Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன்

Featured Replies

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன்

வவுனியா நிருபர்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010

Sampanthan

நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர்

நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததனை வரவேற்ற சம்பந்தன் யுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கூடவே யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் எடுத்துக்கூற தவறிவிட்டார். இதனால் போரிற்கு பிந்திய முதலாவது பாராளுமன்றில் தமிழர் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர் தமிழர்களின் போராட்டத்தை ஈவிரக்கமின்றி பெரும் படுகொலையுடன் முடித்து வைத்த அரசாங்கத்தை வரவேற்று பேசிய வரலாற்று பக்கம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் சம்பந்தன் “நாட்டில் வசிக்கின்ற சகல மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கக் கூடிய வகையில் இந்த நாடாளுமன்றம் அளப்பரிய பணியொன்றை ஆற்ற வேண்டியுள்ளது" என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன சகல மக்களும் என்று ஏன் பேசவேண்டும். தமிழர் பிரதி நிதி தமிழர்களுக்கு அல்லது ஆக குறைந்தது சிறுபான்மை மக்களுக்கு என்றாவது பேசவேண்டாமா?

http://www.eelanatham.net/story/Sampanthan%20MP%20avoid%20to%20speak%20about%20Tamils%20sufferings%20in%20his%201st%20speach%20in%20the%20new%20parliament

Edited by தயா

:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது சம்பந்தன் ஐயா என்ன சொல்ல வாறார் எண்டால் முள்ளிவாய்காலில் தமிழனத்தை அழித்ததை வரவேற்கிறாராம். ஐயோ ஐயோ அவர் ஒண்டும் காமடி பண்ணலை, பாராளமன்ற உரைகள் கன்சாட்டிலும் இது வரும்.

சகல மக்களுக்கும் என்றுபேசியது பிழை தமிழருக்கென்று பேசியிருக்க வேண்டும்.நீங்களெல்லாம் தமிழராக பிறந்ததுதான் தமிழன் செய்த பாவம்.

உண்மையை துணிந்து பேச தொடங்விவிட்டார் போலிருக்கு,இது இன்னமும் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் ராஜ(வரோதயம்)தந்திரம் என்பார்களோ?

இன்னும் பல ஆப்புக்கள் காத்திருக்கின்றன.

தமிழராம், தேசியமாம்,சமஸ்டியாம், வட கிழக்கு இணைப்பாம், மாகாண சபையாம் .......

எல்லவற்றையும் பேச 5 நிமிடங்கள் காணுமா?

எழுத்தோட்டம் தற்போது தான் ஆரம்பம்.

உச்சக்கட்ட காட்சிகளுக்கு எவ்வளவு காலம் இருக்கு.

அது சரி அடுத்த பாராளுமன்றத் தேர்தல் எப்ப வரும் ?

சில வேளை ஜே. ஆர் செய்தது போல மகிந்தவும்....

வாத்தியார்

..............

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன்

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததனை வரவேற்ற சம்பந்தன் யுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கூடவே யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் எடுத்துக்கூற தவறிவிட்டார். இதனால் போரிற்கு பிந்திய முதலாவது பாராளுமன்றில் தமிழர் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர் தமிழர்களின் போராட்டத்தை ஈவிரக்கமின்றி பெரும் படுகொலையுடன் முடித்து வைத்த அரசாங்கத்தை வரவேற்று பேசிய வரலாற்று பக்கம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.

போரினால் அல்லல்பட்டு முகாம்களிலும், மர நிழல்களிலும் வாழும் மக்களை, அவயவங்களை இழந்த மக்களுக்கான சிகிச்சை வசதிகளை, சிறையில் அல்லலுறும் மக்களை மறந்து போனார் சம்பந்தன்.

"பானையிலுள்ளது தானே அகப்பையில் வரும்"

சொல்லாததை சொல்லவில்லை என்றும் சொன்னதை பிழை என்றும் சொல்வதே பிழைப்பா போச்சு.. இதுவும் வியாதிதான்.

