Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!

Featured Replies

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தாக்கப்பட்டுள்ளார்

சிதம்பரம் நடராகர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணிய சாமி.

அப்போது இலங்கை பிரச்சனையால் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சாமி மீது முட்டைகள் வீசி தாக்கினர்.

http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php

சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியசாமிக்கு முட்டையடி !

வக்கீல்களிடமிருந்து தப்பி நீதிபதியிடம் மேசைக்கு அடியில் ஒளிந்தார் சு.சாமி !

ஹைகோர்ட்டில் சு.சாமிக்கு ஸ்பெஷல் பூஜை!

“சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தவறு” என்று தீட்சிதர்கள் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணியசாமி.

எதிர் மனுதாரராக அதே நீதிமன்றத்தின் அறைக்குள் நின்று கொண்டிருந்தார் ஆறுமுகசாமி.

அந்தப் பக்கம் சுப்பிரமணியசாமியும் தீட்சிதர்களும்.

இந்தப் பக்கம் ஆறுமுகசாமியும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும்.

வெளியே ஈழப்பிரச்சினைக்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம்.

கொந்தளித்துக் கொண்டிருந்த நீதிமன்ற வளாகத்துக்குள் கறுப்புப் பூனைகளும் நூற்றுக் கணக்கான போலீசாரும் புடைசூழ அசட்டுத் தைரியத்துடன் நுழைந்தார் சு.சாமி.

நீதிமன்ற அறைக்குள் போலீசு நுழையக்கூடாது என்பதால் பூனை, எலியெல்லாம் வெளியே நின்றன. உள்ளே சாமி நுழைந்த்துதான் தாமதம், சு.சாமியின் மூஞ்சியை நோக்கிப் பறந்தன முட்டைகள். எழுந்தன முழக்கங்கள்.

“வேசம் போடுறா ஜெயல்லிதா

கொம்பு சீவுறான் இந்து ராம்

ஊளையிடுறான் சு.சாமி

ஊதிவிடுறான் துக்ளக் சோ

கொழுப்பெடுத்த பார்ப்பனக் கும்பல்

கொக்கரிப்பது கேக்கலியா

பார்ப்பனக் கும்பலின் கொட்டமடக்க

கொதித்தெழுவாய் தமிழகமே !”

ஜனவரி 26 அன்று ம.க.இ.க சென்னை வீதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள், நீதிமன்றத்தின் அறைக்குள் எதிரொலித்தன. கொதித்தெழுந்த்து தமிழகம்.

மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் மூஞ்சியில் வழிய, கவிச்சி வாடையுடன், கனம் நீதிபதிகளின் மேசைக்கு கீழே ஓடி ஒளிந்தார் சு.சாமி.

பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.

“என்ன நடக்கிறது இங்கே? கீப் தி டெகோரம்” என்று சத்தம் போட்டார்கள் நீதிபதிகள் மிஸ்ராவும் சந்துருவும்.

பூனைகளை உள்ளே அனுப்புங்கள் யுவர் ஆனர், என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி.

பூனைகள் நுழைந்தன.

“என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?” என்று சு.சாமியைக் கேட்டார்கள் நீதிபதிகள்.

“சிதம்பரம் வழக்கில் என்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார் சு.சாமி.

“சிதம்பரம் வழக்கின் மனுதார்ருடைய (தீட்சிதர்களுடைய) வக்கீல் எங்கே?” என்று கேட்டார்கள் நீதிபதிகள்.

அவர் ஏற்கெனவே எஸ்கே…ப். தீட்சிதர்களோ ஒரு ஓரமாக பம்மிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கை 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்கள் நீதிபதிகள். நீதிமன்றத்தின் உள்ளே முறைகேடாக நடந்து கொண்ட வக்கீல்கள் மீது விசாரணை நடத்துமாறும் போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

“கான்ஸ்டிடியூசனல் பெயிலியர். 356 இல் ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் அலறிக் கொண்டிருந்தார் சு.சாமி.

