Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு காவலாக இருந்த காவல்துறை மீது தாக்குதல் - 5 காவல்துறையினர் பலி, 5 சிறிலங்கா அணியினருக்கு காயம், சமரவீராவுக்கு நெஞ்சி்ல் குண்டு பாய்ந்துள்ளது

Featured Replies

இப்பவே சிங்களவங்கள் சிண்டு முடியத்தொடங்கிட்டாங்கள்.... அல்கவிடாக்கும் புலிகளுக்கும் தொடர்பாம், அதனால அல்கடாவை கொண்டு புலிகள்தான் இதை செய்தார்களாம்.

இந்த செய்தியையும் அதற்குப்பிறகு வந்தகருத்தையும் பாருங்கள்....

http://www.news.com.au/comments/0,23600,25133386-2,00.html

எனது கருத்தை பதியமறுத்த அந்த செய்தி மட்டுறுத்தினருக்கும் எங்கட யாழ் மட்டூஸுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? :)

நாய்க்கு எங்கை கல்லெறி பட்டாலும் காலைத்தான் தூக்கும்... :D

  • Replies 79
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் குண்டு மழையில் செத்துக் கொண்டிருக்க வேடிக்கை பார்த்த உலகம்.இதையும் வேடிக்கை பார்க்;கட்டும். இன அழிப்புக்கு உதவி செய்த பாகிஸ்தானுக்கு தன் வினை தன்னைச் சுடும் என்பது விளங்கவா போகிறது. . புலிகள் ஏன் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.பாகி;ஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவது அழகல்ல.புலிகளுக்கு பல சோலிகள் இருக்கு அட இந்தியாவே இன்னும் கண்டனம் தெரிவிக்க இல்லை.புலிகளுக்கு தொடர்பு ஏற்படுத்தினாலும் பருப்பு வேகாது.புலிகள் இவ்வளவு தூரம் பறந்து போயும் இராணுவ இலக்கைத்தான் தாக்கினவர்கள்.அப்பாவிகளைத் தாக்குவதென்றால் அது சின்ன விடயம் அவர்களுக்கு.ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.இந்தியா தடுத்தும் சிறிலங்கா விளையாடப் போனதால் இதை இந்திய உளவுத்துறை ஏன் செய்திருக்கக் கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பயங்கிரவாதிகளிடம் சொல்ல வேண்டும் விளையாட்டை விளயாட்டாக பார்க்கவேண்டும்

அரசியலை அரசியலாக பார்கனும் என்று மேலதிகவிபரங்களுக்கு யாழை தொடர்பு கொள்ளவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் இதை சும்மா விடக்கூடாது. இந்தியாவின் ஆதவரில் நடை பெற்ற இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது. சிறீ லங்காவும் உதவிக்கு தன் மிஞ்சிய படைகளை உடன் தயாராக்க வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவின் வடபகுதியை தாக்க சிறீ லங்கா தெற்கில் கிளஸ்டர் குண்டுகளை போட வேண்டும். ஆனால் இந்த தாக்குதலை முறியடிக்க தயாராக வேண்டும். மும்பாய் தாக்குதலில்ன் பின் முதுகெலும்பில்லாது நடந்த இந்தியா இந்த வலிந்த தாக்குதலை முறியடித்து பாரிய யுத்தத்தை பாகிஸ்தானுடன் தொடுப்பதுடன் கொழும்பில் வான் தாக்குதலை நடாத்துவதன் முலம் பாகிஸ்தான் விமானங்கள் சிறீ லங்காவை தளமாக பாவிப்பதை தடுக்க முடியும். ஆனால் சிறீ லங்காவில் உள்ள இந்திய விமானிகள் சிறீ லங்காவின் விமானத்தை திருடி பாகிஸ்தானில் ஒரு கருஞ்சிங்க தாக்குதல் நடாத்தி விட்டு புலிகள் மீது பழி போடலாம். ஆனால் போர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடக்கையில் பலாலியில் இந்திய படைகள் குண்டை விசலாம். ஒரு 5 நாளைக்கு இப்படி நடந்தால் யாவும் சுபமாக முடியும்!!!!!!!!

ஆய்வது பாகிஸ்தானிலிருந்து பாகீஇந்தியன்!

:):D:D

உக்காந்து யோய்சிப்பிங்களா அல்லது ரும்போட்டு யோய்சிப்பிங்களா?

