Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி

புதன்கிழமை, ஜூலை 1, 2009, 14:23 [iST]

சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்மீது, அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசாமி ஆகியோர் பேசினர்.

இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.

மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் முயற்சிகளை தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கூறுகையில்,

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களர்களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா, அமிர்தலிங்கம், குட்டிமணி, ஜெகன் காலம் முதல் போராட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.

பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

பேரறிஞர் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முதலில் எழுப்பி பின்னர் அதை கைவிட்டு விட்டார். அதற்காக இந்த சபையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பாராட்டி பேசியுள்ளார். மக்கள் தலைவர்களாகிய நாம் மக்களை பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனை உருவானால் அதற்கு மாற்று என சிந்தித்து எந்த வழியில் சென்றால் அது சரியாக இருக்கும் என தீர்மானித்து செயல்பட வேண்டும்.

அப்படித்தான் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட போதும் அதற்குரிய காரணம் அப்படியே இருக்கிறது என்று மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தியதன் விளைவாக இன்று மாநில அரசுகளை மதிக்கும் போக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதே போல இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் என்னைப் போல இந்த உலகில் யாரும் மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது.

ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்ட கருத்தை கருணாநிதி கேட்கவில்லை. இன்னும் அவர் ராஜபக்சேவுக்கு மரியாதை தருவதை பார்த்தீர்களா என்று பேசக்கூடும். அப்படி பேசுபவர்கள் அவர்களுடைய மனசாட்சியை எடுத்து வெளியில் வைத்து விட்டுத்தான் சொல்ல வேண்டும்.

தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.

நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எனவே சிங்களர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குவுடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை 'பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கும்.

இலங்கை தமிழர்களுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொண்டைமான் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். ஒரு குழு வந்து இலங்கையில் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார் கருணாநிதி.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை விஷயத்தின் தனது கட்சியின் நிலையை விளக்கினார். அவர் கூறுகையில் பாமகவைப் பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்காலத் தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என்றார்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களர்களுக்கும்இ தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா, அமிர்தலிங்கம், குட்டிமணி, ஜெகன், காலம் முதல் போராட்டம் நடைபெறுகிறது.

தலைவர் பெயர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது..................?

இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களர்களுக்கும்இ தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா, அமிர்தலிங்கம், குட்டிமணி, ஜெகன், காலம் முதல் போராட்டம் நடைபெறுகிறது.

தலைவர் பெயர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது..................?

தலைவரின் பெயரை உச்சரிக்க பயமோ தெரியாது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் என்ற கொள்கைவீரனின் பெயரை உச்சரிக்கும் தகுதி கருணாநிதி போன்ற கயவர்களுக்கு இல்லை என்பதே உண்மை................. :icon_mrgreen:

உச்சரிக்க தனக்கு தகுதி இல்லை என நேர்மையாக எண்ணியிருக்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே போர் நிறுத்தம் பற்றி பேசி,மனித சங்கிலி நடத்தி, தந்தி அடித்து.....ஒன்றும் கிழிக்க முடியவில்லை. சோனியா பேரை கேட்டதும் வேட்டியில் ஒன்னுக்கு போயிட்டே. நாராயணனும், மேனோனும் வந்து வந்து, ;இதுதான் பண்ணப்போறோம். போத்திக்கிட்டு இருய்யா' என்று மிதித்துவிட்டுப் போனபோதும் வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு, ஏதோ பெரிதாக செய்வது போன்று டிராமா காட்டினாய். இப்போது அந்த திராமாவின் இரண்டாம் பாகம்.

உண்மையிலேயே காரியம் நடக்க வேண்டுமென்றால் நீ நேரடியாக போய் இருப்பாய். நடந்தால் நமக்கு நல்ல பெயர், நடக்காவிட்டாலும் பாதகமில்லை என்று என்னும்போப்து கடிதம் எழுதுவாய். இப்போ முகாம்களில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு கடிதம் எழுதியிருக்கிரதாக சொல்லுறே.. நீயெல்லாம் தமிழினத்தின் சாபம்..போடா டேய், நீயெல்லாம் ஒரு மனுஷன்னு சொல்லிக்கிட்டு...

Edited by srinivasan chennappan

இப்போ முகாம்களில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு கடிதம் எழுதியிருக்கிரதாக சொல்லுறே.. நீயெல்லாம் தமிழினத்தின் சாபம்..போடா டேய், நீயெல்லாம் ஒரு மனுஷன்னு சொல்லிக்கிட்டு...

:icon_mrgreen: உலகத்தமிழனின் தல யை பார்த்து நீங்கள் இப்படி சொல்லுவது அழகல்ல :wub:

  • கருத்துக்கள உறவுகள்

.. நீயெல்லாம் தமிழினத்தின் சாபம்..போடா டேய், நீயெல்லாம் ஒரு மனுஷன்னு சொல்லிக்கிட்டு...

