Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! :பழ நெடுமாறன் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன!

‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’

‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’

‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’

‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’

‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’

‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’

‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’

‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.

தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத்திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’

‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’

‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.

ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’

‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”

‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.

‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’

‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’

‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார்.

உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.

தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது.

இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.

சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது!

ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.

அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம்.

‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு.

ஜூனியர் விகடன்

  • Replies 63
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் மனுசி பிள்ளையள கொல்லக்குடுத்து தப்பியிருப்பாரெண்டு நாணும் றினைக்கேல,

நவம்பர் 27 சென்னாங்க கிறிஸ்மசுக்கு வரவாரெண்டு, இப்ப கேட்டா வருசப்பிறப்புக்கு வருவாராம். :)

சிங்களவர்களே பிரபாகரன் சாகவில்லை என்றுதான் சொல்கிறார்கள்

தலைவர் மனுசி பிள்ளையள கொல்லக்குடுத்து தப்பியிருப்பாரெண்டு நாணும் றினைக்கேல,

நவம்பர் 27 சென்னாங்க கிறிஸ்மசுக்கு வரவாரெண்டு, இப்ப கேட்டா வருசப்பிறப்புக்கு வருவாராம். :)

எல்லாரையும் விட நீங்கள்தான் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்த மாதிரிக்கிடக்கு.

போருத்தநிங்கள் இன்னும் கொஞ்சம் பொறுங்கோவன்...

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார்.

ஐயா சொன்னாப் பொய்யாவா போகும் நெடுமாறன் ஐயா !

ஐயா நெடுமாறன் ,

தடைமுகாம்களில் இருந்து வெளிவந்து தமிழகத்தில் உங்கள் வீடுதேடி வந்த வரும் போராளிகளுக்கு ஒரு கிலோ அரிசிக்கு வழிகாட்டத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள். உங்கள் கண்ணில் ரா இலங்கைப் புலனாய்வு எப்படித்தான் சுற்றிச்சுற்றி வரகினமோ தெரியாது.

Edited by shanthy

கே.பி . மேல வைச்சி இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் போய் விட்டது :):blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுமாறன் ,

தடைமுகாம்களில் இருந்து வெளிவந்து தமிழகத்தில் உங்கள் வீடுதேடி வந்த வரும் போராளிகளுக்கு ஒரு கிலோ அரிசிக்கு வழிகாட்டத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள்.

  1. தடைமுகாம்களில் இருந்து வெளியேறியவர்கள் நெடுமாறன் ஐயா அவர்களிடம் அரிசிக்கு உதவி கேட்டதற்கும்,
  2. அந்த உதவியை செய்யமுடியாமல் நெடுமாறன் ஐயா அவர்கள் அல்லாடியதற்கும்

உங்களிடம் உள்ள ஆதாரங்களை தெரிவிப்பீர்களா?

உங்களால் அப்படியான ஆதாரங்களை காட்டமுடியாவிட்டால் நீங்கள் எழுதியது புனைகதையே அன்றி வேறல்ல. நெடுமாறன் ஐயா அவர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்தலைவர்களாலும் அறிவாளிகளாலும், கட்சி, கொள்கை வேறுபாடின்றி மதிக்கப்படும் ஒருவர். அவர் தனக்கு உண்மை என்று தெரியாத, ஆதராமற்ற தகவல்களை வெளிப்படுத்துவது இல்லை.

nedumaran.jpg

யூட் உங்கள் கருத்தை வரவேற்கிறேன். எழுந்த மானத்தில் எல்லோரையும் எதிரியாக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.

ஐயா சொன்னாப் பொய்யாவா போகும் நெடுமாறன் ஐயா !

ஐயா நெடுமாறன் ,

தடைமுகாம்களில் இருந்து வெளிவந்து தமிழகத்தில் உங்கள் வீடுதேடி வந்த வரும் போராளிகளுக்கு ஒரு கிலோ அரிசிக்கு வழிகாட்டத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள். உங்கள் கண்ணில் ரா இலங்கைப் புலனாய்வு எப்படித்தான் சுற்றிச்சுற்றி வரகினமோ தெரியாது.

அவர் என்ன சத்திரமா அல்லது அரிசி கடையா வைத்திருக்கிறார்.?

