Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரமேஷ் சிவரூபனின் கொலைக்கு யாழ் இணையத்தை குற்றம் சாட்டும் ஈழம் ஈ நியூஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகலிட படைப்பாளி ரமேஸ் சிவருபன் பிரான்சில் தாக்கப்பட்டு மரணம் அதிர்ச்சியில் தமிழச்சமூகம். பின்னணி என்ன?

பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் ரமேஸ் சிவருபன் அவர்கள் கடந்த 02.06.2010 அன்று பாரிஸ் நகரில் சக தமிழர்கள் சிலரினால் தாக்கப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரமேஸ் சிவருபன் மேற்படி சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் வாய்த்தர்க்கம் முற்றி வன்முறையாகி ரமேஸ் சிவருபன் இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் தெரியவருகிறது.

திட்டமிட்டே கூட்டிச்சென்று தாக்கினார்களா அல்லது தற்செயலான தாக்குதலில் மரணமடைந்தாரா என்பது குறித்தும் மற்றும் இக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கின்றதா என்பது குறித்தும் பிரெஞ்சு காவல்துறையினர் புலன் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இக் கொலையை அடுத்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு இணையத்தளம் தனது கவலையை பின்வருமாறு பதிவு செய்துள்ளது:

“புகலிட சூழலில் வன்முறைக் கலாச்சாரம் என்பது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் வெகு ஆழமாக புரையோடிப்போய் உள்ளமைக்கு இம்; மரணம் சாட்சி பகர்கின்றது.

சாதாரண உரையாடல்களைக்கூட சகித்துக்கொள்ளமுடியாத வன்முறைச் சமூகமாக ஈழத்த தமிழர்கள் உருமாற்றம் அடைந்துவருகின்றனர் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய வேதனையான விடயமாகும். இது தொடர்பாக சமூக அக்கறையாளர்கள் கவனம் கொள்ளவேண்டியது அவசிய கடமையாகும்.” அர்த்தம் பொதிந்த வாசகங்கள் அவை.

ரமேஸ் சிவருபன் ஒரு படைப்பாளியாக இருந்தபோதும் அரசியல்தஞ்ச கோரிக்கை ஆவணங்களை தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுவந்தவர் ஆவார். மேற்படி அவரது மரணத்தை சிறீலங்கா ஆதரவு ஊடகங்கள் சில திரித்து வெளியிட்டுள்ளன. அதாவது புலத்தில் விடுதலைப்புலிகளின் உட்பூசல் காரணமாக இவர் ஒரு தரப்பினால் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை வெளியிட்டுள்ளன. இதற்கு நம்மவர்களின் பொறுப்பற்ற போக்குகளும் ஒரு காரணம் ஆகும். ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது. ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி போலி அறிக்கைகளை வெளியிடுவது போன்ற ஆரோக்கியமற்ற ஊடகச் செயற்பாடுகளின் பின்விiளைவே இந்த கொலையின் பின்னணியும் புலிகள் மீது குற்றம் சுமத்தும் பொய் செய்தியும் ஆகும்.

ரமேஸ் சிவருபன் ஒரு சிலரின் சில பொய்யான தகவல்களின் அடிப்படையில் அவதூறுக்குள்ளாகியதாகவும் அதன் நிமித்தம் வேறு சிலரால் வெருட்டப்பட்டதாகவும் தற்போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆதாரமற்ற பொய்யான தகவல்களும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனமும் ஒரு எழுத்தாளனின் பேனாவை நிரந்தரமாக முடக்கியிருப்பது வேதனைக்குரியது.

கடந்த வாரம் “யாழ்” இணையத்தளம் பல தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மீது பொய் குற்றம் சுமத்தி சம்மந்தபட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை தோற்றுவித்தமை தெரிந்ததே. இந்த நேரத்தில் இப்படியொரு படுகொலை நிகழ்ந்திருப்பது சம்பந்தபட்ட ஊடகவியலாளர்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

“யாழ” இணையத்தினால் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சம்பந்தபட்ட உடகவியலாளர்கள் குறிப்பாக பிரான்சில் வாழும் ஊடகவியலாளர்கள் உடனடியாக காவல்துறையில் ஒரு முறைப்பாட்டை மீண்டும் பதிவு செய்வது நல்லது என்றே தோன்றுகிறது. மேற்படி கொலை எமக்கு தரும் முன் எச்சரிக்கை இது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பக்குவமின்மையும் சகிப்புதன்மையின்மையும் ஒரு வகை வன்முறை வெறியாட்ட தன்மையுமே “யாழ்” இன் அச்சுறுத்தலில் புதைந்திருந்ததை பல மனிதஉரிமையாளர்களும் உளவியலாளர்களும் எமக்கு சுட்டியிருந்தனர். நிலமையின் விபரீதத்தை உணர்ந்தே நாம் சட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம்.

