Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேவலுக்கு விரட்டவும் பேட்டுக்கு பதுங்கவும் கற்றுக் கொடுத்தது யார்..??! அதுவும் ஆணாதிக்கமா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cock+and+hen.jpg

அதென்ன ஆணாதிக்கம் என்பது.??! ஆண் ஆண் தான். பெண் பெண் தான். சமூகத்தில சம உரிமை என்பது ஆணைப் பெண்ணாக மாற்றுவதில் அல்ல. அல்லது பெண்ணை ஆணாக மாற்றுவதில் அல்ல. பெண்ணை ஆணை சக மனிதனாக எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளுதலும் நடத்துதலும் ஆகும்.

விலங்கு இராட்சியம் எங்கனும் ஆண் பலமானதாகவே அதிகம் விளங்குகிறது. அது ஆதிக்கம் அல்ல. தலைமைத்துவ சமூகம் நோக்கிய ஒரு காரணி. சமூக வாழ்வில் தலைமைத்துவம் மூத்தது வழிகாட்டுதல் என்பன போன்ற விடயங்கள் அடங்கி இருக்கின்றன. சிங்கக் கூட்டத்திற்கு ஆண் சிங்கம் தலைமை. யானைக் கூட்டத்திற்கு ஆண் யானை தலைமை. தலைமைப் பண்பு என்பது ஆதிக்கம் அல்ல. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் பெண் தலைமைத்துவம் கூட சமூக விலங்குகள் மத்தியில் அவதானிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தலைமைத்துவம் என்பது தவறாக ஆதிக்கம் என்று விளக்கப்பட்டு வருகிறது.

ஆண் சிங்கம் தலைமை தாங்கினும்.. பெண் சிங்கத்தின் வாழ்வுரிமையை விருப்பு வெறுப்பை அது தீர்மானிப்பதும் இல்லை... கட்டுப்படுத்துவம் இல்லை. அதேவேளை பெண் சிங்கத்திடம் இதைச் செய் என்று வலியுறுத்துவதும் இல்லை. சமூகமாக வாழ்ந்தாலும் ஆணின் தலைமைப் பண்பை அங்கீகரித்தாலும்.. பெண் தான் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் வாழ ஆண் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் இணைந்து வாழ்கின்றன.

அந்தச் சிங்கத்திற்கும்.. அப்பன் முப்பாட்டன் வந்து என்ன ஆணாதிக்கமா கற்றுக் கொடுத்தான் தலைமை தாங்க. அதுமட்டுமன்றி இனவிடைப் போட்டியில் ஆண் பெண்ணை அதிகாரம் செய்வது.. உடலுறவின் போது ஆண் பெண்ணுக்குள் திணிப்பதும்.. அங்கு நடக்கிறது. அதையும் ஆதிக்கம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அப்படிச் சொல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆணுக்கு திணிக்க இருக்குது திணிக்குது... பெண் வாங்குது. எனி இவைக்காக தனி ஒரு கூர்ப்பை எல்லோ இயற்கை தேர்வு செய்ய வேண்டும். கூர்ப்பின் பாதையில் லிங்கப் புணர்வு பாதுகாப்பான வினைத்திறனான கருக்கட்டலுக்கு உதவுகிறது என்பதுதான் முக்கியமாகிறதே தவிர ஆண் திணிக்க முடிவதால் அவன் ஆதிக்க வாதி என்பதல்ல அங்கு பொருளாக்கப்பட்டுள்ளது.

பெண்ணிலைவாதிகள் ஒன்றில் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றேல் ஆண் பெண் உரிமைகள் தொடர்பில் இயற்கையின் விதிப்புக்களை ஏற்றுக் கொண்டு கத்த வேண்டும்.

உண்மையில் ஆண் பிறப்புரிமையையில் ரீதியில் கூட இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான். பெண்கள் வளமான ஒரு சோடி xx நிறமூர்த்தங்களைக் கொண்டிருக்க ஆண் ஒரு வளமான x ஐ மட்டும் கொண்டிருக்கிறான். மற்றது y. அது சிறிய ஒரு நிற மூர்த்தம். இதற்காக ஆண்கள் தாங்கள் பெண்களை விட தாழ்ந்திருப்பதாகவா உணரச் செய்யப்பட்டுள்ளனர். இல்லையே.

பெண்கள் தாங்களாகவே ஆண்களுக்கு கட்டுப்படும் நிலை ஒன்றிருக்கிறது. அது இயற்கையின் விதிப்பாகக் கூட இருக்கலாம். சேவல் கலைச்சால் பேடு தான் பதுங்குவதும் மிதிபடுவதும். சேவலுக்கும் அப்பன் முப்பாட்டன் வந்து கற்றுக்கொடுத்தானா இதை...??! பேட்டிற்கு பதுங்கு மிதிபடு என்று கோழிச்சமூகம் என்ன கட்டுப்பாடா போட்டு வைத்துள்ளது..???!

அதுமட்டுமன்றி அங்கு பேடு பதுங்குவதால் மிதிபடுவதால் அது தனது வாழ்வுரிமையை இழந்துவிடுவதில்லை. சேவலுக்கு அடிமையாக வாழ்வதில்லை. மிதிபடும் கணத்தோடு அது அதில் இருந்து விடுபட்டுக் கொள்கிறது. அடுத்த கணமே அது தன் வாழ்வை தன் வழியில் சென்று தேடிக் கொள்கிறது. அதற்காக சேவலே தனக்கு சேவகன் என்று உரிமை பாராட்டுவதில்லை. ஆனால் மனிதர்கள்.. அப்படியா..??! சமூகம் கலாசாரம் பண்பாடு என்று கட்டுப்பாடுகளை ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் திணிக்கிறார்கள். அதைப் பற்றி பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் தான் கவலைப்பட வேண்டி இருக்கிறது. அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது வளமான மனித சமூகத்தை உருவாக்க என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

பெண்ணிலைவாதம் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது என்பது இன்று ஆணை மேலாதிக்கம் செய்வது பற்றிப் பேசுவது என்பதாகி விட்டது. இது பெண்ணுரிமையை நிலை நாட்ட உதவாது. பெண்கள் மீதான வன்முறையை தான் நிலைநாட்டும். ஏனெனில் இயற்கையில் ஆண் பெண்ணை விட உடல் ரீதியில் பலமானவன். அதை எந்த அப்பனும் முப்பாட்டனும் வந்து மாற்ற முடியாது. அது இயற்கையின் தேர்வு. இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாது சம உரிமை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

சட்டத்தை போட்டு அடக்குவதும் அடக்குமுறைதான். சட்டங்கள் அற்ற தேச பரிபாலனம் எப்படி சாத்தியமில்லையோ அதேபோல் தான் ஆணின் பலப்பாவிப்புக்கு இடமின்றிய மனித சமூகமும் சாத்தியமில்லை. பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான். ஆண் பெண்ணிற்கு சமன் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஆண் பெண்ணை விட உடல் வலுவானவன் என்பதே யதார்த்தம். ஆனால் உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது.

