Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராஜினாமாச் செய்ய முடிபு! - ஆதரவாளர்கள் அதிருப்தி; முடிபை மாற்றுமாறு வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

தனது இராஜினாமா பற்றிய தகவலை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாகவும் எனினும் அதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதான செய்தி கசியத் தொடங்கியதும் அவரின் ஆதரவாளர்களும் பொது அமைப் புக்களின் பிரதிநிதிகளும் அவருடன் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தொடர்பு கொண்டு இராஜினாமாச் செய்யும் முடிபைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.

http://www.valampurii.com

  • Replies 79
  • Views 7.2k
  • Created
  • Last Reply

தேவானந்த மிக நல்ல நாடக கலைஞன்.

தனது இயக்க முன்னணி உறுப்பினர்களை (அற்புதன், ...... மகேஸ்வரி....,) திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, வேறுசில செல்வாக்கான உறுப்பினரை (ஹரி....) சிங்கள சிறையில் அடைத்துவிட்டு, தற்கொலை அங்கிகளுடன் 'செட் அப்' வெடிக்கவைத்துவிட்டு, பல தமிழரை படுகொலை செய்துவிட்டு, வவுனியா, யாழ், கொழும்பில் மிரட்டி, கடத்தி கப்பம் வாங்கிவிட்டு, 2500 க்கு யாழ் பேரூந்து ஓடிவிட்டு, எதுவுமே தெரியாத அப்பாவி போல இருப்பதில் கில்லாடி.

அரசியலிலும் ஏமாறக்கூடிய தமிழ் மக்களை ஏமாற்ற, வடக்கு கிழக்கு இணைப்பு, மத்தியில் கூட்டாச்சி - மாநிலத்தில் சுயாட்சி என்று ஏமாற்றிக்கொண்டு, சிங்களவனுடன் அரசியல் எதுவும் பேசாமல் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதில் கில்லாடி.

தற்போது எதற்காக நாடகம் என்பது போகப்போக விளங்கும்.

ஆசான் அண்ணா ஒன்றைத்தொடங்கினால் அரைகுறையில் விடக்கூடாது.புலிகள் எவ்வளவு காலம் எத்தனை தரம் போட முயற்சித்தவர்கள் தற்கொடைதாக்குதல்? உட்பட அந்த ஆள் அதிலும் தப்பி இப்ப உயிர் வாழுது.

இப்ப அந்த ஆள் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு போஸ் கொடுத்துக்கொண்டு நிக்குது அவற்றை சைட்டை முடிந்தால் ஒருக்கா பார்க்கவும்.

எங்கட தலைவர் தானும் செத்து மக்களையும் கொண்டெல்லோ போட்டார்.சரித்திரத்தில தான் பேர் வரும் மற்றப்படி ஒண்டுமில்ல.நாளைக்கு நீங்கள் யாழ்ப்பாணம் போனால் அவருக்கு தான் சலூயுட் அடிக்க வேணும் இப்பவே பயிற்சி எடுங்கோ.

இதென்ன புக்கரச்சல்ப்பா...

:wub::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

drunk-irish-048.gif47831.gif

கேக்கிறவன் கேனையனாயிருந்தால்....... எருமை ஏரோப் பிளேன் ஓட்டுமாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவ்வளவு காலமும் கிட்டத்தட்ட 5 வீத வாக்குகளைத்தானே இவர் பெற்று வருகிறார். இப்ப மட்டும் 5 வீதத்துக்கு குறைவாகப் பெற்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பை அடக்க முடிய வில்ல :lol::wub:

அடேங் அப்பா ........கலைஞர் கருணாநிதியையே அரசியல் விளையாட்டில் மிஞ்சிற அளவுக்கு இலங்கை தமிழன் வளர்ந்ததையிட்டு பெருமைப்படுவம்............... :wub::lol: :lol:

இவன் தற்கொலை செய்யப்போறன் என்று சொன்னாலும் எல்லாரும் வாழ்த்துவார்களே தவிர முடிவை மாற்றச்சொல்ல மாட்டார்கள். அறிக்கைப்போரிலை கருணாநிதியையும் வெண்டிடும் டக்கு :wub:

எங்கட தலைவர் தானும் செத்து மக்களையும் கொண்டெல்லோ போட்டார். எங்கட தலைவர் தானும் செத்து மக்களையும் கொண்டெல்லோ போட்டார்.சரித்திரத்தில தான் பேர் வரும் மற்றப்படி ஒண்டுமில்ல.