பிரெஞ்சு பலனாய்வுத்துறை அதிகாரி திரு பஸ்கால் அவர்கள் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு விலைபோய் தமிழ் ஊடகவியலாளர்களை குறிவைத்திருப்பதாகவும் விலைக்கு வாங்க முற்படுவதாகவும் தன்னிடம் போதிய ஆதாரமிருப்பதாகவும் வெளிப்படையாக “னயஅ” என்ற மர்ப நபர் “யாழ” இல் முன்வைத்திருக்கும் கருத்து மிகவும் பயங்கரம் நிறைந்ததும் நிகழப் போகும் படுகொலைகளுக்கு பிரெஞ்சு காவல்துறையையும் சமம்பந்தபட்ட ஊடகவியலாளர்களையும் பழிகாரர்களாக்கும் முயற்சியும ஆகும்.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை நீதிக்கு முன் நிறுத்துவதனூடாகவே நிகழப்போகும் பயங்கரங்களை தடுக்க முடியும். தமிழ்ச்சமூகம் வன்முறைச் சமூகம் என்ற பழிச்சொல்லிலிருந்து தப்புவது மட்டுமல்ல ஜனநாக முறையில் நாம் விடுதலையை புலத்திலிருந்து முன்னெடுப்பதற்கும் இந்தகைய தீய சக்திகள் அடையாளங் கண்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.

எமது சட்ட நடவடிக்கைகளுக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டாலோ தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டாலோ “யாழ்” இணையமே பொறுப்பேற்க வேண்டும் என்பதை நாம் இந்த இடத்தில் நினைவுறுத்த விரும்புகிறோம்.

நாடுகடந்த அரசின் இடைக்கால பொறுப்பாளர் திரு உருத்திரகுமாரனின் கவனத்திற்கு மேற்படி “யாழ்” இணையத்தின் கொலை அச்சுறுத்தலை கொண்டு சேர்த்திருக்கிறோம். அவரிடம் சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கும் காத்திரமான பங்களிப்புக்களை நல்குவதற்கும் ஈழம்ஈநியூஸ் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டுள்ளதை பாதிக்கபட்ட உடகவியலானர்களுக்கு கூறவிரும்புகிறோம்.

மற்றும் தமிழர் மனித உரிமைகள் மையம், உலகத் தமிழர் பேரவை , புலம்பெயர் ஊடக அமைப்புக்கள் என்பற்றுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டறிக்கையை கொண்டு வருவதற்கு ஈழம்ஈநியூஸ் களத்தில் இறங்கியுள்ளது. புலத்தில் எந்த வடிவத்திலும் எதேச்சதிகார போக்கை வன்முறையை ஈழம்ஈநியூஸ் ஆதரிக்காது. எமது உயிரைக்கொடுத்தாவது ஈழம்ஈநியூஸ் தனது கடமையைச் செய்யும். இந்த இடத்தில் மரணமடைந்த படைப்பாளி ரமேஸ் சிவருபனுக்கு ஈழம்ஈநியூஸ்” தனது அஞ்சலியை செலுத்துகிறது.

:mellow::o:) :) :wub:

http://www.eelamenews.com/?p=29020

இவர்களின் எழுத்துக்களையா இதுவரையில் எமது மக்கள் நம்பி இருந்தார்கள் ? யாழ் இணையத்தினை மூடாமல் தடுப்பதற்க்கு யாழ் கல உறவுகள் அனைவரும் ஒன்று படுவோம் . இவர்களின் உண்மையான முகங்களை தோலுரித்து காட்டிய http://www.infotamil.ch என்ற இணையதளமும் சிலநாட்டகளாக இயங்கவில்லை . என்ன நடக்கிறது ?

இது ஈழம் ஈ நியூஸ் இன் விளம்பர யுக்தியா ? அல்லது தங்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறாமல் தடுக்கும் முயற்சியா ?

ரமேஸ் சிவரூபனின் கொலை திட்டமிட்டு நடந்ததா தற்செலாக நடந்ததா என்பதை பிரெஞ்சு காவல்துறை முடிவு செய்யட்டும்.தயவு செய்து யாழ் இணைய நிர்வாகம் பிரெஞ்சு காவல்துறை சிறீலங்கா கால்துறையுடன் இணைந்து செயற்படுகிறது என்று எழுதிவருக்கு அதற்கான ஆதாரத்தை தரும்படி சட்டரீதியாக கடிதம் அனுப்பவும்.அவர்; அதை தராத பட்சத்தில் உடனடியாக அந்த நபர் பற்றி பிரெஞ்சு காவல்துறைக்கு முறைப்பாடு செய்யவும்.இதே நடைமுறையை ஈநியூஸ் இணையத் தளத்துக்கும் செய்யவும். இவர்கள் தொடர்பாகவும் பிரெஞ்காவல்துறையில் முறைப்பாடு செய்யவும். புதினம் தமிழ் நாதம. தமிழ்நேசன் பாணியில் யாழ் இணையத்தை முடக்க மேற்கொள்ளப்படும் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்வோம்.பிரான்வாழ் யாழ். இணையப் பதிவாளர்களே இந்த முயற்சில் நாங்கள் யாழ் நிர்வாகத்துக்கு அனைத்த உதவிகளையும் செய்வோம் முன்வாருங்கள்

ஈழம் ஈ நியூஸ் தனது பிரபல்யத்துக்கு யாழ் இணையத்தை பயன்படுத்துகிறது.

