Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது

Featured Replies

பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது

பிரித்தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது.

பிரிந்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் ஊடங்களுக்கு ஐரோப்பிய நேரம் 13:20 மணிக்கு வழங்கிய ஊடகச் செவ்வியில்:

எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.

பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.

பட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.

எனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்கா சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இன்றும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம். அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பிரிந்தானிய மருத்துவக்குழு ஒன்று பரமேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றது. அத்துடன் பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாணவர் சமூதாயம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.pathivu.com/news/1592/54//d,view.aspx

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தாய் நாடுக்காக உயரை கொடுக்க துணிந்த்த வீரன் பரமேஷ்வரனுக்கு நன்றி........மீண்டு வந்ததில் மகிழ்ச்சி நிச்சயம் அவர் மேலும் மேலும் ஈழ விடுதலைக்காக உழைப்பார் என நம்புவோம் .மீளப்பெறமுடியாத உயிர் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி..........நிலைமை உணர்ந்து செயலாற்றிய உறவுகளுக்கு நன்றி....

பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் திரைமறைவில் பல மாற்றங்களுக்கும் சாதனைகளுக்கும் காரணியாக இருந்து தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது!

தம்பி பரமேஸ்வரனுக்கு வெற்றிவேலின் வாழ்த்துக்கள்!

தமிழர் போராட்டத்தின் எல்லைகள் பரந்து விரிந்து கண்டம் விட்டு கண்டம் தாவிய அதிசயத்தை சிங்களமும், இந்தியாவும் கண்குளிர பார்க்கச் செய்த பரமேஸ்வரன் போன்ற இளையோரை எதிர்கால தமிழர் சமுதாயம் போற்றி வணங்கும்

Edited by vettri-vel

சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்கா சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இன்றும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம். அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

உண்மை. காத்திருப்போம் நம்பிக்கையுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருப்போம்

நிச்சயம் எமக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். தற்போதைக்கு இம்முடிவு வரவேற்கத்தக்கதே. உயிரோடு இருந்தால்தான் போராட முடியும்.

உண்ணாவிரதம் ஒரு போராட்டவடிவே அன்றி உண்ணாவிரதமே போராட்டமாகாது.

எதுவாகினும் வெற்றி எமக்கே

பரமேஸ்வரனின் உயிர் எமக்கு நிச்சயம் தேவை.

அவரின் மீட்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும். வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை. அங்கே உறவுகள் உயிர்கொலை படுகின்றார்கள் இங்கே நாம் மனக்கொலைக்காளகுகின்றோம்.

நிட்சயம் வெற்றி கிட்டும் அதன்பின்பான பாதுகாப்பிற்குத்தான் இன்றைய இந்த புலம்பெயர் போராட்டங்கள்.

வெற்றி எமக்குத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரனின் உயிர் காப்பாற்றப்பட்டதில் மகிழ்ச்சி. அவர் உயிருடன் இருந்து பலவற்றை சாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! பரமேஸ்வரா!

We salute you! We need you alive, this is the right decision. You have created so much awareness and have succeeded! Thank you and our heart goes to you!

பரமேஸ்வரன் இன்னும் ஒரு நாள் தொடர்ந்திருந்தால் கூட அவரது உயிர் காப்பாற்றப்பட முடியாது போயிருக்கும்.

அவரது உயிர் பிரிவதால் மட்டும் பாரிய நன்மை ஏதும் வந்திருக்கப்போவதில்லை.

அந்தவகையில் அவர் காப்பாற்றப்படுவது மகிழ்ச்சியே.

