Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுப்பேத்தும் செயல்கள்...

Featured Replies

நாம் தினசரி வாழ்கையில் தெரிந்ததோ தெரியாமலோ கடுப்புக்கு உள்ளாகிறோம் அல்லது அடுத்தவரைக் கடுப்பேத்துறோம்.

மற்றவர்களால் நீங்கள் கடுப்பேறிய அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைத்தால்... அவற்றை அறிந்து, நாம் எவ்வாறான வகையில் அடுத்தவருக்குக் கடுப்பேத்துவதைக் குறைக்கலாம் என்று அறிய இலகுவாக இருக்கும்...

இதில் ஆண் பெண் இருவரும் ஒருவரைஒருவர் தாராளமா கருத்தளவில் தாக்கலாம்... ஆனால் தனிப்பட்டமுறையில் அல்ல...!

-நன்றி-

Edited by குட்டி

  • Replies 165
  • Views 19.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தலைப்பு குட்டி! இதை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.....

எனக்கு கடுப்பு ஏற காரணமாய் உள்ளவற்றில் சில:

- நாட்டு நிலைமை பற்றி அறிய அக்கறை இல்லாமல் "oh sri lanka is such a lovely country! " என்ற தொனியில் கதைக்க வெளிக்கிடும் வெள்ளையள்...

- நாட்டு நிலைமையை நாம் விளங்க படுத்தும் போது ஏதோ பேசாபொருளை நாம் பேசியது போல மவுனித்து நிக்கும் வெளிநாட்டவர்...

- காலனித்திய பிழைகளை அறிந்திராமல் சில நாடுகளில் நிகழும் குழப்பங்கள்/ போர் போன்றவற்றை விமர்சிக்கும் சனம்...

- சாத்திரம் சம்ப்ரதாயம் என்று மட்டும் ஊறி போய் மற்றவற்றை மறந்த தமிழ் சனம். சீதனம்/ மொத்த தாலி கொடி தொடங்கி...இன்னும் நிறைய..

- கதை காவிக் கொண்டு திரியும் உறவினர்கள்.

- அம்மாவின் தோழி - இவருக்கு நானும் என் தங்கையும் வைத்த பெயரே "கடுப்பு" தான்...எனெவே இவரை இதில் குறிப்பிடாமல் போய் படுத்தால் எனக்கு நித்திரையே வராது! சொல்லாலும் செயலாலும் இவர் தனது பெயரை உழைத்துள்ளார். :rolleyes:

உங்கள் அனுமதியுடன் அவருக்கே இந்த திரியை அர்ப்பணித்து விட்டு போய் உறங்குகிறேன்.

தொடரும்.......

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முகத்துதி பாடல் என நினைக்கிறேன். ஒருவர் உள்ள போது அவருக்கு முன்னால் நன்றாக கதைத்து விட்டு ஆள் போன பின் புறம் சொல்பவர்கள்.

பொஸ்சுக்கு போட்டு கொடுப்பவர்கள்.

விளங்கப்படுத்தும் போது "ஓம் ஓம்" என்று தலையை ஆட்டி கேட்டு விட்டு பிறகு கேள்வி கேட்க முழிசுதல். ... :rolleyes: தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொது போக்கு வரத்து வாகனத்தில் ..........சத்தமாக் கதை ப்பவர்கள். பொது இடமென்று பாராமல் கண்ணுக்கு மை ..உதடுக்கு சாயம் ....சடக் சடக் என்று நகம் வெட்டு பவர்கள். காது குடைபவர்கள், நகம் கடிப்பவர்கள். போன்றவை .........இன்னும் பல இருக்கு ...........

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடும் போது சத்தம் போட்டு (வாயால்) சாப்பிடுபவர்கள்.

பொது இடங்களில் (புலம் பெயர்ந்த இடங்களில்) சத்தமாக தங்கள் மொழியில் கதைப்பவர்கள். உதாரணமாக பஸ்வண்டியில் முன் இருந்து கொண்டு கடைசியில் இருப்பவருடன் உரத்து தமது பாசையில் கதைத்தல்.

