Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ : தமிழருவி மணியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்ய்க்காலின் மல்லாந்தது பிரபாகரன் மட்டுமல்ல தமிழனின் எதிர்காலமும்தான், இந்த இழிநிலைக்குக் காரணம் நான் உட்பட படம் காட்டிக்கொண்டு உங்க புலம்பெயர்ந்து வெள்ளையும் சுள்ளையுமாக திரிகிறவர்கள்தான். மாற்று இயக்கங்கள் எனப்படுவது தாம் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டவேளையில் தவறுகள் செய்து அத்தவறுகளை மறைப்பதற்க்காக தெருச்சண்டியர்கள் கணக்காக தங்களுக்குள் கொளைவெறியுடன் திரிந்ததனாலேயே, பிறிதொரு இயக்கமான விடுதலைப் புலிகளால் இனம்காணப்பட்டு ஓரம்கட்டப்பட்டனர். இவர்கள் தமிழர்க்கு உரிமையினைப் பெற்றுக்கொடுக்க இருதயசுத்தியுடன் போராடியவர்களாகவிருந்தால் எதிரியிடம் போய் மண்டியிட்டிருக்க மாட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுட்பட அப்போதைய அனைத்து விடுதல இயக்கங்களிற்குள்ளும் மிகப்பெரும் ஆளணி வளத்தினப் பெற்றிருந்தது புளொட் இயக்கமே. மிகப்பெரிய ஆள்ப்பலத்துடன் இருந்த புளட்டுக்கு என்ன நடந்தது? சரியான தலைமை இல்லை. உமாமகேஸ்வரன் சிறந்த போராளியாக இருக்கலாம் (சிலவேளை) அனால் எதிர்காலத் திட்டமிடலை சரிவரச் செய்யவில்லை அவர் முக்கியமாக நம்பியிருந்த இந்திய அரசு துறைமுகத்தில் வந்த பெரும்தொகை ஆயுதங்களைக் கைப்பற்றியதை யாவரும் அறிந்ததே. அதற்குப்பின்னரும் மாலைதீவினில் இந்திய நரி தனது காலையூன்றுவதற்காகச் செய்த சதிப்புரட்சியை இந்தியாவை நம்பி மேற்கொண்டது பெரும் தவறு இப்படி தவறுகளையே வளக்கமாகக்கொண்ட ஏனைய இயக்கங்களைச் சரியான வழிக்கு வாருங்கள் இல்லையேல் ஒதுங்குங்கள் எனச் சொன்னால் காட்டிக்குடுப்புக்களில் ஈடுபடுவோம் என ஒற்றைகாலில் நிற்பது தவறில்லை என்று யாராவது கேனையன்கள் இருப்பார்கள் அவர்களிடம் போய்க் கூறுங்கள். தமிழரின் விடுதலை சிங்களவனுடன் போராடுவதால் மட்டுமே கிடைக்கும் என ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள் அவனுடனேயே சேர்ந்து இனத்துரோகம் செய்துவிட்டு இப்போது எல்லாம் முடிந்து விட்டது என ஒப்புக்குச் சப்பானியாக ஓலமிட உங்களால் எப்படி முடிகிறது? தமிழருவி மணியன் ஒரு கருவி மட்டுமே, காலாகாலமாக காங்கிரஸ் கூடாரத்தில் விசுவாசி அவர் எப்போது வெளிவரவேண்டுமென சிலர் எதிர்பார்த்தார்களோ அவ்வேளையிலேயே அவர் காங்கிரசைவிட்டு வெளிவந்துவிட்டார். தற்போது எங்களுக்கு ஒரு விசுவாசமான துரோகி கிடைத்துவிட்டார் நாம் அவருக்கு ஆராத்தி எடுக்கிறோம் அவர் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவிட்டார். இது எப்போதோ முடிந்தவிடையம். இந்திய உளவுப் பிரிவு விடுதலைப் புலிகளது தலைமையை அழிக்க வேண்டும் என எப்போதோ முடிவெடுத்து அதற்கான காய் நகர்த்தல்களை காலகாலமாகச் செய்து அதில் வெற்றியும் கண்டுவிட்டது. அதன்பின்பு புலத்தில் உள்ள மக்களையும் இன்னும் ஓரிரு தசாப்பத காலத்திற்கு அரசியல் ரீதியில் நிமிர்ந்தெள விடாதபடி அவர்களுக்கும் அவலத்தைக் கொடுத்தாயிற்று, இனிமேல் இருப்பது புலம்பெயர் தமிழர்கள்தான் அவர்களையும் குறிவைக்க எப்போதோ தயார் படுத்த்ப்பட்ட ஈட்டியே தமிழருவி மணியன் அவர்கள். அவர்களுடன் புலம்பெயர் மாற்றுக் கருத்துக் காரர்களும் சேர்ந்துவிட்டார்கள் அதன் பின்பு என்ன? தமிழின அழிப்பின் உச்சகாலகட்டத்தில் ஒருசில கண்டன அறிக்கைகளை வெளியிட்டு தமிழின ஆபத்பாந்தவராக தன்னை அறிமுகம் செய்து வைத்திருக்கும் இவர் போன்றவர்களது உருவத்தில் மூளைச் சலவை செய்ய எம்மிடையே உலாவருகிறார்கள் பராக் பராக் பராக். சிலவேளை நான் கூறுவது தவறாக இருக்கலாம் அனால் தமிழினம் எப்போதுமே நம்பவைத்துக் கழுத்தறுபட்ட இனம் எப்போதும் நாம் நாணயத்தின் இருபக்கங்களையும் நோக்க வேண்டும்.

தற்போதைய தமிழனின் தேவை, எமது மணணைக் கூறுபோட உலக வல்லாதிக்கக் கழுகுகள் வட்டமிடுகின்றன. அதிகரித்த பணவரவு இந்திய சீன மக்களது கொள்வனவுத் திறனை அதிகரித்துள்ளது தமது நாட்டின் சாதகமில்லாத காலநிலை மற்றும் தண்ணீர்த்தட்டுப்பாடு போன்றவற்ரால் தேவைகளை நிறைவு செய்ய முடியாது பெரும் மக்கள் தொகையினைத் தன்னகத்தேகொண்ட இரு நாடுகளும் எமது வளங்களை விழுங்கத் தயாராகி விட்டன. நீங்கள் கேட்கலாம் யானை பசிக்கு சோழப்பொரியா என அனால் இலகுவாக வருகிறது அபகரி கொண்டவரை லாபம் இதுவே அவர்களது இப்போதைய நிலை. மடகஸ்கரில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை சீனா வளைத்துப் போட்டுள்ளது சம்பூரில் சிறுகவே கால் பதித்து பெருகக் கால் பதிக்க இந்தியா முயல்கிறது. இவையனைத்தும் ஆரம்பமே போகப்போகத் தெரியும் அவர்களது வல்வளைப்பு. தற்போதைய தேவை தமிழன் பொருளாதார ரீதியில் பலமுடையவனாக எழுதல் வேண்டும் . கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் நடப்பது நல்லவயாக இருக்க முதலில் எமது பேதங்களை மறப்போம். ரணத்தினக் கிளறி தமிழனின் வாழ்வினைச் சீழ்பிடிக்க விடுவதை யாழ்களத்தில் உள்ளவர்கள் அனைவரும் தவிர்ப்போம் இனியொரு விதிசெய்வோம் ஈழத்தமிழன் இன்புற்றிருக்க. ஆகவே யாழ் கள நண்பர்களே உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் நல்லதை நினையுங்கள். நியாயமெனப்படும் ஒரு பொதுவேலைத்திட்டத்துடன் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்படியான போராட்டங்கள் தான் ( செஞ்சிலுவையிலும் வேலை செய்யும் ) உங்களின் அவலங்கள் ஊடகங்கள் மூலம் வெளி வந்து கொண்டு இருக்கிறது... மனசாட்ச்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பியது...

