Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி!

எனது இங்கிலாந்து இளவரசியை* தலையில் தூக்கி கொண்டாடினேன்.....

அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்...

அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்.....

அவளது காருக்கு டயர் மாற்றினேன்....

அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்.....

அவளது படிப்பிற்கு நான் படித்தேன்....

அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்...

அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்....

அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்.....

எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்.....

காலம் மாறியது......

உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன!

உன்னிடம் வீடு இல்லை.....

உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை....

உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை...

உன்னிடம் நுனி நாக்கு ஆங்கிலம் இல்லை....

உன்னிடம் ஆணுக்குரிய தோள்கள் கூட இல்லை....

உன்னை என்னால் மணக்க முடியாது..... வார்த்தைகள் சுட்டன!

காலம் மாறியது......

வெள்ளை நண்பன் தெய்வமா வந்தான்.....

ஏன்டா தாடி வளர்த்திருக்கிறாய்? நீ லூசனா?

ஏன்டா தண்ணி அடிக்கிறாய்? நீ குடிகாரனா?

ஏன்டா வேலை செய்யவில்லை? நீ சோம்பேறியா?

ஏன்டா உணவு உண்ணவில்லை? நீ சாமியாரா?

ஏன்டா காதல் தோல்வியா? நீ ரோமியோவா?

ஏன்டா வேறொரு பெண்ணும் இல்லையா? நீ குருடனா?

வெள்ளை நண்பன் தெய்வமா வந்தான்.....

காலம் மாறியது......

கூச்சி உடுப்பு கடை பார்கிங் தரிப்பில்....இங்கிலாந்து இளவரசி....

நீ எப்போது மாளிகை வாங்கினாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது....

நீ எப்போது ஜாகுவார் வாங்கினாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது....

நீ எப்போது பட்டம் வாங்கினாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது.....

நீ எப்போது நுனி நாக்கு ஆங்கிலம் கற்றாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது...

நீ எப்போது..... Hon, I can't find a shirt to fit your shoulders.... வந்தாள் எனது மருத்துவ தேவதை**....

நீ எப்போது கல்யாணம் செய்தாய்? நீ உன்னால் முடியாதென்ற பொழுது....

நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி!

ஜகுவார் சீறியது..... போர்டு காரில் இருந்தபடி பார்த்திருந்தாள் இங்கிலாந்து இளவரசி!

காலம் மாறுகிறது......

-----இது எனது சொந்த அனுபவம். அதை கவிதையாக்க முயற்சித்துள்ளேன். இதை நான் நெடுக்கால போறவருக்கு சமர்ப்பிக்கிறேன். - குளவி

* ஊரில் காவோலை பொருக்கி கூரை மேய்ந்தவர்கள், லண்டன் வந்தவுடன் இராஜ பரம்பரை போல் பந்த காட்டியவர்!

** மூன்றாம் தலைமுறை இங்கிலாந்து தமிழச்சி. கட்டினால் தமிழீழ நாட்டுக்கடையை தான் என்று வாழ்ந்தவள்.

Edited by KuLavi

குழவி! உங்களுக்குள் இப்படியொரு சோக அனுபவமா?

காதலில இறங்கினால் தற்கொலை தாக்குதலுக்கு போறமாதிரி நினைச்சுக்கொண்டு எதற்கும் ஆயத்தமாய்தான் இறங்கவேணுமப்பு. உதைவிட கம் எண்டு பேசாமல் உணர்வுகளை தூக்கி எறிஞ்சுவிட்டு மரக்கட்டை மாதிரி இருந்தால் பரவாயில்லையோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு. என்னமோ ஒருத்திக்கு சேவகம் செய்து அவளிடம் பாடம் படிச்சு வாழ்க்கையில முன்னேறி முன்னுக்கு வந்தது சந்தோசம். வெளிநாட்டுல இருக்கிறதுகள் சும்மாவே ஆயிரம் நுணுக்கம் பார்க்குங்கள் அவள் வைத்தியர் என்றால் உவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததில ஆச்சரியபப்ட ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமாகலக்குறானுகப்பா....

சூப்பபரோ சூப்பர்.... :D:D

காதலில இறங்கினால் தற்கொலை தாக்குதலுக்கு போறமாதிரி நினைச்சுக்கொண்டு எதற்கும் ஆயத்தமாய்தான் இறங்கவேணுமப்பு. உதைவிட கம் எண்டு பேசாமல் உணர்வுகளை தூக்கி எறிஞ்சுவிட்டு மரக்கட்டை மாதிரி இருந்தால் பரவாயில்லையோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு. என்னமோ ஒருத்திக்கு சேவகம் செய்து அவளிடம் பாடம் படிச்சு வாழ்க்கையில முன்னேறி முன்னுக்கு வந்தது சந்தோசம். வெளிநாட்டுல இருக்கிறதுகள் சும்மாவே ஆயிரம் நுணுக்கம் பார்க்குங்கள் அவள் வைத்தியர் என்றால் உவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததில ஆச்சரியபப்ட ஒன்றும் இல்லை.

