியல் பொய் எனில் வெறும் இராணுவ மேலாதிக்கம் மட்டுமே எம்மை நிலை நிறுத்தாது என்பதனை மீண்டும் சில வருடங்களில் உணர்த்தப் படும் நிலைக்கு வருவோம்

தமிழ்நாட்டில் .. "தர்ம அடி" ....... எண்று சொல்வார்களே!!! அதுதான் இப்ப எங்களுக்கு விழுகிறது!!

தெருவிலை ஒருதன் அடி வாங்குகையில், போறவன், வாறவன் எல்லாம் ஒருக்கால் தட்டிப் போட்டுப் போவாங்கள்!!! அதேபோல்தான் .......... இப்ப நாங்களும்!!?????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணை நாய் என சொன்ன டங்குவாரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதில உங்கட பிரச்சனை வேற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம் தம்பி இதை ஒரு 90 அல்லது 95 லை சொல்லியிருந்தால் நிறைய உயிர் மிஞ்சியிருக்கும் கன சனத்துக்கு வெளிநாட்டு சொகுசு வாழ்க்கையும் கிடைச்சிருக்காது..........

என்ரை தம்பி இரண்டாயிரத்து ஐநூறூ ஈறோவுக்கு இந்தியாவிலையிருந்து கூறைச்சிலை எடுத்து நாப்பது பவுணிலை தாலிக்கொடி கட்டி அறுநூறுபேரை வெத்திலைபாக்குவைச்சு அழைப்பு விடுத்து ஒரு பிரமாண்ட கொட்டைகையிலை பதினையாயிரத்துக்கு மேலை காசைகாசெண்டு பாராமல் செலவழிச்சு கலியாணவீடு செய்தது உங்களுக்கு எரிச்சலாய் கிடக்கோ?

இல்லை தெரியாமல் கேக்கிறன் இதெல்லாம் ஒரு சொகுசு வாழ்க்கையே????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசம் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லவில்லை. ஆயுதங்களை கீழே வைக்கத்தான் சொல்கிறார்கள்.

அதென்ன கீழே வைப்பது? அவர்கள் சொல்வது ஆயுதங்களை இதைத்தான்.

jointly urged the LTTE to disarm

இலங்கை இப்போதுள்ள நிலையில் disarm என்பதும் சரணடைவது என்பதும் ஒரே அர்த்தங்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அறிவிப்பை வெறுமனே கண்டிப்பதையும் இந்த நாடுகளை திட்டுவதையும் விடுத்து, இறுதியாக எதுவுமே மிஞ்சாமல் போவதை விட கொஞ்ச மக்களின் உயிர்களையாவது காப்பாற்றுவதற்கு சிந்திக்க வேண்டும்.

இராணுவ பலம் மட்டுமே தீர்வுக்கு வழி என்ற மனநிலையில் இருந்து மீட்டு வேறுவழிகளில் இனி முயற்சிப்பதே காலத்தின் தேவை.

தமிழரின் இனவிடுதலைப் போராட்டத்திற்கு பூசப்பட்ட பயங்கரவாத சாயத்தை கழுவி போராட்டத்தை முன்னகர்த்த உடனடியாகவோ அல்லது நீண்டகால அடிப்படையிலோ இதைவிட வேறுவழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை!

முந்தினையை மாதிரி திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு போறவாற பெண்பிள்ளையளின்ரை பாவாடையை தூக்கச்சொல்லிப்போட்டு பூவரசங்கேட்டியாலை அடிக்கிற நிலைமை வரோணும் எண்டுறியள் ம்...ம் நடக்கட்டும் நடக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை நாய் என சொன்ன டங்குவாரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அறிக்கை விட்டவங்கள் அப்படிப்பட்டவங்கள் எண்டால் அவங்களைப் பெத்த அம்மாமாரும் அப்பிடித்தானே..! வேணுமெண்டால் அப்பாமாரையும் சேர்த்துக் கொள்ளுங்கோ..!

independence_demo2.jpg

independence_demo3.jpg

independence_demo4.jpg

independence_demo5.jpg

independence_demo6.jpg

independence_demo7.jpg

independence_demo9.jpg

  • கருத்துக்கள உறவுகள்

03/02/2009, 23:24 [ கொழும்பு நிருபர் மயூரன்]

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் - இணைத்தலைமை நாடுகள்

போர் நடக்கும் பகுதிகளில் பொதுமக்களின் உயிர்ச் சேதங்களை தவிர்ப்பதற்காக விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே வைப்பது தொடர்பாக பரீசிலிங்க வேண்டும் என இணைத்தலைமை நாடுகளானஅமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளன.

