Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எதிராகக் கண்மூடித்தனமாக கணனித்தாக்குதல் நடாத்தும் நெடுக்காலபோவானுக்கு எதிராக பகிரங்க மடல் :lol:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு எதிராகக் கண்மூடித்தனமாக கணனித்தாக்குதல் நடாத்தும் நெடுக்காலபோவானுக்கு எதிராக பகிரங்க மடல் :lol:

யாழ் ஆண் தான். ஏன்னா சவால்களை வெற்றிகரமாக சந்திக்கிற குணம் ஆண்களிடமே அதிகம். பெண்கள் சவால்களை ஓர் அளவிற்கு மேல் சந்திக்க முடியாது இணையங்களையும் கைவிட்டு திருமணமாகி ஆண்களின் பின்னால் ஓடிய வரலாற்றையும் யாழ் எங்களுக்கு காட்டி இருக்கிறான். ^_^:(

நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் திரு நெடுக்காலபோவான் இக்கருத்தை வெளியட்டது எந்தகைய ஆதாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது? யாழ்களத்தில் நின்று நிலைத்து எழுதாவிட்டாலும் கூட எப்போதுமே அவதானித்தும் நிதானித்தும் தத்தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மீது நெடுக்காலபோவானின் கண்மூடித்தனமான கணனித்தாக்குதல் இது. பெண்களின் அமைதியையும் நிதானத்தையும் ஏளனமாகவும் அதே நேரம் ஆண்களின் வக்கணையை பலமென்றும் பக்கசார்பாக கருத்தைக் கொண்டுள்ள நெடுக்காலபோவான் தொடர்ந்து பெண்களை தாக்கி எழுதும் பாணியை கைவிடவேண்டும் இல்லாவிட்டால் விரும்பத்தகாத முறையில் பெண்களின் எதிர்வினையைச்சந்திக்க நேரிடும். அத்தோடு இதுவரை காலமும் பெண்களுக்கு எதிராக எழுதிய அனைத்து விடயங்களையும் மீளாய்வு செய்து தன்னுடைய திறமையான குறைபாடுகளை திருத்திக் கொள்ளுமாறு அனைத்துலக பெண்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

பெண்கள் பேரணி

யாழ் இணையம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பேரணி தலைவி என உங்கள் பேரைப் போட்டுக் கொள்ளுங்கள் சகாரா அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இதற்குள் பாய்ந்து வந்துள்ளதால்.....

இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை

முதலாவது பதிலே ஒற்றர்களுடையது

கவனம் சகாரா அக்கா

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னும் வேணாம் சகாரா அக்கா.. கனடா ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைத்துள்ள படைகளுக்கு பெண் ஜெனரல்களின் வழி காட்டலின் கீழ் பெண்களை மட்டும் படையணியாகக் கொண்டு.. தலிபான்களுக்கு எதிராக சண்டையிடச் சொல்லி சொல்லுங்க..! அது போதும்.. நான் ஏற்றுக் கொள்கிறேன்.. பெண்களால் அனைத்து வித சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்று. மனித சமத்துவம் பேசும்.. வெள்ளைக்காரனே அதற்கு இடமளிக்கவில்லையே ஏன்..???!

அதுமட்டுமன்றி.. யாழின் ஆசிர்வதிப்போடு உருவான தாயகப் பறவைகள் என்ற யாழ் களப் பெண்கள் நடத்திய இணையத்தளத்திற்கு என்னாச்சு... அது ஒரு சில வருடங்கள் கூட நின்று தாக்குப்பிடிக்க முடியாமல்.. இன்று இருந்த இடமின்றிப் போய்விட்டது. இதுதானா சவாலை எதிர்கொள்வதன் தார்ப்பரியம் அக்கா,..??! :lol:

எல்லா மனிதனுக்கும் பலம் பலவீனம் என்ற இரண்டும் உண்டு. அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்..! பலவீனத்தை இனங்கண்டு பலத்தை ஊட்ட வேண்டுமே அன்றி.. பலவீனமே இல்லை என்று இறுமாந்திருக்கக் கூடாது. சகாரா அக்கா. கூவிக் குதூகலிக்கும் குயிலுக்கு கூடு கட்டி வாழ்வது சவால்.. தெரியுமோ.! ^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவானிற்கு பெண்களின்பலவீனம்மட்டுமே தெரிகின்றதெனநினைக்கிறேன்.சவால்களை எதிர்கொள்வதில் பெண்களிற்கு நிகராக ஆண்களால் என்றுமே முடியாது.யாழில் பெண்பெயர்களில் வருபவர்களில் அதிகமானோர் வக்கிரபுத்திகொண்ட ஆண்களாகையால் நெடுக்கருக்கு இழக்காரமாக எழுதுவதற்கு வசதியாகிவிட்டது.

