Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி பிடிக்க விழையும் “எடியுகேற்றட் பீப்பிளின்” வலை எல்லாம் ஓட்டை

Featured Replies

"எடியுகேற்றட் பீப்பிள்" என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் ஒரு மனவமைப்புடையோர் போராட்டத்தின் இன்றைய பின்னடைவுகளிற்கு "தலைமையின் சான்றிதழின்மை" சார்ந்து கற்பிக்கும் காரணங்கள் மற்றும் விமரிசனங்களிற்கான எதிர்வினை மட்டுமே இக்கட்டுரை. இவ்வாறு ஒரு எதிர்வினைக் கட்டுரை எழுதுவதால் ஒரு சாரார் போராட்டத்தை விட்டு விலகிவிடுவார்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை

விளங்கவில்லை.

நீங்கள்தான் தலைமையின் சான்றிதழ் இன்மை என்று ஓர் புதிய பதத்தை இங்கு அறிமுகம் செய்து இருக்கின்றீர்கள் இன்னுமொருவன். எனவேதான் கட்டுரைக்கான மூலங்கள் கேட்டேன். எனது தரப்பு வாதத்தை தொடர்வதற்கு இந்தக் கட்டுரைக்கான எழுதத்தூண்டிய மூலங்கள் இல்லாமல் மேற்கொண்டு சிந்திக்க முடியாது. உங்கள் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை என்று நிரூபிக்கப்படுவதற்கு ஆதாரம் தேவை. அல்லாதுவிடில் நீங்கள் தலைமை சான்றிதழ் இல்லாதது என்பதை ஒத்துக்கொண்டு - அந்த தாழ்வுமனப்பான்மையில் கடுப்பில் எழுதிய கட்டுரை இது என்று மட்டுமே கொள்ளவேண்டி இருக்கின்றது.

இவ்வாறு ஒரு எதிர்வினைக் கட்டுரை எழுதுவதால் ஒரு சாரார் போராட்டத்தை விட்டு விலகிவிடுவார்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை

போராட்டத்தை விட்டு விலகிவிடுவார்கள் என்பதைவிட போராட்டத்திற்குள் நிரந்தரமாக உள்ளெடுக்கபடாமல் போய்விடுவார்கள் என்பதே உண்மை. ஏற்கனவே ஏபீக்களின் பங்களிப்பு இல்லை. இப்படியான கட்டுரை நீங்கள் எங்களுக்கு தேவையில்லை, எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு இருக்கலாம் என்ற தொனியில் அமைந்து இருக்கின்றது.

  • Replies 58
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈபிடிபி யுடன் கூடி சொந்த இன பெண்களை 1987-1989 வரை இந்திய இராணுவத்திற்க்கும் பின்பு ஸ்ரீலங்கா சிங்கள காடையருக்கும் கூட்டி கொடுத்த ஒரு கிறிஸ்த்தவ மததத்தை சார்ந்த ஒரு துரோகியின் எடுபிடி பின்நாளில் துணைவேந்தர் ஆனால். உண்மைகளை அப்படியே மறந்துவிட்டு இல்லை மறுத்துவிட்டு ஏதோ புதிய ஜனநாயகம் யாழில் முளைத்துவிட்டது என்று பினாத்த கூடிய எத்தனையோ ஜம்பவான்கள் இந்த யாழ்கருத்துகளத்திலேயே இருக்கிறார்கள்.

நான் ஒருவருடன் விவாதித்த பொது அவர் இவ்வாறு கூறி என் பேச்சை முடித்தார் ....அதனால் தான் நான் இங்கு கேட்டேன் ......தவறென்றால் மன்னிக்கவும் அண்ணே !!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... Educated People (EP) இபி எண்டு எல்லோ இருக்கோனும்? :D

நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் , கிறிஸ்தவர்கள் யாழ் பல்கலை கழகத்தில் துணைவேந்தர் ஆக முடியாது என்பது ......

எங்களடைய சமூகத்தை தலைவர் திருத்த வேண்டும் என்று நினைத்தார் ஆனால் முடியவில்லை ....சில தவறுகள் ஆரம்பத்தில் இழைக்கபபட்டிருக்கலாம் . ஆனால் நாளோட்டத்தில் அவர்கள் தம்மை மாற்றிக் கொண்டார்கள் . கால ஓட்டத்தில் தம்மை திருத்திக் கொள்ள அவர்கள் பின்னிற்க வில்லை ...அவர்கள் எவ்வளவோ சமூக பழக்கவழக்க மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ...இதனை மறுக்கமுடியாது ....

சம்பவங்களை கொண்டு விளங்கிக் கொள்வதைவிட இதன் பின்னணியும் அது சுதந்திரத்துக்கான போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையுமே நாம் கவனிக்க வேண்டும். கல்வியும் உத்தியோகம் மேலாண்மையுடன் சார்ந்த போட்டி நிலையாகவே வரலாறு நீளவும் கிடக்கின்றது. போத்துக்கீசர் ஒல்லாந்தர் காலத்தில் சைவக்கோயில்கள் இடிக்கப்பட்டதும் தமிழ்மன்னர்களால் கிறிஸ்தவக் கோயில்கள் இடிக்கப்பட்டதும் என அன்னியர் நுளைவுடன் கூடிய வரலாறு பின்னர் பிரிட்டிஸ் காலனித்துவத்தில் மிசனரிகளின் கிருத்துவ மதப்பரப்பல் காலத்தில் கல்வி என்பதும் உத்தியோகம் என்பதும் போட்டி நிலையாக மாறத்தொடங்கியது. கல்வி உத்தியோகத்தை மேல்வர்க்கம் தம்முடனனேயே வைத்திருக்க முயற்சித்தது. கிருத்துவ மதப்பரப்பலானது அடித்தட்டு மக்களுக்கும் கல்வியை மதமாற்றத்திற்கான கருவியாகவும் பயன்படுத்தி போதித்தது. இதற்கெதிரான பெரும் சர்ச்சைகள் ஒரு நீண்ட வரலாறாக உள்ளது. இந்தக்காலத்தில் சமூகத்தளத்தில் மேம்பாடு சமநிலை என்பதை கல்வியூடாகவும் உத்தியோகம் ஊடாகவும் சாதிகளை கடந்தும் வர்க்க நிலையை கடந்தும் எட்டிவிடும் போட்டி தொடங்கியது. இதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்வதானால் கிருத்தவ மிசனரிகளுக்கு பெரும் சர்ச்சயாக இருந்த நாவலரே பாதிரிகளுடன் சேர்ந்து பைபிளை மொழிபெயர்த்தார் என்று வரலாறு சொல்கின்றது. இத்தால் புரிந்துகொள்வது கல்விப்புலமையில் உள்ள போட்டி நிலையை தான் தவிர நாவலர் கிருத்துவம் நுளைய உதவி செய்தார் என்பது பொருள் இல்லை. கிருத்தவ மிசனரிகளின் போதனையை ஏற்|றுக்கொண்ட அதே நேரம் அது சமூகத்தின் அனைத்து தரப்பினரருக்கும் போதிப்பதை ஏதிர்த்தனர்.

