Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோகி அண்ணா பாலகுமாரன் அண்ணா படுகொலை.. !?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாலகுமாரன், யோகி படுகொலை - உறுதிப்படுத்துகிறார் சிறிலங்கா அமைச்சர்

[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

அவர்கள் கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கடந்த ஆண்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் பின்னர் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தநிலையிலேயே இவர்கள் வன்னி இறுதிப்போரின் போது கடந்த ஆண்டு கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார் சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மீளமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர.

போரினால் கணவனை இழந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அவசரத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

வவுனியா,யாழ்ப்பாணம். கிளிநொச்சிப் பகுதிகளில் போரினால் கணவனை இழந்த பெண்களைச் சந்தித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அவர் அந்தப் நாளிதழுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில், தான் சந்தித்த கணவனை இழந்த பெண்களுள் க.வே. பாலகுமாரனின் மனைவி மற்றும் யோகரட்ணம் யோகியின் மனைவியும் உள்ளடங்கியிருந்தனர் என்று கூறியிருக்கிறார்.

பாலகுமாரன் கடந்த ஆண்டு வன்னி கிழக்கில் நடந்த போரின் போது கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் யோகியின் மனைவியை கணவனை இழந்தவர் என்று கூறியுள்ள அமைச்சர் டியூ.குணசேகர அவர் எங்கே, எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிடவி்ல்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கணவனை இழந்தோர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமைச்சர் டியூ. குணசேகர, கடந்த ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இதுபற்றி அரசாங்க அதிகாரிகளும் சரி உதவி நிறுவனங்களும் சரி காலத்துக்குக் காலம் வெவ்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்தவாரம் வடக்கில் போரினால் கணவனை இழந்த பெண்களைச் சந்திப்பதற்கு முன்னர் தமது அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டது என்றும், இதற்கு 8000 பெண்களிடம் இருந்து பதில் கிடைத்ததாகவும் கூறிய அவர், இவர்களில் 98 வீதமானோர் இளம் கணவனை இழந்தோர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே கடந்த 10ம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ம் திகதி கிளிநொச்சியிலும், 12ம் திகதி வவுனியாவிலும் அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

”போரினால் கணவனை பெண்களுக்கு ஐ.நாவிடம் இருந்து உதவிகளைப் பெறுவது தொடர்பாக விமல் வீரவன்சவின் உண்ணாநிலைக்கு முன்னதாக கொழும்புக்கான ஐ. நா வதிவிடப் பிரதிநிதி நீல் புனேயுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால் ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் தோன்றிய இழுபறிகளால் இந்த உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.” என்றும் அமைச்சர் டியூ.குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20100719101531

சில மாதங்களுக்கு முன் ... புலிகளில் மாவீரரான தளபதியின் மனைவி, பிள்ளைகள் கொழும்பினூடு வெளியேறினார்கள்! அவர்கள் வெளியேறுவதற்கு பாஸ்போட் எடுக்க வேண்டிய தேவையும் இருந்தது! அவர்கள் கொழும்பிலுள்ள பாஸ்போட் காரியாலயத்துக்கு சென்ற போது, அங்கு யோகி கதிரை ஒன்றில் அமர்த்தப்பட்டிருந்தாராம். இவர்களை ஏறிட்டு முகத்தை பார்த்து விட்டு தெரியாதது போல் குனிந்து விட்டாராம் ... சவரம் செய்யாத முகத்துடன், இருந்ததாக சொன்னார்கள் .... அவர்களுடன் யோகி கடந்த காலங்களில் மிக நெருங்கிப் பழகியும், தெரியாது இருந்து விட்டாராம்! எத்தனையோ முன்னால் தமிழ்ச்செல்வன்களும், பாப்பாக்களும் அழுத்தங்களினாலேயோ/அழுத்தங்களற்றோ காட்டிக்கொடுக்கும்போது ... யோகி உறுதியாக இருந்ததாக பலர் கூறுகிறார்கள்!

அநியாயமாக கொன்றொழிக்க ... எமக்காக புறப்பட்டவர்களை ... சிங்களத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டது எம் தலைமை!

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு சார்பாக காட்டிக்கொடுக்காத அல்லது உதவிசெய்யாமல் இருப்பவர்கள் அனைவரும் அரச படைகளால் கொல்லப்படுவார்கள்.இக்கட்டான இறுதி கட்டத்தில் எடுக்கப்பட்ட தலைமையின் முடிவு சரி அல்லது பிழை என விவாதிப்பது முட்டாள் தனமானது.

உயிரோடு உள்ளவர்களை யாரின் காலிலாவது விழுந்தோ அல்லது பணம் கொடுத்தோ வெளியில் எடுப்பது தான் புத்திசாலிதனமானது.

ஐ.நா, உலகமன்னிப்பு சபை என்பன சரணடைந்தவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளித்து இருக்க வேண்டும்.குழந்த போராளிகள் என வாய்கிழிய கத்தியவர்கள் இன்று வாய் மூடி ஏன் மௌனியாகிவிட்டார்கள்?

உயிரோடு உள்ளவர்களை யாரின் காலிலாவது விழுந்தோ அல்லது பணம் கொடுத்தோ வெளியில் எடுப்பது தான் புத்திசாலிதனமானது.

