Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தனி ஈழம் தான் ஒரே தீர்வு! அதை அமைக்கும் நடவடிக்கையை நான் நிச்சயமாக செய்வேன்!!": ஜெயலலிதா பரபரப்பான வாக்குறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் மக்களவை தேர்தல் வேட்பாளர் செம்மலையை ஆதரித்து பேசினார்.

அப்போது, ‘’இலங்கைக்கு நேரில் சென்று வந்து அங்கே ஈழத்தமிழர்களின் அவலங்களை கண்டுவந்திருக்கிறார் ’வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர்.

அவர் என்னைச்சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது.

தமிழர்களின் இந்த நிலை நீங்கவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டுமென்றால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு.

அந்த தனி ஈழத்தை நாங்கள் போராடி பெற்றுத்தருவோம். இது நாள் வரை நான் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லைவில்லை. அரசியல் தீர்வு, அது இது என்றூ சொல்லிவந்தேன்.

ஆனால், இப்போது ஆணித்தரமாக சொல்கிறேன் தனி ஈழம்தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு’’ என்றூ ஆவேசமாக பேசினார்.

நன்றி நக்கீரன்

  • Replies 57
  • Views 5k
  • Created
  • Last Reply

அம்மணி நெசமாவா சொல்றீங்க? தேர்தல் முடிஞ்சதும் தமிழர்றை காலைவாராம இருந்தா போதும்.

இது உண்மையான செய்தியா???????????????????..................நம்பமுடியவில்லை

உண்மையான செய்திதான் மாவீரா!!!

நக்கீரன் பொய் சொல்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நடப்பது வெறும் வோட்டுக்கான வேட்டுகள்...... வருகிற மாதம்தான் கதிரைக்கான வேட்டுகள் கேட்கும்.

அப்போது மனிதம் இறந்திருக்கும் பெட்டிகளுடன் கூடிய பணமே பேசும். பெட்டிகள் புரளும்போது மனிதத்தை பற்றி கதைக்க நேரமே கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் (99%)பொய்யர்கள். அந்த வரிசையில் செயலலிதாவும் அடங்குவார். எல்லாம் கதிரையை பிடித்த பின் தடா உனக்கு தடா தான். எம்மை தான் நாங்கள் நம்ப வேண்டும். யாரும் எமக்கு உதவி செய்ய போவதில்லை.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா தாயே காலம் காலமாய் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாத்து பழகிவிட்டோம் இருந்தாலும் தாங்கள் சொல்லுவது உண்மையானால் நல்லது ஆனால் நான் உங்கள் பேச்சை நம்பவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் சில அற்ப பிறவிகளை போல ஜெ க்கு முதுகில் குத்தும் பழக்கம் கிடையாது.

ஜெயலலிதாவின் இந்த கருதுக்காகத்தான் நாம் பல வருடங்கள் எதிர்பார்த்திருந்தோம்.... இதை தான் காலம் கனிந்து வருகிறது என்று சொல்வது.... தமிழ்நாட்டு அரசியல் பற்றி வாதிடவோ சிந்திக்கவோ எமக்கு நேரமில்லை.... இப்பொழுது எமக்குத்தேவை விமர்சனங்களையும் தாண்டிய ஒரு தொலை நோக்கு பார்வை...... முடிந்தளவு எமக்கான பலத்தினை சர்வதேச அளவில் பெற்றுக்கொள்வதே ' தமிழீழம் ' நோக்கிய பயணத்தினை விரைவு படுத்தும்......ஆறரை கோடி தம்ழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு நமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மிகப்பெரும் சக்தியாகும். பா.நடேசன் அவர்களின் கூற்றும் இதுவே.. .....

தலைவரின் 2008 மாவீரர்நாள் உரையை மீண்டுமொருமுறை கேளுங்கள் உங்களுக்கு அவர் எதை பெரிதாக எதிர்பார்க்கிறார் என்பது நிச்சயம் விளங்கும்...

