Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.

Featured Replies

  • Replies 146
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலிகள் ஏமாற்றி விபச்சாரிகளாகி வாழ்ந்தாலும் அவர்களை தொந்தரவு செய்யாது தங்கள் வாழ்க்கை பற்றிய சொந்தக் கனவுகளை தொலைத்து வாழும் ஆண்களுக்கு கெளரவம் அளித்து இந்தப் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.

ஆறுங்கள் தோழர்களே. வாழ்க்கை வாழ்வதற்கே. பூமியில் வாழக் கிடைத்த இந்த வாழ்க்கை மீள முடியாதது. எனவே அதை காதலின் பெயரால் தொலைத்து நிற்காதீர்கள். உங்களுக்கென்றான வாழ்க்கையை துரிதமாக அமைத்துக் கொள்ளுங்கள். காதல் என்பது தான் ஒட்டுமொத்தமான வாழ்க்கையும் அல்ல..! காதல் வாழ்வில் ஒரு சம்பவம். அதை நினைந்து உங்களின் வாழ்க்கை ஆகிய காவியத்தை தொலைத்துவிடாதீர்கள். சம்பவம் சம்பவமாகி மறையட்டும். பலிவாங்கும் எண்ணம் எழுந்தாலும் மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உயிர்கள் எல்லாவற்றிற்கும் வாழ ஆசை உண்டு. அவற்றின் எண்ணப்படி. அதை அங்கீகரித்துக் கொண்ட பின் தான் மிச்சம் மீதி.

நன்றி. இத்தோடு இத்தலைப்பில் இருந்து விடைபெறுகின்றேன். :(

நன்றி. இத்தோடு இத்தலைப்பில் இருந்து விடைபெறுகின்றேன். :(

  • கருத்துக்கள உறவுகள்

புற அழகில் குறைந்த பெண்ணை, அவள் பணக்காரியாக இருந்தாலும் பெரும்பாலான இளவயது ஆண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் குரங்குமாதிரி இருக்கும் ஒரு பணக்கார ஆணுக்கு, அவன் வயதானவனாக இருந்தால்கூட அழகிய இளம் பெண்கள் மனைவியாக அமையும் வாய்ப்புகள் அதிகம். இது எதைக் காட்டுது? :(

ஆணின் எதிர்பார்ப்புகளும், பெண்ணின் எதிர்பார்ப்புகளும் வேறு வேறு. இதை நெடுக்கரின் நண்பர் [ :D ] புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அந்தப் பெண்ணை முந்திக்கொண்டு இவர் வெளிநாட்டுக்குப் போய் கை நிறைய சம்பாதித்திருப்பாராயின் காதல் வென்றிருக்கும். :)

அதைச் செய்யாமல் விட்டதும் காணாதெண்டு அங்கே சுத்தின காலத்திலயும் இலக்கியக் காதல் எண்டு டயலாக் பேசியிருப்பார் போலை. அங்கேயே "சுறுசுறுப்பா" இருந்திருந்தாரெண்டால் இப்ப புலம்பிக்கொண்டு திரியமாட்டார்..! :):D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் காவாலி இது ஒரு கருத்துக்களம்...எனக்கு தெரிந்ததை,எனக்கு சரி எனப் பட்டதை நான் எழுதினேன்...எனக்கு சரி எனப்பட்டது உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை...எனது கருத்துகளில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்...நீங்கள் பொதுவாக புலம் பெயர்ந்து வரும் பெண்கள் ஆண்களை ஏமாற்றுதல் தொடர்பாக எழுதியிருந்தீர்கள் ஆனால் நான் பொதுவாக பெண்களை ஏமாற்றும் ஆண்கள் தொடர்பாக எழுதியிருந்தேன்...நான் பார்த்த சமுதாயத்தில் இது தான் அதிகமாக நடக்கிறது...ஆனால் சில இடங்களில் பெண்களால் ஏமாற்றப்படும் ஆண்களும் உண்டு...கவிதையை எழுதியவர் சொன்ன படி நடந்திருந்தாலும் அவர் அப் பெண்ணை விபச்சாரி என எழுதியது தப்பு...விபச்சாரி என போடாமல் வேறு ஏதாவது போட்டு எழுதியிருந்தால் இவ்வளவு பெரிதாய் விடயம் போய் இருக்காது என நினைக்கிறேன்...நான் எழுதிய கருத்துகள் உங்களுக்கோ,நெடுக்சுக்கோ அல்லது ஏனைய நல்ல உள்ளம் கொண்ட ஆண்களை பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.இத்துடன் இதில் இருந்து விடை பெறுகிறேன்..நன்றி.

