Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளர் தயாபரராஜா கொழும்பில் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைதாகி படுகொலை

Featured Replies

அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே . :icon_mrgreen:

வன்னி டேக்கில் நன்றாகத்தான் படித்திருக்கின்றார் .

 

  • கருத்துக்கள உறவுகள்

Vanni Tech Director Thayaparan was killed by sinhala Nazis Thursday, 24 September 2009   

 
Another Tamil Interlectual was murdered by sinhala nazis. sinhala nazis have been targetting tamil intelectuals and killing them one by one. 

feared extra-judicially executed in Colombo 

[TamilNet, Thursday, 24 September 2009, 15:33 GMT] 

Kathiravel Thayapararaja, a 28-year old Tamil Electrical Engineer, is feared to have been extra-judically executed bySri Lanka intelligent services, after being forcefully abducted sometime second week of September, informed sources in Colombo said. Thayapararaja?s wife, Uthayakala, and the two children of her diseased sister who were under Uthayakala?s care, have now been taken under the protection and care of a Church Organization in Colombo, after being left helpless with the disappearance of her husband, unconfirmed reports said. 

A human rights organization has informed Thayapararaja`s disappearance to US assistant secretary of state for South Asian affairs, Ambassador Robert Blake, who has responded that he will check the information [thorugh the US embassy in Sri Lanka]. 

Thayapararaja graduated from Peradeniya University in 2000, and joined Vanni Institute of Technology (VanniTech), in Kilinochchi as the Director two years after the Institute was formed in 2003. The Institute provided Information Technology education to NorthEast youths, and was developing as a sought after institution of study in the North. 

VanniTech was funded by Tamil expatriate technologists from Silicon Valley, and was registered as a US federal tax exempt charitable organization in the USA and an approved NGO in Sri Lanka.

 

  • கருத்துக்கள உறவுகள்

2011 ல் இவர்களைப் பற்றி எழுதிய கட்டுரை  ஒன்று

 

http://sathirir.blogspot.fr/2011/12/blog-post_09.html

  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ்.... நீங்க, மூஞ்சூறு மாதிரி... எல்லா இடமும், மணந்து பிடிக்கிறீங்க.
அது, எப்பிடி உங்களாலை... முடியுது? :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

"காட்டிக் கொடுத்து விட்டு," தற் பெருமை பேசுபவர்களும் உள்ளார்கள் என்பதை... அவதானிக்க வேண்டும்.

இப்ப முடிவு என்ன? அவர் எஸ்கேப்பா.....தாங்கமுடியல்ல....

 

இதுக்கு மாற்றுகுழுக்கள் பரவாயில்லை போல........ புலிகளுக்கு ஆப்பு வைத்தது அவர்களோடு இருந்தவர்கள் என்று சொன்ன போது நம்பவில்லை....இப்போ கொடி பிடிக்கும் குமாரனுகளையும் கவனமாக பார்க்கோணும்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவு என்ன? அவர் எஸ்கேப்பா.....தாங்கமுடியல்ல....

இதுக்கு மாற்றுகுழுக்கள் பரவாயில்லை போல........ புலிகளுக்கு ஆப்பு வைத்தது அவர்களோடு இருந்தவர்கள் என்று சொன்ன போது நம்பவில்லை....இப்போ கொடி பிடிக்கும் குமாரனுகளையும் கவனமாக பார்க்கோணும்...

இதே திரியில் இரண்டு வருசத்து முதல் வந்து இதே ஆக்கள் எழுதினப் படித்துப் பார்த்தா ஒரே சிரிப்பா கிடக்கு.

இங்க வந்து நீட்டி முளக்கிற பல புல வியாபாரிகளும் இன்னொரு தயாபரராசாவே - சந்தேகமே இல்லை

2011 ல் இவர்களைப் பற்றி எழுதிய கட்டுரை  ஒன்று

 

http://sathirir.blogspot.fr/2011/12/blog-post_09.html

 

பாம்பில் கால் பாம்பறியும். அப்பாவி மக்கள் அறிவாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பில் கால் பாம்பறியும். அப்பாவி மக்கள் அறிவாரோ?

 

நிச்சயமாக பாம்புக்குக் கால் இருந்தால் பாம்புக்குத் தெரியும், அது இருக்க, உண்மையை ஏற்றுக்கொள்ளுவதைவிட சாத்திரி அண்ணாவை குறிவைக்கிறீர்கள்.

 

இது திசைமாறிய பறவை!

 

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேல் தயாபரராஜா கருணா , கே.பி ரகம் என்கிறீர்கள்.

கதிர்வேல் தயாபரராஜா கருணா , கே.பி ரகம் என்கிறீர்கள்.

உங்கட வசதிக்கு ஏற்ப எந்த ரகத்திலும் போடலாம் .

 

முப்பது வருடமாக உதுதானே வேலை . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வசதிக்கு ஏற்ப எந்த ரகத்திலும் போடலாம் .