Edited by அரசி

வாங்கோ அரசியக்கா வாங்கோ.

அதென்னக்கா வக்கிரபுத்தி என்றால். அதென்ன ஆண்களுக்கு மட்டும் தானா சொந்தம்...??! ஏன் பெண்களில் வக்கிரபுத்தியுள்ள பெண்கள் இல்லையா... இதுதான் எனக்குப் பிடிக்காதது. பெண்களின் பக்கம் உள்ள அநியாயங்களை மறைச்சு அவையை சுத்தமாக ஆண்களால் சதா வேதனைப்படும் ஜென்மங்களாக சித்தரிக்கிறதுதான் எனக்குப் பிடிக்கிறதில்ல. அதுவும் இன்றி ஆண்கள் சதா வக்கிரமா அலைஞ்சுகிட்டு இருக்காங்க என்பது போல பெண்களை சிந்திக்கத் தூண்டுறாங்க சில பெண் எழுத்தாளர்கள். இதனை நான் வன்மையாக எதிர்கிறேன்.

நியாயமா இரு பக்கமும் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி இரு பகுதிக்கும் தேவையான பரிகாரங்களை சொல்லுங்க.. நிச்சயம் நான் வரவேற்பேன். அதைவிடுத்து துன்பம் எல்லாம் பெண்களுக்கே.. ஆண்கள் துன்பப்படுத்தும் ஜென்மங்கள் என்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி பெண்கள் இந்த உலகில் சமூக உரிமைகளை தக்க வைக்க முடியாது. அதுமட்டும் நிச்சயம்..!

இதை நீங்க உணரல்லைன்னா.. இன்னும் 200 ஆண்டுகளுக்கும் இப்படியே தான் எழுதிக் கொண்டிருப்பீர்கள். :lol:^_^

நெடுக்ஸ் அரசி சொன்னதில் என்ன தப்பு.யாராவது ஒரு பெண் ஆணின் புனைபெயரில் ஒழிந்ததுண்டா? பல ஆண்கள் இன்னமும் பெண்களின் புனை பெயரிலேயே வலம் வருகின்றார்கள்.உடல் ரீதியாக இயற்கை கொடுத்ததை வைத்து பலம் பலவீனம் அளவிடமுடியாது.

உலகம் பலமுள்ளவன் பக்கம் தான்.அதனாலேயே பல விடயங்களில் ஆண் ,பெண் என்ற பாகு பாடு தொடர்கின்றது.மனத்தளவில் ஆணைவிட பெண் பலமானவள் என்பது தான் உண்மை.உதாரணங்கள் பல எழுதிக்கொண்டே போகலாம்.

கலியாணம் என்று ஒன்று கட்டினால் நீரும் அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்.பின் யாழ் களத்தில் வருவீரோ தெரியாது.யாழில் மினக்கெடும் நேரம் இன்னொரு வேலை செய்தால் விரைவில் மோட்கேஜை காட்டி முடித்த்து விடலாம் என்று அவ சொல்ல நீரும் அது சரிதான் என்று குளிருக்குள் பாவம் மறுப்பேதும் சொல்லாமல் ஜக்கெட்டை போடும் காட்சியை பார்க்க ஆசையாக இருக்கின்றது.

பெண்களும் ஆண்கள் புனை பெயரைப் பாவிக்கிறார்கள்.. தாராளமாக.. என்பதும் உண்மை.