இதைத்தான் சிங்களவன் எங்களிடம் எதிர்பார்க்கிறான் என்ன ஆயுதமும் ஆக்கியுள்ளான் ... மேலாக புலிகளின் இடைக்கால தலைவரென வலம் வந்த கேயண்ணா பீயாண்ணாவும் , புலத்தில் மாமாக்களை அமர்த்தி செய்யப் பார்க்கிறார் .... :D

.இக்கட்டான இறுதி கட்டத்தில் எடுக்கப்பட்ட தலைமையின் முடிவு சரி அல்லது பிழை என விவாதிப்பது முட்டாள் தனமானது.

... விடப்பட்டது பிழை அல்ல ... விருட்சத்தின் வேரையே பிடுங்கி எறிய துணை போய் விட்டது தலைமை!!

  • கருத்துக்கள உறவுகள்

SL minister includes spouses of Balakumaran, Yogi, among widows

According to Rajapaksa regime’s Rehabilitation and Prisons Reforms minister and Communist Party leader, Dew Gunasekera, the wives of the senior members of the LTTE, K.V. Balakumaran and Yogaratnam Yogi are among the widows needing rehabilitation, The Island reported Monday. Both the LTTE leaders were reportedly seen reaching internment camps run by the Sri Lankan military, by many who went into those camps. The international community was repeatedly telling the LTTE to surrender to Colombo and civilians to get into barbed-wire camps of the Sri Lankan Army. The Army killed Balakumaran on the Vanni east front early last year, The Island says. There were earlier media reports that the leaders were taken to Colombo.

British Tamil doctor Velauthapillai Arudkumar, who visited the island recently as part of a ‘Tamil diaspora visit’ organised by Colombo through Selvarasa Pathmanathan alias KP, told TamilNet in an interview in June that when the delegation questioned the Sri Lankan Defence and Intelligence heads on the whereabouts of detained senior political members of the LTTE, the response was that they had no knowledge of them.

The heads of the Sri Lankan defence and the intelligence in turn suggested to the members of the diaspora delegation to come out with any evidence on Balakumaran, Yogi, Puthuvai Ratnathurai and Lawrance Thilagar if they have had any knowledge about them.

Both Balakumaran and Yogi were political leaders of the LTTE. Mr. Balakumaran was earlier the leader of the Eelam Revolutionary Organisation (EROS). Mr Yogaratnam Yogi, on behalf of the LTTE, presided over the surrender of arms during the Indian Peace Keeping Force (IPKF) intervention in 1987.

firstlankanewsstory.jpg

sundaytimesstorybalakum.jpg

- Tamil net

  • கருத்துக்கள உறவுகள்

name='Nellaiyan' date='19 July 2010 - 04:43 PM' timestamp='1279572222' post='599073']

இதைத்தான் சிங்களவன் எங்களிடம் எதிர்பார்க்கிறான் என்ன ஆயுதமும் ஆக்கியுள்ளான் ... மேலாக புலிகளின் இடைக்கால தலைவரென வலம் வந்த கேயண்ணா பீயாண்ணாவும் , புலத்தில் மாமாக்களை அமர்த்தி செய்யப் பார்க்கிறார் .... :D

இனசங்காரம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது.நாம் அதாவது புலம்பெயர்ந்த விண்ணர்கள் எத்தனை போரளிகளை வெளியில் எடுத்துள்ளோம்.அல்லது எடுக்க முயன்றுள்ளோம்.

இதற்குள் கே.பியை ஏன் புகுத்துகிறீர்கள்.அரச காவலில் உள்ள கே.பியை அரசு பயன்படுத்த தான் பார்ப்பான். எம்மில் சிலர் விலை போயுள்ளார்கள்.விலை போகாத மிகுதி பேர் என்ன செய்துள்ளோம்? அல்லது என்ன செய்ய முடியும்?

விடப்பட்டது பிழை அல்ல ... விருட்சத்தின் வேரையே பிடுங்கி எறிய துணை போய் விட்டது தலைமை!![/i

உங்களின் அபிப்பிராயப்படி ஆயுதங்கள் இல்லாத நிலையில் தலைமை என்ன செய்திருக்கலாம்?

Edited by nunavilan

எமக்காக புறப்பட்டவர்களை ... சிங்களத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டது எம் தலைமை!

விட்டால்..

4ம் கட்டம்,

திட்டமிட்டு தொடங்கப்பட்டு..

திட்டமிட்டு பின்வாங்கி..

திட்டமிட்டு மாட்டுப்படவைத்து..

திட்டமிட்டு அழிக்கப்பட்டது..

எண்டு சொல்லுவீங்கள் போல கிடக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தைவைகளை விட்டு நடக்கப் போவதைச் சரியாகச் செய்ய வேண்டும்.தொடர்ந்து கடந்த காலத்தைப் பற்றிக் கதைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

விட்டால்..

4ம் கட்டம்,

திட்டமிட்டு தொடங்கப்பட்டு..

திட்டமிட்டு பின்வாங்கி..

திட்டமிட்டு மாட்டுப்படவைத்து..

திட்டமிட்டு அழிக்கப்பட்டது..

எண்டு சொல்லுவீங்கள் போல கிடக்கு.. :D

ஆஆஆஆஆஆ...... கிட்டத்தட்ட சரி, சிறிய மாற்றங்கள் மட்டும் தேவை!

திட்டமிடாமல் தொடங்கப்பட்டு..

திட்டமிடாமல் பின்வாங்கி..

திட்டமிடாததால் மாட்டுப்படவைத்து..

திட்டமில்லாததால் அழிக்கப்பட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ஆராய்ச்சி....???

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த சொல்லாடல்.....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆஆஆ...... கிட்டத்தட்ட சரி, சிறிய மாற்றங்கள் மட்டும் தேவை!