 

முப்பது வருடமாக உதுதானே வேலை . :icon_mrgreen:

 

 

உது தான் வேலை என்றால்? சொந்த இனத்துக்கு துரோகம் செய்வோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தானே.இதில் எங்களுக்கு என்ன வசதி உண்டு.    இந்த வசதியால் எனக்கு அல்லது எங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன? பணம், பதவி, புகழ் ???
 
மேற்படி வன்னி ரெக்கில் ஒருவர் செய்த குழறுபடிகள், சுத்துமாத்துக்கள் ஒரு நிறுவனத்தை எப்படி அவப்பெயரை தேடி தந்தது என பார்க்கிறீர்கள்.இது இயக்கங்களுக்கும் பொருந்தும். வன்னி ரெக்கின் ஆரம்பகர்த்தா எனது நண்பர். அதிதீவிர புளட் ஆதரவாளர் என்பது உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அது தொடங்கப்பட்ட போது வன்னி சென்று எல்லா வேலைகளையும் அவரே  நின்று இயக்கி பொறுப்புக்களை கொடுத்து விட்டு வந்ததோடு சில காலம் அங்கு தங்கி கணினி வகுப்புக்களும் எடுத்ததோடு தனது வேலையை ஒரு வருடம் விட்டு விட்டு சென்றவர்.
  • கருத்துக்கள உறவுகள்

இதே திரியில் இரண்டு வருசத்து முதல் வந்து இதே ஆக்கள் எழுதினப் படித்துப் பார்த்தா ஒரே சிரிப்பா கிடக்கு.

இங்க வந்து நீட்டி முளக்கிற பல புல வியாபாரிகளும் இன்னொரு தயாபரராசாவே - சந்தேகமே இல்லை

 

 ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் அனுதாபம் தெரிவித்து இருந்தார்கள். இதில் பிழை இருப்பதாக தெரியவில்லை. பல குடுகுடுப்பைகள் யாழில் காலடி எடுத்து வைத்துள்ளதால்  எந்த செய்தியை நம்புவது என்பதில் குழப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி இவங்கள பற்றி அந்த நேரம் எழுதும் எல்லோரும் அவரைத் துரோகி என்டிச்சினம்[இப்பவும் அதைத் தான் சொல்லினம்]...பகுடி என்ன என்டால் அந்த நேரம் தயாபாரன் செத்து விட்டார் என்று சொன்னாக்கள் இப்போது ஓடி வந்து அவர் இந்தியாவுக்கு தப்பிப் போய் விட்டார் என்று சொல்கிறார்கள்.எல்லாம் காலமடா சாமி

  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ்.... நீங்க, மூஞ்சூறு மாதிரி... எல்லா இடமும், மணந்து பிடிக்கிறீங்க.

அது, எப்பிடி உங்களாலை... முடியுது? :icon_idea:  

தமிழ்சிறி அண்ணா மூஞ்சூறு இந்த கள்ளக்கூட்டத்தைப் பற்றி முதல் எல்லா செய்தி ஊடகங்களில் வந்ததையும் தான் தொகுத்து ஒரு செய்தி வெளியிட்டது 2011இல். பிறகு 2012இல் கள்ளி உதயகலாவை கண்ணகியென்று கதைவிட்டதுக்கு இது என்னத்தை சொல்லப் போவுதண்ணா ?

இதுக்கும் ஏதாவது புழுக ஏதும் கொண்டுவரும். சாஸ்திரியின் புழுகுகளை இனிமேல் தமிழர்கள் நம்பப்போகிறார்களா ?

 

இந்த பிழைப்பெல்லாம் தன்னை ஊடகவியலாளனென சொல்வது ஊடகத்திற்கு அவமானம். வாழ்க அவமானம்.

http://sathirir.blogspot.de/2012/05/2.html

 
கிணறு வெட்ட கிழம்பிய பூதம் 2

2:28 PM Posted by Siva Sri 5 Comments

sk.jpg
 
 
ஒரு பேப்பரிற்காக சாத்திரி

2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது.

அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு  அங்கவீனமானவர்களும்  முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி  அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு  தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை  ஏற்படுத்தி   அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து  இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர்  மொட்டை பாஸ் என செல்லமக அழைக்கப்படும்  லண்டனில் வசிப்பவரான  ஸ்கந்த தேவாவே என்டபதை நான் ஒரு பேப்பர் மூலமாக  அம்பலப்படுத்தியிருந்தேன். அந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னராக அதனுடன் சம்பந்தப் பட்டவர்களான . ரிசி மற்றும்  ஸ்கந்தா ஆகியோடும்  தொடர்பு கெண்டு அவர்களது  கருத்துக்களையும் கேட்டிருந்தேன்.  விபரம் வெளிவந்ததுமே  ரிசி என்பவர்  அவர்  இயக்கிய  தமிழ் செய்தி இணையத்தளத்தினையும் நிறுத்திவிட்டு  தலைமறைவாகி விட்டிருந்தார். ஆனால் ஸ்கந்தாவோ  தனக்கு யாரையும் தெரியாது தனக்கும் இவற்றிற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒற்ரை வரி பதிலில் மறுத்திருந்ததோடு  ரிசி என்பவர்தான் (I.S.O.T.O.)  என்கிற தொரு அமைப்பின் ஊடாக  போரால் பாதிக்கப் பட்ட மாணவர்களிற்கு உதவுவதாக  தன்னிடம் பெரும் தொகை பணத்தினை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும்   எனக்கு மின்னஞ்சல் முலம்  பதில் தந்திருந்தார்.