இணைத்தலைமை நாடுகள் மேலும் தெரிவித்தாவது

மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களின் வாழ்விடங்கள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளபடும் தாக்குதலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

விடுதலைப் புலிகள் தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலப்பரப்பை இழப்பதற்கு ஒருவேளை இன்னும் சிறிது காலமே இருக்கலாம் என்று கூறியுள்ள அந்த நாடுகள் இதற்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவது பயனற்றது என்பதை விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரண்டு தரப்புமே உணர வேண்டும் என்றும் கூறியுள்ளன.

மோதலில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உதவும் வகையில் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் இந்தக் குழு கோரியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது எறிகணை தாக்குதல்களை நடத்த வேண்டாம் என சிறிலங்கா அரசாங்கத்தை கோரியுள்ளது.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தினால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்காதது, எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சையின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு மருந்து பொருள்கள் மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பாது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என இணைத்தலைமை நாடுகள் விடுத்துள்ள கோரிக்கையினால் புலம் பெயர்ந்து வாழ்க்கின்ற தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மனித பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள தமிழ் மக்களுக்கு நியாயமான நீதியான தீர்வு எட்டப்பட வேண்டும் என புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் அந்தந்த நாடுகளில் கவன ஈர்ப்பு மற்றும் மறியல் போராட்டங்களில் நடாத்திவரும் வேளையில் இணைத்தலைமை நாடுகளின் இந்த கோரிக்கை அந்த மக்களிடையே பெரும் விசனத்தை எற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

pathivu

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் பழையபடி மூக்கை ஒரு பிரச்சனையை வைத்து நுழைத்துள்ளன.... இவர்களின் எதிர்பார்ப்பு இலங்கை அரசு சுலபமாக தமது உதவியுடன் புலிகளை அழித்துவிடும் என்று காத்திருந்தார்கள்...

ஆனால் முடியவில்லை,.. உலகம் முழுவது தமிழர்களின் உலகை கவரும் நடவடிக்கைகள் மேலும் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது..

அத்துடன் மக்கள் அழிக்கும் கொலைகளை இலங்கை நியாயப்படுத்தியுள்ளது..

புலிகள் அழிவில் விழிம்பில் இருப்பதாக பிரச்சாரம் வேறு..

யப்பானின் இலங்கையுடன் ஒருபக்கதலைப்பட்ச நட்பு என்பன இந்த இலங்கைக்கு முட்டுக்கொடுப்பதற்காக தமிழ்மக்களின் உயிர் அழிவை நிப்பாட்டுவதற்கு புலிகள் ஆயூதங்களை வைக்கவேண்டும் என்ற ஒரு புது காதில் பூ சுத்தும் நிலைப்பாட்டுடன் வந்துள்ளன... உண்மையில் மக்களில் அக்கறை இருக்குமானால் ஒரு போர்னிருத்தத்தை இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஏற்படுத்தி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யட்டும்.

அதாவது சண்டையில் அழிக்க முடியாது, பேடிகள் போன்று தமிழ்மக்களை அழித்து மகிழ்ச்சி கண்டு பழி தீர்க்கும் இனவாத அரசிற்கு...

உலக யுத்த சட்டங்களை மதிக்காத ஒரு இனவாத அரசை அடக்காமல், வைத்திய சாலைகளை பல முறை குண்டு வீசி மக்களை அழிக்கும் பயஙரவாத அரசிற்கு முட்டுக்கொடுக்க..

வந்துவிட்டார்கள்..இதற்கு மேல் என்னத்தை தமிழ்மக்கள் இழக்க இருக்கு? இவ்வளவுகாலம் எங்கு இருந்தார்கள்?

சரி ஒரு கதைக்கு இவர்கள் சொன்ன மாதிரி செய்தால் என்ன அடுத்து நட்க்கும்?

ஏற்கனவே இராணுவம் பிடித்து வைத்து இருக்கும் இடத்திற்குள் போன மக்களுக்கு என்ன நடந்தது?..

ஆயுதமில்லாதா புலிகளை, சாதரண மக்களை இனவெறி இரணுவத்திடம் இருந்து இந்த நாடுகள் பாதுகாப்பு அளிப்பார்கள? கனவிலும் நினைக்க முடிஅயாத அழிவுகள் செய்வார்கள்..இவர்களால் தடுக்க முடியாது??.

