Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெகுவிரைவில் ஈழத்தில் 5ஆம் கட்டப்போர் தலைவர் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும் - தொல்.திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தலைவன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5 ஆவது கட்டப்போர் வெடிக்கும் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன், ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழை ராஜபக்ஸ அண்டப்புழுகினான். கடந்த ஜனவரி 2 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியை இராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன்.

அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். தமிழக தலைவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஜனவரி 15 ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன். இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.

நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து தமிழ் இன உணர்வால் பொங்கிய முத்துக்குமார் தீக்குளித்து உயிர் துறந்தார். இலங்கையில் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒருபொருட்டாக நினைக்கவில்லை.

இலங்கைக்கு சீனா உதவுகிறது. நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்ட போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும் என்றார்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

இப்படித்தான் என்னவோவெல்லாம் கடந்த பல வருடங்களாக தமிழ் நாட்டில சொல்றாங்க ஆனால் தமிழ் நாட்டுக்காரங்களால் நடந்ததோ ஒன்றுமில்லை.

சரத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கோமளிகள் சும்மாவா சொன்னான்

  • கருத்துக்கள உறவுகள்

அட போடா டேய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனவரி 15 ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன். இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.

ம்ம்..

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொல்திருமா ஐயா,

இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றியே எங்கள் அத்தனை உறவுகளின் உயிர்களையும் காவு வாங்கி விட்டீர்கள்.

இனியாவது போதும். கொஞ்சம் மூச்செடுக்க விடுங்கள் எங்கள் போராளிகளை.

பச்சோந்திகளின் கருத்துக்களை கவனத்தில் எடுக்காமல் விடுவதே நல்லது.

மற்ரவனை நம்பி ஏமாந்து போனது போதும் இனி எண்டாலும்

சொந்த புத்தியில செயல்பட முன் வர வேணும்.......

அது மட்டுமல்லாமல் மற்ரவன் பெற்றுத் தருவான் எண்ட எண்ணத்தை

துக்கி குப்பைத் தொட்டியில போட்டிட்டு எங்கள் கடமைகளையும் நடக்க வேண்டியதையும் கவனிப்போம்......

மற்ரவனை நம்பி ஏமாந்து போனது போதும் இனி எண்டாலும்

சொந்த புத்தியில செயல்பட முன் வர வேணும்.......

நிச்சமாக எங்களை நம்பி த்தான் இந்த போராட்டம் நடந்தது ,ஆகவே தான் 30000க்கு மேற்பட்ட மாவீரர்களையும்,பல ஆயிரம்தமிழர்களையும் நாம் இழந்த்துள்ளோம்.இனிமேல் மற்றவனுடன் சேர்ந்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு குழி பறிப்போம்.

ஐம்பதினாயிரம் ஈழ உயிர்களைப் பலிகொடுத்த பின்பாவது ஈழத்தமிழன் இந்திய தமிழ் அரசியல் வாதிகளை (கோமாளிகளை) அடையாளம் கண்டு கொண்டதையிட்டு வேதனைக்குள்ளும் ஒரு நிம்மதி.

ஜானா

ஜனாவின் கருத்தே எனக்கும்.

இந்தியத் தமிழர்களே !!

இதுவரை நீங்கள் காட்டிய கரிசனைக்கு நன்றி.

நாங்கள் சிங்களனவோனட எப்படியோ இருந்திட்டு போறம்.

ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்.

பொத்திக் கொண்டு இருக்கலாம்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாவின் கருத்தே எனக்கும்.

இந்தியத் தமிழர்களே !!

இதுவரை நீங்கள் காட்டிய கரிசனைக்கு நன்றி.

நாங்கள் சிங்களனவோனட எப்படியோ இருந்திட்டு போறம்.

ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்.

பொத்திக் கொண்டு இருக்கலாம்.

நன்றி.

தயவுசெய்து ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த தமிழகத்தை பொதுபடையாக விமர்சிக்க வேண்டாம்.

நண்பர்களை நாம் சேர்க்க வேண்டுமே தவிர,அதற்காக உறவுகளை உதறித்தள்ள வேண்டாம்.

தயவுசெய்து இவ்வாறான விமர்சனங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

வேதனையுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழர்களே !!

