Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்...ரிங்..ரிங்..தொலைபேசியை எடுத்தேன் மறுமுனையில் "மரியா" உங்களுடைய அபோயின்மன்ட் பின்னேரம் 3 மணிக்கு இருக்கு என்றாள்.நான் சரி "we will meet at 3ó clock same place"என்று சொல்லி தொலைபேசியை வைக்க,"சொப்பிக்"முடிவடைந்து வீட்டுகுள் நுழைந்தவள் யாரோட மூன்று மணிக்கு போக போறியல் இங்க நான் ஒருத்தி இருக்கிறேன் என்று இல்லை கண்டவள்கிண்டவளுடன் "போனில்"கதைப்பது பிறகு"அபோயின்மன்ட் விக்ஸ்"பண்ணுறது,இன்றைக்கு நான் கண்டபடியால் தெரிந்துவிட்டது இப்படி எத்தனை நடந்திச்சோ என்று புறுபுறுத்தபடியே உள்ளே சென்றவள் வாங்கிய பொருட்களை குளிர்சாதனபெட்டியில் போட்டாள்.

சும்மா விசர் அலட்டாதையும் என்னுடன் வேலை செய்யும் "மரியா"வேலை விடயமாக மூன்று மணிக்கு ஒரு "மீட்டிங்"இருக்கு அதை தான் ஞாபகபடுத்தியவள் என்றேன்.

குளிர்பானத்தை குடித்தபடியே என்னவோ நீங்க சொல்லுறதை தான் நான் நம்ம வேண்டும்,நானும் "டிகிரி கோல்டர்"தான் அந்த காலத்து பொம்பிளைகள் மாதிரி இல்லை என்று சிரித்தபடியே கூறினாள்.குளிர்பானம் அவளை குளிர்மைபடுத்தியது நானும் குளிர்பானத்திற்கு ஒரு நன்றியை சொன்னேன்.

"ரெலிபோன் ரிங்" பண்ணுது எடுங்கோ அப்பா நான் பெரியவனை "சுவிமிங் கிளாசில"விட்டிட்டு வாரேன் என்று வெளியே சென்றவள் திரும்பி வரும் பொழுது தொலைபேசியில் நான் சல்லடித்து கொண்டிருப்பதை கண்டாள்,கோபம் வந்தாலும் காட்டிகொள்ளாமள் உள்ளே சென்றாள்.

ஆனந்தி,மனிசி வந்திட்டா பிறகு நான் கதைக்கிறேன் உம்முடைய நம்பரை சொல்லும் என்று அதை எழுதி கொண்டேன்.

என்ன வெயிலோ என்று அன்பாக கேட்க,வெயில் வெளியில் இல்லை மனசிற்குள் தான் அனலாய் சுடுகிறது என்றாள்.ஏன் சும்மா கத்துகிறாய் என்று எனது குரலை உயர்த்த அடங்கியவளாக நீங்கள் ஏன் இப்ப சும்மா கத்துறியள் இப்படி கத்துவதனால் எனக்கு ஒன்றுமில்லை உங்களுக்கு தான் கூடாது."பிளேட் பிரசர்"கூடி ஒரு நாளைக்கு மண்டையை போட வேண்டி வரும்,மண்டையை போட்டாலும் பரவாயில்லை கை,கால் இழுத்து போட்டால் யார் வைத்து பார்க்கிறது என்றவள், எனிமேல் கோபம் வரும் போது சும்மா கத்தாமல் நித்தியானந்த சுவாமியின் கதவை திற காற்று வரும் சொற் பொழிவு சஞ்சிகைகளிளும் வருது தொலைகாச்சிகளிளும் வருகிறது பொறுமையாக இருந்து பாருங்கோ படியுங்கோ மனதில் அமைதி கிடைக்கும் சொல்லியபடியே ஒரு சஞ்சிகையை கொண்டு வந்து தந்தாள்.