சம்பந்தர் பாராளுமன்றத்டுக்குப் போனது பிச்சை வாங்கத்தான்.. அங்கே போய் நீதி கேட்க அல்ல.

இது ஒன்றும் மனுநீதிச் சோழனின் சபை அல்ல சிங்களப் பாராளுமன்றம்.

நொந்து நூலாப்போன சனந்த்துக்கு ஏதாவது பெற்றுக் கொடுக்கலாமே ஒழிய நீதி நியாமம் கேட்டு மனியடிக்கவல்ல

அந்த நிலையில் சம்பந்தரும் இல்லை கொடுக்கிற நிலையில் மகிந்தவும் இல்லை.

சும்மா எதுக்கெடுத்தாலும் தூற்றி வாராமல் கூடிக் கதைத்துப் பாருங்கோ. நீங்களும் தொடர்பு கொள்ளுங்கோ

உங்களை அவர்களோட செர்க்கத்தேவை இல்லை அவர்களின் நிலைபாட்டையும் அறியுங்கோ.

60 வருசமா போராட்டம் அதில 35 வருடங்களா ஆயுதப் போராட்டம் இலட்ச்சக் கான்க்கில் உயிரிழப்பு கோடிக்கணக்கில் சொத்திழப்பு அளவிட முடியா சீரழிவு. இதுக்கு இன்றைய எமக்குப் பலவீனமான ஒரு பாராளுமன்ற முதற் கூட்டத்தில் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு வரவில்லைஎன்றால் எல்லாருக்கும் கோபம் வரத்தானே செய்யும்.

Edited by Sooravali

யாழ் கள பேராசிரியர்களே, வைத்திய கலாநிதிகளே, சட்டவல்லுனர்களே, அப்போ சம்பந்தன் ஐயாவை துரோகி பட்டியலில் இட்டு விட்டீர்களா? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களாக "கழுவிய மீனுக்குள் நளுவிய மீனாக" இருந்த சம்பந்தர் தொடர்ந்தும் அதே பணியை தொடர்ந்து அரசியல் வாழ்வை முடிப்பார்.

30 வருடங்களாக "கழுவிய மீனுக்குள் நளுவிய மீனாக" இருந்த சம்பந்தர் தொடர்ந்தும் அதே பணியை தொடர்ந்து அரசியல் வாழ்வை முடிப்பார்.

அய்யா

சம்பந்தரால் தீர்வு வருமென்றால் ஏன் புலிகள் போராடினார்கள்?

இவரால் என்ன செய்ய முடியுமோ அதை அவர் செய்யட்டும்.. செய்ய மாட்டார் என்று தெரிந்து அவரை நீங்கள் திட்டுவதால் அவர் செய்யப் போறாரா? அவர் இல்லை என்று வைத்துக்கொண்டு உங்களால் அல்லது எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதை விட்டுப்போட்டு இன்னும் சம்பந்தரின்ர கோமணத்தை மணந்தால் இப்படித்தான் நாறும்.

இவரை எதிர்த்தவர்கள் சேரவும் மாடார்கலாம்... சேராமல் எதிர்ப்பதே ஒரு கொள்கையா? அது உருப்படுமா? உருப்படுமடியா செய்யக்கூடியதை செய்யுங்கோ.. வியாங்க்காமல் சம்பன்றிண்ட கோமணத்தை மனந்தவங்களும் உங்களுக்குப் பின்னால் வருவார்கள். இப்பிடி தூற்றுவதால் எதுவும் திருந்தப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களாக "கழுவிய மீனுக்குள் நளுவிய மீனாக" இருந்த சம்பந்தர் தொடர்ந்தும் அதே பணியை தொடர்ந்து அரசியல் வாழ்வை முடிப்பார்.

அப்போ இன்னொரு கருணாநிதியின்னு சொல்றீங்க... குழம்பிய குட்டையில் குழப்பினால் கிட்டியவரையில் லாபம்தானே.