நீங்கள் எதையுமே செய்யாது இருந்தால் 100% தோல்வி நிச்சயம்... ஆனால் எல்லாவற்றையும் செய்தால் வெல்லும் சந்தர்ப்பங்கள் அமைய வாய்ப்பு உண்டு...

உண்மையை சொன்னால்.... இண்று தமிழர்களுக்காக வேலை செய்வதும் , நடவடிக்கை எடுப்பதும் ஒரு சில சிங்களவரும் , வெள்ளையரும் மட்டுமே... தமிழர்கள் எல்லாம் விமர்சனம் எண்ட பெயரிலை தங்கட கற்பனைகளை அவித்து கொண்டு இருகிறார்க|ள்...

இந்த வருட ஆரம்பத்தில் உருவான குழம்பிய நிலை தமிழர்களிடையே இன்றும் தொடர்கின்றது. முதலில் தற்போதைய நிலையில் நாம் செய்யக்கூடியது என்ன என்பதை தெளிவாகச் சிந்திக்காமல் கனவுலகத்தில் வாழ்வதும், அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம் என்று மாற்றமுடியாத விடயங்களை இரைமீட்டு அரசியல், இராணுவ வித்துவத்தைக் காட்டுவதும்தான் தற்போது நடக்கின்றது. போராட்ட வரலாற்றில் இருந்து படிக்கப் பல விடயங்கள் உள்ளன. எனினும் அவற்றைப் படித்து முடித்துவிட்டுத்தான் வதைமுகாமில் இருப்பவரைப் பற்றி அக்கறைப்படுவேன் என்று ஒரு கூட்டமும் உள்ளது. இவைதான் இங்கு பதியப்படும் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.

வதை முகாமில் உள்ள தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களுக்குக் குடியமரப் பண்ணுவதும், தாயகப் பகுதியில் இராணுவக் கெடுபிடிகளற்ற சுமுக நிலையை ஏற்படுத்த முனைவதன் மூலம் மக்கள் நிம்மதியாக வாழ இருக்கப் பண்ணுவதும்தான் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய கடமைகள். இவற்றை முன்னெடுக்க பல முயற்சிகள் அழுத்தங்கள்/விளக்கங்கள் மேற்கு நாடுகளில் நடைபெறுகின்றன. எனினும் இலங்கை அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்தால் சிங்கள கடுந்தேசியவாதிகளின் ஆதரவினால் மகிந்த அரசின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற நிலைமையும் உள்ளது. எனவே உணர்வு ரீதியாப் போராட முயற்சிக்காமல் அறிவு ரீதியாக போராட வேண்டியது தற்போதைய தேவை.

தமிழருவியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதற்கு தக்கபதிலைத் தர்க்கரீதியா வைக்கவேண்டும். அதைவிடுத்து அவரையும் காயப்படுத்தி இருக்கும் நண்பர்களையும் தொலைக்கும் முயற்சியில்தாம் நாங்கள் இருக்கின்றோம்/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சிங்களவனிடம் போய்ச் சேர்ந்தார்களாம் அதனால்த்தான் தாம் துரோகிகளானார்களாம். எப்படியிருக்கு விளக்கம்? புலிகள் பிரேமதாசாவுடன் பேச்சுக்குப் போனது 1989 இன் இறுதிப்பகுதியில். பொறுக்கிகள் இந்தியனை நக்கத் தொடங்கியது 1987 இல் இருந்து. முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது இங்கொரு பொறுக்கி.

1980 களில் இந்திய உளவுத்துறையின் ஆசை நாயகிகளாக அவர்களது மடியில்ப் போய் விழுந்த அரசியல் விபச்சாரிகள் இன்று மாற்றுக்கருத்துப் பற்றிப் பேசுகின்றன. அதெப்படி, அவர்கள் அரசியல் தீர்வொன்று கொண்டுவந்தார்களா?! எது, பெருமாள் அப்பம் பிட்ட கதையைச் சொல்லுறீங்களா?? அதுசரி, தனது கூலிப்படையை வைத்து வடக்கிலும் கிழக்கிலும் பேயாட்சி நடத்த இந்தியா விளைந்தது இந்தப் பொறுக்கிகளுக்கு "அரசியல் தீர்வு" ஆகத் தெரிகிறது. அதுசரி, அந்த மாகாஅண சபயை வைச்சு என்னத்தைக் கிழிச்சனீங்கள். குறைந்தது சிங்களவன் செய்துவந்த குடியேற்றத்தைத்தானும் நிறுத்த முடிந்ததா? பிறகென்ன அரசிய தீர்வும் மண்ணாங்கட்டியும்?! சிங்களவன் செய்யிறன் எண்டும், அவனைச் செய்ய வைப்பன் எண்டு இந்தியாவும் சொன்னது போல் ஏன் செய்யவில்லை எண்டு எப்போதாவ்து கேள்வியாவது கேட்டிங்களா??

ஓ...நீங்கள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து புலி..புலியெண்டு ரோட்டில போற வாறவனை தலையாட்டிக் காட்டிக் கொடுத்து மண்டையில போட்டது, பிறகு இந்தியன் கிழவி குமரியெண்டு வித்தியாசம் பாக்காமல் கும்பலாகச் சேர்ந்து கற்பழிச்சதுக்கு விளக்குப் பிடிச்சுக் காவல் காத்ததைச் சொல்லுறீங்களா?? அல்லது, கடை வழிய காசு கேட்டுப் போய், சனம் கொஞ்சம் முரன்டு பிடிச்சால் தகப்பனையும் மகனையும் கடைக்கு முன்னால் போட்டுத் தள்ளிப்போட்டு புலிகள் எண்டு கொட்டை எழுத்தில கழுத்தில போட் போட்டிங்களே அதைச் சொல்லுறீங்களா?? பிறகு இந்தியன் மூக்கு உடை பட்டு வெளியேறப் போறான் எண்டு தெரிஞ்ச உடனே அவசரம் அவசரமாக தமிழீழப் பிரகடனம் செய்துபோட்டு, இந்தியன் கப்பலுக்க ஏறு முன்னமே ஏறி ஒளித்துக்கொண்டதைச் சொல்லுறீங்களா?? இல்லையெண்டால். "இந்த உள்நாட்டுப் புரட்சியெல்லாம் சரிவராது, நாங்கள் வித்தியாசமா வெளிநாட்டிலையும் கூலிப்படையாகப் புரட்சி செய்வம் " எண்டு ரோவிட்டக் காசு வாங்கிக் கொண்டு மாலைதீவைப் பிடிக்க வெளிக்கிட்டு பிறகு அதே ரோவிட்ட அகப்பட்டு அடியும் வாங்கினதைச் சொல்லுறீங்களா?? இந்த அரசியல் விசேசங்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் தமிழருக்குத் தீர்வாக(சிறிய காலத்துக்கு எண்டாலும்) தந்ததாக எனக்கு ஞாபகமில்லை.

சில நேரம் கனவிலை நினைச்சிருப்பியள். ஆனால் என்ன, உங்கட கனவெல்லாம் சிங்களவனையும், இந்தியனையும் கண்டவுடன் சுருண்டு படுத்துவிடும் எண்டது எங்களுக்கு நல்லாத் தெரியும்.