அங்கவீனமடைந்த முன்னை நாள் போராளிகளை  ஏமாற்றிய விடயத்தில் சம்பந்தப் பட்டதாக  கூறப்பட்ட  உதயகலா மற்றும் தயாபர ராஜ் ஆகியோரோடு அப்பொழுது என்னால் உடனடியாக தொடர்புகளை  ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.அதன் பின்னர்  சிலகாலங்களிற்கு பின்னர்  உதயகலா மற்றும்  தயாபராஜ் ஆகிரோடு  தொடர்பு கொள்ளக்கூடிய சந்தர்பம் எனக்கு கிடைத்த பொழுது  செய்திகளில் வெளியானபோல் தங்களிற்கும் நடந்த மோசடிகளிற்கும் எவ்வித சம்பந்தமும்  இல்லை அனைத்திற்கும்  ஸ்கந்தாவே பொறுப்பு என  அதற்குரிய ஆதாரங்களுடன்  தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னரும் ஸ்கந்தா அவர்களிற்கு உதயகலா எழுதியிருந்த கடிதத்தினையும் இணைத்து  அவரது பக்க கருத்துக்களை கேட்டிருந்தேன். ஆனால் அவர் நேரடியாக எவ்வித பதிலையும் தராமல் இலங்கையில் வாழும் ராதிகா என்பரிற்கு  அவற்றை அனுப்பி ராதிகா மூலமாக சம்பந்தமேயில்லாத பதில் ஒன்றினை  அனுப்பியிருந்தார்.  அவற்றை பின்னர்  பார்க்கலாம்.இனி நடந்து முடிந்த மோசடி  பற்றியும் அதில் ஸ்கந்தாவின் பங்கு  என்ன என்பதனையும் பார்ப்போம்.

ஸ்கந்ததேவாவே , ரிஷி என்ற ரிசாந்தன் அல்லது ரிஷி ஆகிய இருவரும்  gatherpage என்கிற அமைப்பினை தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து நடாத்தி வந்தனர். இந்த  gatherpage இல் 20 வரையிலான இளம் பெண்களை வைத்து பல்கலைக்கழகமாணவர்கள், கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி நடாத்தி வந்தனர். சமநேரத்தில்  I S O T O என்ற அமைப்பினை ஸ்கந்ததேவாவின் மகளின் பெயரிலும், ரிஷியின் பெயரிலும் பிரித்தானியாவில் பதிவு செய்து நடாத்தத் தொடங்கினார்கள்.

இதேநேரம் நம்பிக்கையொளி என்றொரு அமைப்பினை லண்டனில் ஸ்தந்ததேவாவின் மனைவி கமலாவின் பெயரில் (வியாபார நிறுவனம் என்ற பதிவோடு) பதிந்து கொண்டார். நம்பிக்கையொளி மூலம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியென்ற பெயரில் ஊடகங்கள் மூலமும், மக்களிடமும் பண வசூலிப்பு ஸ்கந்ததேவாவும் அவரது குழுவினரும் செய்து வந்தனர். இதில் சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போக மீதப்பெரும்பகுதிக்கு கணக்கில்லாது போனது. 

இச்செயற்பாட்டின் மூலம் நிகழ்ந்த ஊழல்கள் மக்கள் மத்தியில் தெரியவர இவ்வருடம் பெப்ரவரிமாதம் வாழைக்குட்டி கொடுத்து தாயக மக்களை வாழ வைக்கிறோம் என்ற பெயரில் நம்பிக்கையொளியை தொண்டு நிறுவனமாக பதிவு செய்து மீண்டும் மக்களை ஏமாற்றிப் பண வசூல் பண்ண புறப்பட்டுவிட்டது ஸ்கந்ததேவா கூட்டணி. ஏமாறுபவர்கள் உள்ளவரை ஸ்கந்தா போன்றவர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். அது போகட்டும். உதயகலாமீது எப்படி கள்ளப்பட்டம் விபச்சாரப்பட்டம் சூட்டப்பட்டது என்பதனைப் பார்ப்போம்.