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளையும் பொய்களையும் விதைக்கும் இணையத்தளங்கள் யாழில் தடை செய்யப்பட வேண்டும்...

நியூட்டன் அவர்களே,

செய்திகளை இணைக்கும்போது, வெட்டி ஒட்டும்போது அதிக அவதானமாய் இருக்க வேண்டும்.

ஈழம் ஈ நியூஸில் "புகலிட படைப்பாளி ரமேஸ் சிவரூபன் பிரான்சில் தாக்கப்பட்டு மரணம் அதிர்ச்சியில் தமிழ்ச்சமூகம், பின்னணி என்ன?" இவ்வாறுதான் தலைப்பு எழுதப்பட்டு இருக்கின்றது. நீங்கள் தலைப்பை மாற்றி "ரமேஷ் சிவரூபனின் கொலைக்கு யாழ் இணையத்தை குற்றம் சாட்டும் ஈழம் ஈ நியூஸ்" என்று எழுதியதன் காரணம் புரியவில்லை. இந்த வேறுபாடு தவறான அர்த்தத்தை வாசகர்களுக்கு கொடுக்கும்.

ரமேஸ் சிவரூபன் அவர்களின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இனியொரு வலைத்தளத்தில் அவரால் எழுதப்பட்ட ஓர் கட்டுரை சில காலத்திற்கு முன்னம் யாழ் இணையத்திலும் பதியப்பட்டு இருந்தது. இளையோர் வன்முறை சம்மந்தமாக அந்த கட்டுரையில் விபரணம் செய்யப்பட்டு இருந்தது. கூகிழ் வலைத்தளத்தில் தேடல் செய்து பார்த்தேன். ரமேஸ் சிவரூபன் அவர்களின் கொலை சம்மந்தமாக வலைத்தளத்தில் தமிழ் ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிடாமல், அஞ்சலி ஏதும் தெரிவிக்காமல் செய்தியை இருட்டடிப்பு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது: http://www.google.ca/#hl=en&q=%22%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%22&aq=&aqi=&aql=&oq=&gs_rfai=&fp=480f198200a05fd0

யாழ் இணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஊர்ப்புதினத்தில் செய்தியை இணைப்பதற்கு நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கின்றேன். இதற்காக ஓர் யாழில் மீண்டும் ஓர் செய்திக்குழுமம் உருவாக்கப்பட்டு அதில் பொறுப்புணர்வுடன் செயற்படக்கூடிய சுமார் ஐந்து, ஆறு பேர் ஊர்ப்புதினத்தில் செய்திகளை இணைக்கும் பணியினை செய்ய வேண்டும். யாரும் எதையும் ஊர்ப்புதினத்தில் செய்திகளில் இணைக்கலாம் என்பது யாழ் இணையத்திற்கு நல்லது அல்ல. யாழ் இணையத்திற்கு எதிரானவர்களே கருத்துக்களத்தில் இணைந்துவிட்டு திரிவுபடுத்தும் செய்திகளை ஊர்ப்புதினத்தில் இணைக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி: ரமேஸ் சிவருபன்

- ஷோபாசக்தி

நான் 1993 மார்ச் மாதம் பிரான்ஸுக்கு வந்து சேர்ந்தேன். நண்பர்கள் தங்கியிருந்த சிறிய அறையில் எனக்கும் படுத்துக்கொள்ள ஒரு மூலை கிடைத்தது. நண்பர்களும் விசா, வேலைப் பிரச்சினைகளில் திணறிக்கொண்டிருந்தார்கள். நான் அகதித் தஞ்சம்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தேன். அகதித் தஞ்சம் கிடைக்கும்வரை வேலை செய்ய அனுமதி கிடையாது. நண்பர்களின் உதவியால் ‘பேப்பர்’ போடும் வேலையொன்று கிடைத்தது. சட்டவிரோதமான வேலையென்பதால் மிகக் குறைந்தளவு ஊதியமே கிடைத்தது. அதையும் இழுத்தடித்துத்தான் தருவார்கள். அந்த வேலையில் கிடைத்த சொற்ப ஊதியம் நண்பர்களுடன் அறைவாடகையையும் சமையல் செலவுகளையும் பகிர்ந்துகொள்ள மட்டுமே போதுமானதாயிருந்தது.

அப்போது அகதித் தஞ்சம்கோரிய முதல் விண்ணப்பம் அநேகமாக நிராகரிக்கப்படுவதே பிரான்ஸில் வழமையாயிருந்தது. அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்யும்போது வழக்கறிஞருக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். அந்தப் பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. அப்போது ‘பாரிஸ் தமிழர் கல்வி நிலையத்தினர்’ கவிதை, சிறுகதைப் போட்டியொன்றை நடத்தினார்கள். முதற்பரிசாகத் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. நான் போட்டிக்கு ஒரு சிறுகதையை எழுதி அனுப்பிவிட்டு நண்பர்களிடம்

“வழக்கறிஞருக்குப் பணம் ரெடி, எனக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கும்” என்றேன். ஆனால் எனக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது. சிறுகதைக்கான முதற்பரிசு ரமேஸ் சிவரூபனுக்குக் கிடைத்தது. கவிதைப் போட்டியிலும் அவருக்குப் பரிசு கிடைத்தது.

