Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

.

யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 100 கிராம்

கழுவின இறால் - 100 கிராம்

கழுவின பாதி நண்டு - 8

மீன்தலை - 1

புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் - 10

புளி - ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை - 100 கிராம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

மிளகு - சிறிதளவு

நற்சீரகம் - சிறிதளவு

செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை:

1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

நன்றி யாழ் மண்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது.

கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது.

இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது.

இணைப்புக்கு நன்றி.

Posted (edited)

யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று

அப்பா புற்றுநோயில் சாக 6 நாட்களின் முன்பும் குடித்த ஒரு உணவு (அதுதான் இறுதியாக வாய்மூலம் உட்கொண்ட உணவாகவும் இருந்தது)

யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும்,

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும்,

கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்..........

நன்றி தமிழ் சிறி

Edited by நிழலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது.

கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது.

இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது.

இணைப்புக்கு நன்றி.

வாஷா, நேற்று இந்தப் பதிவை யாழ் மண்ணில் பார்த்தேன்.

யாழ்கள உறவுகளும் நாலு நாள் ஈஸ்டர் லீவில் வீட்டில் நிற்கும் செய்து பார்க்கட்டும் என்று இங்கு இணைத்துள்ளேன்.

ஏற்கெனவே யாழ் மண்ணுக்கு நன்றி தெரிவித்துள்ளேன்

கூழ் என்னும் போது நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஞாபகம் தான் வரும்.

இதோ அவரின் ஆடிக் கூழ் பாடல்.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று

------

யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும்,

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும்,

கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்..........

நன்றி தமிழ் சிறி

உண்மை தான் நிழலி,

கூழ் குடிக்கும் போது சுற்றம் சூழ நண்பர், உறவினர்களுடன் குடிக்கும் போது தான் சுவையாக இருக்கும்.

அதனை பலரும் கூழ் பாட்டி என்று தான் சொல்வார்கள்.

இப்போது நீங்கள்...... கனடாவில் கூழ் காய்ச்சினால் சுற்றம், சூழ கூழ் குடிக்க ஆட்கள் இருக்கிறார்கள் தானே....... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூழ் மறக்க முடியாத ஒரு உணவு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10828&st=0

http://www.yarl.com/forum/index.php?showtopic=3345

குளக்காட்டான், 2005ம், 2006ம் ஆண்டிலேயே யாழ் களத்தில் கூழ் காய்ச்சியாச்சா......

அது ஆறியிருக்கும், கூழ் சூடாக குடித்தால் தான் சுவையாக இருக்கும்.smiley-eatdrink003.gifsmiley-eatdrink059.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு.

பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் கிடக்கட்டும்

எல்லாரும் ஆடிக்கூழைப்பற்றி கதைக்கிறியளோ இல்லாட்டி ஒடியல் கூழைப்பற்றி கதைக்கிறியளோ?

ஏனெண்டால்

ஆடிக்கூழுக்கும் ஒடியல்குழுக்கும் கனக்க வித்தியாசமெண்டு நினக்கிறன் :)

என்ன வித்தியாசம் குமாரசாமி அண்ணை,

தலையிலை கல்லை தூக்கிப் போடாமல், உடன சொன்னால் நல்லது கண்டியளோ........ :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன வித்தியாசம் குமாரசாமி அண்ணை,

தலையிலை கல்லை தூக்கிப் போடாமல், உடன சொன்னால் நல்லது கண்டியளோ........ :)

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

குமாரசாமி அண்ணா, இதுவரை நான் கூழ்குடிச்சதே ஒரு பத்து தரம் தான்,

எல்லாம் காரசரமான கூழ் தான். அதில் இனிப்பு கூழ் என்று நீங்கள் சொல்ல வாய் ஊறூது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு.

பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.

வாஷா, யாழ் களத்துக்கு எந்த விதமான பிரச்சினையும் என்னால் வரக்கூடாது.

அப்படியான விஷங்களில் நான் மிக அவ தானமாக இருப்பேன். :)

Posted (edited)

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

குமாரசாமி அண்ணா, இதுவரை நான் கூழ்குடிச்சதே ஒரு பத்து தரம் தான்,

எல்லாம் காரசரமான கூழ் தான். அதில் இனிப்பு கூழ் என்று நீங்கள் சொல்ல வாய் ஊறூது.

ஆடிக்கூழ் செய்முறைக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26210&st=0

http://www.yarl.com/forum3/index.php?showtopic=41646

Edited by KULAKADDAN
  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 100 கிராம்

கழுவின இறால் - 100 கிராம்

கழுவின பாதி நண்டு - 8

மீன்தலை - 1

புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் - 10

புளி - ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை - 100 கிராம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

மிளகு - சிறிதளவு

நற்சீரகம் - சிறிதளவு

செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை:

1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

நன்றி யாழ் மண்.

.

இந்தக் கூழுக்கு ஏன் கணவாய் சேர்க்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். :D

இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????! :D

Posted

யாழ்ப்பாணத்துக் கூழ் இணைப்பிற்கு மிகவும் நன்றி சிறி அண்ணா!