குடித்து விட்டு சொன்ன செய்தியை மீண்டும் மீண்டும் சொல்பவர்கள். :rolleyes:

சாமத்தில் நித்திரையால் எழுப்பி "சாப்பிட்டாச்சோ" என்று கேட்பது. ^_^

செல் போனில் கதைத்துக்கொண்டு வாகனத்தை மெதுவாக ஓட்டுதல் அல்லது நேராக ஓட்டாமை.

யாராவது ஒரு பிரபலத்தை பற்றி கதைத்தால் அவர் தனக்கு ஒருவகையில் சொந்தம் என கதை விடுவது. அல்லது அவரை தெரியும் என்று கதை விடுவது.

தான் இல்லாவிட்டால் தான் பில்கேற்சுக்கு தெரியும் தன்னுடைய அருமை என்று புளுகுதல். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதாக கூறி விட்டு ........ ( தாமதமாக அல்லது அந்த சந்திப்பை ஞாபகம் வைக்காமல் மறந்திருக்கும் )

நானும் அந்த நபரை எதிர் பார்த்து ...... , கண்கள் பூத்துப் போகும் வேளைகளில் எனக்கு கடுப்பு வராது , விசர் தான் வரும் .

உந்த யாழில என்ன கிடக்கு என்று மனவி கேட்கும் பொழுது

ஒருவரை காதலிக்கவில்லை என்று சொல்லி முடிய திரும்ப திரும்ப தொல்லை பண்ணுவது... எனக்கு இப்படியானவர்களை கொலை பண்ண வேண்டும் என்று கூட நினைப்பது உண்டு.....

பொது இடங்களில் கணவன் மனைவி கொஞ்சி குலாவுவது இது அது நம்மவர் சிலர் இப்படியாக நடந்து கொள்ளுகிறார்கள்... சின்ன பிள்ளைகள் இருக்குதுகளே அவை பார்க்காமல் நடந்து கொள்வது...

ஆண் நண்பர்களுடன் நட்பாக பழகும் போது சிலர் தப்பாக நினைப்பது... உவனையோ நீ காதலிக்கிறாய் என்று கேட்பது இது மன வலியை உண்டாக்கும் மற்றவர்களுக்கு....எரிச்சல்தான

  • கருத்துக்கள உறவுகள்

- இந்தியாக் காரன் இவ்வளவு செய்தாப் பிறகும் "தொப்பூழ் கொடி" உறவு என்று விளிப்பது (இண்டைக்கு விடிய புதினத்தப் பாருங்கோ விளங்கும்!)

- சொந்த வரலாறு/உலக வரலாறு தெரியாததுகள் எல்லாம் தமிழர்கள் இராணுவ ரீதியாக ஏன் வீழ்ந்தார்கள் என ஆய்வு எழுதவும் அதை வாசிக்கவும் வேண்டிய நிலையில் நாம் இருப்பது

- இங்க இருக்கிற இந்தியனுகள் சிலர் அடிக்கடி "இன்டியா இஸ் எ சுபர் பவர், யூ நோ?" எண்டு (பம்பாய் சேரி மக்கள மறந்து போட்டு!) அறுக்கிறது

இப்ப இது தான் கடுப்பேத்துது.. தனிப் பட்ட கடுப்பேதும் தெரியுறதே இல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கடுப்பேற்படுத்துவது ........

வீதியால் ஏதோ வேறு யோசனையில் சென்று கொண்டிருக்கும் போது .......எதிரே வரும் பெண்மணி நான் அங்கை பாக்கிறனாக்கும் எண்டு நினைத்து ......... அவசர அவசரமாக தனது சீலை தலைப்பால் தனது மார்புப்பகுதியை மூடுவதை பார்த்தால் கடுப்பு வரும் .

பேருந்தில் ஒரு கையில் கைக்குழந்தையுடனும் , மறு கையால் பேரூந்தின் மேல் கம்பியையும் கஷ்டப் பட்டு பிடித்து கொண்டு வரும் பெண்ணை கண்டவுடன் ........