இவரிடம் போய் உதவி கேட்பதால் தங்களை தேவையில்லாமல் மற்றவர்களிடம் அடையாளம் காட்டுகிறார்கள். இந்தியாவிற்கு வர தெரிந்தவர்களுக்கு ஒரு கிலோ அரிசிக்கு வழி தெரியாதா?

இவ்வாண்டு மாவீரர் எழுச்சிநாள் உரையை வாசித்தவர் யார். ஏன் அது ஒலிப்பதிவில் எந்த இணைத்தளத்திலும் வெளிவரவில்லை. காரணம் புரிந்தால் தெளிவு பிறக்கும்.

எனக்கு இங்கு வரும் பல பேரைப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.எமது போராட்டத்தில் நெடுமாறன் ஒரு ஆள் அவருக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம்.இந்திய அமைதிப்படை வந்து திலீபனின் தகப்பனை கொன்றதென்று அவர் எழுத அதை நம்பி நாங்களும் ஊரெழுவிற்கு தொடர்பு கொண்டால் அப்படி ஒண்டும் நடக்கவில்லை என்று இராசையா மாஸ்ரரே சொன்னார்.

ஜெயலலிதாவை நாங்கள் எல்லாம் எதிர்த்த காலத்தில் தனது மகளுக்கு மெடிகல் கொலிட்ச் அட்மிசனுக்கு போய் காலில் விழுந்த ஆள் இவர்.

இவற்றை பொக்கெட்டுக்கிள்ளைதான் தலைவரை ஒழித்து வைத்திருக்கின்றார் தேவை வரும் போது எடுத்து விடுவார்.

முட்டாள் தமிழனே உனக்கேன் நாடு.

முட்டாள் தமிழனே உனக்கேன் நாடு.

புத்திசீவிகள் நாடற்றவர்களாக வாழ்வதை ஏற்க முடியாது இருக்கின்றது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசீவிகள் நாடற்றவர்களாக வாழ்வதை ஏற்க முடியாது இருக்கின்றது.

:):blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன்,

"எனக்கு இங்கு வரும் பல பேரைப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை"

நான் சில காலம் யாழில் பதில் எழுதுவதை தவிர்த்ததிற்கு இதுவும் ஒரு கரணம், சில நாட்களுக்கு முன்னர், சுகன் எழுதியிருந்தது, உங்களின் தேசியத்துக்கு முன்னால் என்னால் பதில்/ விவாதிக்க முடியாது என்று... சாந்தி கனவில இருக்கிற ஆட்கள் நியத்திற்க்கு வாங்கோ என்று எழுத, அதற்கு ஒருவர் நாங்கள் கனவில தான் இருக்கிறம், நீங்கள் நினைவில இருக்கிற ஆட்கள் இப்ப என்ன நடக்குது என்று கேட்ட, அதையும் ஒருவர் copy பண்ணி சந்தியிட்ட திருப்ப கேள்வி கேள்படுகிறது... எல்லாம் புதுமை....இப்ப என்ன நடக்குது/ நடந்துவிட்டது? என்று கேட்பது ஒரு கெட்டித்தமான கேள்வி ??? ஒராள் கேட்டால், அதையும் திருப்ப கேட்கிற ஆட்களுக்கு?.....

கனக்க சொல்லலாம், அது வடிவில்லை...அதுக்குமேல அதில் என்ன பிரயோசனம்.... யாரும் தங்களை மாற்ற தயாராகவில்லை, இன்னுமொன்று அதில் ஒருவிதமான "அடக்குமுறை" வேறு .."சரியாய் எழுதுவது என்றால் எழுதுங்கோ இல்லாட்டி சமூகத்தை கெடுக்காதீர்கள்"... என்ற பாணி ....

இதை பற்றி முடிக்கிறதுக்கு முன்பு..

