Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Z - War. ( தமிழீழத்தின் உலகைப் பழிவாங்கும் போர்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 1

2009 மே திங்கள் 18ம் நாள்.. தமிழீழத்தின்.. இறுதிப் போர் முனையான முள்ளிவாய்க்காலின் இறுதி மூச்சடக்க எதிரிகளின் போர்க்கலங்கள் தீவிரமாக முழங்கிக் கொண்டிருந்தன.

இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர்களும் டோராக்களும் சீனத் தயாரிப்பு F-7 களும் ரஸ்சிய தயாரிப்பு உலங்குவானூர்திகளும் குண்டுகளைக் கொட்டிக் கொண்டிருக்க அமெரிக்க தயாரிப்பு செய்மதிகள் முள்ளிவாய்க்காலில் புலிப் போராளிகளின் நகர்வுகளை துல்லியமாகக் கண்காணித்து குண்டுகளுக்கு இலக்குகளைக் காட்டிக் கொண்டிருந்தன. கூடவே இந்திய ராங்கிகளும் பாகிஸ்தானிய பல்குழல் எறிகணைகளும் பள்ளிகள்.. வைத்தியசாலைகள்.. மக்கள் கூடாரங்கள் என்று எங்கும் குண்டுகளைக் கொட்டி அப்பாவித் தமிழ் மக்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன.

boat-1.jpg

இத்தனை அவலங்களையும் கண்ட Z தலைமையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கிறான். ஆனால் தொடர்புகளைப் பேண முடியவில்லை. தானே ஒரு தீர்க்கமான முடிவெடுக்க தூண்டப்படும் Z ஒரு உறுதியான முடிவோடு கிளம்புகிறான்.

ord_lrlap_firing_from_ddg1000_conce.jpg

முள்ளிவாய்க்கால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த.. அந்த இறுதி stealth கரும்புலிப் படகேறி இந்து சமுத்திரத்தில் சீறிப் பாய்ந்து போனான் Z. அவனையும் படகையும் எப்படியோ நவீன ரடார்களைக் கொண்டு துப்பறிந்து கொண்ட இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கை டோராக்களை விளிப்பூட்டி தகவல் கொடுக்க.. டோராக்களும் இந்திய கடற்படையின் நவீன கலங்களும் Z இன் படகைக் குறிவைத்து நவீன ஏவுகணைகளை வீசி தாக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் Z மின்னல் வேகத்தில் சூட்டெல்லையைக் கடந்து இந்து சமுத்திரத்தின் சர்வதேச எல்லைக்குள் நுழைந்து விடுகிறான்.

pentagon-to-address-climate-change.jpg

Z சர்வதேச கடற் பாதுகாப்பு வலயத்தை உடைத்து தப்பிச் சென்ற செய்தி அமெரிக்க பென்ரனுக்கு இந்திய உளவுத்தரப்பால் பரபரப்பாக வழங்கப்படுகிறது.

உடனே அமெரிக்க உளவுச் செய்மதிகள் இந்து சமுத்திரம் நோக்கி தமது கழுகுப் பார்வைகளை செலுத்த தூண்டப்படுகின்றன. இருந்தாலும் Z சென்ற படகினை அவற்றால் பின் தொடர முடியவில்லை.

ஆனாலும் தப்பிச் சென்ற படகுக்கு என்னானது என்ற தகவலைப் பெற அமெரிக்காவை தெற்கு ஆசிய பிராந்திய வல்லரசான இந்தியா நச்சரிச்சுக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் தேடுதல் போக்கு இந்தியாவை திருப்திப்படுத்த தவறியதாலும் சந்தேகத்துக்குரியதாக இருந்ததாலும்.. அப்படகில் மர்ம வெடிபொருள் அடங்கி இருப்பதால் அது அணுகுண்டாகக் கூட இருக்கலாம் என்ற ஒரு பீதியையும் இந்தியா அமெரிக்காவிடம் புதிதாகக் கிளப்பி விட்டது. அதனால் கொஞ்சம் அருண்டு போய் உறக்கம் தொலைத்த அமெரிக்க பென்ரகன் தனது வீரத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக இதனைக் கருதி.. அராபிக் கடலில் ஈராக் போரில் பங்கெடுத்துக் கொண்டிருந்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை அனைத்தையும் அவற்றின் வளங்களையும் இந்து சமுத்திரம் நோக்கித் திருப்பி.. Z இன் படகைக் கண்டுபிடிக்க சல்லடை போட்டு தேடுதல் நடத்த அமெரிக்க கடற்படையைக் கேட்டுக் கொண்டது. அமெரிக்க கடற்படையும் தீவிர கண்காணிப்பு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியது.

