Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே நேசக்கரம் திட்டங்களிற்கு உதவுபவர்களின் விபரங்களுடன் அவர்கள் நேசக்கரத்திற்கு வழங்கிய தொகையையும் உடனடியாகவே எங்கள் கணக்கு பக்கத்திலும் யாழிலும் இணைத்து வருகின்றோம்..அப்படி உதவி வழங்கியவர்களின் பணத்தொகையை பகிரங்கமாக இணைப்பதால் குறைந்தளவு தொகை வழங்கியவர்களிற்கு தாழ்வு மனசங்கடங்கள் ஏற்படலாம் எனவே வழங்கும் தொகையை பகிரங்கமாக இணைக்காமல் விடுவது நல்லது என்று ஒரு யாழ் உறவு கருத்துத் தெரிவித்திருந்தார்..ஆனால் நேசக்கரம் அமைப்பின் ஊடாக தாயக உறவுகளிற்கு உதவிகள் வழங்குகிறார்கள் என்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விடயம்..அதில் அவர்கள் எவ்வளவு தொகை வழங்குகிறார்கள் என்பது பிரச்சனையே அல்ல.. உதவுபவர் 50 சதமாக இருந்தாலும் ஒரு யுரோவாக இருந்தாலும் எமது உறவுகளிற்கு இன்றைய காகட்டத்தில் அது மிகப்பெரிய உதவிதான்.

அதே நேரம் எமக்கு கிடைக்கிற ஒவ்வொரு சதத்திற்கான கணக்கையும் நாங்கள் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு என்கிற ரீதியில் நேசக்கரம் பதிவு செய்யப்பாட்டிருக்கும் நாடான யெர்மனிய வரித்திணைக்களத்திற்கு கணக்கு காட்டுவது மட்டுமல்லாது. உதவுபவர்களிற்கும் கணக்கு காட்டும் விதமாக எங்கள் கணக்குகளும் பகிரங்கமானதாகவே இருக்கும். எமக்கு உதவியவர்கள் யாரும் எத்தனை வருடங்கள் கழித்தும் தங்கள் பணத்திற்கான கணக்கு வழங்குக்களை கேட்கும் பொழுது அவர்களிற்கான ஆதாரங்களை கொடுக்கு முகமாக நாங்கள் ஒவ்வொரு காலாண்டும் கணக்கறிக்கை தயாரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுத்தி வருகிறோம்..எனவே இங்கு உதவும் உள்ளங்கள் பெரிதாகப்பாரக்கப்படுகிறதே தவிர உதவும் தொகைகள் அல்ல என்பதனை தெளிவு படுத்துகின்றோம்...உங்கள் கரங்களையும் நேசக்கரத்துடன் இணையுங்கள் நன்றி வணக்கம்..

  • Replies 94
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கையிலிருக்கும் சிறு சிறு சேமிப்பின் மூலம் தாயகத்தில் நலிந்தோருக்கு உதவலாமே என்ற நோக்கில்தான் இது ஆரம்பிக்கப் பட்டது! இது ஆரம்பித்த காலத்தில் வெண்புறா, த.பு. போன்ற பலவற்றில் பலரும் பங்களிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்! இங்கு உதவும் மனப்பான்மைதான் முக்கியம். தொகையல்ல! என்னைப் பொறுத்தவரை நேசக்கரத்துக்கு மிகக் குறைவாகத்தான் பங்களிக்கிறேன். குடுக்கும் ஒவ்வொரு சதமும் நல்ல விடயத்துக்கு பயனாவதைப் பார்க்கும் பொது மனசு நிறைவாகிறது! இதய பூர்வமான நன்றிகள் சாத்திரி, சகோதரி சாந்தி, மற்றும் அனைவருக்கும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் வணக்கம் அனைவருக்கும்,

இந்தத் திரியை தவறாமல் படிப்பவர்களில் நானும் ஒருவன். சிலபொழுதுகளில் எனது எண்ணங்களையும் பகிரத்துடிப்பதுண்டு, எனினும் தற்போது என்னால் இந்தத் திட்டங்களுக்கு நேரடியான பங்களிப்பைச் செய்யமுடியமையினால் அவற்றைத் தவிர்ப்பதுண்டு. அதற்கான காரணம் என்னுடைய தனிப்பட்ட முறையிலான ஒரு நீண்டகால ஒப்பிய பொறுப்பு (Long-term Commitment) ஆகும். இதற்கு மேலதிகமாக பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படுமானால் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்க்கும்.