கருநாய இவ்வளவு மரியாதையாக நீங்கள் விளிப்பதை கண்டிக்கிறேன்..! :icon_mrgreen:

அட அட ஆராருக்கோ பன்டிக் காச்சல் வருது இந்த இழவு விழுந்த பன்டிக்கு அது கூட வரதாம். ஒரேயடியாப் போய் துலைய....!

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைவாழ்வை ஏற்பதற்கு சட்டசபையில் கூடி முடிவெடுக்க வேண்டுமா??? பெருத்த தலைவர்தான் நீங்கள். உட்காந்திருந்து யோசிப்பாங்கள் போல......

தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார் கருணாநிதி.

அய்யய்யோ... மறுபடியும் கடுதாசி / தொல்லைபேசி / புறாவா...!!! :icon_mrgreen:

இந்த ஆட்டத்துக்கு நான் வரலைடா சாமி!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்லாடனும் ஒபாமாவும் சேர்ந்து அமெரிக்க ஆட்சியை பகிர்ந் து கொள்ள வேண்டும் கருணாநிதி அறிவுரை

கருநாய இவ்வளவு மரியாதையாக நீங்கள் விளிப்பதை கண்டிக்கிறேன்..! :icon_mrgreen:

நான் இதை வழிமொழிந்து, வெளிநடப்பு செய்கிறேன்... :wub::lol:

ஈழம் பெற்று தருவேன் என யெயலலிதா சொன்னதற்கு புலம் பெயர் நாடுகளில் இருந்து வாழ்த்து சொன்ன சங்கங்கள் அமைப்புக்கள் எல்லாம் தமிழக அரசு கருணாநிதி செய்த வரலாற்று பிழையை சுட்டிகாட்டி கண்டன அறிக்கை வெளியிட முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனையெல்லாம் ஆட்சியில் வைத்திருக்கும் தமிழக மக்கள் விழித்தெழ வேண்டும்.

மோசடிச் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பது மத்திய அரசுக்குத் தெரியும். ஆகையால் மத்தியஅரசில் மிரட்டலில் தமிழக மக்களின் உயிரும் உயிரும் உடமையும் சுதந்திரமும் பறிபோவது தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.

பிரபாகரன் காலத்தை உச்சரிக்கவே இவருக்கு மனதில் தையிரியம் இல்லையென்றால் பிரபாகரன் இருக்கின்றார் என்று தெரிந்தால் உயிரே போய்விடும். பாவம் தள்ளாத வயதிலும் தமிழகத்திற்கு பிரயோசனமில்லாத ஆட்சிக்கு அலையும் ஒரு முண்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்பா எவ்வளவு பாராட்டுக்கள் கிழவருக்கு

உங்கள் புகழ்ச்சிகளைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் :icon_mrgreen::lol::wub:

நன்றி

எங்கள் மக்களின் ஒவ்வொரு துளி குருதிக்கும் பதில் தான் இன்னும் கிடைக்கவில்லை

காத்திருக்கிறோம்

எங்கள் மக்களை நயவஞ்சகமாக கொன்ற கொல்ல துணை நின்ற குளிர் காய்ந்த அத்த்தனை கயவர்களும் வெகு விரைவில் அதன் விளைவுகளை அநுபவிக்க வேண்டுமென்று அனைவரும் பிரார்த்திப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நயவஞ்சகமாக கொன்ற கொல்ல துணை நின்ற குளிர் காய்ந்த அத்த்தனை கயவர்களும் வெகு விரைவில் அதன் விளைவுகளை அநுபவிக்க வேண்டுமென்று அனைவரும் பிரார்த்திப்போம்

உங்கள் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும். காலங்காலமாய் தமிழனின் குருதியில் குளிக்கும் ஈனப்பிறவிகளுக்கும், துணைப்போகும் மு.க போன்ற கிழநரிகளுக்கும் பாவக் கணக்கு தீர்க்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை பெற்றுதர நினைக்கும் கலைஞருக்கு நன்றி :icon_mrgreen::wub:

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த் தமிழக மக்களுக்கு இப்படி ஒரு தலைவன் கிடைத்திருப்பது சாபக்கேடானது.எமக்கு வாய்த்தது போல் ஒரு தலைவன் கிடைத்திருந்தால் இந்த உலகப் பந்தில் தமிழர்களுக்கென இரண்டு நாடுகள் இருந்திருக்கும் ஒரு நாடு கூடக் கிடைக்காமல் தமிழினம் அல்லல்பட இந்தக் கருணாநிதியின் சுய நல அரசியலும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த் தமிழக மக்களுக்கு இப்படி ஒரு தலைவன் கிடைத்திருப்பது சாபக்கேடானது.எமக்கு வாய்த்தது போல் ஒரு தலைவன் கிடைத்திருந்தால் இந்த உலகப் பந்தில் தமிழர்களுக்கென இரண்டு நாடுகள் இருந்திருக்கும் ஒரு நாடு கூடக் கிடைக்காமல் தமிழினம் அல்லல்பட இந்தக் கருணாநிதியின் சுய நல அரசியலும் ஒரு காரணம்.

உண்மை தான் அண்ணா..

இவன் தமிழின கொலையன் ஆச்சே... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி

"நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.