Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை பேசி நாசமாய்ப்போவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் !

அது உனது முகம் முழுவதும்

வியாபித்திருக்கிறது....

சொல்ல எழுகிற சொற்களைக்

குற்றித் துளைக்கும்

கூர்முனைக் கத்தியிலிருந்து

உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது.

உதிரும் குருதித் துளிகள்

உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும்

உறிஞ்சிக் கொண்டு போகிறது.....

கத்தியின் இடுக்கிலிருந்து

ஒழுகுகிறது உனது

கடைசிக் கனவுகள்.....

ஓர் உயிரின் பெறுமதி பற்றிய

எந்தவித கவலையுமின்றி

உன்னைக் குற்றிக் குருதியில்

குளிப்பாட்டி மகிழ்கிறது

காடேறிகளின் கர்வம்.....

இன்றைய முகப்புச் செய்திகளிலும்

தலைப்புச் செய்திகளிலும்

நீ நிறைந்து வழிகிறாய்.....

வியாபாரிகள் வயிறு முட்ட நீ

வலியில் துளித்துளியாய்

செத்துப் போகிறாய்.

எத்தனையோ கொடுமைகள்

படங்களாய் பதிவுகளாய் வந்து போயிற்று

அதுபோல நீயும்

நாலுநாள் செய்தி - பின்

நாவுகளில் மட்டுமல்ல

நமது வீரங்களின்

நினைவுகளிலிருந்தும்

நிரந்தரமாய்

மறந்து போய்விடுவாய்.....

உன்போல் பல கதைகள்

அவ்வப்போது வந்து

ஆயுளை அழித்துச் செல்லும்

ஆயினும் வீரமாய் விடுதலை பேசி

நாசமாய்ப்போவோம்....

நீங்கள் சாவது

குருதியில் மிதந்து போவது

நமக்கெல்லாம் இது வீரத்தின் குறியீடு

விடுதலையின் அடையாளம்....

`மனிதம் மனிதவுரிமை`

மேற்படி சொற்களின் பெறுமதி

உனக்கானதும் உன்போன்ற

ஆயிரமாயிரம் பேருக்கான முடிவுகள்

இதுதான் என்பதை மீள்பதிவாக்குகிறது.

தோழனே !

தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி

இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா

நீங்கள் சாகத்துணிந்ததும்....?

சயனைட் அணிந்ததும்.....?

22.05.2010 (இன்று வெளியான ஒரு போராளியின் கொலை தந்த துயரிலிருந்து....)

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடி உள்நாட்டில நாசமானதும் நாங்கள் தான் போராட்டத்தால வெளிநாடுகளில சந்தோசமா வாழுறதும் எமது மக்கள்தான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா

நீங்கள் சாகத்துணிந்ததும்....?

சயனைட் அணிந்ததும்.....?

வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம். இனம் என்று வரையறை செய்யமுடியாத கூட்டத்தின் வெற்றி என்பது இனத்தையும் வரையறை செய்து அதை விடுதலை செய்யும். தோல்வி என்பது அனைத்தையும் சிதைத்து சீரளிப்பதோடு எடுத்துக்கொண்ட முயற்சி அனைத்தையும் அவமானப்படுத்தும். நாம் துப்புக்கெட்ட ஒரு மக்கள் கூட்டம் என்பது உண்மையாகினும் தோல்விக்கு முன்னர் அது எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்போது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் உணர்ந்துகொள்கின்றோம். உணர்ந்துகொள்வதால் யாதொரு மாற்றமும் வந்துவிடாது என்பதே இந்த இனத்தின் சூட்சுமம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னைப்புக்கு நன்றி சகோதரி!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைநிலையை ஆராயாமல் விரக்தியில் எழுத்தப்பட்ட கவிதை.இணைப்புக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் துப்புக்கெட்ட ஒரு மக்கள் கூட்டம் என்பது உண்மையாகினும் தோல்விக்கு முன்னர் அது எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்போது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் உணர்ந்துகொள்கின்றோம். உணர்ந்துகொள்வதால் யாதொரு மாற்றமும் வந்துவிடாது என்பதே இந்த இனத்தின் சூட்சுமம்.