usnavyshipso.jpg

தேடுதல்கள் மணி நேரங்கள் தொடர்ந்த நிலையில்.. இந்து சமுத்திரத்தின் மத்தியில்.. அந்தமானுக்கு தென்மேற்கே 400 கடல் மைல் தொலைவில்.... எழுந்த அந்த வெடியோசை பெரும் பூகம்ப சுனாமி அதிர்வாக அமெரிக்க கடற்படை கலங்களில் பதியப்பட்டன.

umbrella.jpg

அதனால் அந்த வெடிப்போசைக்கும் காரணம் என்ன என்ற தேடலை செய்ய வேண்டிய நிலைக்கு வலிந்து தள்ளப்பட்ட பென்ரகன், அமெரிக்க கடற்படையின் உதவியுடன் அது Z இன் படகு வேகமாகச் சென்றதால் அது ராட்சத கடல் அலைகளில் மோதி வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட வெடிப்பின் ஓசை அதிர்வு என்று ஒரு கதையைப் புனைந்து கட்டி இந்தியாவிடம் அறிக்கையாகக் கையளித்து விட்டது. அதனால் இந்தியாவும் சாந்தமாகி மல்லாந்து படுத்துக் கொண்டது.

இருந்தாலும் பென்ரகனுக்கு அது உண்மை இல்லை என்று தெரியும். ஆதலால் அந்த வெடியோசைக்குப் பின் பென்ரகன் இன்னும் இன்னும் பரபரப்பானதுடன் Z இன் படகை தேடும் பணியுடன் வெடியோசைக்கான காரணத்தை கண்டறிவதையும் ரகசியமாக்கி தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் கொண்டது. அதற்காக பென்ரகன் முழு வீச்சில் மத்திய கிழக்கில் இருந்த தனது முழு இராணுவ மற்றும் உளவுத்துறை வளங்களையும் இந்து சமுத்திரம் நோக்கி திருப்பிவிட்டது.

அந்த வெடியோசைக்கும் Z இன் படகுக்கும் சம்பந்தம் இருந்ததா.. Z இன் படகுக்கு உண்மையில் நேர்ந்தது என்ன... அமெரிக்க பென்ரகன் Z ஐயும் படகையும் கைப்பற்றியதா.. அல்லது கோட்டை விட்டதா.. இவற்றுக்கான விடைகளுடன்.. தமிழீழத்தின் உலகைப் பழிவாங்கும் Z- WAR அடுத்த வாரமும் இதே நாள் தொடரும்...!

Edited by nedukkalapoovan

  • Replies 71
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமாவும் அதேசமயத்தில் கிளுகிளுப்பாவும் இருக்கு..! உண்மைக்கதையை ஒட்டி கற்பனைகலந்து எழுதப்பட்டதா அல்லது கற்பனையா? :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமாவும் அதேசமயத்தில் கிளுகிளுப்பாவும் இருக்கு..! உண்மைக்கதையை ஒட்டி கற்பனைகலந்து எழுதப்பட்டதா அல்லது கற்பனையா? :lol::lol:

தற்போதைய நிலையில் உண்மை கலந்த கற்பனை ஆக உள்ளது.

அமெரிக்காவின் வீர தீரம் எல்லாம் ஆங்கில மொழி மூல படைப்புகளாக கொலிவூட் சினிமா தொடங்கி சிறுவர்கள் விளையாடும் கேம்ஸ் வரை வியாபித்து நிற்கிறது. அதையே எமது சந்ததிகளும் விளையாடி மகிழ்வது மட்டுமன்றி அமெரிக்க சித்தாந்தங்களை உள்வாங்கச் செய்யப்படுகின்றனர்.