"

இந்த வருட ஆரம்பத்தில் உருவான குழம்பிய நிலை தமிழர்களிடையே இன்றும் தொடர்கின்றது. முதலில் தற்போதைய நிலையில் நாம் செய்யக்கூடியது என்ன என்பதை தெளிவாகச் சிந்திக்காமல் கனவுலகத்தில் வாழ்வதும், அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம் என்று மாற்றமுடியாத விடயங்களை இரைமீட்டு அரசியல், இராணுவ வித்துவத்தைக் காட்டுவதும்தான் தற்போது நடக்கின்றது. போராட்ட வரலாற்றில் இருந்து படிக்கப் பல விடயங்கள் உள்ளன. எனினும் அவற்றைப் படித்து முடித்துவிட்டுத்தான் வதைமுகாமில் இருப்பவரைப் பற்றி அக்கறைப்படுவேன் என்று ஒரு கூட்டமும் உள்ளது. இவைதான் இங்கு பதியப்படும் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.

வதை முகாமில் உள்ள தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களுக்குக் குடியமரப் பண்ணுவதும், தாயகப் பகுதியில் இராணுவக் கெடுபிடிகளற்ற சுமுக நிலையை ஏற்படுத்த முனைவதன் மூலம் மக்கள் நிம்மதியாக வாழ இருக்கப் பண்ணுவதும்தான் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய கடமைகள். இவற்றை முன்னெடுக்க பல முயற்சிகள் அழுத்தங்கள்/விளக்கங்கள் மேற்கு நாடுகளில் நடைபெறுகின்றன. எனினும் இலங்கை அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்தால் சிங்கள கடுந்தேசியவாதிகளின் ஆதரவினால் மகிந்த அரசின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற நிலைமையும் உள்ளது. எனவே உணர்வு ரீதியாப் போராட முயற்சிக்காமல் அறிவு ரீதியாக போராட வேண்டியது தற்போதைய தேவை.

தமிழருவியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதற்கு தக்கபதிலைத் தர்க்கரீதியா வைக்கவேண்டும். அதைவிடுத்து அவரையும் காயப்படுத்தி இருக்கும் நண்பர்களையும் தொலைக்கும் முயற்சியில்தாம் நாங்கள் இருக்கின்றோம்/

எல்லா நல்ல தருணமும் அமைந்த கடந்த 30 வருடமாக புடுங்காத மயிரை இனிமேல் ஒற்றுமையாக புடுங்கி போடுவினமோ....???

இது உங்களின் ஆசையாக மட்டும்தான் இருக்கும்..

இது நடக்கும் எனும் நம்பிக்கை மட்டும் எனக்கு கிடையவே கிடையாது...

இங்கை இரும்போர் எதையும் செய்யவதில்லை செய்பவர்களுக்கு விமர்சனம் எனும் பெயராலும் நியாயம் எனும் பெயராலும் தடை போடாமல் இருப்பதும் இல்லை...

எல்லா இடங்களுக்கும் கோட்டும் டையும் கட்டி படம் காட்டுவதுக்கு மட்டும் வருவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள்... ஆனால் வேலை செய்வதுக்கு வருவது கிடையாது.... தன்னை முன்னிலை படுத்தும் குணம், சுயநலம் இரண்டு மட்டுமே குடி கொண்டு இருக்கிறது... ஒத்துளைப்பு என்பது அறவே கொடுக்காத மக்கள் எம்மவர்கள் தான்.... வேணும் எண்றால் முயண்று பாருங்கள்...

குறைந்தது யாழ் களத்துக்தினூடாக ஒரு சிறைய வேலைத்திட்டத்தை செயற்படுத்த முயண்று பாருங்கள்... அப்போது தெரியும்..

இந்த விடயத்தில் சிங்களவனிடம் எல்லாரும் பாடம் படிக்க வேண்டும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டர வருடத்துக்கு முதல் இப்படி இருந்த தலைவருக்கு எப்படி மண்டையின் முடிபோனது

பொன்ட் நல்லா தான் படம் காட்டுறான் பாருங்கோ...

ஒண்டை செய்யேக்க அதை நம்பக் கூடிய மாரி செய்.. பொய் புளுகுவள் இங்கை வேண்டாம் பொன்ட் :lol:

IMG5139-1254259882.jpg

Edited by kuddipaiyan26

ஒண்டர வருடத்துக்கு முதல் இப்படி இருந்த தலைவருக்கு எப்படி மண்டையின் முடிபோனது

பொன்ட் நல்லா தான் படம் காட்டுறான் பாருங்கோ...

ஒண்டை செய்யேக்க அதை நம்பக் கூடிய மாரி செய்.. பொய் புளுகுவள் இங்கை வேண்டாம் பொன்ட் :lol:

அப்படி ஒரு நீச்சல் தடாகம் ஊனம் உற்ற போராளிகளுக்கான நவம் அறிவுக்கூடத்தில் அமைக்க பட்டு இருந்தது... அங்கு போன தலைவர் அதில் குளித்து இருக்க மாட்டார் எண்றும் இல்லை... அப்படி குளித்து இருந்தால் பிழையானதும் இல்லை...

ஆனால் தலைவர் தனக்காக ஒரு வீடு வைத்து அங்கு தங்கி இருக்கும் அளவுக்கு அவரின் பாதுகாப்பு பிரிவினர் அவரை ஒரு நிரந்தர இடத்தில் தங்க வைக்கப்பதில்லை... தங்க விடுவதும் இல்லை.. எதையும் அவர் சொந்த மாக வைத்து இருக்க விடுவதும் இல்லை...

இதை மறை கழண்டவனுக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது...

இவர்களின் எதிர்ப்பார்ப்பு எல்லாம் தலைவர் ஒரு துறவியை போல வாழ்ந்து இருக்க வேண்டும் என்பதுதான்... ஆனால் தாங்கள் போத்தல் தண்ணியிலை மிதப்பாங்கள்...

எல்லாம் நண்றி கெட்ட தனம்..

  • கருத்துக்கள உறவுகள்

1987 இந்திய இராணுவம் வந்த போது அதை நாம் சரி வர நமது அரசியல் நலனுக்கு ஏற்ப பாவித்திருந்தால் இன்று நமக்கென ஒரு தேசம் சிலவேளை உருவாகியிருக்கும்? இது என் மனதில் கொழுந்து விட்டெரியும் முதலாவது கேழ்வி! இந்திய இராணுவம் எல்லா இயக்ஙகளுக்கும் ஆதரவு கொடுக்கிறது என்ன ஒரு நோக்கில் தானே புலிகள் மோதினார்கள்?

இல்லை, இந்திய இராணுவம் இலங்கைக்கு இந்திய இலங்கை ஒப்பந்ததை அமுல் படுத்த வந்தது.இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழருக்கான தீர்வாக முன் வைத்தவை தமிழர்களின் நலங்களிலுன் அடிப்படையில் அல்லாமால் இந்திய மேலாதிக்கத்தின் நலங்களின் அடிப்படையிலையே அமைந்தது.புலிகள் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையையும் அதனை அடையும் வழிவகைகளில் ஒன்றாக இடைக்கால நிர்வாக சபையையும் கோரினர்.அதனை இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தியா எப்போதுமே தமிழரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தது கிடையாது.அது வளர்த்த இயக்கங்கள் அதன் உளவுத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவை, இருப்பவை.அவை தமிழரின் தேசிய இனவிடுதலையை வென்றெடுக்க முடியாதவை.

இந்திய இராணுவம் புலிகளுடன் மோத முன் நட்புறவாக தானே இருந்தார்கள்?

தமது இயக்கத்தை முன்னிலைப்படுத்த தவறியதால் அன்று சிங்கள் இராணுவத்துடன் சேர்ந்து இந்திய இராணுவத்தை புலிகள் விரட்டினார்கள். இன்று தம் உளநாட்டு அரசியலில் (ராஜீவ் கொலை) புலிகள் மிக அதிகம் தலையிடுகிறார்கள் என்று இந்திய சிறீ லங்கத அரசுடன் இணைந்து புலிகளை அழித்துள்ளார்கள்.