அர்ஜுன் உங்கள் ஆதங்கம் நன்கு புரிகிறது.

இந்த இடத்தில் பாமர மனிதனுக்கு வரக்கூடிய இந்த உணர்வு - அது சரியோ பிழையோ - அதை நான் மதிக்கிறேன்.

நாளைக்கு நீங்கள் யாழ்ப்பாணம் போனால் அவருக்கு தான் சலூயுட் அடிக்க வேணும் இப்பவே பயிற்சி எடுங்கோ.

ஆனால் அதர்மம் தலைவிரித்தாடும் சூழ்நிலைகளில் எட்டப்பர்கள் மரணிப்பது அரிது என்பதை ஞாபகம் வையுங்கள்.

யாராவது எம் இனத்துக்கு நன்மைதரும் உறுதியான கொள்கையுடன் வாழ்ந்தால் அவர்களை பாராட்டலாம்.

எம்மவர்களின் உரிமையை விலைபேசி, எதிரிகளுடன் இணைந்து, எம்மவரை சுரண்டி, படுகொலை செய்து, அழித்து வாழ்பவரை என்னவென்று சொல்வது?

அப்படிப்பட்டவர்களுக்கு "சலூட்" அடிக்க வேண்டிவரும் என்று சொல்லுமளவுக்கு உங்கள் மனதில் ஒரு அடிமைத்தன எண்ணம் தோன்றியது ஏன் அர்ஜுன்? இதுதான் உடன்பாட்டு அரசியலோ?

  • கருத்துக்கள உறவுகள்

1995 ஒக்ரோபர் என்று நினைக்கிறேன்.. சிங்களப் படைகள் ரிவிரச இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்க.. இந்த அதி உத்தம 5% வாக்குகள் அமைச்சர் சிறீலங்கா அரச தொலைக்காட்சியில் தோன்றி சொன்னார்..

எங்களின் அரசியல் நிலைப்பாடு " மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" வடக்குக்கிழக்கு இணைந்த மாநிலம் என்ற நிலைப்படுகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று.

அதன் பின்னர் இன்னொன்றையும் சொன்னார் பிரபாகரன் போராட்டத்தைக் கைவிட்டால் தான் அடுத்த கணமே அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று.

இந்த முன்னாள் ஈ பி ஆர் எல் எவ் மக்கள் இராணுவ கோவில் கொள்ளைக் கூட்டத்தளபதி நேரத்துக்கு நேரம் தனது அரசியல் இருப்பை பாதுகாக்க இவ்வாறு உளறல் அறிக்கைகள் விடுவது இயல்பானது.

1996 இல் சிங்களப் படைகள் யாழ்ப்பாணத்தை பிடித்து தமிழ் இளைஞர்களை கைது செய்ய காட்டிக் கொடுப்புக்களை செய்தவரும் இவரும் இவரின் கைக்கூலிகளும் தான். பின்னர் அரசியலுக்காக கைது செய்யப்பட்டவர்களை எடுத்துவிடுகிறேன் என்று பெருந்தொகைப் பணத்தை அப்பாவி மக்களிடம் அறவிட்டுக் கொண்டு மகேஸ்வரியை வைத்து தானே பிடித்துக் கொடுத்த இளைஞர்களை தானே விடுவித்த சித்து விளையாட்டுக்காரன் இவர்.

யாரோ கூவுகிறார்கள்.. இவரை புலிகள் கொல்ல முற்பட்டதாக. இவர் கொழும்பில் எப்படி இருக்கிறார் என்று அந்த கூவும் கூட்டத்தினர் போய் பார்த்துவிட்டு வந்து கூவ வேண்டும். இவரின் அலுவலகம் ஒரு ராஜதானி போல. எங்கும் ஆயுத தாரிகளும் அரச படைகளும் காவல் நிற்க இவர் ஒளிப்புமறைப்பு குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பார்.