இதுவரை நீங்கள் காட்டிய கரிசனைக்கு நன்றி.

நாங்கள் சிங்களனவோனட எப்படியோ இருந்திட்டு போறம்.

ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்.

பொத்திக் கொண்டு இருக்கலாம்.

நன்றி.

மிக வெளிப்படையாக, அருமையாக கருத்துக் கூறியமைக்கு நன்றி ஈழ உறவே! இச்சங்கடமான நேரத்தில், எம்மை விடைபெறும் நேரமாக மாற்ற வேண்டாம்!!

எம்மைப் போல் இன்னும் உங்களுக்காக துடிக்கும் பல தமிழக உறவுகளுக்கும் உங்கள் செய்தி சென்றடைந்திருக்குமென நம்புகிறேன்.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக வெளிப்படையாக, அருமையாக கருத்துக் கூறியமைக்கு நன்றி ஈழ உறவே! இச்சங்கடமான நேரத்தில், எம்மை விடைபெறும் நேரமாக மாற்ற வேண்டாம்!!

எம்மைப் போல் இன்னும் உங்களுக்காக துடிக்கும் பல தமிழக உறவுகளுக்கும் உங்கள் செய்தி சென்றடைந்திருக்குமென நம்புகிறேன்.

இவற்றின் உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் .இவை எல்லாம் ஏமாற்றத்தின் வெளிப்பாடே அன்றி உங்கள் மீதான வெறுப்பு அல்ல . தமிழகத்தில் 6 1/2 தமிழ் மக்கள் இருந்தும் எமக்கு எதுவும் செய்யமுடியவில்லையே எமதுமக்களை காப்பாற்ற முடியவில்லையே எமது உறவுகளை கொத்து கொத்தாக பறிகொடுத்து நிற்கின்றோமே ,தேர்தலிலாவது எமக்கு தீர்ப்புக்கள் கூறுவீர்கள் என்று நம்பியிருந்தோம் எம்மை ஏமாற்றிவிட்டீர்களே என்ற வேதனையின் வார்த்தைகளே இவை.எமது இழப்புக்களின் வலிகள் உங்களுக்கு புரியாதா ? ஒரு உறவு எம்மைவிட்டு பிரிந்தாலே ஊர் எல்லோரும் கூடி அழுகின்றோமே நாம் ஒரே நேரத்தில் எத்தனை உறவுகளை பறிகொடுத்துவிட்டு அழுவதற்கு கூட கண்ணீர் இல்லாமல் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் தவிக்கின்றோமே எங்கள் தவிப்பு உங்களுக்கு புரியாதா ?

  • கருத்துக்கள உறவுகள்

மிக வெளிப்படையாக, அருமையாக கருத்துக் கூறியமைக்கு நன்றி ஈழ உறவே! இச்சங்கடமான நேரத்தில், எம்மை விடைபெறும் நேரமாக மாற்ற வேண்டாம்!!

எம்மைப் போல் இன்னும் உங்களுக்காக துடிக்கும் பல தமிழக உறவுகளுக்கும் உங்கள் செய்தி சென்றடைந்திருக்குமென நம்புகிறேன்.

ராஜவன்னியன் ,

சனியன் கூறிய கருத்துக்கள் இங்கு களத்தில் பலருக்கு ஏற்புடையதல்ல என்பது என் அபிப்பிராயம் .

எமக்காக தீக்குளித்த தமிழக உறவுகாளான முத்துக்குமார் தொடக்கம் 16 உயிர்களை நாம் மறவோம் .

எமக்காக அன்றாடம் போராட்டங்களை முன் எடுக்கும் அமைப்புகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் .

சில தமிழக அரசியல் தலைவர்களின் மீதுள்ள வெறுப்பை , அங்குள்ள தமிழர் மீதும் காட்டுகின்றார்கள் என நினைக்கின்றேன் .

இல்லை இதற்கு மேலும் ஒரு இனம் அழிவை சந்தித்தீருக்க கூடாது. வளர்த்து ஆளாக்கிய விடுதலை பயிரை அழிக்க முற்பட்ட இந்திய வல்லாதிக்கத்தை பார்த்துக் கொண்ண்டிருந்த தமிழக மக்களே இவ்வளவு அழிவுக்கும் காரணம்..