சம உரிமை என்பது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால் மனிதன் என்ற நிலையில் உள்ள உரிமைகள் சார்ந்தே அது அமைய வேண்டும். ஆண் பெண் என்று வருகின்ற போது ஆணின் உடற்பலம் அவனை முன்னிறுத்துவதை தடுக்க முடியாது.

இன்று பல ஆண்கள் வீட்டு வேலையாட்களாக மனைவிக்கு பணிந்து நடக்கவும் செய்கின்றனர். காரணம்.. அதிகாரம் செய்ய முடியாது என்று அல்ல. அன்புக்கு அதிகம் கட்டுப்படுகிறார்கள் அல்லது ஏன் வேண்டாத பிரச்சனையை இவளோட வளர்ப்பான்.. இது ஒரு விளக்கம் குறைஞ்சது.. என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது பெண்களுக்கு நல்லாவா இருக்கும். அவங்களே அவங்க செயலால் தங்களின் நிலையை தாழ்த்திக் கொள்ளுறாங்க. சம உரிமை என்பது அடுப்படியில் சமைப்பதில்.. படுக்கை அறையில் படுப்பதில் அல்ல. சம உரிமை என்பது சிந்தனையில் செயலில் ஆணைப் பெண்ணை சமனாக சக மனிதனாக மதிக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அதற்காக ஆண் அல்லது பெண் தங்கள் இயல்பான இயற்கையான இயல்பை இழப்பது அல்ல செய்யப்பட வேண்டியது.

இன்றைய காலத்தில் பாரபட்சமான மனித இயற்றுகைச் சட்ட அமுலாக்கங்களைப் பயன்படுத்தி ஆண்கள் மீது பெண்கள் அதிகாரத்தை செலுத்துவது வளர்ந்து வருகிறது. பெண் தலைமைத்துவம் பெண் மேலாதிக்க வெறித்தனமாக வளர்க்கப்படும் நிலையும் இருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில் எந்த ஒரு மனிதனும் அதிகம் நாள் வாழ விரும்பமாட்டான். அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணா இருந்தாலும் சரி. இந்த உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டு ஆணாதிக்கம் அது இது என்று தேவையற்ற பதங்களை உச்சரித்துக் கொண்டு பெண்ணிலைவாதிகள் என்று ஆண்களோடு வீம்பு பேசிக் கொண்டு திரிவதிலும் உருப்படியாக பெண்களிற்குள்ள மனித உரிமைகள் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் அதனை பெற்று இந்த இயற்கையோடு எப்படி இணைந்து அதனைச் செயற்படுத்தி வாழ்வது என்பதைக் கற்றுக் கொடுப்பதே நன்று. ஆண்களை நோக்கியும் இது செய்யப்பட வேண்டும். இன்றேல்.. சேவல் கலைப்பதற்கும் பேடு பதுங்குவதற்கும் ஆதிக்கம் அடிமைத்தனம் என்று பெயரிட்டு காலம் காலமாக மோதிக்கொண்டிருந்து பொழுது கழிப்பதைத் தவிர வேறெதையும் சாதிக்க முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சேவல் கலைக்காமலயே பேடு சேவலுக்கு பக்கத்தில் போய் பதுங்குவதும் உணடு.அது சரி சேவல் கலைத்து காரியத்தை சாதிக்கும்.அதே மாதிரி பேடு சேவலை கலைத்து காரியத்தை சாதிக்க ஏலுமோ.(இரன்டும் பிளைதான் ஆனல் அப்படி ஏலுமோ :) )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேவல் கலைக்காமலயே பேடு சேவலுக்கு பக்கத்தில் போய் பதுங்குவதும் உணடு.அது சரி சேவல் கலைத்து காரியத்தை சாதிக்கும்.அதே மாதிரி பேடு சேவலை கலைத்து காரியத்தை சாதிக்க ஏலுமோ.(இரன்டும் பிளைதான் ஆனல் அப்படி ஏலுமோ :) )

ஜரோப்பாவில இது எல்லாம் சகயம் அப்பு எத்தனையோ செய்து இருக்கம் இதை செய்ய மாட்டமா??? :lol::):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேவல் கலைக்காமலேயே பேடு சேவலுக்கு பக்கத்தில் போய் பதுங்குவதும் உணடு.அது சரி சேவல் கலைத்து காரியத்தை சாதிக்கும்.அதே மாதிரி பேடு சேவலை கலைத்து காரியத்தை சாதிக்க ஏலுமோ.(இரண்டும் பிழைதான் ஆனல் அப்படி ஏலுமோ :) )

பேட்டுக்கு ஏலாது. ஆனால் மனிசப் பெண்களுக்கு ஏலுமே..!

மனிசங்க கூட வாழ்ந்தும் பேடு இன்னும் ஆணாதிக்கத்துக்குள் தான் கட்டுண்டு கிடக்குது. அதற்கும் விடுதலை வாங்கிக் கொடுக்கனும். என்ன கொடுத்தாலும்.. அது சேவலைக் கண்டால் பதுங்குதே. நம்ம பெண்ணிலைவாதிகளின் பிழைப்பை நாசம் பண்ணிறன் என்று நிக்குதே..! பேசாம அடிச்சு சிக்கின் 65 போட வேண்டியதுதான். :):lol:

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் முன்னேறி எங்கையோ போய் இருக்கிற இந்தநேரத்தில நீங்கள் இன்னமும்தான் சேவலையும், பேட்டையும் விட்டு வெளியில வர ஏலாமல் நிக்கறீங்கள். கொஞ்சம் அட்வான்ஸ்சான உவமான, உவமேயங்களை பயன்படுத்தலாமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் முன்னேறி எங்கையோ போய் இருக்கிற இந்தநேரத்தில நீங்கள் இன்னமும்தான் சேவலையும், பேட்டையும் விட்டு வெளியில வர ஏலாமல் நிக்கறீங்கள். கொஞ்சம் அட்வான்ஸ்சான உவமான, உவமேயங்களை பயன்படுத்தலாமே.