நித்திரை மாதிரி நடிக்கும் அல்லது ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கும் ஆண்களை பார்க்கும் போது கடுப்பு வரும் .

தமிழ் நன்றாக தெரிந்தும் ........ தமிழில் கதைக்காமல் வேற்று மொழி பாசையில் கதைப்பவர்களை பார்க்கும் போது கடுப்பு வரும் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: சிறி அண்ணா ஊரில உங்களுக்கு கடித்ததை வாசித்து விட்டு கொடுக்கும் போஸ்ட்மன்...

- அவசர அலுவலாய் வந்து விட்டு, வீட்டை விட்டு ரெண்டு கிழமைக்கு வெளிக்கிடாத உறவினர்கள்...

என்று அனுபவங்கள் இல்லையா?

-வடக்கர்ட கதையை கேக்கவே இப்ப சும்மா தாறு மாறா கடுப்பேருது ! நன்றி Justin அண்ணா.

-நுனாவிலன் நித்திரையால எழுப்பி சாப்பிட்டாச்சா என்று கேட்டாலும் சரி எதோ அக்கறைல கேக்குதுகள் எனலாம்.... அங்க தங்களுக்கு விடிஞ்சிட்டு எண்டா போல இஞ்ச போன் அடிச்சு நாலாஞ் சாமத்தில - "என்ன நித்திரையே இன்னும்?!" :huh: என்று கேக்கிற சனமும் இருக்கு, நேர வித்தியாசங்கள் தெரிஞ்சும்...!

மேலும் எனக்கு கடுப்பு ஏத்திற விடயங்கள்:

-கடனாய் வாங்கியதை திருப்பி தராமல் இருப்பது - புத்தகம், காசு..இன்னும் பல!

-செய்நன்றி மறப்பது...

-ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் ஒராள் இன்னொரு ஆளோட ஓவராய் அசடு வழியிறது... கடுப்பு ஏறுறது மட்டும் இல்லாம அவையள்ள உள்ள மரியாதையும் போயிரும்...! :huh:

-விமானத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் கதை குடுப்பது.... இந்த மாதிரி நேரங்களில் நான் எப்பவும் யாரும் ஏதும் கேட்டால் காது கேளாத மாதிரி தான் காட்டி கொள்வேன்...

- விமானத்தில் பின்னுக்கு இருப்பவர்கள் touch screen tv என்று போட்டு எங்கட பிடரியை கொத்துவது :wub: ! குழந்தை பிள்ளைகள் சும்மா சும்மா வீரிட்டு கத்துவது..அலட்டுவது...

-தங்களை தாங்களே புளுகி தள்ளி தங்கள் முதுகில் தாங்களே தட்டி கொடுப்பவர்கள்... :huh:

-மக்கள் போராட்டம் என்று போட்டு வந்து - மர நிழலுக்க குட்டி சுவரில இருந்து picnic எடுத்து புராணம் கதைச்சு கொண்டு இருப்பவர்கள்... :lol:

இன்னும் தொடரும்.... :icon_mrgreen:

மற்றவர்கள் செய்பவை

1. தேனீர், coffee என்பன குடிக்கும் போது ஆடு புண்ணாக்கு கலந்த கஞ்சியை குடிக்கும் போது போடும் சத்தம் போல் கேட்கும் வண்ணம் குடிப்பது

2. Lift இல் போகும் போது எவராவது நசுக்கலாக வாயு பிரித்து மற்றவரின் வாழ்க்கையை வெறுக்க வைப்பது

3. நல்ல பாட்டை கேட்கும் போது, தமக்குள் பெரிய பாடகர் என்ற நினைப்பில் பெரிதாக தாம் பாடி கரடியின் குரலை ஞாபகப் படுத்துவது

4. எப்பவாவது அருமை பெருமையாக வீட்டில் நண்பகலில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு, பிள்ளையும் பின்னேர நித்திரை கொள்ளும் போது, மனிசியோட கொஞ்ச நேரமாவது 'சந்தோசமாக' இருக்க ஆரம்பிக்கும் போது, திடீரென phone Call பண்ணி, சிவ பூசையில் நுழைந்த கரடியை போல் சப்பை விடயங்களை மணிக்கணக்காக அலம்பி உயிரை எடுப்பது