இவ்வாறு மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட இந்தப்போட்டி நிலை சிங்கள ஒடுக்குமுறையில் தறிகொட்டு தொடர்ந்தது. சிங்கள அரசுடன் சேர்;ந்த ஒரு தரப்பாகவும் அது இல்லாமல் போராட்டத்தை விமர்சிக்கும் ஒரு தரப்பாகவும். கண்ணை மூடிக்கிடக்கும் ஒரு தரப்பாகவும் என்னும் நுணுக்கமாக சொல்வதானால் புரட்டஸ்தாந்து அடிப்படைவாத்தின் பின்னணியில் ராஜன் கூல் கூட்டத்தினர் சைவத்தை எதிரப்பதாக அல்லது போட்டிபோடுவதின் என்னுமொருவடிவமாக போராட்டத்தை உலகளவில் சிதைக்க அரும்பாடுபட்டனர். இவ்வாறு பிரிந்து சிதைந்த பலவடிவங்களாக புத்திசீவிதம் சிங்களத்துக்கு சார்பாகவே இறுதியில் இருந்தது. புத்திசீவிதமே அனைத்திலும் மேலாண்மையானது அதாவது சாதி மத வர்க்க அனைத்திலும் மேலாண்மையானது என்ற நிலையில் அது தவிர்ந்த எந்த ஒரு சக்தியும் அதிகாரத்தில் வருவதை புத்திசீவிதம் விரும்பவில்லை. அதற்காக தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை என்று கருதி அரும் தியாகங்கள் செய்து லட்சியத்துடன் வளர்ந்த போராட்டத்தை சிதைப்பதில் குறியாய் இருந்தது.

நாங்கள் ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையை கொண்ட மக்கள் கூட்டம். இந்தக் கூட்டத்திற்கு சிங்களப்பேரினவாதம் ஏற்படுத்திய அழுத்தம். இதை எதிர்கொள்ள கொண்டுவரப்படாத இசங்கள் இல்லை. மார்க்ஸியம் மாவோயிசம் காந்தியம் என்னும் என்னவென்னவோ அத்தனையும் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொருவனும் அவனது கருத்தில் குறியாய் இருந்தான். அவனது கருத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான். எக்காலத்திலும் அவனால் தான் சொன்னது தான் சரி என்ற நிலையில் இருந்து பின்வாங்க முடியவில்லை. ஒன்றுபட முடியவில்லை. காரணம் அவன் தனது புத்தியை கொண்டு சிந்திப்பதில் தன்னை நிலைநிறுத்தும் போட்டிநிலையும் தங்கியிருந்தது.

இவ்வாறான சமூக மேலாண்மை அடையாளம் தேடும் போட்டியானது எப்பவும் தனது சமூகத்துள்ளேயே செக்குமாடுமாதிரி சுழண்டது. தனது இரையை தனது இனத்துள்ளேயே தேடியது. ஒருவனால் ஐந்து நிமிடம் பேச முடிந்தால் அடுத்தவன் பத்து நிமிடம் பேசுவான். இவன் ஒரு புத்தகம் வெளியிட்டால் அடுத்தவன் என்னுமொன்றை வெளிவிடுதல். ஒவ்வொருவனும் தனக்குத்தான் அதிக விசயம் தெரிந்திருக்கின்றது என்பதை அடுத்தவனுக்கு எடுத்துரைப்பதில் குறியாய் இருந்தான். செயலில் எதுவும் இருக்கவில்லை. இந்த நிலை இன்றய போராட்ட கால நிலை இல்லை நுர்றுவருடங்களுக்கு முன்னும் இதே நிலைதான். மாற்றம் என்பதின் அடயாளமாக தலைவர் பிரபாகரன் இதற்கு நேரெதிர் நிலையை எடுகின்றார். அவர் அதிகம் பேசவில்லை செயலாகவே இருந்தார்.

Edited by sukan

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... Educated People (EP) இபி எண்டு எல்லோ இருக்கோனும்? :D

அப்பிடியெண்டால் ஏற்கனவே இருக்கிற ஈப்பீயை (eprlf) எப்பிடி வேறுபடுத்துறதாம்? உதைக் கேள்விப்பட்டால் ஈப்பீக்காரர் உங்களுக்கு வாயில ஒரு கிலோ சர்க்கைரை அள்ளிப்போடுவாங்கள்.

ஏற்கனவே மண்டையன் குழு எண்டு (ஆக்களுக்கு மண்டையில் போடுற குழு) ஈப்பிக்கு பெயர் வேற இருக்கிது. இப்ப இந்த மண்டையன் குழுவையும் - EP - ஈப்பீயையும் புத்திசீவிகளையும் கலக்கேக்க மண்டையன் குழு எண்டுறது புத்திசீவிகளின் அமைப்பு என்று அல்லோ குழப்பம் வரும்?

கிறிஸ்தவர்கள் யாழ் பல்கலைக்கழத்தில துணைவேந்தராக வரமுடியாது என்கின்ற நிலமை சிலகாலம் வரை அல்லது சில காலத்தில அல்லது இப்போதும்கூட வெளியில சொல்லாவிட்டாலும்.. உள்வீட்டு யாழ் பல்கலைக்கழக அரசியல் கலாச்சாரத்தில அப்படி இருக்கலாம்.

நான் படிச்சது யாழ்.பரியோவான் கல்லூரி (சென்.ஜோன்ஸ்). இது கிறீஸ்தவ நிருவாகத்தின் கீழ் இயங்குகின்ற கிறீஸ்தவர்களால ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம். இஞ்ச அதிபராக வருவதற்கு கிறிஸ்தவராக இருக்கவேணும் எண்டுறது ஓர் தகமை என்று நினைக்கிறன்.

இது மாதிரியே.. எனக்கு தெரிஞ்ச அளவில் (என்ர அப்பா சொன்னது), யாழ் பல்கலைக்கழகம் எண்டுறது பரமேஸ்வராக் கல்லூரி எண்டுற இந்துக்களிண்ட பள்ளிக்கூடம் பிறகு பல்கலைக்கழகமாக மாறிச்சிது எண்டு நினைக்கிறன் (எனது அறிவுக்கு எட்டிய வகையில்). அப்பிடிப் பார்த்தால் கிறிஸ்தவர்கள் துணைவேந்தராக வருவதற்கு எதிர்ப்பு இருந்து இருக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

இப்ப விக்கி தகவல் களஞ்சியத்தில பார்த்தன். இப்பிடி இருக்கிது:

The nucleus of Jaffna University were two colleges Parameshwara College and Ramanathan College Constructed by a philanthropist and statesman named Sir Pon. Ramanathan. Madam Sirimao bandaranayake Government took these two colleges and started the initial Faculty of Arts and Faculty of Science.

கீழ இருக்கிற யாழ் பல்கலைக்கழக லோகோவில வரையப்பட்டு இருக்கிற மாட்டிண்டபடம்கூட இந்துத்துவம் சார்ந்து வரையப்பட்டு இருக்கிதோ என்று எண்ணத்தோன்றுது.

UoJ_logo.png

  • கருத்துக்கள உறவுகள்

துறைசார் படிப்பு அல்லது பட்டங்களை வைச்சுக் கொண்டு அதுவும் இன்றைய உலகில் பல்கலைக்கழகங்கள் வகை தொகையின்றி பெருகிவிட்ட வியாபார ஸ்தாபனங்களாக விலைக்குப் பட்டங்களை விற்கும் நிலையில்.. அரசியல் செய்ய முடியாது.

தேசிய தலைவர் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் இறுதி வரை தமிழ் மக்களின் விடிவுக்காகச் செய்தார். ஆரம்பம் முதல் அவர் இறுதி வரை பல விட்டுக்கொடுப்புக்களை அரசியல் ராஜதந்திரங்களை செய்திருக்கிறார். ஆனால் அவர் செய்ய மறுத்தது.. விலை போதலை மட்டுமே. அதற்காகவும் தீவிர கொள்கை பிடிப்புக் காரணமாகவுமே அவர் உலகால் பயங்கரவாதிகளாக்கி தண்டிக்கப்பட்டார்.

புலிகள் மீது இன்றைய நிலைக்கு பொறுப்புச் சுமத்த எந்தக் கொம்பருக்கும் தார்மீக உரிமை கிடையாது.