திட்டமிடாமல் தொடங்கப்பட்டு..

திட்டமிடாமல் பின்வாங்கி..

திட்டமிடாததால் மாட்டுப்படவைத்து..

திட்டமில்லாததால் அழிக்கப்பட்டது..

எங்கட அழிவுக்கு காரணமே தலைமையின் திறமைக்குறைவுதான் சும்மா தீர்க்க தரிசனம் இல்லாமல் 4ம் கட்ட போரை தொடங்கியது யார்? ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று சிந்திக்காதது யாருடைய பிழை இவ்வளவு போராளிகள் மக்கள் எதிரியிட்ட பிடிபட்டு சித்திரவதை செய்யப்படுவதற்கு முழுமுதல் காரணம் எதிர்காலம் பற்றி சிந்திக்க தெரியாத தலைமையின் திறமைக்குறைவே . இதற்குள்ள தலைவர் ஒரு தீர்க்கதரிசியெண்டு இவங்கள் காமெடி பண்ணுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களுக்கு முன் ... புலிகளில் மாவீரரான தளபதியின் மனைவி, பிள்ளைகள் கொழும்பினூடு வெளியேறினார்கள்! அவர்கள் வெளியேறுவதற்கு பாஸ்போட் எடுக்க வேண்டிய தேவையும் இருந்தது! அவர்கள் கொழும்பிலுள்ள பாஸ்போட் காரியாலயத்துக்கு சென்ற போது, அங்கு யோகி கதிரை ஒன்றில் அமர்த்தப்பட்டிருந்தாராம். இவர்களை ஏறிட்டு முகத்தை பார்த்து விட்டு தெரியாதது போல் குனிந்து விட்டாராம் ... சவரம் செய்யாத முகத்துடன், இருந்ததாக சொன்னார்கள் .... அவர்களுடன் யோகி கடந்த காலங்களில் மிக நெருங்கிப் பழகியும், தெரியாது இருந்து விட்டாராம்! எத்தனையோ முன்னால் தமிழ்ச்செல்வன்களும், பாப்பாக்களும் அழுத்தங்களினாலேயோ/அழுத்தங்களற்றோ காட்டிக்கொடுக்கும்போது ... யோகி உறுதியாக இருந்ததாக பலர் கூறுகிறார்கள்!

அநியாயமாக கொன்றொழிக்க ... எமக்காக புறப்பட்டவர்களை ... சிங்களத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டது எம் தலைமை!

உங்களிடம் ஒரு கேள்வி. தலைமையோ, தமிழ்செல்வனையோ, அல்லது கஸ்ரோவையோ விமர்சிக்க என்ன தகுதி உங்களுக்கு உண்டு?? நீங்கள் யாருமே போதிய ஆதரவைக் கொடுக்காமல் எல்லாத் தவறுகளையும் விட்டுக் கொண்டு அவர்களைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்க யோக்கியம் இல்லை. இப்படி ஒரு பிரமாண்ட தாக்குதலை எதிரி செய்யக் கூடும், அல்லது 4ம் கட்ட ஈழப்போர், தமிழீத்துக்கான இலக்காக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் எல்லா மக்களுக்கும், இராணுவப் பயிற்சித் தலைமை வழங்கியது. அது இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தாலும் சரி, மற்றய இடமாக இருந்தாலும் சரி. ஆனால் எத்தனை மக்கள் தமிழீழம் என்ற இலக்கை அடைய முன்வந்தார்கள் என்றால் கேள்விக்குறியே.. அன்று முதல் பல இடங்களில் புலிகளை நாங்கள் கை விட்டு விட்டு, பிறகு இருக்கின்ற பலத்தை மட்டுமே வைத்து இறுதிவரை போராடி மானத்துக்காக வீழ்ந்தவர்களைப் பற்றி, காசு சம்பாதிக்க கள்ளத்தனமாக ஓடி வந்த நெல்லையனுக்கோ, எனக்கோ என்ன தகுதி இருக்கின்றது??

அப்படிப்பட்ட மக்கள் ஆதரவு கிடைக்காமல் தடுக்க யாழ்ப்பாணத்தில் கடுமையான தடைளைப் போட்டு, போராட்டத்துக்கான ஆளணியைச் சிங்கள அரசு தடை செய்தது. அவர்கள் இருக்கின்ற பலத்தை வைத்து இறுதி வரை போராடினார்கள். ஒவ்வொரு பக்கமாக நடந்த இவ்வறான சிறுசிறு விளைவுகள் பெரும் அளவில் எம்மீது விழுந்த சுருக்காம மாறிப் போனது. உடல் சோர்வாக இருந்தால் அதற்கு உணவு உண்ண வேண்டியதும், கொடுக்க வேண்டியதும் கை, வாயின் வேலையே. மூளையைத் திட்டி என்ன ஆவது. போராட்டத்தில் பங்களிப்பே செய்யாமல், யார் தலையிலும் பழி போட்டுத் தப்பிக்க இந்த ஈனத்தனம் இருக்கே. அது மிகவும் அசிங்கமானது.

விடுதலைப் போராட்டத்தின் தோல்வி என்பது எங்கள் எல்லோரினதும் தவறு ஆகும். அதைத் முதலில் அனைவரும் ஏற்க வேண்டும். அதன் பொறுப்புக்களை ஏற்பது தான், எம்மை எனியாவது பங்காளியாக மாற்றவுதவும்.