அவரது எதிர்பார்ப்பு

1.போராட்டம் என்பது அடுத்த தலைமுறையகிய மாணவர்களால் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்......

2.ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்...அனைத்து தமிழர்களின் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறார்

3.ஈழத்த்தமிழகளகிய புலிகளே இந்தியாவின் உண்மையான நட்பு சக்தி என்பதை புரிந்து இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.....

எப்படி முதல் இரண்டும் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ, மூன்றாவதும் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.....காலம் கனிந்து வருகிறது

என்னைப்பொறுத்தவரை ஜெயலலிதா எமது போராட்டத்திற்க்கான எதிரியாகத் தான் இதுநாள் வரை செயல்பட்டு வந்தார்..... ஆனால் துரோகி இல்லை துரோகி மிகவும் ஆபத்தானவன்....துரோகியை விட எதிரியை நம்பலாம்.... இதற்க்கு பதிலடியாக அடுத்து கருநாநிதியின் குட்டிகரணம் எமது போராட்டத்திற்க்கு இன்னும் வலுசேர்க்கும் என்றே எதிர்பார்ப்போம்

முடிந்தளவு ஒருகுடையின் கீழ் திரண்டு தேசிய தலைவரின் கரத்தினை வலுப்படுத்துவோம்- அதற்க்கு எமது கோபதாபங்கள் விமர்சனங்கள் தடையாகிவிடக்கூடாது.

Edited by mayavan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் சில அற்ப பிறவிகளை போல ஜெ க்கு முதுகில் குத்தும் பழக்கம் கிடையாது.

உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சில அற்ப பிறவிகளை போல ஜெ க்கு முதுகில் குத்தும் பழக்கம் கிடையாது.

சரியா சொன்னீங்கள்

தமிழக மக்களே உங்கள் உறவுகளுக்காக ஒரு தடவை அம்மாவுக்கு சந்தர்ப்பம் கொடுத்துதான் பாருங்களேன். ஒரு தடவை ஏமாற்றினால் அடுத்த சட்டசபை தேர்தலில் அம்மாவுக்கு ஆப்பு வைக்கலாம். காமுகன் மு.க இன்று ஒன்று நாளை ஒன்று என்று சொல்வதைவிட அம்மா இதுவரை எங்களுக்கு தமிழீழம் தேவை என்று சொல்லவே இல்ல. பெற்றுதருகின்றாவோ இல்லையோ தமிழீழம்தான் தீர்வு என்று ஜெயின் வாயிலிருந்து வந்தது பெரிய விடயம். அடுத்தது அவ சரியோ பிழையோ முடிவெடுத்தால் எதற்கும் அஞ்சமாட்டார். தமிழீழம் என்று முடிவு எடுத்திருக்கின்றாரோ அதைப்பற்றி தெரியாது.

எப்படியாயினும் இத்தாலி காங்கிரசும் திருத்த முடியாத கழுதையும் தேற்கடிக்கப்படவேண்டும். அதனால் தமிழக மக்கள் ஜெயை ஆதரிப்பதில் தவறில்லை.

இது 'ஜெ' 'முக'வுக்கு வைச்ச ஆப்பு. அப்பு சிலவேளை முழங்காலிலை சுழுக்கு எண்டு எங்கையாவது பதுங்கியிடும், அல்லது கேள்வி பதில் பாணியில் பேத்தனமான ஒரு அறிக்கை விடும்.

ஏமாற்றியவருக்கு எமாற்றம் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் சொல்வதில் 100 வீதம் உண்மைஉள்ளது. அது நடைமுறைப்படுத்தப்படுமா ? என்பது பிறகு தெரியவரும்.

தமிழக தமிழனின் உணர்வை ஜெயலலிதா அவர்கள் பிரதிபலித்து உள்ளார்...