மனிதளவில் இவர் பலம் பலவீனம் என்பது தனிமனித ஆளுமையைப் பொறுத்தமைகிறது. பெண் மனதளவில் எப்போதும் பலமானவள் என்பது கற்பனை... யதார்த்ததிற்கு அப்பால் பெண்ணை நிறுத்தி வைத்து அவளைப் பலவீனப்படுத்துவது இவ்வாறான ஏட்டு நிலை பெருமைப்படுத்தல்களே...!

எனக்கு சுயமா சிந்திக்கத் தெரியும். ஒருவேளை கலியாணம் கட்டினால்.. துணைவி சொல்கிறா என்பதற்காக எல்லாவற்றையும் செய்யனும் என்று அர்த்தம் கிடையாது. அவர் சொல்வதில் நியாயங்கள் உண்மைகள் பொதிந்திருந்தால் அந்த ஆலோசனை வரவேற்கப்படலாம்.. செயற்படுத்தப்படலாம் அது தவறல்ல. துணைவி சொல்கிறார் என்பதற்காக.. எல்லாத்திற்கும் பூம் பூம் மாடு போல் தலையாட்ட எனக்கு சுயபுத்தி இல்லாமல் இல்லை..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திற்கும் பூம் பூம் மாடு போல் தலையாட்ட எனக்கு சுயபுத்தி இல்லாமல் இல்லை..!

யாருக்குத்தான் சுயபுத்தி இல்லை, எல்லோருக்கும் இருக்கு. ஆனால் எங்க பாவிக்க முடியுது!

எப்படியோ பெண்களைப் பேரணியாய் சேர வைச்சிட்டியல், இனியென்ன உங்கள் கருத்தெல்லாம் சகாராவில பாய்ந்த நைல் நதியாகாமப் பார்த்துக் கொள்ளுங்கோ! :lol:

SO2 புகைக்கஞ்சா நெஞ்சன் தலைவர் நெடுக்காலபோவான் இவ் விவாதத்தில் வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்கள் கருத்துக்கள் அந்த நயாகராவையே விஞ்சட்டும். :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

--------

பெண்கள் பேரணி

யாழ் இணையம்.

எங்கள் ஆதரவு என்றும் பெண்கள் பேரணிக்கு உண்டு.

ஏதாவது உதவி தேவை என்றால்.......கூச்சப் படாமல் கேட்கவும்..

யாழ் இளைஞர் சங்கம்.

யாழ் இணையம்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் ஆதரவு என்றும் பெண்கள் பேரணிக்கு உண்டு.

ஏதாவது உதவி தேவை என்றால்.......கூச்சப் படாமல் கேட்கவும்..

யாழ் இளைஞர் சங்கம்.

யாழ் இணையம்.

.

உங்கட சங்கத்தில எப்ப அரிசி, பருப்பு, மண்ணெண்ண போடுவீங்கள் என்று சொன்னால் வசதியாக இருக்கும் :lol:^_^:(

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஆதரவு என்றும் பெண்கள் பேரணிக்கு உண்டு.

ஏதாவது உதவி தேவை என்றால்.......கூச்சப் படாமல் கேட்கவும்..

யாழ் இளைஞர் சங்கம்.

யாழ் இணையம்.

.

சொல்லவேயில்லை...யாழ் இளைஞர் சங்கத்தில் ..என்னையும் அதில் உறுப்பினராக இணைப்பீங்களா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இளைஞர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் சந்தாப்பணத்தை உடன் அனுப்பி வைக்கவும்.

பொருளாளர்

யாழ் இளைஞர் சங்கம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மொழிக்கு சங்கம் வைத்து தமிழன் தமிழ் வளர்த்தான்.. பிறகு சங்கக்கடை வைச்சு.. கொள்ளையடிச்சான்.. இப்ப சங்கங்கள் அமைச்சு.. மோசடி பண்ணுறான். இதுதான் தமிழனின் "சங்க" வரலாறு..! :lol::D

. ஒருவேளை கலியாணம் கட்டினால்.. துணைவி சொல்கிறா என்பதற்காக எல்லாவற்றையும் செய்யனும் என்று அர்த்தம் கிடையாது.