நிலாமதி அக்கா, நான் மதித்த, மதிக்கிற??.. ஒருவர் நான் யாழிற்கு வந்த போது வரவேற்றவர்...அவாவினுடைய கதைகளுக்கு பின்னஊட்டல்கள் எழுதவிலையே என்று கவலைபட்டிருக்கிறேன்... ஒரு செய்தி வந்திருந்தது... கிட்டதட்ட இப்படி " ஊடகங்களில் வந்த படம் துவரகவினது அல்ல வேறு ஒரு போராளியினது" அதற்க்கு அவ/நீங்கள் கொடுத்த பதில் ??" இணைத்த செய்திக்கு மிக்க நன்றி " ...என்னை மிகவும் பாதித்தது,, இப்படியும் மனிதர்கள் இருக்கல்லாம என்று?? அதை பார்த்தல் தெரியும் கிட்டதட்ட 1500 views ஆனால் 2 பேர்தான் பதில் எழுதியிருந்தவை ...துவாரக்கவினது, இல்லையென்றால் , நல்ல செய்தியா? அதில் உள்ள ???தமிழ் பெண்போராளிக்கு நடன்தது மிக்க கவலையில்லையா??? இது விதண்ட வாதம் அல்ல ...நீங்கள் மட்டுமல்ல, எனக்கு தெரிந்த சில பேர் என்னிடம் நேரில் பேசியிருக்கிறார்கள் நீங்கள்சொன்னமாதிரியே ...

சரி இந்த செய்திக்கு வருகிறேன்....

பிரபாகரன் இருக்கட்டும், அவரது குடும்பம் இருக்கட்டும், முக்கிய தலைவர்கள் , போராளிகள் இருக்கட்டும், அவர்கள் வருகிற நேரம் வரட்டும், போராடுகிற நேரம் போராடட்டும்... நாங்களும/ நானும் சேர்ந்து போராடுவோம்/போராடுவேன்...

ஆனால் இப்ப ....

கொஞ்சம் அடக்கி வாசிப்பம்...இலங்கையில இருக்க தமிழருக்க, வடக்கு கிழக்கில, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மல்லாவி ..மற்ற மற்ற இடங்களிலும், IDP camp இலும், அரச சிறைகளிலும் , ??? அரசங்கதின்ன்ர புனர்வாழ்வு முகாமிலும், மற்ற மற்ற வதை முகாம்களிலும் இருக்கிற தமிழருக்கு என்ன செய்யல்லாம் என்று முதலில் சிந்தித்து செய்தால் நலம் ..அதை பார்த்திட்டு மிச்ச அலுவல் பார்ப்பம்... கடைசியாய் நடந்த சுவிஸ் பேச்சுவார்த்தை குளும்பிய ஒரு காரணம் மக்களின் அவலங்கள் தீர்க்க A 9 திறக்கவில்லை என்பது தானே ..... எண்டபடியா..முதலில மக்களின் அவலங்கள் தீர்க்க ஒரு குழு அமைப்பம் பிறகு அரசியல் அபிலாசைகள் தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் பற்றி கதைப்பம் ...இல்லாட்டி .."குடல் கூழுக்கு அழ கொண்டை பூவுக்கு அழுகுது" என்றுதான் அங்குள்ளவர்கள் நினைப்பார்கள்/ நினைக்கிறார்கள்...

(கப்பலில வந்தும் நாட்டுக்க வராமல் இருக்கிற எங்கட உறவுகளுக்கையும்)

ஐயா சொன்னாப் பொய்யாவா போகும் நெடுமாறன் ஐயா !

ஐயா நெடுமாறன் ,

தடைமுகாம்களில் இருந்து வெளிவந்து தமிழகத்தில் உங்கள் வீடுதேடி வந்த வரும் போராளிகளுக்கு ஒரு கிலோ அரிசிக்கு வழிகாட்டத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள். உங்கள் கண்ணில் ரா இலங்கைப் புலனாய்வு எப்படித்தான் சுற்றிச்சுற்றி வரகினமோ தெரியாது.

நெடுமாறன் அய்யா பற்றி பேசுவதற்கு கூட தகுதி வேண்டும். கடந்த யூலையில் ஒரு சம்பவம், ஒரு ஈழத்தமிழர் அய்யாவின் அலுவலகத்தில் தங்கியிருக்க அனுமதி கேட்கிறார் தனது பெயராக ஒரு இந்துப்பெயரை சொல்கிறார். இரு தினங்கள் கடந்து அங்கு வந்த ஒரு ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அந்த நபரை கண்டு அடிக்க போகிறார். பின் அவரின் பொருட்களை சோதித்த போது அவரின் இலங்கை கடவுச்சீட்டில் அவரின் பெயராக இசுலாமிய பெயராக இருந்தது.