ரமேஸ் எனக்கு மூன்று வயதுகள் இளையவர். கவிதை, சிறுகதை, நாடகம், திரைப்படம், பட்டிமன்றம் என எந்தத்துறையையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவரின் கவிதைத் தொகுதிகளும் சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன. ‘வான்மதி’ என்றொரு இதழையும் நடத்தினார். எனினும் அவரின் அரசியல் தளும்பல்களே அவரை ஒரு தோல்வியுற்ற கலைஞனாக்கின. அரசியல் தளும்பல்களாலும் சந்தர்ப்பவாதங்களாலும் அரசியலில் வேண்டுமானால் வெற்றியைச் சாதிக்கலாம். ஆனால் அவை ஒரு கலைஞனின் ஆன்மாவைச் சிதைத்து அவனை முடக்கக்கூடியவை. ‘குமுதம்’ பாணியில் எழுதினால்தான் மக்களைச் சென்றடையலாம் என்று ரமேஸ் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவரின் ‘வான்மதி’ இதழையும் அவ்வாறுதான் நடத்த முயற்சித்தார். எனினும் அவர் நவீன இலக்கியங்களையும் தேடித் தேடிப் படித்தார்.

நீண்டகாலமாக என்னுடன் பட்சமாகவும் இனிமையாகவும் பழகி வந்த ரமேஸை என்னுடைய கறாரான அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக என்னால் நெருங்கிச் செல்ல முடியவில்லை. வழிதெருவில் கண்ட இடத்தில் கதைப்பது, அப்படியே ஒரு ‘அரை’யை வாங்கி இருவரும் பகிர்த்து குடித்து இலக்கியமும் அரசியலும் பேசிவிட்டுப் பிரிவது என்றளவிலேயே எங்கள் நட்பு இருந்தது. அவரின் அழைப்பின் பெயரில் ஒரேயொருமுறை நானும் கவிஞர் அருந்ததியுமாக அவரின் வீட்டுக்குப் போனோம். அன்று அவரின் வீட்டில் ஒடியற் கூழ் விருந்து. நண்பர்கள் பானையைச் சுற்றவர இருந்து மதுவும் கூழும் குடித்தோம். இன்று ரமேஸைக் கொன்றதாகக் காவற்துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவரும் அன்று எங்களுடனிருந்து கூழ் குடித்தார்.

ரமேஸின் கொலைச் செய்தியை அறிந்தவுடனேயே ‘ரமேஸ் புலிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்’ என இலங்கை அரசு சார்பான ஊடகங்கள் ‘அவசர’ச் செய்தியை வெளியிட்டுள்ளன. ‘இனியொரு’, ‘தமிழரங்கம்’ ஆகிய இணையங்கள் நண்பர்களுக்குள் நடந்த சண்டையின்போதுதான் ரமேஸ் அடிக்கப்பட்டுப் பின் இறந்திருக்கிறார் என்று சொல்கின்றன. அவ்வாறு நடந்திருக்கத்தான் வாய்ப்பு உள்ளதாக நானும் கருதுகிறேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பாக கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்காகப் பாரிஸ் வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு முந்தைய இரவு மதுவிடுதி ஒன்றில் நானும் ஜெயபாலனும் இருந்தபோது அங்கே ரமேஸ் வந்தார். ஜெயபாலனுக்கும் ரமேஸுக்குமிடையில் தொடங்கிய புலம் பெயர் திரைப்படங்கள் குறித்த உரையாடல் விவாதமாக மாறிச் சண்டையில் வந்து நின்றது. ஜெயபாலன் மிகவும் புண்பட்டிருந்தார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் என்னுடன் அதுகுறித்தே பேசிக்கொண்டிருந்தார். ரமேஸும் அது குறித்து வருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அடுத்தநாள் நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்குள் நுழைந்த ரமேஸ் முதல் வேலையாக ஜெயபாலனைத் தேடிச்சென்று அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு இரவு தான் நடந்துகொண்ட முறைக்காக மன்னிப்புக் கேட்டார்.

ஒரு சண்டைக்கும் ஒரு மன்னிப்புக்கும் இடையில்தான் கொலை மறைந்திருக்கிறது.