நாமும் இப்படியான படைப்புக்களூடு எமக்கான வரலாற்றை பதிவு செய்ய முற்படுவதோடு.. சிறுவர்களின் விளையாடும்... பார்க்கும்.. கேம்ஸை கூட இந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தமிழீழத்தின் சித்தாந்தமும்.. உலகில் உணரப்படும். ஒட்டுமொத்த உலகால் இல்லை என்றாலும் எம்மவர்களாவது உணரச் செய்யப்படுவர்.

இது ஒரு ஆரம்ப முயற்சி. பல தவறுகள்.. திருத்தங்களுக்கு இடமிருக்கும். எனவே அவற்றையும் சுட்டிக்காட்டுங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தொடருங்கள் ஆனால் அதுக்குமுன்பு இக்கதைக்குக் காப்பீடு செய்யவும் இல்லையேல் கோடமபாக்கமோ அன்றேல் வேறுதனிநபர்களோ லவட்டிருவினம். பகிடிக்குச் சொல்லேல்ல உண்மையாத்தான் சொல்லுறன். மேலும் இன்னமொரு விடையம் வளரும் தமிழ் சமுதாயம் அதுவம் புலம்பொயர் தமிழர்கள் எதிர்காலத்தில் நல்ல பல படைப்புக்களை தருவார்கள் அதற்கான கதைக்கருக்களை நாம்தான் தயாரித்து எமது சந்ததிகளுக்காக பாதுகாத்து வைத்தல்வேண்டும். சிறந்த படைப்பாக வெளியிடுவது அவர்களது கடமை. இது நிச்சயம் நடக்கும் ஆகவே ஒன்றுக்கு இரண்டுதடவை யோசித்து கதையைத் தொடரவும் இல்லையோல் கதையை முழுமைப்படுத்தி அடுத்த சந்ததிக்காகப் பத்திரப்படுத்தவும். மறபடியும் சொல்கிறேன் எமது இனம் வெல்லும்.

பேசாமல் சிட்டுக்குருவிகள் தளத்தில் பதிந்துவிட்டு இங்கே இணைப்பைக் கொடுக்கலாமே..! காப்புறுதிக்கும் காப்புறுதியா இருக்கும்..! :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தொடருங்கள் ஆனால் அதுக்குமுன்பு இக்கதைக்குக் காப்பீடு செய்யவும் இல்லையேல் கோடமபாக்கமோ அன்றேல் வேறுதனிநபர்களோ லவட்டிருவினம். பகிடிக்குச் சொல்லேல்ல உண்மையாத்தான் சொல்லுறன். மேலும் இன்னமொரு விடையம் வளரும் தமிழ் சமுதாயம் அதுவம் புலம்பொயர் தமிழர்கள் எதிர்காலத்தில் நல்ல பல படைப்புக்களை தருவார்கள் அதற்கான கதைக்கருக்களை நாம்தான் தயாரித்து எமது சந்ததிகளுக்காக பாதுகாத்து வைத்தல்வேண்டும். சிறந்த படைப்பாக வெளியிடுவது அவர்களது கடமை. இது நிச்சயம் நடக்கும் ஆகவே ஒன்றுக்கு இரண்டுதடவை யோசித்து கதையைத் தொடரவும் இல்லையோல் கதையை முழுமைப்படுத்தி அடுத்த சந்ததிக்காகப் பத்திரப்படுத்தவும். மறபடியும் சொல்கிறேன் எமது இனம் வெல்லும்.

உங்கள் ஆர்வத்திற்கும் உற்சாகம் ஊட்டலுக்கும் நன்றி.

இதனை யாழில் எமது தேசத்திற்காக எழுதுகிறேன். இதனை யாழ் தவிர்ந்த வேறு எங்கும் பிரசுரிக்கமாட்டேன். காப்புரிமை யாழுக்குரியது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குசாமி !

கதை நல்லகதை

நல்லது நெடுக்கர் தொடருங்கள். ஒன்றுமே இல்லாமல் இந்தியனும் அமெரிக்கனும் இதைத்தான் செய்து எங்களை பேய்க்காட்டிநார்கள். இனிவரும் காலம் எமதாயிருககட்டும்.