இங்கு நான் குறிப்பிட்டு கூற வந்தது என்னவென்றால், யாழ் களத்தில் நாங்கள் பலர் இருக்கின்றோம், அதில் ஒருவருக்கு € 10.00 கொடுப்பது என்பது ஒரு பெரிய தொகையே இல்லை. சிறு துளிகள் சேர்ந்து பெருவெள்ளமாக பாய்ந்தோடும். நாங்கள் கொடுப்பது வேறுயாருக்கும் அல்ல அது எங்களுக்குத்தான், அது எங்கள் சொந்த இரத்த உறவுகளுக்குத்தான். நாங்கள் தனியாக ஓடுவது என்பது ஒருவேளை எங்களால் முடியாத செயலாக இருக்கலாம், ஆனால் ஓடுபவர்களுடன் சேர்ந்து ஓட நிச்சயம் எங்கள் ஒவ்வொருவராலும் முடியும். அந்த வகையில் சாத்திரி (அண்ணா) மற்றும் சாந்தி (அக்கா) அவர்களுடன் இணைந்து எங்களால் நிச்சயம் ஓடமுடியும். மேலே சகோதரன் சுவி குறிப்பிட்டது போன்று உதவும் மனப்பான்மைதான் முக்கியமே தவிர தொகையல்ல.

அன்புடனும் உரிமையுடனும் யாழ் கள உறவுகளிடம் கேட்கின்றேன் விழுந்து கிடக்கும் எம் தேசத்தின் உறவுகளைத் தூக்கிவிட நேசத்துடன் எம் கரங்களை நீட்டுவோம்.

அன்புடனும் உண்மையுடனும்,

காவாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்

போக்குவரத்து 100 ரூபாய்

உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய்

மொத்தம் 3000 ரூபாய்

யுரேவில் ஒருவரிற்கு அண்ணளவாக 22 யுரோக்கள்.

உதவித் திட்டத்திற்கான மொத்தத் தொகை யுரோவில் 1799.09

இதுவரை கிடைக்கப்பெற்ற உதவி விபரங்கள்.

றதினி (பிரான்ஸ்) 100€

சுவி (யாழ் இணையம்) 20€

முரளி (யாழ் இணையம்)14.06€

சஜீவன் (யாழ் இணையம்) 32.91€

அல்போன்ஸ் 23.67€

நேசன் (ஒஸ்ரேலியா) 200.22€

விஜயரட்ணம் அருள்முகன் சாய்பாபா(யேர்மனி) -100€

விசுகு (யாழ் இணையம்) 220€

சுவி நண்பர்கள் (யாழ் இணையம்)40€

இணையவன் (யாழ்களம்)50.யுரோ

இதுவரை மொத்தம் 800.86 யுரோக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

தனிப்பட்ட சில காரணங்களால் யாழை விட்டு ஒதுங்கி இருந்தேன், அப்படியே இருந்திடலாம் எண்டு நினைத்தேன், நேசக்கரத்துடன் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக யாழிற்கு மீண்டும் வந்துள்ளேன்.

சாத்திரி, சாந்தியின் விடா முயற்சிக்கு தலைசாய்க்கிறேன், தொடக்கி வைத்தோம், 2,3 பங்களிப்புக்களை செய்தோம் போதும் கனக்க செய்துவிட்டோம் நாட்டுக்கு என்று எண்ணி ஒதுங்கினேன், ஆனால் இறுதிக்கட்ட கொடிய போரில் கணவன்மாரை, உறவுகளை, அவயங்களை இழந்து திக்கு திசை தெரியாமல் நிற்கும் எம் உறவுகள் படும் கஸ்ரங்களை பார்க்கும் பொழுது கஸ்ரமா இருக்கின்றது.

இறுதிபோருக்கும் முன்பு நேசக்கரம் செய்த உதவியை விட பின்னர் தான் அதிகளவு தேவை ஏற்பட்டு இருப்பதை நேசரக்கரத்தின் தற்போதைய செயற்பாடு காட்டுகின்றது. பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதையும் சுட்டி நிற்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம்.

மீண்டும் எனது பங்களிப்புக்கள் (தேவைப்பட்டால் உதவிகள்) கிடைக்கும், தனிமடலில் அல்லது மெயிலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். ஆரம்பத்தில் நேசக்கரத்தில் இணைந்து பங்களிப்பு நல்கிய ஏனைய நேசக்கர நண்பர்களும் மீண்டும் இணையவேண்டும் என்பது எனது விருப்பம் :D .