நாம் நமக்கு வந்த அனைத்து சந்தர்பங்களையும் தூக்கியெறிந்து விட்டு அடுத்தவனை குறைசொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். புலிகள் சிறீ லங்கா இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவத்தை துரத்துகையில் இந்திய தமிழ் தேசிய இராணுவத்தை கட்டயமைத்தது ஞாபகம் இருக்கலாம். பிள்ளைபிடி என்று அதை நாம் கூறிய போதும் இன்று அதை மாறி சிந்திக்கையில் புலிகள் இந்தியாவுடன் ஒத்துளைந்திருந்தால் சில வேளை உண்மையிலேயே தமிழ் தேசிய இராணுவமாக மாறியிருக்கலாம் தானே?

முழுப்பிழையும் நம் வசம் வைத்தபடி அடுத்தவனை திட்டி செஞ்சிலுவை சங்கம் முதல் சீன தூதுவரகம் வரை போய் வாய் கிழிய கத்தி இன்று அனைவரினதும் கோபத்தக்குள்ளாகி அரசியல் அனாதைகளாக பிச்சை காரர்களாக நடுத்தெருவில் நிற்கிறோம். இதற்கு முழுக் காரணம் போராட்டத்தை மிகவும் சுயநலமான நோக்கோடு நடாத்தியவர்களே ஒளிய போராட மறுக்கப்பட்டவர்கள் அல்ல!

மாற்று இயக்கங்கள் அனைத்தையும் அழித்தது ஏன்?

மாற்று கருத்து கொண்டவர்களை கொன்றது ஏன்?

தனி நபரை கொன்றால் பிரச்சனை தீர்ந்து விடுமா? ஒருவன் போனால் இன்னொருவன்! பிரேமதாசாவை நாம் அன்று கொன்றோம். இன்று அவனை விட மோசமான மகிந்த!

மனித நோயம் கொண்டவர்கள் தான் சிறந்த போராளிகளாக மாற முடியும், மண்டையில் போடுபவர்கள் போராளிகளாக மாற முடியாது என்பதை சரித்திரம் நிரூபித்து விட்டு போயிருக்கிறது!

ஒரு போராளிக்கு தேவையான முதல் அம்சம் பொறுமை, எளிமை, நிதானம். இதை நாம் ஹோசிமிடம் கண்டோம். சே இடம் கண்டேம்! ஆனால்.....

நீங்கள் சொல்லும் ஹோசிம்மின் போராட்டத்திலும் சேயின் போராட்டத்திலும் எதிர்ப் புரட்சியாளர்கள் கொன்றொளிக்கப்படார்கள்.புலிக

நீங்கள் சொல்லும் ஹோசிம்மின் போராட்டத்திலும் சேயின் போராட்டத்திலும் எதிர்ப் புரட்சியாளர்கள் கொன்றொளிக்கப்படார்கள்.

...எனது பார்வையில் புலிகள் தோற்றதற்கான அடிப்படைக் காரணம் தமிழர்கள் அவர்கள் பின்னால் ஒன்று பட்டு நிற்கவில்லை.புலிகள் இன்னும் தீவிரமாக பிரதேச, சாதிய வாததிற்கு எதிரரகாவும், இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராகவும் இயங்கி இருக்க வேண்டும்.

புலிகள் நிச்சயமாக மீண்டும் வருவார்கள், மீண்டு வரும் போது முன்னைய பிழைகளத் திருத்திக் கொண்டு வருவார்கள்.இதனைப் பலமுறை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

அப்ப ஊரிலை கொல்லப் பட்ட எல்லோருமே எதிர் புரட்சியாளர்கள் எண்டு மறைமுகமா சொல்லுறியள். போர் தொடங்கியவுடனேயே ஏற்படவிருந்த மனிதப் பேரவலத்தை 'தலைவரின் உள்ளுக்கை விட்டு அடிக்கும் விளையாட்டு' எண்டு குடு குடுப்பை அடிச்ச நீங்கள் சொன்னா சரியாத் தானிருக்கும். சுட்டவன் கூட இண்டைக்கு உயிரோடை இருந்தா அதுக்காக வருந்துவான் ஆனா இங்கை கொஞ்ச கோஷ்டி சுட்டது காணாதெண்டும் நியாயப் படுத்தி கொண்டும் இருக்குது. இதுக்குள்ளை மறுபடி ஒரு முள்ளிவாய்க்கால் பாக்க துடிக்குது புலம் பெயர் நெஞ்சம்.

Edited by Alternative

அப்ப ஊரிலை கொல்லப் பட்ட எல்லோருமே எதிர் புரட்சியாளர்கள் எண்டு மறைமுகமா சொல்லுறியள்.

இல்லை புலிப் புரட்சியாளரும் எதிர்ப் புரட்ச்சியாளரால் கொல்லப்பட்டனர்.

போர் தொடங்கியவுடனேயே ஏற்படவிருந்த மனிதப் பேரவலத்தை 'தலைவரின் உள்ளுக்கை விட்டு அடிக்கும் விளையாட்டு' எண்டு குடு குடுப்பை அடிச்ச நீங்கள் சொன்னா சரியாத் தானிருக்கும்.

ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலம் முதல், சிங்களப் பேரினவாதம் தமிழரை ஒடுக்கத் துவங்கிய காலாம் முதல் மனிதப் பேரவலம் நடந்து கொண்டு தான் இருக்கு.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட டக்கிளசு முதல் கருணாவரை இதுவரை தமிழருக்கு என்ன தீர்வைத் தந்துள்ளார்கள்? புலி அழிந்து விட்டது, உங்களிடம் என்ன தீர்வு தான் இருக்கு? மாற்று என்று பெயர் இருந்தால் மட்டும் காணுமா, மாற்றுத் தீர்வு திட்டம் ஒன்றும் உங்களிடம் இல்லையே?

தலைவர் உள்ளுக்கு விட்டுத் தன்னால் முடிந்தவரை அடித்தார், தோற்றார். நாம் பலம் இழந்தது உங்களைப் போன்று மாற்று எதுவும் அற்று ஏமாற்றுவது ஒன்றே தொழிலாகக் கொண்டு இருப்பவர்களினால்.தமிழர் ஒன்று பட்டுப் போராடி இருந்தால் இந்த அவலதைத் தடுத்து இருக்கலாம்.கருணா முதல் கருணானிதிவரை சுயனலத்தால் அழிந்தோம்.ஆனால் மீண்டு எழுவோம். நீங்கள் இப்படியே எந்த மாற்றும் இன்றி ஏமாற்றிக் கொண்டு இருங்கள்.

சுட்டவன் கூட இண்டைக்கு உயிரோடை இருந்தா அதுக்காக வருந்துவான் ஆனா இங்கை கொஞ்ச கோஷ்டி சுட்டது காணாதெண்டும் நியாயப் படுத்தி கொண்டும் இருக்குது. இதுக்குள்ளை மறுபடி ஒரு முள்ளிவாய்க்கால் பாக்க துடிக்குது புலம் பெயர் நெஞ்சம்.