ஈழத்தமிழர் இறைஞ்சுவதில்லை நானறிந்த வரை அது உணவாலும் "தனி நாடகிலும்".

ஒரு கிலோ அரிசி அது இது என்று வாங்கின காசுக்கும் மேல் குரைக்காதீர்.

ஜெயலலிதாவை நாங்கள் எல்லாம் எதிர்த்த காலத்தில் தனது மகளுக்கு மெடிகல் கொலிட்ச் அட்மிசனுக்கு போய் காலில் விழுந்த ஆள் இவர்.

நெடுமாறன் அய்யாவின் குடும்பத்தில் யாரும் மருத்துவரில்லை. மருத்துவ சீட்டுக்காக யாரிடமும் அவர் கையேந்தவுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு வரும் பல பேரைப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.எமது போராட்டத்தில் நெடுமாறன் ஒரு ஆள் அவருக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம்.இந்திய அமைதிப்படை வந்து திலீபனின் தகப்பனை கொன்றதென்று அவர் எழுத அதை நம்பி நாங்களும் ஊரெழுவிற்கு தொடர்பு கொண்டால் அப்படி ஒண்டும் நடக்கவில்லை என்று இராசையா மாஸ்ரரே சொன்னார்.

ஜெயலலிதாவை நாங்கள் எல்லாம் எதிர்த்த காலத்தில் தனது மகளுக்கு மெடிகல் கொலிட்ச் அட்மிசனுக்கு போய் காலில் விழுந்த ஆள் இவர்.

இவற்றை பொக்கெட்டுக்கிள்ளைதான் தலைவரை ஒழித்து வைத்திருக்கின்றார் தேவை வரும் போது எடுத்து விடுவார்.

முட்டாள் தமிழனே உனக்கேன் நாடு.

:):blink:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்.. என்ற ஒரு சொல் தமிங்கில நாட்டில் உயிரோடு இருப்பதற்கு பெரியவர் நெடுமாறனும் ஒரு காரணம்.. அவர் மற்றவர்களை போல ஓட்டு கட்சி நடத்தவில்லை..பிரபாகரன் இறந்தாரா?இருக்கிறாரா? என்பதை நமக்கு தெரியவில்லை எனினும்.. தமிங்கில நாட்டில் அவ்வாறு கூறவேண்டியது இருக்கிறது.. பிரபாகரன் இல்லையென்றால் அவ்வளவுதான் ஈழம் போச்சு கொடுப்பதை பெற்று கொண்டு அடிமையாக வாழ பழகி கொள்ள வேண்டியதுதான்.. என்று உச்சு கொட்டி சென்றுவிடுவார்கள்.. ஏனேனில் இங்கே தலைவர் முதல் தொண்டன் வரை அனைத்து மாக்களும் இந்தியத்தின் அடிமைகளாகவெ உள்ளனர்..அடிமைக்கு அடிமைபுத்திதான் வரும்.. குறைந்த பட்சம் 13 திருத்தசட்டத்தை பொந்தியா அமுல் படுத்தாமல் தடுக்க பெரியவர் நெடுமாறன் போன்றோர் தேவை படுகிறார்..அடுத்து.. இந்த அரிசி பிரச்சனை.. பெரியவர் நெடுமாறன் வீடு வீடாக அரிசி சேகரித்து தோழர்களுடன் கயவன் கருநாகத்தின் எதிர்ப்பையும் மீறி நாகபட்டினத்தில் படகேற இருந்தார்.. சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.. இந்த வயதான காலத்திலும் தன்னால் முடிந்தவரை செய்து கொண்டுதான் இருக்கிறார்.. ஈழத்தவர் அவரை போய் விமர்சிப்பது சிறிதி மனதிற்கு கஸ்டமாக உள்ளது..

நன்றி:புரட்சிகர தமிழ்தேசியன்இ திருவண்ணாமலை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்.. என்ற ஒரு சொல் தமிங்கில நாட்டில் உயிரோடு இருப்பதற்கு பெரியவர் நெடுமாறனும் ஒரு காரணம்.. அவர் மற்றவர்களை போல ஓட்டு கட்சி நடத்தவில்லை..பிரபாகரன் இறந்தாரா?இருக்கிறாரா? என்பதை நமக்கு தெரியவில்லை எனினும்..