இது முழுக்க முழுக்க இந்தியாவின் றோவின் செயல். காரணம் இலங்கை அரசை பாகிஸ்தானுடன் உறவு வைத்துக்கொள்ளவேண்டாம் என்று பலமுறை வற்புறுத்தியும் அவர்கள் உறவை வலுப்படுத்தியிருந்தார்கள். அதனை முறிக்கும் நோக்குடன் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட செயல் இது. கட்டாயம் இதற்கான பலனை இந்தியா உணர்ந்து கொள்ளும்.

எதுவாகினும் இத்தகைய செயல்களை இறுதிவரைக்கும் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளமாட்டார்கள். அதனை முழு உலகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

யார் சொல்லி யார் கேட்பார்

எவரை எவரிங்கு ஏய்ப்பார்

விளையாட்டுக்கள் சிலசமயம் வினையாவதுண்டு - அதேபோல்

வினைகளும் சிலவேளைகளில் விளையாடுவதுண்டு.

காயமடைந்த எந்த ஒரு இலங்கை அணி வீரனும் மீண்டும் எழும்ப முடியாது போனால் மிக்க சந்தோசம். ஒரு இனவழிப்பு அரசின் படுகொலைகளை மறைக்க முகமூடியாய் இருக்கும் ஒரு குழு இருந்தால் என்ன செத்தால் என்ன?

ஒவ்வோரு வருடமும் 40 மில்லியன் அந்நிய வருமானத்தை இந்த விளையாட்டு வீரார்களால் சிறிலங்காவிற்குள் கொண்டுவரப்படுகின்றது. அதில் பெரும் பகுதி இனவழிப்பு அரசின் கொலைவெறிச் செயல்களுக்கே பயன்படுகின்றது. அப்ப டியிருக்கும் பொது விளையாட்டு வேறு அரசியல் வேறு என்ற வியாக்கியனம் தேவையற்றது. பாக்கிஸ்தானே ஒரு பயங்கரவாத மதவெறி நாடு. அது இன்னும் ஒரு இனவழிப்பு பயங்கரவாத நாட்டிற்கு செய்த உதவிகளுக்கு கிட்டிய தண்டனையே இது. இனி உலகின் எந்த கிரிகட் விளையாட்டு அணியும் இந்த நாட்டில் விளையாடச் செல்ல அஞ்சும். வருமான இழப்பும் அவமானமும் விஞ்சும். ஆஸ்திரேலியா இந்தியா போன்ற நாடுகள் செல்ல மறுத்ததனாலேயே எம்மை அழிக்க ஆயுதம் கொடுத்த நன்றிக்கடனுக்காக சிங்கள கிரிக்கட் படை அங்கே சென்றது வாங்கிக் கட்டியது.

செய்தி இங்கு ஒளிபரப்பியவுடனேயெ சிங்களக் காவாலிகளால் இது புலிகளின் செயல் என பிரச்சாரப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்றது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கோ அமைக்கவேண்டியது எலங்கை அணிக்கு அமைந்து விட்டது :)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இந்த தாக்குதலுக்கு கவலையையும் கண்டனத்தையும் தெரிவிப்பார்களானால் சிறப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம் :)

லொள்ளு?? வன்னியில தினம் 40 ,50 எண்டு குஞ்சு குழந்தயள் சாகுது. சிங்களவனுக்கு உரசல் காயம் வந்ததுக்கு கண்டனம்? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் நமக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்காமல் இதை நமக்கு சாதகமாக பிரச்சார ரீதியில் பயன்படுத்துவது எப்படி என்பதைச் சிந்திக்க வேண்டும்...! அதன் மூல உபாயம் இந்திய பொதுசனங்களை அதுவும் தமிழர் அல்லாதவர்களை நம் பக்கம் திருப்புவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்..!

இப்போது இந்தியர்களும் பாகிஸ்தானியரும் ஊடகப்போரை மேற்கொண்டிருக்கிறார்கள். அதில் நாமும் நுழைந்து நமது கருத்துக்களை பொதுப்படையாக வைக்கலாம்..! சிங்களவர்கள் ஏற்கனவே தமது விசக்கருத்துக்களை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் பாகிஸ்தான் தூதுவர் குறிவைக்கப்பட்டபோது புலிகளைக் குற்றம் சுமத்தினர். இப்போது இலங்கை விளையாட்டாளர்கள் பாகிஸ்தானில் தாக்கப் பட்டுள்ளனர். பாகிஸ்தானுடன் இலங்கைக்கான நட்புறவை கேள்விக்குள்ளாக்கும் தாக்குதல்களாகத்தான் இவை வெளிப்படுகின்றன..! இலங்கை‍பாகிஸ்தான் நட்பை விரும்பாத நாடு எது என்று யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லையே.