தலைவரும் சரணடைந்தார் என்று வதந்தியைக் கிளப்புவர்களுக்கு ஒரு பதில். அவர் அப்படி இருந்தால் கேபியை வைத்து எம் சொத்துக்களைச் களவாடியத விடக் கூடக் களவாடவும், தமிழ் ஈழம் என்ற பேச்ஐச எனிவரும் காலங்களில் வராது இருக்க பயன்படுத்திச் சிங்கள தேசம் எம்மை அடக்கியிருக்கும். ஏனென்றால் அவருக்காக எதையும் செய்ய அனைவரும் தயாராகத் தான் இருந்தார்கள்.

Edited by தூயவன்

விடுதலைப் போராட்டத்தின் தோல்வி என்பது எங்கள் எல்லோரினதும் தவறு ஆகும். அதைத் முதலில் அனைவரும் ஏற்க வேண்டும். அதன் பொறுப்புக்களை ஏற்பது தான், எம்மை எனியாவது பங்காளியாக மாற்றவுதவும்.

.

"4 ஆம் கட்டத்திற்கான ஈழப்போர் தமிழீழத்துகானதாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையில் தான் தொடங்கப் பட்டது."

எந்த உலகத்தில் நீங்களெல்லாம் இருந்திருக்கின்றீர்கள் .இப்படியே மக்களை நம்பவைத்துத் தான் இவ்வளவு அழிவுகளும் வந்தது.10% கூட தமிழீழத்திற்கான சாத்தியப்பாடுகள் புலிகளால் ஏற்படுத்தப்படவில்லை.யார் புலிகளை அங்கீகரித்தார்கள் புலிகள் அடக்கி வைத்திருந்த மக்களையும் புலம் பெயர்ந்து புலிபெயரில் குளிர் காய்ந்த புண்ணாக்குகளையும் தவிர.

தமிழ்நாடு,இந்தியா,ஜ்ரோப்பா,அமெரிக்கா,கனடா,அவுஸ்திரேலியா,சவுத் ஆபிரிக்கா உலகமே பயங்கரவாதிகள் என கூறிய ஒரு இயக்கம் நாடு கட்டாயம் பெற்று தந்திருக்கும்.

பத்தாதற்கு இப்ப நாடு கடந்த அரசு தமிழீழம் எடுத்துத் தருமாம்.அதிலிருப்பவர்களை பார்தால் இப்ப நாலு நாட்களில கிடைக்கும் போல் தான் தெரிகின்றது.

யோகியை கொண்டு போய் வைத்திருந்து செய்யாத சித்திரவதையெல்லாம் செய்து ஒரு ஜடமாக உலாவவிட்டு வைத்து இப்ப நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்

பொன்னாம்மானின் அண்ணன்,லண்டனில் இருந்து போராட போனவர்,ஒரு பிரபல கல்லூரியில் வெகுவாக மதிக்கப் பட்ட மிகச் சிறந்த விளையாட்டு வீரர்.இப்படி எத்தனையோ தகமைகள் மிக்க யோகியை கொண்டு போய் நிண்டவன் போனவன் எல்லாம் அடித்து சித்திரவதை செய்யும் போது வாய் திறவாத இந்த சமூகம் அழிந்து போவதில் வியப்பில்லை.வாய் திறக்காவிட்டாலும் பரவாயில்லை நியாயப் படுத்திய பழையமாணவர்களை நினைக்க இப்பவும் பத்திக் கொண்டுவருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகத்திலேயே தான் எதுவும் செய்யாது ஒதுங்கி இருந்துகொண்டு செய்பவனை விமர்சிக்கும் இனம் எம் இனம் தான். இல்லை கேட்கிறேன் உங்களில் எவராவது தலைவரின் இடத்தில் இருந்திருந்தால் உங்களின் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுக்காப்பாக வைத்திருப்பீர்களா அல்லது போர்க்களத்தில் மடிய வைத்திருப்பீர்களா? கருணாநிதியோடும் ராமதாஸோடும் எம் தலைமையை ஒப்பிட்டுப் பாருங்கள அப்போது புரியும்.

மூச்சுக்கு முன்னூறு தடவை நெல்லையன் தலைமையின் தவறு... தலைமையின் தவறு... தலைமையின் தவறு... என்று ஒப்பாரி வைக்கின்றாரே! இல்லை கேட்கிறேன்.. நீங்கள் வாழ்கையில் எடுத்த முடிவுகள் எல்லாம் சரியானவையா? நிச்சயமாக இருக்காது. ஆனால் எந்த முடிவையும் எடுக்கும் போது மனதுக்கு சரி என்று படுவதைத் தானே எடுக்கின்றீர்கள்? அது பின்னாளில் பிழையாகிப் போனால் பிழை விட்டு விட்டேன்... பிழை விட்டு விட்டேன் என்று புராணம் பாடியபடியே திரிவது நல்லதென்று நினைக்கின்றீர்களா?

ஒரு விளையாட்டு அணி தோற்றுவிட்டால் கப்டனிலோ கோச்சிலோ பொதுவாக பழியை போடுவது வழமை. அது ஒரு வகையில் நியாயம் ஏனெனில் அடுத்த முறைக்கு பிழைகளை திருத்தி புதிய கப்டனையோ கோச்சையோ போட்டு விளையாட வழிவகுக்கும். இது என்ன விளையாட்டா? நாங்கள் கொடுக்கும் சம்பளத்திற்காகப் போரிட்டார்களா? சரி அவர்களை விமர்சிப்பதால் என்ன பயன்? இனி எப்படி ஒரு ஆயுதப் போராட்டம் செய்வதென்பதை அலசி ஆராய்வதற்காகவா? பிறகு எதற்காக இந்தப் புடுங்கல்? எல்லாம் இழப்பால் தோல்வியால் ஏற்பட்ட ஆதங்கம், விரக்தி, வேதனை போன்றவற்றை கொட்டித் தீர்ப்பதற்குத் தானே? அதற்காக தலமையைத் திட்ட்டுவதாலோ கொச்சைப் படுத்துவதாலோ நீங்கள் காணப்போவது எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போரை எமது போராகப் பார்க்காமல் புலிகளின் போராக மட்டுமே பார்த்ததால் வந்த வினைதான் இதெல்லாம் என்று நினைக்கிறேன்.