எங்கள் மக்களுக்காய் நீண்டகாலம் குரல் கொடுத்து ஜெயாவை மாற்றம் காண வைத்த தமிழக உறவுகளுக்கு எல்லாம் நண்றிகள் சேரவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இல்லை எப்போதுமே ஜெயலலிதா அவர்கள் தனக்கு மனதில் என்ன தோன்றுகின்றதோ அதனை மறைக்காது கூறக்கூடியவர் எந்த விடையத்திலும் துணிச்சல் மிக்கவர். கடந்த ஒரு முறை தேர்த்தல் உடன்பாடுபற்றி பேசுவதற்கு காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் மூப்பனாரை நியமித்தது அவருடன் தான தொகுதி உடன்பாடு பற்றிப் பேச்சுவார்தை வைத்துக்கொள்ள மாட்டேன் எனும் பொருள்பட "சிங்கிள் எலிமென்ட்" மூப்பனார் என விழித்துப் பேசியவர்.

தறபோதைய தமிழகத் தலைவர்களிலும் கட்சிகளிலும் சாதிஅரசியல் குறைவாக இருப்பது அவருது கட்சியில்தான. காரணம் இவரது கட்சிமாத்திரமே தமிழ்நாட்டில் தலைமைக்கு மட்டும் கட்டுப்பட்டது. தலைமை எள் என்றால் உறுப்பினர்கள் எண்ணையாக நிற்பார்கள். குடும்ப அரசியல் மற்றும் மூப்பு போன்ற தொல்லைகள் இக்கட்சியில் இல்லை.

இதன் காரணமாகவே இவர் தமிழர் விடையத்தில் நல்லது நினைத்தாராக இருந்தால் செய்து முடிக்கும் திறன் இவரிடம் இருக்கின்றது.

மற்றும் கருத்தெழுதுபவர்கள் தயவுசெய்து கண்டிப்பாக ஏக வசனத்தில் யாரையும் விழிக்க வேண்டாம். அதைவிட யாரையும் அளவிற்கு மீறி நம்பவேண்டாம். அவர்கள் ஏதாவது காரணத்தால் தங்களது ஈழ ஆதரவு நிலையில் இருந்து விடுபட்டுப் போகும்போது எம்மால் அதனை ஜீரணிக்க முடியாமல் இருக்கும். தேசியத்தலைவரும் அவரது படையணியுமே இறுதிவரை நின்று தாயகத்தை மீடகும் எனும் நம்பிக்கையில் இருந்து நாம் விடுபடவும் வேண்டாம்

தமிழக தமிழன் என்ற முறையில் என் கருத்து என்னவென்றால் கருணாநிதி தமிழனத்துக்கே ஒரு துரோக செயலைத்தான் இதுகாலம் செய்து வருகிறார்...

இந்தம்மாவும் சளைத்தவர்களல்ல இருந்தாலும் முதன் முறையாக ஒரு உண்மையான செய்தியை செயலாக்குவேன் என்று கூறுகின்றார். தேசிய தலைவர் இவருடைய 6மாதம் முன் விட்ட எதிர் அறிக்கைக்கு இவர் மீது குறையேதும் கூறாது நாம் இன்னும் போராட்ட நியாயத்தை எடுத்துக் கூறவில்லை அப்படி எங்களில் யாராவது அப்பணியை செய்யவேண்டும் எனக் கூறினார். ஈழம் எனும் சொல் இவர் வாயிலிருந்து வரவே வராது - இலங்கை தமிழர் என்றே கூறுவார் - இவருடைய மாற்றத்துக்கு புலம் பெயர் தொடர் போராட்டங்களும் தமிழக எழுச்சியும் ஸ்ரீரவி சங்கர் கூறிய உண்மையும் தமது கூட்டனியின் முக்கிய அண்ணன் வைகோ மற்ற சகோதரர்களின் நிலையுமே காரணமாகும். இன்னும் தலைவர் மீது தவறான எண்ணமுள்ள இவர் இக்காலத்தின் தேவைக்கு ஏற்ப உண்மையாக மாறியிருந்தால் நிச்சயம் எம் தேசிய தலைவரின் மீதும் மரியாதை கொள்வார் அன்பதில் ஐயமில்லை. நாம் வெகுவாக குதுகலிக்காமல் அவதானித்து பார்போம் என்ன உண்மை நிலை என்று.