என்னமோ அனுபவப்பட்ட மாதிரியே பேசுறீங்க மச்சான்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி!

எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்.....

அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்...

அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்.....

அவளது காருக்கு டயர் மாற்றினேன்....

அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்.....

அவளது படிப்பிற்கு நான் படித்தேன்....

அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்...

அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்....

அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்.....

எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்.....

காலம் மாறியது......

உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன!

உன்னிடம் வீடு இல்லை.....

உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை....

உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை...

உன்னிடம் நுனி நாக்கு ஆங்கிலம் இல்லை....

உன்னிடம் ஆணுக்குரிய தோள்கள் கூட இல்லை....

உன்னை என்னால் மணக்க முடியாது..... வார்த்தைகள் சுட்டன!

காலம் மாறியது......

வெள்ளை நண்பன் தெய்வமா வந்தான்.....

ஏன்டா தாடி வளர்த்திருக்கிறாய்? நீ லூசனா?

ஏன்டா தண்ணி அடிக்கிறாய்? நீ குடிகாரனா?

ஏன்டா வேலை செய்யவில்லை? நீ சோம்பேறியா?

ஏன்டா உணவு உண்ணவில்லை? நீ சாமியாரா?

ஏன்டா காதல் தோல்வியா? நீ ரோமியோவா?

ஏன்டா வேறொரு பெண்ணும் இல்லையா? நீ குருடனா?

வெள்ளை நண்பன் தெய்வமா வந்தான்.....

காலம் மாறியது......

கூச்சி உடுப்பு கடை பார்கிங் தரிப்பில்....இங்கிலாந்து இளவரசி....

நீ எப்போது மாளிகை வாங்கினாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது....

நீ எப்போது ஜாகுவார் வாங்கினாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது....

நீ எப்போது பட்டம் வாங்கினாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது.....

நீ எப்போது நுனி நாக்கு ஆங்கிலம் கற்றாய்? நீ என்னால் முடியாதென்ற பொழுது...

நீ எப்போது..... ர்ழnஇ ஐ உயn'வ கiனெ ய ளாசைவ வழ கவை லழரச ளாழரடனநசள.... வந்தாள் எனது மருத்துவ தேவதை....

நீ எப்போது கல்யாணம் செய்தாய்? நீ உன்னால் முடியாதென்ற பொழுது....

நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி!

ஜகுவார் சீறியது..... போர்டு காரில் இருந்தபடி பார்த்திருந்தாள் இங்கிலாந்து இளவரசி!

காலம் மாறுகிறது......

-----இது எனது சொந்த அனுபவம். அதை கவிதையாக்க முயற்சித்துள்ளேன். இதை நான் நெடுக்கால போறவருக்கு சமர்ப்பிக்கிறேன். - குளவி

ஜககுவார்..காரா??? நான் நினைத்தன் B.M.W என்று எது எப்பிடியோ மீண்டெழுந்தது சந்தோசம் :rolleyes:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்...

அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்.....

வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சதும், பூமரம் நட்டதும் கொஞ்சம் too much தான் குளவி அண்ணை. :D

என்றாலும் தோல்வியைச் சவாலாக எடுத்து வெற்றியாக சாதித்துக் காட்டிய கவி வரிகளுக்கு என்னால் பச்சை குத்தாமல் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள். :rolleyes:

என்னமோ அனுபவப்பட்ட மாதிரியே பேசுறீங்க மச்சான்... :rolleyes:

மச்சானும் ஒரு குளவிதானாக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுல இருக்கிறதுகள் சும்மாவே ஆயிரம் நுணுக்கம் பார்க்குங்கள் அவள் வைத்தியர் என்றால் உவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததில ஆச்சரியபப்ட ஒன்றும் இல்லை.

எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. வைத்தியர் என்பது தொழில்நிலை. அதற்கும் ஒரு பெண் துணைவியாக வாழ்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எமது சமூகம் காட்டும் தவறான மூடத்தனமான சிந்தனையோட்டங்களே பெண்களை அதிகம் கற்பனை உலகில் மிதக்க விடுகிறது என்று நினைக்கிறேன்.

