Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உந்தவயசில...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதை தூக்காதையுங்கோ பிறகு நாரிக்குள் பிடித்துவிடும்,உந்த வயசில ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று மனிசி சொன்னது சுரேஷின் மனசு சிறிது சங்கடப்படதான் செய்தது.இப்ப ஜம்பத்தொன்பது வயசு தானே என்னும் அறுபது ஆகவில்லையே என்று மனதில் எண்ணி கொண்டான்."உந்த வயசு" என்ற வார்த்தையால் அவன் பல தரம் பாதிக்கப்பட்டுள்ளான்.

அவனுக்கு பத்து வயது இருக்கும்,பாடசாலையால் வீடு திரும்பும் போது பக்கத்து வீட்டு அக்காவுடன் ஒரு பெடியன் கதைத்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு அதை அம்மாவிடம் சொல்ல,அம்மா சந்நிதானமே ஆடிவிட்டாள் உந்த வயசில உப்படியான கதைகள் ஒன்றும் தேவையில்லை என்று அதட்டி கொண்டு இருக்கும் போது அப்பாவும் அவ்விடத்திற்கு வரவே அம்மா அவரிடம் விடயத்தை சொல்ல அவர் தனது பங்கிற்கு கன்னத்தில் இரண்டு அடி போட்டு ஓடி போய் புத்தகத்தை எடுத்து படி உந்த வயசில உதுகள் எல்லாம் உனக்கு தேவையில்லாத கதை என்றார்.

அவன் அதன் பிறகு காதல் ஜோடிகளை கண்டால் தான் மட்டும் பார்ப்பான் வீட்டில் சொல்வதில்லை இன்று வரை.

உயர் வகுப்பு படிக்கும் போது சக மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தது அவளது அண்ணனுக்கு தெரியவரவே இவனை கூப்பிட்டு உந்த வயசில என்ன காதல் வேண்டி கிடக்கு இனிமேல் தங்கச்சியுடன் சேட்டை விட்டியோ கை,காலை முறித்து விடுவேன் என்று  திட்டியது இன்றும் அவனது நினைவுகளிள் வந்து சென்றன.

பல்கலைகழகத்தில் காதலியின் கைகளை பிடித்த போது உது எல்லாம் இப்ப வேண்டாம் கல்யாணத்திற்கு பிறகு தான் என்று காதலி ஒதுங்கியது,உந்த வயசில இதுகளில் நாட்டம் காட்டினோமோ படித்து பட்டம் எடுத்த மாதிரி தான் இருக்கும்,அடுத்த மாதம் நடக்கின்ற இறுதி ஆண்டு பரீட்சையை வடிவாக செய்ய வேண்டும் போய் படியுங்கோ என்று செல்ல அதட்டலுடன் சென்றவள் பரீட்சை முடிந்து மறுகை வெளிநாட்டு மாப்பிளையை கரம்பிடித்து இவனது கைதனை உதறி சென்றது இவனது மனதில் இழையோடியது.

மனைவியிடம் எல்லாம் பொம்பிளைபிள்ளைகளாக இருக்குது ஒரு ஆம்பிளை பிள்ளை பெற்றால் என்ன என்று கேட்க ஜயோ! உந்த வயசில உது வேண்டி கிடக்கு,"கப்சியூல்,கார்சீட்" உதுகள் எல்லாம் பூட்டி பழையபடி அ - ஆ வில இருந்து தொடங்க வேண்டும் சும்மா இருங்கோ என்று மனைவி அதட்டியது அவனுக்கு நினைவில் வந்தது.

கொஞ்சம் "ஸ்டைலாக" பெடியங்கள் போல் வெளிக்கிட்டால் உந்த வயசில உவருக்கு உந்த மைனர் உடுப்புகள் தேவையோ என்று சிலர் பேசுவதை கேட்டே அலுத்து விட்டது.ஆத்மீகத்தில் நாட்டம் கொண்டு தியானம்,யோகம் என்று கண்ணை மூடி கொண்டு இருக்கும் போது உந்த வயசில உதுகள் எல்லாம் உங்களுக்கு ஏன்?பேசாமல் இருங்கோ உதுகள் செய்வதிற்கு இன்னும் காலம் நேரம் இருக்கு நடக்க வேண்டிய அலுவல்களை பாருங்கோ.