தமிழக அரசை ஆட்டம் காண வைக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்களே இந்த விடுதலைபோர் இவ்வளவு இழப்புக்களுடன் பின்னோக்கி சென்றதற்கு காரணம்.

ஒரு பலஸ்தீனம் அடி வாங்கும் போது எல்லா முஸ்லீம் நாடுகளும் கூடி அழுகின்றன. அனால் தமிழர்கள், தமிழகமே என்ன செய்தீர்கள்?

இன்று கூட 20000 தமிழ் பொது மக்கள் இறந்தார்கள் என்ற செய்தி கேட்டவுடன் தமிழகம் அது பற்றி தமிழக அரசோ, தமிழக மக்களோ எந்த கவலையும் இல்லாமல் தான் இருக்கின்றார்கள்

பலஸ்தீனத்தில் அடிவிழும் போது கதறி அழும் இந்தியா ஈழத்தில் அடி விழுந்தால் மகிந்தவுக்கு பணம் கொடுக்கிறது , நல்லா போன்விட்டா குடிச்சு தெம்பா அடியுங்கோ எண்று ...

இதுக்கு காரணம் வேற யாரும் இல்லை தமிழ் நாட்டில் இருக்கும் பெருண்பாண்மை தமிழ் பேசும் இந்தியர்கள்... அவர்களுக்கு அக்கறை எல்லாம் சுய நலம் பற்றியதே...

முத்துகுமாரர்கள் போண்ற உன்னதமானவர்கள் விகிதம் எவ்வளவு என்னதே கேள்வி...

( சுருக்கமாக சொன்னால் இலங்கைத்தமிழர்களில் பெருண்பாண்மை யானவர்க்களுக்கும் கூட ஈழத்தமிழர் பற்றி எந்த அக்கற்றையும் இல்லை.)

Edited by தயா

ஈழப் போர்க்களத்தில் வீரமரணமடைந்த புலிப்போராளிகளுக்கும் களத்தில் பலியான அப்பாவி மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் பேரணியை உணர்வுபூர்வமாக நடத்தியது விடுதலை சிறுத்தை கள் கட்சி. சென்னை மன்றோ சிலையிலிருந்து 28-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்ட பேரணியை துவக்கி வைத்தார் தி.க.தலைவர் கி.வீரமணி. திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடந்த இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டு நின்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உணர்ச்சி மிகுந்த கோஷங்களையும் ராஜபக்சேவை கண்டித்தும் குரல் எழுப்பினர்.

பேரணியில் கலந்துகொண்ட சிறுத்தைகள் பலரும் பிரபாகரனின் முகமூடிகளை அணிந்திருந் தனர். அனைவரது கைகளும் பிரபாகரனின் படத்தினை உயர்த்திப் பிடித்திருந்தன. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக சர்வதேச நாடுகள் அறிவிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் ராஜபக்சேவை தூக்கிலிடு கிற மாதிரியான பேனர்களையும் ஏந்தியிருந்தனர் விடுதலை சிறுத்தையினர். உணர்ச்சிபூர்வமாக நடந்த பேரணியில் கட்டுப்பாடுகள் தகர்ந்துவிடாமல் தொண்டர்களை சீர்படுத்தியிருந்தனர் எம்.எல்.ஏ. ரவிக்குமாரும் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வன்னியரசும்.

இரண்டுமணி நேரம் நடந்த பேரணி சேப்பாக்கத்தில் நிறைவு பெற்றது. அங்கு வீரமரண மடைந்த போராளிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் மிகப்பெரிய மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 50 மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டிருந்தன.

""உலக நாடுகள் தடை செய்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளை வீசி, ஒரே நாளில் 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்துள்ளான் ராஜபக்ஷே. போர்க்களத்தில் பலியான 50 ஆயிரம் தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதை நினைவுபடுத்தும் வகையில் புலிகளின் மாவீரர் நாள் பாணியில் இதனை ஏற்றியுள்ளோம்'' என்கிறார் வன்னியரசு.