நன்றி..................... :D

  • கருத்துக்கள உறவுகள்

டன்! இதய பூர்வமான நன்றிகள். :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

தனிப்பட்ட சில காரணங்களால் யாழை விட்டு ஒதுங்கி இருந்தேன், அப்படியே இருந்திடலாம் எண்டு நினைத்தேன், நேசக்கரத்துடன் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக யாழிற்கு மீண்டும் வந்துள்ளேன்.இறுதிபோருக்கும் முன்பு நேசக்கரம் செய்த உதவியை விட பின்னர் தான் அதிகளவு தேவை ஏற்பட்டு இருப்பதை நேசரக்கரத்தின் தற்போதைய செயற்பாடு காட்டுகின்றது. பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதையும் சுட்டி நிற்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம்.

மீண்டும் எனது பங்களிப்புக்கள் (தேவைப்பட்டால் உதவிகள்) கிடைக்கும், தனிமடலில் அல்லது மெயிலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். ஆரம்பத்தில் நேசக்கரத்தில் இணைந்து பங்களிப்பு நல்கிய ஏனைய நேசக்கர நண்பர்களும் மீண்டும் இணையவேண்டும் என்பது எனது விருப்பம் :D .

நன்றி..................... :D

வாருங்கள் ஐயா

சிறுதுளி பெருவெள்ளம்

நாம் ஒதுங்கும் நேரமல்ல இது

ஒரு கை கொடுக்கும் தருணம்

அதை செய்வோம்

மனிதராய் இருப்போம்

நன்றி தங்கள் வரவுக்கும்

மீள் அழைப்புக்கும்

துளிர்க்கும் எம்மினம் மீண்டும்

துளிர்க்கிறது நம்பிக்கை தங்கள் போன்றோர் வரவு கண்டு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சிறுதுளியாக பங்களிப்பு செய்ய விழைகிறேன்.. எப்படியெனக் கூறினால் நலம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் சிறுதுளியாக பங்களிப்பு செய்ய விழைகிறேன்.. எப்படியெனக் கூறினால் நலம்.

ராஜவன்னியன் நீங்கள் எங்கள் இணையத்தளத்திற்கு www.nesakkaram.org சென்று பார்வையிட்டால் அங்கு நேசக்கரம் ஊடாக உங்கள் பங்களிப்பினை செய்வதற்கான விபரங்களை பார்வையிடலாம் உதாரணமாக வங்கிகணக்கிலக்கம் அல்லது பே பால் மூலம் நீங்கள் பங்களிக்கலாம் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பாக்க மிகவும் சந்தோசமாக உள்ளது.எமது யாழ் உறவுகள் உற்சாகத்துடன் பங்கு கொள்வது.டன்னை இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

யாழ் இங்கிலாந்த் பொறுப்பை மீண்டும் எடுக்கலாம் எண்டு எண்னுகிறேன், இங்கிலாந்திலிருந்து ஒரிரு உறுப்பினர்கள் என்னிடம் தொடர்பு கொண்டார்கள்,பழையபடி பல பங்களிப்பை ஒன்றாக்கி சாத்திரிக்கோ, சாந்திக்கோ அனுப்பிவைத்தால் அனுப்பும் செலவுகளை குறைக்கலாம் என்று யோசனை கூறினார்கள், எனக்கும் அது நல்லதாக படுகிறன்றது,

இங்கிலாந்திலிருந்து முன்னர் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள் மீண்டும் இணைந்து தங்களால் முடிந்த பங்களிப்புக்களை வழங்க முன்வருமிடத்து என்னை தொடர்புகொள்ளவும்.