புலிகள் கட்டாயப்படுத்தி ஆள்ச்சேர்க்கிறார்கள், பிள்ளை பிடிக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னதும் நாங்கள்தான், இன்று புலிகள் எல்லாவற்றையும் கோட்டை விட்டு விட்டார்கள் என்று சொல்வதும் நாங்கள்தான். புலிகளை மட்டுமே போராட்டத்தைப் பார்த்துக்கொள்ளசொ சொல்லிவிட்டு ஓடி ஒளித்துக்கொண்ட நாங்கள் அனைவரும்தான் இதற்குப் பொறுப்பு. முடிந்தவரை போராடினார்கள், இறுதியில் வீண் மரணங்கலைத் தடுக்க சரணடைந்தார்கள். இந்த ச் அரணடைதல் நாடகம் எதிரியாலும் இந்தியாவாலும் பின்னப்பட்டதென்பதை அவர்கள் அறிந்திருக்க அந்த நேரத்தில் வாய்ப்பிருந்திருக்காது. தலமையற்ற நிலையில் களத்தில் நின்றவர்களுக்கு கே.பீ யாலும் இந்தியாவாலும் சொல்லப்பட்ட சரணடைதல் திட்டம் உண்மையிலேயே ஒரு அழித்தொழிப்பு நடவடிக்கைதான் என்பதை சரணடைந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

போராட்டம் 2009 உடன் முற்றாக அழிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டுசெல்லப்படுவதற்கு தேவையானதை நாம் எவருமே செய்ய வில்லை. ஆனால் குறை சொல்ல மட்டும் எல்லோரும் முண்டியடிக்கிறோம்.

ஒரு தோல்வியை தோல்வியாக உணரும் போது தான் மீள் எழுவதற்கான சாத்தியப்பாடுகளை சிந்திப்பதற்கான மன வலு கிடைக்கும். எனவே நம் தோற்றோம் என்பதை மிக நேர்மையாக ஒப்புக்கொள்வோம்.

தோற்றோம் என்ற சொல்லில் அவ்வளவாக உண்மையில்லை என்பதனால் இன்னும் உண்மைக்கு நெருக்கமான சொல்லாக இருக்கக் கூடிய தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோம்.

நம் சம காலத்தில் ..நம் கண் முன்னால்.. நாம் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் நம்மால் எளிதில் செரிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. ஆனால் தோல்விகளையும், பின்னடைவுகளையும் உலக வரலாறு வேறு மாதிரியாக கணிக்கிறது. ஒரு தேசிய இனம் தன் உயரிய இலட்சியமான இறையாண்மை உடைய ஒரு நாடு அடைவதற்கான போராட்டத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சந்திக்கிறது. பலவிதமான பின்னடைவுகளுடன் கூடிய தியாகங்களுக்கு மத்தியில் அப் போராட்டம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக் கொண்டு ,புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் துயர் முடிந்து இன்னும் ஓரு வருட காலத்திற்கு பின்னரும் தமிழினம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்வதில் தலையாய சிக்கல் என்னவென்றால் தற்காலத்து தமிழன் கொண்டிருக்கிற நுகர்வு மனநிலை தொடர்ச்சியான பயணத்திற்கு தயாராக இல்லை என்பதுதான்.ஆனால் மீள் எழுந்துதான் ஆக வேண்டும். ஒரு நாட்டினை இன்னொரு இனத்திடம் இருந்து மீட்பதற்கான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல.

தோல்விக்கான காரணங்களை மாசற்ற தலைமையின் மீதும் இயக்கத்தின் மீதும் போட்டு விட்டு எதிரியின் வெற்றியில் குளிர்காயும் எழுத்துக்களை நாம் ஏறெடுத்துக் கூட பார்க்க மறுப்போம்.

ஆனால் நமக்குள்ளாக நம் மீள் எழுதலுக்கான சக்தியை பெற நடந்து முடிந்த ஈழப் போரின் வாயிலாக சில பாடங்களை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் ஈழம் என்பது அந்நிலப்பகுதியில் வசிக்கக் கூடிய தமிழர்களுக்கான நாடு என்பது உண்மை என்றாலும் அது உலகம் முழுக்க வாழக் கூடிய தமிழர்களுக்கான நாடும் அதுதான் என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும் . வெறும் நிலப்பகுதியும், புறவியல் காரணிகளும் மட்டுமே ஒரு நாடாக நாம் கருதி விட இயலாது. மாறாக நாடு என்பது ஒரு உணர்ச்சி. ஒரு தேசிய இனத்தின் அடிப்படையான குணம். மனித வரலாறு நாடுகளை அடையும் போராட்டங்களாகத்தான் பகுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈழம் என்ற ஒற்றைக் கனவினை சுமக்க உலகில் வாழும் 12 கோடி தமிழர்களின் விழியும் தயாராக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ஆராய்ச்சி....???

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த சொல்லாடல்.....???