எனவே அவர் அவர்கள் எதனை செய வெளிகிட்டார்களோ அதனை செய்வார்கள்?

இஅங்கையில் எங்கும் டமிழ்மக்களுக்கு பாதுகாப்பில்லை..

ஏற்கனவே சமாதான ஒப்பந்தம் என்னும் போர்வையில் தமிழ் மக்களை பல்யீனமாக்கி சிஙளத்தை பலமாக்கி நிரந்தரமாக தமிழினத்தை அழிக்க உதவுவதே மேற்குலகின் நோகம்...

இவர்களின் மகுடிக்கு தமிழ்மக்கள் படை ஒருபோதும் மயஙாமல் ஒரு கை பார்த்து அழிதலும் சரணடைதலும் ஒன்றெ.. முதல்லவது எதிரிக்கு அதிகூடிய இழப்பின் பின் நடப்பது.. இரண்டாவ்து தற்கொலைக்கு சமம்.. என்பது என் முடிவு..

இன்றைய தேவை தமிழ் மக்களின் போராட்ட வலு தோற்வில்லை என்பதை சர்வதேசம் உணரும் வகையில் போராடும் சக்திகள் தம் செயற்பாடுகளை மாற்றியமைப்பதே. பலமுள்ளவனாக இருக்கும் வரைதான் அவனிடம் அதிகாரம் இருக்கும்! தமிழர்களின் தiலிதியை நிர்ணயிப்பதும் அதுவே!
:wub:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது...உலகம் உன்னை மதிக்கும்..

உன் நிலமை கொஞ்ம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

இதை 2001 இல் சொல்லியிருந்தால் புலிகள் நல்ல பிள்ளைகளாக ஆயுதங்களைப் போட்டு விட்டு தேர்தலில் நின்று இருப்பார்கள்.தலைவரும் அமைச்கராகியிருப்பார்.இத்தனை பேர் அநியாயமாய் செத்திருக்க மாட்டினம்.அதை விட்டிட்டு பேச்சுவார்த்தை என்று அங்கையும் இங்கையுமாக ஏனப்பா இழுத்துக் கொண்டு திரிந்தீர்கள்.இதுக்குள்ள சபேசன் அவங்கட அறி;க்கை;கு விளக்கம் வேற குடுத்திருக்கிறார்.சுண்டைக்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நலன் காப்போரை இந்தபக்கம் இப்போது காணவில்லை.... தமது வேலை முடித்துகொண்டு வேறு இடம் சென்றுவிட்டார்களோ?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களே சகல அறப் போராட்டங்களையும் உடனடியாக நிறுத்தி விட்டு புலிகளின் கரங்களைப்பலப் படுத்துங்கோ எனறும் மற்றவர்களை நம்பியிருக்காமல் சொந்தப் பலத்தில் போராடுங்கோ என்றும் மறை முகமாகச் சொன்னதற்கு ரொம்ப நன்றியுங்கோ.

:wub::):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது...உலகம் உன்னை மதிக்கும்..

உன் நிலமை கொஞ்ம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...

உந்த வசனத்தையும் அவையள்தான் உருவாக்கினவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாடுகளைச்சேர்ந்த அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமது பதவிகளை 24மணிநேரத்தில் இராஜிநாமா செய்ய முன்வரவேண்டும்.

இதுக்கு ஏற்ற இராச தந்திர நகர்வுகளை தலைவர் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏற்ற இராச தந்திர நகர்வுகளை தலைவர் செய்யவேண்டும்.

அவர் அதைச்செய்வார்

அது இவர்களுக்கு மட்டுமல்ல எமக்கே ஆச்சரியமானதாக இருக்கும்

ஆனால் எனக்கு இதில் தெரியவருவது என்னவென்றால்

உண்மையானவர்களையும் சுயநலவாதிகளையும் இதில் பலர் இனம் காட்டியுள்ளனர்

நன்றி

வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்

'விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும்'- இணைத்தலைமை நாடுகள்

இலங்கையின் வடக்கே போர் நடக்கும் பகுதிகளில்இ பொதுமக்களின் உயிர்ச் சேதங்களை தவிர்ப்பதற்காகஇ விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அமெரிக்காஇ ஜப்பான்இ நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளன.