தோழன் ரமேஸ் சிவரூபனுக்கு அஞ்சலி!

http://www.shobasakthi.com/shobasakthi/?p=702

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஊர்ப்புதினத்தில் செய்தியை இணைப்பதற்கு நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கின்றேன். இதற்காக ஓர் யாழில் மீண்டும் ஓர் செய்திக்குழுமம் உருவாக்கப்பட்டு அதில் பொறுப்புணர்வுடன் செயற்படக்கூடிய சுமார் ஐந்து, ஆறு பேர் ஊர்ப்புதினத்தில் செய்திகளை இணைக்கும் பணியினை செய்ய வேண்டும். யாரும் எதையும் ஊர்ப்புதினத்தில் செய்திகளில் இணைக்கலாம் என்பது யாழ் இணையத்திற்கு நல்லது அல்ல. யாழ் இணையத்திற்கு எதிரானவர்களே கருத்துக்களத்தில் இணைந்துவிட்டு திரிவுபடுத்தும் செய்திகளை ஊர்ப்புதினத்தில் இணைக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதை வழிமொழிகிறேன். செய்திக் குழுமத்தில் இல்லாதவர்களை செய்தி திரட்டியில் இணைக்கும்படி செய்யலாம். அந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிர்வாகம் அதை ஊர்ப்புதினத்துக்கு நகர்த்தலாம்தானே? :mellow:

கலைஞன், on 07 June 2010 - 06:58 AM, said:

யாழ் இணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஊர்ப்புதினத்தில் செய்தியை இணைப்பதற்கு நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கின்றேன். இதற்காக ஓர் யாழில் மீண்டும் ஓர் செய்திக்குழுமம் உருவாக்கப்பட்டு அதில் பொறுப்புணர்வுடன் செயற்படக்கூடிய சுமார் ஐந்து, ஆறு பேர் ஊர்ப்புதினத்தில் செய்திகளை இணைக்கும் பணியினை செய்ய வேண்டும். யாரும் எதையும் ஊர்ப்புதினத்தில் செய்திகளில் இணைக்கலாம் என்பது யாழ் இணையத்திற்கு நல்லது அல்ல. யாழ் இணையத்திற்கு எதிரானவர்களே கருத்துக்களத்தில் இணைந்துவிட்டு திரிவுபடுத்தும் செய்திகளை ஊர்ப்புதினத்தில் இணைக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஏன் அப்புமாரே, ஊர்புதினம் இல்லாது மற்றதுகளில் இப்படியானதுகளை இணைக்க மாட்டினமோ? அல்லது ஏதோ ஒரு தலைப்புக்கு கீழே எழுத மாட்டினமோ(இங்கை எல்லாம் தலைப்புடன் சம்பந்தமாகத்தானே எழுதுகிறார்கள்???)??? ....

உந்தக் கொலையை பிரான்ஸு பொலிஸாரிடம் விட்டு விடுங்கள்! பிரான்ஸில் இதுக்கு முன்னமும் பல கொலைகள் நடந்தது, அவை பற்றிய உண்மைகளும் அம்பலத்துக்கு வரட்டும்!!!!

இப்படி யாழை குற்றச்சாட்டுவது ... எய்தவன் இருக்க, ...., அதற்கு மேல் புலம்பெயர் மக்களின் சுயகருத்துக்களை தடுக்கப்போட்டும் திட்டமாகவே தெரிகிறது. .... யாழில் உள்ளவர்கள் கைகளில் ஆயுதங்களும் இல்லை, அப்படியான செய்ற்பாடுகளை புலத்தில் தூண்டுபவர்களும் இல்லை!!!

காகங்கள் கரையும்தான், நாய்களும் ஊளயிடும்தான் , .... அதற்காக .... உப்படியான மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிய கூடாது!

நெல்லையன்,

எனது பரிந்துரையை நீங்கள் தவறாக விளங்கி இருக்கிறீர்கள். இந்த நவீன யுகத்தில் கருத்துக்கள் வெளியில் வருவதை எவராலும் தடுக்க முடியாது. ஓர் வலைப்பூ, வலைத்தளம் முகநூல் என்று ஆயிரம் வகையில் வசதிகள் தற்போது இருக்கின்றது. யாழ் இணையத்தில் இணைந்துதான், இங்கு எழுதித்தான் எவராவது தமது கருத்துக்களை வெளியில் கொண்டுவர முடியும் என்கின்ற தேவை, அவசியம் இல்லை. வலைத்தளம் பற்றிய ஓரளவு அடிப்படை அறிவு இருந்தால், வசதியும் இருந்தால் எவராலும் தமது கருத்துக்களை கூறுவது கடினமான வேலை இல்லை.

இங்கு நான் செய்திக்குழுமத்தை பிரேரணை செய்வதன் நோக்கம், ஏற்கனவே யாழில் செய்திக்குழுமம் செயற்பட்டது. கருத்துக்கள உறவுகளாக இருப்பவர்கள் எதையும் யாழில் இணைக்கக்கூடியதாக இருந்தாலும் ஊர்ப்புதினம் பகுதியே அதிக அளவில் - ஆயிரக்கணக்கில் வாசர்களினால் பார்வைக்கு உள்ளாகுகின்றது. எனவே பிரதான பகுதியாக ஊர்ப்புதினம் பகுதியில் ஆதாரமில்லாத செய்திகள், திரிவுபடுத்தும் செய்திகள், வம்புக்கு இழுக்கும் செய்திகள் இவை தவிர்க்கப்பட வேண்டும். இசைக்கலைஞன் கூறியது போல் ஊர்ப்புதினத்திற்காக யாராவது இணைக்கும் செய்திகள் செய்திதிரட்டில் இணைக்கப்பட்ட பின்னர் நிருவாகம் அவற்றை பிரதான பகுதிக்கு நகர்த்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் யாழில் மீண்டும் ஓர் செய்திக்குழுமம் உருவாக்கப்பட்டு அதில் பொறுப்புணர்வுடன் செயற்படக்கூடிய சுமார் ஐந்து, ஆறு பேர் ஊர்ப்புதினத்தில் செய்திகளை இணைக்கும் பணியினை செய்ய வேண்டும்.