மல்லிகைவாசம் அதென்னது பெண்ணிலைவாதி என அழைப்பது...நெடுக்ஸ் எப்பவும் பாதிக்கப்பட்ட‌ ஆண்களுக்காகவே கதைக்கிறார் அப்ப அவரை ஆண்ணிலைவாதி என அழைப்போமா!

  • கருத்துக்கள உறவுகள்

அதைச் செய்யாமல் விட்டதும் காணாதெண்டு அங்கே சுத்தின காலத்திலயும் இலக்கியக் காதல் எண்டு டயலாக் பேசியிருப்பார் போலை. அங்கேயே "சுறுசுறுப்பா" இருந்திருந்தாரெண்டால் இப்ப புலம்பிக்கொண்டு திரியமாட்டார்..! :(:)

:):D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைச் செய்யாமல் விட்டதும் காணாதெண்டு அங்கே சுத்தின காலத்திலயும் இலக்கியக் காதல் எண்டு டயலாக் பேசியிருப்பார் போலை. அங்கேயே "சுறுசுறுப்பா" இருந்திருந்தாரெண்டால் இப்ப புலம்பிக்கொண்டு திரியமாட்டார்..! :(:)

நடைமுறை ரீதியாக சிந்திப்பதில் நீங்கள் ஒரு ஜீனியஸ் என்பதை அடிக்கடி நிரூபித்து கொண்டு இருக்கிறீர்கள். :):D

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை ரீதியாக சிந்திப்பதில் நீங்கள் ஒரு ஜீனியஸ் என்பதை அடிக்கடி நிரூபித்து கொண்டு இருக்கிறீர்கள். :):)

எல்லாம் நெடுக்கர் குட் பை சொல்லிட்டுப் போய்ட்டார் எண்ட தைரியம்தான்..! இதுவும் நடைமுறை ரீதியிலான ஒரு சிந்தனைதானே..! :(

விபச்சாரம் செய்யும் பெண் இரக்கத்திற்கு உரியவளே அல்லாமல் அவளை கீழ்த்தரமாகப் பார்ப்பது மிகத் தவறானது. மற்றவரின் வறுமையாலும், கஸ்டங்களாலும் அவர்கள் எடுக்கும் துன்பகரமான தீர்மானங்களை சக மனிதர்கள் புரிந்து கொள்ளாவிட்டால்.. எப்படி ?

யாழ் களத்தில் நான் வாசித்த மிக மிக கீழ்த்தரமான - கேவலமான கருத்துகளில் ஒன்று... இந்த வார்த்தைப் பிரயொகங்கள் இயலாமையின் வெளிப்படுகள். சில உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும்... அதற்காக இப்படியா நாகரீகம் இலாமல் எழுதுவது? இப்படி கீழ்த்தரமான கருத்துகள் நெடுக்சின் கவிதைத்தலைப்புக்கு மேலும் வலுவூட்டுவதாக எனக்குப்படுகிறது. இத்திரி ஆரம்பித்ததில் இருந்து வாசித்து வருகிறேன். கருத்துகள் எழுத யோசித்தேன்.. ஆனால், இங்கு நடக்கும் நிறைய விதண்டாவாதங்களைப் பார்த்த பின்பு எழுதாமல் இருப்பது என்று முடிவெடுத்தேன். ஆனாலும், ஒரு சில கருத்துகளை சொல்ல விரும்புகிறேன்.

நெடுக்சின் இந்த கவிதை ஒட்டு மொத்த பெண்களை அவமதிப்பதக அமையவில்லை. அவரது நண்பரை ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள். அந்த வலியில் ஏமாற்றப்படவனின் எண்ணங்களை பகிர்கிறது. ஆனால், பின்னூட்டம் எழுதிய ஒரு சில பெண்ணியவாதிகள்(?), ஒட்டுமொத்த பெண்களை இக்கவிதை அவமதித்தது போல் கருத்துகள் எழுதுவது ஏன்? அத்துடன், அந்தப்பெண் ஏமாற்றிய விடயததை இருட்டடிப்பு செய்யும் விதமாக தான் இவர்களுடைய கருத்துகள் இருக்கின்றன. ஆண்மைக்குறைவு போன்ற இக்கவிதைக்கு தொடர்பில்லாத விடயங்களை எழுதி கவிதையையும், அதை எழுதுபவரையும் கொச்சைப்படுதுவது இங்கு தேவையா?