ஒரு வெள்ளைக்கார வைத்தியச்சி.. சாதாரண ஒருவனோடு லவ் என்று போவாள். அவளுக்கு அவனிடம் உள்ள எதிர்பார்ப்பு அன்பும் அரவணைப்பும் என்றால். ஆனால் எமது பெண்கள்.. அப்படியா இல்லை.. ஏன்..??! அவர்களை வளர்த்தெடுக்கும் இந்தச் சமூகம் தான் காரணம்.

நிச்சயமாக இப்படி எதிர்ப்பார்ப்புக்களோடு ஒருவனை அணுகுபவளை தூக்கி எறிந்துவிட்டுச் செல்வதே வாழ்க்கையை பாதுகாக்கும். அவளின் எதிர்பார்ப்புக்களை நிரப்ப ஆயிரம் பேர் வரலாம். அதற்காக ஆண்கள் தமது எதிர்காலத்தை பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய என்று மட்டும் அர்ப்பணிக்க முடியாது. நமக்கும் நாம் விரும்பிய வாழ்க்கை என்ற ஒன்றிருக்கும் அல்லவா. அதை நோக்கித்தான் நகர வேண்டும்.

குளவியின் அனுபவத்தை போன்று பலருக்கு உண்டு. நான் கண்டிருக்கிறேன். திருந்தாது இந்தப் பெண் ஜென்மம்..! பெண்கள் இன்று பருவத்தை அடகு வைத்து ஆண்களைக் கொண்டு வசதியான வழ்க்கையை தேட நினைப்பது மாற வேண்டும். எனி எல்லா வசதிகளோடும் தனக்கு சமனாக வாழும் ஒருவளையே ஆண்கள் தெரிவு செய்ய வேண்டும். தன்னிடம் இல்லாது ஆண்களிடம் எதிர்பார்க்கும் அல்லது தன்னிடம் இருக்கிறது என்ற மமதையில் இருக்கும் பெண்களை ஆண்கள் (சில ஆண்கள் அப்படியானவர்களுக்கு நிகராக உள்ளனர்.. அவர்களோடு சேர்த்து விட வேண்டியது தான்.) தவிர்த்து நடந்தால் இப்பிரச்சனைக்கு ஓரளவு முடிவு கட்டலாம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்.....

அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்...

அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்.....

அவளது காருக்கு டயர் மாற்றினேன்....

அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்.....

அவளது படிப்பிற்கு நான் படித்தேன்....

அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்...

அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்....

அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்.....

எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்.....

கூட்டிக்கழித்து பார்த்தால் அந்த இங்கிலாந்து இளவரசிக்கு விசுவாசமுள்ள வேலைக்காரனாய் இருந்திருக்கிறியள்.

இப்போதாவது புரிந்து கொண்டதையிட்டு தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்.

பெண்தான் வாழ்க்கை என்றில்லை

நெடுக்கு சும்மா பெருந்தன்மையாய் கதைக்க நல்லாய்த்தானப்பு இருக்கும். ஆனால், நடைமுறை உலகில இறங்கி கள நிலவரத்தை பார்த்தால் தெரியும். மூஞ்சியில காறித்துப்பாத குறையாய் இருக்கும் உங்க பாணியில போனால்.

அவளுக்கு விருப்பம் இருக்கிதோ இல்லையோ… அவள் நண்பிகள், மாமன், மச்சான் மாங்காய் என்று அவள் சிந்தனைகளை திருப்பி விடுகிறதுக்கு ஒரு மாமலை இருக்கேக்க நீங்கள் மனசு ஒண்டு போதும் எண்டுகொண்டு போனால் கடைசியில சாமியாராய் போகவேண்டியதுதான்.

அந்த லூசோடி? அதை தூக்கி எறிஞ்சுபோட்டு அவரைக் கட்டடி. இப்பிடித்தான் அறிவுரை கிடைக்கும். வெள்ளைக்காரங்களை எங்களோட ஒப்பிட ஏலாது.

எனக்கு தெரிய எத்தனையோ பொண்ணுங்கள் வைத்தியராய் யூகேலையும், வேறு இடங்களிலையும் இருக்கிதுகள். யாராச்சும் தங்கடை statusக்கு ஈடு இல்லாத ஒருத்தனை கலியாணம் கட்டினதாய் நான் காண இல்லை. எங்காவது நூற்றுல ஒருத்தி எங்கடை சமூகத்தில அப்பிடி இருக்கலாம்.