இன்று இவர் யாழ்ப்பாணத்தில் சந்தி தரிசனம் செய்கிறாராம். ஏன் முடியாது. இவரின் ஆயுததாரிகள் புடை சூழ.. சிங்களப் படைகள் சூழ்ந்து நிற்க எவன் தான் செய்யமாட்டான் சிங்கள விசுவாச அரசியல். இவ்வளவும் தந்தால் நான் யாழ்ப்பாணத்தில் சவாரி விடுவேன்.

இயலும் என்றால் உண்மையான மக்கள் பிரதிநிதி என்றால்.. துணை இராணுவக்குழுக்களை கலைத்துவிட்டு சிங்களப் படைகளை தமிழர் தாயகத்தில் இருந்து விரட்டிவிட்டு இந்த மனிதன் மக்கள் முன் வரட்டும். அதுதான் பரிகாரம் இவர்கள் செய்த அநியாயத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகள் இந்தியக் கோமாளிகளைப் போல் வளர்ந்து வருகிறார்கள் என்று நினைக்கும் போது புல்லரிக்குதுதப்பா!

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அரசியல் வாதிகள் இந்தியக் கோமாளிகளைப் போல் வளர்ந்து வருகிறார்கள் என்று நினைக்கும் போது புல்லரிக்குதுதப்பா!

இந்த துரோக கொலைக்காரக் கொள்ளைக்காரனை எங்கள் அரசியல்வாதி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா புத்தன்.

என்னைப் பொறுத்தவரை இவர்களை நான் என்றும் ஜனநாயகவாதிகளாக அடையாளம் கண்டதும் இல்லை.. அரசியல்வாதிகளாக அடையாளம் கண்டதும் இல்லை.

கொழும்பில் இருந்த போது பல்கலைக்கழகம் சார்ந்த ஒரு நூலை வெளியிட அமைச்சர்களின் வாழ்த்துச் செய்தியை பெறச் சொன்னார்கள். அப்போது கூட இவனை நாங்கள் யாரும் அணுகவில்லை. வேறு சில மலையக மற்றும் மகேஸ்வரன் போன்றவர்களையே அணுகி வாழ்த்துச் செய்திகளைப் பெற்றோம். இவனோடு ஒப்பிடும் போது அவர்கள் பறுவாயில்லை என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், on 29 January 2010 - 09:10 AM, said:

மன்னிக்க வேண்டும் எங்கள் அரசியல் வாதிகள் என்று துரோகிகளையும் சேரத்து எழுதியதற்கு! தவறைச் சட்டிக் காட்டியதற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த வருடத்தின் மிகப்பெரிய பகிடியாகத்தான் தெரிகிறது

ஆனால் இன்று தமிழனின் இன்றைய நிலையில் .....

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவனுக்கும் கடைசி ஆசையைச்சொல்ல அனுமதியுண்டு

என்னதான் சொல்ல செய்ய வாறார் என்று கேட்கலாமே....

ஸ்சப்பா....

கருணாநிதி பிச்சை வாங்கவேணும் இவனிட்ட...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

தமிழனை ஏலம் போடும் பலமா அல்லது தமிழனுக்காக பேரம் பேசும் பலமா?

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதான செய்தி கசியத் தொடங்கியதும் அவரின் ஆதரவாளர்களும் பொது அமைப் புக்களின் பிரதிநிதிகளும் அவருடன் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தொடர்பு கொண்டு இராஜினாமாச் செய்யும் முடிபைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.

கருனாநிதியின் ஜீன்ஸ் இருக்கத்தானே செய்யும்....வாழ்க டக்கிளஸ்....

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதான செய்தி கசியத் தொடங்கியதும் அவரின் ஆதரவாளர்களும் பொது அமைப் புக்களின் பிரதிநிதிகளும் அவருடன் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தொடர்பு கொண்டு இராஜினாமாச் செய்யும் முடிபைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.

http://www.valampurii.com

அவர்நல்லமுடிவை தங்களுக்கு அறிவிப்பார்

எவரும் அவசரப்பட்டு தீக்குளிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

அதுசரி

இவருக்கு ஆதரவாளர்கள் எவர்...

நான் சலூட் அடிக்க வேண்டிவரும் என்று எழுதியது கூட ஒரு ஆதங்கமே.