இங்கு பெண்கள் எழுதிய நிறைய கருத்துகளுக்கு எதிர் விளக்கங்கள் என்னால் எழுத முடியும். பெண்களால் ஆண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி நேரடியாக பார்த்திருக்கிறேன். நண்பர்கள் மூலம் நிறைய அறிந்திருகிறேன். அதை எல்லாம் இங்கு எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சுருக்கமாக முடிக்கவேண்டுயுள்ளது. (ஏனெனில், வாழ்க்கையில் செய்வதற்கு, விவாதிப்பதற்கு இதைவிட நிறைய விஷயங்கள் உள்ளன).

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்! தளராமல் உங்கள் ஆக்கங்களையும், முன்வையுங்கள் :( நன்றி

என்னாங்கோ!

விபச்சாரி என்ற பதத்தை விட ஆண்மைக்குறைவு என்றது மேலானது புரிஞ்சுதுங்களா? என்ன கேவலமான வார்த்தைப் பிரயோகமா? ஹி..ஹி..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்!

உங்களது துணிச்சலுக்கும், திறமையிற்கும், அத்தனை கருத்துக்களிற்கும் உங்களால் வளங்கப்பட்ட நிதானமான பதில் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.

தொடருங்கள் உங்கள் பணியை வெற்றியுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64620

இங்கு எங்கள் பொயட் எழுதிய குறுநாவல் இணைக்கப்பட்டிருந்தது. இப்போது அதை அகற்றிவிட்டார் இருப்பினும் அக்குறுநாவலுக்கு வந்த விமர்சனங்களை இங்கு காணலாம் நெடுக்கால போவான்.

ஒரு ஆணின் பதிவு என்பது எப்படிப்பட்டது என்பதை இக்குறுநாவலில் காணலாம். பெண்கள் தத்தம் வாழ்வினை ஒருபோதும் திறந்த புத்தகமாக வெளியுலகிற்குக் காட்டுவதில்லை. ஏனெனில் அவளுக்கென்று எழுதாத சட்டங்களாக பல விடயங்கள் அவளை முடக்கிப் போடும் வலுவுள்ளவையாக, ஒரு பெண் பருவம் அடைந்த நாளிருந்து இறக்கும் நாள் வரைக்கும் அவள் மீது கண்ணுக்குத் தெரியாத விலங்குகளாக பூட்டப்பட்டிருக்கின்றன.

நெ. போவான் உண்மையிலேயே நீங்கள் உங்கள் நண்பரின் காதலை நேரடியாக உணர்ந்தவர் அல்ல, ஒரு மூன்றாம் நபராக நின்று ஒரு பெண்வர்க்கத்தின் மீது மிகுந்த காழ்ப்புணர்வு கூடியவராக நின்றே இக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள். ஒரு பக்கத்தை மாத்திரமே பார்த்து, ஒரு பக்க சார்பான கருத்தை?(மன்னிக்கவேண்டும் எந்தக் காதலனும் தன் காதலியை விபச்சாரி என்று நினைக்கமுடியாது அப்படியே அவள் உண்மையில் ஒரு கீழ்த்தரமான விபச்சாரியாக இருந்தால்கூட அக்காதலனுக்கு அவள் தேவதையே) உங்கள் கவிதையில் முன்வைத்திருக்கிறீ்ர்கள். முதலில் பக்க சார்பின்றி இருவர் நிலையையும் அறிந்து கொள்ள நீங்கள் எத்தனித்திருந்தால் உங்கள் கவிதை மென்மேலும் சில செய்திகளைச் சொல்லியிருக்கக் கூடும். நிச்சயமாக விபச்சாரி என்ற வார்த்தைப் பிரயோகம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே குறுநாவலின் முழுமையான பதிவை பார்வையிடும் முன்னர் ஒரு பதிவை இட்டிருந்தேன். இப்போது இக்குறுநாவலை வாசித்துவிட்டு என் சிற்றறிவுக்குப் பட்டதை இங்கு எழுதுகிறேன் இது ஒரு முழுமையான விமர்சனப் பார்வையாகாது என்பது எனக்குத் தெரியும் இருப்பினும் இக்குறுநாவல் பற்றி எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை எழுதுகிறேன் அவ்வளவே. உங்களின் குறுநாவல் சொல்ல முற்பட்ட விடயங்களை நான் சரியாக கிரகித்து இருக்கிறேனா என்பது எனக்குத் தெரியவில்லை. குறை குற்றம் இருப்பின் தோழர் பொயட் மன்னித்து கொள்ளுங்கள்.