இப்ப இந்த பிரச்சினைகளுக்கே காரணம் தாங்கள் குறிப்பிடும் இந்த சுமார் ஐந்து, ஆறு பேர் தான் மச்சான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சகோதரனுக்கு முதலில் என் அஞ்சலிகள்!.

யாழ்களத்தில் அப்படி என்னதான் கொலை மிரட்டல் வந்தது? கொலை மிரட்டலை நேரடியாகத் தெரிவிக்காமல் யாழ்களத்தில் போட்டு விட்டுச் செய்கின்ற அளவு என்ன சினிமாக் காட்சியாக நடக்கின்றது. ஒரு அப்பாவியான சிவரூபனின் படுகொலைக்கான காரணத்தை மறைத்து விட்டு, யாழ்களத்தில் கருத்து எழுதுகின்ற ஒருவர் தான் காரணம் என எங்கனம் புலனாய்வாளர்கள் ஆனார்கள்? இவ்வாறன உண்மை தெரிந்ததாகச் சொல்கின்ற இவர்களை நிச்சயம் பிரான்ஸ் காவற்துறை விசாரிக்க வேண்டும்.

ரமேஸ் சிவரூபனுக்கு எனது அஞ்சலிகள்.

எமது இனம் மிகவும் ஒரு கேவலம் கெட்ட இனமாக மாறிவிட்டது.எங்களுக்குளேயே பிளவு பட்டு நான் சரி நீ பிழை என்று நிரூபிக்க படாத பாடு படுகின்றோம்.மே 18 இற்கு பிறகு ஒரு 20 வருடமாக வாய் மூடப்பட்டிருந்தவர்கள் தாங்கள் சொல்ல நினைத்தது சரி என மேடை போட முயற்சிக்கின்றார்கள்.மற்றவர்கள் வாயை அராஜகத்தால் மூடியவர்கள் அதை இன்னமும் தொடரவே விரும்புகின்றார்கள்.

ஆக மொத்தம் மன்னிக்கவோ அல்லது விட்ட பிழைகளை ஒப்புக்கொள்ளவோ முடியாத இந்த இனம் தமக்குள் அடிபட்டு சாவதை தவிர வேறு வழியில்லை.

.

இப்ப இந்த பிரச்சினைகளுக்கே காரணம் தாங்கள் குறிப்பிடும் இந்த சுமார் ஐந்து, ஆறு பேர் தான் மச்சான்

நான் ஒருவரையும் பெயர் குறிப்பிடவில்லையே விசுகு அண்ணை. நீங்கள் எந்த ஐந்து, ஆறுபேர் பற்றி கூறுகின்றீர்கள்? இப்போது யாழ் வலைத்தளத்தில் கருத்துக்கள உறவுகளாக இருக்கக்கூடிய எவரும் ஊர்ப்புதினத்தில் செய்திகளை இணைக்கலாம். யாழ் இணையத்தினை விரும்பாதவர்களும்கூட இன்று ஓர் பெயரில் யாழ் அரிச்சுவடியில் இணைந்துவிட்டு, கருத்துக்கள உறவாகியபின்னர் நாளை ஓர் செய்தியை ஊர்ப்புதினத்தில் இணைக்கலாம்.

வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இருப்பதால் சொல்கின்றேன்

தேசியத்துக்கும்

கொலையுண்டவருக்கும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் வெகுதூரம்

இது குடித்துவிட்டு தள்ளுப்பட்ட இடத்தில் நடந்த........?

இதற்குப்போய் இவ்வளவு தூக்குதல்கள் ................???

பதிவு, சங்கதி ஈழம்ஈ நியூஸின் மேற்கண்ட பதிவை அப்படியே பிரதிசெய்து தமது தளங்களில் இணைத்து இருப்பது பலவித கேள்விகளை தோற்றுவித்து இருக்கின்றன. ரமேஸ் சிவரூபன் அவர்கள் கொலை செய்யப்பட்டபோது அதுபற்றி உடனடியாக எதுவித செய்தியையும் அறியத்தராதவர்கள் இப்போது நகைச்சுவையான வகையில் யாழ் இணையத்தை சம்மந்தப்படுத்தி நீலிக்கண்ணீர் வடிப்பதன் பின்னால் உள்ள மர்மம் யாதோ? பலர் தமிழ் ஊடகங்களையும், தமிழ் மக்களையும் காலங்காலமாக தங்கள் கமக்கட்டுக்குள் வைத்து இருக்கலாம் என்று நினைக்கிறீனம் போல. <_<

பிரான்சில் இருப்பதால் சொல்கின்றேன்

தேசியத்துக்கும்

கொலையுண்டவருக்கும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் வெகுதூரம்

இது குடித்துவிட்டு தள்ளுப்பட்ட இடத்தில் நடந்த........?