உண்மைதான் சுகன். ஆனாலும் தோல்விக்கு முன்னர் இதையெல்லாம் உணரும் நிலையில் எமது மனங்கள் இருக்கவில்லை. அதுவெல்லாம் வெற்றியின் அடையாளம் என்றுதான் நம்பினோம். அப்போதெல்லாம் எங்களைவிட உலகில் சிறந்த இனமில்லையென்ற எண்ணம் எங்களை எதையும் சிந்திக்கவிடாமல் எங்கள் தலைகளில் கனத்தை வைத்திருந்தது. எல்லாம் கவிழ்ந்த பின்னர்தான் ஞானம் பெற்றுள்ளோம். இப்போது உணர்வதால் எதுவும் ஆகாது ஆனாலும் இருப்பவர்களின் ஒரு நேர உணவுக்காவது எதையாவது செய்ய முடியும்.

உண்மைநிலையை ஆராயாமல் விரக்தியில் எழுத்தப்பட்ட கவிதை.இணைப்புக்கு நன்றி.

நுணாவிலான்,

இதில் உண்மை நிலையென்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை.

இத்தகைய நிகழ்வுகள் எத்தனையை பார்த்தாயிற்று உடனடி ஆவேசம் அதைத்தவிர நாங்கள் எதையுமே செய்யவில்லை. இதையெல்லாம் பார்ப்பதில் விரக்தி வராமல் வேறென்ன வரும் ? இந்தப் போராளியின் குடும்பம் நேற்று இவனுக்கு எட்டுச்செலவு செய்துள்ளது. தங்கள் பிள்ளையின் சாவை எங்களைப்போல் இணையத்தில் பார்த்துத்தான் செய்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் உயிரின் பெறுமதி பற்றிய

எந்தவித கவலையுமின்றி

உன்னைக் குற்றிக் குருதியில்

குளிப்பாட்டி மகிழ்கிறது

காடேறிகளின் கர்வம்.....

22.05.2010 (இன்று வெளியான ஒரு போராளியின் கொலை தந்த துயரிலிருந்து....)

எல்லாம் சரிதானக்கா

ஆனால் இதற்கான உலகத்தின் அல்லது எமது பதில் என்ன...?

மௌனமா....?

வஞ்சமா....?

மௌனமென்றால்....

நானும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கின்றேன்

Edited by விசுகு

  • 2 months later...

நீங்கள் சாவது

குருதியில் மிதந்து போவது

நமக்கெல்லாம் இது வீரத்தின் குறியீடு

விடுதலையின் அடையாளம்....

சங்ககாலம் தொட்டே நம்மவர்கள் இப்படி குருதியில் தாண்டவம் ஆடுவது வழமையானது என்று கூறி ஆறுதல் படுகின்றார்கள். :lol:

30 வருடம் நீடித்ததாலேயே எமது போராட்டம் சரிய்ன்று வாதாடுபவகள் பலர்.

சரி பிழை இரண்டில் ஒன்றுதான் முடிவே ஒழிய எவ்வளவு காலம் நீடித்தது என்பதல்ல முக்கியம்.உங்களை நான் பெரிதும் மதிப்பதற்கு ஒரே காரணம் சும்மா இணயத்தில் வந்து அலட்ட்க் கொள்ளாமல் ஏதாவது ஒன்றை நடைமுறையில் செய்கின்றீர்கள் பாருங்கோ அதுவே முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி

இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா

நீங்கள் சாகத்துணிந்ததும்....?

சயனைட் அணிந்ததும்<<<<

"உணர்வுகளின் வெப்பமூச்சு!! இங்கு வெளிப்பட்டிருக்கின்றது. இதில் எங்களது விமர்சனத்துக்கு என்ன இடமிருக்கிறது? அடி பட்டவனுக்கே வலியும், நோவும் தெரியும்.

உசுப்பேற்றி உசுப்பேற்றியே ஒரு தலைமுறையைக் காவுகொடுத்துவிட்டோம்.

விஷக்கிருமிகளும்,கோடாரிக்கூட்டங்களும் எம்மிடமிருந்து களையப்படும் வரை!...

இப்படிப்பல பல சொற்கள் கேட்க நேரிடலாம்!.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,

இதில் உண்மை நிலையென்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை.

இத்தகைய நிகழ்வுகள் எத்தனையை பார்த்தாயிற்று உடனடி ஆவேசம் அதைத்தவிர நாங்கள் எதையுமே செய்யவில்லை. இதையெல்லாம் பார்ப்பதில் விரக்தி வராமல் வேறென்ன வரும் ? இந்தப் போராளியின் குடும்பம் நேற்று இவனுக்கு எட்டுச்செலவு செய்துள்ளது. தங்கள் பிள்ளையின் சாவை எங்களைப்போல் இணையத்தில் பார்த்துத்தான் செய்துள்ளார்கள்.