உதயகலா துடிப்பும் துணிச்சலும் மிக்க  ஒரு பெண். இந்தப்பெண்ணை ஸ்கந்தா கூட்டணியின் முகவர்கள் அணுகுகிறார்கள். சமூக முன்னேற்றம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தமது நிறுவனங்கள் மூலம் செய்து வருவதாகவும் தமது நிறுவனம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தமது நிறுவனத்தில் பணியாளாக உதயகலாவை இணையுமாறும் மாதாந்தம் சம்பளம் தருவோம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை ஊர்கள் தோறும் சென்று எடுத்துத் தருமாறும் வேண்டுகிறார்கள். தரப்படுகிற விபரங்களுக்கு, உரியவர்களுக்கு நம்பிக்கையொளி, i s o t o  இரண்டும் உதவிகளைத் தருமென்றும் கேட்டுள்ளனர். மக்களுக்கான உதவிகள் மூலம் தனக்கும் ஒரு வேலை வாய்ப்புக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் உதயகலா ஸ்கந்தாவின் பணிப்பில் பணிக்கு அமர்த்தப்படுகிறார். இவர்கள் சொல்கிற இடங்களுக்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உதயகலாவும் சேகரித்து அனுப்பத் தொடங்கினார். 

இத்தோடு நின்றுவிடாமல் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு போரால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியாகச் செய்வதாகவும் ஸ்கந்தா கூறியுள்ளார். வெளிநாடு போக விரும்புகிற போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் 2 முதல் 3 லட்சம் வரையான பணத்தையும் சேகரிக்குமாறும் பணித்தார். உதயகலா சுவிசிலிருந்து வந்திருப்பதாக மக்களிடம் அறிமுகமாகும்படியும் பணித்தார்கள் ஸ்கந்தாவும் அவர் பின் நின்ற கும்பலும்.

ஸ்கந்தா மீதிருந்த நம்பிக்கையில் உதயகலாவும் செயற்படத் தொடங்கினார். அத்தோடு வெளிநாடுகளிலிருந்து பலரை உதயகலாவுடன் ஸ்கந்தா தொலைபேசத் தொடர்புபடுத்திவிட்டார். தமது பணி மக்களுக்கானது அதில் உதயகலாவின் பங்கு தங்களுக்கு வேண்டும் என்பதனையும் வெளிநாட்டு முகவர்கள் கூறினார்கள். வெளிநாட்டில் இருந்து மக்களுக்காக இயங்குவோரென பலர் ஸ்கந்தாவின் ஏற்பாட்டில் உதயகலாவுடன் பேசியிருக்கிறார்கள். இப்போது முழுமையான நம்பிக்கை ஸ்கந்தா கூட்டணிமீது உதயகலாவுக்கு வந்துவிட்டது.

ஸ்கந்தாவினதும் அவரது கூட்டணியினரின் சொற்படி பல ஊனமுற்றவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் சேகரித்து அவர்கள் சொன்னபடி கொழும்பில் இட ஒழுங்குகள் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளையும் ஸ்கந்தாவின் ஆலோசனைப்படி உதயகலா பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்தார். வடக்கு கிழக்கு இரு பகுதியிலும் ஸ்கந்தா வழங்கிய தரவுகளோடு உதயகலா சென்று வெளிநாட்டுக்கு ஆட்கள் சேர்த்ததோடு ஸ்கந்தாவின் பெயரால் வழங்கப்பட்ட WheelChair, பண உதவிகளும் பல ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. றால் போட்டு சுறாபிடித்த ஸ்கந்தாவின் சூழ்;ச்சியை நம்பிய உதயகலாவும் ஸ்கந்தாவின் சொற்படி இயங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வேளையில் பயவாநசியபந என்கிற அமைப்பில் ரிஷியாலும் ஸ்கந்தாவாலும் இயக்கப்பட்ட அலுவலகத்திலும் அது சார்ந்த இடங்களிலும் பெண்கள் துஸ்பிரயோகம் ஏமாற்று வேலைகள் , ஆட்களைக் கொல்வதற்கான திட்டமிடல்கள் போன்ற வேலைகள் நடைபெறுவதனை பாதிக்கப்பட்ட சில இளம் பெண்கள் மூலம் உதயகலா அறிந்து கொள்கிறார்.  gatherpage  அலுவலகத்தில் நடைபெறுகிற ஊழல்கள் ஸ்கந்தாவுக்கு தெரியாமல் நடப்பதாக நினைத்த உதயகலா இவ்விடயம் பற்றி ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினார். 

ஆயினும் ஸ்கந்தாவால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த உதயகலா gatherpage இல் நடக்கிற துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்படாவிட்டால் அதுபற்றி இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப் போவதாக ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் மிரட்டினார். அத்தோடுgatherpage  இற்கு நேரே சென்று அங்கு பணியாற்றிய கஸ்தூரி , ராதிகா போன்ற பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். 