5. ஆறு மணிக்கு ஒரு நிகழ்சிக்கு வாரன் என்று சொல்லிவிட்டு, இரண்டு மணித்தியாலம் late ஆக வந்த பின் ஏன் தான் வரும் வரை wait பண்ண வில்லை என்று சலம்பல் பண்ணுவது

6. 80 KM வேகத்திற்குரிய வீதியில், டயர் தேய்ந்து விடுமோ என பயந்து 40KM வேகத்தில் வாகனத்தை ஓட்டி பின்னால வருகின்றவர்களை line கட்டுவது

நான் செய்பவை

1. எவனாவது mood சரியில்லை என்று வந்தால், அவனை இன்னும் மோசமாக mood சரியில்லாமல் ஆக்குவது

2. அதிகாலை இரண்டு மணிக்கு படுத்தாலும் 7 மணிக்கு முன் எழும்பி விடும் பழக்கம் எனக்கு. அப்படி எழும்பின பிறகு வீட்டில் உள்ள எல்லாரையும் எழுப்பி விடுதல். நான் எழும்பிய பின் எவரும் படுக்க கூடாது எனும் நல்ல கொள்கையை வைத்து இருப்பது

3. censored

4. கடவுள் இருக்கு என்று நம்புபவர்களை, அப்ப ஏன் சுனாமி வந்து பலரை கொன்றது என்பது போல் கேள்வி கேட்டு வெறுக்க வைப்பது (வீட்டுக் காரி இதற்காகவே என்னன divorce பண்ணினாலும் ஆச்சரியம் இல்லை)

4. என்னையே மறந்து சில நேரங்களில் பிறர் முன் மூக்கு தோண்டுவது (சீக்....)

5. Censored

...

:நிழலி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்தில் வந்து எப்பவும் பெண்களை பற்றி மட்டுமே தப்பாக எழுதுபவர் :icon_mrgreen: .....

மற்றவர் பிரச்சனைக்குள் மூக்கை நுளைக்கும் சொந்தக்காரர்...

தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மாதிரி கதைப்பது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்கள் செய்பவை

1.ஆடு புண்ணாக்கு கலந்த கஞ்சியை குடிக்கும் போது போடும் சத்தம் .....நசுக்கலாக வாயு பிரித்து ....

நான் செய்பவை

1. எவனாவது mood சரியில்லை என்று வந்தால், அவனை இன்னும் மோசமாக mood சரியில்லாமல் ஆக்குவது

2. அதிகாலை இரண்டு மணிக்கு படுத்தாலும் 7 மணிக்கு முன் எழும்பி விடும் பழக்கம் எனக்கு. அப்படி எழும்பின பிறகு வீட்டில் உள்ள எல்லாரையும் எழுப்பி விடுதல். நான் எழும்பிய பின் எவரும் படுக்க கூடாது எனும் நல்ல கொள்கையை வைத்து இருப்பது

4. என்னையே மறந்து சில நேரங்களில் பிறர் முன் மூக்கு தோண்டுவது (சீக்....)

:நிழலி

:icon_mrgreen::wub::lol::huh:

ஊரில் கடுப்பேற்படுத்துவது ........

வீதியால் ஏதோ வேறு யோசனையில் சென்று கொண்டிருக்கும் போது .......எதிரே வரும் பெண்மணி நான் அங்கை பாக்கிறனாக்கும் எண்டு நினைத்து ......... அவசர அவசரமாக தனது சீலை தலைப்பால் தனது மார்புப்பகுதியை மூடுவதை பார்த்தால் கடுப்பு வரும் .

அதெப்படி நீங்கள் 'அங்கை' பார்க்காமல், அவர் 'அதை' இழுத்து மூடுவதை மட்டும் காணுவது?