ஒருமித்த தலைவன் கிட்டும்வரை செத்த தலைகளை வைத்து காலம் தள்ளுவதைத் தவிர வேறு மாற்று வழியுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா

சம்பந்தரால் தீர்வு வருமென்றால் ஏன் புலிகள் போராடினார்கள்?

இவரால் என்ன செய்ய முடியுமோ அதை அவர் செய்யட்டும்.. செய்ய மாட்டார் என்று தெரிந்து அவரை நீங்கள் திட்டுவதால் அவர் செய்யப் போறாரா? அவர் இல்லை என்று வைத்துக்கொண்டு உங்களால் அல்லது எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதை விட்டுப்போட்டு இன்னும் சம்பந்தரின்ர கோமணத்தை மணந்தால் இப்படித்தான் நாறும்.

இவரை எதிர்த்தவர்கள் சேரவும் மாடார்கலாம்... சேராமல் எதிர்ப்பதே ஒரு கொள்கையா? அது உருப்படுமா? உருப்படுமடியா செய்யக்கூடியதை செய்யுங்கோ.. வியாங்க்காமல் சம்பன்றிண்ட கோமணத்தை மனந்தவங்களும் உங்களுக்குப் பின்னால் வருவார்கள். இப்பிடி தூற்றுவதால் எதுவும் திருந்தப் போவதில்லை.

அவரால் எம்மக்களுக்கு என்ன நடக்கும் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.கடைசி அகதி முகாமில் உள்ள மக்களுக்காவது அவரால் அரசினூடாக செய்ய முடியாவிட்டாலும் தனிப்பட்ட ரீதியில் தன்னும் உதவ முடியுமா?. இல்லை சிரையில் வாழும் போராளிகளின் விடுதலைக்கு ஏதாவது செய்ய்ய வேண்டும்.

முதலில் விழுந்தடித்து இவரை தெரிவு செய்தார்கள் மக்கல் (20 வீதமென்றாலும்).போய் பாரளுமன்றத்தில் பேசும் பேச்சா இது??. ஒன்றும் செய்ய முடியாதவர் அல்ல இவர்.இவர் செய்யாமல் இருப்பதற்கு தான் நொந்து கொள்கிறேன்.

சரி அங்குள்ள மக்கள் உருப்படியாக செய்ய கூடியதை நீங்களே கூறுங்கள் சூறாவளி.

புலிகள் இவர்கள் மூலம் உலகளாவிய ரீதியில் சில ராஜ தந்திர ரீதியிலான பேச்சுக்களை நடாத்த பயன்படுவார்கள் என யோசித்தார்கள். அங்கேயும் சொதப்பல் தான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாராளுமன்றில் அரசியல்வாதி சம்மந்தன் ஐயா உரையாற்றினார் என்று போட்டாலே போதுமே!

இது ஏன் விளாவாரியாக போட்டு அவருக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுக்கிறார்கள்?

அவரு என்ன கெட்டவரா?

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan

சம்பந்தனுக்கு, இருக்கிற வண்டியையும், குண்*யையும் பார்க்க தெரிகிறது, ஆளுக்கு நல்ல இடத்தில் இருந்து சாப்பாடு கிடைக்கிறது என்று...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இன்னொரு கருணாநிதியின்னு சொல்றீங்க... குழம்பிய குட்டையில் குழப்பினால் கிட்டியவரையில் லாபம்தானே.

ஒருமித்த தலைவன் கிட்டும்வரை செத்த தலைகளை வைத்து காலம் தள்ளுவதைத் தவிர வேறு மாற்று வழியுண்டா?

கருணாநிதியளவுக்கு இன்னும் சம்பந்தர் துரோகம் செய்யவில்லை என்பது எனது கருத்து.என்றாலும் பல வேளைகளில் இவரின் மென்மையான போக்கினாலோ என்னவோ பின்வாங்கி கொள்வார் அல்லது நழுவி விடுவார். நிச்சயமாக தலைவர்களுக்கு இத்தகைய குணாம்சம்கள் இருக்கவே கூடாது.