எந்த இனப்போராட்டத்தில் காட்டி கொடுக்கவில்லை, துரோகிகள் இல்லை.மக்கள் போராடாமல் அகதிகளாக தப்பி ஓடியும் பல நாடுகள் இருந்தன.ஆனால் உலகம் முழுக்க சேர்ந்து போட்டு தாக்கிய சிறிய இன குழுமம் நாங்கள் தான்.ஐ.நா கூட போர்க்குற்ற ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஏனோ தானோ என இருக்கிறார்கள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி

இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா

நீங்கள் சாகத்துணிந்ததும்....?

சயனைட் அணிந்ததும்<<<<

"உணர்வுகளின் வெப்பமூச்சு!! இங்கு வெளிப்பட்டிருக்கின்றது. இதில் எங்களது விமர்சனத்துக்கு என்ன இடமிருக்கிறது? அடி பட்டவனுக்கே வலியும், நோவும் தெரியும்.

உசுப்பேற்றி உசுப்பேற்றியே ஒரு தலைமுறையைக் காவுகொடுத்துவிட்டோம்.

விஷக்கிருமிகளும்,கோடாரிக்கூட்டங்களும் எம்மிடமிருந்து களையப்படும் வரை!...

இப்படிப்பல பல சொற்கள் கேட்க நேரிடலாம்!.

எல்லாச் சொற்களும் கேட்டாயிற்று தமிழ்த்தங்கை. :lol:

எந்த இனப்போராட்டத்தில் காட்டி கொடுக்கவில்லை, துரோகிகள் இல்லை.மக்கள் போராடாமல் அகதிகளாக தப்பி ஓடியும் பல நாடுகள் இருந்தன.ஆனால் உலகம் முழுக்க சேர்ந்து போட்டு தாக்கிய சிறிய இன குழுமம் நாங்கள் தான்.ஐ.நா கூட போர்க்குற்ற ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஏனோ தானோ என இருக்கிறார்கள்.

எல்லாப்போராட்டங்களிலும் எல்லாத் துரோகங்களும் இருந்தன இருந்தது. இல்லையென்று மறுக்கவில்லை நுணாவில். உலகமே சேர்ந்து அழித்த சிறிய இனம் நாங்கள் அதையும் மறுப்பதற்கில்லை. போர்க்குற்ற ஆதாரங்களை வைத்து ஐ.நாவும் எங்கள் மீது அரசியல் சாவரிதான் செய்கிறது.

எங்கள் எல்லாளன் இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளான். எல்லாளனின் பிள்ளைகள் பல்லாயிரக்கணக்காக சிறைகளிலும் சித்திரவதை கூடங்களிலும் வதைக்கப்படும்அவலங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எதையுமே செய்ய முடியாக் கையறு நிலையில் நாமும் நமது இனமும் இருக்கிறது. சொல்ல எதுவுமே இனியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

........ எதுவுமே இனியில்லை .

இந்த வார்த்தைகளுக்குள் எம்மினத்தை அடக்குவது இன்று நடைமுறையாகிவிட்டது

எதற்கெடுத்தாலும் இதே சொல்தான்

இந்த சொல்லுக்காகவா போராட்டம்

இந்த இல்லை என்பதால் எல்லாம் கிடைத்துவிட்டதா தமிழருக்கு..

போராட்டத்தின் நோக்கம் தீர்க்கப்படாதவiரை...

எவரிருந்தாலென்ன ...???

எவர்ஓடினால் என்ன...???

இத்துடன்

இவருடன்

இதனுடன்

இத்தனை ஆண்டுடன்...

என்று கணக்கு போட மனிதவாழ்க்கையா போராட்டம்...?

ஒன்றும் புரியவில்லை

எதை நம்பி ஆரம்பித்தோம் எதற்காக அழுகின்றோம்

என்னத்தை அடைந்துவிட்டோம்

ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறுத்தலாம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது இந்தக் கவிதை எழுப்பட்டது?? 80களிலா?? அல்லது 2007 களிலா? ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் மக்கள் அழிவுகள் நடந்தபோது விடுதலை பேசி நாசாகப் போகவில்லையா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்போது இந்தக் கவிதை எழுப்பட்டது?? 80களிலா?? அல்லது 2007 களிலா? ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் மக்கள் அழிவுகள் நடந்தபோது விடுதலை பேசி நாசாகப் போகவில்லையா??