உதுகளை மறப்பதிற்காக கணணி உலகில் கருத்துக்களம் என்று வைத்திருக்கிறார்கள் அங்கு என்று ஏதாச்சும் எழுதுவோம் என்று பார்த்தால் உந்த வயசில உவரிண்ட கருத்துக்களை பாருங்கோ வயசிற்கு ஏற்ற கருத்துக்களை எழுதுங்கோ என்று சிலரின் நையாண்டிகள் முதல் மனசியின் வசைபாடல் வரை கேட்ட சுரேசிற்கு மனித வாழ்க்கை வயசிற்கு தடைகளை மனிதனே விதிக்கிறான் என்று நினைத்தபடியே அடுத்த வயசிற்கு என்ன தடையாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கினான்.

உந்த வயசில,உந்த நேரத்தில உவருக்கு உந்த குட்டிக்கதை தேவையோ என்று வாசகர்கள் நீங்கள் நினைக்கிறது விளங்குது. biggrin.gif 

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ....யதார்த்தம்,உண்மை

வணக்கம் புத்தன் அண்ணா

நல்லகதை வித்தியாசமான கற்பனை உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்.

அதுசரி உந்த வயசிலை புத்தனுக்கே இவ்வளவு பிரச்சினை என்றால் ?? எம்போன்ற சாதாரண

மனிதற்கு???????

Edited by ATOZ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் ........உண்மையை அழகான கதையாக சொன்ன விதம் அழகு .........அது சரி ......."சன்னதம் " ஆடுவது என்பார்கள் சந்தி நாதம் ...சரியா ? நட்புடன் நிலாமதி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேச்சாலே மனுசன் கதையை கொண்டு வந்து இணைத்துவிட்டார் வாழ்த்துக்கள் புத்தர் வாழ் :)

நிஜமான நிகழ்வை கற்பனையுடன் சொன்ன விதம் அழகு .....

வாழ்த்துக்கள் புத்தன்

தன்ர ஆதங்கத்தை கதையாக கொட்டித்தீர்த்த புத்தனுக்கு வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ....யதார்த்தம்,உண்மை

நன்றிகள் ரதி

வணக்கம் புத்தன் அண்ணா

அதுசரி உந்த வயசிலை புத்தனுக்கே இவ்வளவு பிரச்சினை என்றால் ?? எம்போன்ற சாதாரண

மனிதற்கு???????

பயப்பட் வேண்டாம் எல்லாம் வெல்லலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

நாளாந்தம் நடக்கும் நல்ல கதை புத்தன் .

மரணம் வந்த பின்பும் , உந்த ஆளுக்கு இது சாகிற வயதோ ..... என்று கதைப்பார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் ........உண்மையை அழகான கதையாக சொன்ன விதம் அழகு .........அது சரி ......."சன்னதம் " ஆடுவது என்பார்கள் சந்தி நாதம் ...சரியா ? நட்புடன் நிலாமதி

சன்னதம் தான் சரி....நன்றிகள் நிலாமதி ...

ஒரு பேச்சாலே மனுசன் கதையை கொண்டு வந்து இணைத்துவிட்டார் வாழ்த்துக்கள் புத்தர் வாழ் :D

நன்றிகள் முனிவர் ஜீ ஜீ ஜீ :D

நிஜமான நிகழ்வை கற்பனையுடன் சொன்ன விதம் அழகு .....

வாழ்த்துக்கள் புத்தன்

நன்றிகள் நிகே

தன்ர ஆதங்கத்தை கதையாக கொட்டித்தீர்த்த புத்தனுக்கு வாழ்த்துக்கள் :lol:

ம் ம் ம்.......அப்படியும் சொல்லலாம்....நன்றிகள் குட்டி :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தாராளமாய் கேள்விப்பட்டிருக்கிறேன்.இநத,

உந்த வயசுப்பிரச்சனையை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளாந்தம் நடக்கும் நல்ல கதை புத்தன் .