என்ன தான் விஞ்ஞானம் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்.. பல மூளைகளுக்கு இந்த சேவல் - பேடு அடிப்படை விளங்காமல் தானே ஆண்டாண்டுகளா மேடையேறி ஆண்.. பெண்.. ஆண்.. ஆதிக்கம் என்று கத்தித் திரியினம். அதுகளுக்கு புத்தி புகட்டனும் என்றால்.. இந்த அடிப்படைகளை படிப்பிச்சுத்தான் ஆகனும்.

இப்ப விஞ்ஞானத்தை படிக்கிறதிற்கும் சில அடிப்படைகளை விளக்க வேண்டி இருக்குத்தானே. அப்படி தான் இதுவும் என்று வைச்சுங்களேன்..! :):lol:

சேவல் கலைக்காமலயே பேடு சேவலுக்கு பக்கத்தில் போய் பதுங்குவதும் உணடு.அது சரி சேவல் கலைத்து காரியத்தை சாதிக்கும்.அதே மாதிரி பேடு சேவலை கலைத்து காரியத்தை சாதிக்க ஏலுமோ.(இரன்டும் பிளைதான் ஆனல் அப்படி ஏலுமோ :) )

சேவல் பேடை கலைத்து காரியத்தைச் சாதித்தாலும் இன்பம், பேடு சேவலை கலைத்து காரியத்தைச் சாதித்தாலும் இன்பம் என்று என்பது என்னைப் போன்ற அனுபவசாலிகளின் கணிப்பு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

Hahn+3.JPGrooster_love_flyer-p2446120491413515532pafb_210.jpg

சேவல் பேட்டு கோழியளை நாள் முழுக்க மேய்ச்சுக் கொண்டு திரிஞ்சாலும்.....

அந்த விஷயத்தை மட்டும், ஏன் அவசரப் பட்டு முடிக்குது? :)

  • கருத்துக்கள உறவுகள்

சேவல் பேடை கலைத்து காரியத்தைச் சாதித்தாலும் இன்பம், பேடு சேவலை கலைத்து காரியத்தைச் சாதித்தாலும் இன்பம் என்று என்பது என்னைப் போன்ற அனுபவசாலிகளின் கணிப்பு :lol:

சேவல் பேடை கலைத்து காரியத்தைச் சாதித்தால் இன்பம்

பேடு சேவலை கலைத்து காரியத்தைச் சாதித்தால் பேரின்பம்

இது எனது அனுபவம்

சேவல் பேட்டு கோழியளை நாள் முழுக்க மேய்ச்சுக் கொண்டு திரிஞ்சாலும்.....

அந்த விஷயத்தை மட்டும், ஏன் அவசரப் பட்டு முடிக்குது? :)

அதுக்குப்பெயர்

கோழிக்கணம் சிறி

அது அப்படித்தான்...................

ஆனால் நாரதர் தொடக்கிவைத்ததன் நோக்கமும் இதுதான்

கலைத்தல் வேலை தான்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாரும் நல்லா கலைக்கிறியள் போலை.பாவம் சேவல் அது தன்ரைபாட்டுக்கு தன்ரை அலுவலை பாக்குது தயவுசெய்து விட்டுடுங்கோ.அது எவ்வளவு கஷ்டப்பட்டு பேட்டை கலைச்சு அலுவலை முடிக்குது எண்டு தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்குத்தம்பி நலமா?

உங்கள் ஆண்சிங்கங்களின் ஆதிக்கம்... சும்மா சொல்லக் கூடாது ஆளுமை உள்ளதுதான்.. ஆனால் உங்களுக்கத் தெரியாத விடயம் அல்ல ஆண்சிங்கங்கள் மிகவும் சோம்பேறிகள் :lol:(அக்கருத்தை நான் பதிவதற்காக ஏகப்பட்ட மைனஸ் புள்ளிகளை எனக்கு யாழ்க்கள நண்பர்கள் தருவார்கள் என்பது எனக்குத் தெரியும் மைனஸ் போடும் அனைவருக்கும் பெண் என்ற நிலையில் என்னுடைய பிரத்தியேக நன்றிகள்)

ஆண்சிங்கங்கள் தமது ஆளுமையை எங்கு நிலை நிறுத்துகின்றன?

பெண் சிங்கங்களை புணரும் போதும், குட்டிகளைச் சினக்கும் போதும் மாத்திரமே. மற்றப்படி பெண் சிங்கங்கள் வேட்டையாடிக் குட்டிகளுக்காகக் கொண்டு வரும் இரையை இந்த ஆண் சிங்கங்கள் பறித்து உண்பதில் கில்லாடிகள். நெடுக்குத் தம்பி உதாரணமே பிழைக்கிறது. அதாவது பெண் சிங்கங்களின் உழைப்பில் உடல் வளர்க்கும் ஆண்சிங்கங்கள் அதிக தினவும் ஆளுமையும் உள்ளவையாக இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. உண்மையைச் சொன்னால் சிங்கமாக இருக்கட்டும், மனிதர்களாக இருக்கட்டும் இயங்கு சக்தியும், இயக்கு சக்தியும் பெண்தான். :lol: ஒரு சிங்கக் குழுமத்தை எடுத்துக் கொண்டால் அங்கு ஆண்சிங்கங்கள் கணிசமாக உடனிருப்பதில்லை. தினவு ஆளுமை அதிகரித்ததன் வெளிப்பாடு ஆண்சிங்கங்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை. பெண் சிங்கங்கள் அப்படியல்ல கூட்டாக வாழும் பழக்கத்தை உடையவை. ஓரிடம் விட்டு இன்னோர் இடம் போகும் போதும் அவை குட்டிகளையும் இதர சிங்கங்களையும் அரவணைத்தே நகர்கின்றன. இக்குணம் சிங்கங்களுக்கு மட்டுமல்ல சகல உயிர்வாசிகளுக்கும் பொருந்தும்.