கடவுளே பெயிலியர் ஆகும்போது கான்ஸ்டிடியூசன் அப்பப்போ கொஞ்சம் பெயிலியர் ஆவதில் ஒண்ணும் தப்பில்லையே!

tail piece:

அது என்னான்னு கேட்டா…

சென்ற வெள்ளிக்கிழமையன்று சு.சாமி, சந்திரலேகா, விசுவ இந்து பரிசத் தலைவர் வேதாந்தம் ஆகியோர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு போனார்களாம்.

வழக்கில் சுப்பிரமணியசாமி ஜெயமடைவதற்காக

தில்லை நடராசப் பெருமானுக்கு

ஒரு மணி நேரம் ஸ்பெசல் பூஜை நடத்தி

பிரசாதமும் கொடுத்தார்களாம் தீட்சிதர்கள்.

ஈஸ்வரனே கைவிட்டுட்டானே…

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பூஜை போடலாம்.

ஹை கோர்ட்டில் தமிழ்மக்கள் பூஜை போடக்கூடாதா?

இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.

இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி!

விவரங்களுக்கு

வினவு தளத்திலிருந்து : http://vinavu.wordpress.com/2009/02/17/sswamy1

இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/02/17/sswamy1/#respond

தொடர்புடைய பதிவு

ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!

Edited by வினவு

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியசாமிக்கு முட்டையடி !

வக்கீல்களிடமிருந்து தப்பி நீதிபதியிடம் மேசைக்கு அடியில் ஒளிந்தார் சு.சாமி !

ஹைகோர்ட்டில் சு.சாமிக்கு ஸ்பெஷல் பூஜை!

சில வருடங்களுக்கு முன்பு , இவருக்கு எதிராக அ .தி .மு . க . வினரின் .... மகளிர் அணியினரால் நீதி மன்ற வாயிலில் நடாத்தப்பட்ட ஆபாச நடனத்தின் பின்பு ,

சுப்பிறமணிய சாமிக்கு , கிடைத்த முட்டையடி பூசையும் வரவேற்க கூடியது .

இவருக்கு கிடைத்த பூசைகள் , வரலாற்றில் மறக்கமுடியாதவை .

சோ..சோ...ஜே...ஜே...அழுகின தக்காளி? ஹாஹா...மானம்..ரோசம் சூடுசுரணை அரசியல்வாதிக்கு இருக்கலாமாப்பா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிகிகி இவருக்கு எல்லாம் தெவைதானா குடுக்கத்தான் வேனும்

மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் மூஞ்சியில் வழிய, கவிச்சி வாடையுடன், கனம் நீதிபதிகளின் மேசைக்கு கீழே ஓடி ஒளிந்தார் சு.சாமி.

பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.

:mellow::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்

தமிழனின் எதிரிகள் நடமுடியாதநாள் வரவேண்டும்

அது தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி முன் சுப்பிரமணியம் சுவாமிக்கு அடி - உதை .

சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை வக்கீல்கள் சிலர் அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது.

இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.

இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.

இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது ஹாலுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த போலீசாரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.

பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.

சுவாமியின் பாதுகாப்புக்கு வந்த சிஆர்பிஎப் படையினரையும் ஹாலுக்குள் வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.

இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில வக்கீல்கள் விரைந்து வந்து சுவாமியை மீட்டு அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.

நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ் .

இந்த ஸ்பெஷல் பூஜையை நேரில் காணக்கிடைக்கவில்லை என்று கவலையாக இருக்கு. :mellow:

கிளர்ந்தெழுந்த தமிழர்களுக்கு பாராட்டுகள்.

தீட்சிதர்களுக்கு மத்தியில் சுப்பிரமணியசாமி - படங்கள்

http://vinavu.wordpress.com/2009/02/17/sswamy1/

எனக்குப்பிடித்த கருத்து இதுதான்

//என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி.

//

முட்டையாலே அடிச்சாலே இந்த கூமுட்டை தலையன் செத்துடுவாரா?? அய்யோ, அய்யோ..