(எல்லாப் பயல்களும் என்னை மாதிரித்தான் போல)

  • தொடங்கியவர்

மற்றவர்களால் நீங்கள் கடுப்பேறிய அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைத்த இளையபிள்ளை, நுணா, நிலாமதி அக்கா, தமிழ் சிறி அண்ணா, ஜில், சுஜி, ஜஸ்டின் , நிழலி அண்ணா, ரதிக்கும் நன்றிகள்....

கறுப்ஸ், நெடுக்ஸ், பருத்தியன் அண்ணாமாரினதும், அனைத்துக் கள உறவுகளினதும் (முடிந்தால், மோகன் அண்ணாவின் கருத்தும், கடுப்பு ஏறி இருபார்... கெதியில எனக்கு smiley-angry015.gif இருக்கு....) கருத்துக்களும் எதிர் பார்க்கப்டுகிறது...

அந்நியரை திருமணம் செய்து நீண்ட காலமாக புலத்தில் வாழும் பலரில் சில தமிழர்கள், எம் போராட்டத்தை பற்றி சொல்லி வைத்திருக்கும் மோட்டு விளக்கம்...(அதை முற்றும் முழுதாக நம்புவது அவரவர் தனிப்பட்ட விஷயம்...) அந்த கருத்தை அடுத்தவருக்குச் சொல்லி தாங்கள் சொல்வது தான் 100 வீதம் சரி என்று வாதாட முனையும் போது.... ஸ்...ஸ்...ஸ்...காதால் அனல் பறப்பது போன்று இருக்கும்....smiley-angry012.gif

நண்பர்களாக இருந்தாலும் சரி, உறவினராகவும் இருந்தாலும் சரி, காக்க வைக்கும் போது....

தமிழ் சரளமாகத் தெரிந்ததும் சிலர் எம்மவரைக்கண்டால் ஆங்கிலத்தில் ஹாய் என்று கொட்டாவி விட்டு... தாங்கள் கதைப்பது விளங்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில் கஷ்டப் பட்டுக் கதைப்பது.... (முக்கியம் பெண்கள்) ஆண்டவா.... தாங்க முடியாது...

பசிக் களையில் தமிழ் கடைகளில் மட்டன் றோல்ஸ் வாங்கி சாப்பிடும் போது சுழி ஓடித் தேடினாலும் ஒரு இறைச்சித் துண்டு கூட கடிபடாத போது...

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி நீங்கள் 'அங்கை' பார்க்காமல், அவர் 'அதை' இழுத்து மூடுவதை மட்டும் காணுவது?

(எல்லாப் பயல்களும் என்னை மாதிரித்தான் போல)

அப்ப நாங்கள் எல்லாம் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்தான் :wub::lol:

கனக்க இருக்குது இப்போதைக்கு எனக்கு முக்கியமாக கடுப்பேத்தும் விசயத்தை மட்டும் சொல்லுறன்.போட்டு வாறன் என்று சொல்லிப்போட்டு அதுக்குபிறகும் மணிக்கணகாக இருந்து அறுப்பது. :icon_mrgreen:

சாப்பிடும் போது யாரும் எனது சாப்பாட்டுக் கோப்பையை பார்த்துக்கொண்டிருப்பது

தாங்கள் செய்யிறது தான் சரி என்ற ரீதியில் மற்றவர்கள் என்ன செய்தாலும் குறை கூறுவது

மற்றவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று விடுப்பு கேட்ப்பது

எனது நண்பிகளைப்பற்றி யாரும் குறை கூறுவது

நான் ஏதாவது கஸ்டப்பட்டு வீட்டு வேலை செய்யும் போது கணவர் msn இல் கடலை போடுவது

இன்னும் தொடரும்

  • தொடங்கியவர்

......

- விமானத்தில் பின்னுக்கு இருப்பவர்கள் touch screen tv என்று போட்டு எங்கட பிடரியை கொத்துவது :lol: ! குழந்தை பிள்ளைகள் சும்மா சும்மா வீரிட்டு கத்துவது..அலட்டுவது...