சுட்டவனைச் சுடுவது எந்தப் போராட்டத்திலும் நடப்பது.மாற்று எதுவும் அற்ற நீங்களும், புலத்தில் தான் இருந்து அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். அடக்கி ஒடுக்கும் எந்த அரசையும் எதிர்க்கும் எந்த அடக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுப்பது என்பது என்னளவில் நியாயமான செயற்பாடு.உங்களுக்கு அடக்குபவனை ஆதாரிப்பது என்பது நியாயமானதாகப் படலாம்.அடக்குமுறைக்கு எதிரான எவரின் போரையும் ஆதரிக்கும் எனது ஜன நாயாக உரிமையில் தலையிட உங்களப் போன்ற ஏமார்றுபவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

சுட்டவனைச் சுடுவது எந்தப் போராட்டத்திலும் நடப்பது.மாற்று எதுவும் அற்ற நீங்களும், புலத்தில் தான் இருந்து அலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். அடக்கி ஒடுக்கும் எந்த அரசையும் எதிர்க்கும் எந்த அடக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுப்பது என்பது என்னளவில் நியாயமான செயற்பாடு.உங்களுக்கு அடக்குபவனை ஆதாரிப்பது என்பது நியாயமானதாகப் படலாம்.அடக்குமுறைக்கு எதிரான எவரின் போரையும் ஆதரிக்கும் எனது ஜன நாயாக உரிமையில் தலையிட உங்களப் போன்ற ஏமார்றுபவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

அடடா ரொம்ப சுடுது போல நாரதருக்கு. அது தான் ஓவரா அலம்புறியள். என்னவோ நீங்கள் புரட்சிக் காரன் மாதிரியும் உங்களை விமர்சிப்பவர்கள் எதிர் புரட்சிக் காரர்கள் மாதிரியும். உங்கடை ஜனநாயக உரிமையில் யாரையா தலையிட்டது. புலுடா விடுவதை நிறுத்துங்கள் அது போதும்.

Edited by Alternative

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவிஞன் ஆவலுற்றான்............. அகிலமெங்கும் தமிழ் அத்திபரவட்டும் என்று!

ம்;ம்ம்ம்.............. டெல்லிவரைக்கும் போனதன் விளைவே இப்படியென்றால்????........ பல பன்றிகளும் தமிழில் எழுத பழகியதன் விளைவை இனி அனுபவித்தே ஆகவேண்டும்.

அரசியல்துறை..... அரசியல் ஆலோசகர்கள் என்று எல்லாம் வைத்திருந்த புலிகள் எங்கே அரசியல் செய்தார்கள்?

இந்த காடடேறிகள்தான் அரசியலை அன்றும் செய்தார்கள் இன்றும் செவ்வன செய்கிறார்கள். இப்போது எல்லா இடங்களும் மீடகட்டுவிட்டது.......... புலிகள் அழிந்துவிட்டார்கள். இப்போதுதான் இவர்களுக்கு அரசியல் பழு என்பது அதிகமாகி நேரமே இல்லாது இருக்க வேண்டும். ஆனால் யாழ்களத்தில்தான் சுத்தி சுத்தி வருகுதுகள் இந்த அரசியல் ஞானிகள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.

இந்தியா தொடர்பாக மணியன் அவர்களால் அநுமானிக்கப்படும் எதிர்பார்ப்புக்கள் எவளவு யதார்த்தமானவை என்பதில் இருந்து இந்தக் கருத்துக்கான பதில் அமையும்.

அடுத்த வீடு ஒன்றில், அந்த வீட்டின் தலைவன் இல்லாத போது ஒரு திருடன் புகுந்து பொருட்களைக் களவாடி, அந்தப் பெண்ணையும் பலாற்காரம் செய்து தப்பிச் செல்கின்றான், இந்த சம்பவம் முடிவை எட்டிய பின், அயல் வீட்டுக் காறன் என்று சொல்லப் படத்தக்கவன் உதவி வேண்டுமா என்று நுளைகின்றான். அவன் அந்தப் பெண்ணைக் கேட்கின்றான் உனக்கு நடந்த இந்த அவலம் வெளியால் தெரியாமல் செய்வதற்கு எனகு நீ பணம் தரவேண்டும் என்று. இப்படி கீழ்தரமானவனின் உறவு எதிர்காலத்திலும் கடந்த காலத்திலும் சுமூகமாக பாதிக்கப் பட்ட குடும்பத்தினரால் பேணமுடியவில்லை என்றால் அதற்கான பொறுப்பை, அந்தக் குடும்பத்திடம் ஒரு வீதமும் ஒப்புவிக்கப் பட முடியாதோ அப்படியேதான் இந்தியாவை புலிகள் அநுசரிக்க முடியாமைக்கான காரணமும்.

புலியை அழிக்கும் சிங்களப்படைக்கு முழுமூச்சாய் நின்று செயற்பட்ட இந்தியாவிற்கு சோறு கொண்டு சென்ற கப்பலை தம் கட்டுப்பாட்டில் வாழும் மக்களிடம் கூட அநுமதிக்கும் உரிமையைக் கூட சிங்களம் இந்தியாவிடம் கொடுக்காதபோது, அப்போது இந்த விடயத்திற்கே சிங்களவனின் விரோதத்தை சம்பாதிக்கும் மனம் இல்லாத இந்தியா, உரிமையையா சிங்களவன் கோபத்துடன் எதிர் நீச்சலடித்து வாங்கிக் கொடுக்கப் போகின்றது. இந்த விடயம் மணியன் அவர்களுக்கு சரியாய் இருந்தால் அவர்கருத்துக்கள் எமக்கு பிழையாய் தெரிவதில் அதிசயம் இல்லை.

உண்மையான இனப்பற்று புலியை ஆதரிக்க காரணமாய் இருக்கும் என்றால் ஒருவன் புலியை என்றுமே வெறுக்க காரணம் எதுவுமே இல்லை.

அப்படி அல்லாமல் அரசியல் வாதிகளின் ஆதரவுபண்பைக் கொண்டவர்கள் ஒன்றையே என்றுமே சுமந்ததும் கிடையாது.

இதை நெல்லையன் போன்றவர்களுக்கு நாம் சொல்லிக் காட்ட வேண்டியதாய் இருக்கின்றது.

Edited by இணையவன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் சாபக்கேடுகளாய் உருவாகியுள்ள ஒட்டுக்குழுக்களின் ஜனநாயகம் என்பது..

எதிரியின் இராணுவ நிர்வாக அலகுக்குள் எதிரி வழங்கும் ஆயுதங்களோடு எதிரியின் பாதுகாப்போடு இருந்து கொண்டு மக்களை அச்சுறுத்துவதும் கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் கப்பம் அறவிடுவதும் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதும் போராளிகளை போராட்டத்தை காட்டிக் கொடுப்பதும் மக்களின் தேசத்தின் உரிமைகளை எதிரியின் நலனுக்காக விற்பதும் சிதைப்பதும்... தமது சொந்த வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுமே.

இவர்களின் பிரதான ஜனநாயகச் செயற்பாடு என்பது.. புலிகளை புலிகள் சார்ந்த அனைத்தையும் எதிர்த்துக் கொண்டே இருப்பது.

இப்படி உலகில் எங்கும் ஒரு ஜனநாயகம் கிடையாது.

உதாரணம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற ஒரு ஒட்டுக்குழு இருக்கிறது. அதன் தலைவர் எப்போதும் ஜனநாயக வழிமுறையில் கட்சியில் இடம்பிடித்ததில்லை. கட்சிக்கு என்று ஒரு தேர்வு யாப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பிரேமதாச காலத்தில் இருந்து அவரே கட்சியின் ஏக தலைவன்..!

அவர் முதன்முறையாக சிறீலங்கா பாராளுமன்றத்துக்கு தெரிவாகிப் போனது வெறும் 34 வாக்குகளில். அதுவும் அன்றைய பொழுதுகளில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் இருந்த தீவுப்பகுதியின் ஒரு சிறிய பகுதியில் பதிவான வாக்குகளாகச் சொல்லப்பட்டது.