பல சுறு சுறுப்பான, தைரியமானவர்கள் யாழ் பல்கலைகளகத்தில் உள்ளார்கள்.வெளியிலும் உள்ளார்கள். இவர்களிடம் பதவியை பெரிய மனதுடன் விட வேண்டும்.இளைப்பாற வேண்டிய வயதில் பாராளுமன்றத்தில் விவாதிக்கவே திராணியற்று இருக்கிறார். தெரு சண்டியர்களும் ,பாதாள குழுகளில் இருந்து வந்தவர்கள் இருக்கும் பாராளுமன்றத்தில் இவர் போன்றவர்கள் எப்படி சமாளிப்பார்கள்??

சீனாவின் அதீத வளர்ச்சிக்கு இளையோர்கள் மாறி மாறி பதவி வகிப்பது தான் மிக மிக முக்கிய காரணம்.

ஒருமித்த தலைவன் கிட்டும்வரை செத்த தலைகளை வைத்து காலம் தள்ளுவதைத் தவிர வேறு மாற்று வழியுண்டா?

ஈழ தமிழர் வரலாறு "கையில் வெண்ணை இருக்க நெய் தேடி அலைந்தது" தான் வரலாறு , வன்னியன். Late now.Not too late.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லாததை சொல்லவில்லை என்றும் சொன்னதை பிழை என்றும் சொல்வதே பிழைப்பா போச்சு.. இதுவும் வியாதிதான்.

சம்பந்தர் பாராளுமன்றத்டுக்குப் போனது பிச்சை வாங்கத்தான்.. அங்கே போய் நீதி கேட்க அல்ல.

இது ஒன்றும் மனுநீதிச் சோழனின் சபை அல்ல சிங்களப் பாராளுமன்றம்.

நொந்து நூலாப்போன சனந்த்துக்கு ஏதாவது பெற்றுக் கொடுக்கலாமே ஒழிய நீதி நியாமம் கேட்டு மனியடிக்கவல்ல

அந்த நிலையில் சம்பந்தரும் இல்லை கொடுக்கிற நிலையில் மகிந்தவும் இல்லை.

சும்மா எதுக்கெடுத்தாலும் தூற்றி வாராமல் கூடிக் கதைத்துப் பாருங்கோ. நீங்களும் தொடர்பு கொள்ளுங்கோ

உங்களை அவர்களோட செர்க்கத்தேவை இல்லை அவர்களின் நிலைபாட்டையும் அறியுங்கோ.

60 வருசமா போராட்டம் அதில 35 வருடங்களா ஆயுதப் போராட்டம் இலட்ச்சக் கான்க்கில் உயிரிழப்பு கோடிக்கணக்கில் சொத்திழப்பு அளவிட முடியா சீரழிவு. இதுக்கு இன்றைய எமக்குப் பலவீனமான ஒரு பாராளுமன்ற முதற் கூட்டத்தில் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு வரவில்லைஎன்றால் எல்லாருக்கும் கோபம் வரத்தானே செய்யும்.

இங்கே இந்த தலையங்கத்தை எழுதியவரின் நோக்கம் நிறைவேறியிருக்கலாம்....ஆனால் உண்மையை தேடுபவர்களுக்கு இது ஒரு விசமத்தனமான காழ்புணர்வு என்பதை அறிய நேரம் செல்லாது...அங்கே சம்பந்தர் செல்லவில்லை

"யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன்". என...கவனித்து கேட்டால் உண்மை விளங்கும்...இது முதலில் பேசிய ஒருவர் சொன்னதிற்க்கான பதில்...அதில் கூட சொல்லப்படுவது ..யுத்தம் முடிவிற்கு கொண்டுவந்ததை வரவேற்கும், அதேவேளை .........

  • தொடங்கியவர்

அங்கை பிரச்சினையே யுத்தத்தை முன் எடுத்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவுகளை சுட்டிக்காட முயலாத பச்சோந்தி தனமே இல்லாமல் உங்கட யுத்ததம் முடிவுக்கு வந்தது அல்ல....