:wub:

உண்மைதான்.... சிலதுகள் செய்கிற வேலைகளுக்கு குழந்தையாக இருந்தாலும் எத்திவிடத் தான் தோணும்.... :icon_mrgreen:

... குடித்து விட்டு சொன்ன செய்தியை மீண்டும் மீண்டும் சொல்பவர்கள். :huh: ...
எனக்குத் தெரிந்து, குடிக்கதவர்களே ஒரே கதையை ஒவ்வொருதரம் காணும் போதும் சொல்லி காதை அறுப்பார்கள்... :huh:

ஊரில் கடுப்பேற்படுத்துவது ........

வீதியால் ஏதோ வேறு யோசனையில் சென்று கொண்டிருக்கும் போது .......எதிரே வரும் பெண்மணி நான் அங்கை பாக்கிறனாக்கும் எண்டு நினைத்து ......... அவசர அவசரமாக தனது சீலை தலைப்பால் தனது மார்புப்பகுதியை மூடுவதை பார்த்தால் கடுப்பு வரும் .

தமிழ் நன்றாக தெரிந்தும் ........ தமிழில் கதைக்காமல் வேற்று மொழி பாசையில் கதைப்பவர்களை பார்க்கும் போது கடுப்பு வரும் .

எனக்கும் இதே கடுப்புத்தான்... எல்லாம் ஒரு லெவல் தான்... (முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தல் தெரியுமாம்...) வேற்று மொழியில் கதைச்சாப் போல நடையில பார்த்து பிடிகமாடாமா என்ன சிறி அண்ணா??? :lol:

மற்றவர்கள் செய்பவை

1. தேனீர், coffee என்பன குடிக்கும் போது ஆடு புண்ணாக்கு கலந்த கஞ்சியை குடிக்கும் போது போடும் சத்தம் போல் கேட்கும் வண்ணம் குடிப்பது

2. Lift இல் போகும் போது எவராவது நசுக்கலாக வாயு பிரித்து மற்றவரின் வாழ்க்கையை வெறுக்க வைப்பது...

4. எப்பவாவது அருமை பெருமையாக வீட்டில் நண்பகலில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு, பிள்ளையும் பின்னேர நித்திரை கொள்ளும் போது, மனிசியோட கொஞ்ச நேரமாவது 'சந்தோசமாக' இருக்க ஆரம்பிக்கும் போது, திடீரென phone Call பண்ணி, சிவ பூசையில் நுழைந்த கரடியை போல் சப்பை விடயங்களை மணிக்கணக்காக அலம்பி உயிரை எடுப்பது

நான் செய்பவை

4. என்னையே மறந்து சில நேரங்களில் பிறர் முன் மூக்கு தோண்டுவது (சீக்....)

... :நிழலி

அநியாயத்துக்கு உண்மையா இருக்கிறியள் :huh:

....மற்றவர் பிரச்சனைக்குள் மூக்கை நுளைக்கும் சொந்தக்காரர்...

தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மாதிரி கதைப்பது...

உண்மைதான் ரதி... சொந்தங்களாக இருந்தாலும் சிலர் நாக்கில் விஷம் வைச்சு தேள் கொட்டுவதைப் போன்ற வார்த்தைகளால் மனதைப் புண்படுத்துவார்கள்...

சாப்பிடும் போது யாரும் எனது சாப்பாட்டுக் கோப்பையை பார்த்துக்கொண்டிருப்பது

நான் ஏதாவது கஸ்டப்பட்டு வீட்டு வேலை செய்யும் போது கணவர் msn இல் கடலை போடுவது

செவ்வந்தி அக்கா நீங்கள் கடுப்படையிறதில பிழையே இல்லை...!!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவா எதனையும் கடுப்பாக நோக்குவதில்லை.

இருந்தாலும் பொறுமையை பெரிதும் சோதிக்கும் விடயங்களில்..

* பொதுச் சேவை வழங்கு இடங்களில் அதிக நேரம் வரிசையில் வைத்துக் காக்க வைப்பது. (இது மட்டுமன்றி எவராகினும் அதிக நேரம் காக்க வைப்பது எனக்குப் பிடிப்பதில்லை.)

* அளவுக்கு அதிகமான நேரம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பது. (பொதுவாக 2 அல்லது 3 நிமிடத்துக்கு மிஞ்சி தொலைபேசியில் உரையாட நான் விரும்புவதில்லை.)