தமிழீழத்தை முன்மொழிந்த வலதுசாரிகள் இன்று கொழும்பில்.. சிங்களப் படைகளின் பாதுகாப்பில் இருந்து கொண்டு... தமது குடும்பங்களை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி அகதி அந்தஸ்து வாங்கிக் கொடுத்திட்டு.. ஐநா விருதுகளுக்காக புலி எதிர்ப்பு தமிழர் துரோக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழம் கேட்டுப் புறப்பட்ட ஆயுதம் ஏந்தியோர் இடையிலேயே சன நாய் அக நீரோட்டத்தில் கலந்து.. சிங்களத் தேசியத்தோடு ஐக்கியமாகி.. இன்று சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்காக வாளேந்திய சிங்கக் கொடி பிடித்துத் திரிகின்றனர்.

தமிழ் மக்களைப் (புலம்பெயர்... தமிழக.. தாயக மக்கள் எல்லோரும்) பொறுத்தவரை அவர்கள் செய்த தவறுகளும் உள்ளன.

அவர்கள் இந்தப் போராட்டத்தில் புலிகளோடு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. புலிகளின் நகர்வுகளைப் புரிந்து கொண்டு செயற்பட முன்வரவில்லை. புலிகளின் கொள்கைகள் வெல்லப்பட உழைக்க வேண்டிய தருணத்தில் எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று தூங்கிக் கிடந்தார்கள்.

1998 புலிகள் மீது தடைகளை அமெரிக்கா கொண்டு வந்த போது எத்தனை தமிழர்கள் வீதியில் இறங்கி புலிகள் எமது அரசியல் பிரதிநிதிகள் அவர்கள் எமது சுதந்திரத்திற்காகவே ஆயுதம் ஏந்தினர்.. அந்த இலட்சியம் வெல்லப்பட சர்வதேசம் உதவின் அவர்கள் ஆயுதங்களைக் கைவிடத் தயார் என்று சொன்னார்கள். எவரும் இல்லை. புலிகளே அதனைச் சொல்ல வேண்டி இருந்தது.

இதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கு எடுத்து வைக்கப்பட்ட முதலடி. அதை பலமாக்கியவர்கள் நம்மவர்கள்.

அமெரிக்காவின் தடைக்கு ஆதரவளிப்பது போல.. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்பு என்ற ஒன்றின் பெயரால் புலிகளை மட்டும் மோசமாக விமர்சித்து வரிசையாக குறிப்பிட்ட காலத்தில் அறிக்கைகள் விடப்பட்டதை ஏன் தமிழ் மக்கள் நிராகரிக்க மறுத்தார்கள்.

புலிகள் சூரியக்கதிர் நடவடிக்கையின் போது சாவகச்சேரியில் குண்டு வைத்து மக்களைக் கொன்றனரா.. புலிகள் யாழ்ப்பாணத்தில் வீடுகளை தகர்த்து இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்ததாக கூட அறிக்கை வந்தது. இப்போ அப்ப எப்படி யாழ்ப்பாணத்து வீடுகள் முளைச்சு நிற்கின்றன. அந்த அறிக்கைகளில் சிங்கள இராணுவம்.. வீசிய விமானக்குண்டுகளுக்கு.. டாங்கிக் குண்டுகளுக்கு.. பீரங்கிக் குண்டுகளுக்கு கணக்குச் சொல்ல எவரும் முன்வரவில்லை. 5 இலட்சம் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழலை இராணுவ நடவடிக்கை உருவாக்கியதை எவரும் உலகுக்குச் சொல்ல முன்வரவில்லை. சொல்ல முன் வந்த ஐநா செயலரை சிறீலங்காவின் அப்போதைய வெளிவிவகார மந்திரி கதிர்காமர் எள்ளி நகையாடிய போது இந்த "எடியுகேட்டட் பீப்பிள்" என்ன பால் போச்சி சூப்பிக்கிட்டா இருந்தார்கள்.

ஏன் இன்றும் கூட தமிழீழக் கொள்கை சிதறடிக்கப்படக் கூடாது.. அதற்கான அரசியல்.. மற்றும் பாரம்பரிய உரிமை ஈழத்தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை உலகுக்குச் சொல்ல முன்மொழியப்பட்டிருக்கும்.. நாடு கடந்த தமிழீழ அரசு என்பதற்கு ராஜன் கூல் என்பவர் விமர்சனம் எழுதுகிறார். ஆனால் இந்தப் பெரிய பிஎச்டி எடுத்த பன்னாடைகள் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் விடிவுக்கு என்ன பாதை.. சிங்கள பேரினவாதத்தில் இருந்து எவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பில் எந்த வழிமுறையும் அற்று குருட்டு வழியிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கடந்த காலத்தைப் பற்றி விமர்ச்சிப்பவர்களாக இருக்கின்றனரே தவிர.. மக்களை விலை கூற எழுதுகின்றனரே தவிர.. தமிழ் மக்களின் அரசியல், சமூக விடிவுக்காக கொள்கை வகுப்பர்களாக இவர்களால் தெளிவாகச் செயற்பட முடியுமா..??! இவ்வாறானவர்களிடம் பகிரங்கமாகவே கேட்கிறோம்.. புலிகளின் பாதையில் ஆயிரம் குற்றம் குறை இருப்பதாகச் சொல்கிறீர்களே.. அதை திருத்திய.. சிங்களத்துக்கு ஆதிக்க சக்திகளுக்கு விலைபோகாத ஆனால் ராஜதந்திரம் மிகுந்த.. தமிழ் மக்களுக்கு விடிவை தேடித்தரக் கூடிய ஒரு பாதையை.. கொள்கையை வகுத்து முன் வையுங்கள்.. பார்க்கலாம்..!

விடுதலைப்புலிகள் முரட்டு வழியில்.. மோட்டு வழியில் போனதால் தான் இத்தனை அழிவென்றால்.. எங்கே படித்த புத்திமான் பலவான்களே.. அருணாச்சலம்.. இராமநாதன் வழிகளில் சென்று தமிழர்களுக்கு அரசியல் சமூக விடிவை இலங்கைத் தீவில் ஏற்படுத்திக் காட்டிவிட்டு.. புலிகளை விமர்சியுங்கள் ஏற்றுக் கொள்ளலாம். அதுவரை விடுதலைப்புலிகளை விமர்சிக்க எந்தக் கொம்பனுக்கும் உரிமை கிடையாது. புலிகளைக் குறை சொல்ல.. அவர்களின் பாதையில்.. குறை சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது.

தேசிய தலைவரை புலிகளை மக்களை பலியிட்டது சிங்களமோ.. இந்தியாவோ அல்லது சர்வதேசமோ அல்ல. அவர்களுக்கு அதைச் செய்ய வாய்ப்பளித்த நாமே எமது ஒற்றுமையின்மையே என்பதை.. இந்த படித்த புண்ணாக்குகள் உணர வேண்டும். தொடர்ந்தும் அதைச் செய்யாமல்.. ஆளுக்கொரு பக்கம் நின்று கொண்டு கருத்தை வைக்காமல்.. ராஜன் கூல் ஆகட்டும்.. யாழ்ப்பாண.. பல்கலைக்கழக ஆசிரிய மனித உரிமைகள் குழுவாகட்டும்.. புலம்பெயர் நாடுகளில் வாழும் மாற்றுக்கருத்து புலம்பர்களாகட்டும்.. இன்னும் நாம் படித்த தலைகள்.. முன்னேறிய குடிகள் என்ற தலைக்கனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமக்களாகட்டும் எல்லோரும் தமிழ் மக்களின் விடிவுக்காக ஒரு மேடையில் கூடுங்கள். கலந்து பேசுங்கள். கேபி அண்ணா உருத்திரகுமார் அண்ணா போன்ற தலைவரின் வழி வந்தோர் நிச்சயம்.. இவற்றில் பங்கு கொள்வார்கள்.. நியாயங்கள் இருப்பின் நிச்சயம் உங்களோடு ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

தலைவர் பிரபாகரன்.. முரண்பாட்டாளன் அல்ல. அவர் கொள்கைப் பிடிப்புள்ளவராக இருந்துள்ளாரே அன்றி.. இழப்புக்களுக்காக வருந்தாத மனிதன் அல்ல. தலைவர் தனது நெகிழ்வுப் போக்கை பல சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டி இருக்கிறார். அரசியல் சாணக்கியத்தனத்தை வெளிகாட்டி இருக்கிறார். ஆனால் மக்கள் தான் அவரை இன்னும் இன்னும் பலப்படுத்தவும்.. புரிந்து கொண்டு செயற்படவும் தவறி இருக்கின்றனர்..! அதன் விளைவே இன்றைய பின்னடைவுகள்.