ஒரு தடவை அ தி மு க அன்டர்க்ர்வுன்ட் தரிசனம்.. இப்போ முட்டை அபிஷேசம்.. சாமி சாமி

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் மூஞ்சியில் வழிய, கவிச்சி வாடையுடன், கனம் நீதிபதிகளின் மேசைக்கு கீழே ஓடி ஒளிந்தார் சு.சாமி.

பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.

:mellow::lol:
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடி பத்தாதே [காணாது] :mellow::lol:

நல்ல காலம் முட்டைக்குள் ஊசியினால் அசி.......கலக்காமல் எறிந்திருக்கிறார்கள்.. இனி கறுப்பு பூணைகளுடன் முட்டை தடுப்பு படையுடன் திரியலாம்.. தமிழகத்தினுள் இக்கூட்டு (சோ,ஜெ,சு,ரா) எல்லாம் நிரந்தரமா மக்கள் முன் நடமாட தடை செய்தால் தமிழகம் உருப்படும்..பெருச்சாளிகள் ,ஆங்கிலத்தால் தமிழரை முட்டாள் ஆக்கலாம், ராசபக்சாவுடன் கூடி தமிழனை நாசமாக்க அலையும் கூட்டம்...

நன்றி வழக்குரைஞர்களே இவனது வாய்க் கொழுப்பு இனியாவது அடங்குமா பார்ப்போம். சூப்பிரமணிய சுவாமிகளை தமிழகத்திலிருந்தே துரத்தியடிக்க வேண்டும்.

ஜானா :mellow:

ஏற்கனவே மொட்டை... இதில முட்டை அடி வேற... பாவம் நல்லா நொந்திருக்கும்...

"தமிழகத்கில் முட்டைகளை விற்பவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள்! முட்டையிடும் கோழிகளெல்லாம் புலிகளுக்கு ஆதரவாகத்தான் முட்டையிடுகின்றன! எனவே முட்டையிடும் கோழிகளையும் முட்டை விற்பவர்களையும் உடன் கைது செய்யவேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் கூச்சலிடத் தொடங்க.... கலைஞர் எங்கே தன் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயந்து நடுங்க.... முரசொலியில் கலைஞர் கேள்வி பதிலாக 1800 ஆண்டு நடந்த திமுக மகாநாட்டில் தான் முட்டையின் கொடுர இயல்பை விளக்கி ஆற்றிய உரையையும், அதன் பின்னர் உடன்பிறப்புகள் எவருமே முட்டை உண்பதில்லை என்பதை விளக்கி சொதப்ப.... ஆகா! அருமை வாழ்க முட்டை!!

"தமிழகத்கில் முட்டைகளை விற்பவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள்! முட்டையிடும் கோழிகளெல்லாம் புலிகளுக்கு ஆதரவாகத்தான் முட்டையிடுகின்றன! எனவே முட்டையிடும் கோழிகளையும் முட்டை விற்பவர்களையும் உடன் கைது செய்யவேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் கூச்சலிடத் தொடங்க.... கலைஞர் எங்கே தன் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயந்து நடுங்க.... முரசொலியில் கலைஞர் கேள்வி பதிலாக 1800 ஆண்டு நடந்த திமுக மகாநாட்டில் தான் முட்டையின் கொடுர இயல்பை விளக்கி ஆற்றிய உரையையும், அதன் பின்னர் உடன்பிறப்புகள் எவருமே முட்டை உண்பதில்லை என்பதை விளக்கி சொதப்ப.... ஆகா! அருமை வாழ்க முட்டை!!

:) :) :(

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் மூஞ்சியில் வழிய, கவிச்சி வாடையுடன், கனம் நீதிபதிகளின் மேசைக்கு கீழே ஓடி ஒளிந்தார் சு.சாமி.

பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.

தென்னிந்தியாத் தமிழ்ப்படங்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை போலக் கிடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தமிழர்கள் இறந்தும் ஒரு பெட்டிச் செய்தியைத் தானும் போடாத சிங்கள ஊடகங்கள் இச்செய்தியை போட்டுள்ளன என்றால் இவர் எவ்வளவுக்கு சிங்கள விசுவாசி என்பதை கண்டு கொள்ளுங்கள்..!