ஒருதர் சொல்லிட்டு இருந்தார் தான் கலியாணமே பண்ணப்போறதில்லை... தனிமரமாக நிற்க்கப்போகிறேன் ... இப்ப எழுத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறதே... நல்லது நடந்தால் சரி நெடுக்கு அண்ணா... வாழ்த்துக்கள் நெடுக் அண்ணா..... :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி இதற்குள் பாய்ந்து வந்துள்ளதால்.....

இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை

முதலாவது பதிலே ஒற்றர்களுடையது

கவனம் சகாரா அக்கா

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒற்றர் படையா?

ஏன் ரதி நீங்க சொல்லவேயில்லையே.. :lol:

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானிற்கு பெண்களின்பலவீனம்மட்டுமே தெரிகின்றதெனநினைக்கிறேன்.சவால்களை எதிர்கொள்வதில் பெண்களிற்கு நிகராக ஆண்களால் என்றுமே முடியாது.யாழில் பெண்பெயர்களில் வருபவர்களில் அதிகமானோர் வக்கிரபுத்திகொண்ட ஆண்களாகையால் நெடுக்கருக்கு இழக்காரமாக எழுதுவதற்கு வசதியாகிவிட்டது.

நெடுக்ஸ் அரசி சொன்னதில் என்ன தப்பு.யாராவது ஒரு பெண் ஆணின் புனைபெயரில் ஒழிந்ததுண்டா? பல ஆண்கள் இன்னமும் பெண்களின் புனை பெயரிலேயே வலம் வருகின்றார்கள்.உடல் ரீதியாக இயற்கை கொடுத்ததை வைத்து பலம் பலவீனம் அளவிடமுடியாது.

உலகம் பலமுள்ளவன் பக்கம் தான்.அதனாலேயே பல விடயங்களில் ஆண் ,பெண் என்ற பாகு பாடு தொடர்கின்றது.மனத்தளவில் ஆணைவிட பெண் பலமானவள் என்பது தான் உண்மை.உதாரணங்கள் பல எழுதிக்கொண்டே போகலாம்.

கலியாணம் என்று ஒன்று கட்டினால் நீரும் அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்.பின் யாழ் களத்தில் வருவீரோ தெரியாது.யாழில் மினக்கெடும் நேரம் இன்னொரு வேலை செய்தால் விரைவில் மோட்கேஜை காட்டி முடித்த்து விடலாம் என்று அவ சொல்ல நீரும் அது சரிதான் என்று குளிருக்குள் பாவம் மறுப்பேதும் சொல்லாமல் ஜக்கெட்டை போடும் காட்சியை பார்க்க ஆசையாக இருக்கின்றது.

எல்லாத்திற்கும் பூம் பூம் மாடு போல் தலையாட்ட எனக்கு சுயபுத்தி இல்லாமல் இல்லை..!

யாருக்குத்தான் சுயபுத்தி இல்லை, எல்லோருக்கும் இருக்கு. ஆனால் எங்க பாவிக்க முடியுது!

எப்படியோ பெண்களைப் பேரணியாய் சேர வைச்சிட்டியல், இனியென்ன உங்கள் கருத்தெல்லாம் சகாராவில பாய்ந்த நைல் நதியாகாமப் பார்த்துக் கொள்ளுங்கோ! :D

SO2 புகைக்கஞ்சா நெஞ்சன் தலைவர் நெடுக்காலபோவான் இவ் விவாதத்தில் வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்கள் கருத்துக்கள் அந்த நயாகராவையே விஞ்சட்டும். :D

எங்கள் ஆதரவு என்றும் பெண்கள் பேரணிக்கு உண்டு.

ஏதாவது உதவி தேவை என்றால்.......கூச்சப் படாமல் கேட்கவும்..

யாழ் இளைஞர் சங்கம்.

யாழ் இணையம்.

.

சொல்லவேயில்லை...யாழ் இளைஞர் சங்கத்தில் ..என்னையும் அதில் உறுப்பினராக இணைப்பீங்களா?? :D

ஒருதர் சொல்லிட்டு இருந்தார் தான் கலியாணமே பண்ணப்போறதில்லை... தனிமரமாக நிற்க்கப்போகிறேன் ... இப்ப எழுத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறதே... நல்லது நடந்தால் சரி நெடுக்கு அண்ணா... வாழ்த்துக்கள் நெடுக் அண்ணா..... :D :D

என்ன நெடுக்கு :D

சகுனமே சரியில்லையே.....