தியாகி திலீபன் அண்ணா கேட்ட மக்கள் புரட்சி இன்னும் வெடிக்கவில்லை என்பது.. யாரால் புலிகளாலா.. இல்லை. மக்களின் தெளிவற்ற அரசியல் ஞானத்தால்.. சுயநலத்தால்...!

இன்று கூட இத்தனை பேரழிவுகளை சிங்களம் ஏற்படுத்திய பின்னும்.. சிங்களத்தை பாதுகாத்து.. புலிகளை விமர்ச்சிப்பது எலும்பு கிடைக்குமோ.. பரிசு கிடைக்குமோ.. பதவி கிடைக்குமோ.. பப்பிளிசிற்றி கிடைக்குமோ என்று தானே தவிர.. தமிழ் மக்களின் விடுதலையில் அக்கறை கொண்டல்ல. அப்படி அக்கறை கொண்டிருப்பின்.. புலிகளின் பாதைக்கு மாற்றான இன்னொரு பாதையில் தமிழ் மக்களை வழி நடத்தி.. தமிழீழத்தை.. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை.. மீட்கட்டும் பார்க்கலாம்.. இந்த படித்த மேதாவிகள். இதுவே அவர்களின் முன் நாம் வைக்கும்.. சவால். இதைச் செய்ய துணிவின்றேல்.. அரசியல் செய்வதை.. புலிகளை விமர்சிப்பதை அவர்கள் முற்றாக கைவிட்டு.. மனிசி பிள்ளைகளோடு.. வீட்டுக்குள் அரசியல் செய்வதோடு நின்று கொள்ள வேண்டும். புதிய தலைமுறை இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலையை இளைஞர்கள் நாம் உருவாக்க வேண்டும்..!

இப்படியே அவர்களைப் போல.. நாமும்.. அவர்களை.. இவர்களை விமர்ச்சித்துக் கொண்டு திரியாமல்.. எமது மக்களின் விடிவுக்கான பாதை என்ன என்பதை தீர்மானிக்கும் பொதுக் கொள்கையை வகுக்க இளைஞர்கள் பொதுக்கருத்துப் பகிர்வொன்றைச் செய்யவும்.. காத்திரமான கொள்கைகளை வகுக்கவும் முன் வரவேண்டும். அந்நிய ஆதிக்க.. பேரினவாத சக்திகளுக்குள்ள கொள்கை வகுப்பு வலு ஏன் எம்மிடம் இல்லை என்பதே இன்றைய கேள்வி.. அவர்களோடு இராஜதந்திரம் செய்ய ஏன் எம்மால் முடியாமல் இருக்கிறது என்பதே கேள்வி..!

புலிகள் தோற்கவில்லை. அவர்கள் பெரிய ஒரு கொள்கையை வகுத்துவிட்டுள்ளனர். அதற்காக உழைத்துள்ளனர்.. வாழ்ந்துள்ளனர்.. உழைத்துக் கொண்டும் உள்ளனர். அவர்களின் கொள்கையில்.. வலுவான காரணங்கள் நியாயங்கள் இருக்கின்றன. அதை எவராலும் புறக்கணிக்க்க முடியாது. புலிகள் முற்றாக வன்முறையை தெரிவு செய்தவர்கள் அல்ல. அவர்கள் வன்முறையை மட்டுப்படுத்தியே செய்து வந்தனர். புலிகளை விட பல மடங்கு இராணுவ வன்முறையைக் கட்டவிழ்ந்த சிங்களம்.. எந்தத் தண்டனையும் இன்றி இந்த உலகில் இருக்க புலிகளை தண்டிக்க இந்த உலகை அனுமதித்த நாமே... எம்மினப் படித்த தலைகளே... மக்களே தோல்வியைச் சந்தித்துள்ளனர். அதுவும் ராஜதந்திரத் தோல்வியை சந்தித்துள்ளனர். ஆனால் புலிகள் வகுத்த கொள்கைகள்.. உலகில் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கீழ இருக்கிற யாழ் பல்கலைக்கழக லோகோவில வரையப்பட்டு இருக்கிற மாட்டிண்டபடம்கூட இந்துத்துவம் சார்ந்து வரையப்பட்டு இருக்கிதோ என்று

சேது நாணயத்திலும் மாடு இருக்குது,பிராந்தியத்திற்கு

அப்பிடியெண்டால் ஏற்கனவே இருக்கிற ஈப்பீயை (eprlf) எப்பிடி வேறுபடுத்துறதாம்? உதைக் கேள்விப்பட்டால் ஈப்பீக்காரர் உங்களுக்கு வாயில ஒரு கிலோ சர்க்கைரை அள்ளிப்போடுவாங்கள்.

ஏற்கனவே மண்டையன் குழு எண்டு (ஆக்களுக்கு மண்டையில் போடுற குழு) ஈப்பிக்கு பெயர் வேற இருக்கிது. இப்ப இந்த மண்டையன் குழுவையும் - EP - ஈப்பீயையும் புத்திசீவிகளையும் கலக்கேக்க மண்டையன் குழு எண்டுறது புத்திசீவிகளின் அமைப்பு என்று அல்லோ குழப்பம் வரும்?

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... Educated People (EP) இபி எண்டு எல்லோ இருக்கோனும்? :D

ஈபி (EP) எண்டுதான் வரவேணும் ஆனால் ஏற்கனவே இந்த ஏபியிலும் விட மோசமான கூட்டம் ஒன்று அந்த பெயரில் இருப்பதால்தான் இது ஏபி ஆனது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரைகுறைகளைத்தான் எங்கட ஆக்கள் ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்று சொல்லுறவை இந்த அரைகுறைகளால எங்கள மாதிரி உண்மையான கல்விமான்களுக்கும் கெட்ட பெயர் :lol:

நிழலி, "எடியுகேற்றட் பீப்பிள்" என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் ஒரு மனவமைப்புடையோர் போராட்டத்தின் இன்றைய பின்னடைவுகளிற்கு "தலைமையின் சான்றிதழி;ன்மை" சார்ந்து கற்பிக்கும் காரணங்கள் மற்றும் விமரிசனங்களிற்கான எதிர்வினை மட்டுமே இக்கட்டுரை. இவ்வாறு ஒரு எதிர்வினைக் கட்டுரை எழுதுவதால் ஒரு சாரார் போராட்டத்தை விட்டு விலகிவிடுவார்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றபோதும் உங்களது கருத்தை உள்வாங்குகின்றேன். அத்தோடு, பல்கலைக்கழக சமூகம் ஆரம்பத்தில் ஆதரவாய் இருந்து பின்னர் விலகியது என்ற உங்கள் கருத்துத் தொடர்பில் இரு கருத்துக்களை முன்வைக்கின்றேன். ஒன்று ஆரம்பத்தில் மட்டுமல்ல இறுதிவரை பல்கலைக்கழகங்களில் குறிப்பிடும் அழவிற்கு மாணவர் பங்களிப்பு இருந்தது தான். மாணவர் பருவத்து பங்களிப்பிற்கும் வளர்ந்தவர்களாக இன்னபல சுமைகளோடும் சிக்கல்கள் ஆபத்துக்களோடும் பங்களிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. பல்கலைக்கழக நாளில் பங்களித்துப் பின்னாளில் விலகிவிட்ட பலர் தமது விலகலிற்குப் புலிகளைக் காரணமாகக் காட்டுவது வழமையாயினும், தனிப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்த்தல் உத்தியோகத்தைக் காத்துக் கொள்ளளல் முதலிய சிந்தனைகளையும் பலரின் போராட்டத்திலிருந்து விலகியமைக்கான காரணங்களில் இருந்து நாம் ஒதுக்கி விடமுடியாது. இரண்டாவதாக, "எடியுகேற்றட் பீப்பிள்" என்று இங்கு நான் கூறியமை ஒரு குறிப்பிட்ட மனவமைப்பை மட்டும், அதாவது சான்றிதழ் மனவமைப்பை மட்டும் குறிப்பதற்கே. இதை வைத்து நான் கற்றவர்களிற்கும் கல்விக்கும் எதிராய் கடைவிரிக்கின்றேன் என்று கருதிவிடாதீர்கள். மேலும் வெளிநாடுகளில் வாழ்ந்த, புலிகளின் கொள்கைகளோடு முரண்பட்டவர்களாயினும் கூட, இதயசுத்தியோடு தமிழர் நலம் மனித நலம் விரும்பியவர்கள் எத்தனையோ பங்குகளிப்புக்களை ஆற்றமுடியும். இங்கு வெளியே எவரிற்கும் பெயர் தெரியா வண்ணம் தம்மால் இயன்ற பங்களிப்புகளை அறிவு சார்ந்து கட்டமைப்புக்களிற்கு அப்பால் நின்று வழங்கி வருபவர்கள் உள்ளார்கள். எனவே புலியைப் பிடிக்காததால் மனிதனை மறந்து வாழ்ந்தோம் என்று எவரும் கூறிவிடமுடியாது.

பல்கலைக்கழக் சமூகம் என்பதில் மாணவர்கள் மட்டும் அன்றி, விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் அடங்குவர். இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களான பேராசிரியர் சிவத்தம்பி, சிதம்பரநாதன், சிவசேகரம் போன்றோரைப் போன்று எண்ணற்றவர்கள் ஆரம்பத்தில் தந்து கொண்டும் பின் தாமாகவே ஒதுங்கிக் கொண்டோ அல்லது மெளனிகளாக்கப் பட்டோ போய்விட்டனர். இதே போல் கிழக்கு பலகலைக் கழகத்தைச் சேர்ந்த சித்திரலேகா மெளனகுரு, மெளனகுரு போன்றோரும் அடங்குவர்

சமூக அமைப்பில் இருக்கும் வர்க்க, சாதி, அரசியல், மற்றும் மத வேறுபாடுகளை மேவி எல்லோரையும் தமிழ் தேசியத்தின் பால் ஒன்றிணைத்தல் பற்றிய கருத்துருவாக்கம் வலுப்பெற்று வரும் காலகட்டத்தில் உங்களின் கட்டுரை அவற்றில் கல்லெறிதல் போன்று தோன்றியமையால் தான் உங்களின் கட்டுரையின் அடிப்படை கருத்தை எதிர்க்க முயன்றேன். சமூகத்தின் அரசியல் தளத்தில் தன் நேரிடையானதும் மறைமுகமானதுமான செல்வாக்கு செலுத்தும் 'ஏபீ' க்களை தமிழ் தேசியத்தில் ஒதுக்கி வைத்தல் போன்ற ஒரு தோற்றப்பாட்டை எனக்கு இந்த கட்டுரை ஏற்படுத்துகின்றது. இது ஒரு வேளை நான் கட்டுரையை விளங்கிக் கொண்ட தன்மையில் இருக்கலாம் அல்லது உங்கள் கட்டுரை ஏற்படுத்தும் கருத்து மயக்கம் காரணாமாக இருக்கலாம்

மற்றப்படி, உங்களைப் போன்ற ஒரு சிலருடன் யாழ் களத்தில் விவாதிப்பதும் கருத்துகளை பரிமாறிக் கொள்வதும் என் கருத்துகளில் இருக்கும் இடைவெளிகளையும், மயக்கங்களையும் நிவர்த்தி செய்ய பெரிதும் உதவும் எனவும் நான் நம்புகின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக் சமூகம் என்பதில் மாணவர்கள் மட்டும் அன்றி, விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் அடங்குவர். இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களான பேராசிரியர் சிவத்தம்பி, சிதம்பரநாதன், சிவசேகரம் போன்றோரைப் போன்று எண்ணற்றவர்கள் ஆரம்பத்தில் தந்து கொண்டும் பின் தாமாகவே ஒதுங்கிக் கொண்டோ அல்லது மெளனிகளாக்கப் பட்டோ போய்விட்டனர். இதே போல் கிழக்கு பலகலைக் கழகத்தைச் சேர்ந்த சித்திரலேகா மெளனகுரு, மெளனகுரு போன்றோரும் அடங்குவர்

மேற்குறிப்பிட்டோர் மௌனமான காரணம் புலிகளின் , புலி சார்பு அமைப்புகளின் நடவடிக்கைகள் என நான் நினைக்கவில்லை. இலங்கை அரசினது அடாவடித் தனங்களும் அச்சுறுத்தல்களும் இவர்களையும் இவர்கள் போன்றோரையும் மௌனமாக்கி விட்டன. ஆனாலும் சிவத்தம்பி போன்றோர், ராஜன் கூல் தரவழி போல தனிநாடு/சுயநிர்ணயம் என்பவற்றை பிற்போக்கு வாதமாகக் காட்ட ஒரு நாளும் விளையவில்லை (ராஜன் கூலின் நாடு கடந்த அரசு பற்றிய விமர்சனத்தின் கடைசி வரிகளை வாசிக்கவும்). அந்த வகையில் தமிழர் பக்க நியாயங்கள் தெரிந்த அறிவோராகவே இன்னும் விளங்குகிறார் சிவத்தம்பி. இடையிடையே சில வடிவங்களில் தனது அரச எதிர்ப்புப் போக்கை வெளிக்காட்டியும் இருக்கிறார் சிவத்தம்பி. சுனாமிக்குப் பிறகு இலங்கை அரசு ஒரு உயர் விருது கொடுத்த போது, விழாவுக்குச் சென்று விருதை வாங்காமல் தனது அதிருப்தியை வெளிக்காட்டியது நல்ல உதாரணம் (பிறகு, அப்போது அமைச்சராக இருந்த மகிந்த சிவத்தம்பி வீட்டுக்கு ரூபவாகினியைக் கூட்டிக் கொண்டு போய் தானே விருது கொடுத்து படமெடுத்துக் காட்டியது வேறு கதை!)

மேற்குறிப்பிட்டோர் மௌனமான காரணம் புலிகளின் , புலி சார்பு அமைப்புகளின் நடவடிக்கைகள் என நான் நினைக்கவில்லை.

நானும் எந்த இடத்திலும் இவர்களின் மெளனத்திற்கு புலிகள் (மட்டும்) தான் காரணம் என்று சொல்லவில்லை. ஆனால் இவர்கள் மகிந்த வரவிற்கு முன்னான காலகட்டத்தில் எந்த ஒரு சிங்கள அமைப்பாலும் அச்சுறுத்தப் பட்டவர்கள் அல்ல. எல்லாம் தமிழ் பெற்றோருக்கு பிறந்த தமிழ் இளைஞர்களை மட்டுமே கொண்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களினால் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தப் பட்டவர்கள் அல்லது ''ஏன் வம்பு" என்று அமைதியானவர்கள். இந்த அமைதிக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரின் படுகொலை மீள முடியாத தொடர்புள்ளியை இட்டுச் சென்றது....

  • தொடங்கியவர்

மீண்டும் மீண்டும் இங்கு முன்வைக்கப்படும் ஒரு கருத்து இவ்வாறான கட்டுரைகள் “எடியுகேற்றட் பீப்பிளை” ஒன்றிணைக்கும் முயற்சிக்குப் பாதகம் என்பது. இது தொடர்பில் சற்றுக் கதைப்பது அவசியம் என்று படுகிறது.