யுத்தம் முடிவுக்கு வந்ததை வரவேக்கிறார் எண்டு சொன்னாலும் அது உண்மையா....?? அப்ப எதுக்கு அவசரகால நிலை..??? எதுக்கு வடகிழக்கில் இராணுவ மயப்படுத்தல் தொடர்கிறது... போன ஜனாதிபதி தேர்தலில் எதை சொல்லி சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு கேட்டனர்...?? அதை திரும்ப பாராளு மண்றத்தில் ஏன் சொல்ல முடியவில்லை...???

சரி தமிழ் மக்களின் பிரதி நிதிகள் நாட்டில் யுத்தம் முடிந்த இந்த வேளையில் பாதிக்க பட்டது அதிகமான தமிழ் மக்கள் என்பதை சுட்டிக்காட்டி , அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவுகளை அவசர நிலையை பிரகடனப்படுத்தி அவர்களுக்கு கொடுக்க வேண்டும் எண்று சொல்லி இருக்க வேண்டாமா...???

நாட்டின் உள்ள அனைத்து மக்களுக்கும் நீதி வேணும் எண்டு யார் அழுதார் இப்ப...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யுத்தம் முடிவுக்கு வந்ததை வரவேக்கிறார் எண்டு சொன்னாலும் அது உண்மையா....?? அப்ப எதுக்கு அவசரகால நிலை..??? எதுக்கு வடகிழக்கில் இராணுவ மயப்படுத்தல் தொடர்கிறது... போன ஜனாதிபதி தேர்தலில் எதை சொல்லி சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு கேட்டனர்...?? அதை திரும்ப பாராளு மண்றத்தில் ஏன் சொல்ல முடியவில்லை...???"

அவசர நிலை நீடிப்பு பற்றி எனக்கு பெரிதாக தெரியாது ஆனால் அதை தீர்மானிப்பதில் அங்குள்ள படை பெரியளவு பங்கு வகிக்கும் என்கிற அளவிற்கு தெரியும்..ஆனால் நாங்கள் கூட சொல்லவில்லையே இனிமேல் ஆயுத போர் இல்லை என்று. "இனி எங்கள் அகராதியில் ஆயுதமே இருக்காது" என்ற ஜூனியர் விகடன் செய்திக்கு உருத்திரகுமாரன் மறுப்பு"

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71140

அப்படி மறுப்பறிக்கை சொல்லாவிட்டால் உருத்திரகுமாரனுக்கே தலை போகும் என்றால் அங்குள்ள அரசியல்வாதிகளை நினைத்து பாருங்கள்....

"""சரி தமிழ் மக்களின் பிரதி நிதிகள் நாட்டில் யுத்தம் முடிந்த இந்த வேளையில் பாதிக்க பட்டது அதிகமான தமிழ் மக்கள் என்பதை சுட்டிக்காட்டி , அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவுகளை அவசர நிலையை பிரகடனப்படுத்தி அவர்களுக்கு கொடுக்க வேண்டும் எண்று சொல்லி இருக்க வேண்டாமா...??? ""

நீங்கள் பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் நம்பிக்கை/ சம்பந்தனில் வைத்திருக்கும் நம்பிக்கை தவறானது என்று நான் நினைக்கிறேன்.. உப்படிஎல்லாம் செய்யலாம் என்றால் சண்டையே பிடித்திருக்க தேவையில்லை..சனமும் ? 50 %, 70 % ,80 % என்று தேர்தல்களை புறக்கணித்திருக்க தேவையில்லை ...

"நாட்டின் உள்ள அனைத்து மக்களுக்கும் நீதி வேணும் எண்டு யார் அழுதார் இப்ப...?? ....

இது சும்மா நாய் வேஷம் போட்ட குலைக்க வேண்டும் என்றமாதிரியும் எடுக்கலாம், அவர்களுடைய சம்மதத்தையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்காவும் என்றும் எடுக்கலாம்., பொதுவாகவே எல்லோரையும் மதிப்பவர் என்றதாலும் இருக்கலாம்...