* பேச வேண்டிய விடயத்தை சுருக்கமாக பேசாமல்.. இழுத்து அடித்து சுற்றிவளைத்துப் பேசிக் கொண்டிருப்பது.

* சொன்ன விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருப்பது.

* என் முன்னில்லையில் மாற்றங்கள் இன்றி ஒரே மாதிரி நடந்து கொள்வது.

* ஒரே சுயபுராணம் அடுத்தவன் புராணம் பாடிக் கொண்டிருப்பதும் பிடிப்பதில்லை.

* அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருப்பது. அவர் இப்படி.. நீங்க அப்படி.. நீங்க அப்படி இருக்கலாமே இப்படியான புத்திமதிகள் பொறுமையை அதிகம் சோதிப்பன. எனக்குள் உள்ளதை சரிவர அறியாமல்.. வரும் உபதேசங்களை எப்படி ஏற்பது...??!

இவை எனது பொறுமையை அதிகம் சோதிக்கும் விடயங்கள். மற்றும்படி கடுப்பாகிறது என்று சொல்லமாட்டன். ஏன்னா நான் நேரில யாரோடும் கடுப்பாகி பழகல்ல. என்னதான் பொறுமையைச் சோதித்தாலும்.. எனது தலைவிதி ( My fate.. God bless me.. My god.. ) என்றுவிட்டு இருப்பேன். :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அர வேக்காடுகள் அரசியல் கட்டுரை எழுதுவது. அடி முடி ஏதும் அறியாது அதன் அர்த்தமும் அறியாது அரசியல். இராணுவம். தற்காலநிகழ்வுகள் ("வணங்காமண்') பற்றி அலசலும் ஆராய்ச்சி ஆய்வும் எழுதுவது.

இதை கூட போனா போகுது என்று பொறுத்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.

கொழும்பில் தாயை விற்று பிழைப்பு நடத்தும் நாய் துரோகிகள் தமிழ் பேசுவது. இதை என்னால் உண்மைணிலேயே பொறுக்க முடியாது. தற்கொலையே செய்துவிடலாம் போல் தோன்றும்

:icon_mrgreen::wub:

  • தொடங்கியவர்

நான் பொதுவா எதனையும் கடுப்பாக நோக்குவதில்லை.

இருந்தாலும் பொறுமையை பெரிதும் சோதிக்கும் விடயங்களில்..

...

* அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருப்பது. அவர் இப்படி.. நீங்க அப்படி.. நீங்க அப்படி இருக்கலாமே இப்படியான புத்திமதிகள் பொறுமையை அதிகம் சோதிப்பன. எனக்குள் உள்ளதை சரிவர அறியாமல்.. வரும் உபதேசங்களை எப்படி ஏற்பது...??!

இவை எனது பொறுமையை அதிகம் சோதிக்கும் விடயங்கள். மற்றும்படி கடுப்பாகிறது என்று சொல்லமாட்டன். ஏன்னா நான் நேரில யாரோடும் கடுப்பாகி பழகல்ல. என்னதான் பொறுமையைச் சோதித்தாலும்.. எனது தலைவிதி ( My fate.. God bless me.. My god.. ) என்றுவிட்டு இருப்பேன். :icon_mrgreen:

பொறுமை... இது எல்லாராலும் எழிதில் கடைப்பிடிக்க முடியாதது...

ஒருவரின் திறமைகளை அறியாது அடுத்தவருடன் ஒப்பிட்டுப்பார்பதால் எரிச்சல் தான் வரும்...

உங்கள் பதிவுக்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா ...

இந்தக் காலத்து அரசியல் கட்டுரைகளைப் படித்தால் உண்மையில் கடுப்புத் தான் ஏறுகிறது... கருத்துக்கு நன்றி மருதங்கேணி

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவா எதனையும் கடுப்பாக நோக்குவதில்லை

உண்மை பேசும் நெடுக்ஸா இப்படி சொல்வது.. இல்லவே இல்லை. speak up boy!! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.