காலம் 2010 :lol: .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படமாக வந்த செய்தியின் உண்மைநிலமை ஒளிப்பதிவாக வந்திருக்கிறது.

http://www.youtube.com/watch?v=XS_sEbZnV6s&feature=player_embedded

:D:)

சாந்தி, உங்களின் இக்கவிதை பலமுறை வாசித்து விட்டேன், புரியவில்லை???? என்னத்தை சொல்ல முனைகிறீர்கள்???? ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோற்றுவிட்டோம், தோற்றுவிட்டோம் என்று விடயம் தெரியாமல் புலம்புவோருக்கு: நான்கு வருட போரில் சிங்கள காடையர்களில் அறுபத்து ஐந்தாயிரம் பேர் மண்டைய போட்டார்கள், ஐம்பதாயிரம் பேர் கை கால் இழந்தார்கள், இன்னொரு ஐம்பதாயிரம் பெயர் தலை தெறிக்க களம் விட்டு ஓடினார்கள். இவ்வளவும் ஒரு உலக பின்புலம் இல்லாத இருபதாயிரம் தமிழ் படையை நசுக்க கொடுக்க பட்ட விலை.

அமெரிக்கர்கள் எட்டு வருட இராக் போரில் இழந்தது வெறும் ஏழாயிரம் பேர் தான். அதுவும் மூன்று இலட்ச்சத்திட்கு மேற்பட்ட இசுலாமிய ஆயுததாரிகளை எதிர்த்து இழந்த எண்ணிக்கை. அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் பரல் எண்ணெய் எடுப்பதால் காசு செலவை சமாளிக்கலாம்.

ஸ்ரீல ஸ்ரீ லண்காவோ சீனாவிடம் ஐந்து பில்லியன் கடன், இந்தியாவிடம் மூன்று பில்லியன் கடன், பாகியிடம் இரண்டு பில்லியன் கடன், ஈரானிடம் இரண்டு பில்லியன் கடன், ஐ. எம். எப் இடம் மூன்று பில்லியன் கடன் மற்றும் வாறவன் போறவன் காலில் வீழ்ந்து கடன் வாங்கி சண்டை பிடித்து சவுண்டு விடுகிறார்கள். எல்லாம் உடை விற்று, தேயிலை விற்று, சுற்றுலா காட்டி பணத்தை திருப்பி கொடுக்கலாம் என்ற வீண் கனவில் தான்.

இப்போது அவர்கள் பலர் தயவில் நொந்து போய் இருக்கிறார்கள். இன்னும் சில வருடங்களுக்குள் உலக வணிகம் விழும் போது அவர்கள் நொந்து நூடுல்ஸாக போகிறார்கள்.

இன்டர்வலில் எழுந்து படம் முடிந்துவிட்டது கூவுவது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியின் மன நிலையைப் புரிந்து கொண்டாலும் அவரது கருத்தில் எனக்கு உடன் பாடில்லை. எல்லாரும் ஒரே வேலையைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிழையானது. மீட்புப் பணியில் இருப்பவர்கள் அதைச் செய்யட்டும், மகிந்தவுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க போராடுகிறவர்கள் அதைச் செய்யட்டும். நாடு கடந்த அரசு மூலம் வெளிநாடுகளைக் கவர வேலை செய்கிறவர்கள் அவர்கள் வழியில் வேலை செய்யட்டும். எல்லாத்தையும் விட்டுப் போட்டு சாந்தி சொல்கிறதை மட்டும் செய்ய வேணுமெண்ட எதிர்பார்ப்பு எங்களுக்கு நன்மை தராது. படிப்பு முடிய முதலே காதலிக்கிறம், வேலை கிடைக்க முதலே கல்யாணம் கட்டுறம், சொந்த வீடு வாங்கிற வரைக்கும் பிள்ளையே வேணாமெண்டு எத்தினை பேர் காத்திருக்கிறம்? சொந்த வாழ்க்கையில எல்லாமே சமாந்திரமாகச் செய்து முன்னேறுற நாங்கள், தமிழின விடுதலைக்கும் சமாந்தரமாக வேலை செய்ய ஏன் உடன் படுறமில்லை?

எனது கருத்தும் இதுவே.

குழந்தை பிறக்கும் போது வலி இருக்கும்.. ஏன் மரணம் கூட சம்பவிக்கலாம்.. அதற்காக பெண்கள் குழந்தை பெறாமலா இருக்கினம்.. இல்லையே..??!