Subramanian Swamy assaulted in Madras HC

Indian Janata Party president Subramanian Swamy was manhandled and abused by a group of lawyers in a court room at the Madras High Court today.

A group of advocates entered the court hall of Justice P K Mishra and K Chandru, while they were hearing a petition in connection with the 'Chidambaram temple case', in which Swamy was present to plead himself.

Shouting pro-LTTE slogans, the advocates hurled eggs and manhandled him in the presence of the two judges.

They drove out a police officer present in the court and bolted the door before attacking Swami. They also did not allow the CRPF security personnel to enter the court.

The lawyers in the High Court and lower courts in Tamil Nadu have been 'boycotting' court proceedings on the Sri Lankan Tamils issue for the past few weeks.

The Times of India

டெயிலிமிரர்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தகைய முட்டாள் பயல்கட்கு முட்டைகளை வீணாக்குவது அநியாயம்

சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம்

விதிவிலக்கு கூழ்முட்டை பாவனை தடை செய்யப்படவில்லை.

ஆகையால் ஜெயலலிதா,கருணாநிதி,தங்கபாலு,

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகம் இப்படிச் சொல்கிறது

Pro-LTTE lawyers hurl rotten eggs at Subramaniam Swamy

Lawyers sympathetic to the Tamil Tigers Tuesday hurled rotten eggs at Janata Party leader Subramanian Swamy in the Madras High Court in the presence of the judges and shouted anti-India slogans.

The judges P.K. Mishra and K. Chandru have ordered action against the lawyers. Swamy, who was in the court for a hearing, was whisked away by police.

'The judges took a serious view of the incident,' Swamy told IANS later. 'I am enjoying this and have asked those who attacked me to convey my thanks to the LTTE for exposing its cowardice once more,' he added.

A section of the lawyers have been holding protests over the sufferings of the civilian Tamils in Sri Lanka due to the war between the government forces and the Tamil Tigers.

Chief Minister M. Karunanidhi's son and ruling DMK leader M.K. Stalin has asked party workers to form a human chain across the state to demand immediate ceasefire in Sri Lanka.

Meanwhile, Congress leaders expressed 'surprise' Tuesday at a Puducherry police team's 'failure' to arrest movie director Seeman for his alleged seditious speeches around 10 days ago.

'Seeman exhorted people for an armed rebellion protesting over what they alleged is India's collaboration with the Sinhalese army against the LTTE,' a source said.

Seeman had been arrested twice in Tamil Nadu since November and was briefly imprisoned for alleged seditious speeches and is presently on conditional bail.

'If the reports are true, we are surprised. We have been told no warrants have been issued and have no knowledge of the police team's presence. Only the centre can effectively stop the killings of innocent Tamil civilians in Sri Lanka,' Congress legislature party leader D. Sudarsanam told IANS Tuesday.

Union Home Minister P. Chidambaram Sunday offered India's intervention to stop the civil war in Sri Lanka's if the banned Liberation Tigers of Tamil Eelam laid down arms.

http://www.indiaenews.com/politics/20090217/179371.htm

Subramanian Swamy assaulted in Madras High Court

Chennai: The Janata Party President Subramanian Swamy was manhandled and abused by a group of lawyers in a court room at the Madras High Court on Tuesday.

A group of advocates entered the court hall of Justice P K Mishra and K Chandru, while they were hearing a petition in connection with the 'Chidambaram temple case', in which Swamy was present to plead himself.

Shouting pro-Liberation Tigers of Tamil Eelam slogans, the advocates hurled eggs and manhandled him in the presence of the two judges.

They drove out a police officer present in the court and bolted the door before attacking Swami. They also did not allow the Central Reserve Police Force security personnel to enter the court.

The lawyers in the high court and lower courts in Tamil Nadu have been 'boycotting' court proceedings on the Sri Lankan Tamils issue for the past few weeks.

http://news.in.msn.com/national/article.as...umentid=1823549

என்ன தான் இருந்தாலும் "முட்டையை" இவ்வளவு கேவலப்படுத்தி இருக்க கூடாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவிச்சமுட்டையாலை எறிஞ்சிருந்தால் மனுசன் அதை ஒருவழிபாத்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.