சொல்ல மறந்து போனேன் நீர் வெளியே போகும் பொது ஒரு "கோல்"வந்தது அது யாரோ உம்முடையை பஜனை குரூப்பில் இருப்பவராம் நித்தியானந்த கண்ணன் என்று பெயர் சொன்னார் சனிகிழமை சுவாமி நித்தியானந்தா பஜனையாம் உம்மை வரட்டாம் என்றேன்.அதுசரி யாரப்பா அந்த நித்தியானந்த கண்ணன்,அட உங்களுக்கு தெரியாதோ அது எங்கண்ட "பென்டில்கில்" கண்ணன் சிவபக்தர்களை சிவனடியார்கள் என்பது போல் கம்னியூஸ்டுகளை தோழர் என்பது போல் நித்தியானந்தாவின் பக்தர்களை நித்தியானந்திகள் என்று சொல்லுறனாங்கள்.அடுத்த சனிகிழமை நித்தியானந்த சுவாமிக்கு காலை 5 மணியில் இருந்து பின்னேரம் 5 மணி வரை பஜனை வைக்கிறோம் மத்தியான பிரசாதமும் உண்டு அவருடைய சொற்பொழிவுகளை நித்தியான்ந்தி பத்மா விளங்கபடுத்த உள்ளார் நீங்களும் வாங்கோ என்றாள்.சரி என்று தஞ்சாவூர் பொம்மை போல் தலையை ஆட்டி போட்டு நான் எங்களிண்ட யாழ் இணையைத்தை தட்டி பார்த்து கொண்டு இருந்தேன்.

நித்தியானந்தாவின் லீலைகள் என்று வந்த செய்தியை படித்துபோட்டு இஞ்சவாரும் கதவை திறந்து காற்று வாங்கின சாமி சீலையை திறக்க போய் பிரச்சினையில மாட்டுபட்டு போனாராம் என்று மனிசியை கூப்பிட்டு காட்டினேன் மனிசி நம்பமாட்டாள் என்று அடம்பிடித்தாள் அவள் ஒரு நாளும் அப்படி செய்யமாட்டார் அது "கிராபிக்ஸ்"செய்த விளையாடு சாமியின் எதிரிகள் அப்படி செய்து போட்டார்கள் அந்த முகத்தை பார்த்தாலே தெரியுது இப்படியான கெட்டவேலைகள் செய்ய கூடியவர் அல்ல என்று.சுவாமியை இப்படி எழுதினவர்கள் பேசினவர்கள் எல்லாம் இடி விழுந்து சாக வேண்டும் என்று திட்ட வேறு தொடங்கிவிட்டாள்.

அடியே கட்டின புருஷன் "ரெலிபோனில" கதைத்தாலோ பொம்பிளையோடு சிரித்து கதைத்தாளோ சந்தேகம் வந்து முறைத்து பார்பீர்கள் ஆனா இந்த பொறுக்கிகள் சாமியார் என்ற பெயரில் செய்தவைகளை படம் பிடித்து காட்டினாலும் நம்பமாட்டியள் என்று அடம்பிடிகிறியள் எதற்கு எடுத்தாலும் நாங்கள் "டிகிரி கோல்டர்"என்பீர்கள் உந்த புறம்போக்குகள்,பொம்பிளை பொறுக்கிகள் பின்னால் போகும் போது உங்கள் டிகிரிகள் உங்களுக்கு என்னத்தை செய்தன....இனிமேல் எவனுக்கு பின்னாலையும் சாமி,ஆனந்திகள் என்று போனீயோ கொலை விழும் அல்லது நான் வீட்டை விட்டு போகனும் இல்லை நீ விட்டு போகனும் என்றபடியே அரைபோத்தலை அடித்துபோட்டு நான் நித்தியானந்ததில் திளைத்தேன்.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவாரசியமாய் இருக்கிறது . :wub: கற்பனையுடன் சேர்த்து

கதை சொன்ன விதம் நல்லாய் இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. கதை நல்லா இருக்கு..! பெண்களின் கணவன்மாரை நம்பாத குணத்தைப் போட்டு உடைச்சிருக்கிறீங்கள்..! அதுசரி, இவை ஏன் அப்பிடி இருக்கினம்? :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை புத்தன்!

புத்தன் உங்களைப் பார்க்க பொறாமையைக் கிடக்கு! உசாராய் அவங்களைத் திட்ட ஒரு சந்தர்ப்பமாவது வாய்ச்சுது! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள் பல ஆனந்திகள் இருக்கின்றார்கள் புத்தன்

ஆண்பாவம் பொல்லாதது.

சில பேர் திருந்தவே மாட்டார்கள் :wub::lol:

வாத்தியார்

........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம்...எனக்குதெரிஞ்ச அரைகுறை போலந்து,ரசியா பாசையள் ஒண்டும் என்ரை கிழட்டுக்கு துப்பரவாய் ஒரு கோதாரியம் விளங்காது

  • கருத்துக்கள உறவுகள்

//........................ அரைபோத்தலை அடித்துபோட்டு நான் நித்தியானந்ததில் திளைத்தேன்.