------

------ ஈழத்தவர் அவரை போய் விமர்சிப்பது சிறிதி மனதிற்கு கஸ்டமாக உள்ளது..

நன்றி:புரட்சிகர தமிழ்தேசியன்இ திருவண்ணாமலை

புரட்சிகர தமிழ்தேசியன் ,

இதனைத்தானே ..... கலைவாணி ஒரு வரியில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்திசீவிகள் நாடற்றவர்களாக வாழ்வதை ஏற்க முடியாது இருக்கின்றது.

உண்மையில் எங்களில் புத்திஜீவிகள் அதிகம்.

சுருக்கமாக சொன்னால் கூடையில் போட்ட நண்டு மாதிரி.....

அல்லது, வைக்கல் பட்டடை டோக் மாதிரி...... குலைத்துக் கொண்டே..... இருப்பார்கள்.

இப்போ புரியுதா ...... தமிழன் இதனை எல்லாம் கடந்து போக ..... கன காலம் தேவைப்படும்......

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

"எனக்கு இங்கு வரும் பல பேரைப்பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை"

நான் சில காலம் யாழில் பதில் எழுதுவதை தவிர்த்ததிற்கு இதுவும் ஒரு கரணம், சில நாட்களுக்கு முன்னர், சுகன் எழுதியிருந்தது, உங்களின் தேசியத்துக்கு முன்னால் என்னால் பதில்/ விவாதிக்க முடியாது என்று... சாந்தி கனவில இருக்கிற ஆட்கள் நியத்திற்க்கு வாங்கோ என்று எழுத, அதற்கு ஒருவர் நாங்கள் கனவில தான் இருக்கிறம், நீங்கள் நினைவில இருக்கிற ஆட்கள் இப்ப என்ன நடக்குது என்று கேட்ட, அதையும் ஒருவர் copy பண்ணி சந்தியிட்ட திருப்ப கேள்வி கேள்படுகிறது... எல்லாம் புதுமை....இப்ப என்ன நடக்குது/ நடந்துவிட்டது? என்று கேட்பது ஒரு கெட்டித்தமான கேள்வி ??? ஒராள் கேட்டால், அதையும் திருப்ப கேட்கிற ஆட்களுக்கு?.....

கனக்க சொல்லலாம், அது வடிவில்லை...அதுக்குமேல அதில் என்ன பிரயோசனம்.... யாரும் தங்களை மாற்ற தயாராகவில்லை, இன்னுமொன்று அதில் ஒருவிதமான "அடக்குமுறை" வேறு .."சரியாய் எழுதுவது என்றால் எழுதுங்கோ இல்லாட்டி சமூகத்தை கெடுக்காதீர்கள்"... என்ற பாணி ....

இதை பற்றி முடிக்கிறதுக்கு முன்பு..

நிலாமதி அக்கா, நான் மதித்த, மதிக்கிற??.. ஒருவர் நான் யாழிற்கு வந்த போது வரவேற்றவர்...அவாவினுடைய கதைகளுக்கு பின்னஊட்டல்கள் எழுதவிலையே என்று கவலைபட்டிருக்கிறேன்... ஒரு செய்தி வந்திருந்தது... கிட்டதட்ட இப்படி " ஊடகங்களில் வந்த படம் துவரகவினது அல்ல வேறு ஒரு போராளியினது" அதற்க்கு அவ/நீங்கள் கொடுத்த பதில் ??" இணைத்த செய்திக்கு மிக்க நன்றி " ...என்னை மிகவும் பாதித்தது,, இப்படியும் மனிதர்கள் இருக்கல்லாம என்று?? அதை பார்த்தல் தெரியும் கிட்டதட்ட 1500 views ஆனால் 2 பேர்தான் பதில் எழுதியிருந்தவை ...துவாரக்கவினது, இல்லையென்றால் , நல்ல செய்தியா? அதில் உள்ள ???தமிழ் பெண்போராளிக்கு நடன்தது மிக்க கவலையில்லையா??? இது விதண்ட வாதம் அல்ல ...நீங்கள் மட்டுமல்ல, எனக்கு தெரிந்த சில பேர் என்னிடம் நேரில் பேசியிருக்கிறார்கள் நீங்கள்சொன்னமாதிரியே ...