கஸ்தூரி , ராதிகா இருவரும் உதயகலாவுடன் முரண்பட்டு ஸ்கந்தாவுக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது. விடயம் இப்பெண்களுக்கு இடையில் கைகலப்பு வரை சென்றுவிட உதயகலா பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்போவதாக தொலைபேசியை எடுக்க கஸ்தூரி திடீரென gatherpage அலுவலகத்தில் இருந்த எழுத்துப்பிரதி ஆவணங்கள் யாவற்றையும் தீயிட்டெரித்தார். விடயங்கள் உடனுக்குடன் ஸ்கந்தா கூட்டணிக்கு கஸ்தூரி , ராதிகா மூலம் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

விடயத்தைச சமாளிக்க ஸ்கந்தா உதயகலாவுடன் சமாதானம் பேச முயன்றார். உதயகலா விடாப்பிடியாக இந்த மோசடியை இணையங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் அறிவிக்கப் போவதாகக் கூறினார். விடயத்தின் நிலமையைப் புரிந்து கொண்ட ஸ்கந்தா உதயகலாவை அமைதியாகச் சிலநாள் இருக்கும்படியும் தவறுகளை விசாரித்து முடிவுக்கு வருவோம் எனவும் வேண்டிக் கொண்டார். ஆனால் தொடர்ந்து இந்த மோசடிக்காரர்களுடன் தான் இயங்கமாட்டேன் எனக்கூறிய உதயகலா நம்பிக்கையொளியுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறினார். 

gatherpage இல் நடைபெறுகிற மோசடி வெளியில் உதயகலா மூலம் வெளிவராது இருக்க ஸ்கந்தா தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் அவசர அவசரமாக உதயகலா தயாபரராஜ் மோசடி, விபச்சாரம் என செய்தியைப் பரப்பி மின்னஞ்சல் மூலமும் பரப்புரையை மேற்கொண்டார். வெறுமனே ஸ்கந்தாவின் மோசடியை வெளியில் சொல்லுவேன் என்ற உதயகலா மீது முழுப்பழியும் விழுந்துவிட ஸ்கந்தா கருணாநிதி கணக்கில் ஒரு புனைவையும் அவிழ்த்துவிட்டார். அதுதான் 28ஆயிரம் பிரித்தானியப் பவுண்ஸ்களையும் ரிஷியிடம் கொடுத்து ஏமாந்ததான கதை. உதயகலாவுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிராத ரிஷியை உதயகலாவுடன் தொடர்புபடுத்தி செய்தியை ஆளாளுக்கு ஊடகங்கள் கதையெழுதி வெளியிட்டிருந்தன. 

ஸ்கந்தாவை நம்பி வெளிநாட்டுக்கு போகும் கனவோடு கொழும்பில் தங்கியிருந்தவர்களுக்கு விடயத்தைச் சொல்வதெப்படியெனத் தவித்த உதயகலா வெளிநாடு அனுப்பும் முகவர் ஏமாற்றிவிட்டதாகச் சொன்னதோடு பணத்தைக் கொடுத்தவர்கள் உதயகலாவையே சுற்றத் தொடங்கினார்கள். பெருந்தொகை பணத்தை உதயகலா முன்னின்று பெற்றுக் கொடுத்தமையால் அதற்கான பதிலையும் உதயகலாவே சொல்ல வேண்டியிருந்தது. 

இந்தப்பணப்பிரச்சனை வந்ததும் ஸ்கந்தாவையும் ஸ்கந்தாவின் முகவரான மட்டக்களப்பின் முகவருக்கும் தொலைபேசியெடுத்து தான் பொறுப்பு நின்று பெற்றுத் தந்த பணத்தை உரியவர்களுக்குத் திருப்பிக் கொடுக்குமாறு வேண்டினார். ஸ்கந்தா எதற்கும் தான் பொறுப்பில்லையெனத் தப்பிக்க பல பொய்களைச் சொன்னார். இறுதியில் உதயகலா மோசடி விபச்சாரம் என்ற செய்தியை தான் இணையங்களுக்கு கொடுக்கவில்லையென்று சத்தியம் செய்தார். gatherpage இல் பணியாற்றிய பெண்பிள்ளைகளில் சிலரது பெயரைச் சொல்லி அவர்களே செய்தியை வெளியில் போட்டதாகவும் சொன்னார்.

செய்தி வந்த அவமானத்தால் தயாபரராஜ்ஜின் குடும்பம் அவரை வெறுத்து ஒதுக்கிவிட்டது. அத்தோடு சகோதரனுடன் இருந்த உதயகலாவின் தாயாரை உதயகலாவின் சகோதரன் வீட்டில் இருந்து வெளியேறச் சொல்லிவிட்டார். அந்தத்தாய் இன்று வரையும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தயாபரராஜ் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். இதேபோன்ற நிலமையில் உதயகலாவும் மன அழுத்த நோய்க்கு ஆளாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவமானத்துடன் வாழ முடியாத துயரத்தில் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் முடிவில் உதயகலா தயாபரராஜ் இருந்த நேரம் கடவுள் காட்டிய வழிபோல அவர்கள் பட்ட துன்பங்கள் யாவும் வெளியுலகிற்கு கொண்டுவரும் வகையிலான சந்தர்ப்பம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது.

 
gathepage.jpg

தொடரும்.....