தொடரவா? விட்டுடவா? :lol:

ஒருவேளை (suppose) செய்ய வேண்டி வந்திட்டா என்று தானே சொல்லி இருக்கிறன் சுஜி. இன்னொருவர் நான் எடுக்கும் ஒரு முடிவால் மகிழ்ச்சி அடைய முடியும் என்றால் அவருக்காக அந்த முடிவை எடுக்கலாம் தானே. ஒரு சக மனிதனை மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள் கொண்டு வந்த திருப்தி இருக்கும் தானே. இது என்னை நியாயப்படுத்தவல்ல.. நியாயத்தை நோக்கி சொல்கிறேன். தனிய இருந்தாலும் சமூகத்துக்குத்தானே பணி செய்வேன். :D :D

என்ன நெடுக்கு :D

சகுனமே சரியில்லையே.....

தொடரவா? விட்டுடவா? :lol:

தாராளமாக அக்கா. நியாயத்தை பேச நான் எப்போதும் எதற்கும் அஞ்ச மாட்டேன்..! ஆனால் இது நகைச்சுவைப் பகுதி என்பதால் யோசிக்கிறேன். தீவிரமாக விவாதித்தால் நகைச்சுவை இன்றி கருத்துக் கோப தாபங்கள் தான் மிச்சலாம். அது தேவையா என்று யோசிக்கிறேன். :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

[என்ன நெடுக்கு :D

சகுனமே சரியில்லையே.....

தொடரவா? விட்டுடவா? :D]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கின் இந்தக் கருத்தை ஏற்றக் கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

இலக்கியங்கள், திரைப்படங்கள், நாடகங்கள் காட்டும் பெண்மையும் நடைமுறை ஏதார்த்தமும் வெவ்வேறாகவே உள்ளது.

தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பலவீனாமான பெண்களைத்தான் பார்க்க முடிகிறது.

விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குகளால் விதிகள் அவ்வளவு எளிதில் மீறப்படுவதில்லை.

குடும்பங்களை எடுத்துக் கொண்டால் எத்தனையொ குடும்பங்கள் பிளவு பட்டதற்கு நான் அறிந்தவரை எந்த ஆண்களுமே காரணமாக இருக்கவில்லை.

அறிவியல் உண்மைகளையோ நடை முறை எதார்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவமும் இருப்பதில்லை. இன்றைய பெண்களுக்கு பெண் விடுதலை என்றால் என்ன என்றே தெரியவில்லை.

சமத்துவத்தையும் பின் நவீனத்துவத்தையும் போட்டுக் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனையும் பெண்களே ஏராளம்.

இப்போதெல்லாம் தீவிரப் பெண்ணியம் என்ற சொல்லாடல் ஊடகங்களில் அடிபடுகிறது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் பெண்ணியம் முற்போக்கானதாம் பெண்மை பிற்போக்கானதாம்!!!! அட ஞானசூனியமே!

தமிழ் இலக்கணப்படி இரண்டுமே ஒரே பொருளுடைய சொற்கள்தான்!!! எந்த வேறுபாடுமே இல்லை.

நான் ஆணாதிக்கத்திற்கு வாக்காலத்து வாங்கவில்லை ஆதிக்க வெறி எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்க வேண்டியதுதான் பெண்களுக்கெதிரானான கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதும் உண்மைதான் ஆனால் நான் இங்கு வலியுறுத்துவது இவை தொடர்பன தெளிவான அறிவு பெண்களுக்கு இல்லை.

பெண்களுக்காக போராடியவர்கள் அனைவருமே ஆண்கள்தான். இந்த உண்மை தெரியாமல் கூச்சல் போடும் அரைவேக்காட்டுத்தனத்தை என்னவென்பது??

பெண்விடுதலை பேசும் தமிழ்ப் பெண்கள், பெண்களை ஈவிரக்கம் இன்றி கூறு போடும் இந்து மதத்தின் மீது கை வைக்கவே அவர்களுக்கு துணிவில்லை.