பேட்டுக் கோழியை உதாரணத்திற்கு எடுத்து பதுங்குவது கோழிதான் என்று சேவலுக்கு ஒன்றும் மகுடம் சூட்டவேண்டாம். இயற்கையின் நியதி. சேவலிடம் பதுங்கும் பேடுதான் காகமோ, கருடனோ குஞ்சுகளைத் தூக்க வரும்போது சிலிர்த்து நின்று சண்டைபோடும். சேவல் சம்பந்தமே இல்லாத மூன்றாம் நிலையில் நின்று ஒரு கலவரக்குரல் எழுப்புவதோடு சரி சண்டை போடுவது கிடையாது அப்படியே சேவல் எங்காவது சண்டை போட்டால் அங்கும் தன்னுடைய ஆதிக்கத்தை மேவத் தயாராகும் இளைய சேவல் குஞ்சுகளிடம் மாத்திரமே. ஏகமாக எங்கு பார்த்தாலும் இயற்கையின் படைப்பை வைத்து விலங்குகளில் ஆணுக்கே ஆளுமை அதிகம் என்று நீங்கள் நிலை நிறுத்தப் பல உதாரணங்களைக் காட்டலாம்.

ஆக உடல் வலுவை வைத்து மேலாதிக்கம் செய்வதை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம் நெடுக்குத் தம்பி?

சகாறா அக்கா, இப்பிடி மட்டமாய் நினைச்சுப்ப்போட்டீங்கள். உங்க கருத்துக்கு பச்சைப்புள்ளி குத்தி இருக்கிறன். மிச்சம் நாளைக்கு மற்ற ஐடியில இன்னொரு பச்சைப்புள்ளி குத்திவிடுகிறன். அவர் ஒருத்தர் சேவல், பேடு என்கிறார், நீங்கள் சிங்கம் எண்டுறீங்கள். யாராச்சும் மனுசரைப்பற்றி கதையுங்கோ.

அண்மைக்காலமாக நெடுக்கரின் போக்கு .... பொண்ணுகளை தாக்குவதிலேயே போகிறது!!!!!! ... எங்கேயே ... நல்ல பாடம் படித்திட்டார் போலிருக்கிறது??? ... இப்படியே போனால் பேடுகளென்ன, சேவலுகளும் கிடைக்காமல் போய்விடும்! :lol:

வணக்கம் நெடுக்குத்தம்பி நலமா?

உங்கள் ஆண்சிங்கங்களின் ஆதிக்கம்... சும்மா சொல்லக் கூடாது ஆளுமை உள்ளதுதான்.. ஆனால் உங்களுக்கத் தெரியாத விடயம் அல்ல ஆண்சிங்கங்கள் மிகவும் சோம்பேறிகள் :lol:(அக்கருத்தை நான் பதிவதற்காக ஏகப்பட்ட மைனஸ் புள்ளிகளை எனக்கு யாழ்க்கள நண்பர்கள் தருவார்கள் என்பது எனக்குத் தெரியும் மைனஸ் போடும் அனைவருக்கும் பெண் என்ற நிலையில் என்னுடைய பிரத்தியேக நன்றிகள்)

ஆண்சிங்கங்கள் தமது ஆளுமையை எங்கு நிலை நிறுத்துகின்றன?

பெண் சிங்கங்களை புணரும் போதும், குட்டிகளைச் சினக்கும் போதும் மாத்திரமே. மற்றப்படி பெண் சிங்கங்கள் வேட்டையாடிக் குட்டிகளுக்காகக் கொண்டு வரும் இரையை இந்த ஆண் சிங்கங்கள் பறித்து உண்பதில் கில்லாடிகள். நெடுக்குத் தம்பி உதாரணமே பிழைக்கிறது. அதாவது பெண் சிங்கங்களின் உழைப்பில் உடல் வளர்க்கும் ஆண்சிங்கங்கள் அதிக தினவும் ஆளுமையும் உள்ளவையாக இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. உண்மையைச் சொன்னால் சிங்கமாக இருக்கட்டும், மனிதர்களாக இருக்கட்டும் இயங்கு சக்தியும், இயக்கு சக்தியும் பெண்தான். :lol: ஒரு சிங்கக் குழுமத்தை எடுத்துக் கொண்டால் அங்கு ஆண்சிங்கங்கள் கணிசமாக உடனிருப்பதில்லை. தினவு ஆளுமை அதிகரித்ததன் வெளிப்பாடு ஆண்சிங்கங்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை. பெண் சிங்கங்கள் அப்படியல்ல கூட்டாக வாழும் பழக்கத்தை உடையவை. ஓரிடம் விட்டு இன்னோர் இடம் போகும் போதும் அவை குட்டிகளையும் இதர சிங்கங்களையும் அரவணைத்தே நகர்கின்றன. இக்குணம் சிங்கங்களுக்கு மட்டுமல்ல சகல உயிர்வாசிகளுக்கும் பொருந்தும்.

பேட்டுக் கோழியை உதாரணத்திற்கு எடுத்து பதுங்குவது கோழிதான் என்று சேவலுக்கு ஒன்றும் மகுடம் சூட்டவேண்டாம். இயற்கையின் நியதி. சேவலிடம் பதுங்கும் பேடுதான் காகமோ, கருடனோ குஞ்சுகளைத் தூக்க வரும்போது சிலிர்த்து நின்று சண்டைபோடும். சேவல் சம்பந்தமே இல்லாத மூன்றாம் நிலையில் நின்று ஒரு கலவரக்குரல் எழுப்புவதோடு சரி சண்டை போடுவது கிடையாது அப்படியே சேவல் எங்காவது சண்டை போட்டால் அங்கும் தன்னுடைய ஆதிக்கத்தை மேவத் தயாராகும் இளைய சேவல் குஞ்சுகளிடம் மாத்திரமே. ஏகமாக எங்கு பார்த்தாலும் இயற்கையின் படைப்பை வைத்து விலங்குகளில் ஆணுக்கே ஆளுமை அதிகம் என்று நீங்கள் நிலை நிறுத்தப் பல உதாரணங்களைக் காட்டலாம்.

ஆக உடல் வலுவை வைத்து மேலாதிக்கம் செய்வதை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம் நெடுக்குத் தம்பி?

நீங்கள் எழுதியவற்றைப் படித்தேன், பல கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. வாசித்து விட்டு மட்டும் போக முடியவில்லை. உங்கள் எழுத்திற்கு பச்சைப் புள்ளி வழங்கியுள்ளேன்.

உடல் வலுவைக் கொண்டு ஆதிக்கம் செய்வது என்பது பொருள் அல்ல. உடல் வலுவைக் கொண்டு சமூகத்தை பாதுகாப்பதே நோக்கம். உடல் வலுவற்ற பெண்களிடம் சமூகப் பாதுகாப்பை அளிக்க முடியாது. இன்றும் கூட மனிதர்களில் போர்க்களங்களில் ஆண்களே அதிகம் பலியிடப்படுகிறார்கள். ஆண்கள் போர் வீரர்களாக்கப்பட்டு சமூகத்தை நாட்டை பாதுகாக்க அனுப்பப்படுகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு வேறு பொறுப்புக்களில் இருந்து விடுப்பு வழங்குகின்றனர்.