இன்றுவரை குறித்த ஒட்டுக்குழு யாழ்ப்பாணத்துக்கு வெளியில் அதன் ஜனநாயக பலத்தைக் காட்டியதில்லை. ஏனெனில் பிற இடங்களில் ஏனைய ஒட்டுக்குழுக்களையே அதிகம் எதிரி வளர்த்து போசித்து வருகிறான். எதிரி எப்போதும் ஒரு ஒட்டுக்குழுவை மட்டும் வளர்த்து விடுவதில்லை. தனக்கு விசுவாசமான பல நாய்களை வளர்த்து அதனைக் கொண்டு ஊரூரா ஜனநாயகம் தலைத்து அதில் மக்கள் திழைப்பதாகவே எதிரியும் அவனது ஜனநாயக உலக வல்லரசுக் கூட்டாளிகளும் காட்டித் திரிகின்றனர்.

இதுதான் தமிழ் மக்களிற்குக் கிடைக்கப்பெற்ற அரும் பெரும் ஜனநாயகம்.

1987 இலும் புலிகள் இந்தியப்படைகளால் வீழ்ந்த போதும் சரி இப்போதும் சரி புலிகளை எப்படி பூண்டோடு ஓரங்கட்டி.. தங்கள் வயிற்றுப் பிழைப்பை பாதுகாப்பது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த சன நாய் அக வாதிகள்.

ஜனநாயகம் என்பது தேசத்தை தேச மக்களின் உரிமைகளை போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதோ அல்லது ஒரு கட்சியை விமர்சித்துக் கொண்டிருப்பதோ அல்ல. ஜனநாயகம் என்பது முதலில் மக்களின் விருப்புக்கு முதலிடம் அளித்து அதன் வழியில் செயற்பட தம்மை அர்ப்பணிப்பதாகும்.

விடுதலைப்புலிகள் எப்போது ஜனநாயக ரீதியான விமர்சனங்களுக்காக எவரையும் தண்டித்ததில்லை. மாறாக விடுதலைப்புலிகள் அமைப்பின் இருப்பை.. தமிழ் மக்களின் போராட்டத்தை கருவறுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியவர்களே விடுதலைப்புலிகள் என்ற போராட்ட அமைப்பால் தண்டிக்கப்பட்டனர். அது காலத்தின் அவசியம் என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் அப்படியான ஒரு துரதிஸ்டவசமான இனமாக தமிழினம் இருந்துவிட்டமை விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்களின் இலட்சியத்தை எட்டுவதில் பெரும் இடராக அமைந்துவிட்டிருந்தது.

1987 இல் இருந்து இன்றுவரை ஈழத்தில் தமிழீழத்தில் இருக்கும் ஜனநாயக உரிமைகள் என்று நோக்கின் விடுதலைப்புலிகள் என்ற போராட்ட அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அனுபவித்த சுதந்திரமும்.. ஜனநாயக உரிமைகளும் போல எங்கும் காணக்கிடைக்கவில்லை. மேற்கு நாடுகளில் கூட அப்படி இல்லை என்று கூறலாம். விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்பட்ட எவரும் ஜனநாயகவாதிகள் அல்ல. அவர்கள் ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் உலா வந்த எதிரிகள்..! விடுதலைப்புலிகள் எந்த ஒரு நியாயமான ஜனநாயக எதிர்க்கட்சிகளையும் பழிவாங்கவில்லை. அரவணைப்பதிலேயே அதிகம் அக்கறை காட்டியுள்ளனர்.

ஆனால் ஒட்டுக்குழு அரசியலைப் பொறுத்தவரை அங்கு ஜனநாயகமே இல்லை. இருப்பது முழுக்க எதிரிக்கு சேவகமும்.. புலி எதிர்ப்பும்.. தேசத்துரமுமே. இந்த ஒட்டுக்குழுக்கள் இருந்திராவிட்டால் இன்று தமிழீழம் மலர்ந்திருக்கும். எதிரிக்கு சேவகம் செய்ய ஆளே இருந்திருக்க மாடார்கள்.

எமது போராட்டத்தை அழித்ததும் சிதைத்ததும் மட்டுமன்றி எமது சகோதர சகோதரிகளின் உயிர் தியாகங்களை எதிரி கொச்சைப்படுத்தும் போது கூட அவனோடு கூட இருந்து அதைச் செய்த இந்த நாதாரிகளை ஜனநாயகவாதிகள்.. எதிர்கட்சிகள்.. என்ற தோற்றத்தில் அங்கீகரிக்க முற்படுவது எமது இனத்தை மிகுந்த ஆபத்தில் தள்ளிவிடுவதற்கு ஒப்பானது.

இதனை யாழ் களமும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்..! :lol:

மக்கள் நலனை தேசத்தின் உரிமைகளை காக்க செயற்படும் ஜனநாயகத்தை.. எதிர்கட்சி அரசியலை வரவேற்கலாம். ஆனால் எதிரியின் இராணுவ நிர்வாகத்துக்குள் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகக் காட்டிக் கொண்டு அனைத்துப் பாசிச செயற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் போர்வை போர்த்த மக்கள் விரோத செயற்பாட்டாளர்களை தொடர்ந்தும் ஜனநாயகவாதிகளாக இனங்காட்டுவதை தயவுசெய்து தவிருங்கள்.

தமிழ் மக்களுக்கு ஒரு ஜனநாயகம் தேவை என்றால் அது ஒட்டுக்குழுக்களுக்கு அப்பால் இருந்தே பிறப்பெடுக்க வேண்டும். அதை இளைஞ தலைமுறை செயற்படுத்த முற்பட வேண்டும்..! :lol:

தம்பி உந்தவளியால் போகதையடா.. போனால் வளியில் இருக்கும் படுகுளிகளுக்குள் நீ விழுந்து விடுவாய் எண்று அவர் சொன்னால் அது கருத்து...

தம்பி உந்தவளியால் போவதை விட இந்த வளியால் என்னுடன் வா என்பது மாற்றுக்கருத்து...

டேய் உங்கை போகாமல் வீட்டை இருங்கடா என்பது குளப்பவாதியின் கருத்து...

மாற்று கருத்து எனும் பெயரின் இங்கை பலர் செய்வது குழப்பவாதம்... உண்மையில் அது கருத்தே கிடையாது...

அதைத்தான் இலங்கை அரச அபிமானித்தமிழர்கள் பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்... அவர்களை மாற்றுக்கருத்தாளர் எண்று அழைப்பது தவறு...

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் இலங்கை அரச அபிமானித்தமிழர்கள் பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்... அவர்களை மாற்றுக்கருத்தாளர் எண்று அழைப்பது தவறு...

அவர்களுக்கு என்ன பெயர் இடலாம்???

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்து என்பது புலியெதிர்ப்பு மட்டுமே.. இப்ப புலி இல்லாதுபோனதால் கிடந்து அல்லாடுகினம்..! :unsure:

ஒண்டர வருடத்துக்கு முதல் இப்படி இருந்த தலைவருக்கு எப்படி மண்டையின் முடிபோனது

பொன்ட் நல்லா தான் படம் காட்டுறான் பாருங்கோ...