முதலில் நான் யாழ் களத்தில் ஒரு முகமூடி. கனேடிய புலம் பெயர் தமிழ் சமூகத்தில் ஒரு அங்கத்தவன். சமூகத்துள் ஓர் அங்கமாக சமூகத்தை அவதானிக்கும் வாய்ப்பு மற்றைய அனைவரையும் போல் எனக்கும் கிடைத்துள்ளது. இந்நிலையில் நான் சந்தித்த கருத்துக்களில் என்னை எதிர்வினை எழுதத்தூண்டிய ஒரு கருத்திற்கு எதிர்வினையாக இப்பதிவினை இங்கு பதிந்தேன். நான் எதிர்க்கும் கருத்து என்னவென்பதையும் காது புளிக்கும் வரை திருப்பத்திருப்பக் கூறிவிட்டேன். மேற்படி கருத்து நயவஞ்சகமான கருத்தாய் எனக்குப் பட்டதால் எதிர்வினை தேவைப்பட்டது.

அப்பால் நகருமுன், கலைஞன் கேட்டதால் “சான்றிதழற்றவர்” என்ற பதத்தை எவ்வாறு கட்டுரை பயன்படுத்துகின்றது என்று கூறிவிடுகின்றேன். அதாவது மரபு ரீதியாக (conventional) கற்றார் என்றால் யாரென்று ஒரு வரைவிலக்கணத்தை வைத்து, அவ்வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளும் கற்றாரில் தாமும் ஒருவர் என்று அதற்கொரு சான்றிதழையும் பெற்று, பின்னர் தாம் சான்றிதழ் பெற்றுவிட்டபடியால் அச்சான்றிதழைத் தாம் என்ன மனவமைப்பில் பெற்றோமோ அந்த மவுசு சமூகத்தில் சற்றும் குறைந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக (சான்றிதழிற்கான மவுசு குறைந்து விட்டால் தமது உழைப்பும் விலையும் வீணாகிவிடும் என்பதனால்) சான்றிதழ் உடையோர் மட்டுமே கற்றோராய் இருக்கமுடியும் என்று பிரசங்கிக்கும் ஒரு கூட்டம், அத்தகைய சான்றிதழ் குழாமிற்குள் வராத தலைவர் சாதனையாளர் என்று எமது சமூகம் அங்கீகரித்துவிடக்கூடாது, மாறாக கல்லாதவர் (conventionally speaking) தலைமை வெல்லாது என்று நிறுவித் தமது மவுசை நிலைநாட்டவேண்டும் என்பதற்காக முன்வைக்கும் பத்தாம் பசலித்தனமான வாதத்தையே இந்தச் “சான்றிதழற்றவர் மனவமைப்பு” என்ற பதம் இங்கு குறிக்கின்றது. அதாவது போராட்டத்தின் தொன்று தொட்டு இன்று வரையான தார்ப்பரியங்களைப் புரிந்து கொள்ளாது அல்லது புரிந்ததை ஒத்துக் கொள்ளாது மரபுவழி கல்விமான் தலைமை ஏற்காமை தான் தோல்விக்கான காரணம் என்று ஒரு மயக்கத்தை விதைத்து அதன் வழியாய்த் தமது சான்றிதழிற்குத் தாம் கொடுத்த விலையைத் தக்க வைக்கும் எண்ணம் இது. அதாவது வகுக்கப்பட்ட வழிமுறைகளில் சான்றிதழ் பெற்று ஒரு கிளப்பில் சேர்ந்து விட்டு அக்கிளப்பிற்குள் வராத மற்றையயோர் மீது மேலாண்மைத் தனம் காட்டும் தன்மை. சுகன் முதலியோர் குறிப்பிட்டதைப் போல இது ஒன்றும் புதிய வெளிப்பாடு இல்லை எம்மோடு நெடுங்காலம் இருப்பது தான், ஆனால் இன்று இம்மனவமைப்பு வரம்பு மீறுவதாய் எனக்குப் பட்டதால் எனது எதிர்வினை.

மேலும் புலத்தில் வெறும் சான்றிதழை வைத்து மட்டும் ஒருவர் மதிக்கப்படுவதில்லை. Publish or Perish என்பது கல்விமான்களிற்கான இங்குள்ள நிலை. What have you done lately என்பது தான் இங்கு ஒருவரின் தகமையைத் தீர்மானிப்பது. ஏன்றோ பெற்ற சான்றிதழ்கள் காலாவதியாகிப் போய்விடுகின்றன. எமது சமூகத்தில் மட்டும் சான்றிதழை வைத்துப் பழம் பெருமை பேசுவது நடைமுறை.

இனி எனது கருத்தால் “எடியுகேற்றட் பீப்பிள்” ஓடி விடுவர் என்ற கருத்துக்கு வருகிறேன். சுமூகத்தில் உள்ள ஒரு கருத்துப் பற்றி, அச்சமூகத்தில் ஒரு அங்கத்தவனாக, யாழ்களத்தில் ஒரு முகமூடியாக நான் முன்வைக்கும் ஒரு எதிர்பவினை “எடியுகேற்றட் பீப்பிளை” மனம் நோகச் செய்து ஓடிவிடச் செய்யும் என்ற பயம் ஏன் எவருக்கேனும் எழுகிறது என்று முதலில் ஆராய்தல் அவசியம். இன்றைய உலகில் Preaching என்பது கல்வித்துறையோடு தொடர்புபடுத்தப்படுவதில்லை, மாறாக discussions and debates தான் விரும்பப்படுகின்றன. நான் எதிர்வினை எழுதுவதற்கு உந்துதலாய் இருந்த கருத்துக்கு எனது எதிர்வினையை நான் முன்வைக்கையில், ஒரு விவாதம் என்பது எதிர்வினையில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதாய் (எனது எதிர்வினை ஓட்டைகள் இருக்கமுடியாது என்று அடம்பிடிக்கும் மனநிலை எனக்கு இல்லவே இல்லை. நான் பார்க்கத் தவறும் கோணம் காட்டப்படுகையில் பார்வையை மாற்றிக் கொள்வதில் நிச்சயம் மகிழ்ச்சி உறுவேன்) இருக்கவேண்டுமே அன்றி எதிர்வினை வந்தால் ஓடிவிடுவார்கள் படித்தவர்கள் என்ற பூச்சாண்டியாய் இருக்கக் கூடாது. மருதன்கேணி குறிப்பிட்டது போன்று, அவ்வாறு பூச்சாண்டி காட்டுபவர்கள் எதற்காக எம்மிடம் முக்கியத்துவம் பெறுகினறார்கள் என்று நாம் சிந்திக்கவேண்டும். நான் நினைக்கிறேன் நீண்டநாட்களாக இந்த சான்றிதழ்-மவுசு-சுhத்தல் என்ற நடவடிக்கை சமூகத்தில் இருப்பதால் படிபத்தவர் என்றால் ஆரென்று கூட வரையறுக்காது படித்தவரை உள்வாங்கவேண்டும் என்ற ஒரு இயற்கையான சிந்தனை எம்முள் பலரிற்கு வந்து விடுகிறது. இது அப்பிரச்சாரத்தின் வெற்றி.