அதை சொல்லியே சந்தோசம் காணுபவர்கள். யாருக்கோ நேரம் வந்தால் அத்த ராத்திரியில் குடைபிடிப்பானாம்.

இதுகளுக்கு என்று இந்த காலம் வந்திருக்கு.....

விடுங்கோ ஏதோ இவ்ளவு காலமும் ஒட்டுமொத்த தமிழே அழிந்தாலும் புலி எதிர்ப்பு வாந்திகளால் காலத்தை கடத்தியவர்கள் இப்போது அவர்களிற்கு அவல் கிடைத்தமாதிரி.

கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பு எழுத தொடங்கிய விடயம். இப்ப ஒருவருடம் ஆகியும் அவர்களுக்கு ஆனந்தத்தை கொடுக்க கூடியதாக இருக்கிறது. தலமை தவறிழைத்தது என்பது.

திரும்ப திரும்ப சொன்னால் பொய் மெய்யாகலாம் என்ற ஒரு சிறிய நப்பாசை....

ஒட்டுமொத்த இனத்தையும் ஒரு கப்பலில் ஏற்றி 30 வருடங்களாக பாய்விரித்து பிடித்ததவனுக்கே அதன் வலியியும் சுமையும் புரியும்.

இதுகள் ஒரு சிறிய பயணத்திற்கே படகு ஓட்டாதவர்கள் இனியும் ஒன்றையும் கிழிக்கபோவதில்லை.

ஆனால் கிழிக்கபோவதாக வேடமிடுவார்கள்....... அந்த வேடத்தையும் ஒரு வருடமாக எழுதிவரும் அதே விடயத்தை திரும்ப திரும்ப எழுதுவதற்கே பயன்படுத்துவார்கள்......................... இல்லை பயன்படுத்துகின்றார்கள்.

போராடுபவனுக்குதான் தோல்வியோ வெற்றியோ சாத்தியம்.

சும்மா கிடந்து சுவாசிப்வனுக்கு............. வாய்வீரமே வாத்தியம்!

  • கருத்துக்கள உறவுகள்

"4 ஆம் கட்டத்திற்கான ஈழப்போர் தமிழீழத்துகானதாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையில் தான் தொடங்கப் பட்டது."

எந்த உலகத்தில் நீங்களெல்லாம் இருந்திருக்கின்றீர்கள் .இப்படியே மக்களை நம்பவைத்துத் தான் இவ்வளவு அழிவுகளும் வந்தது.10% கூட தமிழீழத்திற்கான சாத்தியப்பாடுகள் புலிகளால் ஏற்படுத்தப்படவில்லை.யார் புலிகளை அங்கீகரித்தார்கள் புலிகள் அடக்கி வைத்திருந்த மக்களையும் புலம் பெயர்ந்து புலிபெயரில் குளிர் காய்ந்த புண்ணாக்குகளையும் தவிர.

தமிழ்நாடு,இந்தியா,ஜ்ரோப்பா,அமெரிக்கா,கனடா,அவுஸ்திரேலியா,சவுத் ஆபிரிக்கா உலகமே பயங்கரவாதிகள் என கூறிய ஒரு இயக்கம் நாடு கட்டாயம் பெற்று தந்திருக்கும்.

பத்தாதற்கு இப்ப நாடு கடந்த அரசு தமிழீழம் எடுத்துத் தருமாம்.அதிலிருப்பவர்களை பார்தால் இப்ப நாலு நாட்களில கிடைக்கும் போல் தான் தெரிகின்றது.

யோகியை கொண்டு போய் வைத்திருந்து செய்யாத சித்திரவதையெல்லாம் செய்து ஒரு ஜடமாக உலாவவிட்டு வைத்து இப்ப நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்

பொன்னாம்மானின் அண்ணன்,லண்டனில் இருந்து போராட போனவர்,ஒரு பிரபல கல்லூரியில் வெகுவாக மதிக்கப் பட்ட மிகச் சிறந்த விளையாட்டு வீரர்.இப்படி எத்தனையோ தகமைகள் மிக்க யோகியை கொண்டு போய் நிண்டவன் போனவன் எல்லாம் அடித்து சித்திரவதை செய்யும் போது வாய் திறவாத இந்த சமூகம் அழிந்து போவதில் வியப்பில்லை.வாய் திறக்காவிட்டாலும் பரவாயில்லை நியாயப் படுத்திய பழையமாணவர்களை நினைக்க இப்பவும் பத்திக் கொண்டுவருகின்றது.

உங்களுக்கு பத்தாமல் என்ன செய்யும்.............???

எஜமானி இந்தியனின் சதிவலையை அவர்கள் அறுத்தெறிந்தால்............

கூலிகளுக்கு பத்தும் என்பது எங்களுக்கு எற்கனவே தெரியுமுங்கோ.............. எழுதி காட்ட தேவையில்லை!