அந்த நிலை சிங்கங்களிலும் இருக்கிறது. ஆண் சிங்கம் எப்போதும் சோம்பேறி கிடையாது. அதற்கு வேட்டையாடி தன் உணவை தானே தேடிக் கொள்ளவும் தெரியும்.. தனது நிலப்பரப்பை அபகரிக்க வரும் எதிரிகளை விரட்டி பெண் உட்பட அதன் சந்ததி வாழ பாதுகாப்பான நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்ளவும் தெரியும்.

குட்டிகளை குஞ்சுகளை தாய் பராமரிப்பது என்பது விலங்கு இராய்ச்சியத்தில் கூர்ப்பின் வழி வளர்ந்து வருகிறது. ஆண் விலங்கு வாழும் பிரதேசத்தை தக்க வைக்க பொதுவாக பெண் விலங்கு குட்டி போட்டு அவற்றைப் பராமரிக்கும். இது வெற்றிகரமான சமூக வாழ்விற்கு இந்தப் பூமிப்பந்தில் அவசியமாகும். இங்கு ஆண் சோம்பேறி என்பது எந்த வகையில் பொருந்தும். அதற்கு இயற்கை அளித்த கடமையை அது செய்கிறது. பெண் தனக்குரிய கடமையை செய்கிறது. அவ்வளவும் தான்.

சேவலுக்கும் இதே தான் நிலை. வாழும் நிலப்பரப்பின்றி ஒரு உயிரினம் வெற்றியடைய வாழ முடியாது. (தமிழர்கள் எங்கும் ஒட்டிப்பிழைப்பர்.. அவர்களை விட.). சேவல் வாழும் நிலப்பரப்பை காத்து நிற்க.. தீர்மானித்து நிற்க.. எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து நிற்க.. குஞ்சுகளை பராமரிப்பதை பேடு செய்து கொள்கிறது. சேவல் குஞ்சுகளை மட்டுமல்ல.. பேட்டை தாக்க வரும் எதிரிகளை விரட்டி அடிப்பதை நீங்கள் கண்டதில்லையா. பேட்டை பிடிக்கப் போனால் சேவல் கொத்த வரும். பேடு சத்தமிட்டால் சேவல் ஓடி வரும். அதுமட்டுமன்றி குஞ்சுகளை சேவல்கள் அலேட் செய்வதை கண்டிருக்கிறேன். சேவல் அலேட் செய்ய பேடு அலேட் செய்யும். அதைத் தொடர்ந்து குஞ்சுகள் பதுங்கிக் கொள்ளுங்கள். சேவல் வெறும் சோம்பேறி கிடையாது. அது தனக்கு உணவு தேடும். தன்னை எப்போதும் விழிப்போடு வைத்துக் கொள்ளும். அது மட்டுமன்றி போதிய உணவு கிடைத்துவிட்டால் பகிர்ந்து உண்ண பேட்டை அழைக்கும். ஆனால் பேடு பொதுவா சேவலை அழைத்து சாப்பாடு கொடுக்காது. குஞ்சுகளை பராமரிக்கிறதை விட அது வேறெதுவும் செய்யாது. தனது வாழும் நிலப்பரப்பை கூட அது தீர்மானிக்காது. வேறு எங்காவது போய் முட்டை போடும். வேறு சேவல் கிடைத்தால் அங்கு ஓடிவிடும். ஆனால் சேவல் அப்படியல்ல. தனக்குரிய நிலப்பரப்பில் அதன் நிலை நிறுத்தப்பட்டுவிட்டால் விலகிப் போகாது. இதுதான் அதன் தலைமைத்துவப் பண்பின் அடையாளம்.

சரிவர இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து சேவல் ஆண் சிங்கம் சோம்பேறி.. அதற்கு ஏதோ பேடு பெண் சிங்கமும் தான் இயங்கு சக்தி என்பது ஒன்றும் இயற்கையில் அவ்வாறு அவதானிக்கக் கூடிய அளவில் முதன்மை பெற்றில்லை. மனிதப் பெண்கள் விடும் டூப்புகுகளில் இதுவும் ஒன்று. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி உதாரணமே பிழைக்கிறது

பிழைக்கும் தானே. ஐந்தறிவுள்ளவை மிருகம் எனவும் மனிதன் பகுத்தறிவு இனம் ஆறாம் அறிவு கொண்டவன் என்பது தான் யதார்த்தம். ஒரு சில மக்கள் மிருகங்களாக நடக்கலாம். அதற்காக பெண்கள் பேடாம் ஆண்கள் சேவலாம். பெயரிட்டதே நாங்கள் தான்.மிருகங்களோ,பறவைகளோ,மனிதரோ ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் இயற்கையின் நியதி.

இயற்கையாக பெண்கள் உடலியல் ரீதியாக பலவீனமானவர்களாக இருக்கலாம் ஆண்களை விட. ஆனால் எப்படி உடல் வலு உள்ள ஆண்கள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள் என்பதையும் வலுவற்ற

பெண்கள் இல்லாத துறையையும் உங்களால் கூறமுடியுமா?

இப்போதைக்கு இந்த திரி முடியாது என்று நினைக்கின்றேன்

"அடக்குவதும் ஒரு சுகம், அடங்கிப் போவதும் ஒரு சுகம். இரண்டும் கலந்தது தான் ஆண்-பெண் உறவின் இன்பம்"

:சுவாமி நிழலியானந்தா

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

http://www.raaga.com/player4/?id=154697&mode=100&rand=0.825482144655566

பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக் கோழி

http://www.raaga.com/player4/?id=154697&mode=100&rand=0.825482144655566

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001702

Edited by eelapirean

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலுவற்ற

பெண்கள் இல்லாத துறையையும் உங்களால் கூறமுடியுமா?

இயற்கையாக இயங்க முடியாத உடலுடைய கணணிகள் பொறிகள் எல்லாத் துறையிலும் ஆதிக்கம் செய்யும் இன்றைய இலத்திரனியல் யுகத்தில்.. பெண்கள் எல்லாத் துறையிலும் இருப்பது ஒன்றும் அதிசயமும் அல்ல.. அசாத்தியமும் அல்ல. அது ஒரு சாதனையும் அல்ல. அது மனித சமூகத்தின் தேவை.