சரி அரசியலை எடுப்போம் நன் அறிந்தவரை, அத்தனை பெண் அரசியல்வாதிகளும் மோசமானவர்கள்தான்

இந்திரா காந்தி

சிறிமாவோ பண்டாரநாயக்கா

மார்கிரட் தச்சர்

ஜெயலலிதா

ஈசாபெல் பெறன் (அர்ஜென்டினா)

என இவர்களில் பட்டியல் நீளுகின்றன. ஓரு ஆபிரகாம் லிங்கனையோ, அறிஞர் அண்ணாவையோ இந்தப் பட்டியலில் தேட முடியாது. அனைவருமே அதிகாரத்தை துஷ்பிரயோகித்தவர்களே!.

அன்னை தெரிசா, நைற்றிங்கேல் போன்றவர்கள் அன்பு சார்ந்த துறையை தேர்ந்தெடுத்ததால் அவர்கள் பெரு மதிப்புக்குரியவர்களானார்கள். அரசியல் போன்ற துறைகளில், பெண்கள் வெறும் சுழியம் என்பதை வேறு வழியில்லாமல் ஒத்துகொள்ள வேண்டித்தான் உள்ளது

பெண்மை அழகானதுதான், அந்த அழகியலைத் தாண்டிய எதார்த்தம் வேறுவிதமாக இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!!!

புத்திசாலித்தனம், சகிப்புத்தன்மை, வீரம், விவேகம், துணிவு இத்தியாதி இத்தியாதி போன்றவற்றை சாத்தனாரின் மணிமேகலை முதற்கொண்டு ராதிகாவின் நாடகங்கள் வரை கலைப் படைப்புக்களில் மட்டும்தான் ரசிக்க முடிகிறது!!!!!!!!!!!!!

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அக்காக்களுடன் நெடுக்ஸ் ஒற்றைக்கு ஒற்றையாக நின்றுவிட்டு பெண்களின் உடல் வலிமை பற்றி பேசுவதிலேயே உண்மையிருக்கும்.

post-1409-037866400 1277501187_thumb.jpg

post-1409-072241700 1277501198_thumb.jpg

post-1409-074930900 1277501209_thumb.gif

post-1409-092046200 1277501226_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அக்காக்களுடன் நெடுக்ஸ் ஒற்றைக்கு ஒற்றையாக நின்றுவிட்டு பெண்களின் உடல் வலிமை பற்றி பேசுவதிலேயே உண்மையிருக்கும்.

உவைக்கு எப்படி பொடி பிள்ட் ஆனது தெரியுமா... ஆண் ஓமோனை இவர்களுக்குள் செலுத்தி. நானும் பொடியை பிள்ட் பண்ணிட்டு.. இவையை என்ன இவையைப் போல 100 பேரை சமாளிப்பன்..! இதெல்லாம் சமூகத்திற்கு உதவாது.

இன்னும் சிங்களவன்.. எமது பெண்களை கிள்ளுக்கீரையாய் பாவித்து சீரழிக்கிறான்.. தமிழ் பெண்களை விபச்சாரிகளாக்கிக் கொண்டிருக்கிறான்.. நாங்கள் இப்படி படம் போட்டு வாய் வீரம் பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். சிங்களவன் செய்யும் கொடுமைகளை இந்த பொடி பிள்ட் பெண்கள் போய் தடுத்து நிறுத்துவார்களா..??! அல்லது தமிழ் பெண்கள் பொடி பில்டர்களாகி சிங்களவனோடு மோதி தமது சகோதரிகளை காக்கத்தான் முடியுமா...???! :lol::D

இது ஒரு ஆளமான கருத்தாடல்.........

மேலே உள்ள எனது கருத்து நகைச்சுவையானதே தவிர அதில் என்து பக்கசார்பு நிலை ஏதுமில்லை.

உண்மையான கருத்தாடல் என்பது நாம் வாதாடி வென்றுவிடலாம் என்பதற்கா கீழ்தரமான அல்லது சிந்திக்க முன்பே கருத்துகளை முன்வைப்பதால் வருவதல்ல. ஒரு வக்குவமான கருத்தாடலினால் வர கூடியதே. உங்களுடைய கருத்து சுதந்திரம் உங்களுடையது...... அது பிறரை மனமுடைய செய்தாதிருக்கும் வரை.