உங்களிடம் ஒரு கேள்வி. தலைமையோ, தமிழ்செல்வனையோ, அல்லது கஸ்ரோவையோ விமர்சிக்க என்ன தகுதி உங்களுக்கு உண்டு?? நீங்கள் யாருமே போதிய ஆதரவைக் கொடுக்காமல் எல்லாத் தவறுகளையும் விட்டுக் கொண்டு அவர்களைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்க யோக்கியம் இல்லை. இப்படி ஒரு பிரமாண்ட தாக்குதலை எதிரி செய்யக் கூடும், அல்லது 4ம் கட்ட ஈழப்போர், தமிழீத்துக்கான இலக்காக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் எல்லா மக்களுக்கும், இராணுவப் பயிற்சித் தலைமை வழங்கியது. அது இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தாலும் சரி, மற்றய இடமாக இருந்தாலும் சரி. ஆனால் எத்தனை மக்கள் தமிழீழம் என்ற இலக்கை அடைய முன்வந்தார்கள் என்றால் கேள்விக்குறியே.. அன்று முதல் பல இடங்களில் புலிகளை நாங்கள் கை விட்டு விட்டு, பிறகு இருக்கின்ற பலத்தை மட்டுமே வைத்து இறுதிவரை போராடி மானத்துக்காக வீழ்ந்தவர்களைப் பற்றி, காசு சம்பாதிக்க கள்ளத்தனமாக ஓடி வந்த நெல்லையனுக்கோ, எனக்கோ என்ன தகுதி இருக்கின்றது??

அப்படிப்பட்ட மக்கள் ஆதரவு கிடைக்காமல் தடுக்க யாழ்ப்பாணத்தில் கடுமையான தடைளைப் போட்டு, போராட்டத்துக்கான ஆளணியைச் சிங்கள அரசு தடை செய்தது. அவர்கள் இருக்கின்ற பலத்தை வைத்து இறுதி வரை போராடினார்கள். ஒவ்வொரு பக்கமாக நடந்த இவ்வறான சிறுசிறு விளைவுகள் பெரும் அளவில் எம்மீது விழுந்த சுருக்காம மாறிப் போனது. உடல் சோர்வாக இருந்தால் அதற்கு உணவு உண்ண வேண்டியதும், கொடுக்க வேண்டியதும் கை, வாயின் வேலையே. மூளையைத் திட்டி என்ன ஆவது. போராட்டத்தில் பங்களிப்பே செய்யாமல், யார் தலையிலும் பழி போட்டுத் தப்பிக்க இந்த ஈனத்தனம் இருக்கே. அது மிகவும் அசிங்கமானது.

விடுதலைப் போராட்டத்தின் தோல்வி என்பது எங்கள் எல்லோரினதும் தவறு ஆகும். அதைத் முதலில் அனைவரும் ஏற்க வேண்டும். அதன் பொறுப்புக்களை ஏற்பது தான், எம்மை எனியாவது பங்காளியாக மாற்றவுதவும்.

தலைவரும் சரணடைந்தார் என்று வதந்தியைக் கிளப்புவர்களுக்கு ஒரு பதில். அவர் அப்படி இருந்தால் கேபியை வைத்து எம் சொத்துக்களைச் களவாடியத விடக் கூடக் களவாடவும், தமிழ் ஈழம் என்ற பேச்ஐச எனிவரும் காலங்களில் வராது இருக்க பயன்படுத்திச் சிங்கள தேசம் எம்மை அடக்கியிருக்கும். ஏனென்றால் அவருக்காக எதையும் செய்ய அனைவரும் தயாராகத் தான் இருந்தார்கள்.

என்ன செய்தோம் என்று எங்களை கேட்க வேண்டாம்.....

அதுதான் இப்ப கடந்த ஒருவருடமா செய்துவாறோமே அதைதான் வேறுவடிவில் செய்தோம்.

இப்போ புலி இல்லை என்று எஜமானி கூவிட்டார் அதுதான் கடந்த ஒரு வருடமா யாழிலே புகுந்து விளையாடுகின்றோம்.

"எல்லாம் தலமைவிட்ட பிழை"

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் தலமைவிட்ட பிழை"

இதில் எனக்கு சில கேள்விகள் உண்டு

தலைமை தலைமை என்று சொல்கின்றீர்களே

அது யாருடைய தலைமை....?

அந்த தலைமையை எத்தனை நாட்களாக தங்களுக்கு தெரியும்...?

அந்த தலைமையை ஏன் தலைமையாக நீங்கள் ஏற்றீர்கள்....?

தலைமையை ஏற்றவர்களுக்கு மட்டும்தான் இந்த கேள்விகள்

ஏற்காதவர்களுக்கு இந்த கேள்விகள் பொருந்தாது

ஏற்காதவர்கள்

தங்கள் தலைமை என்ன..?

அவர்களுடைய தற்போதைய நிலை அல்லது பயணம் என்ன என்று மட்டும் சொல்லவும்

சத்தியமாய் தெளிவு பெறத்தான் கேட்கின்றேன்

நாம் இப்படி எழுதிக்கொண்டிருக்க முடியாது

அடுத்த கட்டத்தை தீர்மானிக்கவேண்டுமல்லவா...?

Edited by விசுகு

சரி, பிழை, ... கருத்துச்சொல்லும சுதந்திரத்தை கூட எமது போராட்டம் சாதாரண மக்களிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது! ... எங்களுடைய சாபம் இது!!!!!!! இன்று எமக்குள் தோன்றியுள்ள இவ்வடி பிடிகள் எதிரிக்கு சாதகமாக அமைகிறது உண்மைதான் அதேவேளை இவற்றை நாம் விட்ட/விட முற்படும் தவறு/பிழைகளை மறைப்பதற்கு பலர் முற்படுகிறார்கள்!!

சரி ... சரி ... சரி எல்லாம் என்றால் ஏன் அழிந்தோம்! ... சும்மாக மக்களை சாட்டாதீர்கள் ... புலம்பெயர் மக்களை சாட்டாதீர்கள் ... இன்று நாம் புலத்துக்கு வந்திராவிட்டால் அங்கு சோத்துக்கே குத்துக்கரணம் போட்டுக்கொண்டிருப்போம்! ... எப்பவோ உந்த போராட்டமும் முடிபுக்கு வந்திருக்கும்!!! எல்லாம்/எங்கு/எப்படி/எவ்வாறு .... செய்வதென்பது எமக்கு தெரியும் .... இதுதான் நாம் கடந்த காலங்களில் கேட்டுக்கொண்டிருந்தது!