குரங்கு கரடி கூட இன்று பயிற்சி அளித்தால் விமானம் ஓட்டும். விண்வெளிக்குப் போகும். ஆறறிவு கூட அதற்குத் தேவையில்லை. கணணிகளின் பொறிகளின் தன்னியங்கச் செயற்பாடுதான் இன்று உலகை அதிகம் இயக்கிக் கொண்டிருக்கிறது.

இன்றும் பெண்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணக் கூடிய துறைகள் இருக்கின்றன. உதாரணமாக சுரங்கத் தொழில். இராணுவத்தில் குறிப்பாக நேரடிப் போர் வீரர்கள். இந்தக் காலத்தில் கூட பெண்கள் இலகுவான வேலைகளைச் செய்யும் துறைகளில் தான் அதிகம் ஆதிக்கம் செய்கின்றனர். ஆண்கள் கடினமான வேலைகளை செய்யும் துறைகளில் அதிகம் உள்வாங்கப்படுகின்றனர். இந்தப் பாரபட்சம் எல்லாம் இங்கும் சிலரின் கண்ணிற்குப் புலப்படுவதில்லை என்பதுதான் வேதனை.

பெண்கள் சாதனை என்று காட்ட ஒரு சில வேலைகளை வலிந்து செய்ய போகின்றனர். ஆனால் ஆண்கள் அவற்றையே கடமையாகச் செய்கின்றனர். பெண்களை விட கணணிகள் தானியங்கிப் பொறிகள் ஆற்றும் கருமம் பல மடங்கு மேலானது. அப்போ பெண்களை விடப் பொறிகள் உயர்ந்தவை என்று சொன்னால் ஏற்பீர்களோ..??! அநேக பொறிகளை கண்டறிந்தவர்களாக.. அறிமுகம் செய்தவர்களாக ஆண்களே இருக்கின்றனர். காரணம் ஆண்கள் தங்கள் கடின வேலையை இலகு படுத்த பொறிகளை உருவாக்கினர். அன்று வேட்டையாடுவதற்காக பொறி ஆக்கிய மனிதன்.. இன்று வேலைகளை இலகுவாக்க பொறியாக்கினான். பெண்களின் பங்களிப்பு இந்த விடயத்தில் குறிப்பிட்டு சொல்ல ஒரு சில உதாரணங்களைத் தவிர வேறு என்ன இருக்கிறது.

இதுதான் யதார்த்தம்..! இதை மறைத்து ஏதோ பெண்கள் இயலாததை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பெரிய தோற்றம் காட்டுவது.. தமிழர்கள் போன்ற தங்கள் நாட்டை நிலத்தை பாதுகாத்து உழைப்பால் கட்டி எழுப்பப் பஞ்சிப்படும் வர்க்கத்திடம் பெருமையாக எடுபடலாம். ஆனால் உழைக்கும் மக்களிடம் அது பெருமையாகாது. :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்தப் பாடலையே கேட்கிறேன். நன்றி அண்ணா. :lol:

பல குடும்பங்களில் திருமணங்கள் பாதியில் முறிவு ஏற்பட்டு சம்பந்தப் பட்டவர்கள் பிரிந்து தனித் தனியே வாழ்வது புலத்தில் பரவலாக நடந்து வருகிறது. இதற்கு மது, மாது, பணத்தாசை, பேராசை என்று பல காரணங்கள் உள்ளன.

எமது சொந்தங்களில் ஒரு பெண்ணின் வாழ்கையில் நீண்ட காலம் தனது வாழ்க்கைத் துணையோடு துன்பப்பட்டார்.

ஆண்கள் உடல் ரீதியாக பலசாலிகள் என்பது உண்மை தான், ஆனால் இந்தக் கூற்று அந்த ஆணைப் பொறுத்தவரையில், அவன் தினமும் குடித்துவிட்டு அடித்துத் துன்பப்படுத்தி அடிகாயங்களுடன் அந்தபெண்ணைக் காணும் போது தான் அந்தக் கூற்றுக் கூட அவனுக்குப் பொருந்தியது. பலர் கண்டும் காணமல் போல் இருந்தார்கள், நியாயம் கேட்ட்டுப் போனவர்களை அந்தப் 'பலசாலி' வயது வித்தியாசம் இல்லாமல் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களால் திரும்பினார்கள்.

புலம்பெயர் நாடு ஒன்றில் அவர்கள் இருந்ததால், அவர்கள் இருவருக்கும் அரசாங்கம் கொடுத்த சலுகைகளை அந்த 'பலசாலி' மட்டும் அதிகம் அனுபவித்து வந்துள்ளார். கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணை வழமைபோல போதையில் அடித்து துன்புறுத்தியதால் அந்தப்பெண் தாய்மையையும் இழந்தார். ஆனால் விட்டால் குடித்துவிட்டு நல்லா, பெண் சமத்துவம் பற்றி வாய்கிழிய கிழிய பேசுவான். "ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லை" என்பது அவனைப் பார்பவர்களுகுத் தெரியும்.

இப்படியான 'பலசாலிகள்' கண்ணுக்கு முன்னால் மற்ற மனுசரை போல் நடமாடி வருகிறார்கள். இதனை பார்க்கும் போது அந்த 'பலசாலியை' என்னால் ஒரு மனுசனாக கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தப் பலசாலி தான் முதலும் கடைசியாகவும் இந்த சமுதாயத்தில் இருந்தான், இருக்கிறான் என்று அர்த்தமில்லை. எம்முள் நிறைய பேர் அந்த மனநிலையில் இருக்கிறோம் ஆனால், வெளியில் சும்மா பந்தா காட்டுறது.

கள உறவு சகாரா எழுதிய கருத்துக்களை நான் வரவேற்கிறேன், அது எனக்கு யாரும் சிவப்புப் புள்ளி பரிசாக அளித்தாலும் பறவாய் இல்லை.

இன்று போர்களங்களில் கூட ஆண்கள் தான் களத்தில் இருக்கிறார்கள் என்று ஒரு கருத்தை நெடுக்ஸ் முன்வைத்து இருந்தார்... ஏனுங்கண்ணா, ஈழம் தானே உங்களுக்குப் பூர்வீகம்? ஈழத்தில பெண்கள் போராளியாகவோ, இல்லை கரும்புலியாகவோ களங்களில் போராடி ஒரு சமுதாயத்துக்காக, ஒரு நாட்டு விடுதலைக்காக தங்கள் உயிரை அற்பணித்ததை நீங்கள் பார்த்தது இல்லையோ?? அறிந்ததில்லையோ??? உங்கட உறவுகள் ஒருத்தரும் பெண் போராளியாகவில்லை போல...