மரணம் வந்த பின்பும் , உந்த ஆளுக்கு இது சாகிற வயதோ ..... என்று கதைப்பார்கள் .

'உந்த வயசை 'வைச்சு சனம் படுத்திரபாடு.....நன்றிகள் தமிழ்சிறி

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

புத்ஸ் ! இனித் திருப்பிக் கேளுங்கோ இந்த வயசில செய்யாமல் இனி எந்த வயசில செய்யிறது என்டு !!!

புத்தன் உந்த வயசில உப்புடி கதை எழுதாமல்

எந்த வயசில எழுதுகிறது???

முதுமைக்கு வயசில்லையாம்

உண்மைதான் எல்லாம் மனசுதானான்

அதனால் நான் மனசார உங்கட

கதைக்கு என்ர வாழ்த்துக்களை

மனம் நிறைய அள்ளி தாறன்!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே இந்த வயசிலை இது தேவையா??? அதுசரி வயதை சொல்லவேயில்லையே??? :( :(

யதார்த்தமான குட்டிக் கதை, கற்பனையுடன் தந்தமைக்கு நன்றி.

மழலை முதல் முதியோர்வரை யார்தான் வயசுக்கு ஏற்ற வேலை செய்கிறார்கள்? அதுசரி எப்ப என்ன செய்ய வேணுமெண்டு ஒரு அட்டவணை போட்டு வைச்சா இருக்கு? அவற்றைக்கடைப்பிடிக்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமசடக்காய் புத்தன் தன்ரை கதையை சொல்லிப்போட்டர். :(

இன்னும் எத்தினை சோகங்களை மனுசன் நெஞ்சுக்கை அடக்கிவச்சிருக்கோ ஆருக்கு தெரியும்? :(

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது சமுதாயத்தில் நாம் சிறுவயதுமுதலே

சுயமாகச் சிந்தித்துச் செயல்படமுடியாதவர்களாக

சுயமற்று அடுத்தவரின் விருப்பு வெறுப்புகளைப் பிரதிபலிப்பவர்களாக

எப்படி வளர்க்கப்பட்டோம் என்பதனை அருமையாப் பதிவுசெய்த

புத்தனிற்குப் பாராட்டுக்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அதை தூக்காதையுங்கோ பிறகு நாரிகுள் பிடித்துவிடும்,உந்த வயசில ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று மனிசி சொன்னது சுரேஷின் மனசு சிறிது சங்கடபடதான் செய்தது.

எங்க புத்தன், மனிசிமார் சும்மா இருக்க விடுகினம். அதைச் செய், இதைச் செய் என்று சும்மா இருக்கா விடிகினமே.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல கதை நன்றி புத்தன்.அந்நக்காலத்தில் தொடங்கினது. காதல் எண்டால் கை,காலைப் பதம் பார்ப்பது. இந்தக்காலம் வரை விடவே இல்லை தங்கட பழக்கவழக்கத்தை.காதல் எண்டால் என்ன அவ்வளவு கொடுiமாயானதா.....?இரண்டு மனங்கள் ஒண்டை,ஒண்டு மனசார புரிந்து கொண்டு இணைவது தப்பா...?வாழவும் விடாதுகள்,சாகவும் விடாதுகள். :D:lol::)

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தவயசில..., குட்டிகதை

கதை அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

.காதல் எண்டால் என்ன அவ்வளவு கொடுiமாயானதா.....?இரண்டு மனங்கள் ஒண்டை,ஒண்டு மனசார புரிந்து கொண்டு இணைவது தப்பா...?வாழவும் விடாதுகள்,சாகவும் விடாதுகள். :D:lol::)

யாயினி.

சொந்த அனுபவம் இருக்கிறது போலக் கிடக்கிறது.

சாத்திரியார் கதையோட கதையா 59 எண்டு சொல்லிப்போட்டார் புத்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.