பேன்தென்ன.. நெடுக்கு தூல் கிளப்புது.. தொடரட்டும் சகாசத் தொடர்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

நல்ல ஒரு பதிவை ஆரம்பித்துள்ள நெடுக்ஸ்சிற்கு நன்றி.

13.gif

அவசரப்பட்டு இந்த பதிவை முடிவுக்கு கொண்டுவராமல்........

ஈழப் போரின் இறுதிக்கட்டங்களின் போது....

இந்தியாவின் மொள்ளமாரித்தனம், தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் கோமாளித்தனம், ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகம், உலக நாடுகளின் கபட நாடகம் போன்றவற்ரையும் உங்கள் பதிவு மூலம் எதிர்பார்க்கின்றேன்.

.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நெடுக்ஸ்..

கவனமாக எழுதுங்கள்

எம் விரலே எம்மை குத்திவிடும் ஆபத்தான பயணம்

  • கருத்துக்கள உறவுகள்

அடடா கதை எடுத்த எடுப்பிலேயே ரொப் கியரில போகுது.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது சுவாரசியமாகவும் உண்மையை உணரத் தலைப்படும்போது வேதனையாகவும் இருக்கின்றது.

உலக வல்லாதிக்கங்களின் உண்மைமுகம் கொடியதே.

உங்கள் ஆக்கம் சிறப்படைய வாழ்த்துக்கள்

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 2

usscoleddg67departs.jpg

அந்தமானுக்கு அப்பால் நடந்த அந்த வெடி அதிர்வுக்கான காரணத்தை தேடிப் போன அமெரிக்க கடற்படைக்கு அதிர்ச்சித் தகவலே கிடைத்தது. அங்கு வெடிப்புக்கு இலக்காகி இருந்தது அமெரிக்க போர் கப்பல் ஒன்றாகும் என்ற தகவல் பென்ரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் பென்ரகன் தூக்கமின்றியே போனது. அதுவும் அமெரிக்காவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வகைக்குள் அடங்கும் ஒரு அணு ஆயுதம் தாங்கியச் செல்லக் கூடிய போர்க்கப்பலே வெடி விபத்துக்கு உள்ளாகி இருந்தது... அதனால் குறித்த சம்பவத்தை வெகு ரகசியமாக வெளியில் வராத செய்தியாக ஆக்கிக் கொண்டு கப்பல் வெடிப்புக்கான காரணத்தை தேடத் தொடங்கியது அமெரிக்க பாதுகாப்புத்துறை. குறித்த கப்பலை மீட்டு ஆய்வுப்பணிகளை உடனேயே ஆரம்பிக்க உத்தரவு பிறப்பித்தது வெள்ளை மாளிகை.

MV_Blue_Marlin_carrying_USS_Cole.jpg

அதேவேளை எந்த முகாந்தரமும் இன்றி.. தொழில்நுட்பக் கோளாறு மீது குற்றம் சுமத்திவிட்டு சும்மா உட்கார்ந்திருக்க பென்ரகனும் தயாராக இருக்கவில்லை. ஏனெனில் இப்படியான ரகசிய வெடிப்புக்கள் மூலம் சில ரஷ்சிய நீர்மூழ்கிகள் கூட அழிக்கப்பட்டதை அமெரிக்கா மறந்துவிடவில்லை. அதற்கு பழிவாங்க ரஷ்சியாவும் துடித்துக் கொண்டிருப்பதை பென்ரகனும் சி ஐ ஏ ம் நன்கே அறிந்திருந்தன. அத்தோடு குறித்த சம்பவம் நடந்த பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியும் உச்சமாக இருப்பதை அமெரிக்கா கணிக்கத் தவறவில்லை. அதுமட்டுமன்றி கடலில் செயற்படும் தீவிரவாதமும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பென்ரனுக்கு ஒரு தலையிடியாகவே இருந்து வந்திருக்கிறது.

submarine_0.jpg

இந்தப் போர்க்கப்பல் வெடி விபத்து ஏற்படுத்திய பரப்பரப்பால்.. Z இன் படகு பற்றிய பரபரப்பு கொஞ்சம் அடங்கிப் போக.. அதன் மீதான தேடல் இரண்டாம் பட்சமாகியதுடன் அதன் முக்கியத்துவமும் பென்ரகன் மத்தியில் சற்று தாழ்ந்தே போயிருந்தது. ஆனாலும் பென்ரகன் Z இன் படகு மீதான தனது சந்தேகப் பார்வையை முற்றாக விலக்கிக் கொள்ளவில்லை.