எமது போராட்டத்திற்கு இன்றியமையாத அறிவாழிகள் புலியை வெறுத்து வெளியே நிற்கின்றார்கள் அவர்களை உள்ளிளுக்கின்றோம் என்றால், இந்த வாசகத்தின் அடிப்படை உளவியல் என்னவாக இருக்கின்றது? இத்தகைய வித்தைகள் தெரிந்த விற்பன்னர்கள் தற்போது உள்ளில்லை என்பது தானே? அதாவது "எமது போராட்டம் இன்று தோற்றது என்றால் அதற்கான காரணம் உலக ஒழுங்கு என்ற கடலில் எமது போராட்டத்தை நழுவல் வழுவல் தெரிந்து நகர்த்தக் கூடிய அறிவாழிகள் இல்லாது போனது தான்" என்று கூறும் கருத்துக்கும் மேற்படி உளவியலிற்கும் அதிகம் வித்தியாசமில்லை என்றே எனக்குப் படுகின்றது. எவர் நம்புகிறார்களோ இல்லையோ ஒரு பொல்லை காற்றில் ஆட்டி தமிழீழம் படைக்கும் அறிவுசீவி என்று யாரும் இல்லை. எல்லா வித்தையும் தெரிந்தும் புலி பிடிக்காமல் வெளியே நிற்கும் கல்விமான் என்று யாரும் இல்லை. போராட்டத்தின் தொடக்கம், நகர்வு, இன்றைய நிலைக்கு, அறிவாழிகளின் பிரசங்கங்கள் காணாமல் போனது அல்ல காரணம். காரணங்கள் ஏராளம் தெரிகின்றன தெரியாதனவும் இருக்கின்றன. காரணங்கள் ஆராயப்பட்டு புதிய உத்திகள் அறியப்படுதல் என்ற தொழிற்பாட்டில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. மேலும், எவருமே எதிரி என்றில்லாமல் அனைவரும் ஒற்றுமையாய் இருந்திருந்தால் நன்மை அதிகம் என்பது மறுப்பதற்கில்லை(ஆனால் இது ஒரு ideal-world-scenario ஆக மட்டுமே அமையமுடியும் என்பது வேறு). ஒவ்வொரு மனிதனிற்கும் திறமைகள் உள்ளன என்ற அடிப்படையில் அனைத்துத் திறமைகளும் ஒற்றுமையாய் ஒன்றிணைதல் நன்மையே. பபிரிக்கவேண்டும், ஒதுக்கி வைக்கவேண்டும், கல்வியை வெறுக்கவேண்டும் என்பதல்ல எனது வாதம். முhறாக இன்றைய நிலைக்கு, வெளியில் எல்லாம் தெரிஞ்சும் புலிபிடிக்காததால் மௌனமாய் நிற்கும் அறிவாழிகளில் ஆலோசனை இல்லாமல் போனது தான் காரணம் என்ற அடாவடித்தனம் பற்றி மட்டுமே நான் பேசுகின்றேன்.

கார்வட் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் அரசியல் விஞ்ஞானம் கற்பித்து, பின்னர் தற்போது கனடாவின் எதிர்கட்சித் தலைவராய் இருக்கும் மைக்கல் இக்னாச்சியவ் என்பவர் நீலன் திருச் செல்வத்தின் நெருங்கிய நண்பர். நீலன் கொல்லப்பட்டதும் கனடாவின் குளோபன் மெயில் பத்திரிகையில் நீண்ட பத்தி எழுதியவர். நீலனின் இறப்பை கணம் கணமாய் ஆராய்ந்து புலி வெறுப்பை தக்கவைப்பவர். இவர் அரசியலில நுழைந்து இரு ஆண்டுகள் பாராளுமன்றம் சென்று மக்கள் தொடர்பில் வேலை செய்தபின்னர் நியூயோர்கர் என்ற பத்திரிகைக்கு (ஒரு வேளை நியூயோர்க் ரைம்ஸிற்கோ தெரியவில்லை, ஞாபகத்தில் இருந்து எழுதுகின்றேன்) ஒரு செவ்வி வழங்கினார். அச்செவ்வியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று பின்வருமாறு அமைந்தது: “சில ஆண்டுகள் பாராளுமன்று சென்று வேலைபார்த்த அனுபவம் பெற்று விட்ட இந்நிலையில், கார்வேட் பல்கலைக்கழத்தின் புத்திக்கூர்மை மிக்க மூளைகளிற்கு ஆண்டுதோறும் நான் படிப்பித்த பல விடயங்களை இப்போது படிப்பித்தால் பல மாற்றங்களோடு தான் படிப்பிக்க வேண்டும்” என்பதே அக்கருத்து.

நான் கூறவருவது என்னவெனில், சான்றிதழ் ஒன்றைப் பெற்று விட்டதன் காரணத்தினால் மட்டும் ஒருவர் முற்றும் அறிந்த அறிவாழி ஆகிவிடமுடியாது. அறிவாழி என்பவள் தன்னைப் பிறர் அறிவாழியாக நினைக்கவேண்டும் என்று உழைக்கத்தேவையில்லை. அவளது செயற்பாடுகள் தாமாக உரிய இடம் பெறும். என்னைப் பொறுத்தவரை, ஒருவர் தனக்குத் தமிழிரின் விடிவிற்கான சூட்சுமம் தெரியும் ஆனால் தமிழ் மக்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே நான் உள் நுழைந்து அவற்றைத் தெரிவிப்பேன் என்று கூறின், மகிழ்ச்சியிலும் பார்க்க வேடிக்கை உணர்வு தான் அதிகமாகும். கல்விமான்களும், மற்றயை exclusive clubs போன்று சில வட்டங்களை சுயநலம் சார்ந்து வரையும் நிலை நாம் மறக்காது இருக்கவேண்டும்.

உண்மையில் இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு எண்ணம் தோன்றுகிறது. மேற்படி exclusive club ஒன்றில் இணைவதற்குத் தேவையான சான்றிதழ்கள் என்னிடமும் எங்கோ ஒரு மூலையில் கிடப்பதனால் பேசாமல் சான்றிதழை மதியுங்கோ எண்டு சொல்லிப்போட்டு சாமர வீசலை எதிர்பார்ப்பது இலகுவாய் இருக்கும் :lol:

கலைஞன்,

இந்தக் கட்டுரை என்பது ஒரு விமர்சனம் தொடர்பிலான எதிர்வினை. இவ்வெதிர்வினைக்கான அந்த விமர்சனம் என்ன என்பதும் தெளிவாகக் கட்டுரையிலும் பின்னூட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களது வாதங்கள், குறிப்பிட்ட விமர்சனம் மற்றும் பின்னூட்டங்கள் தொடர்பில் இன்றி, எனது எதிர்வினைக்குக் காரணமான விமர்சனம் எமது சமூகத்த்தில் இருந்தது என்று நிரூபியுங்கள், மூலத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம் என்ற வகையில் அமைகிறதன்ன. இவ்வாறான ஒரு விமர்சனம் எமது சமூகத்தில் இருந்திருக்கும் என்பது உங்களால் நம்பமுடியாத வகையில் இருப்பதாகவே உங்களது கேள்வி புலப்படுத்துகின்றது—அதனால் தான் ஆதாரம் கேட்பதாக விளங்கிக் கொள்கின்றேன். இப்பிடியொரு விமர்சனம் இருந்தது என்று நான் கூறுகையில் உங்களிற்கு ஏற்படும் ஆழ்ந்த அதிர்ச்சியும் இவ்விமர்சனத்தை நிறுவுமாறு திரும்பத்திரும்ப நீங்கள் கேட்பதும், இவ்விமர்சனம் தொடர்பில் உங்களிற்கு உடன்பாடில்லை என்பதையே எனக்கு உணர்த்துகின்றன. அதாவது இவ்வாறான ஒரு விமர்சனம் எத்தனை மடைத்தனமானது என்பதை உள்ளங்கைநெல்லிக்கனியாக உங்களிற்கு இருப்பதானல் இப்படியும் ஒரு விமர்சனம் இருந்திருக்கலாம் என்பதை உங்களால் நம்பமுடியவில்லை. இது மகிழ்ச்சி அளிக்கின்றது.

ஆனால் துரதிஸ்ரவசமாக இவ்வாறான ஒரு விமர்சனம் எமது சமூகத்தில் நான் கண்ணுற்றது என்றவகையில் எனது எதிர்வினை அதற்குத் தேவைப்பட்டது.