பொதுவாக தேடல்களை நோக்கியே மனம் ஓடிக் கொண்டிருக்கும். இன்பம், பொருள், வாழ்வு, நிம்மதி என்று தேடல்களுக்குள் உள்ளடங்கியதே மனித வாழ்வு. தேடல்களே மனித வாழ்வின் அசைவை நிர்ணயிக்கின்றது. போயட் அவர்களின் குறுநாவல் தேடலிலேயே ஆரம்பிக்கிறது. “சாரங்கா” இரண்டரை தசாப்தங்களின் முன் காதலியாய் சந்தித்தவளை இன்னொருவனின் மனைவியாக காலம் மாற்றி எழுதியபின் சந்திக்கத் துடிக்கும் நரைத்த முடிக்குள் உலவும் யாழ்ப்பாணத்து இளைஞனின் கதை. சராசரி யாழ்ப்பாணத்து இளைஞன், யுவதியூடாக புரையோடிக்கிடந்த சாதி, சமூக பின்னல்களை ஆங்காங்கே பிளேடுகள் கொண்டு அறுத்திருக்கின்றது இக்குறுநாவல். எழுதாத பக்கங்களாக இருக்கும் பல கதைகளை பாட்டிகள் சொல்லும் கதைகளாக இணைத்துச் சென்றிருப்பது கதையின் கருப் பொருளிற்கு பலத்தைச் சேர்த்திருக்கின்றது. பாலன் சாரங்காவிடம் “கனடா போய்விட்டால் அற்றுப் போய்விடுமா?” என்று வினவுவது யதார்த்தத்தில் இன்றும் உயிர்த்துக் கிடக்கின்றது.

ஆசையும், ஆவலும் வெட்கத்தை அறியாது. இளமையும், இருளும் அக்கம் பக்கம் அறியாது. அந்தக்காலத்தில் காதல் சிட்டுகள் ஒதுங்கும் சரணாலயமாக மனோகரா தியேட்டர் இருந்தது என்று இக்கதையினூடே தெரிவித்திருப்பது இங்கு கருத்தெழுதும் பல உறுப்பினர்களுக்கு தத்தம் இளமைக்காலத்தை ஞாபகப்படுத்தியிருக்கூடும்.

பாலனின் தேடல் சாரங்காவைச் சந்திப்பதாகவே இக்குறுநாவல் நகர்ந்தாலும் தமிழர் போராட்ட, சமூக, சாதி என்று பல முனைகளில் தேடல்களை முடுக்கி விட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பாலனின் தேடலில் முகங்காட்டிப் போகும் கடந்தகாலங்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலின் ஒரு பக்கத்தை மட்டும் மட்டுப்படுத்தி இருக்கின்றது. கவர்ச்சியான சில்மிசங்களுடன் பயணிக்கும் காதல் வாழ்வு சாதிய நெருப்பில் சிக்குண்டு கருகுவதும், சமூகப்பயம் கடல் கடந்தால் கவலையில்லை என்பது மாதிரியான எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நிச்சயமாக அவற்றைக்கடந்து வந்தவர்களாலேயே தெளிவுறக் கூறமுடியும். குறுநாவலின் ஒவ்வொரு அங்கமும் முடிவுறும்போது இவர்களின் சந்திப்பு எப்படி அமையப் போகிறது என்று ஒருவிதத் திகைப்பை உருவாக்கியே நகர்ந்திருக்கின்றது. நாவலில் முழுமையாக பாலன் மட்டுமே நினைவுகளை மீட்டிச் சென்றிருப்பதனால் சாரங்காவின் உள்ளத்தை முழுமையாக அறிய முடியவில்லை. குறுநாவல் என்பதனால் எழுத்தாளர் கதையின் நாயகனை மட்டுமே மட்டுப்படுத்திவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு கவிஞனின் பார்வை குறுநாவலில் பல இடங்களில் சிலிர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இக்குறுநாவலை வாசிக்கும் பலருக்கு இதழ்கடையில் முறுவல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. சாரங்கா பாலன் சந்திப்பு எப்படி இருந்தது என்று தோழர்களே வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