சரி இந்த செய்திக்கு வருகிறேன்....

பிரபாகரன் இருக்கட்டும், அவரது குடும்பம் இருக்கட்டும், முக்கிய தலைவர்கள் , போராளிகள் இருக்கட்டும், அவர்கள் வருகிற நேரம் வரட்டும், போராடுகிற நேரம் போராடட்டும்... நாங்களும/ நானும் சேர்ந்து போராடுவோம்/போராடுவேன்...

ஆனால் இப்ப ....

கொஞ்சம் அடக்கி வாசிப்பம்...இலங்கையில இருக்க தமிழருக்க, வடக்கு கிழக்கில, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மல்லாவி ..மற்ற மற்ற இடங்களிலும், IDP camp இலும், அரச சிறைகளிலும் , ??? அரசங்கதின்ன்ர புனர்வாழ்வு முகாமிலும், மற்ற மற்ற வதை முகாம்களிலும் இருக்கிற தமிழருக்கு என்ன செய்யல்லாம் என்று முதலில் சிந்தித்து செய்தால் நலம் ..அதை பார்த்திட்டு மிச்ச அலுவல் பார்ப்பம்... கடைசியாய் நடந்த சுவிஸ் பேச்சுவார்த்தை குளும்பிய ஒரு காரணம் மக்களின் அவலங்கள் தீர்க்க A 9 திறக்கவில்லை என்பது தானே ..... எண்டபடியா..முதலில மக்களின் அவலங்கள் தீர்க்க ஒரு குழு அமைப்பம் பிறகு அரசியல் அபிலாசைகள் தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் பற்றி கதைப்பம் ...இல்லாட்டி .."குடல் கூழுக்கு அழ கொண்டை பூவுக்கு அழுகுது" என்றுதான் அங்குள்ளவர்கள் நினைப்பார்கள்/ நினைக்கிறார்கள்...

(கப்பலில வந்தும் நாட்டுக்க வராமல் இருக்கிற எங்கட உறவுகளுக்கையும்)

உங்களின் கருத்துக்கள் ஒரு பக்க கண்ணோட்டமாக பார்த்தால் நியாயமானவைதான். ஆனால் மறுபக்கத்தில் வேறுமாதிரியானவை.

தலைவருக்கும் போராளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒவ்வொரு போராளிகளும் தலைவரைபோலவே தயகவிடுதலைக்கா தம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழந்தும் காட்;டி இறந்தும் காட்டியுள்ளார்கள். இந்த இடத்தில் எந்த வித்pயாசமும் இல்லை.

ஆனால் எதிரியின் குறி தலைவன் மீதே உள்ளதே? ஏன்?

தலைவனால் பல ஆயிரம் போராளிகளை உருவாக்க முடிகின்றது. ஒவ்hவொரு கரும்புலியும் எனது தலைவன் எனது இலட்சியத்தை உயிரோடு உள்ளவரை முன்னெடுப்பான் என்ற உறுதியோடுதான் தாக்குதலுக்கு போகின்றார்கள். அவர்களுக்கு தாம் வாழ்வதிலும் தமது கொள்கை வாழ்வதே மேலானாது.................. அவர்கள் அதை அளவு கடந்து காதலிக்கின்றார்கள்.

ஒரு பெண்போராளி இறந்த போது அதை துவாராக என்று காட்ட வேண்டிய கட்டாயம் எதிரிக்கு ஏன் வருகின்றது? உங்களின் கேள்விக்கான பதில் இந்த கேள்வியின் விடையாக வருகின்றது.

அதற்காக அந்த பெண்போராளியின் தியாகத்தை நாம் மறந்தாகவோ மறுப்பதாகவோ பொருள் இல்லை. ஒவ்வொரு ஈழதமிழனும் சிங்கள காடைகளால் கொல்லபடும்போது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனது குருதியும் ஒருமுறை ஆடித்தான் அடங்குகின்றது. ஆனால் ஒரு போராளி வீழும்போது நாம் வாடியும் போகிறோம்................ இந்த வாழ்வை எமக்கு அளித்த கடவுள்கள் அவர்கள்.