ஒண்டை செய்யேக்க அதை நம்பக் கூடிய மாரி செய்.. பொய் புளுகுவள் இங்கை வேண்டாம் பொன்ட் :unsure:

IMG5139-1254259882.jpg

இறந்த ஒருவரை இறக்கவில்லை என்று கூறுவது, ஒரு சமூகம் தன் பகுத்தறிவைக் கூட இழந்து நிற்கின்றது என்பதே அர்த்தமாகும். இப்படி இறக்கவில்லை என்பது ஆகப் பெரும்பான்மையிடம் உளவியல் சார்ந்த நோயாக இருப்பதைக் நாம் காணமுடியும். சிறுபான்மையிடம் இது பிழைப்பு சார்ந்தது. பினாமி சொத்துச் சார்ந்த அரசியல் மோசடி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருவி மணியன் சொன்ன படி காந்திய வழியில் போராடித்தான் திலீபனுக்கு 22 ஆம் ஆண்டு வீரவணக்கம் செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.கிடைத்ததை வைத்துக் கொண்டு போராடு என்றால் எங்களுக்கு கிடைத்தது மரணமும் அவலமும் தான்.இதை வைத்துக் கொண்டு போராடுவது என்றால் அவலத்தை தந்தவனுக்கு அவலத்தைக் கொடுப்பதுதான்.காந்தி நெல்சன் மண்டேலா மார்ட்டின் லூதர் கிங் எல்லோரும் வெள்ளைக் காரனுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றார்கள்.நாங்களோ சிங்கள இந்திய காட்டு மிராண்டிகளுக்கு எதிராக போராடுகிறோம்.அதனால்தான் திலிபன் அன்னை பூபதி போன்றோரை இழந்தோம்.சிறிலங்காவில் தாம் விரும்பிய அரை குறைத் தீர்வைத் திணிப்பதற்காக மணியன் போன்றோரை றோ தயார் படுத்துகிறதா என்று சந்தேகிக்கிறோம்.இவர்கள் தமிழ் ஈழத்தில் உள்ள மக்களுக்கு போய் பாடம் நடத்த வேண்டியது தானே?இவ்வளவு தூரம் வரவேண்டிய தேவை என்ன? புலம் பெயர்ந்த தமிழர்களை எதைக் காட்டியும் பணிய வைக்க முடியாது.அவர்கள்தான் தமிழ்ஈழ போராட்டத்தை தக்க வைத்து வளர்க்கப் போகிறார்கள்.அவர்களால் சிறிலங்கா அரசுசெய்த கொடூரமான இன அழிப்பும் தாங்கள் அதற்குத் துணை போன வரலாறும் தோலுரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்கள் Nசதhரமில்லாமல் இருக்கின்றன.ஆகவே அதனைச் சீர் குலைப்பதே அவர்கள் நோக்கம்.ஆமாம் அகிம்சையால் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்தியாவுக்கு அணுகுண்டு ஏன் தேவை தமிழருவியாரே?

களத்தில் மக்களைக் குழப்புபவர்களை தடை செய்ய வேண்டியுள்ளது

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று இயக்கங்கள் அனைத்தையும் அழித்தது ஏன்?

மாற்று கருத்து கொண்டவர்களை கொன்றது ஏன்?

தனி நபரை கொன்றால் பிரச்சனை தீர்ந்து விடுமா? ஒருவன் போனால் இன்னொருவன்! பிரேமதாசாவை நாம் அன்று கொன்றோம். இன்று அவனை விட மோசமான மகிந்த!

மாற்று கருத்து கொண்டவர்கள் ஏன் எதிரியுடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டி கொடுத்தார்கள் என்று கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாசாவைக் கொன்றது யார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாராமா? விட்டால் பாக். தூதரை கொழும்பில் கொல்ல முய்ன்றதும், சிறீலங்கா கிரிக்கட் அணியை பாகிஸ்தானில் வைத்துச் சுட்டதும் தமிழர்கள்தான் என்று சொல்லுவினம் போலை..! :unsure:

போராட்ட காலம் முடிந்து புலிகள் மீது புறணிபாடுவதில் குறியாய் நிற்கின்றனர் பலர். இதனால் தமிழருக்கு எந்த விமோசனமும் வரப்போவதில்லை. மேலும் போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்று மீள ஒரு போராட்டமோ அல்லது எழுச்சியோ சாத்தியமும் இல்லை. காரணம் நாம் போராட்டம் என்னும் கட்டடத்தை ஏற்கனவே உள்ள அத்திவாரத்தின் மேல்தான் கட்டி எழுப்ப முடியும். அது உடைந்து விழும். இதுவே எமது இனத்தின் அமைப்பு.

மண்டையில் போட்டது என்று புலம்புவதும் மனிதாபிமானம் மனிதநேயம் மாற்றுக்கருத்துரிமை இல்லை என்று என்னும் ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் பற்றி சாகும் வரை கதைத்துக்கொண்டிருக்கலாம் வேணுமானால் அடுத்த தலைமுறையும் கதைக்கலாம். ஆனால் அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

சிங்கள பேரினவாதம் என்ற ஒரு பெரும் சக்தி உருவாகி தமிழினத்தை ஒடுக்கும் போது அதை எதிர்கொள்ள முப்பதில் இருந்து முப்பத்தைந்து ஆயுதப்போராட்ட இயக்கங்கள் உருவானது. அதைவிட இடதுசாரியப்போக்குடையோர் வலது சாரியப்போக்குடையோர் புத்திஜீவித குழுக்கள் காந்தியவாதிகள் என்னும் பல போக்குடைய குழுக்கள் மற்றும் தனித்த கருத்துடைய தனிநபர்கள் சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி ஏன் இப்படி சிதறி உருவாகின்றது? அவ்வாறு சிதறிய சக்திகள் ஏன் ஒருங்கிணைய முடியவில்லை? எல்லாவற்றுக்கும் புலிகாரணம் என்ற புராணங்கள் அடிப்படையில் புலியை தவிர ஏனைய குழுக்கள் இயக்கங்கள் ஒருசக்தியாகியதா? சிங்களம் தனது ஒடுக்கு முறையில் வெற்றி கண்ட பின்னரும் இதில் மாற்றம் இல்லை. தாயகத்தை விட்டு வேறு நாடுகளிலும் இந்த மாற்றம் இல்லை.

புலி மண்டையில் போட்டது மட்டும் தான் வரலாறா? பிளட்டின் உட்படுகொலைகள் ஆயிரக்கணக்கில் . ரெலோவின் பொபி தாஸ் சண்டைகள். ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் நடந்த உள் முரண்பாடுகள் கொலைகள் ஏராளம். புலிகள் இயக்கத்துள்ளும் மாத்தையா கருணா போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றது.

எத்தனை ஆயிரம் மக்கள் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களால் பலியிடப்பட்டனர்? கடத்தப்பட்டனர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்! ஆனால் எல்லாமும் சேர்ந்து தமிழர்கள்?

ஏன் எமக்குள் இத்தனை வெறுப்புகள்? பொறுமை இன்மை? ஏன் எமக்குள் ஒன்றுபடமுடியாத மனநிலை? துப்பாக்கிகளை எவ்வளவு சுலபமாக எம்மினத்திற்குள் வெடிக்கவைக்கின்றோம் ! இவை எல்லாம் எப்படி சாத்தியமாகின்றது?

ஏனெனில் நாம் இன அடிப்படையில் ஒருவரை ஒருவர் நேசித்து அன்புசெலுத்தும் மக்கள் கூட்டமாக நிச்சயமாக இல்லை. இன அடிப்படையில் ஒருவரை ஒருவர் நாம் ஏற்றுக்கொண்டது கிடையாது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததும் கிடையாது. நாம் கருத்தளவில் இனமாகவும் அதற்கொரு தேசியம் என்றும் எம்மை நாமே ஏமாற்றினோம் தவிர அதற்குரிய தகுதிகள் எம்மிடம் இருந்ததில்லை.