எனது அப்பாவுக்கும், அப்பப்பாவுக்கும் மிகவும் பிடித்த உணவு கூழ் தான் :D . நிழலி உங்கள் அப்பாவுக்கும் பிடித்த உணவா? :D

வீட்டில் உறவுகள் ஒன்றாகா சேரும் போது அப்பா தானே இதனை செய்து பரிமாறுவார்... எல்லா சத்தும் நிறைந்த இந்த உணவுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொன்னது கூட ஞாபகம் வருகிறது...

கூழை வடலியில் பிழா மாதிரி ஒன்று செய்து (சரியாகப் பெயர் ஞாபகம் இல்லை) அதில் தருவார்... அதன் ருசியே தனி... எனது அப்பப்பா சொல்லுவார், கூழ் நல்ல பதமா செய்து இருக்க என்று அறிய, அந்தக் கூழைக் குடிக்கும் போது, குடிப்பவரின் மூக்கிலிருந்து நீர் சிந்துமாம்...

அது ஒரு கனாக் காலம்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்களும் முந்தி ஒருக்கால் கூழ் காய்ச்சி இருக்கிறமாக்கும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=26267

கூழை பற்றிய செய்முறையே..... நாவூற வாயூற பகுதியில் கனக்க இருக்கும் போலை இருக்குது.

ஒவ்வொரு கூழும் ஒரு விதம். இந்த கோடை விடுமுறைக்கு எல்லாத்தையும் ஒரு கை பார்க்க வேண்டியது தான்.smiley-eatdrink026.gif

Posted (edited)

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். :lol:

இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????! :rolleyes:

இந்த செய்முறை 2005 இல் பழைய யாழ் களத்திலை எழுதினது.

ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்)

image29bw.jpg

தேவையான பொருட்கள்

ஒடியல் மா 250 கிராம்

150 கிராம் புழுங்கல் அரிசி

பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம்

பயற்றங்காய் 250 கிராம்

மரவள்ளி கிழங்கு 250 கிராம்

முருக்கம் காய் பிஞ்சு 2

முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம்

மாங்காய் பெரிசா 1

செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது

உப்பு அளவுக்கு

செய் முறை

புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும்

பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும்

இது மாவின் காறல் தன்மை போக உதவும்

பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்

மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும்

நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும்

நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும்

கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))

http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20

Edited by KULAKADDAN
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கூழுக்கு ஏன் கணவாய் சேர்க்கவில்லை?

கூழுக்கு சின்ன கணவாயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டால்..... கடிபடும் போது நல்ல சுவையாக இருக்கும் ரதி.

ஆனால் இங்கு கூழ் காய்ச்சின சட்டி, சிறியதாக இருந்ததால் கணவாயை சேர்க்காமல் விட்டுள்ளார்கள். ^_^

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். ^_^

------

இது ஒடியல் மாவில் செய்வதால், பனைகள் அதிகம் உள்ள இடமான யாழ்ப்பாண மக்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாம்.

யாழ் மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட சில பிரயோசனமான பொருட்கள் ....... துலா, இடியப்ப உரல் போன்றவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்துக் கூழ் இணைப்பிற்கு மிகவும் நன்றி சிறி அண்ணா!

எனது அப்பாவுக்கும், அப்பப்பாவுக்கும் மிகவும் பிடித்த உணவு கூழ் தான் ^_^ . நிழலி உங்கள் அப்பாவுக்கும் பிடித்த உணவா? :)

வீட்டில் உறவுகள் ஒன்றாகா சேரும் போது அப்பா தானே இதனை செய்து பரிமாறுவார்... எல்லா சத்தும் நிறைந்த இந்த உணவுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொன்னது கூட ஞாபகம் வருகிறது...

கூழை வடலியில் பிழா மாதிரி ஒன்று செய்து (சரியாகப் பெயர் ஞாபகம் இல்லை) அதில் தருவார்... அதன் ருசியே தனி... எனது அப்பப்பா சொல்லுவார், கூழ் நல்ல பதமா செய்து இருக்க என்று அறிய, அந்தக் கூழைக் குடிக்கும் போது, குடிப்பவரின் மூக்கிலிருந்து நீர் சிந்துமாம்...

அது ஒரு கனாக் காலம்... :(

image29bw.jpg

-----

கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))

http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20

குட்டி, பலா இலையில் கூழ் குடிப்பது..... கூழுக்கு தனிச்சுவையை தரும் என்பது முற்றிலும் உண்மை.

நீங்கள் குறிப்பிடும் பலா இலையில் செய்த பிளாவை குளக்காட்டான் தனது படத்தில் காட்டியுள்ளார், அதனை பனுவல் என்று குறிப்பிடுகின்றார்.

இல்லை தமிழ் சிறி, அவர் பனை ஓலை பிழாவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கள்ளுத்தவறணைக்களில் இருப்பதை போன்றது. நான் படத்தில் காட்டிய பலா இலை பனுவல்?? ஐ குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு கூழ் என்டால் காரசாராமாய் இருக்க வேனும்.கண்னாலும் மூக்காலும் தணன்னி வரவேனும். :wub: சிலர் தேங்கய் சொட்டு சேர்த்து குடிப்பினம்.எனக்கு அது சரிப்பட்டு வராது.அது சரி சிறி ஏன் பாதி நன்டு :rolleyes: சாப்டாட்டு விசயத்தில கஞ்சத்தனம் கூடாது :lol:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.