உலக நாடுகளில் உள்ள ராணவதில் பெண்கள் இல்லாமல் இல்லை, ஆனால் அங்கும் ஆணாதிக்கம் இல்லை என்பதை உங்களால் நிருபிக்க முடியுமா?

http://womensenews.org/story/military/050320/record-number-female-soldiers-fall

  • கருத்துக்கள உறவுகள்

. பலர் கண்டும் காணமல் போல் இருந்தார்கள், நியாயம் கேட்ட்டுப் போனவர்களை http://womensenews.org/story/military/050320/record-number-female-soldiers-fall

  • கருத்துக்கள உறவுகள்

நான் சில இடங்களில் நியாயம் கேட்டுப்போனேன்

அங்கெல்லாம் பெண்களே முட்டாள்களாக இருந்தார்கள்

விதி

அவருக்கு இப்ப காலம் கூடாது திருந்திவிடுவார்

இவர் மட்டும்தானா இப்படி இவர மாதிரி பலபேர்

எங்கட அப்பாவும் இப்படித்தான் இருந்தார்

பிள்ளைகளுக்காக வாழப்போறன்

எனக்கு அவர விட்டால் எவருமில்லை

எதிர்காலச்சந்ததிக்கு கூடாது

இப்படி பல சாட்டுக்கள்

இவை

பெண்களின் பலவீனமா?

ஆண் ஆதிக்கம் அந்தளவுக்கு பலமாக இருந்ததா என்று நீங்கள்தான் சொல்லணும்

ஆதியின் சப்போர்ட் நெடுக்ஸிற்கே...

கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே!

கமோன் நெடுக்ஸ் கமோன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

cock+and+hen.jpg

அதென்ன ஆணாதிக்கம் என்பது.??! ஆண் ஆண் தான். பெண் பெண் தான். சமூகத்தில சம உரிமை என்பது ஆணைப் பெண்ணாக மாற்றுவதில் அல்ல. அல்லது பெண்ணை ஆணாக மாற்றுவதில் அல்ல. பெண்ணை ஆணை சக மனிதனாக எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளுதலும் நடத்துதலும் ஆகும்.

விலங்கு இராட்சியம் எங்கனும் ஆண் பலமானதாகவே அதிகம் விளங்குகிறது. அது ஆதிக்கம் அல்ல. தலைமைத்துவ சமூகம் நோக்கிய ஒரு காரணி. சமூக வாழ்வில் தலைமைத்துவம் மூத்தது வழிகாட்டுதல் என்பன போன்ற விடயங்கள் அடங்கி இருக்கின்றன. சிங்கக் கூட்டத்திற்கு ஆண் சிங்கம் தலைமை. யானைக் கூட்டத்திற்கு ஆண் யானை தலைமை. தலைமைப் பண்பு என்பது ஆதிக்கம் அல்ல. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் பெண் தலைமைத்துவம் கூட சமூக விலங்குகள் மத்தியில் அவதானிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தலைமைத்துவம் என்பது தவறாக ஆதிக்கம் என்று விளக்கப்பட்டு வருகிறது.

ஆண் சிங்கம் தலைமை தாங்கினும்.. பெண் சிங்கத்தின் வாழ்வுரிமையை விருப்பு வெறுப்பை அது தீர்மானிப்பதும் இல்லை... கட்டுப்படுத்துவம் இல்லை. அதேவேளை பெண் சிங்கத்திடம் இதைச் செய் என்று வலியுறுத்துவதும் இல்லை. சமூகமாக வாழ்ந்தாலும் ஆணின் தலைமைப் பண்பை அங்கீகரித்தாலும்.. பெண் தான் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் வாழ ஆண் தன்னுரிமையோடு தனக்குரிய வடிவில் இணைந்து வாழ்கின்றன.

அந்தச் சிங்கத்திற்கும்.. அப்பன் முப்பாட்டன் வந்து என்ன ஆணாதிக்கமா கற்றுக் கொடுத்தான் தலைமை தாங்க. அதுமட்டுமன்றி இனவிடைப் போட்டியில் ஆண் பெண்ணை அதிகாரம் செய்வது.. உடலுறவின் போது ஆண் பெண்ணுக்குள் திணிப்பதும்.. அங்கு நடக்கிறது. அதையும் ஆதிக்கம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அப்படிச் சொல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆணுக்கு திணிக்க இருக்குது திணிக்குது... பெண் வாங்குது. எனி இவைக்காக தனி ஒரு கூர்ப்பை எல்லோ இயற்கை தேர்வு செய்ய வேண்டும். கூர்ப்பின் பாதையில் லிங்கப் புணர்வு பாதுகாப்பான வினைத்திறனான கருக்கட்டலுக்கு உதவுகிறது என்பதுதான் முக்கியமாகிறதே தவிர ஆண் திணிக்க முடிவதால் அவன் ஆதிக்க வாதி என்பதல்ல அங்கு பொருளாக்கப்பட்டுள்ளது.

பெண்ணிலைவாதிகள் ஒன்றில் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றேல் ஆண் பெண் உரிமைகள் தொடர்பில் இயற்கையின் விதிப்புக்களை ஏற்றுக் கொண்டு கத்த வேண்டும்.

உண்மையில் ஆண் பிறப்புரிமையையில் ரீதியில் கூட இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறான். பெண்கள் வளமான ஒரு சோடி xx நிறமூர்த்தங்களைக் கொண்டிருக்க ஆண் ஒரு வளமான x ஐ மட்டும் கொண்டிருக்கிறான். மற்றது y. அது சிறிய ஒரு நிற மூர்த்தம். இதற்காக ஆண்கள் தாங்கள் பெண்களை விட தாழ்ந்திருப்பதாகவா உணரச் செய்யப்பட்டுள்ளனர். இல்லையே.

பெண்கள் தாங்களாகவே ஆண்களுக்கு கட்டுப்படும் நிலை ஒன்றிருக்கிறது. அது இயற்கையின் விதிப்பாகக் கூட இருக்கலாம். சேவல் கலைச்சால் பேடு தான் பதுங்குவதும் மிதிபடுவதும். சேவலுக்கும் அப்பன் முப்பாட்டன் வந்து கற்றுக்கொடுத்தானா இதை...??! பேட்டிற்கு பதுங்கு மிதிபடு என்று கோழிச்சமூகம் என்ன கட்டுப்பாடா போட்டு வைத்துள்ளது..???!