இதற்குப்போய் இவ்வளவு தூக்குதல்கள் ................???

... ம்ம்ம்ம்ம்ம் .... இது யாழின் மீதோ, அதனை இயக்குபவர்களின் மீதுள்ள தனிப்பட்ட கோபதாபங்கள், த.தேயின் பிரட்சனையாக காட்ட அந்த மா வல்லுனர்கள் முயல்கிறார்கள் அல்லது யாழின் ஊடு தட்டிக் கேட்பதை திசை திருப்ப இப்படி ஒரு மிரட்டல் நாடகம்!!! <_<

ஆமா........ உந்த வல்லுனர்கள் போய் முறையிட்டதுபோல் யாழ் ஏன் முறையிடக்கூடாது(ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்றாலும்...) ... இவர்களின் இச்செய்தியால் யாழை இயக்குபவர்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் உயிராபத்து என முறையிட இயலாதா??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகத் தெரியாது ஆனால் நான் கூறவருவது உண்மையை அண்மித்ததாகவிருக்கலாம் அதாவது, ஓரிரு மாதங்களுக்கு முன்பு "வசந்தராணி எனது சினேகிதி" எனும் பொருள்பட யாழில் ஒரு கதையை வாசித்திருந்தேன் அது உண்மைக்கதையாகும் அக்கதையில் வரும் வசந்தராணி அதே பெயரில் ஏழாலை வடக்கில் உலாவித்திரிந்த பொரளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த பெண்ணாகும் ரமேஸ் சிவரூபனும் ஏழாலை வடக்கைச் சேர்நதவரே நானும் ஏழாலை வடக்குடன் தொடர்வடையவனே. மிகவும் ஆளுமையுள்ள எழுத்தளர் தன்னை அழித்துக்கொண்டார் தண்ணியடிப்பது அதன்பின்பு சண்டித்தனம் செய்வது இது அவர் பிறந்த மண்ணுடன் ஒட்டிப்பிறந்த குணம் அதுவே அவருக்கு எமனாகியது. எனினும் அவருக்கு எனது அஞ்சலிகள். அது தவிர இங்க புலம்பெயர் தேசத்தில் புலனாய்வாளர்கள் அதிகரித்து விட்டார்கள் யாழ் களத்தைச் சேர்ந்தவர்கள் அவரைக் கொலை செய்ததாக இணையத்தளங்களில் செய்திகளை கண்டமேனிக்குப் பரப்பி விட்டுள்ளார்கள் அப்படி செய்தி பரப்பி விட்டுள்ள இணையத்தளங்களை பிரான்ஸ் நாட்டுக் காவல் துறையினரால் விசாரிக்கப்படுவது நன்று அவர்கள் ஒரு வேளை ஆதாரம் ஏதாவது வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட யாழ் உறவு கைது செய்யப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது அதற்கு நாமும் ஒத்துளைப்பு வழங்குவோம் ஆகவே முதலில் யாழ் உறவுகளே காரணம் எனச்செய்தி வெளியிட்டுள்ள இணையத்தளங்கள் அனைத்தையும் விசாரணைக்குள்ளாக்குதல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையால் உயிரிழந்த ரமேஸ் சிவருபனுக்கு எனது அஞ்சலிகள்.

அவரது குடும்பத்தாருக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு.

அதே வேளையில் இந்தச் சம்பவத்தை வைத்து சுயலாபம் தேடும் ஊடக வியாபாரிகளுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

வாத்தியார்

................

ஒரு உயிர் விலைமதிப்பற்றது

தேவையற்று போவது மிகவும் வருந்தத்தக்கது

பிரான்சில் எனது சகோதரத்துடன் கதைத்தவரையில்

இது தனிப்பட்டபிரச்சினையால் ஏற்பட்ட தகராறில்

விழுந்த கொலை

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் ஒரு தசாப்த கால வரலாற்றை நேற்று வந்த காளான்கள் மாசுபடுத்திவிட்டார்கள் என்று மானநஸ்ட வழக்குப் போட்டால் தகுமா?? ஏன் கேட்கின்றேன் என்றால் இது ஒருவகையில் சாத்தியமான ஒன்றாகவே இருக்கலாம். ஆயினும் இதை நிர்வாகமே மேற்கொள்வது நன்று. 3ம் மனிதர்கள் இது பற்றி வழக்குப் போடுவது சரியாகாது. ஏன் என்றால் பிரச்சனைகளை பெயர் வாங்க அலையும் கும்பல்களுக்காக பெரிப்பித்தல் என்றது, மறுபக்கம் எம்மக்களுக்கான உடைவுக்குத் துணை போவது போலாகி விடும்.

ஏன் நிர்வாகத்தினர் செய்ய வேண்டும் என்றால், சிங்களப் பேரினவாதிகளின் கைக்கூலிகள் இதுக்குள் புகுந்து பிரிவினையை உருவாக்கமல் தடுப்பதற்காகாம்.