மற்றவர்களுடைய கருத்துகளுக்கு நாம் எந்நதளவில் மதிப்பு கொடுக்கிறோம் என்பதை பொறுத்தே எமது கருத்துக்கான மதிப்புகளை கணக்கிடலாம். அதற்காக எல்லா வாந்திகளையும் கருத்துக்கள் என்று எடுத்துவிடவும் முடியாது.

ஒரு பாலினத்தவரையோ ஒரு குறிப்பிட்ட இனத்தவரையோ ஒரு பொது கருத்துகளத்தில் கலங்கபடுத்தி எழுதுவதென்பது. தற்போதுள்ள சாதாரண மனிதஉரிமை சட்டங்களுக்கு அப்பாற்பட்டது.

பலங்கள் பலவீனங்கள் பற்றிய கருத்தாடலை ஆரோக்கியமான அடித்தளங்களில் இருந்து முன்னெடுப்பதால் நன்மைகளே அதிகம். அதாவது பலவீனமானவர்கள் அதை புரிந்து தங்களை ஏதாவது ஒரு தயார் நிலையில் துரிதபடுத்த ஏதுவாக்கும் என்பது எனது தனிப்ட்ட கண்ணோட்டம்.

ஆணாதிக்கத்தால் பெண்கள் பாதிக்க படுகின்றார்கள் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.............

ஆனால் ஆணாதிக்கத்தால் அதிகம் பாதிக்கபடுவது மேலைநாட்டு பெண்களே என்பதை சுதந்திரம் என்ற வெற்று போர்வைக்குள் மாட்டி தவிக்கும் மேலை நாட்டு பெண்களின் நிலைகளை கீழைநாட்ட பெண்கள் புரிந்து கொள்வதென்பது அதே தவறுக்குள் அவர்களை தள்ளாதிருக்கும். மேலை நாட்டில் சுதந்திரம் என்று சொல்ல கூடியதெல்லாம் ஆண்களால் வேண்டுமென்றே பெண்களுக்குள் புகுத்தபட்டவை.

எமக்கு ஆடை சுதந்திரம் வேண்மு; என்று 1960களில் அமெரிக்காவில் கொடிபிடித்த பெண்களுக்கு பின்புலத்தில் ஆண்களே இருந்தார்கள். தற்போதைய காலத்தில் கூட ஆடை வடிவமைப்பாளர்களாக அதிகம் ஆண்களே இருக்கின்றார்கள். எப்படியான ஆடைகளை பெண்கள் உடுதி;தினால் தமது ஆசைகளை நிவர்த்தி செய்யலாம் என்பதில் தொடங்கி.............. மது அருந்துதல் வீட்டை விட்டு வெளியேறல் என்று எல்லா சுதந்திரமும்................... எந்த இடையூறுமில்லாது பெண்களை அடைய ஆண்கள் வகுத்த திட்டங்கள். சுதந்திரம் என்ற போர்வையை போர்தியதால் இலகுவாக மேலைநாட்டு பெண்கள் இழுத்து போhத்திவிட்டார்கள்.

மேலே உள்ள கருத்தை நெடுக்காலபோவான் மீண்டும் ஒருமுறை வாசிப்பது நல்லது...........

இத்தனை தியாகங்களை புரிந்து வெடியாய் வெடித்த பெண்போராளிகள் புண்பட்டிருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் திரும்பமும் முயற்சிக்கவும். என்னை வாதாடி வெல்வதாலோ அதில் அப்படி ஒன்றும் இல்லை என்று ஏதாவது இடைசெருகல் செருகுவதாலோ எழுதியதை இனி அழிக்க முடியாது.

ஆக்கபூhவமான கருத்தாடல்கள் எங்களுக்கு பல தெரியாத விடயங்களை சொல்லிதரும் சொல்லி தருகின்றன.

இளங்கோ எழுதியதுபோல்............. இந்துமதம் சுமத்திய சுமைகளை மதம் என்ற பெயரில் சுமந்துகொண்டு. பெண்விடுதலை பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை. கடவுள் ஒருவர் இருந்தால் நாங்கள் எல்லோருமே மன்தர்களாவே இருக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.