6 கோடி தமிழன் உள்ள தமிழ்நாடில் அப்படி ஒருவன் இல்லாமல் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலம் முதல் இன்றுவரை இந்த கருணாநிதிதான்(இடைக்கிடை விட்டு விட்டென்றாலும்)ஆளுது. டீ.வீ யில் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் பார்க்கும் போது எப்பேர்பட்ட அறிவாழிகள் தொடக்கம் பெரியவர்கள் வரை முதல்வர் என்ற ஒரு காரணத்திற்காக தூக்கிப்பிடிக்க வேண்டியநிலை. இதே நிலை போகிற போக்கில் எங்களும் வந்துவிடுமோ என்றொரு பயம் மனதில் எழத்தொடங்கிவிட்டது.

நீங்கள் ஆயிரம் தான் சமாதானம் சொல்லலாம், முழு இலங்கையும் நீலம்,பச்சையாக மாறக்கூடிய ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுவோமோ என்றொரு பயம் பலர் மத்தியில் உள்ளது.அங்குள்ள எமது தலைமைகளை பிரித்து நாம் இங்கு எதோ புடுங்கப்போகின்றோம் என்பது அங்குள்ள மக்களை எங்களிடம் இருந்து அன்னியப்படுத்துவதாகவே முடியும்.

மகிந்தாவின் அறிக்கையை பார்த்தால் தெரியும் வட,கிழக்கில் தான் தோத்தாலும் பரவாயில்லை ஒரு சிங்கள கட்சிக்கு தமிழர்களின் வாக்கு விழுந்ததென்று பெருமைப் பட்டு கொள்ளுகின்றார்.பிள்ளையானுக்கும்,சித்தார்தருக்கும் கட்சிகளை கலைத்து விட்டு தன்னுடன் சேருபடி ஒரே நெருக்குவாரம்.அடுத்த 8 வருடத்தில் எதுவும் நடக்கலாம் என்றநிலை. இதற்குள் நாம் இன்றும் எமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவதை விட்டு துரோகி பட்டியலை நீட்டிக்கொண்டே போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்நல்லமுடிவை தங்களுக்கு அறிவிப்பார்

எவரும் அவசரப்பட்டு தீக்குளிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

அதுசரி

இவருக்கு ஆதரவாளர்கள் எவர்...

:lol::lol::lol:

அர்ஜுன் - உங்கள் மறுபதிலில் கூறப்பட்ட விடயங்கள் சிந்திக்கப்பட வேண்டியதே.

சிறுசிறு முரண்பாடுகளுக்காக எம்மவர்களை எடுத்தவுடன் துரோகி என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை, இதுவரை இருந்ததும் இல்லை.

ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழின விரோத செயற்பாடுகளை தமிழினப் படுகொலையாளர்களுடன் இணைந்து முன்னெடுத்து வருபவர்களை என்னவென்று சொல்வது? அப்படியானவர்கள் - துரோகிகள் எனப்படுவதை தவறெனக் கூற முடியுமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவானந்த மிக நல்ல நாடக கலைஞன்.

தனது இயக்க முன்னணி உறுப்பினர்களை (அற்புதன், ...... மகேஸ்வரி....,) திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, வேறுசில செல்வாக்கான உறுப்பினரை (ஹரி....) சிங்கள சிறையில் அடைத்துவிட்டு, தற்கொலை அங்கிகளுடன் 'செட் அப்' வெடிக்கவைத்துவிட்டு, பல தமிழரை படுகொலை செய்துவிட்டு, வவுனியா, யாழ், கொழும்பில் மிரட்டி, கடத்தி கப்பம் வாங்கிவிட்டு, 2500 க்கு யாழ் பேரூந்து ஓடிவிட்டு, எதுவுமே தெரியாத அப்பாவி போல இருப்பதில் கில்லாடி.

அரசியலிலும் ஏமாறக்கூடிய தமிழ் மக்களை ஏமாற்ற, வடக்கு கிழக்கு இணைப்பு, மத்தியில் கூட்டாச்சி - மாநிலத்தில் சுயாட்சி என்று ஏமாற்றிக்கொண்டு, சிங்களவனுடன் அரசியல் எதுவும் பேசாமல் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதில் கில்லாடி.