நன்றி. (என்னை மீள் வரவேற்ற கள நணபர்களுக்கு நன்றி..) :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊர் ஒன்றியம் கனடா/ அவுஸ்திரேலியா வுக்கு எனது பங்களிப்பு வழங்குவதால் உடனடியாக இணைய முடியவில்லை.ஓரிரு மாதங்களில் மீண்டும் நேசக்கரத்துடன் இணைவேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பினருக்கு முன்பைப்போல் பங்களிப்பை செய்ய முடியாமல் எனக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. உங்களின் தொடர்ச்சியான முன்னெடுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் என்னால் பெரிய அளவில் இயலாவிட்டாலும் சிறிய தொகையை உதவலாம் என்று நினைக்கிறேன். சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பது தெரியுந்தானே ஆதலால் கனடாவில் பொதுத் தொண்டில் ஆர்வமுள்ளவர் ஒருவரை நியமித்தால் அவரூடாக எனது பங்களிப்பை செய்ய உள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நேச்கரம் ஊடாக உறவுகளிற்கு உங்கள் கரம் நீட்ட முன்வந்த சகாராவிற்கு நன்றிகள் கனடா நாட்டிற்கான பொறுப்பினை தொடர்ச்சியாக நேசக்கரத்திற்கு உதவி வரும் '('கலைஞன்..மச்சான் ..முரளி) பொறுப்பெடுத்து செய்வாரா என இங்கு அவரிடம் பகிரங்கமான வேண்டுகோளினை வைக்கிறேன். அவர் முன்வந்தால் கனடா உறவுகள் அவர் மூலமாக தொடர்ந்து பங்களிக்கலாம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்
audio.gifஇனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப்பும் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. உயிர் வாழ்தலில் இருந்த விருப்பால் சாத்திரத்தை நம்பி சாத்திரம் கேட்டவனுக்கு மரணம் முடிவென சாத்திரமும் சொல்லியானபின் வாழ்வும் மரணமும் அவனோடு சண்டையிட்ட நாட்களவை. 2009 மேமாத முடிவுகளின் பின்னர் இவன் சாவிலிருந்து தப்பி சரணடைந்தான்….தனது நிலமைகளை எங்களோடு பகிரும் இந்த 28வயது இளைஞனின் குரலைக் கேளுங்கள்.

கனடாவில் யாரும் பொறுப்பேற்றால் நானும் அவர்களுக்கூடாக உதவி செய்ய தயாராயிருக்கின்றேன்.

சாத்திரி அண்ணை, சாந்தி அக்கா, கனடா உறவுகளின் போரினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளிற்கு கொடுக்க விரும்புகின்ற உதவித்தொகையை பெற்றுக்கொடுப்பது சம்மந்தமாய் பின்னர் தொல்லைபேசியில உரையாடுவோம். முன்புபோல வல்வை அண்ணா, சகாறா அக்கா, மற்றும் ஊக்கம் உள்ளவர்களை வைத்து உதவித்தொகையை பெறுவதற்கு சுழற்சி முறையில பொறுப்பை கொடுக்கிறது நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி/ சாத்திரி

நான் அவுஸ்திரெலியாவில் உள்ள அமைப்பொன்றினூடாக( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71012 ) உதவி செய்து வருகிறேன். அதனால் உங்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முடியவில்லை. எனினும் நான் 100 யூரோவினை நாளை அவுஸ்திரெலியா வங்கி ஒன்றின் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி விடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி/ சாத்திரி

நான் அவுஸ்திரெலியாவில் உள்ள அமைப்பொன்றினூடாக( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71012 ) உதவி செய்து வருகிறேன். அதனால் உங்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முடியவில்லை. எனினும் நான் 100 யூரோவினை நாளை அவுஸ்திரெலியா வங்கி ஒன்றின் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி விடுகிறேன்.

இணைந்தமைக்கு நன்றிகள் கந்தப்பு உங்கள் பணம் கிடைக்கப்பெற்றதும் அதன் விபரம் யாழிலும் எங்கள் நேச்கரம் கணக்குப்பகுதியிலும் இணைக்கப்படும்.

சாத்திரி அண்ணை, சாந்தி அக்கா, கனடா உறவுகளின் போரினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளிற்கு கொடுக்க விரும்புகின்ற உதவித்தொகையை பெற்றுக்கொடுப்பது சம்மந்தமாய் பின்னர் தொல்லைபேசியில உரையாடுவோம். முன்புபோல வல்வை அண்ணா, சகாறா அக்கா, மற்றும் ஊக்கம் உள்ளவர்களை வைத்து உதவித்தொகையை பெறுவதற்கு சுழற்சி முறையில பொறுப்பை கொடுக்கிறது நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

தற்போதைக்கு நீங்கள் பொறுப்பெடுத்தால் காலப்போக்கில் மற்றவர்கள் பொறுப்பெடுத்து உதவ வருவார்கள் என நினைக்கிறேன் உங்கள் பதில் கண்டு மிகுதி விபரங்களை தொலை பேசியூடாக கதைக்கலாம் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.