அடுத்த தொடரும் அங்கங்களில்.....

1) தயாபரராஜ் உதயகலா மோசடியானவர்களா புலிகள் தண்டித்தார்களா ? 

2) உதயகலாவுடன் ரிஷி தொடர்புபடுத்தப்பட்டது எப்படி ?

3) தயாபரராஜ் எப்படிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது ?

4) ஸ்கந்தா தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பதாக கூறும் குழலி (றஜிதன் ஜோதி) யார் ?

5) குழலியின் அண்ணனின் மகனான ஜோய்க்கும் ரிசிக்கும் என்ன சம்மந்தம் ? ஜோயிடம் ரிஷியின் முகவரான நிதர்சன் என்பவர் பெற்ற பணத்துக்கு என்ன நடந்தது ? 

6) இந்த நாடகத்தில் ஸ்கந்தா தயார்படுத்தியயவர்கள்  யார் ?

 பிற்குறிப்பு :-

தொடர்ந்த மர்மங்களுக்கான பதில் இனிமேல் தொடரும்......மேற்படி மோசடிகள் தொடர்பான சகல புகைப்பட ஆதாரங்கள் ஒலிப்பதிவுகள் யாவும் எஎன்னிடம் உள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடக் காத்திருக்கிறோம்.

news2.jpg

1001-1.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கந்தா அண்ணா மீது பொய்யாக எழுதிய சாஸ்திரிக்கு ஸ்கந்தா அண்ணா தனது பதிலையும் எழுத வேண்டும்.

 

ஸ்கந்தா அண்ணா மக்களுக்கு நிறைய உதவி செய்யும் ஒருவர். இப்போதும் தொடர்ந்து தனது உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் நல்ல மனிதர். அப்படியான ஒருவரை கோமாளி சாத்திரி அவமானப்படுத்தியதற்கு இனியென்றாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
கேள்விச்செவியன் சாஸ்திரி இனிமேல் ஊரைக்கெடுக்காமல் இருந்தால் ஸ்கந்தா அண்ணா  மக்களுக்கு நற்பணிகளை செய்ய முடியும்.

இதே திரியில் இரண்டு வருசத்து முதல் வந்து இதே ஆக்கள் எழுதினப் படித்துப் பார்த்தா ஒரே சிரிப்பா கிடக்கு.

 

 

old-spice-mind-blown-o_zps3e4aa03d.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் தங்களைத் தாங்களே ஊடக அவியலாளர்கள் என்போரின்.. கெட்டித்தனங்களே அன்றி வேறில்லை. இதில சில பேர் அவைக்கு.. வக்காளத்து வேற. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

http://sathirir.blogspot.de/2012/07/blog-post.html

கிணறு தோண்ட கிழம்பிய பூதம் இறுதிப்பாகம்.

ஒரு பேப்பர் சாத்திரி

இதுவரை நான்கு தொடர்களில் ஸ்கந்தா மற்றும் ரிசி என்பவர்களது கூட்டணி எப்படி புலம்பெயர் மக்களையும் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களையும் திட்டமிட்டு எப்படி மோசடி செய்து பணம் சுருட்டினார்கள் என்பதோடு பின்னர் அவர்கள் இருவருக்குமிடையில் யாரையார் ஏமாற்றுவது என்று ஏற்பட்ட போட்டியில் ஸகந்தாவே வெற்றி பெற்றார் என்பதனையும் பார்திருந்தோம். இன்றைய நிலையில் ரிசி இங்கிலாந்தில் தலைமறையு வாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆனால் ஸ்கந்தா இன்னமும் பந்தாவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர்கள் இருவராலும் தாயகத்தில் இவர்களது மோசடிகளிற்கு பாவிக்கப்பட்டவர்களும் இவர்களால் கைவிடப்பட்டு நிற்கின்றார்கள். அவர்களை விடுவோம் ஏனெனில் அவர்களும் இவர்களது ஆசை வார்த்தைகளிற்கு மயங்கி இவர்களின் மோசடிக்கு துணை போனவர்கள்தான் ஆனால் இவர்களால் பாதிக்கபட்டவர்கள் யுதத்தில் மோசமாக பாதிக்கபட்டும் உடல் அவயவங்களை இழந்த மக்களும் முன்னை நாள் போராளிகளுமே. அவர்கள் இனி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் அல்லது செய்ய முடியும் என்று எதுவுமே தெரியாமல் விதி விட்ட வழி என்று வாழ்நாளை போக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரம் இந்த மோசடிக்கு முக்கியமாக பயன்படுத்தப் பட்ட உதயகலா மற்றும் கஸ்தூரி ஆகியோர் தங்கள் கைப்பட எனக்கு எழுதியிருந்த கடிதத்தின் விபரங்களை சுருக்கமாக இங்கு தந்து இத்தொடரை முடிவிற்கு கொண்டுவருகிறேன்.. முதலில் உதயகலா எழுதிய கடிதத்தின் சுருக்கம்..

வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து முகாமிலிருந் விடுதலையாகி வெளியே வந்து குடும்பத்துடன் இணைந்த பின்னர் ஒரு தொழில் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த வேளை போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுவதாக சொல்லிக் கொண்டு ஸ்கந்தா மற்றும் ரிசி ஆகியோர் தனது முகவர்கள் மூலம் தன்னை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்து தருமாறும் பின்னர் தங்கள் உதவியினை பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கி உதவி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களை தங்களிற்கு அனுப்பி வைக்குமாறும். இதனை சேவையாக செய்தாதலும் அதற்கான ஒரு கூலி வழங்கப்படும் என்பற்கிணங்க அவர்களின் முகவரான கஸ்தூரி முலம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கிணங்கவே பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை நான் சேகரித்து இலண்டனிற்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.

ஆனால் நான் அனுப்பிய விபரங்களில் உள்ளவர்களில் உள்வர்கற்கான உதவிகள் கிடைத்தாலும் அவர்களிற்கு கிடைத்த உதவியினை விட இரண்டு மடங்கு எதவிகள் கிடைத்ததாக உதாரணத்திற்கு அவர்களிற்கு 5000 ரூபாய் கொடுத்திருந்தால் 10000 ரூபாய் கொடுத்ததாக ஆதாரகடிதங்களை பெற்று அனுப்புமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன் அது மட்டுமல்லாது ஸ்கந்தா மற்றும் ரிசி ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்கவே பாதிக்கப்பட்டவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்காக பலரை தெரிவு செய்து அவர்களிடம் ப ஒரு தொகை பணத்தினை பெற்று ஸ்கந்தாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர்களை சில ஆசிய நாடுகளிற்கு அனுப்பியும் வைத்திருந்தேன் அதன் பின்னர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்வேண்டியது ஸகந்தாவின் கடைமை பயணிகளிடம் பெற்ற பணத்தினையும் ஸகந்தாவின் முகவர்களின் பெயரில் வங்கிகளில் வைப்பு செய்து வி்டேன். ஆனால் ஸ்கந்தா ரிசி ஆகியோர் கூட்டாக ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பதனை அறிச்ததும் யாழில் இயங்கி அலுவலகத்தினை மூடிவிட்டு அவரின் முகர்களுடனான கஸ்தூரி மற்றுஓம் ராதிகா ஆகியோரோடு நான் பிரச்சனைப்பட்டதும் என்னை துரோகியாக்கி ஏமாற்றுக்காரியாக்கி இணையங்களில் செய்தியினை வெளியிட்டுவிட்டனர்.. என்று இப்படியாக உதயகலா இரண்டு பக்கத்தில் கடிதம் எழுதியிருந்தார்.....

அடுத்ததாக கஸ்தூரி எழுதியவை......

முள்ளியவளை கிரமத்திற்கு வந்திருந்த உதயகலா அங்கு பாதிக்கப் பட்ட மக்களை அணுகி தான் சுவிசில் இருந்து ந்திரப்பதாகவும் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு பிரிவு தன்னை பாதிக்கப்பட்டவர்களிற்காக உதவும்படி அனுப்பியதாக கூறிக்கொண்டு பிள்ளைகள் கற்பதற்கான புத்தகங்கள் சிடிக்கள் எனபன விற்பனை செய்தார். பின்னர் பாதிக்கப் பட்டவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஒரு குடும்பத்திற்கு 3 இலட்சம் வீதம் வாங்கி கொண்டவர் அவர்களை கொழும்பிற்கு அழைத்துச்சென்று நீர்கொழும்புப் பகுதியில் தங்க வைத்திருந்தார் சிலரை வெளிநாடுகளிற்கும் அனுப்பி வைத்திருந்தார். நீர் கொழும்பில் தங்கியிருந்தவர்கள் தங்களை வெளிநாட்டிற்கு ஏன் இன்னமும் அழைத்து செல்லவில்லையென்று பிரச்சனை கொடுத்தபோது அவர்களை உல்லாச விடுதிகளிற்கு அழைத்து சென்று அவர்களிற்கு மது வாங்கி கொடுத்து தானும் அவர்களோடு மது அருந்தி உல்லாசமாக இருந்து அவர்களை ஏமாற்றினார். அதுமட்டுமல்லாது முகாம்களில் அடைபட்டு கிடந்தவர்களையும் வெளியே எடுத்து விடுவதாக கூறி பலரிடம் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார். பணத்தினை கொடுத்தவர்கள் உறவினர்களும் வெளியே வராததால் உதயகலாவிடம் போய் விபரம் கேட்டபொழுது உங்களை புலி என்று சொல்லி 4ம் மாடிக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாது அதில் சிலரை நீர் கொழும்பில் உள்ள விடு ஒன்றிவைத்து அடித்து தன்புறுத்தியும் இருக்கிறார். இதனால் பலர் மனநோயாளியாகியுள்ளனர். அது மட்டுமல்லாது பல கடை முதலாளிகளையும் சில சிங்களவர்மூலமாக உளவு பிரிவினர் என்று சொல்லி மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இவரிற்கும் ரிசிக்குமே தொடர்புகள் உள்ளது தமக்கும் ஸ்கந்தாவிற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென்று ஒரு கொலிவூட்படம் தயாரிக்கக் கூடிய ரேஞ்சிற்கு கஸ்தூரியின் கடிதம் 4 பக்கத்தில் கிடைத்திருந்தது.