குளவி செய்த முதல் தவறு அந்த பொம்மனாட்டிக்கு தன்ர காசில படிப்பிச்சதுதான். யோவ், வட்டியோட அவளுக்கு செலவளிச்ச காசை வாங்குமப்பு. ஊரில யாராவது வழியில்லாத சனத்துக்கு குழந்தைகளுக்கு அதை கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இப்படி எதிர்ப்பார்ப்புக்களோடு ஒருவனை அணுகுபவளை தூக்கி எறிந்துவிட்டுச் செல்வதே வாழ்க்கையை பாதுகாக்கும். அவளின் எதிர்பார்ப்புக்களை நிரப்ப ஆயிரம் பேர் வரலாம். அதற்காக ஆண்கள் தமது எதிர்காலத்தை பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய என்று மட்டும் அர்ப்பணிக்க முடியாது. நமக்கும் நாம் விரும்பிய வாழ்க்கை என்ற ஒன்றிருக்கும் அல்லவா. அதை நோக்கித்தான் நகர வேண்டும்.

இதுக்கு எமது சமூகத்தில் உள்ள பேசிச்செய்யும் திருமண முறை எந்தளவுக்கு இடம் கொடுக்கும் :D கலியானம் கட்டி சில காலத்துக்குப்பின் ஆணோ அல்லது பெண்னோ தமது சுய ரூபத்தை காட்டினால் என்ன வழி?விவாகரத்தா?அப்படிப்பாத்தால் அரைவாசிக்கு மேல் விவாகரத்தில் தான் முடியும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்த நிலைக்கு வர வழி செய்த, உத்வேகம் கொடுத்த அந்த இளவரசிக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுல இருக்கிறதுகள் சும்மாவே ஆயிரம் நுணுக்கம் பார்க்குங்கள் அவள் வைத்தியர் என்றால் உவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததில ஆச்சரியபப்ட ஒன்றும் இல்லை.

மச்சான் நீங்கள் குளவியின் வரிகளைத் தவறாக புரிந்து கொண்டுவிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

கவிஞரைக் காதலித்து ஏமாற்றிய பெண் மருத்துவ தேவதை இல்லை. தற்போது கவிஞரைக் கைப்பிடித்து இருக்கும் பெண்ணே அந்த மருத்துவ தேவதை.

நீ எப்போது..... Hon, I can't find a shirt to fit your shoulders.... வந்தாள் எனது மருத்துவ தேவதை....

கவிஞரின் முன்னாள் காதலி அடுத்த கேள்வியைக் கேட்கும் முன்னர், அந்தக் கேள்விகான பதிலைக் கவிஞரின் மனைவியான அந்த மருத்துவ தேவதை சொல்லிவிடுகிறாள். "இனியவனே உனது தோள்களின் அளவிற்கு ஏற்ப ஒரு சேர்ட்டை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை" என்கிறாள் அவள். இங்கு முன்னாள் காதலி கேட்கவிருந்த கேள்விக்குப் பதிலளித்துவிட்டு, அடுத்த கேள்விக்கான கரணமாகவும் அந்த மருத்துவ தேவதை அமைந்துவிடுகிறாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி நிஜமா சுப்பர்..

இதுக்கு என்னாலை பச்சை குத்தாமல் இருக்க முடியலை மூன்று பச்சைப் புள்ளியையும் ஒன்றா குத்தணும் போல இருக்கு ஆனால் ஒன்று தான் குத்த கூடியதா இருக்கு நாளைக்கும் வந்து குத்தி விடுறேன். :rolleyes:

வேறை எப்படி பாராட்டுறது என தெரியலை..

அப்படியே கறுப்பிக்கும் ஒரு பச்சை :D

Edited by ஜீவா

மச்சான் நீங்கள் குளவியின் வரிகளைத் தவறாக புரிந்து கொண்டுவிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

கவிஞரைக் காதலித்து ஏமாற்றிய பெண் மருத்துவ தேவதை இல்லை. தற்போது கவிஞரைக் கைப்பிடித்து இருக்கும் பெண்ணே அந்த மருத்துவ தேவதை.

அது எப்படி உங்களுக்கு தெரியும்? சரி நீங்கள் சொல்கிற மாதிரியே பார்த்தால், அந்த மருத்துவ தேவதை கவிஞர் தனது statusஐ உயர்த்தி இருக்காவிட்டால் கலியாணம் கட்டி இருப்பாவோ? ஆக, statusக்கு சல்யூட் அடிச்சு விட்டா? குளவிதான் விளக்கம்தர வேணும்.