விடுதலை என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் எழும் தேவை. அதை இன்னொரு மனிதன் மறுதலிக்கும் போது.. அங்கு போராட்டம் வெடிக்கிறது. இந்தச் சாதாரண நிலையை ஆயுதங்கள் கொண்டு அடக்கும் கொடிய மனிதர்களும் மனிதர்களுக்குள்ளே தான்.. இருக்கின்றனர். அதுவும்.. அதிகாரம்.. ஆயுத பலம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளனர். அதற்கு அரசுகள் என்று பெயரிட்டுள்ளனர். அப்பாவிகளை ஏமாற்றி அவர்களின் கைகளாலேயே வாக்கும் போட வைத்து அவர்களையே வரியும் கட்ட வைத்து அவர்களையே ஆளவும் அவர்கள் மீதே ஆதிக்கம் செய்யவும் உச்சரிப்பது ஜனநாயகம். அதை மெச்சும் இந்த உலகம்.. ஒரு மனிதனின் சுதந்திர வேட்கையை அனுமதிப்பதில் தயங்குவது ஒன்றும் புதிதல்ல.

இதற்காக.. இழப்புகளுக்காக.. விடுதலை என்ற அந்தச் சுதந்திர உணர்வை தாரைவார்க்க சொல்வது.. ஆளும் பலமுள்ள அதிகார வர்க்கத்திடம் சாமானியனை அடிமையாக வாழச் சொல்வதற்குச் சமன். :blink:

அடுப்படியில் கிடந்தாலும் 3 வேளை சாப்பாடு விழுகுதே என்று பெண்களை அடங்கிக் கிடக்கச் சொல்ல முடியுமா.. அங்கு பெண்ணே விழி.. புறப்படு.. புயலாகு என்று எழுதும் பெண்களே.. இன்னொரு பக்கம் அழிவுகளை ஏற்படுத்தி மக்களை அடக்க நினைக்கும் எதிரியின் செயலுக்கு பயந்து.. விடுதலை உணர்வை ஒடித்துவிட நினைப்பது சரியானதா..???!

இந்த இயற்கையில்.. மனிதனைத் தவிர வேறெந்த உயிரினமும்.. ஒன்று இன்னொன்றின் சுதந்திர வாழ்வை தடை செய்ய முடியாது. மனிதன் தன்னை மட்டுமல்ல.. இந்த இயற்கையையும் அடிமைப்படுத்த முனைகிறான். அதுவே இன்றைய இயற்கையின் அழிவிற்கும்.. பூமிப் பந்து ஆபத்துக்கள் நிறைந்ததாக மாறி இருக்கவும் காரணம்.

ஹிட்டலர்.. இரண்டு வகைப் போர் செய்தார்.

ஒன்று சர்வாதிகாரியாகி.. ஆயுத முனையில் மக்களை அடக்கின்னார்.

இன்னொன்று தலைவராகி பேச்சால் மக்களை கவர்ந்து நாசம் பண்ணினார்..!

இன்றைய மகிந்த அரசும் இதையே தான் செய்கிறது.. தமிழர்களை ஆயுத முனையிலும் சிங்களவர்களையும் பேச்சாலும் அழிக்கிறது அது. :wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல முனைகிறீர்கள்???? ...

எதையுமே சொல்லவரவில்லை. ஒரு உயிரினை வதைத்தோரது வஞ்சமே கவிதை.

இன்டர்வலில் எழுந்து படம் முடிந்துவிட்டது கூவுவது சரியா?

அப்ப 30வருசம் படமோ ஓடினது ? தெரியாமல் போச்சு குழவி.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியின் மன நிலையைப் புரிந்து கொண்டாலும் அவரது கருத்தில் எனக்கு உடன் பாடில்லை. எல்லாரும் ஒரே வேலையைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிழையானது. மீட்புப் பணியில் இருப்பவர்கள் அதைச் செய்யட்டும், மகிந்தவுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க போராடுகிறவர்கள் அதைச் செய்யட்டும். நாடு கடந்த அரசு மூலம் வெளிநாடுகளைக் கவர வேலை செய்கிறவர்கள் அவர்கள் வழியில் வேலை செய்யட்டும். எல்லாத்தையும் விட்டுப் போட்டு சாந்தி சொல்கிறதை மட்டும் செய்ய வேணுமெண்ட எதிர்பார்ப்பு எங்களுக்கு நன்மை தராது. படிப்பு முடிய முதலே காதலிக்கிறம், வேலை கிடைக்க முதலே கல்யாணம் கட்டுறம், சொந்த வீடு வாங்கிற வரைக்கும் பிள்ளையே வேணாமெண்டு எத்தினை பேர் காத்திருக்கிறம்? சொந்த வாழ்க்கையில எல்லாமே சமாந்திரமாகச் செய்து முன்னேறுற நாங்கள், தமிழின விடுதலைக்கும் சமாந்தரமாக வேலை செய்ய ஏன் உடன் படுறமில்லை?