நேற்றிலிருந்து மூன்று நாட்கள் முக்கியமானவை என போராட்டத்திற்கு லட்சக்கணக்கில் ஒன்று கூடும்படி கேட்கப்பட்டது. காவற்துறையினரே இரண்டு லட்சம் மக்கள் நேற்று வருவார்கள் என எதிர்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் நேற்று வந்ததோ? லண்டன் சனங்கள் ஊர்வலம் போன்றவற்றிற்கு மட்டும் வருகின்றார்கள். ஆனால் தொடர் ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களோ ஆயிரம் இரண்டாயிரம் மாத்திரமே. போராட்டத்தின் இறுதிக்கட்டம் வாழ்வா சாவா எனும் போராட்டம்் இந்நிலையிலும் கூட பல உறவுகள் தமது முழுமையான பங்களிப்பை வழங்காதிருப்பது வேதனைக்குரிய விடயம்.

எமது சரித்திரத்தில் இடம் பெற்ற வாழும் மாவீரனுக்கு எம் கோடி நன்றிகள்.

Edited by adithadi

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உங்களுக்கு நன்றிகள்

மகேஸ்வரனே

உனது தியாக உணர்வுக்கு எனது சிரந்தாழிதிய வாழ்த்துக்கள்.

வாழ்க உனது பெயர்... தொடர்க உனது பணி.

விடியும்வரை தொடர்ந்து போராடுவோம்.

களத்தில்தான் உயிர் போக வேண்டும்.வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த ஆதரவை வைத்து மக்களை ஒன்று சேருங்கள் போராட்டங்களை தலமை தாங்கி நடத்துங்கள்.

பரமேஸ்வரனின் இந்தப் போராட்டம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. அவர் விரைவில் குணமாகி வரவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவோ இல்லையோ...!!!???

இவ்வளவு நாட்களாய் எம் தேசத்திற்காக உடலை உருக்கி உண்ணாவிரதமிருந்த தேசப்பற்றாளன் காப்பாற்றப்பட்டதில் சந்தோசமே.

நன்றிகள் கோடி பரமேஸ்வரா!

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரனின் , உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி .

உங்களின் உண்ணாவிரதப் போராட்டமும் , பிரிட்டன் வாழ் தமிழ் இளையோர் , மக்களின் கவனயீர்ப்பு நிகழ்வுகள் மூலமே ..... பிரிட்டன் வெளிநாட்டமைச்சர் இலங்கை செல்ல நேர்ந்தது என்பது உண்மை . அது தோல்வியில் முடிந்தாலும் , அவர் பயங்கரவாத ஸ்ரீலங்காவிடம் கசப்பான அனுபவங்களை பெற்றிருக்கின்றார் என்று தெரிகின்றது . அதன் மூலம் பிரிட்டனின் நிலையில் மாற்றம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது .

24 நாட்கள் உண்ணாநோன்பிருந்து எமது பிரச்சினையை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றியும் , பாராட்டுக்களும் பரமேஸ்வரன் . :icon_mrgreen:

நல்ல முடிவு..

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரனின் பட்டினிப்போர் பேரெழுச்சியையும் அதன் முடிவு எல்லையில்லா மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது..! நன்றிகள் சகோதரனே..!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ்வரன் உங்களுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கோடீ பரமேஷ்வரா

வாழ்த்துகள்

பரமேஸ்வரன் மீண்டு வந்தது ஓராயிரம் புலி வீரர்கள் உயிர்ப்புற்றதாகவே கருதுகிறேன்..... உலகில் ஈடு இணையற்ற தியாகம்.... ஈழ விடுதலைப் போரில் பரமேஸ்வரன் பங்கு அளப்பரியது.... நலம் பெற வாழ்த்துக்கள்....!!

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் சகோதரா.உங்கள் போராட்டம் பல விளைவுகளை எமக்கு சாதகமாக ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை.அதில் பல திரை மறைவில்.கண்ணுக்கு முன் என்றால் பிரித்தானிய அதிகாரி பயங்கரவாத அரசின் உண்மை முகத்ததை அறிய வைத்துள்ளது எனலாம்.மீண்டும் கோடி நன்றிகள் உறவே.

வணக்கம்

நன்றிகள் கோடி பரமேஸ்வரன். நலம்பெற வாழ்த்துகிறோம்.

இருதடவைகள் சென்றும் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. உறுதி குழையாத மனிதனின் உயிர் காப்பாற்ற பட்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.