வீரவணக்கம் செலுத்தும் வகையில் மிகப்பெரிய அளவில் மலர்வளையம் வைத்து, பெரிய மெழுகு வர்த்தியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய திருமா, ""வீர வணக்கம் வீரவணக்கம் களப் பலியான தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம்''என்று உச்சஸ்தாயியில் குரல் எழுப்ப, அதனை சிறுத்தைகளும் எதிரொலித்தனர். மரண மில்லை... மரணமில்லை... பிரபாகரனுக்கு மரண மில்லை... என்று தனது உணர்ச்சியை திருமா ஆவேசமாக வெளிப்படுத்த, தொண்டர்களும் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாமல் ஆர்ப் பரித்தனர்.

thiruma2.jpg

இந்த முழக்கங்கள் முடிந்ததும் பேசிய திருமாவளவன், ""ஒரே நாளில் 50 ஆயிரம் மக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே, தனது போர்க்குற்றங்களை மறைக்கவே பிரபாகரனை கொன்றுவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்கின்றான். பிரபாகரனுக்கு மரணமில்லை; பிரபாகரன் இறக்கவு மில்லை. ஈழத்தமிழர்களை பாதுகாக்க இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேர்தலில் தனி அணி அமைப்போமென்று பழ.நெடுமாறன், ராமதாஸ், வைகோ ஆகியோரிடம் மன்றாடினேன். அவர்கள் என் உணர்வு களை உதாசீனப்படுத்திவிட்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவே குறிக்கோளாக இருந்தனர். தேர்தலுக்காக ஈழத்தமிழர்களைப் பற்றி பேசிய ஜெயலலிதா, தேர்தலுக்குப் பிறகு இப்போது ஈழத்தமிழர்களை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இதைத்தான் அப்போதே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு தலைவர்களிடம் சொன் னேன். அவர்கள் ஏற்கவில்லை'' என்று ஒரு பிடிபிடித்தார். மேலும் தேர்தல் கூட்டணியில் தான் ஈடுபட்டது எதற்காக என்பதையும் விவரித்தார்.தொடர்ந்து பேசிய அவர், ""பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். நாங்களும் புலிகள்தான். ஈழத்தில் 4 வது கட்ட போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் தலைமையில் 5 வது கட்ட போர் விரைவில் வெடிக்கும். அப்போது தமிழீழம் மலரும்'' என்றார் திருமாவளவன். இதனை அடுத்து, ஐ.நா. அவையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை கண்டித்தும், ராஜபக்ஷே சகோதரர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டுமென்றும் வலியுறுத்தி 4 தீர்மானங்களை நிறை வேற்றியது விடுதலை சிறுத்தைகள்.

-இளையசெல்வன்

படங்கள் : ஸ்டாலின், அசோக்

http://www.nakkheeran.in

புலம்பெயர் தமிழ்மக்கள் எல்லாம் என்ன செய்து கிழித்தீர்கள்.

20000 தமிழர்கள் செத்தபோது கூட வீதியில் இறங்கி போராடியவர்கள் எத்தனை பேர்.

பிரித்தானியாவில் மூன்றரைலட்சம் தமிழர்கள். கோத்தபாய 48 மணித்தியால கெடு விதித்தபோது அனைத்து நாடுகளிலுமுள்ள அத்தனை தமிழரும் வீதிக்கு இறங்கியிருந்தால் சிலவேளை 20000 உயிரிழப்புக்களை தடுத்திருக்க முடியும். எத்தனை பேர் இறங்கினீர்கள்.

இன்று பிரித்தானியாவில் எங்களுக்காக ஒரு ஆங்கிலேயன் உண்ணாாவிரதம் இருக்கிறான். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு வருவது நூறும் இருநூறும். கேட்டால் ஆயிரம் சாக்கு போக்குகள்.

தமிழ்நாட்டு தமிழர்களை கேட்பதற்கு எமக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது.

ஜெயா வந்தால் அரச ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் போகும் ஊதிய உயர்வுகள் இருக்காது போன்ற காரணங்களால் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் திமுகவிற்கு வாக்கழித்தார்கள். ஆனால் அவர்களது உணர்ச்சிகளை குறை சொல்ல இயலாது. நாங்கள் மட்டும் தாயக அவலத்தின்போது எங்கள் சுகங்களை மறந்து போராடச் சென்றோமா? எங்களது சுகங்களுக்கு அடுத்தது தானே தமழீழம். அதே போன்றுதான் தமிழ்நாட்டு தமிழர்களும். அதைவிட மேல் ஏன்எனின் 16 பேர் தாயக அவலங்கள் கண்்்்்்்டு மனம் பொங்கி தீக்குழித்திருக்கிறார்கள்.