இது கருத்துக்களம்தானே Justin இதில் முரண்பாடுகள் பேசப்படத்தானே கருத்துக்கள் எழுதுகிறோம். எல்லோரும் ஒரே பணியைச் செய்ய வேண்டுமென்றது எனது வாதமல்ல. இன்று எம்முன் உள்ள உடனடிப் பணிகள் பற்றிய கரிசனை எந்தளவில் இருக்கிறது ? பசியில் உள்ளவனுக்கு பழங்கஞ்சியானாலும் முதலில் ஊற்றிவிட்டு புரியாணி சோற்றை யோசிக்காலம் என்பது எனது கருத்து. (இது எனது கருத்து மட்டுமே)

ஒவ்வொரு பக்கங்களாலும் அவரவர் தம்மால் செய்யக்கூடியவற்றை விரைவாக்க வேணும். ஒவ்வொருவரும் தம்மால் எதைச் செய்ய முடியுமோ அதனைச் செய்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபமுமில்லை. யாரையும் இதைத்தான் செய்யெனக் கட்டளையிடவுமில்லை. இக்கவிதையில் ஒருவன் எங்களுக்காக போராளியானவனைக் கொல்லும்வரையும் காத்திருந்து அவனைப்படம் பிடித்துக் காட்டுவதோடு கடமை முடிந்துவிடுகின்ற சமகாலத்தைத்தான் நொந்து எழுதினேன். மற்றும்படி இதைத்தான் செய்ய வேண்டுமென்றோ அதுதான் சரியென்றும் வாதிடவில்லை.

தமிழின விடுதலையை வென்றெடுப்பதில் சமாந்தரமாக வேலை செய்ய நான் எப்போதும் உடன்பாடே. அது யாராகவிருந்தாலும் அவர்களுடன் இணைந்து எனது பங்களிப்பை வழங்குவதில் பின்னால் நிற்கமாட்டேன். அது நீங்களாக இருந்தாலும் உங்கள் பணியில் என்னால் செய்யக்கூடிய பங்களிப்பு இருப்பின் தெரிவியுங்கள் தாராளமாக செய்யத்தயார்.

தண்டனை வாங்கிக்கொடுத்த பின்தான் உங்களுக்குச் சோறுபோடுவோம் என்பது வெறும் பேச்சுக்குத்தானே சரியானது. உலகமே சேர்ந்து நின்று எங்களைத் தெருவுக்குக் கொண்டு வந்தது. இது எல்லாரும் அறிந்ததே. காலம் இந்தக்கயமைகளை நிச்சயம் சொல்லும். அதுவரை அவசிய தேவைகளை நாம் செய்வதே சிறந்தது. அதிலிருந்து விடுபட்டு உதாரணங்களைச் சொல்லி நடந்து முடிந்த யாவற்றையும் நியாயப்படுத்துவது சரியானதா ? இதில்தான் முரண்பாடு.

நாங்கள் எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்கிறோமோ அந்த மக்கள் எங்கள் சிந்தனைகளிலிருந்து மாறுபட்டு தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற விரும்புகிறார்கள். அவர்களை எங்களது சமாந்தரப் பாதையிலும் நிறுத்தினால்தான் நமது முயற்சிகள் வெற்றிபெறும். இந்த விடயத்தில் கூட அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.

Justin உங்கள் கருத்துக்கு நன்றிகள். கருத்தாடுவோம் தெளிவோம். இதில் முரண்பாடில்லை.

நன்றி.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுப்படியில் கிடந்தாலும் 3 வேளை சாப்பாடு விழுகுதே என்று பெண்களை அடங்கிக் கிடக்கச் சொல்ல முடியுமா.. அங்கு பெண்ணே விழி.. புறப்படு.. புயலாகு என்று எழுதும் பெண்களே.. இன்னொரு பக்கம் அழிவுகளை ஏற்படுத்தி மக்களை அடக்க நினைக்கும் எதிரியின் செயலுக்கு பயந்து.. விடுதலை உணர்வை ஒடித்துவிட நினைப்பது சரியானதா..???!

அடக்க நினைப்போரை அவன் வழியில் வெல்வோம் என்று சொல்லி நெஞ்சில் குற்றென்று வீரமாக எழுந்தால் விடுதலை கிடைத்திடுமா நெடுக்ஸ் ? 890000விதவைகள் போரால் பாதிப்பு என்ற கணக்குகளை எண்ணுவதில் மட்டும்தான் கவனம் நிற்கிறது எம்மிடம். ஆனால் அவர்களுக்கான வாழ்வை எங்களால் ஏன் புதுப்பிக்க முடியவில்லை ?