என்னைப்பொருத்தவரையில் ...இது ஒரு சுருக்கமான அணித்தரமான பேச்சாக இருக்குகுது,..நல்ல தொடக்கம் போல இருக்கு. .அங்கே இருக்கிற மக்களுக்கு நாங்கள் தான் தீர்வை தீர்மானிப்போம் என்றில்லாமல்...அவர்களை ஒரு நல்ல தீர்வு காண உதவி செய்வோம்...உங்களுக்கு/எங்களுக்கு உள்ள உரிமையினால் அவர்களை கட்டிபோடாமல், அவர்களோடு சேர்ந்து செல்லுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்
:lol:

இது அரசாங்கத்தோடை சேர்ந்து நிண்று தமிழ் மக்கள் தங்கட தலைவிதியை தீர்மானிக்க முடியாது தடுப்பதுக்காகவும் எண்றும் எடுக்கலாம்... நீண்டகால அளவிலை தமிழ் மக்களின் நலனுக்காக எவர்கள் செயற்பட்டார்கள், எவர் அரசாங்க நிழலில் இருந்து கொண்டு தமிழர்களின் தலைவர்களாக நடித்து கொண்டு இருந்தார்கள் என்பதுக்கு எங்களிட்டை நீண்ட வரலாறு இருக்கிறது...

அந்த வரலாறு கூட புதுசா முளைச்ச தமிழர் நலன்களை காப்பவர்களை பற்றி சொல்லவில்லை எண்றால் யாரும் உங்களுக்கு சொல்ல முடியாது...

இண்டைக்கு மகிந்த முன் இருக்கும் முக்கிய பிரச்சினை தமிழகளுக்கு திருப்தியான எதையாவது குடுப்பது போல காட்டி தனக்கு எதிரான தரப்பை தனக்கு பக்கத்தில் வைத்து இருப்பது மட்டுமே.... இன்னும் விரிவாக சொன்னால் தமிழகளுக்கு பிரதிநிதியாக இருப்பவர்களை தன் கைகளுக்கு கொண்டு வந்து நாட்டில் இப்போது இன ஐக்கியம் ஏற்பட்டு விட்டதாக காட்டுவது... இதுக்கு கூட்டமைபும் தயாராக இருக்கிறது., மகிந்தவும் தயார்....

இணக்க அரசியலின் பாதிப்புக்களே பாதிக்கப்பட்டவர்கள் பதிக்க படாதது போல உலகுக்கு காட்டுவதாக இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும்... மிகவும் கஸ்ரப்பட்டு இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை சொல்ல முடிந்த தமிழர்களுக்கு அப்படி ஒண்டும் இங்கை இல்லை எண்டு சொல்வதுக்கு தமிழர்களின் பிரதிநிதிகள்..

Edited by தயா

அருசோடு சேர்ந்து நிற்பதும், சேர்ந்து இயங்குவதும் இரு மாறுபட்ட விடயங்கள். சேர்ந்து நின்றாலே சலுகைகளைக் கூடப் பெறக்கூடியதாகவிருக்கும். சம்பந்தர் என்ற அரசியல்வாதி எந்தளவிற்கு விமர்சனத்திற்குள்ளானாலும். இன்று அவர்தான் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

பாராளுமன்றத்தில் அவர்களது கருத்துக்கள்தான் கேட்கும். தேர்தல் இத்துடன் முடிந்து விட்ட ஒன்றல்ல. கூட்டமைப்பினரால் சலுகைகளைக் கூடப் பெற்றுக் கொடுக்க முடியாதுபோனால் அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் ஒதுக்கலாம். அல்லது இப்போது ஒதுக்கியவர்களை வெற்றிபெற வைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

சிங்களவரை பொறுத்தவரைக்கும் தீர்வுகளும் ஒப்பந்தங்களும் வெறும் காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே... பண்டா செல்வா ஒப்பந்தங்களில் இருந்து கடைசியாக கொள்ளப்பட்ட சுனாமி மீள் கட்டுமானம் வரை எதையும் அவர்கள் மதித்தது கிடையாது... தமிழர் பலமாக இருந்த வேளையிலேயே இப்படி எனும் போது.. வெறும் கைத்தடிகளுக்கு என்ன செய்வார்கள் என்பது பற்றி சொல்லி புரிய வேண்டிய நிலையும் கிடையாது...