பாகிஸ்தான் தூதர் தாக்கப்பட்ட அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தூதுவரே இந்தியாவின் சதி என்று சொன்ன பிறகும் இலங்கை அரசு புலிகளைக் கைகாட்டிக் கொண்டிருந்தது. அதேபோல ராஜீவின் கொலையும் புலிகள் மீது சுமத்தப்பட்டது என்று எமது கருத்துக்களை முன்வைக்கலாம்.

சும்மா இங்க வெட்டிப்பேச்சு பேசாமல் யூரியூப், என்.டி.ரி.வி போன்ற தளங்களில் உங்கள் ஊடகப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுங்கள். சூடு ஆறுமுன் செயலில் இறங்குவோம். இங்க யாழில் அலசி மினக்கடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை.

இது நிச்சயம் இந்தியாவின் வேலைதான் என்று சிங்களவன் எல்லா இடமும் சொல்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயம் இந்தியாவின் வேலைதான் என்று சிங்களவன் எல்லா இடமும் சொல்கிறான்.

இன்னும் நல்லதாப் போச்சு..! அவனே தன்ர தலையில மண்ணை வாரிப் போடட்டும்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரிதான். இனி இதை சாட்டியே இலங்கை இன்னும் நிறைய ஆயுதங்களை பாகிஸ்தானிடம் வாங்கி குவிக்கப் போகுதே!!

  • கருத்துக்கள உறவுகள்

மருமோன் மகிந்த செல்லமோ ............ :) உங்கட மற்ற செல்லம் கோவிக்கப்போறா

மாம்ஸ் நான் நக்கலுக்கு தான் அப்படி சொன்னேன் உந்த‌ இரணியன செல்லம் என்று.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிதான். இனி இதை சாட்டியே இலங்கை இன்னும் நிறைய ஆயுதங்களை பாகிஸ்தானிடம் வாங்கி குவிக்கப் போகுதே!!

பெப்சி.. இது நடந்தாலும் நடக்காவிட்டாலும் பாகிஸ்தானின் ஆயுதங்கள் இலங்கையைச் சென்றடைந்து கொண்டுதான் இருக்கும்..! ஆனால் இந்திய சராசரி மக்களிடம் பாகிஸ்தான் ‍‍- இலங்கை நட்புறவு மற்றும் இணைந்து செயலாற்றும் தன்மை ஆகியவற்றை எடுத்துச் சொல்ல இந்தச் சம்பவம் உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுத்ததெல்லாம் யாருக்காக கொடுத்தார் ? ஓரு வேளை பாகிஸ்தான் மேல சிறியன்ன படையெடுப்பாரோ

இதனால் நமக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்காமல் இதை நமக்கு சாதகமாக பிரச்சார ரீதியில் பயன்படுத்துவது எப்படி என்பதைச் சிந்திக்க வேண்டும்...! அதன் மூல உபாயம் இந்திய பொதுசனங்களை அதுவும் தமிழர் அல்லாதவர்களை நம் பக்கம் திருப்புவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்..!

இப்போது இந்தியர்களும் பாகிஸ்தானியரும் ஊடகப்போரை மேற்கொண்டிருக்கிறார்கள். அதில் நாமும் நுழைந்து நமது கருத்துக்களை பொதுப்படையாக வைக்கலாம்..! சிங்களவர்கள் ஏற்கனவே தமது விசக்கருத்துக்களை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் பாகிஸ்தான் தூதுவர் குறிவைக்கப்பட்டபோது புலிகளைக் குற்றம் சுமத்தினர். இப்போது இலங்கை விளையாட்டாளர்கள் பாகிஸ்தானில் தாக்கப் பட்டுள்ளனர். பாகிஸ்தானுடன் இலங்கைக்கான நட்புறவை கேள்விக்குள்ளாக்கும் தாக்குதல்களாகத்தான் இவை வெளிப்படுகின்றன..! இலங்கை‍பாகிஸ்தான் நட்பை விரும்பாத நாடு எது என்று யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லையே.