விடுதலையுணர்வு என்பதை நாங்கள் உணர்ச்சிவசப்படுதல் என்ற அர்த்தத்தில் புரிந்து வைத்துள்ளது போல செயல்கள் இருக்கிறதே ? எத்தனைபேர் மே2009 பின்னால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அவசியங்களை அல்லது அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பற்றிக் கரிசனை கொண்டுள்ளோம் ?

எல்லாம் பேச்சளவில் இருக்கிறது. தினம் தினம் சாவுகள் சத்தமில்லாமல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது அங்கு. காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கிறது, 12 வயது முதல் புலனாய்வாளரை இராணுவத்தை காதலிக்கும் சிறுமிகள் கற்பிணியாகும் சிறுமிகள் என நிலமைகள் மாறிக் கொண்டு போகிறது.

நாங்கள் பெருமையாகச் சொல்லும் நமது பண்பாடு கலாசாரம் யாவும் அன்னியமயமாகிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கான தீர்வை எப்போது காணப்போகிறீர்கள் ? இவர்கள் யாவரும் அன்னியமயமாகிய பின்னர் யாருக்காக நாங்கள் ?

விட்டுக்கொடுப்புகளும் அமைதியான செயற்பாடுகளாலும் முதலில் எங்களை எங்கள் இனத்தை பாதுகாப்போம். அதுவே இன்றைய அவசியம். விழுந்து கிடக்கின்றவர்களைக் கைகொடுத்துத் தூக்கிவிட்டால் அவர்கள் எங்கள் சிந்தனைகளை உள்வாங்குவார்கள்.

நிறைய எழுத வேணும் நேரமாகிறது வேலைக்கு பின்னர் எழுதுகிறேன் நெடுக்ஸ்.

அக்கா விடுதலை என்ற உணர்வை தேவைகளை பூர்த்தி செய்ய எதிரி நடக்கமாட்டான்.

எதிரியின் இன்றைய நிலை என்பது மக்களின் வாழ்வை வாழ்விடத்தை சிதைத்து வதைத்து அவர்களுக்குள் இருக்கும் விடுதலை உணர்வின் தேவையை சிதைத்து அவர்களை வாழ்வதற்குப் போராடச் செய்யும் நிலையில் வைத்திருப்பதுதான்.

அந்த வகையில் உருவானதே.. எமது விடுதலைப் போராட்டம் மீதான இராணுவ தீர்வும்.. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும்.. அதன் பின்னான இன்றைய நிகழ்வுகளும்.

நல்ல கேள்வி.. நாம் எப்படி இதில் இருந்து மீளப் போகிறோம்..

எம்மால் முடியும்...

முதலில் இப்போ செய்து கொண்டிருக்கும் மனிதாபிமானப் பணிகளை அப்படியே தொடர்ந்து கொண்டு.. இன்னும் இன்னும் அவற்றை மேன்மைப்படுத்திக் கொண்டு..

அதற்கு சமாந்திரமாக..

எமது பலத்தை ஒருங்கிணைக்கும் ஒரு மனிதாபிமான பொது கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

அதில் நல்ல தலைமையுடன் கூடிய சேவை நோக்குடைய முகாமைத்துவம் அவசியம்.

அதற்கு மக்களின் உலகின் ஆதரவு அவசியம்.

குறுகிய கால நீண்ட கால வேலைத்திட்டங்கள் செயற்படுத்தல்கள் கட்டுப்படுத்தல்கள் அவசியம்.

80000 விதவைகளுக்கு மறுவாழ்வு.. ஊனமடைந்த மக்களுக்கு மறுவாழ்வு.. வாழ்வாதாரங்களை இழந்து எதிரியால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உதவி.. எதிரியால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகளுக்கு உதவி.. கல்வி வசதிகள்.. உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல்.. தொழில்முதலீடுகள்.. தொழில்சாலைகள் அமைத்தல்.. இப்படி திட்டங்களை செயற்படுத்தலாம்.

இப்போது இவ்வாறான திட்டங்கள் இல்லையா என்றால்.. பதில் இருக்கு.. ஆனால் போதாது என்பதே ஆகும். காரணம்.. பல நிறுவனங்கள்.. தனியாட்கள்.. தங்கள் குடும்பங்களை உறவுகளை இந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க உதவிக் கொண்டுதான் இருக்கின்றனர். அது சரியாக போய் சேரவில்லை. அல்லது உதவ முடியாத நிலையில் இருக்கும் அல்லது உதவி இன்றி இருக்கும் மக்களின் நிலை பற்றியும் பேச வேண்டும்.. கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள் நிச்சயம் அவை கவனத்தில் எடுக்கப்பட்டு துரித நடவடிக்கைகள் செய்யப்பட்டாக வேண்டும்.