பணம் எங்கே? காட்டிக்கொடுத்தவர்கள் யாரால் எங்கே என்ற செய்திகள் யாழில் இணைத்த பின்பே ஈழம் ஈ நியூஷ் யாழை வம்புக்கு இழுக்கின்றது. ஒருவகையில் யாழில் கருத்தெழுதுபவர்களை மிரட்டுகின்றது. ஈழம் ஈ நியூஷ் நடத்துனர்கள் காட்டிக்கொடுப்பிலும் பணக்கொள்ளையிலும் ஈடுபட்டிருப்பதால் தான் தம்மை தற்காத்துக்கொள்ள முந்துகின்றனரோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவர்களை இனம் கண்டு அந்தந்த நாட்டுக் காவற்துறையிடம் முறையிடுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ரமேஸ் சிவரூபனுக்கு எனது அஞ்சலிகள்.

எமது இனம் மிகவும் ஒரு கேவலம் கெட்ட இனமாக மாறிவிட்டது.எங்களுக்குளேயே பிளவு பட்டு நான் சரி நீ பிழை என்று நிரூபிக்க படாத பாடு படுகின்றோம்.மே 18 இற்கு பிறகு ஒரு 20 வருடமாக வாய் மூடப்பட்டிருந்தவர்கள் தாங்கள் சொல்ல நினைத்தது சரி என மேடை போட முயற்சிக்கின்றார்கள்.மற்றவர்கள் வாயை அராஜகத்தால் மூடியவர்கள் அதை இன்னமும் தொடரவே விரும்புகின்றார்கள்.

ஆக மொத்தம் மன்னிக்கவோ அல்லது விட்ட பிழைகளை ஒப்புக்கொள்ளவோ முடியாத இந்த இனம் தமக்குள் அடிபட்டு சாவதை தவிர வேறு வழியில்லை.

.

எல்லா பழியையும் புலிமேல் போட்டுவிட்டு ஏதாவது ஒசியில கதிரை கிடைத்தால் ஏறிஉட்கார உங்களை போல படதபாடுபடும் வேறு யாரையும் நான் இப்போதைக்கு எங்கும் காணவில்லை.

ஆனால் ஊருக்கு உபதேசம் என்றால் நல்ல விளாசுறீங்கள்.

துரோகங்தனங்களுக்கு துணைபோன கைகளால் ஒரு கடலையே மறைக்கலாம் என்று எண்ணும்போது...............

அவர்கள் நினைப்பது ஒன்றும் பெரிதல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரங்களில் பல வகையுண்டு..........

பிரபல நட்டசந்திரங்களை எடுத்து பாhத்தோமென்றால்............ செய்திகளில் யார் முன்னிலையில் நிற்கின்றார்களோ. அவர்களே பிரபலமானவர் என்ற இடத்தை தக்க வைப்பவராக இருக்கன்றார்கள். அமெரிக்கா பிரபலங்கள் அதற்காக அடிக்கடி எதாவது ஒரு கடற்கரை பிரதேசத்திற்கு சென்று உடுப்புகளை களட்டி எறிந்துவிட்டு அம்மணமாக திரிவதுண்டு. குறித்த நடிகை குறிப்பிட்ட பிரதேசம் செல்லும் விடயம் (பப்பராசி) பத்திரிகை படப்பிடிப்பபாளர்களுக்கு இரகசியமாக கசியவிடுவதுபோல் நடிகையின் தரப்பால் வேண:டுமென்றே கசியவிடப்படும்.

அதுபோல் யாழ் இணையதளதிற்கும் ஒசியில் அவர்கள் விளம்பரம் செய்வதாகவும் எடுக்கலாம். இன்னமும் புத்திசாலிதனமாக சிந்தித்தால் விளம்பரத்தை புலம்பெயர் தமிழர்களிடத்தில் இதேவிடயத்தை வேறுமாதிரி அதே இணையத்தளங்களின் ஊடாகவே பரவ செய்யலாம்.

ஆனால் எப்போதோ கேட்ட ஒரு பாடல்.................. அது இப்படி சொல்லுது.

"பாவம் என்ற கல்லறைக்கு பலவழி. என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி"

பணம் எங்கே? காட்டிக்கொடுத்தவர்கள் யாரால் எங்கே என்ற செய்திகள் யாழில் இணைத்த பின்பே ஈழம் ஈ நியூஷ் யாழை வம்புக்கு இழுக்கின்றது. ஒருவகையில் யாழில் கருத்தெழுதுபவர்களை மிரட்டுகின்றது.

பதிவு, சங்கதி ஆகிய வலைத்தளங்கள் ஈழம் ஈ நியூஸின் மேற்கண்ட பதிவுகளை அப்படியே பிரதிபண்ணி தங்கள் தளங்களில் இணைத்து இருப்பது அவர்களின் அப்பட்டமான முகத்தினை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த பதிவும், சங்கதியும் திடீரென இப்போது திரைமறைவில் நின்று யாழ் இணையத்தளத்துக்கு எச்சரிக்கை விடுப்பதன் காரணம் யாதென்று நான் சொல்லத்தேவையில்லை. தமிழில் இதைத்தான் ஊடல் என்றும் சொல்வார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.