தாயகவிடுதலை என்றால் என்ன? ஒருவன் தமது நாட்டை ஏன் மதிக்க வேண்டும்............ அதற்காக ஏன் உழைக்க வேண்டும் என்பதெற்கெல்லாம் சரியான பதில் தெரியாத குழப்பவாதிகள்தான். மேலே நீங்கள் சுட்டிகாட்டிய குழப்பமான கேள்விகளை கேட்டுகொண்டிருப்பார்கள். போராளியின் மரணத்தால் பாதித்தது போன்று பாசாங்கு செய்வார்கள். உண்மையான கடமை உணர்வுள்ளவன் ஒருதரம் தனது தலையை குனிந்துவிட்டு சென்றுகொண்டே இருப்பான். காரணம் அதை தனது கடமை என்று அவன் எண்ணுகின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சொன்னாப் பொய்யாவா போகும் நெடுமாறன் ஐயா !

ஐயா நெடுமாறன் ,

தடைமுகாம்களில் இருந்து வெளிவந்து தமிழகத்தில் உங்கள் வீடுதேடி வந்த வரும் போராளிகளுக்கு ஒரு கிலோ அரிசிக்கு வழிகாட்டத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள். உங்கள் கண்ணில் ரா இலங்கைப் புலனாய்வு எப்படித்தான் சுற்றிச்சுற்றி வரகினமோ தெரியாது.

நெடுமாறன் ஐயா போலி அரசியல் செய்கின்றார்!

ஒரு கிலோ அரிசியை பெற்றுகொடுக்க வக்கில்லாதவாராகவா நீங்கள் இருக்கின்றீர்கள்? நீங்கள் போய் கிழிக்கலாமே?

உங்கள் கூடிபிறந்த உறவுகள் பற்றிய அக்கறை உங்களுக்கில்லாதபோது. பக்கத்து நாட்டு அரசியல் வாதிக்கு என்ன வில்லங்கம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணி,

நான் முதலே சொன்னான், இது ஒரு விதண்ட வாதம் அல்ல என்று... நீங்கள் சொல்லுவது சரி, அந்த போராளியை துவராக என்று சொன்னால் தான் செய்தி.. இல்லாவிட்டால் 10 ஓடு 11 , எங்களுக்கும் சரி, மற்ற மற்ற ஆட்களுக்கும் சரி... ஆனால் அதை எங்கட ஆட்கள் சொல்லும் போது மனக்கஸ்ரமாக இருக்கிறது என்றுதான் சொன்னேன்..

""தாயகவிடுதலை என்றால் என்ன? ஒருவன் தமது நாட்டை ஏன் மதிக்க வேண்டும்............ அதற்காக ஏன் உழைக்க வேண்டும் என்பதெற்கெல்லாம் சரியான பதில் தெரியாத குழப்பவாதிகள்தான். மேலே நீங்கள் சுட்டிகாட்டிய குழப்பமான கேள்விகளை கேட்டுகொண்டிருப்பார்கள். போராளியின் மரணத்தால் பாதித்தது போன்று பாசாங்கு செய்வார்கள். உண்மையான கடமை உணர்வுள்ளவன் ஒருதரம் தனது தலையை குனிந்துவிட்டு சென்றுகொண்டே இருப்பான். காரணம் அதை தனது கடமை என்று அவன் எண்ணுகின்றான்.""

உதுக்கு என்னிடம் பதில் இல்லை... இந்த கேள்வியை யார் கேட்டலும், முதலில் தங்களை நோக்கி கேட்ட நல்லம் என்று நினைக்கிறனான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவளவு காலமும் நாங்கள் அடிமையாக வாழ்ந்தோம் என்றும் அடிமைச்சங்கிலியை உடைப்பதற்கு போராடினோம் என்றும்தேசிய ஊடகங்களின்மூலம் பிரச்சாரம் செய்தோம். இன்று ஒரு தேசிய ஊடக தொகுப்பாளர் உறவு......சங்..... நிகழ்சியில் அவை பொய் நாங்கள் எப்பொழுதும் அடிமையாக இருக்கவில்லை நல்ல பதவிகள் வகித்து நல்லநிலையில் நன்றாகத்தான் இருந்தோம் என்று சொன்னதை கேட்டிருப்பீர்கள்.