இதில் சிங்கள அரசோடு இருப்பவர்கள்.. அரசுக்கு வெளியில் இருப்பவர்கள்.. நாடு கடந்தவர்கள்.. புலம்பெயர்ந்தவர்கள் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் துரித மனிதாபிமான நடவடிக்கையே முக்கியம்.

அதேவேளை எம்மீது போரைத் திணித்த எதிரிகளுக்கும் அவர்களுக்கு துணை நின்ற சர்வதேசத்திற்கும் எமது நிலை குலைந்த வாழ்க்கையை கட்டி எழுப்பும் பொறுப்பு இருக்கிறது. அதற்கான அழுத்தங்களை அவர்கள் மீதும் நாம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஏற்படுத்திய அழிவுகளுக்கு அவர்களை இவ்வாறுதான் தண்டிக்க முடியும். அப்போதுதான் இன்னொரு அழிவோடு யுத்தம் ஒன்றை இலகுவாக திணித்து மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க நினைப்பதில் இருந்து பிந்தங்கி நிற்க முனைவார்கள். எதிரியும் சர்வதேசமும் இந்த அழிவுகளில் இருந்து எம்மை மீட்க வேண்டிய முழுக் கடமைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் அவர்களுக்கு அதற்கான எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்தை தானும் போரின் பின்னான எமது மக்களின் நிலையைச் சொல்லி சர்வதேச உதவி வேண்டி செய்திருக்கிறோமா என்றால்.. இல்லை.

ஆனால் இவற்றைக் காரணம் காட்டி.. எதிரியின் செயற்பாடுகளை நியாயப்படுத்தவோ.. அதனால் போராட்டம் பற்றிய மலினத்தனமான செய்திகளை பரப்புவதோ.. அது இந்த மக்கள் எந்த நோக்கத்திற்காக இவ்வளவு துன்பங்களையும் சந்தித்தித்தனரோ அதை கேவலப்படுத்துவதற்கு சமன்..! :blink:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியின் மன நிலையைப் புரிந்து கொண்டாலும் அவரது கருத்தில் எனக்கு உடன் பாடில்லை. எல்லாரும் ஒரே வேலையைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிழையானது. மீட்புப் பணியில் இருப்பவர்கள் அதைச் செய்யட்டும், மகிந்தவுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க போராடுகிறவர்கள் அதைச் செய்யட்டும். நாடு கடந்த அரசு மூலம் வெளிநாடுகளைக் கவர வேலை செய்கிறவர்கள் அவர்கள் வழியில் வேலை செய்யட்டும். எல்லாத்தையும் விட்டுப் போட்டு சாந்தி சொல்கிறதை மட்டும் செய்ய வேணுமெண்ட எதிர்பார்ப்பு எங்களுக்கு நன்மை தராது. படிப்பு முடிய முதலே காதலிக்கிறம், வேலை கிடைக்க முதலே கல்யாணம் கட்டுறம், சொந்த வீடு வாங்கிற வரைக்கும் பிள்ளையே வேணாமெண்டு எத்தினை பேர் காத்திருக்கிறம்? சொந்த வாழ்க்கையில எல்லாமே சமாந்திரமாகச் செய்து முன்னேறுற நாங்கள், தமிழின விடுதலைக்கும் சமாந்தரமாக வேலை செய்ய ஏன் உடன் படுறமில்லை?

இந்தக்கருத்தை ஆதரிக்கின்றேன்

அதேநேரம் சாந்தியக்கா சொல்லில் அல்லாமல் செயலில் காட்டுவதை பாராட்டாமல் இருக்கமுடியாது

தன்னால் முடிந்ததற்கும் மேலாக தமிழரின் இன்றைய நிலையிலிருந்து மீள உழைக்கும் ஒருவராக சாந்தியக்காவை நான் பார்க்கின்றேன்.

சில விடயங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்

உதாரணமாக ஒரு சாவீட்டுக்கு சென்றாலோ அல்லது பெரும்விபத்தால் பாதிக்கப்பட்டவரை அல்லது தீர்க்கமுடியாத நோயினால் திடீரென பாதிக்கப்பட்ட ஒருவரை நாம் சந்தித்தால் சில நாட்களுக்கு அந்த நினைவே எம்மை சூழ்ந்து கொல்லும்

அதைப்போல்தான் அழிவின் விழிம்பில் நின்ற மக்களை ஒவ்வொரு நாளும் சந்திப்பதால்

அந்த மனநிலையில் அவர் தொடர்ந்து இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.