200707bell-helicopter-Osprey-mv22-3.jpg

அதனால்.. Z இன் படகை தேடுவதை தொடர்ந்து கொண்டே இருந்தன அமெரிக்க கடற்படை கப்பல்களும் உலங்குவானூர்திகளும்.

உண்மையில் அமெரிக்க கப்பலுக்கு நடந்தது என்ன.. Z தான் இறுதிக் கட்டத்தில் தன் படகை மோதி வெடிக்க வைத்திருந்தாரா.. அல்லது வேறேதேனும்.. விபத்து நடந்ததா..அப்படியாயின் Z க்கும் அவரின் படகுக்கும் நடந்தது என்ன...??! இவற்றிற்கான விடை தேடல்களுடன் மீண்டும் அடுத்த வாரம் இதே நாள் சந்திப்போம்...!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

boat1a.jpg

Uploaded with ImageShack.us

Z - War. ( தமிழீழத்தின் உலகைப் பழிவாங்கும் போர்.)

....

உங்கள் உண்மை கலந்த கற்பனை சிறப்பாக உள்ளது, படங்களும் அதற்கு மெருகூட்டி நிக்கின்றன... வாழ்த்துக்கள் தொடருங்கள்... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பறவைகள். இதனை யாழின் முகப்பில் இட்டால் நன்றாக இருக்கும்..! நிர்வாகம் விரும்பினால் இணைத்துவிடட்டும்.

இந்த ஆக்கத்துக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்கும் உறவுகளுக்கு நன்றிகள். உங்கள் விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. வெறும் நன்றி பாராட்டு என்றில்லாமல்.. குறைகளையும் நிறைகளையும் சொல்லுங்கள். அடையாளம் காட்டுங்கள்.

நன்றி

நெடுக்ஸ். :)

உங்களின் ஆக்கம் நன்றாகவே தொடர்கின்றது......

மனதில் சின்ன ஒரு யோசனை......

இதில் இணைக்கப்படும் படங்கள், ஆக்கத்துக்கு அழகூட்டுபவையாக இருக்கின்றது.

ஆனால், அமெரிக்க போர்க்கப்பல்களின் படங்களாக இருப்பதால் ......, ஏதாவது பிரச்சினை ஏற்படுமா, இல்லையா....... என்பதை உறுதி செய்து கொண்டால் நல்லது என நினைக்கின்றேன்.

இந்தப் படங்களை இணைப்பதால் பிரச்சனை வருமோ என்னமோ தெரியல்ல.. எல்லாவற்றிற்கும் இணைப்புத்தான் வழங்கி உள்ளேன். அப்படி ஏதேனும் பிரச்சனை என்றால் இணைப்பை எடுத்துவிடலாம்.

ஆனால் அமெரிக்கா உலகில் செய்யும் ஆதிக்கமே எமது இழப்புக்களுக்கும் ஒரு காரணி என்பது மறுக்க முடியாத உண்மை. அமெரிக்காவின் நலன்களுக்காக அது தமிழ் மக்களின் போராட்டத்தை ஆரம்பம் தொட்டு பயங்கரவாதமாகக் கருதி.. அதை அழிக்க சிங்கள அரசுகுகளுக்கு பல வழிகளிலும் உதவி வந்துள்ளது. இன்று ஆசிய பிராந்திய சீன - இந்திய பொருண்மிய வளர்ச்சி சிறீலங்காவை சீனா நோக்கி நகரச் செய்திருப்பதால் அமெரிக்கா கொஞ்சம் எரிச்சல் அடைச்சிருக்குதே அன்றி.. சிங்கள அரசுகள் அமெரிக்காவை விட்டு பூரணமாக விலகிச் செல்வது என்பது கனவாகவே இருக்கும்.