எல்லாஞ் சரி, ஆனா கடைசியில நீங்களும் அரைப்போத்திலை அடிச்சுப் போட்டு நித்தியானந்தத்திலை நீந்தித் திளைச்சதுதான் கொஞ்சம் இடிக்கிது. :unsure:

புத்தன் அண்ணை, நீங்கள் எடுத்த கதைக்கான கருவும், கதையை உடைவில்லாமல் நகர்த்திச் செல்லும் பாங்கும் சிறப்பா இருக்கிது. பொதுவாக நீங்கள் தரும் படைப்புக்கள், கற்பனை என்பதற்கும் அப்பால் நமது மக்களின் நடைமுறை வாழ்வியல் சிக்கல்களை நகைச்சுவையுடன் சொல்லுவதாக இருக்கும். அவற்றில் நாம் சிந்தித்து செயற்படவேண்டிய விடயங்கள் பலவற்றை உணர்த்தியிருப்பீர்கள். தொடர்ந்தும் உங்களின் படைப்புக்கள் வெளிவரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. கதை நல்லா இருக்கு..! பெண்களின் கணவன்மாரை நம்பாத குணத்தைப் போட்டு உடைச்சிருக்கிறீங்கள்..! அதுசரி, இவை ஏன் அப்பிடி இருக்கினம்? :unsure::lol:

கட்டினா இப்பிடியான பிரச்சனையளும் இருக்கோ? :)

புத்தன்... கதை சொன்ன விதம் நன்று. முன்னர் மாதிரி எழுதுவது குறைசிட்டிங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டினா இப்பிடியான பிரச்சனையளும் இருக்கோ? :lol:

இசைக்கு எப்படி தெரியும் இது???

இன்னொரு இடத்தில இனித்தான் தேடணும் என்று எழுதியதாக ஞாபகம்

நான் காதலிக்கத் தொடங்கியதும் அல்லது எனக்கு பெண் பார்த்த பிறகு எனது முதல் கதை வசனத்தை இங்கே கட்டாயம் பதிந்து விடுகிறேன்..! :)

ஆகா.. கதை நல்லா இருக்கு..! பெண்களின் கணவன்மாரை நம்பாத குணத்தைப் போட்டு உடைச்சிருக்கிறீங்கள்..! அதுசரி, இவை ஏன் அப்பிடி இருக்கினம்? :unsure::D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை..! பெண்கள் ஏன் இப்படி இருக்கினம் எண்டு நான் எழுதினது நெடுக்காலபோவான் மாதிரியான ஞானிகள் மூலம் அறிஞ்சு கொண்டது. என்ர சொந்த அனுபவம் இல்லை..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் இந்த நிலமைக்குக் காரணம் நம்ம ..............ஸ் தான் :huh::)

அது மட்டுமல்ல பெண்கள் அவர்களைப் பொறுத்த மட்டில் அறி வாளிகள் கூட :D:D

வாத்தியார்

..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூ

கதை சுவாரசியமாய் இருக்கிறது . :wub: கற்பனையுடன் சேர்த்து

கதை சொன்ன விதம் நல்லாய் இருக்கிறது .

சூப்பர் கற்பனை அல்லோ இது ....நன்றிகள் நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:):):D:wub:

:D:D:D:D:D:) :எங்களுக்கும் தெரியுமல்ல குறியீடு போட

நன்றிகள் செவ்வந்தி

ஆகா.. கதை நல்லா இருக்கு..! பெண்களின் கணவன்மாரை நம்பாத குணத்தைப் போட்டு உடைச்சிருக்கிறீங்கள்..! அதுசரி, இவை ஏன் அப்பிடி இருக்கினம்?

அவையளுக்கும் ஒரு சபலம் இருக்கும்தானே .....அதை இப்படி....

நல்ல கதை புத்தன்!

புத்தன் உங்களைப் பார்க்க பொறாமையைக் கிடக்கு! உசாராய் அவங்களைத் திட்ட ஒரு சந்தர்ப்பமாவது வாய்ச்சுது! :

இப்படி திட்டிற கதைகளை மனிசியிடம் காட்டுவதில்லை

நல்லகாலம்...எனக்குதெரிஞ்ச அரைகுறை போலந்து,ரசியா பாசையள் ஒண்டும் என்ரை கிழட்டுக்கு துப்பரவாய் ஒரு கோதாரியம் விளங்காது

கு சா...அந்தரம ஆபத்துக்கு கிழடுதான் உதவும் .