நாம் தமிழர் என்று தாரளாமாக சொல்லலாம். ஆனால் தமிழர் என்பதற்காய் கீழ்சாதியும் மேல்சாதியும் சம்மந்தியாகிறார்களா? மனிதநேயம் குறித்து எங்களில் சிலர் கதைப்பது வேடிக்கையானது. இந்த இனமே மனிதநேயத்துக்கு எதிரானது. நாலுபேர் இருக்கும் சபையில் கீழ்சாதி சாப்பிட உட்கார்ந்தால் மேல்சாதிகள் எழுந்துசெல்லும் பழக்கமுடைய இனத்தில் மனிதநேயம் எங்கே இருக்கின்றது? எத்தனை எத்தனை ஆயிரம் மக்கள் ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மேல்சாதிகளில் வசைபாடல்களில் மனவேதனைப்பட்டிருப்பார்கள்? சிரட்டையில் தண்ணீரும் தனியான தட்டில் சப்பாடும் போட்டு வேற்றுமை காட்டும் போது எத்தனை இதயங்கள் வரலாறு நீளவும் வேதனைப்பட்டிருக்கும்? நீங்கள் என்ன ஆக்கள் என்று விடுப்பு புடுங்கும் போது அடுத்தவனை தாழ்த்தும் போது, மதம் சொல்லி ஊர் சொல்லி ஏளனம் செய்யும் போது முழு வாழ்கை முறையுமே ஒருவனை ஒருவன் வேதனைப்படுத்துவதான சமுதாயத்தில் மனிதநேயம் எப்படி மலர முடியும்? தடால் என்று நாம் எல்லோரும் தமிழர்? என்ன ஒரு கோமாளித்தனம் இது!

சிங்களப்பேரினவாதம் எம்மை தமிழர் என்ற பெருவட்டத்துள் தள்ளிவிட்டது. நாமோ எமக்கு நாமே போட்டுக்கொண்ட சாதி மத பிரதேசவாத பேதங்கள் என்னும் சிறு வட்டத்தை உடைத்து வெளியே வரமுடியாத ஜந்துக்களாக பிரண்டு கிடக்கின்றோம்.

இந்த சாதி மத பிரதேசவாதப்பிரச்சனைகள் ஒருவனை ஒருவன் இன அடிப்படையில் மட்டுமல்ல சக மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்வதை நிராகரிக்கின்றது. நீண்ட வரலாற்றை உடைய இந்த நிராகரிப்பு வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாகி தனித்துவமான ஒரு மன இயல்பை வளர்த்துவிடுகின்றது. இந்த மன இயல்பு எல்லோருக்குள்ளும் ஆழமாக வேரோடி இயங்குகின்றது. மண்டையில் போடுவது முதல் ஒருவனை ஒருவன் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கும் ஒன்றுபட முடியாமைக்குமான வேர்களை தேடிப்போனால் சாதி மத பிரதேசவாதபேதங்களுக்கு சென்றடையும்.

இது ஒரு உணர்வு நிலை. திருத்த முடியாத பிரச்சனை. பிரச்சனை என்பதை விட விசர் என்று சொல்லலாம். மனநோய். தெரிந்தே செய்யும் தவறுகள். ஒவ்வொருவனும் அடிவயிற்றில் மலத்தை சுமந்து கொண்டு துப்பரவுத்தொழிலாளியை நாயை விடக் கேவலமாக நடத்துகின்றான். வீடுகட்ட அடிமட்ட தொழிலாளர் வேண்டும் பின்னர் அவனை வீட்டுக்கு உள்ளே விட முடியாது. குடிப்பதற்கு சீவல் தொழிலாளியின் கள்ளு வேண்டும் ஆனல் அவனை வீட்டுக்குள் அழைக்கவோ அவன் வீட்டுக்கு போகவோ முடியாது. இப்படி எத்தனை எத்தனை அர்த்தமற்ற செயற்பாடுகள் பிடிவாதங்கள் ! செய்வது பிழை என்று தெரிந்தும் எத்தனை பிடிவாதம். இதற்குள் மனிதநேயம் !

நாம் ஏன் வெளிநாடுவந்தோம்? உள்ள சனங்களும் வெளிநாடு போக ஆசைப்படுகின்றது. இந்த வெள்ளைகள் நேற்று எங்களை அடக்கி ஆண்டவர்கள். மக்கள் போராடுவதை விட சிங்களவனுடன் ஏதோ கிடைப்பதை பெற்று வாழலாம் என்று அடிக்க அடிக்க அவனிடமே ஓடுகின்றார்கள். இதெல்லாம் ஏன்? அடிமைகளாய் இருப்பது எமக்கொரு பிரச்சனையே இல்லை. காலாகாலம் நாம் சாதிய ரீதியில் அடிமைகளாகவும் அடிமைப்படுத்தவும் பழக்கப்பட்டுவிட்டோம். அந்த மனநிலையை பெற்றுவிட்டோம். அடிமைக்குணம் எமக்கு இயல்பானது.

எங்கட நோய்கு மருந்து இல்லை. இந்த நோய் முற்றாக குணமானால் தான் இனம் என்ற ஒரு பதத்துக்குள் நாம் ஐக்கியப்பட முடியும் தவிர நாம் தமிழை பேசுகின்றோம் தமிழர் தமிழ்தேசியம் நாடுவேண்டும் என்றால் அது சாத்தியப்படாது. இதைத்தான் அனுபவத்தில் கண்டுள்ளோம்.

புலம்பெயர் நாட்டில் நாம் ஏன் வீதியில் இறங்கிப்போராடினோம்? எமக்கொரு நாடு வேண்டும். எமது இனம் சுதந்திரம் பெற வேண்டும். இது வளர்த்துக்கொண்ட கருத்து. எமக்கான கருத்து. தவிர ஏக மக்களுக்கானதும் இல்லை. நாம் அதே மூச்சுடன் வன்னி மக்களின் அவலத்துக்காக போராடிக்கொண்டிருப்போமான

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த ஒருவரை இறக்கவில்லை என்று கூறுவது, ஒரு சமூகம் தன் பகுத்தறிவைக் கூட இழந்து நிற்கின்றது என்பதே அர்த்தமாகும். இப்படி இறக்கவில்லை என்பது ஆகப் பெரும்பான்மையிடம் உளவியல் சார்ந்த நோயாக இருப்பதைக் நாம் காணமுடியும். சிறுபான்மையிடம் இது பிழைப்பு சார்ந்தது. பினாமி சொத்துச் சார்ந்த அரசியல் மோசடி.

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

  • கருத்துக்கள உறவுகள்

போராடினாலும் அழிவோம் போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது

தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உண்மையில் உழைக்க நினைப்பவர்கள்

ஒரு கணம் தலைவணங்கிவிட்டு...

தமக்குள் ஒரு நிலையெடுத்து..

மீண்டும் தமது கடமையை செய்ய புறப்படுவர்

அவர்கள் தான் எமக்கு வேண்டும்

அதுவே நிலையானது

இவர்களுக்கு பலமுறை எழுதி கேட்டுவிட்டேன்

உங்களால் ஏதாவது எம் மக்களுக்கு செய்யமுடியுமாயின் முன் வையுங்கள் என்று.

ஆனால் அவர்களிடம் எம்மக்களுக்கான எந்த தெரிவுமில்லை தீர்வுமில்லை

இவர்கள் நாம் செய்வதையும் கெடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் செயலையே செய்கின்றனர்

விரும்புகின்றனர்.

எனவே நாமாவது ஏதாவது செய்ய முயற்சிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

எவனோ ஒருவன் வருவான் போராடுவான் தமிழீழம் கிடைக்கும் இதுதான் எல்லோரது ஆசையும். போராளிகளாகாமல் தந்திரமாக வாழவேண்டும் என்ற தாயகத்தில் உள்ளவரது ஆசையும் இதுதான். அந்த எவனோ ஒருவன் அவனவன்தான். எனவே இந்த மன நிலை உள்ளவரை எதுவும் கிடைக்காது.

சுகன் யதார்த்தமான வார்த்தைகள்.. ஆனால் நாங்கள் கனவுலகத்தில் வாழப் பழகிவிட்டோம். நீங்கள் அடிக்கடி சொல்லுவதுபோல் இனம் என்ற உணர்வுடன் நாங்கள் பழகுவதில்லை. குழு மனப்பான்மை (tribalism) நிறைந்தவர்கள் நாங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.