புலம்பெயர் மக்கள்தான் .... என்ன நாம் சந்ததி சந்ததியாக இங்கு புலத்தில் இருப்பவர்களா? இல்லை ஒரு யூத இனம் போல் செல்வந்தர்களா? .. இல்லை அன்றாடம் உழைத்து தான் சீவியம் இங்கு பலருக்கு! அதிலும் கொடுத்தார்கள் .... சும்மா விடாதீர்கள் செய்யவில்லை... செய்யவில்லை என்று!!!! ... கேட்க வெட்கம்!!!

யுத்த நிறுத்த 8 வருடங்கள் ... சர்வதேச மாற்றங்கள், பிராந்திட அரசியல் எல்லாவற்றுக்கு மேலாக விலை போக மாட்டாதவர்கள் என்று இருந்தவர்கள் எல்லாம் எதிரியிடமும், பிராந்திய வல்லரசிடமும், மேற்குலகத்திடமும் சில்லறைக்கு விலைபோய் கூறு போட்டு விற்று விட்டார்கள் ஈழத்தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை(வேறொரு திரியில் விளக்கமாக ...)!!!

இன்றோ நீங்கள் யார் கேட்க? நீங்கள் யார் கதைக்க? .... நாங்கள் யார் கேட்க/கதைக்க ... இப்போராட்டத்தில் பங்கு கொண்டோம், அள்ளிக்கொடுத்தோம், உறவுகளை இழந்தோம், உடமைகளை இழந்தோம் ... இதனை விட வேறென்ன வேண்டும்?????????

Edited by Nellaiyan

அதைவிட கொடுமை நீங்கள் சொலவதுமாதிரி நடந்தவைகளை மறந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம் என்றில்லாமல் தொடர்ந்தும் அதே படுத்திருந்து சாப்பிட்ட கூட்டம் தலைவர் வருவார்,இனித்தான் போராட்டம்,சாவில் எழுவோம்,என்று தனது நிகழ்சிநிரலை மாற்றாமல் தொடர்ந்தும் தன்னிடம் உள்ள அதிகாரத்தால் தமிழனை மீண்டும் மீண்டும் சுத்த நிக்குது.

கள்ளர்களையும் காடையர்களையும் பொறுப்பில் விட்டு விட்டு போனபடியால்தான் இன்றும் இவ்வளவு குளறுபடி. புலத்தில் இருக்கும் மக்களையே தமது தேவைக்காக ஏலம் போடும் கூட்டமிது.எப்படி மக்களை இன்னமும் ஏமாற்றலாம் என்று தான் இவர்களின் சிந்தனையே தவிர மக்களுக்கு என்ன நல்லது செயலாம் என்பது பற்றி அல்ல.

சீசனுக்கு சீசன் புலம் பெயர்ந்தவனை சுத்த தமிழ்நாட்டில் இருந்து ஜ்ந்துசதம் பெறுமதியில்லாத ஆட்களை கூட்டிக் கொண்டுவந்து உருவேத்துவது தான் இவர்கள் வேலை. இந்தக் கூட்டத்தை தொடர்ந்தும் வளர்த்தும் ஆதரித்தும் நாங்கள் வந்தால் விடிவு என்பது தமிழனுக்கு என்றுமில்லை.

ரகசியமாக தொடங்கி..

ரகசியமாக நடந்து..

ரகசியமாக முடிந்த..

ஒரே போராட்டம் இதுதான்... இன்று தமிழர்கள் கண்ணைகட்டி காட்டில் விட்டமாதிரி நிற்பதற்க்கு இதுதான் காரனம்.

காரணம் போராட்டம் மக்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தது.. ஆக்களையும் காசையும் தாங்கோ.. நாங்கள் உங்களுக்கு ஈழம் வேண்டுதருவோம் என்டு சொல்லப்பட்டது.. என்டு மட்டுமே சொல்லப்பட்டது

தெரியாமல் கேக்கிறேன்.. ஒம்பதாம் ஆண்டு மாவிரர் உரைக்கு பிறகு தலைவர் வாயை திறக்கவில்லை... ஒண்டு ரெண்டு பேர், அதுவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றவர்கள் மட்டும் தமிழ்நெட்டில் பிதற்றிக்கொண்டிரிந்தார்கள்.. தமிழை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது எண்டுகூடதெரியாத தமிழ்நெட்டும் அவித்துகொண்டு திரிந்தது..

நடந்த்தத வரிசைபடுத்திபார்க்குபோது வெக்கமாய்ருக்கு.. அரைவாசி துரோகிகூட்டமெண்டா அடுத்த அரைவாசி மோட்டுக்கூட்டம்..

படுகொலைகாரனை, இனப்படுகொலைக்கு உதவியவர்களை கண்டித்து, தண்டனைகள்பெற வழிசெய்வதை விட்டுவிட்டு, அவர்களுக்கு வால் பிடித்தபடி, தர்மத்துக்கும் நீதிக்கும் போராடியவர்கள் செய்த, செய்யாத தவறுகளை கண்டு பிடித்து குற்றம் கண்டுகொண்டிருக்கும் போக்கு இன்னும் மாறாது இருப்பது கவலையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.