தமிழக உறவுகளே !

நீங்கள் எமக்காக செய்த செய்கின்ற செய்யப்போகின்ற உதவிகளுக்கு என்றென்றும் கடன் பட்டுள்ளோம்.

இவர்களின் கருத்துக்களை கண்டு வேதனையுறாதீர்கள். மன்னித்து விடுங்கள்.

எம்மவர்கள் இருக்கின்ற நண்பர்களை பகைவர்களாகவும் துரோகிகளாகவும் மாற்றி சிங்களவனை மோடையன் என்று சொல்லி அகம் மகிழும் அதி புத்திசாலிகள்்.

Edited by Senthamilalan

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாவின் கருத்தே எனக்கும்.

இந்தியத் தமிழர்களே !!

இதுவரை நீங்கள் காட்டிய கரிசனைக்கு நன்றி.

நாங்கள் சிங்களனவோனட எப்படியோ இருந்திட்டு போறம்.

ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்.

பொத்திக் கொண்டு இருக்கலாம்.

நன்றி.

உப்பிடிச்சொன்னா எப்பிடி ? திருமாவும் வைகோவும் சீமானும் கரும்புலிகளாகி கொழும்பைக் கருக்கித் தமிழீழத்தை வென்று தருவார்கள். பொறுத்திருக்கள்.

இன்னும் பலியெடுக்க உந்த அரசியல் வியாபாரிகள் எங்கடை சனத்தை பாவிக்கினம். இன்னும் இவையின் கதைகளை கேட்டு ஏமாற இன்னும் மிச்சமிருக்கிறோம்.

ம்ம்ம் அப்புறம்

ஒன்று மாத்திரம் இப்போது தெளிவாகிறது

எங்கள் போராட்டத்தால் என்னவகுதோ இல்லையோ

சில தரப்புக்கு அரசியல் நல்லா நடக்குது.

வாழ்க சனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து தமிழகத்தை கோவிக்க வேண்டாம். சரியான தகவல்களைப் பெற்றுக்கொண்ட எம் தமிழக உறவுகள் எம்பக்கமே நிற்கிறார்கள். பாமர மக்கள் தமக்குரிய விழிப்பூட்டுதல்களை பெறாதபட்சத்தில் இவ்வாறான தேர்தல் முடிவுகளும் போராட்ட மந்த நிலையும் காணப்படுவது சகஜமே. பெரிய ஊடகங்களான சன் தொலைக்காட்சி, கலைஞர்தொலைக்காட்சி போன்றவையும் சில பத்திரிகைகளும் உரிய செய்திகளை இருட்டடிப்புச் செய்தன. இதற்குள் பணநாயகம் வேறு. :D இவ்வாறான நிலையில், தற்போது காணப்படும் எழுச்சிநிலையே அதிகமானது.

அது இருக்கட்டும். 9 லட்சம் மலையகத் தமிழ் உறவுகளில், ஐந்து லட்சம் பேரை சிங்களவன் தமிழகத்துக்கு கப்பலில் ஏற்றி அனுப்பியபோது அறப்படித்த நம் வெள்ளைவேட்டிக் கனவான்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்? :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் பெருக்கெடுக்க,

உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,

கூப்பிடு தொலைவில்த்தானே…

எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.

ஆற்ற ஒரு நாதியின்றி, – எம்மினத்தின்

அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,

அம்மா!.......

உன் கையணைக்கும் தூரத்திலல்லவா…

எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.

ஈழம் என்ற பொன்பூத்த பூமியிலே பாரம்பரியம் சிதைக்கப்பட்டும், பண்பாடு ஒடுக்கப்பட்டும், மானுட வாழ்வின் சுயங்கள் மறுக்கப்பட்டதுமாக எங்கள் வாழ்வு கேட்பாரற்று, இனவாதியரின் கால்களுக்கிடையில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் மூதாதையர் நிலங்களின் வளங்களைச் சுருட்ட வேற்று நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு எங்களை ஒடுக்கும் இனவாதியருக்கு ஆயுத தானமும், இராணுவ தானமும் வழங்கி ஈழத்தமிழினம் என்ற ஒன்றையே இல்லாதொழிக்கும் மாபாதகச் செயலுக்குக் கண்களை மூடிக் கொண்டு துணை போயுள்ளன.