நெடுமாறன் ஐயாவின் அரசியலை பார்த்தால் தலைவரும் அவரது குடும்பமும் உயிருடன் இருக்கிறார்கள். சரி இருப்பதாகவே வைத்துக்கொண்டு கருத்துச்சொல்லுவோமானால்

தலைவரையும் அவரது குடும்பத்தையும் காப்பதற்கு 50000 உயிர்களை பலிகொடுத்தோம் என்று ஆகிவிடாதா?

போராட்டத்துக்காக உயிர்விட்ட 2? ஆயிரம் போராளிகளின் நோக்கம் எப்படி முடிந்திருக்கிறது?

முள்ளிவாய்க்கலைவிட அநியாயமாகச்செத்த லச்சம் பொதுமக்களின் பெறுமதி என்ன?

இதுவரை எதற்காக அடிமைகள் என்று சுத்தினார்கள்?

எங்களது போராட்டத்தின் நம்பகத்தன்மை என்ன? :)

ஐயா சொன்னாப் பொய்யாவா போகும் நெடுமாறன் ஐயா !

இதை நான் சொன்னா நம்பவா.... போறீங்க :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதுபவர்களை குறை நினைக்கவேண்டாம் அவர்கள் தமது ம(தி)னதில் பட்டதை எழுதிகிறார்கள்,

ஒரு புராண கதையுண்டு "கிருஸ்ணர் தர்மர் துரியோதனன் இருவரையும் அழைத்து உலகை சுற்றி பார்த்து வரும்படி கூறினார்

இருவரும் உலகை சுற்றிப்பார்த்து விட்டு கிருஸ்ணரிடம் சென்றனர்,தனித்தனியே தர்மர்,துரியோதனைப்பார்த்து உலகு எவ்வாறு உள்ளது எனக்கேட்டார் அதற்கு

உலகம் முழுவதும் அயோக்கியர்கள்தான் வாழ்கிறார்ர்கள் என்று கூறினார்,ஆனால் தர்மன் உலகம் அமைதியாகவும் சிறப்பாகவும் உள்ளது,மக்கள் நல்லொழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்றார்.

நோய்கள் வராமல் இருக்க உடம்பு மட்டுமல்ல மனமும் சுத்தமாக இருக்கவேண்டும்.(மன நோய்)

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு காலமும் நாங்கள் அடிமையாக வாழ்ந்தோம் என்றும் அடிமைச்சங்கிலியை உடைப்பதற்கு போராடினோம் என்றும்தேசிய ஊடகங்களின்மூலம் பிரச்சாரம் செய்தோம். இன்று ஒரு தேசிய ஊடக தொகுப்பாளர் உறவு......சங்..... நிகழ்சியில் அவை பொய் நாங்கள் எப்பொழுதும் அடிமையாக இருக்கவில்லை நல்ல பதவிகள் வகித்து நல்லநிலையில் நன்றாகத்தான் இருந்தோம் என்று சொன்னதை கேட்டிருப்பீர்கள்.

நெடுமாறன் ஐயாவின் அரசியலை பார்த்தால் தலைவரும் அவரது குடும்பமும் உயிருடன் இருக்கிறார்கள். சரி இருப்பதாகவே வைத்துக்கொண்டு கருத்துச்சொல்லுவோமானால்

தலைவரையும் அவரது குடும்பத்தையும் காப்பதற்கு 50000 உயிர்களை பலிகொடுத்தோம் என்று ஆகிவிடாதா?

போராட்டத்துக்காக உயிர்விட்ட 2? ஆயிரம் போராளிகளின் நோக்கம் எப்படி முடிந்திருக்கிறது?

முள்ளிவாய்க்கலைவிட அநியாயமாகச்செத்த லச்சம் பொதுமக்களின் பெறுமதி என்ன?

இதுவரை எதற்காக அடிமைகள் என்று சுத்தினார்கள்?

எங்களது போராட்டத்தின் நம்பகத்தன்மை என்ன? :)

http://www.youtube.com/watch?v=Lh8e3dVBjdM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.