அதையும் தாண்டி எங்கட ஐயா எதையோ வாங்கி தருவார் எண்டு காத்திருப்பவர்களுக்கு சொல்லக்கூடியது தமிழனுக்கு தீர்வு எண்ட ஒண்டு ஒண்டு பட்ட இலங்கைக்குள் கிடையாது... அடிமையாக இருப்பதை தவிர... அடிமையாக இருந்தால் ஒருவேளை அடுத்துவரும் தலைமுறையாவது தங்களுக்கு வேண்டியதை பெற்று கொள்வார்கள்...

அடுத்த அடுத்த தலைமுறைகளாவது போராட வேண்டும் எண்றால் இப்போது இருக்கும் மக்கள் ( குறிப்பாக வன்னி திருகோணமலியில் ) முகாம்களில் இருக்கும் மக்களை தங்களின் சொந்த காலில் நிக்கவைக்க உதவ வேண்டும்...

இண்டைக்கு சிங்களவனோடை ஒட்டுவது அண்மையில் கொல்லப்பட்ட மக்களின் மனித உரிமை பிரச்சினையை கூட மூடிமறைக்க சிங்களவனுக்கு உதவியாக மட்டுமே அமையும்...

விடுதலைப் பயணம் தொடரும் ஆனால் திரும்பவும் ஆயுதப் போராட்டம் தற்போது சாத்தியமில்லை.

சிலாக்களுக்கு ஆரும் அடிச்சுக்கொண்டிருந்தால் தான் உருவேறுமாக்கும்.

விடுதலைப் பயணம் முள்ளிவாய்க்காலில் முடியாததா சம்பந்தரோட நிக்கப்போகுது?

சரியான தீர்வு கிடைக்கும் வரை அது ஏதோ ஒரு வகையில் போராட்டம் தொடரும்..

தாயாக மக்களின் தீர்வுப்படி இப்ப சம்பந்தரூடக அவர்கள் தொடர நினைக்கிறார்கள். அதுதான் அவர்களின் இன்றைய யதார்த்தம்.

நிலைமைகள் மாறின் சம்பந்தருக்குப் பதிலாக சரியான ஒருத்தரை மக்கள் நிறுத்துவார்கள்.

சம்பந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டது தாயகச் சூலலுக்குத்தான் புலத்தின் சூழலுக்கு இல்லை.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் எண்ட பேரில காவு குடுத்தது காணும், ஒட்ட நறுக்குமட்டும் நாடு கடந்து போராடுங்கோ. அங்க இருக்கிற சனத்த நின்மதியா இருக்க விடுங்கோ, உங்கட சைக்கில் ஆக்சிடண்டுல மாட்டுப்பட்டு போச்சு, அடுத்த முறை ஓடி முடிச்சு றவுண்டு கட்டி அடிக்கலாம். உங்கட அரசியல் இப்போதைக்கு செல்லாது நீங்கள் இப்பிடியே தொடந்தா சைக்கிலோட ஆக்களே இருக்காது ஏனெண்டா உங்களிட்ட இருந்து படிச்சிருக்கிறாங்கள். :D:wub:

சம்பந்தர் என்ற அரசியல்வாதி எந்தளவிற்கு விமர்சனத்திற்குள்ளானாலும். இன்று அவர்தான் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பாராளுமன்றத்தில் அவர்களது கருத்துக்கள்தான் கேட்கும்.

இதில் டக்ளசையும் புறக்கணிக்க முடியாது தானே? கிழக்கு முதலமைச்சரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.