இங்கு கடிதம் எழுதிய உதயகலா தான் பணத்தினை ஸ்கந்தா குழுவினரிற்கு பணம் வங்கிகளில் இட்டதற்கான பல ஆதாரங்களை இணைத்திருந்தார். அதுமட்டு மல்லாது அவர் ஸ்கந்தா ரிசி ஆகியோருடன் இணைந்து வேலை செய்ததற்கான ஆதாரங்களும் அனுப்பியிருந்தார்.்்ஆனால் கஸ்தூரி உதயகலா பற்றிய குற்றச் சாட்டுகளிற்கு எவ்விதமான ஆதரங்களும் தரவில்லையென்பதுடன்.தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்யென்று எழுதியிருக்கிந்தார். தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் உதயகலா செய்த மோசடிகள் மட்டும் எப்படி அவரிற்கு தெரிந்திருக்கின்றது என்பது கேள்விக்குறி????உதயகலாவால் ஏமாற்றப் பட்டவர்களின் விபரங்களை அனுப்புவதாக கூறியவர் பின்னர் எதனையும் அனுப்பவில்லையென்பதுடன். அவரின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இந்தத் தொடர் ஒரு பேப்பரில் வெளிவந்த நாள் முதல் ஸ்கந்தா மற்றும் ரிசி போன்றவர்கள் தங்கள் பக்க விளக்கங்களையும் எம்முடன் தொடர்பு கொண்டு தாராளமாக தந்தால் அதனையும் நாங்கள் பிரசுரிப்போம் என அவர்களிற்கு தனியாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தோம். ஆனால் ஸ்கந்தா அவர்கள் எம்மை மறைமுகமாக மிரட்டும் பாணியில் பலருடன் தொடர்பு கொண்டு இந்த கட்டுரையை நிறுத்தும்படி எனக்கு ஒரு அழுதத்தினை கொடுக்க மயற்சித்ததோடு ஒரு பேப்பர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பலர் மூலமாக அறிவித்திருந்தார்.

அவர் இவ்வளவு சிரமப் பட்டிருக்கத் தேவையில்லை டின்னுடனோ அல்லது ஒரு பேப்பர் ஆசிரியர் குழுவினருடனோ நேரடியாக தொடர்பகளை ஏற்படுத்தி தனது பக்க நியாயத்தினை தாராளமாக வைத்திருக்கலாம். எது எப்படியோ தேசியம் என்கிற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுகின்றோம் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் செய்த மோசடியினை ஒரு பேப்பர் வெளிக்கொண்டு வந்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளதோடு அவ்களை மக்களிற்கு அடையாளம் காட்டியுமுள்ளது. இனிவரும் காலங்களில் இவர்கள் போன்றவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்கும்படி வேண்டிக் கொள்வதோடு யாராவது இவர்கள் போன்றவர்களிடம் ஏமாற்றப்பட்டிருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் ஒரு பேப்பரை தொடர்பு கொண்டால் அவற்றை உறுதிப்படுத்திய பின்னர் ஒரு பேப்பர் அதனை பகிரங்கப்படுத்தும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

மாறிமாறி சாஸ்திரியின் புழுகு உதகலாவை கண்ணகியென்று வர்ணித்தார். இதுவரையில் பலநூறு குடும்பங்களின் அழிவுக்கு காரணமாகிய உதயகலா தயாபரராஜ் தம்பதிகளின் கொள்ளையடிப்புக்கு ஆதரவாக இருந்தார்.  இப்போது தன்னை நடுநிலயாளராக காட்ட முனையும் சாஸ்திரி உதயகலா பின்னணியில் நாமம் போடப்பட்ட அப்பாவிகள் பாவம்.


உழைக்க உலகத்தில் பல்லாயிரம் வழிகள் இருக்கிறது சாஸ்திரி. ஏழைகளை ஏமாற்றி பிழைப்பது கொடுமை. அதுவும் தங்களை முன்னால் போராளி என்று கூறி ஏமாற்றுவது கொடுமையிலும் கொடுமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.