எல்லாஞ் சரி, ஆனா கடைசியில நீங்களும் அரைப்போத்திலை அடிச்சுப் போட்டு நித்தியானந்தத்திலை நீந்தித் திளைச்சதுதான் கொஞ்சம் இடிக்கிது. :l

புத்தன் அண்ணை, நீங்கள் எடுத்த கதைக்கான கருவும், கதையை உடைவில்லாமல் நகர்த்திச் செல்லும் பாங்கும் சிறப்பா இருக்கிது. பொதுவாக நீங்கள் தரும் படைப்புக்கள், கற்பனை என்பதற்கும் அப்பால் நமது மக்களின் நடைமுறை வாழ்வியல் சிக்கல்களை நகைச்சுவையுடன் சொல்லுவதாக இருக்கும். அவற்றில் நாம் சிந்தித்து செயற்படவேண்டிய விடயங்கள் பலவற்றை உணர்த்தியிருப்பீர்கள். தொடர்ந்தும் உங்களின் படைப்புக்கள் வெளிவரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

நன்றிகள் காவாலி .உங்கள் பாராட்டுக்கள் என்னை மீண்டும் எழுத (கிறுக்க) தூண்டும் மீண்டும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டினா இப்பிடியான பிரச்சனையளும் இருக்கோ? :wub:

புத்தன்... கதை சொன்ன விதம் நன்று. முன்னர் மாதிரி எழுதுவது குறைசிட்டிங்கள்?

இதை விட பெரிய பிரச்சனகளும் வரும் எல்லாத்தையும் சமாளிக்க வேணும் ....

இவன் யம்மு சரியான் பிசி அதுதான் எழுத காலதாமதம்

எங்களுக்குள் பல ஆனந்திகள் இருக்கின்றார்கள் புத்தன்

ஆண்பாவம் பொல்லாதது.

சில பேர் திருந்தவே மாட்டார்கள் :):)

வாத்தியார்

........................

சிலதுகள் திருந்தமாட்டேன் என்று அடம்பிடிக்குதுகள்

:D:):D:D:wub::) :எங்களுக்கும் தெரியுமல்ல குறியீடு போட

நன்றிகள் செவ்வந்தி

இல்லை இந்த கதையில் சொன்ன அரைவாசி வீட்டில நடக்கிறது அது தான் சிரிச்சன் :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லப் போனால் இப்படி பல பெண்கள் உள்ளார்கள் எப்படிச் சொன்னாலும் விளங்காது...அருமையான கருவை வைத்து கதையாகப் படைத்த புத்தனுக்கு எனது பாராட்டுகள்.

நல்லகாலம்...எனக்குதெரிஞ்ச அரைகுறை போலந்து,ரசியா பாசையள் ஒண்டும் என்ரை கிழட்டுக்கு துப்பரவாய் ஒரு கோதாரியம் விளங்காது

ஹீஹீஹீ.... இதை சாட்டாக வைத்து நீங்கள் பாசை தெரிந்தவர்களை நித்தியானதிகளாக்கமல் இருந்தால் சரி தான்... :wub::lol::)

இணைப்பிற்கு நன்றி புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் என்ன சொல்லவாரார் என்றால் நன்றாகப் படித்தவர்களாக இருந்தாலும் சாமியார் என்றால் கண்ணை மூடி நம்புகிறார்கள். எங்கட தமிழ்ச் சமுதாயத்தில் கடவுள், சாமி, சோதிடம், மூட நம்பிக்கைகள் என்றால் யோசிக்காமல் நம்புகிறார்கள். இப்படியானவர்களைக் கல்யாணம் கட்டுபவர்களின் பாடு தான் திண்டாட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப்பார்த்தால் சாமிமாரை பிடித்துதான் மனிசிமாரிட்டடையும் ஏதாவது அலுவல் பெற வேனும் போல இருக்கு. :(

  • கருத்துக்கள உறவுகள்

இது பரவாயில்லை

இத்துடன் இவர் தப்பிக்கொண்டார்

எனக்கு தெரிந்த ஒருகுடும்பம். அளவான, ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள்

கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதுபோல் ஒரு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார்கள்.

அந்த பெண்ணின் தங்கை ஒரு மாத லீவில் மலேசியாவிலிருந்து இங்கு வந்து அந்த குடும்பத்துடன் நின்றுவிட்டு போனபின்....

தொடங்கியது அவர்களுக்குள் பேய் பிசாசு ஆட்டம்

கணவன் மேல் சாத்தான் நிற்பதாகவும் அது இப்படிச்செய்தால்தான் அவரை விடும் என்று நினைத்து புட்டு அவிக்க கொதிக்க வைத்த சுடுதண்ணியை அவரின் முகத்தில் அப்படியே ஒருநாள் ஊத்திவிட்டார்.

அன்றுடன் அந்த குடும்பம் பிரிந்துவிட்டது.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.