அதற்காக அமெரிக்கா மட்டுமே எமது இழப்புக்களுக்குக் காரணம் என்றில்லை.இந்தியா ரஷ்சியா உட்பட பல நாடுகள் எமக்கெதிராக பல காலமாக செயற்பட்டு வந்துள்ளன. அவற்றையும் அடையாளம் காட்ட வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. அதை இயன்ற வரை செய்ய விளைவேன்.

எதுஎப்படியோ அமெரிக்காவின் முக்கியத்துவம் இக்கதையில் அதிகம் இருந்தாலும் அமெரிக்கா பற்றிய கதை உருவகங்கள்... அதிகம் அதன் ஆதிக்கத்துக்கு உதவும் வகையில் அதன் கொள்கை பரப்புரைக்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் சேர்ந்து உதவி அளிக்கும் வகைக்கு இருக்கக் கூடாது என்பதில் நான் அவதானமாக இருக்க விரும்புகின்றேன். அமெரிக்காவைப் பொறுத்த வரை நம்ப நட.. நம்பி நடவாதே என்ற நிலை தான் எமக்கு பாதுகாப்பானது. :(

எதிர்காலத்தில் நாங்களே அனிமேசன் மூலம் படங்களை தயாரித்தும் போட்டு இவற்றை பிரதியீடு செய்யலாம். ஆனால் அதற்கு அதிக நேர காலம் ஒதுக்க வேண்டி இருக்கும். இப்போதைக்கு இப்படியே கொண்டு சென்று இக்கதையை பூரணப்படுத்த நான் முயல்வேன். அதைத்தான் இன்றைய நிலையில் என்னால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி சிறி தங்கள் கருத்துப் பகிர்விற்கு. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் முகப்பில் போட விரும்பின்... அதன் அளவுகளுக்கு ஏற்ற பனர் தரவேற்றப்பட்டுள்ளது.

post-2494-018827400 1279915543_thumb.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முகப்பில் போட விரும்பின்... அதன் அளவுகளுக்கு ஏற்ற பனர் தரவேற்றப்பட்டுள்ளது.

நன்றி பறவைகளே. எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து இவற்றை உருவாக்கித் தருவதற்கு மிக்க நன்றிகள். :(

விறுவிறுப்புத் தொடர் எதிர்காலத்துக்கு பாதிப்பில்லாமல் கற்பனைக் கதையாக தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கற்பனைக் கதை நன்றாகப் போகிறது...ஆனால் எனது ஆதங்கம் என்னவென்டால் நாம் முதலில் கடந்த காலத்தில் தோற்றதுக்கு என்ன காரணம் என்ன என்பதை உண்மையான,நடுநிலையான விமர்சனத்தோடு ஆராயலாமோ எனத் தோன்றுகிறது...ஏன் 100% மக்கள் போராட முன் வரவில்லை... ஆயுதப் போராட்டம் ஏன் வெற்றியளிக்கவில்லை...தலைவர் ஏன் கேபியை நம்பினார்...கேபி ஏன் ஏமாற்றினார்...போன்றனவற்றை வைத்து ஆராயலாமோ என தோன்றுகிறது இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இதில உள் நோக்கம் ஒன்றும் இல்லையே??? :lol: அந்தாள் பாட்டில கற்பனை கலந்த கதை என்று எழுதிக் கொண்டு போறார்... (உதுகளை ஆராயப் போய்) நீங்கள் அந்தாளை மேடையில் ஏத்தி சவுக்கடி குடுக்காமல் விடமாட்டியள் போல இருக்கு... :lol::)

நிச்சயமாய் உள் நோக்கம் இல்லை குட்டி...நான் அவரை மட்டும் எழுத சொல்லவில்லை அவர் எழுத எல்லோரும் சேர்ந்து கருத்துகள் எழுத விடயங்கள் தெளிவாகும் என்பதால் தான் எழுதினேன்...அவரால் எழுத முடியா விட்டால் வேறு யாராவது எழுதலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.