கடவுள் என்பவர் இருந்தால் வாய்மையை வெற்றி கொள்ளச் செய்வார்.

தமிழுக்காய் தமிழனுக்காய் தமிழன் அவ்வளவுதான் இதே நிலைப்பாட்டில் யாவரும் இருந்தாலே போதும். துரோகிகளை அடையாளம் கண்டு புறந்தள்ளுங்கள். தாய் குழந்தைக்கு ஊட்டும் பாலிற்கு குழந்தை எங்காவது நன்றி சொல்வதுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

செயலில் காட்டுங்கள். எம்.ஜி.ஆர் இற்கு நீங்கள் செய்யும் நன்றி இது தான்.பலர் ஏமாற்றி விட்டார்கள். நாங்கள் எங்களைத்தான் நம்புகிறோம்.இதய சுத்தியுடனான அறிக்கையாய் இருந்தால் வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ வந்து சொன்னத செய்ராவோ இல்லையோ , ஆனா கட்டாயம் (தி) மு க குடும்பத்துக்கும் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கும் ஆப்படிப்பார் , கருணாநிதிக்கு வேற மற கழண்டுபோச்சு , மாறி மாறி பேசுகிறார் , இந்த தேர்தல்ல தோற்றால் அதிகாரம் இல்லாமல் போகும் , அதன்பின் தி மு க என்ற கட்சிய தன்ற குடும்பத்துக்கு முழுமையா எழுதிவைக்க ஏலாது. எல்லாம் ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் தான் செய்யலாம் .அப்பத்தான் தி மு க வில் உள்ள எதிர் கருத்துள்ளவர்களை அடக்கலாம் , எதிர்கட்சிகளையும் இலகுவா சமாளிக்கலாம் , அதிகாரம் இல்லையோ எல்லாம் அப்படியே தலைகீழா நடக்கும் , .

எப்டியோ கருணாநிதிக்கும் , அவற்ற குடும்பத்துக்கும் அம்மா வந்து ஆப்படிச்சா அதுவே அவ தமிழ் இனத்துக்கு செய்யிற பெரிய சேவையா இருக்கும் . மு க குடும்ப அரசியல் வாழ்க்கையையே அடிச்சு நொறுக்க வேணும்.

மற்றபடி ஈழ விசயத்தில இவவ யாரும் 1 வீதம் கூட நம்ப தேவையில்ல .

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ இது தான் தீர்வு என்று மத்திய அரசியலையே தீர்மானிக்கக் கூடியவர் வாயிலிருந்து வரும் அளவுக்கு எமது பிரச்சனை தமிழக மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கு.கோடி நன்றிகள் உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

கோடி நன்றிகள் உறவுகளே.

இன்னும் எத்தனை பேர் மிச்சமிருக்கினம் எங்களுக்கு எங்களுக்கு நமம் அடிக்க? செய்தாத்தான் நம்புவோம். அரசியல் வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாததே வாக்குறிதிகள்தான்.

எத்தினை முறை ஏமாத்தினாலும் சனங்கள் திருந்தபொறதில்லை.

இது அரசியல் இணையம்.... புதுவகை உலகம்.... எல்லாத்துக்கும் அவதானம் தேவை..... இணையம் உணர்சிவடப்பட இது அல்ல... இந்த புதிய இணைய... உலகம்... :unsure: இவைகளை யாம் எப்போ பார்த்தோம்... இனி என்ன நடக்கிறது என எம் இணைய உறவுகள் உண்ணிப்பாக பார்க்க... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.