தற்போது எதற்காக நாடகம் என்பது போகப்போக விளங்கும்.

ஆசான் நீங்கள் ஒருபதிலில் அர்ஜுனுக்கு சொல்லியுள்ளீர்கள், சிறுசிறு குற்றம் இழைத்தவர்களுக்கு "துரோகி" பட்டம் கொடுக்க விருப்பமில்லை என்று...

நீங்கள் பட்டியல் இட்டவை சிறுசிறு குற்றங்களா , அல்லது மரணதண்டனை கொடுக்கும் அளவிற்கு பெரும் பெரும் குற்றங்கலா.......

இயக்க முன்னணி உறுப்பினர்களை (அற்புதன், ...... மகேஸ்வரி....,) திட்டமிட்டு கொலை செய்துவிட்டு (இவைகளை செய்தது டக்லஸ் என்றே வைத்துகொள்வோம்) .....ஒராளை சொல்லுங்கோ இப்படி செய்யாத ஆளை...தந்தை செல்வாவையும்..மற்றக்களையும் சொல்லவேண்டாம்...

பல தமிழரை படுகொலை செய்துவிட்டு, வவுனியா, யாழ், கொழும்பில் மிரட்டி, கடத்தி கப்பம் வாங்கிவிட்டு, 2500 க்கு யாழ் பேரூந்து ஓடிவிட்டு,....உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை ......திரும்பவும் சொல்லுகிறேன் ஒராளை சொல்லுங்கோ...

டக்லஸ் செய்தவற்றை சரி என்று சொல்லுவதில்லை நோக்கம் .....சும்மா வெளிநாடுகளில் இருந்து சுத்தியடிக்கிற தமிழ் தேசிய கூட்டமைபினரவிட / ஊரில தனியே அறிக்கை விடுற ஆக்களைவிட ..டக்லஸ் தேவை..அதைதான் சனம் இந்த தேர்தலிலும் காட்டியிருக்கு...44154 சனம் போட்டிருக்குதேன்றால்...எல்லாம் கள்ளவேட்டிலை, இந்தளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் போட்டாக்களை குறைசொல்ல வேண்டாம்..

44,154 24.75% /////// 113,877 63.84%

டக்லஸ் மாறவேண்டிய, போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு,... அதற்காக..மற்றவர்கள் டக்லஸ் ஐ திருத்தவேண்டியதில்லை..தங்களை தாங்கள் திருந்தினாலே போதும்..

"துரோகி" என்றொரு குறும்படம் பார்த்தேன்.அந்த வருடம் சிறந்த படத்திற்கான பரிசையும் அது தட்டிசென்றது.பழிக்குபழி வாங்கப் போகும் நண்பர்களை போலிசில் காட்டிக் கொடுப்பதே கதை.

அரசாங்கதிடம் செல்லாவிட்டால் கொலைசெய்யப்படுவம் என்ற நிலையில் தான் அனைத்து"துரோகிகளும்"அரசாங்கத்துடன். ஒட்டினார்கள்.இந்த ஒட்டுக்குழுக்களுக்கு 3 தெரிவுதான் இருந்தது.

1.போராட்டத்தில் இருந்து வெளியேறல்.

2.புலிகளுடன் சேருதல்

3.அரசாங்கத்துடன் சேர்ந்து தமது இருக்கையை தக்க வைத்தல். இதில் எதாவது ஒரு முடிவெடுக்காமல்விட்டு தொடர்ந்து போராடினால். புலிகளால் கொல்லப்படுவது நிட்சயம் எனவேதான்

மூன்றாவது தெரிவைத்தான் அனைவரும் எடுத்தார்கள்.ஆகவே தான் துரோகிகளானதும்,ஒட்டுக்குழுக்களானதும். இங்கு பலரது கருத்து என்னவென்றால் இவர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் சேராமல் இருந்து புலிகளால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது.

கருணாவை கூட பின் விளவுகளை யோசித்து இயக்கதில் இருந்து வெளியேற்றிவிட்டோம் என்றொரு அறிவிப்பைகொடுத்திருக்கலாம்.கொல்லபோகின்றோம் வா என்றால் யாரையா போவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.