அதுமட்டுமன்றி அங்கு பேடு பதுங்குவதால் மிதிபடுவதால் அது தனது வாழ்வுரிமையை இழந்துவிடுவதில்லை. சேவலுக்கு அடிமையாக வாழ்வதில்லை. மிதிபடும் கணத்தோடு அது அதில் இருந்து விடுபட்டுக் கொள்கிறது. அடுத்த கணமே அது தன் வாழ்வை தன் வழியில் சென்று தேடிக் கொள்கிறது. அதற்காக சேவலே தனக்கு சேவகன் என்று உரிமை பாராட்டுவதில்லை. ஆனால் மனிதர்கள்.. அப்படியா..??! சமூகம் கலாசாரம் பண்பாடு என்று கட்டுப்பாடுகளை ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் திணிக்கிறார்கள். அதைப் பற்றி பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் தான் கவலைப்பட வேண்டி இருக்கிறது. அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது வளமான மனித சமூகத்தை உருவாக்க என்று சொல்லிக் கொள்கிறார்கள்

பெண்ணிலைவாதம் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது என்பது இன்று ஆணை மேலாதிக்கம் செய்வது பற்றிப் பேசுவது என்பதாகி விட்டது. இது பெண்ணுரிமையை நிலை நாட்ட உதவாது. பெண்கள் மீதான வன்முறையை தான் நிலைநாட்டும். ஏனெனில் இயற்கையில் ஆண் பெண்ணை விட உடல் ரீதியில் பலமானவன். அதை எந்த அப்பனும் முப்பாட்டனும் வந்து மாற்ற முடியாது. அது இயற்கையின் தேர்வு. இந்த அடிப்படையை ஏற்றுக் கொள்ளாது சம உரிமை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

சட்டத்தை போட்டு அடக்குவதும் அடக்குமுறைதான். சட்டங்கள் அற்ற தேச பரிபாலனம் எப்படி சாத்தியமில்லையோ அதேபோல் தான் ஆணின் பலப்பாவிப்புக்கு இடமின்றிய மனித சமூகமும் சாத்தியமில்லை. பலமுள்ளவன் பலத்தை பாவித்தே தீருவான். ஆண் பெண்ணிற்கு சமன் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஆண் பெண்ணை விட உடல் வலுவானவன் என்பதே யதார்த்தம். ஆனால் உடல் வலு என்பது பெண்ணின் ஆணின் வாழ்வுரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது.

சம உரிமை என்பது ஆண் பெண் என்ற நிலைக்கு அப்பால் மனிதன் என்ற நிலையில் உள்ள உரிமைகள் சார்ந்தே அது அமைய வேண்டும். ஆண் பெண் என்று வருகின்ற போது ஆணின் உடற்பலம் அவனை முன்னிறுத்துவதை தடுக்க முடியாது.

இன்று பல ஆண்கள் வீட்டு வேலையாட்களாக மனைவிக்கு பணிந்து நடக்கவும் செய்கின்றனர். காரணம்.. அதிகாரம் செய்ய முடியாது என்று அல்ல. அன்புக்கு அதிகம் கட்டுப்படுகிறார்கள் அல்லது ஏன் வேண்டாத பிரச்சனையை இவளோட வளர்ப்பான்.. இது ஒரு விளக்கம் குறைஞ்சது.. என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது பெண்களுக்கு நல்லாவா இருக்கும். அவங்களே அவங்க செயலால் தங்களின் நிலையை தாழ்த்திக் கொள்ளுறாங்க. சம உரிமை என்பது அடுப்படியில் சமைப்பதில்.. படுக்கை அறையில் படுப்பதில் அல்ல. சம உரிமை என்பது சிந்தனையில் செயலில் ஆணைப் பெண்ணை சமனாக சக மனிதனாக மதிக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அதற்காக ஆண் அல்லது பெண் தங்கள் இயல்பான இயற்கையான இயல்பை இழப்பது அல்ல செய்யப்பட வேண்டியது.

இன்றைய காலத்தில் பாரபட்சமான மனித இயற்றுகைச் சட்ட அமுலாக்கங்களைப் பயன்படுத்தி ஆண்கள் மீது பெண்கள் அதிகாரத்தை செலுத்துவது வளர்ந்து வருகிறது. பெண் தலைமைத்துவம் பெண் மேலாதிக்க வெறித்தனமாக வளர்க்கப்படும் நிலையும் இருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில் எந்த ஒரு மனிதனும் அதிகம் நாள் வாழ விரும்பமாட்டான். அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணா இருந்தாலும் சரி. இந்த உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டு ஆணாதிக்கம் அது இது என்று தேவையற்ற பதங்களை உச்சரித்துக் கொண்டு பெண்ணிலைவாதிகள் என்று ஆண்களோடு வீம்பு பேசிக் கொண்டு திரிவதிலும் உருப்படியாக பெண்களிற்குள்ள மனித உரிமைகள் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் அதனை பெற்று இந்த இயற்கையோடு எப்படி இணைந்து அதனைச் செயற்படுத்தி வாழ்வது என்பதைக் கற்றுக் கொடுப்பதே நன்று. ஆண்களை நோக்கியும் இது செய்யப்பட வேண்டும். இன்றேல்.. சேவல் கலைப்பதற்கும் பேடு பதுங்குவதற்கும் ஆதிக்கம் அடிமைத்தனம் என்று பெயரிட்டு காலம் காலமாக மோதிக்கொண்டிருந்து பொழுது கழிப்பதைத் தவிர வேறெதையும் சாதிக்க முடியாது.

இங்கு சிவப்பு வர்ணம் இட்ட பகுதிகளை மீள் வாசிப்பிற்கு உள்ளாக்கும்படி இதனை எழுதிய நெடுக்குத் தம்பியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இயற்கையோடு எப்படி இணைந்து அதனைச் செயற்படுத்தி வாழ்வது என்பதைக் கற்றுக் கொடுப்பதே நன்று. ஆண்களை நோக்கியும் இது செய்யப்பட வேண்டும். :lol:

இயற்கையைக் கைவிட்டுவிட்டு செயற்கைமுறையில் கருவூட்டல் செய்து வாரிசை உருவாக்குவேன் என்று அடம்பிடிக்கும் உங்களுக்கும் நீங்களே நல்ல ஆலோசகராக மாறியிருக்கிறீர்கள். :lol: :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.