Edited by Innumoruvan

சபாஷ்..........!!!!!!!!!!!!!!!!!!!! இன்னுமொருவன்.

இன்னுமொருவன், ஆக மொத்தத்தில் நீங்கள் சொல்ல வருவது என்ன என்றால்:

1. புலிகளுக்குள் ஓட்டைகள் இருக்கின்றன.

2. ஆனால் அந்த ஓட்டைகள் பற்றி ஏபீக்கள் வாய்திறக்கத் தேவையில்லை.

3. ஏன் என்றால் ஏபீக்களுக்குள்ளும் ஓட்டைகள் இருக்கின்றன.

---------------------------------------

நல்லது, நன்றி! வணக்கம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரைகுறைகளைத்தான் எங்கட ஆக்கள் ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்று சொல்லுறவை இந்த அரைகுறைகளால எங்கள மாதிரி உண்மையான கல்விமான்களுக்கும் கெட்ட பெயர் :lol:

எனது தற்போதைய கவலையும் இதுதான். எங்களை போன்ற புத்திசாலிகளை உலகம் கணக்கெடுக்காதுவிட்டுவிடுமோ என்ற பயம்தான் இருக்கின்றது. எமக்குரிய விருதுகளை தராது போனால் கூட பரவாயில்லை. அது சும்மா அலுமாரிக்குள் இருப்பததூனே.... ஆனால் நாலு ரீவீயில கூப்பிட்டு தற்போதைய நாட்டுபிரச்சனை பற்றி ஆலோசனை கேட்டால் சும்மா ஒரு பில்டப்பாக என்றாலும் இருக்கும்.

இன்னுமொருவன், ஆக மொத்தத்தில் நீங்கள் சொல்ல வருவது என்ன என்றால்:

1. புலிகளுக்குள் ஓட்டைகள் இருக்கின்றன.

2. ஆனால் அந்த ஓட்டைகள் பற்றி ஏபீக்கள் வாய்திறக்கத் தேவையில்லை.

3. ஏன் என்றால் ஏபீக்களுக்குள்ளும் ஓட்டைகள் இருக்கின்றன.

---------------------------------------

நல்லது, நன்றி! வணக்கம்! :rolleyes:

அப்போ ஆகாயத்தில் இருக்கும் ஓசோன் ஒட்டைகளை அடைப்பது பற்றி....... ஆடைகளை வடிவமைப்பவனுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றா நீங்கள் சொல்கின்றீர்கள்?

நேரத்தை வீணடிப்பது தவிர வேறேதும் இல்லை என்று எடுத்த எடுப்பில் சொல்லிவிட முடியாது.... ஆனால் ஏதாவது ஆக்கபூர்வமான சிந்தனை இருப்பின் உரியவர்ருடன் நேரடியாக தொடர்பு கொண்டு அந்த அறிவுரைகளை வழங்கலாம் என்பது எனது சிறிய ஆலோசனை.

  • தொடங்கியவர்

இன்னுமொருவன், ஆக மொத்தத்தில் நீங்கள் சொல்ல வருவது என்ன என்றால்:

1. புலிகளுக்குள் ஓட்டைகள் இருக்கின்றன.

2. ஆனால் அந்த ஓட்டைகள் பற்றி ஏபீக்கள் வாய்திறக்கத் தேவையில்லை.

3. ஏன் என்றால் ஏபீக்களுக்குள்ளும் ஓட்டைகள் இருக்கின்றன.

---------------------------------------

கலைஞன்,

நான் இத்தலைப்பில் எழுதியனவற்றின் அடிப்படையில் இந்தப் பொழிப்புரையை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் நீங்கள் கூறும் பொழிப்புரை என்னுடையது அல்ல.

அப்படியானால் இது சரியாக இருக்கின்றதா என்று சொல்லுங்கள் இன்னுமொருவன்.

1. புலிகளுக்குள் ஓட்டைகள் இல்லை.

2. ஏபீக்களுக்குள் ஓட்டைகள் இருக்கின்றன.

3. புலிகளைப்பற்றி ஏபீக்கள் வாய்திறக்கத் தேவையில்லை.

---------------------------------------

இது பொழிப்புரை அல்ல, உங்கள் கருத்துக்களை உள்வாங்கியதன் சாரம்சம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இது சரியாக இருக்கின்றதா என்று சொல்லுங்கள் இன்னுமொருவன்.

1. புலிகளுக்குள் ஓட்டைகள் இல்லை.

2. ஏபீக்களுக்குள் ஓட்டைகள் இருக்கின்றன.

3. புலிகளைப்பற்றி ஏபீக்கள் வாய்திறக்கத் தேவையில்லை.

---------------------------------------

இது பொழிப்புரை அல்ல, உங்கள் கருத்துக்களை உள்வாங்கியதன் சாரம்சம். :lol:

இந்த கட்டுரையில் வரும் ஏபீக்கள் வாயை எங்குமே எப்போதுமே திறக்காது இருப்பதுதான் நல்லது. ஆனால் ஏதும் செய்து அவர்களின் வாயை மூடமுடியாது ஏனெனில் அவர்கள் ஏபீக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் இது சரியாக இருக்கின்றதா என்று சொல்லுங்கள் இன்னுமொருவன்.

1. புலிகளுக்குள் ஓட்டைகள் இல்லை.

2. ஏபீக்களுக்குள் ஓட்டைகள் இருக்கின்றன.

3. புலிகளைப்பற்றி ஏபீக்கள் வாய்திறக்கத் தேவையில்லை.

---------------------------------------

இது பொழிப்புரை அல்ல, உங்கள் கருத்துக்களை உள்வாங்கியதன் சாரம்சம். :lol:

ஏபி என்கிறிர்கள் ஓட்டை என்கிறிர்கள் ....நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டிஎன்கிறிர்க

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இன்னுமொருவன் உங்கள் கருத்துகளுக்கு, துறை சார் கல்வி எமது மக்களின் தேவைகளை கருத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை எமது பிரதேசத்தில் உள்ள வளங்களையோ அதனை எவ்வாறு எமது மக்களின் வளர்ச்சிக்குப்பயன்படுத்துவ

ஏதோ ஒரு கருத்து சொல்ல வருவது தெரிகிறது ..அதனை தெளிவாகவே வெளிப்படையாகவே சொல்லிவிடுங்கள் ....நாமும் உங்கள் பின்னால் அணி திரள்வோம் ....

இதாவது புரிகின்றதா பாருங்கள்:

இந்த கட்டுரை இன்னுமொருவன் எனப்படுகின்ற புலிகளின் ஓட்டையை மறைக்கின்ற ஓர் ஏபீயினால் எழுதப்பட்டு இருக்கின்றது. எமது கருத்து ஓட்டைகளை மறைப்பதைவிடுத்து அதை அடைப்பதற்கான வழியை பாருங்கள் என்பது. ஓட்டைகள் எவை என்று இனம்காணப்பட்டாலே அவை அடைக்கப்படமுடியும். ஆனால்... பலர் ஓட்டையை அடைப்பதைவிட மறைப்பதையே விரும்புகின்றார்கள். அதற்கு இந்தக்கட்டுரையும், இதற்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள கருத்துக்களும் சிறந்த உதாரணங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மக்களுக்காக பொருண்மிய மேம்பாட்டுகழகம் ஒன்றை ஏற்படுத்தி பல வழிகளில் உதவி புரிந்தார்கள் அப்போதும் கல்விமான்கள் கூறினார்கள் மரத்தில் ஏறுகிற இயந்திரத்தை கண்டுபிடிக்கிறதா என்கட வேலை என்று கூறி விட்டு எமது மக்களிற்கு "பிக் பாங்க்" தியரியை விளக்கி தமது கல்வியின் பெறுமதியை நிலை நிறுத்தினர்.

:lol::rolleyes::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.