நெடுக்காலபோவான், நீங்கள் இணைச்ச பாடலை முன்பு கேட்டு நினைவில்லை, மிக நன்றாய் இருக்கிது.

என்னாங்கோ!

விபச்சாரி என்ற பதத்தை விட ஆண்மைக்குறைவு என்றது மேலானது புரிஞ்சுதுங்களா? என்ன கேவலமான வார்த்தைப் பிரயோகமா? ஹி..ஹி..

நான் பச்சை குத்தி மைனஸ் ஒண்றை பூச்சியமாக்கி போட்டன்

அப்பிடியென்றால் விபச்சாரன் என்கின்ற சொல்லைவிட பெண்மைக்குறைவு என்கின்ற சொல்லு மேலானதோ?

...

சில பெண்கள் மட்டுமில்லை, சில ஆண்களும் காதல் என்று பழகிவிட்டு, பிறகு இருந்த அடையாளம் கூட இல்லாமல் பெண்களைக் கண்ணீருடன் விட்டு விட்டு மாயமாக மாறி விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!

காதலிப்பது பிழை இல்லை. பிரிந்து செல்வதும் பிழை இல்லை, பிரிவுக்குரிய காரணங்கள் நியாயமாக இருப்பின்....

குட்டி நீங்களே சொல்லுங்கள் பின் எவ்வாறு விபச்சாரிகள் உருவாகிறார்கள்...

இந்தியாவில் எத்தனையோ பெண்கள் ஆண்களால் காதலித்து ஏமாற்றப்பட்டு விபச்சார விடுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள் தெரியுமா...

இந்தியாவில் வறுமை, மூட நம்பிக்கைகள், ஒரு பெண் கேட்டுப் போனால் அவளை ஊரை விட்டுத் தள்ளி வைப்பது போன்றவை அதிகம். இது அவர்களின் அறியாமை.

அது மட்டும் இல்லை, குடும்பத்தில் உள்ளவர்களே (அண்களோ, பெண்களோ) பெண் குழந்தைகளைக் கூட பணத்திற்கு விற்பவர்கள் என்று பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன்.

சூழ்நிலையாலே விபச்சாரி ஆக்கப்படுக்கின்றனர்...ஒரு தடவை யாராலும் கெட்டுப் போன பெண்ணை உங்களை போல ஆண்கள் மணம் முடிப்பார்களா ஒர்,இரண்டு பேரை எண்ணி சொல்லலாம் முடிப்பார்கள் என...

பலர்! ஒருவரை ஒருவர் விளங்கிக் கொண்டு அனுசரிச்சு சந்தோஷமாக இருக்கிறார்கள்!

நீங்கள் இங்கு ஒரு பெண் விபச்சாரி ஆகாமல் வாழ வேண்டும் என சொல்கிறீர்கள் எனது விருப்பமும் அது தான்...ஆனால் அவர்கள் உருவாகுவதற்கு இந்த ஆண்கள் தான் கார‌ணம் என நான் சொல்கிறேன்[எல்லாரையும் சொல்லவில்லை]...

ஒரு பெண் விபச்சாரி ஆவதற்கு, ஆண்கள் மட்டும் இல்லை, சமுதாயத்தில் உள்ள சில (நாவடக்கம் இல்லாத) பெண்களும் தான் காரணம் என்பது எனது கருத்து. ஒரு பெண் ஆணின் உதவி/ பாதுகாப்பு இல்லாது போகும் பட்சத்தில் அவள் மூன்றாம் ஆளிடம் மனிதாபிமான உதவி கேட்டாலே சமுதாயத்தில் சிலர் அந்தப் பெண்ணை ஒரு கீழ்த்தரமான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள் என்பது உண்மை! இவர்களை முதலில் களை எடுக்க வேண்டும்.