விடுதலைப் புலிகள் தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலப்பரப்பைஇ இழப்பதற்கு ஒருவேளை இன்னும் சிறிது காலமே இருக்கலாம் என்று கூறியுள்ள அந்த நாடுகள்இ இதற்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவது பயனற்றது என்பதை விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரண்டு தரப்புமே உணர வேண்டும் என்றும் கூறியுள்ளன.

மோதலில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உதவும் வகையில்இ ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் இந்தக் குழு கோரியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது எறிகணை தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அவை கோரியுள்ளன.

நன்றி:- பிபிசி

எனக்கு இதைப்பார்க்கும்போது

நீங்கள் உண்மையில் பலயீனம் அடைந்திருந்தால்

உங்களது மக்களைக்காக்க முடியாதிருந்தால் .....

நிற்பாட்டலாமே....??? என்று கேட்பதுபோல்தான் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

உவங்க எல்லாருமே மனித வெறிபிடித்த நாய்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. எமது மக்கள் இவ்வளவு போராட்டங்களை நடத்தி தங்களின் கோரிக்கள் பற்றிச் சொல்லியும் இவர்கள் விளங்காத மாதிரி நடிக்கிறார்கள் என்றால் அப்படியே நடிச்சுக் கொண்டே இருக்கட்டும்.

இவர்கள் முதலாம்.. இரண்டாம் உலகப் போர்களின் போது ஜேர்மனியிடம் சரணடைந்திருந்தால் எத்தனையோ உயிர்களை காத்திருக்கலாம். நாசிகள் வழங்கிய அரசியல் உரிமை பெற்று வாழ்ந்திருக்கலாம் தானே. ஏன் செய்ய மறுத்தார்கள்..???!

ஜப்பான் சும்மா இருக்க ஏலாமல் சீனாவுக்குள் புகுந்து அடிச்சிருக்காவிட்டால்.. சீனாவிடம் சரணடைந்திருந்தால்.. அமெரிக்காவிடம் சரணடைந்திருந்தால்.. அணு குண்டு வெடிச்சிருக்குமா.. சந்ததி சந்ததிக்கும் அதன் பாதிப்பு வந்திருக்குமா..??! இல்லைத்தானே.

அடிப்படையில்.. இவர்கள் எந்த ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தையும் தமிழ் மக்களின் முன் வைக்காமல்.. தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தைக் கைவிட்டு.. சரணாகதி அடையச் சொல்வது.. உண்மையில்.. இவர்கள் ஜனநாயக சக்திகளா அல்லது ஆதிக்க சக்திகளா என்ற கேள்வியையே எழுப்பி நிற்கிறது.

இதே இணைத்தலைமை நாடுகள்.. சுனாமி நிவாரணக் கட்டமைப்பையே உருவாக்க முடியாமல் செயலிழந்த ஒன்றுதான். இவர்கள் ஆயுத பலத்தால் பிரச்சனைகளை.. தீர்க்க மக்களை அடித்துப் பணிய வைக்கலாம் என்பதையே.. ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். அதனையே இப்போது எம்மீதும் திணிக்க விளைகின்றனர்.

எமது போராட்டம் இன்று மீள்தகவு எல்லைக்கும் மீள்தகவற்ற எல்லைக்கும் இடையிலான முறிவுப் புள்ளியில் நிற்கிறது. அதனை மீள்தகவுள்ளதாக்கி.. இந்த எஜமானர்களின்.. எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டியவர்கள் நாமும்.. எமது ஒற்றுமையுடனான செயற்பாடுகளுமே ஆகும். அதை விரைந்து செய்வதுடன்.. எமது போராளிகளுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி சவால்களை முறியடிப்பதே இன்றைய தருணத்தில் செய்ய வேண்டியவை.

வியட்நாம் ஆகட்டும்.. தென்னாபிரிக்க விடுதலை ஆகட்டும்.. எல்லாம் முறிவுப் புள்ளியைத் தொட்டு.. சவால்களை வென்றே வெற்றி கண்டன. நாமும் 21ம் நூற்றாண்டிலும் அதையே சாதிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழினம்.. தனித்துவத்தோடு.. தலைநிமிர்ந்து நிற்க வேண்டின்.. அழிவுகளுக்கு அஞ்சிடாமல்.. சவால்களை முறியடிக்க ஒற்றுமையோடு பாடுபடுவதே இன்றைய தேவை..! இவர்களின் குரல்கள் உப்புச் சப்பற்றவை. தமது இயலாமையை மறைக்க இவர்கள் இப்படிக் கூவுகின்றனர். :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.