மானுட மெய்க்கு மரணதேவன் மாலையிட்டால் ஆறடி நிலம் வேண்டும். எரியூட்டுவதென்றாலும் நெஞ்சாங்கட்டை வேண்டும். எங்களுக்கான சாவுகள் எல்லாம் ஆறடி நிலத்தையோ அல்லது தீயெரியும் போது சாந்தப்படுத்தும் நெஞ்சாங்கட்டையையோ வேண்டுவதில்லை. எங்கள் உறவுகளின் மரணங்களுக்குப் பின்னான நிகழ்வென்பது சிதறிக் கிடக்கும் உடலின் பாகங்களை கூட்டி அள்ளிப் பொதியாக்கி நெருப்பிடுவதாகவே உள்ளது. அதுவும் பல சமயங்களில் உயிரற்ற சடலத்தின் பாகங்களை குவித்து அள்ளக் கூட வழியற்று, சிங்கள அரக்கர்களின் எறிகணைகளில் இருந்தும் , விமானக் கொத்தணிக்குண்டு வீச்சுகளில் இருந்தும் தப்பிக்க உயிர் காவி ஓடுவது நேற்றாகி இன்று வதைமுகாம்களுக்குள் வாயெடுத்து அழுவதற்கும் சக்தியற்று நடைபிணங்களாய், உயிரே சுமையாகி செத்தொழியும் வழியற்று மந்தைகளிலும் இழிவான கட்டாய வாழ்நிலைக்குள் காலவரையின்றித் தள்ளப்பட்டுள்ளோம். இப்போது தன்னும் எங்கள் வாழ்வுக்கு ஒளியூட்டுங்கள் முடியாவிட்டால் எங்கள் மூச்சுக்கு முடிவுரை தாருங்கள். போதும் தமிழராய் பிறந்து மனிதராய் வாழும் உரிமைகூட அற்று மறுக்கப்பட்டதாய் வாழ்வதிலும் சாவுமேல்.

தெற்கிருந்து வந்து உங்கள் மூச்சுத் தொடும் காற்றும், கந்தகத்திற்கு இரையாகிப்போன எங்கள் உறவுகளின் உயிர் கலந்தே உங்களை வந்தடையும். தமிழக உறவுகளே தாய்மைக் கண்களைத் திறந்து பாருங்கள் அந்தக் காற்றில் எங்கள் மரண ஓலங்களும், கடைசிச் சுவாசங்களும் தென்படும். எங்கள் வேதனைக் கூப்பாடுகளின் ஒலியை உங்கள் தாய்மைச் சிந்தை தள்ளி ஒதுக்காது என்ற பெருநம்பிக்கை சுமந்தே இந்தக் காகித வெளியில் எங்கள் கண்ணீரின் காயாத இரணங்களை தாய்ப்பசுவை நாடி அழும் கன்றின் கேவல்களாக்கியுள்ளோம்.

ஈரக்குலை பிழிய உயிர் இன்னும் துடிக்கிறது

காரணம் பலவுண்டு கடந்த காலம் நகைக்கிறது

பூரணப் பிரசவமே வேண்டும் எங்கள் வலிகளுக்கு

புன்னகையைக் கடனாக புதுப்பிக்க முடியாது.

தமிழக உறவுகளே!

இன்னும் கொஞ்ச நம்பிக்கை உங்கள் மேல் உள்ளது. இழப்பின் துயரில் வெம்மையுற்றிருக்கும் எங்களுக்கு உங்கள் இயலாமை காண மனதிற்குள் சினம் வெகுண்டெழுகிறது. தொப்புள் கொடி உறவென்பதெல்லாம் ஒடுக்கப்பட்ட உணர்வுகளுக்கு உரியனவாக போய்விட்டனவா?

இப்படி சொல்லி சொல்லியே எங்கடை சனத்தையும் நாட்டையும் சுடுகாடாக்கிட்டாங்கள்.

சும்மாவா சொன்னாங்கள் வடக்கத்தையான் வடக்கத்தையான்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.