பாகிஸ்தான் தூதர் தாக்கப்பட்ட அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தூதுவரே இந்தியாவின் சதி என்று சொன்ன பிறகும் இலங்கை அரசு புலிகளைக் கைகாட்டிக் கொண்டிருந்தது. அதேபோல ராஜீவின் கொலையும் புலிகள் மீது சுமத்தப்பட்டது என்று எமது கருத்துக்களை முன்வைக்கலாம்.

சும்மா இங்க வெட்டிப்பேச்சு பேசாமல் யூரியூப், என்.டி.ரி.வி போன்ற தளங்களில் உங்கள் ஊடகப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுங்கள். சூடு ஆறுமுன் செயலில் இறங்குவோம். இங்க யாழில் அலசி மினக்கடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை.

இது தொடர்பாக வரும் பின்னூட்டல்கள் எழுதக் கூடிய அனைத்து செய்திகளிலும் எமது கருத்துகளை பதிவோம். அப்படி ஏதேனும் செய்திகளை கண்டால் உரிய திரியிலும் இணைத்து விடவும்

நான் கனடா ஸ்ரார் இற்கு நிழலி எனும் பெயரில் பதில் எழுதினேன்...

The Star

எல்லோரும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Authorities will also consider possible links to Sri Lanka's Tamil Tiger separatist rebels who are being badly hit in a military offensive at home, though Sri Lankan military spokesman Brig. Udaya Nanayakkara says authorities there did not believe the group was responsible.

http://news.aol.com/article/sri-lankan-cri...attacked/366074

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இத் தாக்குதலுக்கு பின்னால் நின்றதோ இல்லையோ தெரியாது ஆனால் ஒரு விதத்தில் இந்தியா வெற்றி பெற்று விட்டது.

ம்..

1.இலங்கை பாகிஸ்தான் நல்லுறவில் விரிசல்

2.பாகிஸ்தான் மீதான உலகின் நிலைப்பாட்டின் முன்னேற்றம்.

3.தங்கள் வார்த்தையை மீறிய இலங்கைக்கு தகந்த பாடம்

4.தீவிரவாத எதிரப்பில் பிறரின் ஆதரவான நிலைப்பாட்டு வளர்ச்சி

5.இந்திய வீரர்கள் மாட்டவேண்டி இருந்திருக்கலாம்.. தாக்குதல் பின்னணியில் இந்தியா இல்லாமலிருந்தால்

எதிரிகளின் இனத்தின் மீது தாக்கிய இந்த ததக்க்தல் அவன் மீது அனுதாபத்தை உருவாக்கி விடும் ஆகா இது புலிகளின் எதிரிகளால் செய்யப்பட்ட தாக்க்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தொடர்ந்து செய்து வரும் இன அழிப்புக்களால் போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் சில அழுத்தம் கொடுப்பதால் மகிந்தவே ஆட்களை வைத்து இத்தாக்குதலைச் செய்ததாகவும் அதனால்தான் வீரர்களுக்கு சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டதாகவும் இந்தச் சம்பவத்தால் அதிருப்தி அடைந்த நாடுகள் மகிந்தவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு மேலும் ஆதரவும் ஆயுதங்களும் கொடுக்கவிருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் அவதானி ஒருவர் கருத்து தெரிவித்திருக்கி;றார்.

Edited by புலவர்

எவா அவா?

சீனா , இந்தியா , பாகிஸ்தான், நடுகளோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அணித்தலைவர் ஜெயவர்த்தனா' தங்கட நாட்டில நடக்கிற பயங்கரவாதத்தாக்குதல்களில் பழகியதினால் , பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சென்றதாகச் சொல்கிறார்.சிறிலங்கா துடுப்பாட்ட அணியினரும் பேட்டிகளின் போதும் புலிகளைப் பற்றி பாகிஸ்தான் அனுபவங்களுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் எம்மவர்களில் சிலர் சிறிலங்காவின் துடுப்பாட்டத்துக்கு ஆதரவு தந்து விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்லுகிறார்கள்

Our terror background helped - Jayawardene

Sri Lanka captain Mahela Jayawardene has attributed his players' immediate reaction in taking cover when terrorists attacked their team bus in Lahore to the situation in his country. "We have been brought up in a background of terrorist activities," Jayawardene said after the squad returned to Sri Lanka late Tuesday night. "We are used to hearing, seeing these things - firing, bombings. So we ducked under our seats when the firing began. It was like natural instinct."

- cricinfo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.