விட்டுட்டு போற பெண்ணுக்கும், Bus இற்கும் வித்தியாசமில்லை. ஒன்று விட்டுட்டு போனா இன்னொன்று... இந்த உண்மையை புரிந்தவன் ஞானி. குளவி ஒரு ஞானி. (குளவி, நானும் ஒரு குளவிதான்.. )

ஓ இதுக்கை நிறைய குளவிகள் இருக்கிதோ. அப்ப தேன்கூடு கட்டவேண்டியதுதான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத்தான் அடி வாங்கிஇருக்கிறியள் குழவி.சிலவேளை காதலிலை வாற தோல்வியும் நன்மைக்குத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதுக்கை நிறைய குளவிகள் இருக்கிதோ. அப்ப தேன்கூடு கட்டவேண்டியதுதான். :D

ஆக, ஆண்களின் முன்னேற்றத்துக்கு பெண்கள்தான் காரணம் என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. :rolleyes::D

குளவியின் காதல் ஒருதலை காதல் என்பது வெளிப்படையா தெரியுது.

அறியா வயசில (? :rolleyes: ) காதல் தப்பு, நீ வாழ்க்கையில சாதிக்க நிறைய இருக்கு என்டு உணரவைச்சு தான் விரும்பியவனுக்கு மாலையிட்டு சென்றவளை நீங்க போற்றுதல்ல தப்பில்லயுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்........???

இப்படி எல்லாத்தையும் விட்டுக்கொடுக்கும் தங்களை பிடிக்கவில்லை என்று சொன்ன அவளைத்தான் எனக்கு பிடித்திருக்கிறது

சுயகௌரவம் என்ற ஒன்றை எவன் விட்டுக்கொடுக்க தயாராகின்றானோ

அன்றே பூச்சியமாகிறான்

அதன் பிறகு மதிப்பை காதலை எதிர்பார்ப்பது.......

பூச்சியத்தை ஒருவர் விரும்பவில்லை என்பது நியாயமானதுதானே...

இது எனது பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்

அதேநேரம் அவளுக்காக வாழவேண்டும் என்ற நினைப்பு மட்டுமே கருத்தில் கொண்டு முன்னேறும் தங்களின் போக்கும் பொருளாதாரமும் நிலையானதல்ல.

உதாரணம் தங்களது கார்

வருமானம் கணக்கு பார்த்து வாங்கப்பட்டதா

அல்லது

அவளைவிட நல்ல மார்க் வைத்திருக்கவேண்டும் என்று வாங்கப்பட்டதா..?

அவளுக்காக வாங்கப்பட்டிருப்பின் மீண்டும் தாங்கள் பாதாளத்தில்...

காலம் மாறும்போது அவளது நகைப்புக்குள் தாங்கள்.......?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் 18 வயதில் தன்னைவிட வயது குறைந்த பெண்ணுடன் வேறு நாடொன்றிற்கு ஓடிப்போனார்

சில வருடங்களின்பின் அவரது தயாரிடம் அவர் சொன்னது

நாங்கள் சொந்த வீடு சொகுசு கார் என்று நல்லா இருக்கின்றோம் தானே என்று.

அதற்கு நான் சொன்னது இருவர் உழைத்தால் வெளிநாட்டில் இதெல்லாம் பெரிய விடயமா....?

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, ஆண்களின் முன்னேற்றத்துக்கு பெண்கள்தான் காரணம் என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. :rolleyes::D

நீங்கள் சொன்னால் உண்மையா தான் இருக்கும். :D

காதலில இறங்கினால் தற்கொலை தாக்குதலுக்கு போறமாதிரி நினைச்சுக்கொண்டு எதற்கும் ஆயத்தமாய்தான் இறங்கவேணுமப்பு. உதைவிட கம் எண்டு பேசாமல் உணர்வுகளை தூக்கி எறிஞ்சுவிட்டு மரக்கட்டை மாதிரி இருந்தால் பரவாயில்லையோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.

உப்பிடி சொல்லுற ஆக்களை நம்ப ஏலாது .... நிழலி சொன்ன மாதிரி அமசடக்கு கள்ளர். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

குளவியின் கவிக்கும் அவரின் முன்னேற்றத்துக்கும் பாராட்டுக்கள்.ஆனால் நான் நானாகவே இருப்பேன்.யாரின் விருப்பத்துக்கும் என்னை மாற்ற மாட்டேன்.(அன்புக்காக விட்டு கொடுப்பது வேறு.)இன்று ஒன்றை கேட்பவள் நாளை இன்னொன்றுக்கு ஆசைப்பட மாட்டாள் என்பதுக்கு என்ன உறுதி.இப்டியே போனால் கடைசி வரைக்கும் ஒரு மண்ணும் இல்லாமல் இறுதியில் சங்கு தான் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.