ஒரு ஆண் என்ன வேண்டும் என்டாலும் செய்யலாம் பத்துப் பேரோடு படுக்கலாம் ஆனால் ஒரு பெண் சாப்பிட வழியில்லாமல் கூட‌ செத்துப் போக வேண்டும் ஆனால் கடைசி வரைக்கும் கெட்டுப் போகக் கூடாது என்ட‌ மாதிரி இருக்கு உங்கள் கருத்து.

இந்தக் கருத்தை நான் எங்கே சொன்னேன்?

நான் சொன்னது, அப்போதே அந்தக் கிராமத்திலையே ஒரு பெண் தன்மானத்தோட வாழலாம் என்றால், இந்தக் காலத்தில் தன்மானத்தோடு ஏன் வாழ முடியாது? அப்படி வாழ விடாமல் தடுப்பது எது?/ யார்?

... நீங்களாவது சொல்லுங்கள் ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டார் என விபச்சாரி பட்ட‌ம் கொடுத்திருக்கிறார்..

இதுக்கு நான் பதில் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறன், அவரே கவிதைக்குக் கீழும், இன்னும் பல இடங்களில் 'தனது காதலி' இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிந்தனைக்கு: கெட்டுப் போன/வாழ்கை துணை இழந்த ஒரு பெண் உங்கள் கணவனிடமோ, அல்லது உங்கள் சகோதரனிடமோ மனிதாபிபமான முறையில் உதவி என்று கேட்டு வந்தால், எத்தனை தரம் முகம் சுளிக்காமல் உங்களாலோ அல்லது உங்கள் வீடுப் பெண்களாலோ செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியென்றால் விபச்சாரன் என்கின்ற சொல்லைவிட பெண்மைக்குறைவு என்கின்ற சொல்லு மேலானதோ?

மச்சான் கிண்டல் தானே வேணாமென்கிறது!

பதிலுக்காக காத்திருக்கும்

உங்கள் பார்வையில் விபச்சாரி

நீங்களுமா? எவளவுகாலம் காதலிச்சிட்டு இன்னொருத்தனை கை பிடிச்சீங்க? :wub:

என்னமோ சந்தோசமா இருந்தா சரியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நாலைந்து நாளாக இங்கு எட்டப்பார்க்க முடியவில்லை

அதற்குள் எவ்வளவோ நடந்து போச்சு....?

நீங்களுமா? எவளவுகாலம் காதலிச்சிட்டு இன்னொருத்தனை கை பிடிச்சீங்க? :lol:

என்னமோ சந்தோசமா இருந்தா சரியுங்கோ.

ஆண்களிடம் பேச்சுக்கொடுத்தால்...

கடைசி ஆயுதமாக இதைத்தான் பாவிப்பார்கள் சகோதரி...

http://c.wrzuta.pl/wa5545/52baa1ca002010da476a3046/0/gloria%20gaynor%20-%20i%20will%20survive.mp3

First I was afraid

I was petrified

Kept thinking I could never live

without you by my side

But I spent so many nights

thinking how you did me wrong

I grew strong

I learned how to carry on

and so you're back

from outer space

I just walked in to find you here

with that sad look upon your face

I should have changed my stupid lock

I should have made you leave your key

If I had known for just one second

you'd be back to bother me

Go on now go walk out the door

just turn around now

'cause you're not welcome anymore

weren't you the one who tried to hurt me with goodbye

you think I'd crumble

you think I'd lay down and die

Oh no, not I

I will survive

as long as i know how to love

I know I will stay alive

I've got all my life to live

I've got all my love to give

and I'll survive

I will survive

It took all the strength I had

not to fall apart

kept trying hard to mend

the pieces of my broken heart

and I spent oh so many nights

just feeling sorry for myself

I used to cry

Now I hold my head up high

and you see me

somebody new

I'm not that chained up little person

still in love with you

and so you felt like dropping in

and just expect me to be free

now I'm saving all my loving

for someone who's loving me

Gloria Gaynor | I Will Survive

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடியை வெண்டிடும் போலை கிடக்கு.(நெடுக்கரின்ரை ஆக்கங்கள் தான் சாதனை படைக்கின்றன)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.